அன்று குண்டாக இருக்கிறாய் என அவமானப்படுத்திய கணவர்… இன்று பொடி பில்டிங்கில் பதக்கம் : சாதித்த தமிழ் பெண்ணின் கதை!!

உடல் பருமன் காரணமாக கணவரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு அவமானங்களை சந்தித்த ரூபி என்ற தமிழ்பெண் இன்று பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார். 6 வயது மகனின் தாயான ரூபி பியூட்டிஇ அசாமில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்

இந்த சாதனைகள் அனைத்தும் மிக எளிதாக நடந்து விடவில்லை.வலியும்,சோதனைகளும் நிறைந்த அந்த பயணம் தான் இவரது வாழ்க்கை.

எனது உடல் பருமனால், என் கணவருக்கு என் மீது அன்பில்லாமல் போனது. இதனால் அவர் வீட்டை விட்டு சென்றார். அப்போது தான் எனது நிலை குறித்து நான் உணர்ந்தேன். உடற்பயிற்சி நோக்கி அந்த சமயத்தில் தான் என் முழு கவனத்தையும் திருப்பினேன்.

முதலில் நான் நடைப்பயிற்சியை ஆரம்பித்தேன். அதனால் மெல்ல மெல்ல எடை குறைந்தது. ஆனால் குழந்தை பெற்ற பிறகு எடை குறைப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது.

இருப்பினும் என லட்சியத்தில் குறிக்கோளாக இருந்தேன். பொருளாதா ரீதியாக பல சிரமங்களை சந்தித்தேன், சாப்பிடுவதற்கு தேவையான உணவினை வாங்குவதற்கு சிரமப்பட்டேன்.

மிஸ்.சென்னை பட்டத்தை வென்றதோடு அசாமில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் வென்று சாதித்துள்ளார். பெண்களால் பாடி பில்டிங் துறையிலும் சாதனைகள் செய்ய முடியும் என்பதை நிரூபித்ததோடு இந்தத் துறையில் தமிழ் மாநிலத்தில் இருந்து பெண்களே இல்லை என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மிஸ் இந்தியா போட்டியில் பிட்னஸ் பிரிவில் கண்டிப்பாக ரூபி வெற்றி பெறுவார் என அவரது பயிற்சியார்க கார்த்திக் கூறியுள்ளார். பல தடைகளின் நடுவிலும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ரூபி பியூட்டி நிச்சயம் ஒரு முன்னுதாரணம்.

32 வயதில் தூங்கி 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண் : நடந்தது என்ன?

பிரித்தானியாவை சேர்ந்த நாவோமி ஜைக்ப்ஸ் என்ற பெண்மணி 32 வயதில் தூங்கி 15 வயதில் விழித்துள்ள அதிசயம் நடந்துள்ளது. எழுத்தாளரான நாவோமி, ‘The Forgotten Girl’ என்ற புத்தகத்தில் தனது நினைவுகள் மறந்துபோய், அவற்றை மீட்டெடுத்த கதையை எழுதியிருக்கிறார்.

15 வயது சிறுமியாகவே தன்னை உணர்ந்த அவர், அது 1992ஆம் ஆண்டு என்றே நினைத்தார். கண் விழித்ததும், முதலில் கண்ணில் பட்டது திரைச்சீலைகள்தான். பிறகு, அலமாரி, நான் படுத்திருந்த படுக்கை என எதுவுமே எனக்கு பரிச்சயமானதாக தெரியவில்லை. என்னை பார்த்தேன், நான் உடுத்தியிருந்த ஆடை என்னுடையதல்ல என்று தோன்றியது” என்கிறார் நாவோமி ஜைக்ப்ஸ்.

“உடனே கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். அது நான் அல்ல என்றே தோன்றியது. நிறம் வெளுத்து வயது கூடிப்போய், வேறு யாரோ கண்ணாடியில் பிரதிபலிக்கிறார்கள் என்றே தோன்றியது. ஆனால், என்னுடைய தோற்றம்தானே கண்ணாடியில் தெரியும் என்று புத்தி சொல்லியது.

‘எதிர்காலத்திற்குள் நுழைந்த நாவோமி’ : “எனக்கு 15 வயதுக்குரிய உணர்வுகளே இருந்தன. அது 1992ஆம் ஆண்டு என்று நான் நினைத்தாலும், அது 2008ஆம் ஆண்டு, 1992க்கு பிந்தைய நினைவுகள் எதுவுமே எனக்கு இல்லை.”

வாழ்க்கைமுறை, தொழில்நுட்பம், இண்டர்நெட், சமூக ஊடகம் ஸ்மார்ட் ஃபோன் என தனது 15 வயதுக்கு பிந்தைய எதுவுமே அவருக்கு புரிபடவில்லை.

தென்னாப்பிரிக்காவில், நெல்சன் மண்டேலா போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார், இராக்கில் சதான் உசேன் ஆட்சியில் இருக்கிறார் பிரிட்டன் இளவரசி டயானாவுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் அதிபராவது அப்போதும் நிறைவேறாத கனவாகவே இருந்ததாகவே நவோமிக்கு தோன்றியது.

இது எல்லாவற்றையும்விட கொடுமையான விஷயம், தனக்கு 10 வயது மகள் இருப்பதை நவோமி உணராததுதான். 32 வயது நாவோமியை எனக்கு பிடிக்கவேயில்லை. எதிர்காலத்தில் நன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தானே வாழ்வோம்?

ஆனால், மதுவுக்கு அடிமையான நான், எனது குழந்தையை வளர்ப்பதற்கு கஷ்டப்பட்டு அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன் என உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். என்னையே எனக்கு பிடிக்கவில்லை, அந்த வீட்டில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே வசிக்க எனக்கு பிடிக்கவில்லை.

ஒரு மருத்துவரை அணுகி தனது நிலையை எடுத்துச் சொன்னார் நாவோமி. ஆனால் அவர் அதை நம்பவில்லை, எனவே வேறு வழியில்லாமல் தன்னைத் தானே சரிபடுத்திக் கொள்வது என்று முடிவு செய்தார்.

நினைவுகள் மறந்துபோன சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த மற்றொரு காலை வேளையில் மறந்துபோன நினைவுகள் அனைத்தும் திரும்பிவிட்டன.

தனது நினைவுகள் அனைத்தும் திரும்பி, 32 வயது பெண்ணாக மீண்டும் மாறினார் நாவோமி.

நடந்தது என்ன? : உண்மையில் தனக்கு நடந்தது என்ன என்பது மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் நாவோமிக்கு தெரியவந்த்து.

“ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்தித்தேன், எனக்கு நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினேன். என் வாழ்வின் முழு கதையையும் அவர் கேட்டு, ஆராய்ந்தார்.

அவர் நிறைய ஆராய்ச்சி செய்தார், சக மருத்துவர்களுடன் பேசினார். இறுதியில் எனக்கு மறதி நோயின் ஒருவகையான டிஸ்-அசோஸியேடிவ் அம்னீசியா (Dissociative amnesia) ஏற்பட்டிருந்ததை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.”

உண்மையில் நாவோமியின் நினைவுகள் மறக்கவில்லை, வாழ்க்கையில் எதிர்கொண்ட கடுமையான பிரச்சனைகள் அவரது மூளையை பாதித்து, கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதால், குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற நினைவுகளை மூளை மரத்து போகச் செய்துவிட்டது. தனக்கு ஏற்பட்ட நோய் என்ன என்பதை தெரிந்துக் கொண்டதும், நாவோமிக்கு சற்றே ஆறுதல் ஏற்பட்டது.

அழகி பட்டத்தை இழந்த பெண் : ஏன் தகுதி இழந்தார் தெரியுமா?

உக்ரைன் நாட்டில் அழகிப்பட்டம் பெற்ற பெண் ஒருவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்றுக்கு தாயாகியதை மறைத்ததால் அவரது அழகிப்பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.

சென்ற வியாழக்கிழமை Veronika Didusenko (23), 2018ஆம் ஆண்டிற்கான மிஸ் உக்ரேன் பட்டம் சூட்டப்பட்டார். இதற்கிடையில் அவருக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருப்பதும், அவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

அழகிப்போட்டி விதிமுறைகளின்படி திருமணமானவர்கள் மற்றும் குழந்தை பெற்றவர்கள் அழகிப் போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.

நேற்று அழகிப்போட்டி நடத்தும் அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் Didusenko விதிகளை மீறி விட்டதால், மிஸ் உக்ரைன் பட்டத்தை சுமக்க அவருக்கு தகுதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்து சீனாவில் நடைபெற இருக்கும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் அவருக்கு பதில் வேறொரு போட்டியாளர் பங்கேற்பார்.

தூக்கத்தில் அழுத குழந்தையை சரமாரியாக கத்தியால் குத்திய தாய்!!

ரஸ்யாவை சேர்ந்த தாய் ஒருவர், காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது குழந்தை அழுததால் ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ரஸ்யாவை சேர்ந்த Adelina Khairnasova, நேற்றைய தினம் தன்னுடைய காதலன் மற்றும் பெண் தோழியுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அந்த சமயம் மூன்று பேரும் மதுபோதையில் இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் இருந்த அறைக்கு பக்கத்து அறையில் Adelina-வின் 8 மாத குழந்தை Tolik உறங்கி கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து Adelina தன்னுடைய காதலனுடன் சண்டையிட ஆரம்பித்துள்ளார். அப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த Tolik அழ ஆரம்பித்துள்ளான். இதனால் எரிச்சலடைந்த Adelina, கத்தி ஒன்றினை எடுத்துக்கொண்டு குழந்தையின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த Adelina-வின் தோழி, உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து மருத்துவனை நிர்வாகம் கூறுகையில், குழந்தை தற்போது தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆழமான காயங்கள் எதுவும் ஏற்படாததால், உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. விரைவில் குழந்தை குணமடைந்துவிடும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட Adelina-விடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பேசிய Adelina, என்னுடைய காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் நான் ஏற்கனவே கோபமாக இருந்தேன். இதற்கிடையில் குழந்தை அழுததால் எனக்கு இன்னும் கோபம் அதிகரித்துவிட்டது. அந்த ஆத்திரத்தில் தான் அப்படி செய்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

தோழியை உயிருக்கு உயிராக காதலித்த இளம்பெண் : பெற்றோருடன் செல்ல மறுப்பு!!

கேரள மாநிலத்தில் தனது தோழியுடன் மீது கொண்ட காதலால் அவருடன் இணைந்து வாழப்போவதாக இளம்பெண் தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் அப்பெண்ணை தோழியுடன் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீஜா என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், என்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அருணா என்பவரை அவரது பெற்றோர் பிரித்து சென்று வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்து இருப்பதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அடுத்து அருணாவை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது ஸ்ரீஜாவுடன் சேர்ந்து வாழவே தாம் விரும்புவதாக அருணா ஐகோர்ட்டில் தெரித்ததையடுத்து. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டனர்.

தகாத வார்த்தையால் திட்டிய தந்தை : கோவம் தலைக்கேறிய மகளின் அதிர்ச்சி செயல்!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை என்பவர், சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மகள் கற்பகவள்ளி கணவனை பிரிந்து தாய் தந்தையருடன் வசித்து வந்துள்ளார்.

நேற்றிரவு குடிபோதையில் தனது மகளுடன், பிச்சை தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகாத வர்த்தைகளால் மகள் கற்பகவள்ளியை தந்தை பிச்சை திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கற்பகவள்ளி, இரவு தூங்கிக்கொண்டிருந்த பிச்சையின் தலையில் கிரைண்டர் கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பிச்சை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பொலிசார் கற்பகவள்ளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

நகை முழுவதும் படிந்திருந்த தாயின் ரத்தக்கறை : மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சென்னையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை, மகனே கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலவாக்கம் மணியம்மாள் தெருவை சேர்ந்தவர் 62 வயதாகும் ராணியம்மாள். இவருடைய 5 குழந்தைகளுக்கும் தற்போது திருமணம் முடிந்துவிட்டது.

ராணியம்மாளுக்கு அப்பகுதியில் சொந்தமாக இருக்கும் 4 வீடுகளில் ஒன்றில் தான் அவருடைய கடைசி மகன் பர்னபாஸ், மனைவி பரிமளாவுடன் வசித்தது வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே பர்னபாஸ், சொத்தை பிரித்து தருமாறு ராணியம்மாளுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் பர்னபாஸை வீட்டை விட்டு வெளியேறுமாறு ராணியம்மாள் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பர்னபாஸ் நேற்று அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இரவில் நன்றாக உறங்கிய பர்னபாஸ், அதிகாலை வேகமாக எழுந்து ராணியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ராணியம்மாளின் முகம் முழுவதும் சேதமடைந்துள்ளது.

அப்பொழுதும் ராணியம்மாள் உயிருடன் இருந்ததால், கொசுவிற்கு புகை மூட்டிய தீயை கொண்டு ராணியம்மாளின் முகத்தை எரித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ராணியம்மாள் உயிரிழந்ததும், அவனுடைய உடலில் அணிந்திருந்த நகைகளை வேகமாக கழற்றியுள்ளார்.

அவற்றை வேகமாக எடுத்துக்கொண்டு, இனிமேல் நமக்கு சொத்துப்பிரச்சனை வராது என மனைவியிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால் நகைகள் முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்ததால், சந்தேகமடைந்த பரிமளா பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சோதனை நடத்திய பொழுது வீட்டின் பின்புறம் ராணியம்மாள் சடலமாக கிடப்பதை கண்டறிந்துள்ளனர். அதேசமயம் பெங்களூருவிற்கு தப்பி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பர்னபாஸையும் பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சொத்துக்காக தான் ராணியம்மாளை கொலை செய்தேன். நகைக்காக யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்பதை நம்ப வைக்க தான் பெங்களூருக்கு தப்பி செல்ல முயற்சி செய்தேன் என கூறியுள்ளார்.

பெற்ற குழந்தையின் உடலை 5 ஆண்டுகளாக உண்டியலில் வைத்திருந்த பெண் : அதிரவைக்கும் காரணம்!!

ஜப்பானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை 5 ஆண்டுகளாக உண்டியலில் வைத்து பாதுகாத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோவை சேர்ந்த பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த இரண்டு மணி நேரத்தில் இறந்துள்ளது. இந்நிலையில் கணவர் இல்லாத அப்பெண்ணை வீட்டில் இருந்து காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக இறந்த குழந்தையை உண்டியல் ஒன்றில் வைத்து வீடு மாறி இருக்கிறார் அந்த பெண். பின் அந்த உண்டியலுடன் வாழவும் பழகியுள்ளார். மொத்தமாக ஐந்து வருடம் இப்படி அந்த பெண் உண்டியலில் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்ந்து இருக்கிறார். இதில் 4 முறை இவர் வீடு மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது

அந்த குழந்தை இருக்கும் உண்டியல் தான் தனக்கு அதிர்ஷ்டம் என்று கருதியதாலேயே, சடலத்தை அதில் வைத்துள்ளார் அப்பெண். மேலும் தனக்கு இருப்பது எல்லாம் அந்த குழந்தை மட்டுமே, அதையும் இழக்க விரும்பவில்லை என்றும் நினைத்துள்ளார்.

தற்போது இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் பொலிசார் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

மனைவியுடன் சேர்ந்து பல தொழிலதிபர்களை ஏமாற்றிய கணவன் : சிக்கியது எப்படி?

திருப்பூரில் மனைவியுடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி(59) என்பவர் அப்பகுதியில் பனியன் ஏற்றுமதி கம்பெனியினை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்கலம் ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கிளையில் தன்னுடைய கணக்கினை சரிபார்த்துள்ளார்.

அப்போது 3 கோடியே, 92 லட்சத்து, 78 ஆயிரத்து, 768 ரூபாய் கடனாக பெற்றிருப்பதாக தன்னுடைய கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமசாமி, உடனடியாக திருப்பூர் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், முதலிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (35) மற்றும் அவருடைய மனைவி பிரியா (31) என்பவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில், செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என தவிர்க்கப்பட்ட பின்னலாடை அதிபர்களை சந்தித்து பணம் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளனர்.

அதனை நம்பிய தொழிலபர்கள் ஹாரூன் ரஷித், சிவப்பிரகாசம், ராமசாமி ஆகியோர் தம்பதியினரிடம் தங்களுடைய ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர். அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தம்பதியினர் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் ரூ.18 கோடி கடன் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் தலைமறைவாகியுள்ள செந்தில் குமாரின் நண்பர் ராஜேஷ் கண்ணாவையும் விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

கார் விபத்தில் சிதைந்த பிரபல பாடகரின் குடும்பம் : 2 வயது மகள் பலி.. உயிருக்கு போராடும் பெற்றோர்!!

கேரளாவில் சாலை விபத்தில் பிரபல பாடகர் பாலா பாஸ்கர் குடும்பத்தினர் சிக்கிய நிலையில் அவரின் மகள் உயிரிழந்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான பாலா பாஸ்கர் தனது மனைவி லட்சுமி மற்றும் மகள் தேஜஸ்வினியுடன் கேரளாவின் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றார். காரை பாஸ்கரின் கார் ஓட்டுனர் அர்ஜூன் ஓட்டினார்.

கோவிலில் சாமி தரிசனம் முடிந்து அவர்கள் பள்ளிப்புரம் அருகில் வந்த போது கார் வேகமாக மரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த நால்வரும் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது சிறுமி தேஜஸ்வினி உயிரிழந்துள்ளார். பாஸ்கரும், லட்சுமியும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கார் ஓட்டுனர் அர்ஜூனுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து விசாரித்து வரும் பொலிசார், ஓட்டுனர் அர்ஜூன் காரை இயக்கும் போது தூங்கியிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

மாமனார் தான் என் மகளை கொலை செய்துவிட்டார் : கதறும் இளம்பெண்ணின் தந்தை!!

சென்னையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தன் மகளை தனது மாமனார் ஆள் வைத்துக் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் துளசிங்கம். நுங்கம்பாக்கம் அழகுநிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவரது மகள் ரம்யா நேற்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது மினி வேன் மோதி படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தத நிலையில் வேன் ஓட்டுநர் பழனி மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் துளசிங்கம் தனது மாமனாரான திரைப்பட ஸ்டண்ட் கலைஞர் ரத்தினமும், அவரது மகன் எத்திராஜூம் சேர்ந்து தன் மகளை ஆள் வைத்து வாகனத்தை ஏற்றிக் கொலை செய்துவிட்டதாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரில், ரம்யா, தாத்தா வீட்டிலேயே வசித்து வந்த நிலையில் அவர்கள் சொத்து விவகாரத்தில் தனது மகளை அங்கிருந்த விரட்ட முயற்சி செய்ததால் தகராறு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ரம்யா கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளதாக துளசிங்கம் தெரிவித்துள்ளார்.

அபிராமியை சீண்டாத உறவினர்கள் : எனக்காக இதை மட்டும் செய்யுங்கள் என கதறல்!!

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமி தன்னை ஜாமீனில் எடுக்குமாறு சொந்த பந்தங்களிடம் கதறி வருகிறார். குன்றத்தூரை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதையடுத்து சுந்தரத்துடன் ஓடி போவதற்காக தனது இரண்டு குழந்தைகளை அபிராமி கொலை செய்தார். இதன்பின்னர் பொலிசார் அபிராமியை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தியானம், யோகா என பொழுதைக் கழித்து வருகிறார். பெரும்பாலான் நேரங்களில் அழுது கொண்டே இருக்கும் அவர் யாருடனும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அபிராமியை அவரது உறவினர்கள் இதுவரை யாரும் பார்க்க வரவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் உள்ள அவர் சிறை அதிகாரிகளிடம், தனது உறவினர்களிடம் கூறி தன்னை ஜாமீனில் எடுக்க வேண்டும் என கதறி அழுது வருவதாக கூறப்படுகிறது.

இலங்கையர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்த திருமணம்!!

இலங்கையில் பலரின் மனங்களை நெகிழ வைத்த திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆடம்பரம் இல்லாமல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு திருமணம் நடத்த திட்டமிட்டு, வெற்றிகரமாக முடித்துள்ளார்.

புகைப்பட கலைஞரான அருணசிறி என்ற இளைஞர் பயாஷானி என்ற பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
இந்த திருமணம், இம்புலன்தன்ட முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த திருமணத்திற்கு மேலும் பல பகுதிகளை சேர்ந்த முதியோர்களும், சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோரின் அன்பை இழந்த பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் அன்பை இழந்த பெற்றோருக்காகவும், இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகவும் ஆடம்பரமாகவும், களியாட்ட நிகழ்வுகளுடன் நடத்தப்படும் திருமணங்களுக்கு மத்தியில், இந்தத் திருமணம் பலரையும் நெகிழ்சி அடைய செய்துள்ளது.

இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!!

எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியரை நாடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

மேலும் காய்ச்சல் வந்தால் தொழில்களுக்கோ, பாடசாலைகளுக்கோ செல்ல வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது.

இலங்கையில் டெங்கு நோய்த் தாக்கத்தால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 பேர் பலியாகினர்.

அத்துடன் 38,565 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது

நிர்வாணமாக நின்று சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர்கள் : வலைவீசும் பொலிஸார்!!

புனித பூமியாக கருதப்படும் சீகிரியாவில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இளைஞர்கள் சிலர் பிதுரங்கல கல் மீது எரி, சீகிரிய பூமியை நோக்கி நிர்வாணமாக நிற்கும் புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த புகைப்படத்தை எடுத்த இளைஞர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அரை நிர்வாணமாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமையினால் பாரிய சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.

புனித பூமியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பிதுரங்கல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தானியகம ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த இளைஞர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் திருமணத்திற்கு வந்த மணப்பெண்ணின் முதல் காதலன் : பதறியடித்து ஓடிய மணமகன்!!

தம்புள்ளையில், இடம்பெற்ற திருமணம் ஒன்றின்போது மணமகளின் முதல் காதலன் திடீரென மண்டபத்திற்கு பிரசன்னமானதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமண வைபவத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த திருமணத்திற்கு சென்ற நபர் ஒருவர் திருமணத்தை குழப்பும் விதமாக கூச்சலிட்டுள்ளார்.

மணமகள் தனது முன்னாள் காதலி எனவும், அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் சபையில் காண்பித்து கோசமிட்டதுடன் திடீரென பாய்ந்துச் சென்று மணமகனையும் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த மண்டபத்தில் கடும் பதற்ற நிலை உருவானதுடன் மணமகன் உடனடியாக தனது உறவினர்களுடன் குறித்த மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தியநபர் பெண் வீட்டாரால் எச்சரிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.