பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசிய கொடூர தாய் : கணவரிடம் நாடமாடியது அம்பலம்!!

இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் பெண் ஒருவர் தமது ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு கணவரிடம் நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருச்சூரின் செவ்வூர் பகுதியில் கிணற்றில் இருந்து ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையின் சடலம் மீட்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம், குழந்தையின் தாயார் ரம்யா(33) வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், கடந்த ஞாயிறன்று இரவு வாசலில் யாரோ தட்டுவது போன்று இருந்தது என்றும், வாசல் திறந்ததும், தம்மையும் குழந்தையையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகாமையில் உள்ள கிணற்றில் தள்ளியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிசாருக்கு இதில் சந்தேகம் எழவே, ரம்யாவை தனியாக விசாரித்துள்ளனர். அப்போது கணவர் மீதிருந்த கோபத்தாலையே தாம் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

மதுவுக்கு அடிமையான தமது கணவர் எப்போதுமே தாமதமாக வீட்டுக்கு வருவதன்பேரில் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு வெகுநேரமாகியும் கணவர் பினிஷ் வீட்டுக்கு வராததால் மொபைலில் அழைத்து சண்டையிட்டுள்ளார்.

மேலும் ஆத்திரம் அடங்காத ரம்யா தமது ஒன்றரை வயது மகளையும் வாரியெடுத்துக் கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.
ஆனால் அங்கிருந்த தண்ணீர் குழாயில் சிக்கியிருந்த அவர் ஒருகட்டத்தில் மேலேறி வந்துள்ளார்.

இதனிடையே பெற்ற மகளை எண்ணி வருந்திய ரம்யா, உடனடியாக மீண்டும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் குழந்தையை அவரால் அந்த இரவு நேரத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து கணவரை அழைத்து பொய்யான கதை ஒன்றை கூறியுள்ளார்.

தற்போது பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ள குற்றத்திற்காக ரம்யா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் சாதனை படைத்து இலங்கைக்கு கிரீடம் கொண்டு வந்த பெண்!!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற The Miss British Empire 2018 போட்டியில் இலங்கைகயை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட பெண் கிரீடத்தை வென்றுள்ளார்.

வைத்தியர் நுவன்திகா சிறிவர்தன என்பவரே இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் நவகமுவ பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையில் வைத்திய பயிற்சிகளை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் பங்கு பற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனினும் எப்படியோ வெற்றி பெற்றுள்ளேன். பலர் எனக்கு உதவி செய்தார்கள். பல சுற்று போட்டிகள் இடம்பெற்றது. இலங்கைக்கு வெளியே வந்து இவ்வாறான கிரீடத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியாக உள்ளது.

உண்மையாகவே அந்த நேரத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நான் கண்ணீர் விட்டு அழுதேன். எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என வெற்றி பெற்ற நுவன்திகா குறிப்பிட்டுள்ளார்.

நடிகை நிலானி தற்கொலை முயற்சி : காரணமானவரின் பெயரை வெளியிட்டதால் பரபரப்பு!!

நடிகை நிலானி அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி அவரது காதலரும், உதவி இயக்குனருமான காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

காந்தி மோசமானவர் என்பதால் தான் அவரை பிரிந்தேன் என நிலானி விளக்கமளித்தார். இந்நிலையில் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் தங்கியிருக்கும் நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து நிலானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காதலன் காந்தி இறப்புக்கு தானே காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியதால் அவர் மனம் உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையில் தற்கொலை முயற்சிக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிலானி, என்னை மேலும் மேலும் காயப்படுத்தாதீர்கள்.

என் மீது தவறு இருந்தால் புகார் கொடுங்கள், பெண் என்றும் பாராமல் இப்படி செய்கிறீர்கள். மேற்கொண்டு என் மீது அவதூறான பேச்சு பேசினால் என் சாவுக்கு காரணம் ரகு மற்றும் அவர் குடும்பம் தான் கூறியுள்ளார்.

சினிமாவை மிஞ்சிய செயல்களில் ஈடுபட்ட காதல் ஜோடி : கைது செய்த பொலிஸ்!!

டெல்லியை சேர்ந்த ஒரு காதல் ஜோடியினர் சினிமாவையே மிஞ்சிய அளவிற்கு, மிகவும் தெளிவாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியின் Govindpuri பகுதியில் நீண்ட நாட்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த பொலிஸார், விக்கி (24), சோனியா (20) என்ற ஜோடிகளை கைது செய்தனர். போதை பொருளுக்கு அடிமையாகியிருந்த விக்கி, 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, திருட்டு வேளைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளான்.

அவனுடைய மனைவி சோனியா, 7ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு விக்கியை கரம்பிடித்துள்ளார். இருவரும் சேர்ந்து சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்கள் திருட செல்லும்போது சோனியா முகத்தில் துணியை கட்டிக்கொள்வார். விக்கி தலையில் தலைக்கவசத்தை அணிந்து கொள்வார்.

அதேசமயம் இவர்கள் சென்று வரும் இருசக்கர வாகனத்தின் எண்ணை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக, வேறு ஏதாவது ஒரு எண் பொரித்த பதாகையை பதித்து விடுவார்கள்.

இந்த நிலையில் இருவரையும் கைது செய்த பொலிஸார், இவர்கள் மீது 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரபாகரனின் கட்டளைத்தளத்தை கவனமாக பாதுகாக்கும் இராணுவத்தினர்!!

விடுதலைப் புலிகளின் இராணுவ படைப்பிரிவுகளுக்கு பிரபாகரன் நேரடியாக கட்டளை வழங்கிய நிலத்தடி நிர்மாணக் கட்டடம் ஒன்றை இராணுவத்தினர் பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு – வடக்கு பெருங்காட்டுப் பகுதியில் நிலத்திற்கு கீழாக அமைக்கப்பட்ட குறித்த மூன்று மாடி நிலத்தடி நிர்மாணக் கட்டடங்களை 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.

நிலத்திற்கு கீழ் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதலாவது தளத்திற்குள் சிறிய ரக வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கட்டட நிர்மாணம் சுமார் 30 சதுர அடி நிலத்திற்கு கீழ் இருந்து மூன்று மாடிகளாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2000ஆம் ஆண்டிற்கு முன்னர் குறித்த மூன்றாவது நில அறையின் கீழ் ஒன்று கூடிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகள் இராணுவத்தினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகொண்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 2000ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளினால் இந்த நிலத்தடி கட்டடம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தற்பொழுது குறித்த இடத்தை மக்கள் பார்வையிட தடைவிதித்துள்ள படையினர் இவற்றை வெற்றியின் அடையாளமாக பாதுகாத்து வருகின்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் காட்டு யானை தாக்கி வயோதிபர் பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியா சேமமடு பகுதியில் இன்று(20.09) வயோதிபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த ஆரோக்கியநாதன் ஞானசீலன் என்ற 50 வயதுடைய வயோதிபர் சேமமடு படிவம் 2இல் தனது சகோதரனின் விவசாயக்காணியில் நிலக்கடலை பயிரிட்டு வந்துள்ளார்.

இன்று காலை அப்பகுதியில் தனது மாட்டைத்தேடி காட்டுக்குச் சென்றபோதே காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காலையிலிருந்து நீண்டநேரமாக காணவில்லை என்று தெரிவித்து உறவினர்கள் இன்று மாலை 3 மணியளவில் சேமமடுவில் தேடிச்சென்றபோது காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஓமந்தைப் பொலிசார் மற்றும் கிராம அலுவலருக்குத்தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

என் மனைவி தாங்க இதுக்கு எல்லாம் காரணம் : பொலிசாரால் கைது செய்யப்பட்ட கணவன் வாக்குமூலம்!!

இந்தியாவில் மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அருகே கெங்னேரி கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவர் தான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று கூறி, மகாதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ஆனால் உண்மையிலே ஆக்யூத்குமார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விடயம் திருமணத்திற்கு பின் மகாதேவிக்கு தெரியவர, அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதற்கு பதிலாக கணவரிடம் தினமும் 3 செயின் பறித்துக்கொண்டுதான் வீட்டுக்குள் வரவேண்டும், அப்படி வரவில்லை என்றால் உன்னை வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் மனைவியின் டார்ச்சர் தாங்கமுடியாமல் அக்யூத்குமார் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணம் முடிந்து 7 மாதங்களில் 106 செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் அக்யூத்குமாரை பொலிசார் கைது செய்து விசாரித்தனர். விசாரித்த போது மனைவியின் கொடுமை தாங்க முடியாமலே செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்ததாக கூறியுள்ளார்.

கணவன் பொலிசாரிட சிக்கியதை அறிந்த மகாதேவி தலைமறைவாகி, நாகமங்களா பகுதியில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

சமீபத்தில் அவர் இருக்கும் இடத்தையும் அறிந்த பொலிசார், அவரை கைது செய்தனர்.

இருவரிடமும் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெங்களூரு, தவனகரே, தார்வாட், ஹவேரி, தும்கூர் பகுதிகளில்தான் அக்யூத்குமார் தன்னுடைய கைவரிசை காட்டியுள்ளார்.

அவர் பறித்த செயின்களின் மதிப்பு சுமார் 1.05 கோடி ரூபாய் வரும் என்பதால், அதை வைத்து இருவரும் ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

மகாதேவி அடிக்கடி கோவா சென்று, பெரிய பெரிய ஹோட்டல்களில் தங்கி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. சொகுசு வாழ்க்கை குறித்து அக்கம் பக்கத்தினருக்குத் தெரியக் கூடாது என்பதற்காக, அடிக்கடி வீட்டையும் மாற்றி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

2 பிறப்புறுப்பு, நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை : வைரலாகும் வீடியோ!!

இந்தியாவில் 2 பிறப்புறுப்பு மற்றும் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேச பகுதியைச் சேர்ந்தவர் Bulhan Nishad. இவருடைய மனைவியான Rambha-வுக்கு கடந்த 16-ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த குழந்தைக்கு நான்கு கால்கள், 2 பிறப்புறுப்பு இருந்துள்ளது. இதனால் கால்கள் மற்றும் பிறப்புறுப்பை நீக்குவதற்கு அந்த குழந்தை லக்னோவில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் 22 வயது பெண் ஒருவருக்கு இதே போன்று குழந்தை பிறந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் அந்த குழந்தையை ஆற்றில் வீசியுள்ளனர்.

ஆனால் அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பத்திரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து நாகப்பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டைபோட்ட நாய்!!

ஒடிசா மாநிலத்தில் தன் குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பாம்புடன் சண்டைபோட்ட நாயின் பாசப்போராட்டம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

விஜய்பரிட்டா என்பவரின் வீட்டின் மாடிப்படிக்கு கீழே தனது 7 குட்டிகளை பராமரித்துக்கொண்டு நாய் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று அங்கு நுழைந்த நாகப்பாம்பு குட்டிகளை சீண்டியுள்ளது. அதை பார்த்த தாய், பாம்புடன் சண்டைபோட்டு அதனை விரட்ட முயன்றது.

நாயின் ஆக்ரோஷமான சத்தத்தை கேட்டு அங்கு ஓடிவந்த மக்கள், இந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளனர். இந்த சண்டையின் இறுதியில் தாய் நாய்க்கு வெற்றி கிடைத்தது. ஆனால் பாம்பு தீண்டியதில் இரு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தது. இருப்பினும் 5 குட்டிகளை போராடி தாய் மீட்டுள்ளது

என் மகளை ஒருதடவ பாக்கணும்… காட்டுப்பா : மகளை சரமாரியாக வெட்டிய தந்தையின் வெறிச்செயல்!!

பினரய் ஆணவக்கொலை அடங்குவதற்குள் தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் சனத் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் – மாதவி. காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த வாரம் கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர்.

சந்தீப் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால் மாதவியின் தந்தை மனோகர் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் 3 மணி அளவில் சந்தீப்பை தொடர்புகொண்ட மனோகர் சாரி, “மகளைப் பிரிந்திருப்பது கவலையளிக்கிறது. இதனால் மாதவியை கூப்பிட்டுவந்து தன்னிடம் ஒருமுறை காண்பியுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதை நம்பி சந்தீப், மாதவி இருவரும் அவர் சொன்ன இடத்துக்கு வந்து பைக்கில் காத்திருந்தனர். அப்போது, பின்னால் பைக்கில் வந்து நின்ற மனோகர் சாரி, பேக்கில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முதலில் சந்தீப்பை வெட்டினார்.

இதை மாதவி தடுக்கவே அவரையும் சரமாரியாக வெட்டினார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த இருவரும் தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாதவிக்கு கை மற்றும் முகம் உள்ளிட்ட இடங்களிலும், சந்தீப்புக்கு கழுத்து பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை தலைமறைவாகியிருந்தார். இவரை பொலிசார் தேடிவந்த நிலையில், இன்று ஆச்சாரி எஸ். ஆர் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

வவுனியாவில் யாழிலிருந்து கொழும்பு சென்ற இளைஞருக்கு நள்ளிரவில் நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த இளைஞரொருவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் கேரள கஞ்சாவினை கடத்தி சென்ற குற்றச்சாட்டிலேயே வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அந்த பேருந்தில் பயணித்த கொழும்பை சேர்ந்த சத்தியவேல் சஞ்சீவன் (19 வயது) என்ற இளைஞர் 6 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் கைதாகியுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பேருந்து விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக பலி!!

கொஸ்கம – அவிசாவளை வீதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் கற்கும் 26 வயதான பியல் ரத்னகுமார என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகம் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞன் மீது பேருந்து மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை நேற்றைய தினம் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

நெஞ்சு பகுதி மற்றும் தலையில் பாரிய காயம் ஏற்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கொஸ்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதி இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் திடீரென்று தோன்றிய நாக பாம்பினால் பதற்றம்!!

நாவிதன்வெளி – சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளின் முகப்பில் நாகப் பாம்பு தோன்றியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், பாம்பினை கண்டு பதற்றமடைந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

வீதியால் சென்றவர்களின் உதவியோடு மோட்டார் சைக்கிளை பிரித்து பாம்பினை கண்டுபிடித்தமையினால் பாம்புக்கடியிலிருந்து தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தினால் சற்று நேரம் வீதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

யாழில் நடந்த பயங்கரம் : இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏ9 வீதியில் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் மோட்டார்ச் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்!!

அவுஸ்திரேலியாவின் முக்கிய அரசியல்வாதிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள இலங்கையர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான மொஹமட் நிசாம்டீன் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நபருக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என சிட்னி புலனாய்வு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். அவரது மாணவர் விசாக்காலம் நிறைவடைகின்றது. எனினும், அந்நாட்டு அதிகாரிகள் அவருக்கு நீதி நடவடிக்கைக்கான விசாவை வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை், குறித்த நபர் கைது செய்யப்பட்டு 20 நாட்கள் வரையில் கடந்துள்ள நிலையில், இன்னும் அவரை அவரது குடும்பத்தாருடன் தொடர்புகொள்ள அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இளைஞருக்கு நீதிகோரி கொழும்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரணத்தில் முடிந்த இன்ஸ்டாகிராம் காதல் – இள வயது யுவதியின் பரிதாபம்!!

பிலியந்தலையில் காதலனால் தீ வைக்கப்பட்ட காதலி 12 நாட்களுக்கு பின்னர் இன்று களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மாம்பே பிரதேசத்தில் வீடொன்றுக்குள் 20 வயதான காதலனால் தீ வைக்கப்பட்டதில் படுகாயமடைந்த 19 வயதான காதலி இன்று களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை – மமபாத்த சேருவாவில பகுதியில் வசித்து வந்த சந்தினி கௌரிகா ஜயசேகர என்ற 19 வயதான யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான இவர்கள், பின்னர் காதலித்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காதலியை தீ வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சசிது மதுசங்க பெர்னாண்டோ என்ற இளைஞனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெஸ்பேவ நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார்.