நான் அதை செய்யவில்லை என்று கதறிய சிறுவனை அடித்தே கொன்ற கிராம மக்கள் : நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் திருட்டு சம்பவம் ஒன்றிற்கு சிறுவன் தான் காரணம் என்று கூறி, கிராம மக்களே அவனை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை காவல் சரகத்திற்கு உட்பட்ட அல்லாலிகவுண்டனூர் பகுதியில் வசித்து வருபவர் இளஞ்சியம். இவருக்கு பாலசுப்ரமணியன்(15) என்ற மகன் நந்தினி(5) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பாலசுப்ரமணியன் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில், அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.

இதனால் ஊர் சுற்றும் பாலசுப்ரமணியன் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்று பொதுமக்கள் சந்தேகித்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு பாலசுப்ரமணியன் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் மற்றொரு வீட்டில் செல்போனும் திருட்டு போயிருந்தது. இப்படி பக்கத்து பக்கத்து வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்ததால்,வழக்கம்போல் அந்த வீடுகளுக்கு அருகில் உள்ள பாலசுப்ரமணியன் தான் அந்த திருட்டுச் சம்வங்களை அரங்கேற்றியிருக்க முடியும் என்று கிராமமக்கள் நினைத்துள்ளனர்.

அதனால்,பாலசுப்ரமணியன் மீது சந்தேகப்பட்ட அவர்கள் சிறுவனை அவனது வீட்டில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். நான் திருடவில்லை என்று கூறிய போதும், அவர்கள் நீ தான் திருடி இருப்பாய் என்று கூறி சரமாரியாக அடித்துள்ளனர்.

இதன் காரணமாக பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இப்படி 15 வயது சிறுவனை திருட்டு சம்பவங்களில் சந்தேகப்பட்டு கிராம மக்களே அடித்து கொன்றதால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொடூரமாக கொல்லப்பட்ட புதுமாப்பிள்ளை : பெண்ணின் வெறிச்செயல்… திடுக்கிடும் பின்னணி!!

தமிழகத்தின் திருப்பூரில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (27). நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆன இவர் நிதி நிறுவனம் ஒன்றுக்கு பணம் வசூல் செய்யும் வேலையும் செய்து வந்தார்.

சம்பவத்தன்று வெங்கடேஷ், ஜெயந்தி (23) என்பவரிடம் பணம் வசூலிக்க சென்றார். அப்போது ஜெயந்திக்கும், அவருடைய பக்கத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் ராதா (50) என்பவருக்கும் இடையே வீட்டில் பொருட்களை வைத்தது தொடர்பாக சண்டை நடைபெற்றது.

அப்போது ராதாவும், 16-வயது சிறுவனும் சேர்ந்து ஜெயந்தியை தாக்கியதில் அவர் கீழே விழுந்துள்ளார். அங்கு பணம் வசூலிக்க சென்ற வெங்கேடஷ், ஜெயந்திக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராதா, தனக்கு துணையாக தனது உறவினர்களான ஜெய்நகர் சிவக்குமார் (30), பாலு (37) ஆகியோரை வரவழைத்துள்ளார். பின்னர் ராதா, சிவக்குமார், பாலு மற்றும் 16 வயது சிறுவனும் சேர்ந்து வெங்கடேசை தாக்கி, அவரை அங்கிருந்த அம்மி கல் மீது தள்ளி உள்ளனர். இதில் அம்மி கல் மீது, விழுந்த வெங்கடேசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக ராதா, சிவக்குமார், பாலு மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய நால்வரையும் பொலிசார் கைது செய்தனர். வெங்கடேஷின் இறப்பு செய்தியை கேட்டு அவர் மனைவி, உறவினர்கள் அழுததால் அந்த பகுதியில் சோகம் நிலவியது.

இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த தாதி : மோதிரத்தால் அடையாளம் கண்டு கட்டிப்பிடித்து கதறி அழுத பரிதாபம்!!

விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் பின்னர் முகத்தில் உள்ள ரத்தத்தை துடைத்து பார்த்து தனது கணவர் என அடையாளம் தெரிந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் சீனிவாசன் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி என்ற இடத்தில் போன் பேசுவதற்காக ரோட்டின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி போன் போசிக்கொண்டிருந்தார் சீனிவாசன்.

அப்போது மேட்டூரில் இருந்து சேலம் சென்ற கார் அதிவேகமாக வந்தபோது ரோட்டின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த சீனிவாசன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டிய நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சீனிவாசனுக்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர் சிவகாமி சிகிச்சையளித்தனர். வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது முகம் பகுதியில் அதிகமான ரத்தம் இருந்ததால் அடிப்பட்டவர் யார் என அடையாளம் தெரியவில்லை.

நோயாளியின் மோதிரத்தை வைத்து அது தன் கணவர் என சிவகாமி அறிந்தார். அவர் இறந்ததை அறிந்து உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

“புள்ள கிடைக்கலன்னா போலீஸ் ஸ்டேஷன்லயே செத்துடுவோம்” கலங்கும் நாடோடி பெற்றோர்!!

“ஹரிணி எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயேதான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடி நகர மாட்டோம். ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா இங்கேயே எங்க உசுர விட்டுடுவோம்!” “புள்ள கிடைக்கலன்னா போலீஸ் ஸ்டேஷன்லயே செத்துடுவோம்” கலங்கும் நாடோடி பெற்றோர்!

“அன்னிக்கு நானும் எம்பொஞ்சாதியும் வழக்கம்போல புள்ளய தூக்கிக்கிட்டு வெளியூர் திருவிழாவுக்கு ஊசி, பாசி விக்க போயிருந்தோம். ராவு இருட்டுறதுக்குள்ள வூடு திரும்பிடணும்னு கிளம்பினப்போதான் ஆட்டோ ரிப்பேர் ஆகிடுச்சு. இனிமே ரிப்பேர் பண்ணிட்டுக் கௌம்புறதுக்கு நேரமாகிடும். அதனால, இங்கேயே எங்கயாவது படுத்து எந்திரிச்சு வெள்ளன கௌம்பிப் போகலாம்னு நினைச்சோம்ங்க. பகல்முழுக்க வேல பாத்த அலுப்புல அசந்து தூங்கிட்டோம்.

நடுராத்தியில கண் முழிச்சுப் பாத்தப்பதான் பக்கத்துல படுத்திருந்த ரெண்டு வயசு புள்ளயக் காணோம்ங்கிற உணர்வே வந்துச்சு. அய்யா சாமி எம்புள்ள எங்கய்யா இருக்கும். என்னய்யா பண்ணிட்டு இருக்கும். பச்சப்புள்ளைங்கய்யா அது. ஆத்தா, அப்பன் மொகத்தத் தவிர வேற யாரு மொகமும் அதுக்குத் தெரியாதுங்களே. அய்யா எம்புள்ளயக் காப்பாத்துங்கய்யா. நீங்க எல்லாருமா சேந்து மனசு வெச்சா எம்புள்ளய சீக்கிரமே கொண்டு வந்து சேத்துடலாம்யா. தயவு செஞ்சு கருண காட்டுங்கய்யா” எனக் கையெடுத்துக் கும்பிடுகிறார்; வாய்விட்டுக் கதறுகிறார் வெங்கடேசன். நாடோடி இனத்தைச் சேர்ந்தவர். இவரின் இரண்டு வயது மகள் ஹரிணி கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போய்விட்டார். இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. குழந்தை கிடைத்தபாடில்லை.

சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு தெரியாத ஊர், பழக்கப்படாத மனிதர்கள் என்பதால் அனைக்கட்டு காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள உதவிக் காவல் ஆய்வாளர் வீட்டின் வாசலிலேயே படுத்து உறங்கியிருக்கிறார்கள். பாதுகாப்பான இடம் என்று நம்பி அந்த இரவை அங்கே கழித்தவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட துயரம் நேர்ந்திருக்கிறது.

“நாங்க நாடோடி இனத்தைச் சேர்ந்தவங்க. உத்திரமேரூர் பக்கத்துல இருக்கிற மானாமதி கிராமம்தான் எங்க சொந்த ஊரு. காலங்காலமா இப்படித்தான் ஊரு ஊரா போய் பொம்ம, வளையலுலாம் வித்துட்டு வருவோம். எனக்கும் காளியம்மாவுக்கும் 2015 லதான் கல்யாணம் நடந்துச்சு. ஒரு வருஷம் புள்ளயே இல்லைங்க. மகாபலிபுரம் பக்கத்துல இருக்கிற கடம்பாடி கோவில்ல மண் சோறு சாப்பிட்டதுக்கு அப்பறம்தான் காளியம்மா வயித்துல புள்ள உண்டாச்சு.

முத்து கணக்கா பொம்பளைப் புள்ள பொறந்துச்சுங்கய்யா. ஆசை ஆசையா தோளுலயும் மாருலயும் தூக்கி வளத்தோம். காளியம்மா இப்போ ரெண்டாவது உண்டாகியிருக்கா. அஞ்சு மாசம் ஆகுது. ஹரிணி பாப்பா உன்கூட வெளையாட இன்னொரு குட்டி பாப்பா வரப்போகுதுன்னு சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டோம். ஆசை ஆசையா வளத்தப் புள்ளயத் தொலைச்சிட்டு இப்போ அனாதை கணக்கா போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயே கெடக்குறோம். எங்க மணியே, பவளமே, குலத்தக் காக்க வந்தவளே எங்க இருந்தாலும் அப்பாக்கிட்ட ஓடி வந்துடுடா பட்டு” எனக் கத்திக்கொண்டே தலையில் அடித்து அழுகிறார்.

“சார், தெனமும் நூறுக்கும் எறநூறுக்கும் ஊரு ஊரா அலையிற அன்னாடங்காச்சிங்க நாங்க. படிக்கத் தெரியாது, எழுதத் தெரியாது. ஆனா, மனுசங்ககூட நல்ல விதமா பழகத்தெரியும். நமக்கு மனுசங்கதான் துணைனு நினைச்சிக்கிட்டு கிடைக்கிற எடத்துல தூங்கி எழுந்துப்போம். அன்னிக்கு ராத்திரி நாங்க இங்க தங்காம ஆட்டோவுலயே ஊருக்குப் போயிருந்தா வழியில போலீஸ்காரங்க இந்த ராத்திரியில எங்க போறீங்க என்ன ஏதுன்னு கேட்டு தொல்லை பண்ணியிருப்பாங்க.

கைப்புள்ளய வெச்சிக்கிட்டு எதுக்கு ஒவ்வொரு இடமா நின்னு நின்னு போகணும். சிவனேன்னு தூங்கி எழுந்து போலாம்னுதான் இங்க தங்கினோம். பாவிங்க கொசு வலைக்குள்ள தூங்கிட்டு இருந்த எங்க குல சாமிய தூக்கிட்டு போயிட்டானுங்களே. பெத்த வயிறு கெடந்து துடிக்கிது சார்.

என் குழந்தை சாப்பிட்டுச்சோ தெரியலயே, தூங்குச்சோன்னு தெரியலயே. போலீஸ் ஸ்டேஷன் வழியா போறவங்க எல்லாரும் எங்கள ஒரு மாதிரி பார்த்துட்டுப் போறாங்க சார். ஒரு சிலர் என்கிட்ட வந்து ‘உங்க புள்ள செத்துப் போயிடுச்சாம். அதான் வெளியில சொல்லாம மறைச்சிட்டாங்க’ன்னு சொல்லுறாங்க. யார் என்ன வேணா சொல்லட்டும் சார். எனக்கு நம்பிக்கை இருக்கு. எம்புள்ள உசுரோடதான் இருக்கு.

அவ எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயேதான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடி நகர மாட்டோம். ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா இங்கேயே எங்க உசுர விட்டுடுவோம் சார்” என்றபடியே வெடித்து அழுகிறார். அவர் கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல வழியின்றி தவித்து நிற்கிறோம்.

பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு விரைவில் நல்ல சேதி வந்து சேரட்டும். சேயைக் கண்டு அவர்கள் மனம் குளிரட்டும்.

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் நேற்று (23.09.2018 ஞாயிற்றுக்கிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
 
காலை 7.00 மணியளவில் உற்சவம் ஆரம்பமாகி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணுமூர்த்திக்கு அபிசேகம் நடைபெற்று எட்டரை மணியளவில் தம்பப் பூசை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பது மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று பத்து மணியளவில் உள்வீதி வலம் வந்து பத்தரை மணியளவில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பகவான் தேரில் ஆரோககணி த்தருளினார்.
 
தொடந்து எம்பெருமான் ரதத்தை ஒரு புறம் ஆண் பக்தர்களும் மறுபுறம் பெண் பக்தர்களும் இழுத்து வர சரியாக காலை பதினோன்றரைமணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார். அதன்பின் அர்ச்சனைகள் இடம்பெற்று தொடந்து பச்சை சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
 
மேற்படி உற்சவத்தில் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மஹா விஷ்ணுவின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

<
img class=”alignnone size-large wp-image-197100″ src=”https://www.vavuniyanet.com/wp-content/uploads/2018/09/DSC_0423.jpg” alt=”” width=”640″ height=”427″ />

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பரம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பர திருவிழா நேற்று முன்தினம்  22.09.2018 சனிக்கிழமை இடம்பெற்றது.

சப்பர திருவிழாவின் போது வசந்தமண்டப பூஜையின் பின் அற நெறி மாணவர்களின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வாண வேடிக்கை நிகழ்வும் இடம்பெற்றது.


2 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் : ஏமாற்றிய துப்பாக்கி!!

மாத்தறை கக்கனதுரை- கொகாவல பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் மீதும், வியாபார நிலையம் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினையே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று காலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் கடைக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட வேளை சந்தேக நபரின் துப்பாக்கி வேலை செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பேருந்தின் மீது 2 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடாத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். அது பலனளிக்கவில்லை.

எனினும் இரண்டு தடவை பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயினும், துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பஸ் உரிமையாளருக்கும் சந்தேக நபருக்குமிடையில் நீண்டகாலமாக காணப்பட்ட பிரச்சினையே இதற்கு காரணமென தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை: வீடு ஒன்று சேதம்!!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்ததில் வீடு ஒன்றின் கூரை சேதமடைந்துள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

இன்று மாலை ஓமந்தை, மருதங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நாம்பன் குளம் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது திடீரென வீசிய காற்றின் காரணமாக வீடு ஒன்றின் கூரை முகட்டு ஓடுகள் தூக்கி வீசப்பட்டு அதன் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் மழை நீர் வீட்டிற்குள் சென்றதில் அந்தக் குடும்பம் பாதிப்படைந்துள்ளது.

அத்துடன், வீட்டில் நின்ற மா மரமும் முறிந்து விழுந்துள்ளதுடன் அவ் வீட்டிற்கு அருகில் உள்ள வேறு சில மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. எனினும் எவருக்கும் எந்தப் பாதிப்பு ஏற்படவில்லை.

உணவு சுவையாக இல்லாததால் மனைவி எடுத்த விபரீத முடிவு : அனாதையான குழந்தைகள்!!

பெங்களூரில் உணவு சுவையாக இல்லை என கணவன் திட்டியதால், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ரெய்ச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஜெயலட்சுமியை (41) திருமணம் செய்துகொண்ட பின்னர் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

அங்கு சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வந்த நாகராஜ் தினமும், உணவு சுவையாக இல்லை என மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மதிய உணவிற்கு வீடு வந்த நாகராஜ், சுவையாக இல்லை என ஜெயலட்சுமியை திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த ஜெயலட்சுமி, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வீட்டில் இருந்து அலறல் சத்தம் வருவதை கேட்ட அவருடைய மகள்கள் இருவரும் உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஜெயலட்சுமியின் பெற்றோர் நாகராஜ் மீது பொலிஸ் நிலையில் புகார் அளித்தனர். அந்த புகாரில் எங்களுடைய மகளுக்கு சரியாக சமைக்க தெரியாது. குழந்தை பிறந்த பின்னர், கணவரையும் குழந்தைகளையும் சமாளிக்க தெரியாமல் திகைத்துள்ளார். இதனால் அடிக்கடி நாகராஜ் எங்களுடைய மகளை கொடுமை படுத்தி வந்தார். தற்போது நடந்த தற்கொலை சம்பவத்திற்கு கூட நாகராஜ் தான் காரணம் என குறிப்பிட்டிருந்தனர்.

இதுசம்மந்தமாக தற்போது பொலிஸார் நாகராஜை கைது செய்துள்ளனர்.

3 திருமணம் செய்துகொண்ட விஜயகுமார் மகள் வனிதா : 8 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த செயல்!!

நடிகர் விஜயகுமாரின் வீட்டை சொந்தம் கொண்டாட நினைக்கும் வனிதா கடந்த 2010-ல் அந்த பாவப்பட்ட வீடு தனக்கு தேவையில்லை என கூறியது தெரியவந்துள்ளது.

சென்னை ஆலப்பாக்கத்தில் விஜயகுமாருக்கு சொந்தமாக உள்ள பங்களாவை அவரது மகளான வனிதா அபகரிக்க முயல்வதாக விஜயகுமார் பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் வனிதாவை அங்கியிருந்து வெளியேற்றினார்கள்.

தனது தாய் மஞ்சுளாவின் பெயரில் உள்ள அந்த வீட்டை மாற்றாந்தாய் மகன் அருண் விஜய்க்கு எழுதிவைத்து விட்டதாக வனிதா குற்றச்சாட்டுகளையும் கூறினார். இந்நிலையில் வனிதா குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதியின் மூத்தமகள் வனிதா. இவர் முதலாவதாக டிவி நடிகர் ஆகாஷ், 2 வதாக தொழில் அதிபர் ஆனந்தராஜ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு, மகனை யார் வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வனிதா 3-வதாக நடன இயக்குனர் ராபர்ட் என்பவரை மணந்தார்.

இதையடுத்து 2010-ல் இந்த வீடு ஒரு பாவப்பட்ட வீடு, அது தனக்கு தேவையில்லை என்று கூறி இருந்த வனிதா, தனக்கும் விஜயகுமார் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில் தான் அந்த வீட்டை அவர் மீண்டும் சொந்தம் கொண்டாட முயல்வதாக புகார் எழுந்துள்ளது.

மனைவி, குழந்தைகளை உயிரோடு கொளுத்தி விட்டு நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி தெரியுமா?

தமிழ்நாட்டின் சேலத்தில் மதுபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கார்த்திக் என்பவருக்கும், பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா மற்றும் பூவரசன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

குடிக்கு அடிமையான கார்த்திக் கடந்த 19-ஆம் திகதி பூமதி குழந்தைகளுடன் தீவைத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர்களை காப்பாற்றச் சென்ற தனக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இதை தற்கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று காலை பூமதி மற்றும் அவர் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூமதி, தன்னையும் குழந்தைகளையும் கணவர் கார்த்திக் தான் மதுபோதையில் தீவைத்து எரித்ததாக அவரது சகோதரரிடம் கூறியுள்ளார். இதை மரணவாக்குமூலமாக பதிவு செய்த பொலிசார் கார்த்திக்கை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், சம்பவதன்று போதையில் வந்த கார்த்திக் பூமதியை தனிமையில் அழைத்த நிலையில் குழந்தைகள் இருப்பதால் அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து மூவரும் தூங்கிய பிறகு மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரியவந்துள்ளது.

தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்த சாமியார் : அதிர்ச்சி சம்பவம்!!

புதுச்சேரியில் தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அசோக் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி (27). இந்த தம்பதியினருக்கு ஜெயஸ்ரீ (3) என்ற பெண் குழந்தையும், ஜெயகணேஷ் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 19-ம் திகதியன்று கோவிலுக்கு செல்வதாக கூறிய கிருஷ்ணவேணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அசோக், உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை தேடியுள்ளார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிருஷ்ணவேணி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கோவிந்தராஜ் என்ற போலி சாமியாரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்துவந்த கிருஷ்ணவேணியின் தங்கைக்கு தோஷம் இருப்பதாக கூறி பூஜை ஒன்றினை கோவிந்தராஜ் நடத்தியுள்ளார். அதிஷ்டவசமாக அந்த பெண்ணிற்கும் உடனே திருமணம் நடைபெற்றுள்ளது.

பின்னர் அசோக் வீட்டில் பில்லி, சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, கோவிந்தராஜ் புதைத்துப் பின் எடுத்தும் இருக்கிறார். இத்தகைய சம்பவங்களால் அசோக் குடும்பத்தினர் கண்மூடித்தனமாக கோவிந்தராஜை நம்ப ஆரம்பித்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கோவிந்தராஜ், உனக்கு தோஷம் கழிக்க வேண்டும். இல்லை என்றால் உன்னுடைய கணவர் உன்னை விட்டு ஓடிவிடுவார் என கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அவர், கோவிந்தராஜ் பேச்சை கேட்டு வீட்டில் பொய் சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத காளி கோவிலுக்கு அழைத்து சென்ற கோவிந்தராஜ், கிருஷ்ணவேணியின் கண்களை மூட சொல்லி கைகளை கட்டியுள்ளார்.

பின்னர் கடவுளை மனதில் நினைக்குமாறு கூறிக்கொண்டே கழுத்தை அறுத்துள்ளார். ரத்தம் பீறிட்டு வெளியேற சம்பவ இடத்திலேயே கிருஷ்ணவேணி துடிதுடித்து இறந்துள்ளார். இதனையடுத்து அவருடைய நகைகளை எல்லாம் சுருட்டி கொண்டு ஒன்றுமே தெரியாதவரை போல வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அங்கு அசோக்குடன் சேர்ந்து கொலை செய்த கிருஷ்ணவேணியை தேடுவதை போல நடித்துள்ளார்.

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த தாய்-மகள் : வேலைக்கார பெண் அதிர்ச்சி!!

இந்தியாவில் தாய் மற்றும் மாற்றுத்திறனாளி மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மியான்வாளி பகுதியைச் சேர்ந்தவர் ஷசி தல்வார் (60). இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இரண்டு மகன்களில் மூத்த மகன் விஷால் தன் குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் கனடாவில் உள்ளார்.

ஷசி தல்வார் தன்னுடைய மாற்றுத் திறனாளி மகளுடன் வசித்து வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஷரி தல்வாரின் கணவர் இறந்துவிட்டதால், இருவரும் தனியாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அவர்களின் வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண், அவர்கள் வீட்டின் காலிங் பெல்லை தட்டியுள்ளார்.

ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், பின் பக்க கதவு வழியாக வீட்டின் உள்ளே சென்ற போது இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இருவரும் கொலை செய்யப்பட்டு கிடப்பது பற்றி அந்த வீட்டில் வேலை பார்க்கும் பெண் தான் தங்களுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து இங்கு வந்து ஆய்வு செய்ததில் வெளி ஆட்கள் யாரும் வந்து கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மூதாட்டி சமையலறையில் சடலமாகவும், அவரது மாற்றுத்திறனாளி பெண் படுக்கை அறையில் உயிரிழந்தும் கிடந்தார்.

ஒரு அறையில் இரண்டு டீ-கப்புகள் மற்றும் சில தின்பண்டங்கள் இருந்தது. இதனால் அவர்களது தெரிந்த நபர் யாராவது வந்து சென்றிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமெராவை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும் வீட்டில் வேலைக்கு சேர்ந்த பெண் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரின் பின்புலம் குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பை மற்றும் கனடாவில் இருக்கும் மகன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனக்கும், விஜயகுமாரின் மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை : நடன இயக்குநர் ராபர்ட் பதில்!!

நடிகர் விஜயகுமாரின் மகளுக்கு, எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடன இயக்குநர் ராபர்ட் தெரிவித்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா தொடர்பாக அவருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வனிதா தற்போது நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானதால், மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக, ராபர்ட் தெரிவித்துள்ளார்.

நானும் நடிகை வனிதாவும் இணைந்து ஒரு படத்தை தயாரித்ததாகவும், இதுதவிர வேறு எந்த தொடர்பும் எங்கள் இருவருக்கும் இல்லை என கூறியுள்ளார்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

பெற்ற குழந்தையை கொலை செய்த தாய் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்… வெளியான பின்னணி!!

இந்தியாவின் தெலுங்கானாவில் பெற்ற குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரீம்நகரை சேர்ந்தவர் புர்லா கணேஷ். இவர் மனைவி ரம்யா. தம்பதிக்கு மனுஸ்ரீ (4) என்ற மகள் உள்ளார். திருமணத்தின் போது கணேஷுக்கு ரம்யா பெற்றோர் மூன்றரை லட்சம் வரதட்சணை கொடுத்தனர்.

அப்போது நல்ல வேலையில் இருந்த கணேஷ் மனுஸ்ரீ பிறந்தவுடன் வேலையை விட்டு வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து தனக்கு மேலும் வரதட்சணை வேண்டும் என தனது பெற்றோருடன் சேர்ந்து ரம்யாவை கணேஷ் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ரம்யா தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் ஒரு லட்ச ரூபாய் கொடுத்ததோடு சூப்பர் மார்க்கெட் வைத்து கொள்ள ஐடியாவும் கொடுத்து அதற்கான பொருட்களையும் கணேஷுக்கு வாங்கி கொடுத்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு கணேஷுக்கும், ரம்யாவுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து மனமுடைந்த ரம்யா தனது குழந்தை மனுஸ்ரீயை கிணற்றில் தூக்கிவீசி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகர் கருணாஸிடம் 3 மணிநேரம் விசாரணை : 5 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல்!!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்க்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், பொலிசாரை மிரட்டும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது, என் ஜாதிக்காரன் மேல் கைவைதால் அவ்வளவுதான். நீங்க எல்லாம் போதை ஏற்றிக்கொண்டுதான் செய்வீங்க. நாங்க தூங்க எழுந்திருச்சதுமே செஞ்சிடுவோம். சட்டைதானே உங்களுக்கு அதிகாரம்.

அந்த சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோத தயாரா என காவல்துறை துணை ஆணையர் அரவிந்தனுக்கு சவால் விடுத்திருந்தார். மேலும், முதல்வரே நான் அடிப்பேன்னு பயப்படுகிறார். வேண்டுமென்றால் அவரிடமே கேட்டு பாருங்கள் என்று பேசினார்.

கருணாஸின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எங்கள் மீது தேவையற்ற வழக்குகள் பதிந்ததால் ஆவேசத்தில் அப்படி பேசிவிட்டேன். நான் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கிலும் காயப்படுத்தும் வகையிலும் பேசியிருந்தால் வருந்துகிறேன். நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் அல்ல என்று கருணாஸ் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல், அரசு அதிகாரியை மிரட்டுவது, கொலை மிரட்டல் உள்ளிட 6 பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டிற்கே சென்று கருணாஸை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? என்னை கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றார்களா என தெரியவில்லை எனக் கூறினார்.

கைது செய்யப்பட்ட கருணாஸை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவல்துறையினர் சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் விசாரித்தனர். இதையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

பின்னர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து கருணாஸை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் கருணாஸ் மீதான வழக்கில் கொலை முயற்சி பிரிவை ரத்து செய்தும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.