யாழ்ப்பாணத்தை உலுக்கிய பெரும் சோகம் : இரட்டை குழந்தை பெற்ற தாய் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி யாழ் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த வேளையில் உயிரிழந்துள்ளார்.

வேலணையைச் சேர்ந்த 32 வயதான 4 பிள்ளைகளின் தாயாரான விஜயகுமார் நிரோஜனி என்பவரே நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

பன்னீர்க்குடம் குருதியில் கலந்ததால் அவர் உயரிழந்ததாக வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கர்ப்பிணித் தாய் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் பிற்பகல் 3 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகள் பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில் தாயார் மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார். தாயாரின் அமினி ஓடிக் திரவம் குருதியில் கலந்துகொண்டதால் இறப்பு ஏற்பட்டது என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதளையின் பின்னர் சடலம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

உயிரிழந்த தாயாரின் இரட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பில் பேருந்துகளில் நடக்கும் விபரீதங்கள் : வெளியானது CCTV காணொளி!!

கொழும்பில் பயணிக்கும் பேருந்துகளில் இடம்பெறும் திருட்டு சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

சிலர் குழுக்களாக இணைந்து பேருந்துகளில் பயணிப்போரின் பணம் மற்றும் உடமைகளை திருடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து புறநகர் பகுதி நோக்கி பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவரின் பணப்பை திருடப்பட்டுள்ளது.

கோட்டைக்கு அருகில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது.

பேருந்துக்குள் நுழைந்த சந்தேக நபர் மிகவும், நுட்பமான முறையில் பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இதுபோன்று பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் கொழும்பில் இடம்பெறுவதாகவும், பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வங்கி ATMக்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி : இளைஞனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

அரச வங்கியின் ATM இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல லட்சம் ரூபாய் பணத்தை பெண் ஒருவர் இழந்துள்ளார். வெலிகம பகுதியிலுள்ள அரசாங்க வங்கிக்கு சென்ற பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த பெண் மூன்று இலட்சம் ரூபா பணத்தை வைப்பு செய்வதற்கு முயற்சித்த போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பணத்தின் ஒரு பகுதி மாத்திரம் வைப்பிலிடப்பட்டுள்ளது. அதிக பணம் இயந்திரத்திற்கு வெளியே வந்துள்ளது.

இது தொடர்பில் அந்த பெண் உடனடியாக பாதுகாப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்ய சென்றுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பணம் வைப்பிட வந்த மற்றுமொரு நபர் இயந்திரத்தை செயற்படுத்திய போது பெண்ணின் பணம் வெளியே வந்துள்ளது. அதனை குறித்த நபர் எடுத்துக் கொண்டு அங்கிருந்து உடனடியாக சென்றுள்ளார்.

எனினும் இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடீவியில் பதிவாகியிருந்தமையினால் அதனை கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீட்டில் பதினாறு வகையான செல்வங்களும் நிலைத்திருக்க இதை மட்டும் செய்தால் போதும்!!

போதுவாக அனைத்து திருமணத்தின் போது மணமக்களை வாழ்த்த நாம் முன்னோர்கள் பதினாறு பெற்று பெறு வாழ்வு வாழ்க என வாழ்த்துவர். அத்தகைய பதினாறு வகை செல்வங்களும் நம் வீட்டில் நிறைந்து இருக்க செய்ய வேண்டிய சில வழிகளைப் பற்றி பார்ப்போம்.

புகழ் : ஒருவருக்கு புகழ் என்பது அவர் செய்யும் செயல், நடக்கும் விதம், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.

வெற்றி : வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. வெற்றியை பெற கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

பணம் : செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவை பணத்தையும், பொன்னையும் பெற தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும்.

இரக்கம் : பிறரின் நிலை அறிந்து அவர்களிடன் இரக்கம் காட்டுவது மிகவும் நல்லது. இன்றும் சிலர் பல ஏழைகளுக்கு இரக்கம் காட்டி உதவி செய்து வருகின்றனர்,

அறிவு : அறிவு என்பது நாம் செய்யும் செயல்களின் அடிப்படையில் அமைகின்றன. மேலும் அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.

அழகு : அழகு என்பது மற்றவர் பார்க்கும் பார்வையில் இல்லை. நாம் நினைக்கும் நேர்மறை எண்ணங்களில் தான் உள்ளது.

கல்வி : ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. எவனேவளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.

நோயின்மை : நோயின்மை ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும்.

வலிமை : உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும்.

நல்விதி : விதி என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது

உணவு : உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் தினமும் சரியான நேரத்தில் நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும்.

நன் மக்கள் : குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் இருக்கின்றது.

பெருமை : உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.

இனிமை : பேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

துணிவு: துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.

நீண்ட ஆயுள் : மேற்கூறிய எல்லா 15 செல்வங்களை பெற்றுவிட்டால் நீண்ட ஆயுளுக்குத் துணையாய் இருக்கும்.

திருமண விழாவில் வித்தியாசமான பரிசு கொடுத்த நண்பர்கள் :  வாயடைத்து போன உறவினர்கள்!!

ஒரு திருமண விழாவில் தம்பதிக்கு எரிவாயு சிலிண்டரை திருமண பரிசாக நண்பர்கள் அளித்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. தற்போது பெட்ரோல் ரூ.85 ஐ தாண்டியுள்ளது. விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100 ஐ தொடும் என வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், மானிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலையும் தாறுமாறாக உயர்ந்து ரூ.850 ஆக உயர்ந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் 5 லிட்டர் பெட்ரோல் கேனை ஒருவர் திருமண பரிசாக வழங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

இந்நிலையில், அதே கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமக்களுக்கு அவர்களின் நண்பர்கள் கேஸ் சிலிண்டரை பரிசாக கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான திருமண பரிசை அளிக்க நினைத்த அந்த நபர், தற்போது கேஸ் சிலிண்டரின் விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு, இந்த பரிசை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

குழந்தையின் உயிரை பறித்த ஐஸ் கிரீம் :.. பலரை பதை பதைக்க வைக்கும் புகைப்படம்!!

அசுத்தமான தண்ணீரில் தயாரித்த ஐஸ் க்ரீமை சாப்பிட்ட குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. அனைவருக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

ஐஸ் க்ரீமை தினமும் சாப்பிடுவது சிறந்ததல்ல. எப்போதாவது சாப்பிடலாம். அதுவும் வீதி ஓரங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் ஐஸ் க்ரீமை சாப்பிடவே வேண்டாம்.

அசுத்தமான நீரில் செய்த ஐஸ் க்ரீம் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றது.

இந்த பிஞ்சுக் குழந்தையை போல ஏனைய குழந்ழதகளின் உயிரையும் ஐஸ் க்ரீம் காவு கொண்டு விடும் மறுக்க முடியாத உண்மை.

பள்ளியில் கொடுக்கப்பட்ட தண்டனையால் பரிதாபமாக பலியான மாணவன்!!

பள்ளியில் தவளை போல குதித்து செல்லுமாறு கொடுக்கப்பட்ட தண்டனையால், திடீரென மயக்கம் போட்டு விழுந்த மாணவன் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீனாவின் Hunan மாகாணத்தை சேர்ந்த Zhang என்ற 16 வயது மாணவன் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளான். சம்பவம் நடந்த அன்று மதிய வேளை முடிந்து கூட Zhang, தன்னுடைய நண்பனுடன் பேசிக்கொண்டிருந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பள்ளியின் தலைமையாசிரியர் Xie, 65 அடி உயரம் கொண்ட சறுக்கிலிருந்து தவளை போல குதித்து வருமாறு தண்டனை வழங்கியுள்ளார். அதேபோல மாணவனும் தண்டனையை நிறைவேற்றிய, அடுத்த நிமிடமே தரையில் சுருண்டு விழுந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சிடையைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், ஏற்கனவே சிறுவனின் மூக்கு, காதுகளில் இருந்து ரத்தம் வந்திருப்பதை பார்த்து மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஊழியரை கொடூரமாக கொலை செய்த காதலன் : அதிர்ச்சி தரும் பின்னணி!!

தமிழகத்தில் அங்கன் வாடி பெண் ஊழியரை கள்ளக்காதலன் கல்லால் அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவருக்கு சுதா(32) என்ற மனைவியும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பசுபதி இறந்துவிட்டதால், சுதா தன் மகளுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து இன்று சுதா அங்கிருக்கும் பாம்பாறு ஆற்றில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அருகிலிருக்கும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் கணவர் இறந்த பிறகு சுதா அதே பகுதியைச் சேர்ந்த டெய்லர் சதீஷ் (32) என்பவருடன் பழகி வந்துள்ளார். அதன் பின் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் பொலிசார் சதீஷை பிடித்து கிடுக்கு பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது கணவனை இழந்து தனிமையில் இருந்த சுதாவுக்கும் சதீசுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. சதீஷ் சுதாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சுதாவின் வீட்டுக்கு சதீஷ் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவர் வேகமாக வெளியேறி சென்றுள்ளார். அவர் யார் என்பது குறித்து சதீஷ் கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சுதாவின் நடத்தையில் சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று இரவு சுதாவை அவரது மோட்டார் சைக்கிளில் பாம்பாற்றுக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுதாவின் தலையில் கல்லை போட்டு சதீஷ் கொலை செய்துள்ளார்.

அவரது உடலை ஆற்றில் உள்ள பள்ளத்தில் தூக்கிபோட்டு விட்டு சேலையால் உடலை மூடிய சதீஷ் அங்கிருந்து புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள கிணற்றுக்குள் தள்ளிவிட்டுவிட்டு சதீஷ் வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார்.

இந்த தகவல்களை சேகரித்த பொலிசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்

மனைவியை கொளுத்திவிட்டு அவரிடம் கணவன் சொன்ன வார்த்தை : காப்பாற்றும் படி கெஞ்சியதாக தம்பி கண்ணீர்!!

தமிழகத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்துவிட்டு, குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறும் படி கணவன் சொல்லியிருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அழகாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு பூமதி(24) என்ற மனைவியும், பூவரசன்(5) என்ற மகனும், நிலாஸ்ரீ என்ற இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 18-ஆம் திகதி வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பி வந்த கார்த்திக், தன் மனைவி பூமதி குழந்தைகள் பூவரசன், நிலாஸ்ரீ ஆகியோர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

இதில் தீக்காயமடைந்த மூன்று பேரும் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பூமதியும் அவரின் பெண் குழந்தை நிலாஸ்ரீயும் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர். பூவரசன் உயிருக்குப் போராடி வருகிறான். கார்த்திக் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பூமதியின் தம்பி நடராஜன் கூறுகையில், கார்த்திக் ரிக்வண்டிக்கு சென்றுவிட்டு, மூன்று மாதம் கழித்து தான் வீட்டுக்கு வருவான்.

அப்படி வீட்டுக்கு வரும் போது எல்லாம், குடிச்சுட்டு தான் வருவான், அப்போது என் அக்கா, குழந்தைகளை கண்மூடித்தனமாக அடிப்பான்.

இப்படி தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே தான் இருப்பான். கடந்த நான்கு, ஐந்து நாட்களாக எங்க அக்கா மற்றும் குழந்தைகளை அடிச்சு கொடுமை பண்ணிருக்கான்.

நாங்க அக்கவோட போனுக்கு கால் பண்ணிக்கிட்டே இருந்தோம், ஆனால் அவளோட போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது. அதன் பின் கார்த்திக்கிற்கு போன் பண்ணி கேட்டால், நான் வெளியூரில் இருக்கேன் என்று சொன்னார்.

அவர்களை தீ வைத்து எரித்த பின்னர் தான், எங்களுக்கு போன் பண்ணி அவர் விஷயத்தை கூறினார். அதன் பின் மருத்துவமனையில் நானும் ஏன் அம்மாவும் என் இப்படி பண்ணுனா என்று கேட்ட போது, அடிச்சு கொடுமை படுத்தி அவர் தான் தீ வச்சு கொளுத்தினாரு, மருத்துவமனையில் யாராவது கேட்டால், தற்கொலை செஞ்சுக்க தீ வச்சு கொளுத்திக்கிட்டோம் என்று சொல்லும் படி சொன்னார்.

இந்த ஒரு முறை மட்டும் என்னை காப்பாற்றுங்க, நான் உங்க கூட வந்துவிடுகிறேன். இனி நான் அங்கு போகவில்லை என்று கதறி அழுதாள். அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் போட்ட பின்னர் தான் காவல்துறையினர் அக்காவிடம் விசாரணை நடத்தி அவனை கைது செய்தார்கள்.

அங்கு அருகில் இருப்பவர்கள் யாரேனும் ஒருவர் எங்களுக்கு தகவல் கொடுத்திருந்தால், நாங்கள் எங்க அக்காவையும், குழந்தையும் காப்பாற்றியிருப்போம் என்று கண்ணீர்விட்டார்.

விரக்தியில் தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தை!!

வேலூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் விரக்தியால் தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மொனூர் ஈஸ்வரன் கோவிலை சேர்ந்த டைலர் வெங்கடேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.

இதனால் விரக்தியில் இருந்த வெங்கடேசன், தனது மகள்கள் மேகலா மற்றும் திவ்யா ஆகிய இருவரையும் கழுத்தில் தூக்குமாட்டி கொன்று விட்டு, தானும் தூக்கில் தொங்கியுள்ளார். இதுதொடர்பாக விரிஞசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பா பசிக்குது சாப்பாடு வாங்கி கொடுங்க என கூறிய மகள்கள் : தந்தை செய்த அதிர்ச்சி செயல்!!

தமிழகத்தில் தொழிலாளி ஒருவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கரசன் (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (39). இவர்களுக்கு சுதா (16), மேகலா (10) என 2 மகள்கள் உள்ளனர்.

சிக்கரசனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் சித்ரா அவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் சுதாவும், மேகலாவும் தந்தையுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சிக்கரசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

தான் இறந்துவிட்டால் தன்னுடைய மகள்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். எனவே தற்கொலை செய்துகொள்வதற்கு முன் 2 மகள்களையும் கொலை செய்ய முடிவெடுத்தார்.

இதையடுத்து சிக்கரசன் தனது மகள்களை கூட்டி கொண்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது சிக்கரசனிடம் மகள்கள் 2 பேரும் பசிக்கிறது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து சாப்பாடு வாங்க சென்ற சிக்கரசன் உணவில் வி‌ஷத்தை கலந்து தன்னுடைய குழந்தைகள் சுதா மற்றும் மேகலாவுக்கு கொடுத்தார்.

மேலும் சிக்கரசனும் வி‌ஷம் குடித்தார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக மயங்கி கீழே விழுந்தனர்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் மூவரையும் மீட்ட அவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாவும், மேகலாவும் உயிரிழந்தனர். சிக்கரசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியாவில் ‘சங்கமும் தமிழரும்’ நூல் வெளியீட்டு விழா!!

தமிழ் மணி அகளங்கன் எழுதிய ‘சங்கமும் தமிழரும்’ ஆய்வுக்கட்டுரை நூல் வெளியீட்டு நிகழ்வு கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் தலைமையில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் இன்று (24.09) நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ணராஜா கலந்துகொண்டிருந்தார். நூல் வெளியீட்டுரையை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன் நிகழ்த்தினார்.

நூலின் முதற் பிரதியை கலாபூசணம் சு.சண்முகவடிவேல் வெளியீடு செய்து வைத்தார். வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் ந.பார்த்தீபன் நூல் நயவுரை ஆற்றினார்.

நிகழ்வில் விருந்தினர்களாக தொடர்பியல் வித்தகர் அருணா செல்லத்துரை, கலாபூசணம் க.ஐயம்பிள்ளை, பண்டிதர் வீ.பிரதீபன், மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சிவகஜன், மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராசா, வர்த்தக சிரோன்மணி ரி.கே.ராஜலிங்கம், நயினை கி.கிருபானந்தா, ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு!!

நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ள வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபைக்கு தெரிவான உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று(24.09) வவுனியாவில் இடம்பெற்றது.

நீதி அமைச்சின் வவுனியா மாவட்ட மத்தியஸ்தர் உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா தலைமையில் ஓவியா விருந்தினர் விடுதி மற்றும் மாவட்ட செயலக கேட்போர் கூடம் என்பவற்றில் இப் பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.

2003 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க விசேட வர்த்தகமானியின் பிரகாரம் விசேட காணி மத்தியஸ்தர் சபை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி சுமார் 20 இலட்சத்திற்குட்பட்ட பெறுமதிகளைக் கொண்ட காணிகளின் உடமை மற்றும் உரிமை பிணக்குகளுக்கு தீர்வு காணும் முகமாக விசேட காணி மத்தியஸ்தர் சபை வவுனியா, திருகோணமலை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிறுவுதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதில் வவுனியா மாவட்டத்திற்கான காணி மத்தியஸ்தர் சபையை நிறுவதற்காக மத்தியஸ்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு கடந்த மே மாதம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு காணி மத்தியஸ்தர் சபை தொடர்பான விசேட செயலமர்வு கடந்த ஜீலை மாதம் நடைபெற்று, அதில் இருந்து மத்தியஸ்தர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காணிச் சட்ட முறைகள் தொடர்பான 3 நாள் செயலமர்வு கடந்த சனி, ஞாயிறு மற்றும் இன்றைய தினம் நடைபெற்றது. இப் பயிற்சி செயலமர்வில் தெரிவு செய்யப்பட்ட 34 விசேட காணி மத்தியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட அரச அதிபர் எம்.ஐ.ஹனீபா, சட்டத்தரணியும் மத்தியஸ்தர் சபை தொடர்பான ஆலோகருமான, எம்.திருநாவுக்கரசு, வடமாகாண உதவி காணி ஆணையாளர் கே.மகேஸ்வரன், யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான திருமதி புராதனி மதனராஜன், யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான திருமதி கோசலை மதன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான ரொகான் சாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு செயலமர்வுகளை வழிநடத்தியிருந்தனர்.

தெரிவு செய்யப்பட்ட இக் காணி மத்தியஸ்தர்களுக்கான நியமனங்கள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் புகையிரத விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடனுக்கு விசேட உலங்கு வானூர்தியில்!!

புகையிரத விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது புகையிரதம் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டு மருத்துவர் குழாம் விசேட உலகவானூர்தி மூலம் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர்.

யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி காலை 10.20 மணியளவில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுவீடன் நாட்டில் இருந்து வருகைதந்தவர் உட்பட நான்கு பெண்கள் மரணமடைந்ததுடன், சுவீடன் நாட்டைச் சேர்ந்த தந்தையும், மகளும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் எஸ்.கமலநாதன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த சிறுமி க.ஜெசிக்கா (வயது 6) மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் அழைத்துச் செல்லப்படுகிறார்.

சுவீடன் நாட்டில் இருந்து வருகை தந்த விசேட மருத்துவர் குழாம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து விசேட உலங்கு வானூர்தி மூலம் இன்று 3.30 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தை வந்தடைந்தனர்.

அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற அவர்கள் சிறுமியை பொறுப்பேற்று சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்துடன், அவருக்கான மேலதிக சிகிச்சைகளை வழங்கி அம்புலன்ஸ் வண்டி மூலம் சிறுமியை வவுனியா நகரசபை மைதானத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து விசேட உலங்குவானூர்தி மூலம் கட்டுநாயக்காவுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து இந்தியா, சிங்கப்புர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக சிறுமியின் உறவினர்கள் இதன்போது தெரிவித்தனர்.

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்த காதல் ஜோடி : கொடூர சம்பவம்!!

அமெரிக்காவில் குழந்தை வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Savanna Greywind என்ற 22 வயது பெண்ணின் சடலமானது கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதியன்று North Dakota பகுதியில் உள்ள நதி அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், Savanna-வின் பக்கத்து வீட்டை சேர்ந்த Brooke Crews மற்றும் அவருடைய காதலர் William Hoehn என்ற இருவரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து இருவரிடமும் நடத்தப்ட்ட விசாரணையில், Savanna-வின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்ததாக Brooke தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவருடைய காதலன் William கூறுகையில், அன்றைய தினம் நான் வீட்டிற்கு சென்ற போது, என்னுடைய காதலி பாத்ரூமில் ரத்தத்தை சுத்தம் செய்தார்.

திடீரென ஒரு குழந்தையை கொண்டு வந்து, இனிமேல் இது தான் நம்முடைய குடும்பம் என கூறியதாக தெரிவித்தார். மேலும், தன்னுடைய காதலி கொலை செய்ததே தனக்கு தெரியாது என பொய் வாக்குமூலம் கொடுத்தார்.

இந்த நிலையில் William வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், அங்கிருந்த கயிற்றினை கைப்பற்றி டிஎன்ஏ சோதனை மேற்கொண்டனர். அதில் கயிற்றை கொண்டு Savanna-வின் கழுத்தை William நெரித்திருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக வயிற்றை கிழித்து குழந்தை வெளியில் எடுத்த குற்றம் தொடர்பாக,ஜாமீனில் வெளிவராதபடி Brooke-க்கு ஆயுள் தண்டை பிப்ரவரி மாதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொடிய விஷம் கொண்ட பாம்புக்கு மறுவாழ்க்கை கொடுத்த பாசக்கார நபர்!!

மும்பை தகிசரில் என்ற புறநகர் பகுதியில் கொடிய விஷம் கொண்ட விரியம்பாம்பு கம்பால் தாக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனை, ஹவல்தார் என்ற நபர் பார்த்து அதை அனில் குபால் என்ற பாம்பு பிடிக்கும் நபரிடம் ஒப்படைத்தார்.

விரியன் பாம்பு கொடிய விஷமுடையது. அனில் அந்த பாம்பை உடனடியாக செம்பூரில் உள்ள கால்நடை மருத்துவர் தீபா கத்யாலிடம் கொண்டு சென்றார்.

டாக்டர் அந்த பாம்பை பரிசோதித்து பார்த்தபோது அதன் முதுகெலும்பு உடைந்திருந்தது தெரிந்தது. அந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. ரேடியோலாஜிஸ்ட் மருத்துவர் ரவி தபார் அதை செய்தார்.

தான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்ப்பதாக மருத்துவர் தபார் கூறியுள்ளார். பாம்புக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தாமல் வாய்வழியாக மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அது தற்போது உடல்நிலை நன்கு தேறி வருவதாக மருத்துவர் தபார் தெரிவித்தார். முழுமையாக குணம் அடைந்ததும் காட்டுப் பகுதியில் கொண்டுபோய் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.