ஜாதகத்தில் மொத்தம் நான்கே வகைதானாம் : இதில் நீங்கள் எந்த வகை என்று தெரிய வேண்டுமா?

ஜாதகம் என்பது இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேறு வுறு தான் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஜாதகங்களும் மொத்தமே நான்கு வகைகள் தான். அந்த நான்கு வகைகளில் ஏதாவது ஒன்றாகத் தான் நம் ஒவ்வொருவருடைய ஜாதகமும் இருக்கும். அதைப்பற்றி இங்கே பார்ப்போம்

தர்ம ஜாதகம்
ஒருவருடைய பிறப்பு வரைபடக் கட்டத்தில் 1 ஆம் எண் வீடு, 5 ஆம் எண் வீடு, 9 ஆம் எண் வீடு ஆகியவற்றை மிகச் சிறப்பாகக் கொண்ட ஜாதகமாக இருக்கும். இந்த ஜாதக அமைப்பில் பிறந்தவர்கள் தான் உலகில் மிகவும் பேரும் புகழும் கிடைக்கப் பெறுவார்கள். நிறைய தர்ம காரியங்கள் செய்வார்கள். கோவில் திருப்பணிகள் போன்றவற்றை மிக அதிகமாக செய்ய முயற்சி செய்வார்கள்.

பள்ளிக்கூடங்க்ள கட்டுதல் போன்ற பொது தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகமாக இருப்பார்கள். எப்போதும் சமூகம் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கியிருப்பார்கள். இந்த உலகை விட்டு பிரிந்த பின்பும், அவர்களுடைய புகழ் இந்த உலகில் இருக்கும். தர்ம ஜாதகத்தில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

தன ஜாதகம்
இரண்டாவது வகையான தன ஜாதகத்தில் பிறந்தவர்களுடைய பிறப்பு வரைபடக் கூட்டத்தில், இரண்டாம் வீடு, ஆறாம் வீடும், பத்தாம் வீடும் மிகச் சிறப்பாக கொண்ட ஜாதகம் தான் தன ஜாதகம் உடையவர்கள். இந்த ஜாதக அமைப்பில் பிறந்தவர்கள் தான் வாழ்நாளில் மிக அதிகமாக பணம் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்.

பணம் சேர்கின்ற ஆற்றல் இவர்களுக்கு நிகராக வேறு யாராலும் பணம் பற்றி புரிதல் உடையவராக இருக்காது. ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை தான் அனுபவிக்கவோ முடியாது. அல்லது அதற்கான எண்ணமும் அவர்களுக்குத் தோன்றாது.

காம ஜாதகம்
ஜாதகத்தில் மூன்றாவது வகையான ஜாதகக் கட்டத்தில் பிறந்தவர்கள், தங்களுடைய பிறப்பு வரைபட ஜாதக்க கட்டங்கள் மூன்றாம் எண் வீட்டிலும், ஏழாத் எண் வீட்டிலும் பதினோறாம் வீட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கும். இத்தகைய அமைப்பு ஜாதகம் இருப்பவர்களைத் தான் காம ஜாதகம் என்று அழைப்பார்கள். இந்த ஜாதகத்தில் பிறந்தவன் தான் பணம் இருக்கிறதோ இல்லையோ என எதைப்பற்றியும் கவலைப்படாத, உலகத்தில் அனுபவிப்பதற்காகவே பிறந்தவராக இருப்பார்கள்.

இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள், தான் சம்பாதித்த பணமோ, தந்தையின் சொத்தோ, மனைவியின் வழியில் வந்த பணமோ, நண்பர்களுடைய பணமோ என எதையும் பார்க்காமல், தனக்கு என்ன தோன்றுகிறதோ அந்த மாதிரி மிக அலட்சியமாக செலவு செய்து முடிப்பவராக இருப்பார்கள். தங்களுடைய வாழ்க்கையில், சிற்றின்பங்கள், பேரின்பங்கள் என எல்லாவற்றையும் அனுபவித்துச் செல்லக்கூடியவராக இருப்பவர்கள் இந்த காம ஜாதகக்காரர்களாக இருப்பார்கள்.

ஞான ஜாதகம்
ஜாதகத்தில் கடைசியும் நான்காவதுமான வகைதான் இது. இந்த வகையான ஜாதகக் கட்டத்தில் பிறந்தவர்கள், தங்களுடைய பிறப்பு வரைபட ஜாதக்க கட்டத்தில், நான்காம் எண் வீட்டிலும், எட்டாம் எண் வீட்டிலும் பனிரெண்டாம் வீட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கும். இத்தகைய அமைப்பு ஜாதகம் இருப்பவர்களைத் தான் ஞான ஜாதகம் என்று அழைப்பார்கள்.

இந்த ஜாதகக் கட்டத்தில் மிகப் பிறந்தவர்கள் மிகவும் பாடாய் பட்டுவிடுவார்கள். அதாவது இந்த ஜாதகத்தில் விரய ஸ்தானம் மிகுதி. வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் இழந்து விட்டு, எல்லாவிதமான கஷ்டங்களையும் அனுபவிக்கச் செய்வார்கள். தன்னுடைய சொத்து மற்றும் பணத்தையல்லாம் பறிகொடுத்து விடுவார்கள் அல்லது யாரிடமாவது ஏமாந்து போய்விடுவார்கள்.

வாழ்க்கையில் எல்லா அடிகளும் பட்டு, வாழ்க்கையின் நடுப்பகுதியிலோ அல்லது வாழ்வின் இறுதியிலோ ஞானியாகி மாறி, இந்த உலகமே மாயம் என்று தத்துவங்கள் சொல்லும் அளவுக்கு ஆகிவிடுவார்கள். இப்படி ஏதாவது ஒரு அமைப்புக்குள் தான் நாம் எல்லோருமே பிறந்திருப்போம்.

உயிர் நண்பனை எரித்துக் கொன்ற இளைஞர்… உதவிய காதலி : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் இளைஞரை எரித்துக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் திகதி மொத்தமாக எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

சடலத்தின் ஒரு கையில் ஆரியா என பச்சைகுத்தப்பட்டிருந்ததை அடுத்து கொல்லப்பட்ட நபர் கேரள மாநிலத்தவராக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த பொலிசார், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கொல்லப்பட்ட இளைஞர் கேரள மாநிலம் வலியதுறை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என தெரியவந்தது.

கொல்லப்பட்ட இளைஞர் பல்வேறு வாகன கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர் என விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையிட்ட பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆகாஷை அவரது நண்பர்கள் அனு மற்றும் ஜித்து என்பவர்களே கொலை செய்துள்ளனர்.

மார்ச் மாதம் 30 ஆம் திகதி அனுவின் காதலி ரேஷ்மா தமது குடியிருப்புக்கு விருந்துக்கு வரும்படி அனுவை அழைத்துள்ளார்.

இந்த நிலையில் விருந்துக்கு சென்ற அனுவுக்கு மதுவில் தூக்க மருந்து கலந்து அளித்துள்ளனர். பின்னர் அனுவும் ஜித்துவும் சேர்ந்து ஆகாஷை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது முக்கிய குற்றவாளியான அனுவும், அவரது காதலி ரேஷ்மாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழகிய பெண் போல வேடமிட்டு 150 ஆண்களை வீழ்த்தி வீடியோ எடுத்து ஆபாச தளத்தில் பதிவிட்ட நபர் : 10 ஆண்டுகள் சிறை!!

அமெரிக்காவில் 32 வயது நபர் ஒருவர் அழகிய பெண் போல வேடமிட்டு 150 ஆண்களுடன் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோ எடுத்து ஆபாசதளத்தில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிகப்பட்டுள்ளது.

Bryan Deneumostier என்ற நபர் அழகிய பெண் போல அலங்கார ஒப்பனைகள் செய்துகொண்டார். இவரை பார்ப்பவர்ளுக்கு இவர் ஆண்தானா என்ற சந்தேகம் சிறிதும் வராது அந்த அளவுக்கு கச்சிமாக இவரது ஒப்பனைகள் இருந்துள்ளன.

இதன் மூலம் சுமார் 150 ஆண்களை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுடன் பாலியல் ரீதியான தொடர்பு கொண்டு அதனை வீடியோ எடுத்துள்ளார். தனது படுக்கையறையில் இவர் பொருத்தியிருந்த கமெரா குறித்து இவரது வீட்டுக்கு வந்த ஆண்களுக்கு தெரியாமல் விழிப்புணர்வு இன்றி இருந்துள்ளார்கள்.

அனைவரையும் வீடியோ எடுத்த இவர் சுமார் 80 ஆண்களின் வீடியோவை ஆபாசதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், StraightBoyz.net என்ற தளத்தை இவர் உருவாக்கி அதனை ஓரினச்சேர்க்கை தளம் என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இதில் பாதிக்கப்பட்ட 3 பேர் இவர் மீது பொலிசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக கடந்த யூலை மாதம் இவர் கைது செய்யப்பட்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இவர் மீதான குற்றம் நிரூபணமானதையடுத்து இவருக்கு 10 ஆண்டுகுள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணமான நபரை மணந்த கல்லூரி மாணவி : நேர்ந்த விபரீத சம்பவம்!!

இந்தியாவின் தெலுங்கானாவில் ஏற்கனவே திருமணமான நபரை மாணவி மணந்த நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி. கல்லூரி மாணவியான இவர் தினமும் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் திருமால் ராவுடன் ஸ்ரீலட்சுமிக்கு நட்பு ஏற்பட்ட நிலையில் காதலாக மாறியுள்ளது.

திருமாலுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்தும் ஸ்ரீலட்சுமி அவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து தங்கள் குடும்பத்தாரிடம் இது குறித்து கூற அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஸ்ரீலட்சுமியும், திருமாலும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டனர். ஆனாலும் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்ததால் இரு குடும்பத்தாரும் அவர்களை வீட்டை விட்டு துரத்தினார்கள்.

பின்னர் ஸ்ரீலட்சுமியும், திருமாலும் கோவிலில் திருமணம் செய்த நிலையில் தங்களின் உறவினர்களை அங்கு அழைத்தனர். ஆனால் உறவினர்கள் திருமணத்தை எதிர்த்ததால் அங்கு வரவில்லை. இதனால் மனமுடைந்த ஸ்ரீலட்சுமியும், திருமாலும் விஷம் குடித்தனர்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அப்பா எப்போது வருவார் : வெளிநாட்டில் தந்தை இறந்தது தெரியாமல் எதிர்பார்ப்பில் மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

அப்பா எப்பம்மா வருவாரு? வெளிநாட்டில் தந்தை இறந்தது தெரியாமல் எதிர்பார்ப்பில் மகன் : மனம் உருகும் பின்னணி!!

சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் சடலத்தை பெறமுடியாமல் இந்தியாவில் உள்ள குடும்பத்தார் தவித்து வருகிறார்கள்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் இர்பான் (27). இவருக்கு நர்கீஸ் (25) என்ற மனைவியும் சோகில் (5) என்ற மகனும் உள்ளான்.

குடும்ப வறுமை காரணமாக இர்பான் இரு மாதங்களுக்கு முன்னால் சவுதியின் Dammam நகரில் கார் ஓட்டுனர் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11-ஆம் திகதி மின்சாரம் தாக்கி இர்பான் உயிரிழந்துள்ளார். அவர் இறந்து பத்து நாட்கள் ஆகியும் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியாமல் குடும்பத்தார் தவித்து வருகிறார்கள்.

இது குறித்து நர்கீஸ் கூறுகையில், தன்னுடைய அப்பா இறந்துவிட்டதை சோகிலால் உணரமுடியவில்லை. அவர் எப்போது வருவார் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறான்.

இர்பான் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர ஒன்றரை லட்சம் பணம் கேட்கிறார்கள், ஆனால் எங்களிடம் பணம் இல்லை.
எங்கள் எம்.எல்.ஏ, சவுதியில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் உதவியை நாடியும் எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து எம்.எல்.ஏ தாகூர் திரேந்திரா கூறுகையில், சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் இது குறித்து பேசி வருகிறேன்.
இது இயற்கைக்கு மாறான மரணம் என்பதால் பொலிசார் விசாரணை நடக்கிறது.

வெளிநாட்டு வழிமுறைகள் காரணமாக இர்பான் சடலத்தை கொண்டுவருவதில் சிக்கல் உள்ளது என கூறியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த காதலனை காப்பாற்றாமல் வீடியோ எடுத்து வெளியிட்ட காதலி!!

லண்டனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த காதலனை காப்பாற்றாமல் காதலி வீடியோ எடுத்து ஸ்நாப் சாட் ஆப்பில் பதிவேற்றம் செய்ததிற்காக அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் Khalid Safi. 18 வயதான இவர் பிரித்தானியாவிற்கு அகதியாக வந்து குடியேறியுள்ளார். இவரும் Fatima Khan(21) என்ற பெண்ணும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் லண்டனின் North Acton பகுதியில் இருக்கும் காபி செண்டருக்கு அருகே Khalid Safi-ஐ Raza Khan என்ற நபர் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.

சம்பத்தின் போது அவரின் காதலியான Fatima Khan இரத்த வெள்ளத்தில் கிடந்த Khalid Safi-ஐ காப்பாற்றாமல், ஆம்புலன்சிற்கு போன் செய்யாமல் அதை வீடியோ எடுத்து ஸ்நாப் சாட் என்ற ஆப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோவிற்கு கீழ் தெளிவாக குறிப்பிடாமல் இது தான் கதி என்று மட்டும் பதிவேற்றம் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த வேளையில் அவருக்கு 14-ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கொலை செய்த Raza Khan தற்போது வரை தலைமறைவாகவாக இருப்பதாகவும், வீடியோ எடுத்த Fatima Khan-மீது ஏற்கனவே பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு உள்ளதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி கொலை செய்த Raza Khan-ம் Khalid Safi-கும் ஏற்கனவே இந்த பெண்ணிற்காக சண்டை போட்டவர்கள் எனவும், கொலை செய்வதற்கு சில தினங்களுக்கு முன் தொடர்ந்து Fatima Khan போனில் Raza Khan-யிடம் பேசியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீக்குளித்து தற்கொலை செய்த இளைஞர் வெளியிட்ட வீடியோ : மனைவி குடும்பத்தாரே காரணம் என கண்ணீர்!!

இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த நபர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மனைவி மாமனார், மாமியார் தான் அதற்கு காரணம் என வீடியோவில் கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்த் (25) என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது வீட்டிலிருந்து வெளியில் வந்த ஸ்ரீகாந்த் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னர் 37 நிமிட வீடியோவை அவர் பதிவு செய்திருந்தார்.

அதில், நானும் என் மனைவி ஸ்ரீஹர்ஷாவும் கலப்பு திருமணம் செய்த நிலையில் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. ஸ்ரீஹர்ஷாவும் அவரது பெற்றோரும் என்னை துன்புறுத்தினார்கள், என் தற்கொலைக்கு அவர்களே காரணம்.

என் மனைவியை வேண்டுமென்றே என்னிடம் இருந்து பிரித்த அவர் குடுமபத்தார், கருக்கலைப்பு செய்யவும் வற்புறுத்தினார்கள் என கூறியுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், ஸ்ரீகாந்தை ஸ்ரீஹர்ஷா பிரிந்தபின்னர் பொலிசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதாவது தனது அந்தரங்க புகைப்படத்தை ஸ்ரீகாந்த் இணையத்தில் வெளியிட்டதாக புகார் அளித்தார்.

இது மற்றும் ஆறு வழக்குகள் ஸ்ரீகாந்த் மீது நிலுவையில் இருந்தன, சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பூக்கன்றுகளுடன் வந்த மூவருக்கு நேர்ந்த கதி!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக ஒரு தொகைப் பூக்கன்றுகளைக் கொண்டுவந்த மூன்று நபர்கள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் அடங்குவதாக சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் ஜா-எல, களனி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார்.

தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட அந்தூரியன், ஓர்க்கிட் உட்பட பல பூக்கன்றுகளை அவர்கள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் பெறுமதி சுமார் 5 லட்சம் ருபாய் என சுங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பூக்கன்றுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

தந்தையும் மகளும் பரிதாபமாக பலி!!

மின்னேரியா, கிரித்தலே வாவியில் குளிக்கச் சென்ற தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொட பிரதேசத்தில் இருந்து மின்னேரியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற குழுவொன்று கிரித்தலே வாவியில் நீராடிக் கொண்டிருந்த போது குறித்த இருவரும் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய தந்தையும் 14 வயதுடைய மகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானைகுட்டியின் சடலம் மீட்பு!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் உள்ள மறாவிலுப்பைகுளத்தில் நேற்று காலை யானைகுட்டி ஒன்று குளத்தில் மூழ்கி கிடந்துள்ளதை ஊர்வாசிகள் அவதானித்துள்ளனர். பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டதுடன் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சட்டவைத்திய அறிக்கையின் படி வெங்காய வெடி என்று அழைக்கபடும் வெடிபொருளை உண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்ததாக சட்டவைத்திய பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

நான் விரும்பியது காதலை.. அவளது உடலை அல்ல : மனதை உருக்கும் உண்மையான காதல் கதை!!

கேரள மாநிலத்தில் சச்சின் – பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்திலும் இப்படி ஒரு காவியக்காதலா? என மெய்சிலிக்க வைத்துள்ளது இந்த ஜோடி. சச்சினும் பவ்யாவும் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர்.

ஐந்து மாதங்கள் வரை மிக அழகாக சென்றுகொண்டிருந்த இவர்களின் நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களின் காதலை வழக்கம் போல் பவ்யாவின் வீட்டில் எதிர்த்திருக்கிறார்கள். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சச்சின் கடந்த மார்ச் மாதம் முறைப்படி பவ்யாவை திருமணம் செய்து கொண்டார்.

நண்பர்களாக இருந்த நாங்கள் சரியாக இரண்டு மாதத்திற்கு பிறகு ஒருவருக்கொருவர் காதலில் விழுந்ததை உணர்ந்திருந்தோம். பவ்யா நான் படித்த இன்ஸ்டிடியூட்டிலேயே வேலை செய்ய தொடங்கி இருந்தார்.

அவருக்கு அப்போது முதுகில் வலி இருந்து கொண்டே இருந்துள்ளது. ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கல்யாணம் ஆன அதே மார்ச் மாதத்தில்தான் கண்டுபிடித்தோம். அவருக்கு முதுகுதண்டில் புற்றுநோய் இருக்கிறது என்று தெரியவந்தது.

ஆசையாக காதலித்த காதல் மனைவிக்கு இப்படி ஆகிவிட்டதே என உடைந்துபோனார் சச்சின். புற்றுநோயால் பவ்யானின் முடி உதிர்ந்து, உடல் எடை குறைந்து தோற்றம் மாறியது.

ஆனால் நான் இந்த மாற்றங்களை பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில் நான் விரும்பியது அவளது காதலை. உடம்பை அல்ல என்கிறார் சச்சின்.

இப்போது பவ்யாவை அழைத்து கொண்டு ஹீமோதெரஃபி சிகிச்சைக்கு அல்லாடிக் கொண்டிக்கிறார் சச்சின்.

23 வயதான சச்சின் திருமணத்திற்கு பின்னரும் தனது உயர்படிப்பை தொடர்ந்துள்ளார். ஆனால் மனைவியின் சிகிச்சைக்கு பணம் தேவை மற்றும் அவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதனை தியாகம் செய்துள்ளார்.

இனி என்ன நடந்தாலும் இந்த ஜென்மத்தில் பவ்யான தான் எனது மனைவி என்கிறார் சச்சின். இவர்களின் காதல் கதை அனைத்து ஊடகங்களிம் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்துள்ளது.

ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் இளைஞன்!!

வங்கதேசத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கையின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்த மதுசன், உடற்தகுதிச் சோதனையில் தோல்வியடைந்தமை காரணமாகவே அப்போது குழாமில் சேர்க்கப்படவில்லை என்றும் பின்னர் உடற்றகுதிச் சோதனையில் வெற்றி கண்டார் என்றும் கூறப்பட்ட நிலையிலேயே தற்போது குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், ஆசியக் கிண்ணத் தொடருக்கான தயார் நிலை வீரர்களில் காணப்படுகின்றார்.

வீரர்கள் குழாம்:

நிபுன் தனஞ்சய (அணித்தலைவர்)
செல்வராசா மதுசன்
பசிந்து சூரியபண்டார
நவோத் பரணவிதான
கமில் மிஷர
நிஷான் மதுஷ்க
டுனித் வெல்லலகே
சசிக டுல்ஷான்
கல்ஹர சேனாரத்ன
றொஷான் சஞ்சய
சதுன் மென்டிஸ்
கலன பெரேரா
நிபுன் மலிங்க
நவீன் பெர்ணான்டோ
தயார் நிலை வீரர்கள்:

விஜயகாந்த் வியாஸ்காந்த்
லக்ஷித மடரசிங்கே
முடித லக்‌ஷன்
சிலான் கலிந்து
சாமிக குணசேகர

கடனை அடைக்க சிறுமிகளை விற்கும் கொடுமை : வெளிச்சத்திற்கு வந்த கொடூர வழக்கம்!!

நைஜீரியாவில் பெசவோ இன மக்கள் தங்கள் கடனை அடைக்க சிறுமிகளை திருமணத்திற்காக விற்பனை செய்து வருவது மீண்டும் விவாதமாகியுள்ளது.

பெசவோ இன மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை காலா காலமாக சந்தித்து வருகின்றனர். கடன் வாங்குவதும் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத மக்கள் தங்கள் பிள்ளைகளை திருமணத்திற்காக விற்கும் அவலம் அங்கு நடந்தேறி வருகிறது. இந்த வழக்கத்தில் சிக்கிய சிறுமி ஒருவர் மீட்கப்பட்டு, தமது கண்ணீர் கதையை சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதில், தம்முடன் உறவு கொள்ள வேண்டும் என்பதற்காகவே முதியவர் ஒருவர் தம்மை விலை தந்து வாங்கியதாகவும், ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் வலுக்கட்டாயமாக தன்னை பிடித்திருக்க, அந்த முதியவர் உறவு வைத்துக் கொண்டார் எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

டோரொத்தி என்ற அந்த சிறுமி தமக்கு தாத்தா வயதுடைய நபருடன் நிர்பத்தப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
கடன் சுமை அதிகரித்ததால் வேறு வழியின்றி தாயார் மற்றும் உறவினர்களால் டோரொத்தி விற்பனை செய்யப்பட்டார்.
டோரொத்தி முதன் முறையாக கருவுறும்போது அவருக்கு 12 வயது கூட நிரம்பவில்லை.

பெசவோ இன மக்களால் விற்கப்படும் சிறுமிகள் வாங்கும் ஆண்களின் உரிமைச் சொத்து. சில சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக மாறுகின்றனர், எஞ்சியவர்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆனால் கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்தே இந்த வழக்கத்தை அரசு தடை செய்துள்ளதாகவும், இதுபோன்ற வழக்கம் தற்போது நடைபெறுவதில்லை எனவும் அரசு சார்பில் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் மீட்க்கப்பட்ட சிறுமி ஒருவர் தம்மை வாங்கிய அந்த நபர் கொடூரமாக துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் எனவும், கொன்றால் கூட எவரும் கேட்க மாட்டார்கள் என அடிக்கடி கூறி வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.

கொடூரத்தின் உச்சமாக, முதியவர் ஒருவருக்கு விற்கப்பட்ட 7 வயதே நிரம்பிய சிறுமி ஒருவரை அதிகாரிகள் சமீபத்தில் மீட்டுள்ளனர்.

உலகில் உள்ள எஞ்சிய குழந்தைகளை போலவே உரிமை கொண்ட இந்த சிறுமிகளின் எதிர்காலம் கேள்விக்குறியே என சமூக ஆர்வலர்கள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

என் கணவரை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கௌசல்யாவிடம் கூறிய அம்ருதா!!

தெலுங்கானா மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணத்தால் கணவரை இழந்த அம்ருதாவை, சாதிய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கௌசல்யா சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பிரணய் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரணயை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி அம்ருதாவின் தந்தை, சித்தப்பா மற்றும் சிலரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அம்ருதா தற்போது தனது மாமியார் வீட்டில் இருக்கிறார்.

இந்நிலையில், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சாதி மறுப்பு திருமணத்தால் தனது கணவரை இழந்தவருமான கௌசல்யா தெலுங்கானாவிற்கு சென்று அம்ருதாவை தனது வழக்கறிஞருடன் சந்தித்துள்ளார்.

அம்ருதாவிடம் பேசிய கௌசல்யா தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆறுதல் கூறினார். மேலும், தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை அம்ருதாவிடம் காட்டினார்.

பின்னர் கௌசல்யாவிடம், ‘எத்தனை பேரை தான் தண்டிப்பது. உங்கள் கணவர் கொலை செய்யப்பட்டதற்கு சாதி தான் காரணமா?’ என அம்ருதா கேட்டார். அதற்கு ’சாதி மட்டும் தான் காரணம்’ என கௌசல்யா பதிலளித்தார்.

மேலும் பேசிய அம்ருதா, ‘பிரணய் கொலைக்கு காரணமான 7 பேரையும் தூக்கில் போட வேண்டும். எனது சித்தப்பா வெளியே வந்தால் எனக்கும், எனது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்’ என கூறியுள்ளார்.

அதைக் கேட்ட கௌசல்யா, ‘நீங்கள் நடந்ததை எல்லாம் நீதிமன்றத்தில் கூறுங்கள், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்’ என தெரிவித்தார். தனது பெற்றோரின் ஜாமீன் மனுவை கௌசல்யா 58 முறை எதிர்த்ததாக அவரது வழக்கறிஞர் அம்ருதாவிடம் கூறினார்.

அம்மாவுடன் இருப்பதுபோல உணர்வதால் தான் வீட்டில் தங்கினேன் : நடிகர் விஜயகுமார் மகள் கண்ணீர்!!

சென்னை காவல் ஆணையரிடம் தனது தந்தையான நடிகர் விஜயகுமார் தம்மை அச்சுறுத்துவதாக அவர் மகள் வனிதா புகாரளித்துள்ளார்.

மதுரவாயிலில் அமைந்துள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் தங்கியிருந்த வனிதா அங்கிருந்து வெளியேற மறுப்பதாக விஜயகுமார் பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கிருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

தற்போது சென்னை காவல் ஆணையரிடம் விஜயகுமார் குறித்து புகார் அளித்த வனிதா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், அம்மாவுடன் இருப்பதுபோல் உணர்வதால் வீட்டில் தங்கியிருந்தேன்.

வீட்டில் இருந்து தந்தை விஜயகுமார் விரட்டுகிறார். வேறு ஒருவருக்கு வீட்டை வாடகை விடுவதற்காக என்னை வெளியே அனுப்ப முயற்சிக்கிறார். வீட்டுக்கான வாடகை கொடுக்கிறேன் என்று சொல்லியும் எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோது பொலிஸ் வழக்கு பதிவு செய்தது தவறு. நான் தயாரிக்கும் “டாடி” என்ற படத்திற்கு எனது தந்தை விஜயகுமார் இடையூறு செய்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து வைப்பு!!

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் குவைத் நாட்டைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டு வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் பங்குபற்றுதலுடன் இன்று திறந்து வைக்கப்பட்டது.

குவைத் நாட்டின் காலித் கமட் அல்காலித் ரகமத்துல்லா நினைவாக தந்தையார் ஹமட் காலித் அவர்களின் நிதி உதவியில் குறித்த மஸ்ஜிதுல் அக்சா ஜீம்ஆப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக இடம்பெயர்ந்து தற்போது வவுனியா, புதிய சாளம்பைக்குளம் பகுதியில் குடியேறி வசிக்கும் மக்களினுடைய வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக குறித்த பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், அப் பள்ளிவாசலுக்கான வீதியும் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குவைத் நாட்டைச் சேர்ந்த ஹமட் காலித், குவைத்தூதரக அதிகாரி, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், பிரதேச செயலாளர் கா.உதயராசா, பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.