அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும் : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்தல்!!

அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யபடல் வேண்டும் என்றும் அடிப்படையில் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் முன்னெடுக்கும் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியாவில் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு பேரணிக்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தன்னுடைய முழு ஆதரவினை தெரிவிப்பதோடு அவ் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என அமைப்பின் வன்னி மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

மேலும் தேசிய இனப்பிரச்சினை மூலம் உருவான அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது தொடர்ச்சியாக நீண்டு கொண்டிருக்கின்றது. இன்றைய நிலையில் இப்பிரச்சினையானது சட்டப் பிரச்சினையாக கருதாமல் அரசியல் பிரச்சினையாக கருதி தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் இப்பிரச்சினையை உடனடியாக தீர்த்துவைக்கக் கூடிய வழிகளை கண்டறிந்து அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் உதவ வேண்டுமென எமது அமைப்பு கோரிக்கை விடுவதோடு இம்மாதம் 22ம் திகதி சனிக்கிழமை 10 மணிக்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் சார்பில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியிலும் கவனயீர்ப்பிலும் இக்கோரிக்கைக்கு ஆதரவான அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள் உழைக்கும் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு எமது அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

தொடர்புகளுக்கு : 077 3755626
தோழமையுடன்
என்.பிரதீபன்

வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி திருப்பி அனுப்பப்பட்டார்!!

திருகோணமலை – கிண்ணியா பகுதியிலிருந்து மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற 18 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுமி அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த 18 வயதுக்கும் குறைவான வயதுடைய யுவதி மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை அடுத்து அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி வெளிநாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், கடந்த வருடம் சவூதி அரேபியாவில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட றிசான என்ற பெண்ணை, அந்த நாட்டுக்கு அனுப்பி வைத்திருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனமே இந்த யுவதியையும் போலி ஆவணங்களை தயார் செய்து, பணிப் பெண் தொழிலுக்கு அனுப்பி வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

யுவதி கடந்த 2000ஆம் ஆண்டு பிறந்துள்ளார். யுவதியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் உண்மையான வயது 17 முதல் 18 ஆக இருக்கும் என கூறியுள்ளனர்.

வறிய குடும்பத்தை சேர்ந்த இந்த யுவதிக்கு பெற்றோரும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அப்துல் மொஹமட் என்ற போலி பெயரில் சுமார் 10 வருடங்கள் சவூதியிலும் பெயர் அறியாத மத்திய கிழக்கு நாடொன்றிலும் பணிப்பெண்ணாக தொழில் புரிந்துள்ளார்.

இதன் பின்னர் ஓமானில் வீட்டுப் பெண்ணாக தொழில் புரியும் போது ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை அடுத்து அங்குள்ள இலங்கை தூதரகத்தின் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்திருந்த தகவலின் அடிப்படையில், யுவதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கையாக, இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றது.

வவுனியாவைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் திருகோணமலையில் சடலமாக மீட்பு!!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் காணாமல் போயிருந்த நிலையில் அவருடைய சடலம் சங்கமித்த கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா – ஆசிகுளம் இலக்கம் – 108 கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடராசா போதநாயகி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் வசித்து வந்த குறித்த விரிவுரையாளர் விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு முச்சக்கர வண்டியில் சென்றதை பல்கலைக்கழகத்தின் காவலாளிகள் அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் இருந்து குறித்த பெண் விரிவுரையாளருடைய பை மற்றும் செருப்பு போன்ற பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

தற்போது குறித்த விரிவுரையாளரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-தமிழ்வின்-

முதலாவது சர்வதேச போட்டியிலேயே தங்கம் வென்று அசத்திய தமிழன்!!

வியட்நாம் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே. சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதன்படி, இலங்கை சார்பாக தான் பங்குபற்றிய முதல் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று மெய்வல்லுனர் அரங்கில் மிகவும் குறுகிய காலத்தில் அதிசிறந்த பெறுபேறையும் சண்முகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

வியட்நாம் மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் வியட்நாமின் ஹோச்சிமிங் நகரில் நடைபெற்றது.

இதில் இலங்கை சார்பாக 4 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் போட்டிகளின் இரண்டாவது நாள் நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 31 நிமிடங்களும் 01.25 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இது அவரது இவ்வருடத்துக்கான அதிசிறந்த நேரப் பதிவாகும்.

ஹட்டன் – வெலி ஓயாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய கே. சண்முகேஸ்வரன், கடந்த 3 வருடங்களாக அரை மரதன் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் உள்ளிட்ட நீண்ட தூர போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தார்.

அதிலும் குறிப்பாக, கடந்த 4 வருடங்களாக இலங்கை பிரபல மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளரான சஜித் ஜயலாலிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற சண்முகேஸ்வரன்,

இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் மற்றும் முப்படையினருக்கான மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்வதற்கான தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் கடந்த மே மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், குறித்த போட்டியை 31 நிமிடங்களும் 16.84 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியை மீதும் பிரதி அதிபர் மீதும் சரமாரியாக தாக்குதல் : தாலிக்கொடியும் பறிப்பு!!

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை மீதும் பாடசாலையின் பிரதி அதிபர் மீதும் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆசிரியை அணிந்திருந்த சுமார் 10 பவுண் தங்கத்தாலிக் கொடியும் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வழமை போன்று இன்று மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது பாடசாலைக்கு மிக அருகில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் இறால்குழி கஜமுகா வித்தியாலய ஆசிரியை மீதும் அப்பாடசாலையின் பிரதி அதிபர் மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தி வெட்டுக்கும் தடியடித் தாக்குதலுக்கும் உள்ளாகிய நிலையில் படுகாயமடைந்த ஆசிரியையும் பிரதி அதிபரும் உடனடியாக மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவசர பொலிஸ் தொடர்பு இலக்கமான 119இற்கு அழைப்பு விடுத்து தகவல் சொல்லப்பட்டதன் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தடயங்களைப் பதிவு செய்துள்ளனர்.

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அதிசயம்!!

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட அதிசயத்தை காண பெருமளவு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

ஆலயத்திலுள்ள நாகப் பாம்பு ஒன்று அம்மனுக்கு பூக்களை கொண்டு பூஜை செய்யும் அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள செடிகளிலுள்ள பூக்களை பாம்பு கொண்டு வந்துள்ளது.

இந்த அதிசய சம்பவத்தை கேட்டு பெருமளவு பக்தர்கள் ஆலயத்தில் ஒன்று கூடியுள்ளனர். அண்மைக்காலமாக தாயகத்திலுள்ள ஆலயங்களில் பல்வேறு விதமான அதிசய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பல்வேறு அதிசயங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது பாம்பின் தெய்வீக செயற்பாடு அங்குள்ள பக்தர்களை பெரிதும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை : அதனால் ஏற்பட்ட அதிஷ்டம்!!

கடந்த வருடம் புல் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி 3 கால்களையும் இழந்த நாயின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தெஹிஅத்தகண்டிய பிரதேசத்தில் புல் வெட்டு இயந்திரத்தில் சிக்கிய நாய் ஒன்று 3 கால்களையும் இழந்துள்ளது.

கால்களை இழந்து ஆபத்தான நிலையில் இருந்த நாயின் உயிரை தம்மிக்க பண்டார அமரசிங்க என்ற இளைஞன் நாயை காப்பாற்றியுள்ளார்.

பாதிப்படைந்த நாய் தற்போது, Animal SOS Sri Lanka என்ற பாதுகாப்பு நிலையத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றது.

நாய்க்கு ஏற்பட்ட இந்த சோகமான சம்பவத்திற்கு ஒரு வருடம் நிறைவடைந்து நிலையை முன்னிட்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!!

வவுனியாவின் மையப்பகுதிகளில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக இருவேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதைக்காணக்கூடியதாக உளளதுடன் அச்சுவரொட்டிகளுக்கு தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அச்சுவரொட்டிகளில் உச்ச துரோகத்தின் குறியீடு
சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது. துமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினமாச் செய்யவேண்டும். தமிழ் மக்களை இனவாத கலவரங்கள் மற்றும் வெகுஜன கொலைகள், சிங்கள அடக்குமுறை, தமிழ் நிலங்கள் கைப்பற்றப்படுவதை நிறுத்த ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சமஷ்டி தேவை என்பது பல காலமாக தமிழர்களின் தேவை இதனை தந்தை செல்வா தனது கொள்கையாகப்போராடினார். என்று தலைப்பிடப்பட்டு தொடர்ந்து செல்வதுடன் மற்றைய சுவரொட்டியில்,

சமஷ்டிக்கு மறுபெயர் கூட்டாட்சி சமஷ்டி (கூட்டாட்சி) என்றால் என்ன? என்று தலைப்பிடப்பட்டு பல்வேறு விடயங்களை குறிப்பிட்டதுடன் இறுதியில் ஒற்றை ஆட்சியை (ஏக்கிய ராஜ்ஜ) சமஷ்டி அமைப்பே என்று தமிழர்களை முட்டாளாக்குவதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளின் முட்டாள் தர்க்கம் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்விரண்டு சுவரொட்டிகளுக்கும் தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கம் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை முதல் வவுனியாவில் பழைய பேருந்து தரிப்பிடம், குருமன்காடு, குடியிருப்பு, வைரவப்புளியங்குளம் புதிய பேருந்து நிலையம், போன்ற பல்வேறு பகுதிகளிலிலும் காணக்கூடியதாக உள்ளது.

மூத்த திரைப்பட நடிகர் மரணம் : குடும்பத்தால் கைவிடப்பட்டு வீதியில் திரிந்த பரிதாபம்!!

பிரபல மூத்த திரைப்பட நடிகர் சதாசிவா பிரம்மவர் தனது 90வது வயதில் காலமானார். 150க்கும் அதிகமான கன்னட திரைப்படங்களில் குணச்சித்தர வேடங்களில் நடித்துள்ள சதாசிவா விஷ்னுவர்தன், அம்பிரீஷ், சுதீப், தர்ஷன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சதாசிவா கடந்தாண்டு குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் சாலையில் சுற்றி திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் பொதுமக்கள் அவருக்கு உணவு மற்றும் தங்க இடம் அளித்த நிலையில் மீண்டும் அவர் குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்தார்.

இந்நிலையில் வயது முதிர்வு நோய்கள் காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சதாசிவா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஏம்மா இப்படி செய்தாய் : மனைவியுடன் வீடியோ கோல் பேசியபடி தூக்கில் தொங்கிய கணவன்!!

இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் மனைவியுடன் வீடியோ கால் பேசியபடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஞ்சித் (32) என்பவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். மனைவியுடன் ரஞ்சித் வசித்து வந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக அவரை பிரிந்த மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மனைவி பிரிவால் வாடிய ரஞ்சித் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் அவருக்கு வீடியோ கால் பேசியுள்ளார். போனில் உருக்கமாக ஏன் என்னை பிரிந்து சென்றாய் என பேசிய ரஞ்சித் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ரஞ்சித்தின் சடலத்தை கைப்பற்றினார்கள். அவரின் செல்போனை பரிசோதனை செய்யும் பணி நடந்து வரும் வேளையில், ரஞ்சித்தின் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் பொலிசார் விசாரிக்கவுள்ளனர்.

அம்மா-அக்காவை துடி துடிக்க குத்தி கொலை செய்த 15 வயது சிறுமி : எங்களை காப்பாற்றுங்க என கெஞ்சிய பரிதாபம்!!

அமெரிக்காவில் தாய் மற்றும் அக்காவை கொடூரமாக குத்தி கொலை செய்து விட்டு 15 வயது சிறுமி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் Albion பகுதியில் இருக்கும் வீட்டில் இருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு போன் வந்துள்ளது. உடனடியாக போன் எடுத்து பேசப்பட்ட போது, பெண் ஒருவர் நானும், என் மகளும் இங்கு இரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.

எங்களை வந்து காப்பாற்றுங்க என்று கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது இரண்டு பெண்கள் அங்கிருக்கும் அறையில் கத்தியால் குத்தப்பட்டு காயங்களுடன் இரத்தம் வழிந்த நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளனர்.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், Rosa Aminta Maldonado என்ற 44 வயது தாயும், 19 வயது மதிக்கத்தக்க Rosa Lee Maldonado என்ற அவரது மகளும் இந்த சம்பவத்தில் இறந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை செய்ததே Rosa Aminta Maldonado-ன் இளைய மகள் தான் எனவும், 15 வயது மதிக்கத்தக்க அந்த பெண் தாய் மற்றும் அக்காவின் கழுத்து அதைத் தொடர்ந்து தலைப் பகுதி என பல இடங்களில் கொடூரமாக குத்திவிட்டு, அதன் பின் ஒரு பெரிய கத்தியை வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது என்ன காரணத்திற்காக நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

மைதானத்தில் கதறி அழுத ரொனால்டோ : அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிகப்பு அட்டை வழங்கப்பட்டதால் மைதானத்தில் கதறி அழுத சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

போர்த்துகலின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் அணியான ரியல் மாட்ரிடில் இருந்து ஜுவாண்டஸ் அணிக்கு மாறினார்.

இந்நிலையில், ஜுவாண்டஸ் மற்றும் வலென்சியா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இது ஜுவாண்டஸ் அணிக்காக ரொனால்டோ விளையாடும் முதல் போட்டி என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டியை எதிர்நோக்கியிருந்தனர்.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில், ரொனால்டோவின் கை வலென்சியா அணி வீரர் முரில்லோவின் தலையில் பட்டது. இதனால் முரில்லோ உடனே ரொனால்டோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவரது சக அணி வீரர்களும் சூழ்ந்துகொண்டனர்.

ஆனால், இதனை சரியாக கவனிக்காத களநடுவர், வலென்சியா அணி வீரர்களிடம் பேசிவிட்டு, ரொனால்டோவிற்கு போட்டியை விட்டு உடனடியாக வெளியேறும்படி சிகப்பு அட்டை காட்டினார்.

இது ரொனால்டோ உட்பட மைதானத்தில் குழுமியிருந்த அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் ரொனால்டோ மைதானத்தில் அமர்ந்து கதறி அழுதார்.

பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறிய ரொனால்டோ, போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தார். எனினும், ஜுவாண்டஸ் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் 154 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, முதல் முறையாக சிகப்பு அட்டையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மாணவியை திருமணம் செய்த 17 வயது சிறுவன் : பின்னர் நடந்த சம்பவம்!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், கல்லூரியில் பயிலும் மாணவியை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர், தனது மகளை கெங்கலமகாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், தன் மகளை மீட்டுத் தருமாறும் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த இளம்பெண்ணை மீட்க சென்ற பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். அதாவது புகார் கூறப்பட்ட நபர் 17 வயது பள்ளி மாணவன் என்பதும், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவி என்பதும் தெரியவந்தது.

அதன் பின்னர், நடந்த விசாரணையில் இருவரும் கடந்த 31ஆம் திகதியே திருமணம் செய்து, குடும்பம் நடத்தியுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், நடந்த நீதிமன்ற விசாரணையில் 17 வயது சிறுவனை, கல்லூரி மாணவி சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து கொண்டதாலும், இளம்பெண்ணுடன் சிறுவன் பாலியல் உறவு கொண்டதாலும் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது.

கருக்கலைப்பு செய்ததில் பலியான கர்ப்பிணி பெண் : பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழ்நாட்டின் மதுரையில் அடுத்தும் பெண் குழந்தை பிறந்துவிடும் என்ற அச்சத்தில் கருக்கலைப்பு செய்த போது உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் – ராமுத்தாய் தம்பதி 3 பெண் குழந்தைகள் உள்ளனர், இந்நிலையில் ராமுத்தாய் 4-ம் முறையாக கருவுற்றார்.

7 மாதங்கள் ஆன நிலையில் மருத்துவமனை ராமுத்தாய் பரிசோதனைக்கு சென்றார். 4வதும் பெண் குழந்தையாகப் பிறந்தால் என்ன செய்வது என மருத்துவர்களிடம் கேட்டுள்ளார் ராமுத்தாய்.

7 மாதங்கள் ஆன நிலையில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும், முறையாகப் குழந்தை பெற்றுக் கொள்வதே வழி என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதே மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஜோதிலட்சுமி, ராமுத்தாயை அணுகி, 3 குழந்தைகளும் பெண்ணாகப் பிறந்துள்ளதால், 4வதும் பெண்ணாகத் தான் பிறக்கும் என்று கூறி, கருவைக் கலைக்க தான் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார்.

ஜோதிலட்சுமி, ராமுத்தாயை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுள்ளார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமுத்தாய் உயிரிழந்தார், இதையடுத்து பொலிசார் ஜோதிலட்சுமியை கைது செய்தனர்.

ராமுத்தாயின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் வயிற்றில் ஆண் சிசு இருந்ததாக தெரியவந்துள்ளது.

பெண் குழந்தைக்கு பயந்து ராமுத்தாய் உயிரைவிட்ட நிலையில் அவர் வயிற்றில் ஆண் சிசு இருந்தது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருமணமான 5 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : சோகத்தில் குடும்பத்தினர்!!

ஒடிசா மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 5 மாதத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் Balasore அருகே 19 வயதான ஊர்மிளா என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஊர்மிளா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஊர்மிளாவின் பெற்றோர், Simulia காவல் நிலையத்தில், ஊர்மிளாவின் கணவர் நரகரி (26) மற்றும் அவருடைய அம்மாவின் மீது புகார் கொடுத்தனர்.

அதில், திருமணம் செய்து கொடுக்கும் போதே, அவர்கள் கேட்ட வரதட்சணையை நாங்கள் கொடுத்து விட்டோம். ஆனால் திருமணம் முடிந்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து எங்களுடைய மக்களிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

எங்களுடைய மகளின் தீக்குளிப்பு சம்பவத்தில் சந்தேகம் உள்ளது. அவர்கள் தான் வேண்டுமென்றே கொலை செய்ய முயற்சித்திருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊர்மிளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல நடிகரின் மகளால் பரபரப்பு!!

பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட நடிகரான விஜய குமாருக்கும், அவருடைய மூத்த மகளான வனிதாவிற்கும் நீண்ட வருடங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜயகுமார் தரப்பில் பரபரப்பான புகார் மனு ஒன்று மதுரவாயல் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது.
அதில், மதுரவாயில் அருகே ஆலப்பாகத்தில் உள்ள என்னுடைய வீடு ஒன்றை நடிகையும் எனது மகளுமான வனிதாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு கொடுத்தேன்.

ஆனால் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் வனிதா வீட்டை காலி செய்யாமல் இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை காலி செய்து தரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களிடம் வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை அங்கிருந்து விரட்ட முயற்சி செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.