வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது!!

வவுனியா ஓமந்தை பாலமோட்டைப்பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று முந்தினம் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் பாலமோட்டையில் நடவடிக்கை மேற்கொண்ட ஓமந்தைப் பொலிசார் சட்டவிரோத கசிப்பு அரை லீற்றரை தனது உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக அப்பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

ஓமந்தை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வாவின் வழிநடத்தலில் ஜானக திசாநாயக்கா, நிஷாந்தனினால் கைது செய்யப்பட்டுள்ள நபர் நீண்டகாலமாக சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை கைப்பற்றப்பட்ட கசிப்புடன் நேற்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு : 50 ஆயிரம் ரூபா அபராதம்!!

வவுனியா சேமமடுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசாரின் நடவடிக்கையின்போது மணல் உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது உழவு இயந்திரச்சாரதிக்கு 50ஆயிரம் ரூபா நீதிமன்றத்தினால் தண்டமாக அறவிடப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று முன்தினம் போகஸ்வெவ பகுதியிலிருந்து சேமமடு படிவம் 2இற்கு சட்டவிரோதமான முறையில் எவ்வித ஆவணங்களும் இன்றி உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மணல் ஓமந்தைப் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட மணலுக்கு நீதிமன்றத்தினால் 50 ஆயிரம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.

29 வயது மனைவிக்கு 62 வயது கணவரால் ஏற்பட்ட பரிதாபம்!!

ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கு, ஓமனில் உள்ள கணவர் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கொடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் உதவி கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஹுமா சைரா (29) என்ற பெண் கூறுகையில், 62 வயதான ஓமன் குடிமகனை கடந்தாண்டு மே மாதம் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டேன். பின்னர் ஓராண்டுக்கு ஓமனில் அவருடன் வசித்தேன்.

திருமணத்துக்கு பின்னர் எனக்கு குழந்தை பிறந்த நிலையில் உடல்நலக்குறைவால் மூன்று மாதத்தில் இறந்துவிட்டது. இந்நிலையில் என்னை என் கணவர் மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பினார்.

பின்னர் எனக்கு வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய எந்த கேள்விக்கும் பதிலளிக்க அவர் மறுக்கிறார்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான் எனக்கு உதவவேண்டும் என கோரியுள்ளார்.

1000 பெண்களை துஸ்பிரயோகம் செய்த மருத்துவர் : உடந்தையான காதலி : சிக்கிய வீடியோக்கள்!!

அமெரிக்காவில் 1000 பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த எலும்பு மருத்துவர் காதலியுடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த எலும்பு முறிவு மருத்துவர் Grant William Robicheaux (38). இவர் அமெரிக்காவின் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். இவருக்கு 32 வயதில் Cerissa Laura Riley என்ற காதலி உள்ளார்.

மது பிரியர்களான இருவரும் அதிகமான பார்களுக்கு செல்லும் பழக்கம் உள்ளவர்கள். அங்கு வரும் அழகிய பெண்களிடம் பேச்சின் மூலம் வசியம் செய்து, போதை பொருட்களை கொடுத்து மயக்கி கற்பழிப்பதையே William வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்தக்கொடூரமான சம்பவத்திற்கு அவருடைய காதலி Cerissa உடந்தையாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் பொலிஸாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், குற்றாவளி William செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் 1000க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சிக்கின.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், William மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் புகார் கொடுக்கலாம். அவர்களை பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டனர். இதனையடுத்து தற்போது 100-கும் மேற்பட்ட பெண்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் கூறும்பொழுது, வரும் அக்டோபர் 24-ம் தேதியன்று இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம். அங்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் William-ற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவருடைய காதலி Cerissa-விற்கு 30 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

திருமணமான 6 நாட்களில் புதுமணப்பெண் எடுத்த சோக முடிவு!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணமான 6 நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நித்யா – சுந்தரராஜன் ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருந்து இருவருக்கும் மனகசப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் மாப்பிள்ளை சுந்தரராஜன் தற்கொலைக்கு முயற்சித்தார். சுந்தரராஜனை, அவரது பெற்றோர் காப்பாற்றிய சிறிது நேரத்தில் நித்யாவும் தற்கொலைக்கு முயற்சித்தார்.

இதனால், நித்யாவின் தந்தை மணமக்கள் இருவரையும் தனது வீட்டில் அழைத்து சென்று வைத்திருந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு சென்ற நித்யா விஷம் அருந்தியுள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். கொண்டு செல்லும் வழியிலேயே நித்யா உயிரிழந்துள்ளார்.

இதனைதொடர்ந்து சுந்தரராஜன் மற்றும் அவருடைய குடும்பத்தாரிடமும், நித்தியாவின் குடும்பத்தாரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பாசத்தால் நெகிழ்ந்த அம்ருதா.. சதித்திட்டம் தீட்டிய தந்தை : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

தெலுங்கானாவில் அம்ருதாவின் கணவர் பிரணய் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அம்ருதா திருமணமான புதிதில் தனது தாயுடன் தொடர்பில் இல்லை. ஆனால், கர்ப்பமான பின்னர் அடிக்கடி தாயிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.

அவரது தாயும் தனது மகளுக்கு அறிவுரைகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில், அம்ருதாவுடன் தொலைபேசியில் பேசி வருவதை அவரது தாய் தன் கணவர் மாருதி ராவிடம் யதார்த்தமாக கூறி வந்துள்ளார்.

அதுபோல் தான், அம்ருதா கணவர் பிரணயுடன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு செல்வதை தாயிடம் தெரிவிக்க, அதை வழக்கம்போல் மாருதியிடம் கூறியுள்ளார் அம்ருதாவின் தாய்.

இதனை வைத்து தான் பிரணயை கொலை செய்ய மாருதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், மாருதியின் சதித்திட்டம் அவரது மனைவிக்கு தெரிந்திருக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, ஜூலை முதல் வாரத்தில் இருந்தே பிரணயை கொல்ல திட்டம் தீட்டிய மாருதி ராவ், அதற்காக கூலிப்படையிடம் ஒரு கோடி ரூபாயை பேரம் பேசி முடித்திருக்கிறார்.

அதன் பின்னர் முன்பணமாக 50 லட்சத்தை கூலிப்படையினர் கேட்க, மாருதி ராவ் 16 லட்சம் கொடுத்துவிட்டு பிரணயின் வீட்டை அவர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தங்களுக்கு தேவையான சிம்கார்டுகளை வாங்கிய கூலிப்படையினர், போலியான எண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றையும் வாங்கியுள்ளனர். பின் ஆகஸ்ட் 14ஆம் திகதியே பிரணயை ஒரு அழகுநிலையம் அருகில் வைத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், அந்த திட்டம் பிரணயின் உறவினர் அங்கிருந்ததால் நடக்கவில்லை. இதற்கு காரணம் இருவரில் யார் பிரணய் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது தான்.

அதன் பின்னர், இறுதியாக பிரணயை கொலை செய்த கூலிப்படையினர், அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்ற பின் தங்களது ஆடைகளை மாற்றியுள்ளனர். பின்பு தனித்தனி பாதைகளில் சென்று தலைமறைவாகியுள்ளனர்.

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சிறுவன் : கொலை என சந்தேகம்!!

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சில்லாலை கதிரைமாதா ஆலயத்திற்கு அருகில் சிறுவன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என இளவாலை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதில் 12 வயதுடைய நிலோஜன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சில்லாலை கதிரைமாதா ஆலயத்திற்கு செல்ல ஆயத்தமான நிலையில் குறித்த சிறுவன் வீட்டு முற்றத்தில் உயிரிழந்து கிடந்ததை பெற்றோர் அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்த காதலி : நிஜ காதல் கதை!!

காதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன.

கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார்.

காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார்.

அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

தினமும் தனது காதலன் கல்லறைக்கு சென்று வருகிறார். 23 வயதான தருஷி தனிமையில் தனது காதலுடன் வாழ்ந்து வருவது போன்ற நிலைப்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் மாதா சொரூபத்தில் இருந்து வடியும் இரத்தக் கண்ணீர் : மக்கள் மத்தியில் பரபரப்பு!!

யாழ்ப்பாணம் – வேலனை, சாட்டி புனித சிந்தாத்திரை மாதா தேவாலயத்தின் மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

குறித்த ஆலயத்தின் திருவிழா இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வாறு மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிகின்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த காட்சியை காண மக்கள் தேவாலயத்தை நோக்கி படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற பிரபல பாடசாலை மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற 15 வயதான மாணவி குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் இந்த மாணவி, தனக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற பதுளை வைத்தியசாலைக்கு தாயாருடன் சென்றுள்ளார்.

இதன்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிவித்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

மகப்பேற்று பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி சில மணிநேரங்களில் குழந்தையை பிரசவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான 21 வயது இளைஞனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை மாணவர்களுக்கு பொலிசாரால் குடிநீர் வழங்கிவைப்பு!!

வவுனியா ஓமந்தை மாணிக்க இலுப்பைக்குளம் அ.த.க பாடசாலைக்கு மாணவர்களின் குடிநீர் தேவை ஓமந்தை பொலிசாரினால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை மாணிக்க இலுப்பைக்குளம் அ.த.க பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்ப்பிரச்சினைக்கு இன்று (19.09) காலை முதல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்கள் கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்ற குறித்த பாடசாலையிலுள்ள குழாய்கிணறில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியினால் குடிநீர் வற்றிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன் மாணவர்களுக்கு குடிநீர்ப்பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் ஓமந்தை பொலிசாரின் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனினால் இன்று காலை பாடசாலைக்கு குடிநீர் வழங்கி மாணவர்களின் நீண்டகால தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் சிவசோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா, கனகராயன்குளம் புளியங்குளம் உதவி பொலிஸ் அதிகாரி டயிள்யூ. கே.பொன்சேகா, ஈஷி மிஷன் பூரண சபையின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் பேரூந்து உரிமையாளருக்கு விளக்கமறியல்!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கடந்த (16.09.2018) அன்று இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்தின் நடத்துனர், சாரதி மற்றும் பேரூந்தின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இத் தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பேரூந்து நடத்துனர் எஸ்.தயாபரன் (வயது 28) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் தனியார் பேரூந்தின் நடத்துனர் , சாரதியினை நேற்று முன் தினம் (17.09.2018) வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய போது எதிர்வரும் 01.10.2018 வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து தனியார் பேரூந்தின் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டுமென தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா, முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி இ.போ.ச பேரூந்துகள் நேற்று முன்தினம் (17.09.2018) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (18.09.2018) அதிகாலை தனியார் பேரூந்தின் உரிமையாளர் சரணடைந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபையினர் அவர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

தனியார் பேரூந்தின் உரிமையாளரை நேற்றைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சமயத்தில் எதிர்வரும் 02.09.2018ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகளின் வெளிமாகாண சேவைகள் நேற்று (18.09.2018) மதியம் முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததுடன் இன்றைய தினம் வெளிமாவட்ட தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீதியிலிருந்து தனியார் உள்ளூர் பேரூந்துகள் சேவையில் : மக்கள் சிரமம்!!

வவுனியாவில் தனியார் பேரூந்துகளின் வெளி மாவட்ட, மாகாணங்களுக்கான சேவைகள் இன்றைய தினம் (19.09.2018) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந் நிலையில் வவுனியா இலுப்பையடி பகுதியில் வீதியிலிருந்து தனியார் உள்ளூர் சேவைகள் இடம்பெற்று வருகின்றன . இதன் காரணமாக புதிய பேரூந்து நிலையத்திற்கு பொதுமக்கள் சென்று ஏமாற்றமடைந்த நிலையில் இலுப்பையடி சந்திக்கு வருகின்றனர்.

நான் புதிய பேரூந்து நிலையத்திற்கு முச்சக்கரவண்டிக்கு 100 ரூபாய் கொடுத்து சென்றேன். அங்கு இல்லை இலுப்பையடிக்கு செல்லுமாறு தெரிவித்தனர். மீண்டும் அங்கிருந்து முச்சக்கரவண்டிக்கு 80 ரூபாய் வழங்கியே வந்தேன்.

வவுனியாவிலிருந்து நெளுக்குளத்திற்கு முப்பது ரூபாய் பேரூந்து கட்டணம் ஆனால் முச்சக்கரவண்டிக்கு 180 ரூபாய் செலவு. இலுப்பபையடியிலுருந்து தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதாயின் புதிய பேரூந்து நிலையம் எதற்கு என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

மகளின் திருமணத்திற்காக தெருவில் பிச்சை எடுத்த தந்தை!!

வேலூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக பிச்சை எடுத்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ரான்ஜி என்பவருக்கு 3 மகள்கள், இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் தனது மகள்களின் திருமணத்திற்காக மகாத்மா காந்தி வேடம் அணிந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிச்சை எடுத்து எடுத்து வருகிறார்.

இன்று குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் எதிரில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, அவரை பார்த்து சில்லரை போட்டு சென்றனர்.

இதனை பார்த்த புறக்காவல் நிலைய காவலர்கள் முதியவரை அழைத்து விசாரித்த போது மகள்களின் திருமணத்திற்காக பணம் சேர்க்க பிச்சை எடுப்பதாக அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் காவலர்கள், தேசத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுப்பது தவறு எனக் கூறி முதியவரை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

கொழும்பில் ஓடும் பேருந்தில் அதிர்ச்சி கொடுக்கும் தமிழ் பெண் : பயணிகளுக்கு எச்சரிக்கை!!

கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகளில் உறங்குபவர்களிடம் பணம் கொள்ளையடிக்கும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிள்ளையுடன் பேருந்தில் ஏறும் பெண், உறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளின் பையை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் பெண்ணை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதன்போது குறித்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த ராஜரத்னம் ராதா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த நபரிடம் 2000 ரூபாய் பணத்தை திருட முயற்சித்த போது அவர் பயணிகளிடம் சிக்கியுள்ளார்.

இதேவேளை மற்றுமொரு பயணியிடம் திருடிய 9500 ரூபா பணம் மற்றும் தொலைத்த பையையும் இந்த பெண்ணிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

குழந்தையுடன் பேருந்தில் ஏறினால் ஆசனம் பெற்றுக் கொள்ள முடியும். இதன்போது தனக்கு அருகில் உறங்கிய நிலையில் பயணிக்கும் நபர்களிடம் அந்தப் பெண் பையை திருடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான திருட்டு கும்பல்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்

இலங்கையில் திகிலூட்டும் கிராமம் : தொடர்ந்து 15 மரணங்கள் : அடுத்த மரணத்தை எண்ணி பீதியில் மக்கள்!!

அனுராதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் ஏற்படும் அமானுஷ்ய செயற்பாடு காரணமாக மக்கள் பெரும் அச்ச நிலையில் இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

கிராமம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்து அடுத்த 21வது நாட்களில் அடுத்தடுதடுத்து பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்திற்கு சொந்தமான பலுகஸ்வெவ பிரதேச செயலகத்தில் உள்ள கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகிறது.

கலேன்பிந்துவெவ, ஹல்மில்லவெவ என்ற பெயர் கொண்ட இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக மரணங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களில் மாத்திரம், ஒருவர் உயிரிழந்து 21 வது நாட்களில் மற்றுமொருவர் உயிரிழக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை, அமானுஷ்ய சக்தியாக இருக்கலாம் என கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

21 நாட்களுக்கு ஒரு முறை உயிரிழக்கும் 15 பேர் ஒரே வரிசையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இறுதியாக நபர் உயிரிழந்து 5 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது பொது மக்கள் பீதியில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், அந்த கிராமத்தில் உள்ள ஏரி, கங்கைகளில் நீர் வற்றிப் போயுள்ளது. இதன் காரணமாக மக்கள் இன்னும் அச்சம் கொண்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.