பூட்டிய வீட்டிற்குள்ளேயே வருடக் கணக்கில் தனிமையில் வசிக்கும் நடிகை கனகா… ஏன் தெரியுமா?

நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் கரகாட்டகாரன் படத்தில் மூலம் பெரும்நல்ல வரவேற்பை பெற்றார் கனகா, இப்போது இருக்கும் இடம் தெரியாமல் தனிமையில் உள்ளார்.

12 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த அவர், அதன்பிறகு நடிக்கவில்லை. ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

பின்பு முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என கனகா கூறினார். இதற்கிடையில், 2013 ஆம் ஆண்டு ஆலப்புழா மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக ஒரு தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தகவல் போலியானது என்றும் தனது தந்தை தன்னிடம் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக இப்படி ஒரு தகவலை பரப்பினார் என குறித்த போலியான செய்திக்கு பின் கனகா விளக்கம் கொடுத்திருந்தார்.

இவரது அம்மா தேவிகா பிரபல கதாநாயகியாக ஏராளமான படங்களில் நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு கனகாதான். தனது தாயார் தேவிகா சம்பாதித்து வாங்கிய ஒரு பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார்.

தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற அச்சம் அவரது அடிமனதில் பதிந்து விட்டது. அதனால் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லை என கூறப்படுகிறது. மேலும், இவரது தந்தையே சொத்துக்காக தன்னை துன்புறுத்துகிறார் என கனகா குற்றச்சாட்டு சுமத்தினார்.

கடந்த சில வருடங்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனிமையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அவர் வெளியே வருவதில்லை. அண்மையில் நடந்த ஒரு சினிமா சங்க தேர்தலில் அவர் கலந்து கொண்டு வாக்களிக்க வந்தார் என்றும் கூறப்படுகிறது.

பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் கனகா வசித்து வருவது அவரைப் பற்றிய மர்மங்களை மேலும் அதிகரிக்கச் செய்கிறது எனப் பலர் கூறி வருகின்றனர்.

வவுனியாவில் 4கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!!

வவுனியாவில் இன்று நண்பகல் மத்திய பேரூந்து நிலையத்தில் 4கிலோ 200கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்தில் 4கிலோ 200கிராம் கேரள கஞ்சாவினை எடுத்துச் சென்ற மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 29 வயதுடைய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா போதை ஒழிப்புப்பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் : மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இறுதி ஊர்வலத்தின் அக் கிராம பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் இடம்பெறுவதாக அங்கிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சிறிரேலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் மையானத்தினை நெருங்கி சென்று கொண்டிருக்கின்றது.

குறித்த பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் உறவினர்கள் எவரும் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை குறித்த பெண் மூன்று மாத கர்ப்பிணி என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவனை கொன்ற மனைவி : செய்த துரோகத்தின் அதிர்ச்சி பின்னணி!!

இந்தியாவில் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு, பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு சென்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த வாரம் மலைப்பாதையோரத்தில் நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் இறந்தவர் பெயர் முகமது சமீர் என்பதும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அவர் சவுதியில் வேலை செய்து வந்த நிலையில் சமீபத்தில் தான் சொந்த ஊருக்கு திரும்பியதும் தெரியவந்துள்ளது.

சமீரை அவர் மனைவி பர்தோஷ், தனது கள்ளக்காதலன் ஆசிப் என்பவனுடன் சேர்ந்து கொன்று வீசியதும் தெரியவந்துள்ளது.
முகம்மது சமீர் – பர்தோஷ் தம்பதியருக்கு மூன்று மாத குழந்தை உள்ள நிலையில், பர்தோஷுக்கு ஆசிப் என்ற கார் ஓட்டுநருடன் தவறான தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தங்களது காதலுக்கு கணவர் தடையாக இருப்பதாக எண்ணி அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த பர்தோஷ், கடந்த 14ஆம் திகதி சுற்றுலா செல்லலாம் எனக் கூறி முகம்மது சமீரை ஆசிப்பின் காரிலேயே கொடைக்கானல் அழைத்து வந்துள்ளார். கொடைக்கானலிலேயே வைத்து சமீரை கொலை செய்த இருவரும் டம்டம் பாறை அருகே சடலத்தை வீசிச் சென்றுள்ளனர்.

பின்னர் மங்களூர் வந்த பர்தோஷ், மூன்று மாத குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு 60 சவரன் நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக சமீரின் உறவினர் கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் பர்தோஷ் – ஆசிப் ஜோடியை தேடி வருகின்றனர்.

இரண்டு கால்களையும் இழந்து கதறிய காதலனை கரம்பிடித்த ஷில்பா : தம்பதியின் தற்போதைய நிலை என்ன?

தமிழ்நாட்டில் ஐந்து மாதங்களுக்கு முன், ரயில் விபத்தில் கால்களைப் பறிகொடுத்த விஜய் என்பவர் செயற்கைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்துள்ளதாக அவர் மனைவி ஷில்பா கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய்யும், ஷில்பாவும் காதலித்து வந்த நிலையில் ரயில் விபத்தில் கால்களை விஜய் பறிகொடுத்தார்.
கால்கள் இல்லாத விஜய்யை ஷில்பா திருமணம் செய்ய அவர் வீட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதையும் மீறி அவரை திருமணம் செய்தார் ஷில்பா.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய்யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் ஷில்பா. அவர் கூறுகையில், போன வாரமே விஜய் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கணும். அது கொஞ்சம் தள்ளிப் போய்விட்டது.

இப்போது அவர் நன்றாக நடக்க ஆரம்பிச்சிட்டாரு, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணப் போறதா மருத்துவர்கள் கூறியுள்ளனர் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விஜய் கூறுகையில், வீட்டுக்குப் போகணும், நான் படித்த கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ஏத்த வேலை தேடணும். அம்மா, ஷில்பா, என் தம்பி, தங்கச்சி எல்லாரையும் நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணம் என கூறியுள்ளார்.

ராணுவத்தில் கொல்லப்பட்ட கணவர் : கனவை நனவாக்க அதே பணியில் சேர்ந்த துணிச்சல் பெண்!!

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கணவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருடைய மனைவி ராணுவத்தில் சேர்ந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியை சேர்ந்த Ravinder Sambyal, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் 2013-ம் ஆண்டு Niru என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு எல்லையில் பணியாற்றிய Ravinder, அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் எதிரிகளால் வீரமரணம் அடைந்தார்.

இதனால் பெரும் துயரத்திற்கு ஆளான Niru, ஒரு தாயாக தன்னுடைய மகளை பொறுப்பாக வளர்த்ததோடு, கணவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ராணுவத்தில் சேர்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

49 வார ராணுவ பயிற்சிக்கு பின்னர் Niru தற்போது இந்திய ராணுவத்தில் லெப்டினெண்ட்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள Niru, தன்னுடைய கணவரின் ஆசையை தான் நிறைவேற்றி விட்டதாகவும் பெருமை தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திய கிராம மக்கள் : 19 பேர் கைது!!

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் போலி மது விற்பனை மேற்கொண்டதாக கூறி இளம் பெண்ணை கொடூரமாக தாக்கி கிராம மக்கள் நிர்வாண ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 19 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று குடியிருப்பு ஒன்றில் புகுந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட கும்பல் ஒன்று அங்கிருந்த இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளது.

பின்னர் மர்ம உறுப்பில் மிளகாய் பொடி தூவியுள்ளனர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதற்கான தண்டனை இது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் கவனம் பெற்றதுடன் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி தம்மை ஒரு கும்பல் வீடு புகுந்து தாக்கியதாகவும், சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் கூறி அப்பெண் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே சம்பவம் தொடர்பாக 19 பேரை கைது செய்துள்ளதாகவும், முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வோம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சடலமாக கிடந்த கணவன் : அதிர்ச்சி பின்னணி!!

பஞ்சாப் மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் Zira பகுதியை சேர்ந்தவர் ராஜ்ப்ரீத் சிங் (42). இவருடைய மனைவி மஞ்சித் கவுர் (45) மோகா பாலியல் ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 2013-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்தார்.

மாநிலம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த மோகா பாலியல் ஊழல் வழக்கில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியமான அரசியல்வாதிகள் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ராஜ்ப்ரீத் சிங் மற்றும் 8 மாத கர்ப்பிணியான அவருடைய மனைவி மஞ்சித் கவுர் வீட்டில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர். குற்றவாளிகள் முகமூடி அணிந்திருந்ததால், தற்போது அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஆயுதப்படையினர் உபயோகப்படுத்தும் துப்பாக்கியின் தோட்டாக்கள், இருவரின் தலைப்பகுதியிலும் ஊடுருவியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண் : ஒரு இளைஞரின் அன்றாட உணவு பட்டியல்!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண் மற்றும் கற்கள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பக்கீறாப்பா ஹுனாகுடி என்ற அந்த இளைஞர் தனது 10 வயது முதலே மண் மற்றும் கற்களை விரும்பி சாப்பிட்டு வருகிறார்.

இதனால் தனது உடலுக்கு எந்தவித கெடுதலும் இதுவரை ஏற்பட்டதில்லை என கூறும் பக்கீறாப்பா, துவக்கத்தில் சிற்றுண்டியாக மண் மற்றும் கற்களை உண்டு வந்ததாகவும் பின்னர் அது அன்றாட உணவாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய நிலையில் எவ்வித மாறுதலும் இதுவரை ஏற்பட்டதில்லை என தெரிவித்துள்ள பக்கீறாப்பா, தமது பற்களும் உடைந்ததில்லை என்கிறார். ஆனால் பக்கீறாப்பாவின் இந்த பழக்கத்தை நிறுத்த குடும்பத்தினர் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

கோழி உணவை விட மிகுந்த சுவை தமக்கு கற்களை சாப்பிடும்போது கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் போலி கணக்கு… மாணவிகளை ஏமாற்றி பலாத்காரம் : இளைஞர் சிக்கியது எப்படி?

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றி வந்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலத்தின் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் முபீன்(19). வேலை ஏதும் இன்றி சுற்றித்திரிந்த இவர் பேஸ்புக்கில் போலியாக ஒரு கணக்கை தொடங்கி தனது முகத்தை மாற்றி மார்பிங் செய்து அதில் பதிவிட்டுள்ளார்.

மட்டுமின்றி தான் மாடலாக பணிபுரிந்து வருவதாகவும், ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் இசை நிகழ்ச்சி நடத்தும் ‘டிஜே’ வாக பணிபுரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரது மார்பிங் புகைப்படங்களை பார்த்து மயங்கிய பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் நண்பர்களாயினர்.

பேஸ்புக்கில் இவருக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் நண்பர்கள் உள்ளனர். இந்தநிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை பயாஸ் முபீன் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக கோழிக்கோடு பொலிசாரிடம் புகார் செய்யப்பட்டது.

பொலிசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ்முபீனை கைது செய்தனர். விசாரணையில், இவர் பல பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மட்டுமின்றி தாம் பெற்றோர் இழந்தவன் எனக் கூறி வசதி படைத்த பெண்களிடம் இதுந்து பண மோசடியும் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்திய நபர் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்திய நபரொருவரை கண்டறிவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 19ம் திகதி நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு பேர் குறித்த இடத்திற்கு வந்தபோது சந்தேக நபர் அவ்விடத்திலிருந்து வெளியேறும் காட்சி அங்கிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

வீட்டின் உரிமையாளர் அயலவர்கள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுககிறது.

இந்த நபரை அறிந்திருந்தால் தகவல் தெரிவிக்குமாறு திக்வெல்ல பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் 21 பேரை வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

வவுனியா இராசேந்திரன்குளம் வன பகுதியில் சட்டவிரோதமான முறையில் காணி அபகரித்து குடியேறியுள்ளவர்களில் 21 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீனுடான அவசர கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் வன திணைக்களத்திற்கு உரித்தான ஒதுக்குகாடு 1921ஆம் ஆண்டு ஒதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. அதில் 3500 ஏக்கர் விக்ஸ்காடு, பாவற்குளம் போன்ற பகுதிகளில் வன பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சூடுவெந்தபிலவு பகுதியில் சொற்ப நிலமே வன இலகாவினரின் கட்டுப்பாட்டிலிருந்து வருகின்றது. இதில் 50 ஹெக்டேர் விடுவிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதிகள் இரண்டு பிரதேச செயலகப்பிரிவுகளுக்குள் வருகின்றன. வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவிற்கும், வவுனியா பிரதேச செயலகப்பிரிவிற்கும் என இரண்டு பிரதேச செயலக பிரிவுகளைக் கொண்டுள்ளது.

சூடுவெந்தபிலவு பகுதியில் கடந்த வருடம் தேக்க மரம் நாட்டுவதற்குச் சென்ற வன இலகாவினரை அப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் அனுமதிக்கவில்லை.

பாவற்குளம் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள 6ஆம் கட்ட வீட்டுத்திட்டம் பகுதியில் விவசாயம் மேற்கொள்வதற்காகத் தெரிவித்து சட்டவிரோதமான முறையில் வன இலகாவினரின் பகுதியில் குடியேறியுள்ள 21 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு கொழும்பு, பத்தரமுல்ல வனப் பாதுகாப்பு ஆணையாளர் நாயகத்தினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு அவரின் உதவியை நாடியுள்ளனர்.

அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அவசரக் கலந்துரையாடலில், அப்பகுதியை விடுவிப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகளுக்கு அமைச்சரினால் பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி அப்பகுதியைச் சென்று பார்வையிட்டு களப்பரிசோதனை செய்வதற்கு விசேட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு காட்டு பிரதேசமாக காணப்பட்டு தற்போது காடுகள் அழிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து வனத்திணைக்களத்திற்கு அச்சுறுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வன திணைக்களத்திற்கு அமைச்சராக ஜனாதிபதியே காணப்படுகின்றார். இலங்கையில் 32 வீதாசாரத்தில் நிலப்பகுதிகளில் காடுகளை அதிகரிப்தற்கு பிரயச்சித்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காடுகள் அழிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமைக்கு ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராசேந்திரன்குளம் பகுதியிலுள்ள பொதுக்கள் தெரிவிக்கின்றனர்.

சோற்றுப் பார்சலுக்காக கடுமையாக மோதிக் கொண்ட ஆண், பெண் உறுப்பினர்கள்!!

கேகாலையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

அரநாயக்க மைதானத்தில் இடம்பெற்ற விழா ஒன்றில் சோற்று பார்சல் தொடர்பாக அந்தப் பகுதி பிரதேச சபையின் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த பிரதேச சபையின் ஆண் உறுப்பினர் ஒருவர் பெண் உறுப்பினருக்கு சோற்றுப் பார்சலால் எறிந்துள்ளார்.

தாக்குதலில் இலக்கான பிரதேச சபை உறுப்பினர் சுரங்கி தீபிகா சிறிவர்த்தன, அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் தலைமையில் அரநாயக்க பிரதேசத்தில் சிறிய தேயிலை தோட்டங்கள் வைத்திருப்போருக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் வவுச்சர் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் 180 பேர் பங்கேற்றனர். சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி சபை அதிகாரியால் வழங்கப்பட்ட சோற்றுப்பார்சல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கும்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சோற்றுப்பார்சல் தாக்குதலுக்குள்ளான பெண் உறுப்பினர் தன்னுடைய மூன்று பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு தேவையான சோற்றுப் பார்சலை பிரித்தெடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஆண் பிரதேச சபை உறுப்பினர் அனுமதியின்றி பலாத்காரமாக அந்த பார்சல்களை எடுக்க முயற்சி செய்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அரநாயக்க பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

திடீரென தாழிறங்கிய கொழும்பின் முக்கிய பகுதி!!

கொழும்பில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் பாதையில் நிலம் தரையிறங்கியமையால் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.

டென்சில் கொப்பேகடுவ மாவத்தையின் நடைபாதையில் இன்று அதிகாலை பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக மின்சார கம்பங்கள் மற்றும் சில மரங்கள் பல அடிகள் கீழே சென்றுள்ளன.

சேதமடைந்த மின்சார கம்பங்களை மாற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது

நான் என்ன விபச்சாரமா நடத்துகிறேன் : கதறும் விஜயகுமாரின் மகள்!!

சொத்துக்காக என்னை சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்கள் என வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஏராளமான அறைகளை கொண்ட இந்தப் பங்களா சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வீட்டை விஜயகுமார், தனது மகள் வனிதாவுக்குப் படப்பிடிப்புக்காக கொடுத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்தும் வனிதா, வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

விஜயகுமார் மதுரவாயல் பொலிசில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து பொலிசார், வனிதாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். 25,000 சதுர அடி அளவு கொண்ட வீட்டில் நான் வெறும் 1000 சது அடி அளவு உள்ள இடத்தில் இருந்தால் என்ன? வீட்டில் இப்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் என் தந்தை விஜயகுமார் என்னை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். ஏற்கனவே நான் 1995 களில் நடித்து நான் ஈட்டிய பொருளும் இந்த வீடு கட்டுவதற்கு உதவியுள்ளது.

அப்படியிருக்கும்போது நான் இந்த வீட்டில் இருக்க உரிமை இருக்கிறது. வீட்டிற்குள் நுழைந்த பொலிசார், என்னுடன் பணியாற்றியவர்களையும் அடித்து, என்னையும் அடித்தார்கள். நான் சொந்த வீட்டில் இருக்கும்போது பொலிசார் எப்படி எனது கன்னத்தில் அடிக்க முடியும்.

நான் விபச்சாரமா நடத்துகிறேன். தைரியம் இருந்தால் வீட்டில் விபச்சாரம் செய்கிறேன் என என்மீது வழக்கு போடட்டும். நான் ஒழுக்கமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி, கடன் வாங்கி படம் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெண்ணை இந்த அளவுக்கு துன்புறுத்தக்கூடாது. நான் என் வாழ்க்கையில் என்ன தவறு செய்தேன். வாழ்க்கையில் சில தவறான முடிவுகள் எடுத்துள்ளேன் அது உண்மைதான். என்னுடைய பெயரில் ஒரு சொத்து கிடையாது.

நான் இரண்டு முறை விவாகரத்து செய்துகொண்டவள், ஆனால் நான் யாரிடமும் இதுவரை ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. சொத்து அபகரிப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என கூறியுள்ளார்.

விபத்தில் துண்டான சிறுவனின் கால்கள்… 8 மணி நேரம் போராடிய மருத்துவர்கள் : வெளியான திக் திக் நிமிடங்கள்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ரயில் விபத்தில் இரு கால்களும் துண்டான சிறுவனுக்கு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கால்களை இணைத்து நடக்க வைத்துள்ளனர்.

கேரளாவின் பய்யனூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ரயில் விபத்து ஒன்றில் இரு கால்களும் துண்டான நிலையில் வாய்விட்டு கதறிய சாஹில் என்ற சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

சிறுவன் சாஹிலுடன் அவனது துண்டான கால்களையும் அள்ளிக்கொண்டு சென்ற அந்த பெயர் தெரியாத முகங்களுக்கு நம்பிக்கையே இருந்ததில்லை என கூறப்படுகிறது.

பின்னர் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் நீண்ட 8 மணி நேரம் கடுமையாக போராடிய மருத்துவர்கள் இரண்டரை வயதேயான சாஹிலின் துண்டான காலகளை வெற்றிகரமாக இணைத்துள்ளனர். தற்போது சிறுவன் சாஹில் எழுந்து நடக்கும் நிலையில் அவனது கால்கள் குணமாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி பய்யனூர் ரயில் நிலையத்தில் தாயாருடன் சென்ற நிலையில் விபத்தில் சிக்கி சாஹிலின் கால்கள் இரண்டும் துண்டானது.

அந்த ரயில் விபத்தில் சாஹிலின் தாயார் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டார். இதனிடையே பொலிஸ் விசாரணையில் விபத்தில் சிக்கிய தாயாரும் மகனும் தொடர்பில் தகவல் கிட்டியது.

ஆனால் பொலிசாரின் முயற்சியால் மருத்துவமனையில் சிறுவன் சாஹிலுக்கான அறுவைசிகிச்சை துவங்கியிருந்தது. தற்போது நான்கு முக்கிய அறுவைசிகிச்சைக்கு பின்னர் சாஹில் எழுந்து நடக்கத்துவங்கியுள்ளதாக அவரது தந்தை சமீர் தெரிவித்துள்ளார்