காதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காதலனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காதலி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன.
கடவத்தை, அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள சந்தியில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் வந்த மோட்டார் வாகனத்தில், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது.
குறித்த விபத்தில் சிக்கிய கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த சிரான் என்ற இளைஞன் உயிரிழந்தார்.
காதலியுடன் முச்சக்கர வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. காதலன் உயிரிழந்த போதும் காதலியான தருஷி படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார்.
அதிஷ்டவசமாக தருஷி விபத்தில் உயிர் தப்பிய போதிலும், அவரால் அந்த சம்பவம் மற்றும் காதலனை மறக்க முடியவில்லை.
இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் 23வது வயது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
தினமும் தனது காதலன் கல்லறைக்கு சென்று வருகிறார். 23 வயதான தருஷி தனிமையில் தனது காதலுடன் வாழ்ந்து வருவது போன்ற நிலைப்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – வேலனை, சாட்டி புனித சிந்தாத்திரை மாதா தேவாலயத்தின் மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
குறித்த ஆலயத்தின் திருவிழா இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வாறு மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிகின்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இந்த காட்சியை காண மக்கள் தேவாலயத்தை நோக்கி படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற 15 வயதான மாணவி குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் இந்த மாணவி, தனக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற பதுளை வைத்தியசாலைக்கு தாயாருடன் சென்றுள்ளார்.
இதன்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிவித்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
மகப்பேற்று பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி சில மணிநேரங்களில் குழந்தையை பிரசவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான 21 வயது இளைஞனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா ஓமந்தை மாணிக்க இலுப்பைக்குளம் அ.த.க பாடசாலைக்கு மாணவர்களின் குடிநீர் தேவை ஓமந்தை பொலிசாரினால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை மாணிக்க இலுப்பைக்குளம் அ.த.க பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்ப்பிரச்சினைக்கு இன்று (19.09) காலை முதல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்கள் கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்ற குறித்த பாடசாலையிலுள்ள குழாய்கிணறில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியினால் குடிநீர் வற்றிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன் மாணவர்களுக்கு குடிநீர்ப்பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் ஓமந்தை பொலிசாரின் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனினால் இன்று காலை பாடசாலைக்கு குடிநீர் வழங்கி மாணவர்களின் நீண்டகால தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் சிவசோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா, கனகராயன்குளம் புளியங்குளம் உதவி பொலிஸ் அதிகாரி டயிள்யூ. கே.பொன்சேகா, ஈஷி மிஷன் பூரண சபையின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கடந்த (16.09.2018) அன்று இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்தின் நடத்துனர், சாரதி மற்றும் பேரூந்தின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இத் தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பேரூந்து நடத்துனர் எஸ்.தயாபரன் (வயது 28) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் தனியார் பேரூந்தின் நடத்துனர் , சாரதியினை நேற்று முன் தினம் (17.09.2018) வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய போது எதிர்வரும் 01.10.2018 வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து தனியார் பேரூந்தின் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டுமென தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா, முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி இ.போ.ச பேரூந்துகள் நேற்று முன்தினம் (17.09.2018) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (18.09.2018) அதிகாலை தனியார் பேரூந்தின் உரிமையாளர் சரணடைந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபையினர் அவர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.
தனியார் பேரூந்தின் உரிமையாளரை நேற்றைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சமயத்தில் எதிர்வரும் 02.09.2018ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகளின் வெளிமாகாண சேவைகள் நேற்று (18.09.2018) மதியம் முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததுடன் இன்றைய தினம் வெளிமாவட்ட தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் தனியார் பேரூந்துகளின் வெளி மாவட்ட, மாகாணங்களுக்கான சேவைகள் இன்றைய தினம் (19.09.2018) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந் நிலையில் வவுனியா இலுப்பையடி பகுதியில் வீதியிலிருந்து தனியார் உள்ளூர் சேவைகள் இடம்பெற்று வருகின்றன . இதன் காரணமாக புதிய பேரூந்து நிலையத்திற்கு பொதுமக்கள் சென்று ஏமாற்றமடைந்த நிலையில் இலுப்பையடி சந்திக்கு வருகின்றனர்.
நான் புதிய பேரூந்து நிலையத்திற்கு முச்சக்கரவண்டிக்கு 100 ரூபாய் கொடுத்து சென்றேன். அங்கு இல்லை இலுப்பையடிக்கு செல்லுமாறு தெரிவித்தனர். மீண்டும் அங்கிருந்து முச்சக்கரவண்டிக்கு 80 ரூபாய் வழங்கியே வந்தேன்.
வவுனியாவிலிருந்து நெளுக்குளத்திற்கு முப்பது ரூபாய் பேரூந்து கட்டணம் ஆனால் முச்சக்கரவண்டிக்கு 180 ரூபாய் செலவு. இலுப்பபையடியிலுருந்து தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதாயின் புதிய பேரூந்து நிலையம் எதற்கு என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக பிச்சை எடுத்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ரான்ஜி என்பவருக்கு 3 மகள்கள், இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் தனது மகள்களின் திருமணத்திற்காக மகாத்மா காந்தி வேடம் அணிந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிச்சை எடுத்து எடுத்து வருகிறார்.
இன்று குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் எதிரில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, அவரை பார்த்து சில்லரை போட்டு சென்றனர்.
இதனை பார்த்த புறக்காவல் நிலைய காவலர்கள் முதியவரை அழைத்து விசாரித்த போது மகள்களின் திருமணத்திற்காக பணம் சேர்க்க பிச்சை எடுப்பதாக அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் காவலர்கள், தேசத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுப்பது தவறு எனக் கூறி முதியவரை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தப் பெண்ணை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதன்போது குறித்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த ராஜரத்னம் ராதா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த நபரிடம் 2000 ரூபாய் பணத்தை திருட முயற்சித்த போது அவர் பயணிகளிடம் சிக்கியுள்ளார்.
இதேவேளை மற்றுமொரு பயணியிடம் திருடிய 9500 ரூபா பணம் மற்றும் தொலைத்த பையையும் இந்த பெண்ணிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
குழந்தையுடன் பேருந்தில் ஏறினால் ஆசனம் பெற்றுக் கொள்ள முடியும். இதன்போது தனக்கு அருகில் உறங்கிய நிலையில் பயணிக்கும் நபர்களிடம் அந்தப் பெண் பையை திருடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான திருட்டு கும்பல்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்
அனுராதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் ஏற்படும் அமானுஷ்ய செயற்பாடு காரணமாக மக்கள் பெரும் அச்ச நிலையில் இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.
கிராமம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்து அடுத்த 21வது நாட்களில் அடுத்தடுதடுத்து பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்திற்கு சொந்தமான பலுகஸ்வெவ பிரதேச செயலகத்தில் உள்ள கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகிறது.
கலேன்பிந்துவெவ, ஹல்மில்லவெவ என்ற பெயர் கொண்ட இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக மரணங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களில் மாத்திரம், ஒருவர் உயிரிழந்து 21 வது நாட்களில் மற்றுமொருவர் உயிரிழக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை, அமானுஷ்ய சக்தியாக இருக்கலாம் என கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
21 நாட்களுக்கு ஒரு முறை உயிரிழக்கும் 15 பேர் ஒரே வரிசையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இறுதியாக நபர் உயிரிழந்து 5 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது பொது மக்கள் பீதியில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், அந்த கிராமத்தில் உள்ள ஏரி, கங்கைகளில் நீர் வற்றிப் போயுள்ளது. இதன் காரணமாக மக்கள் இன்னும் அச்சம் கொண்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், நேற்று வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 166.64 ரூபாவாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 163.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவருவதால், இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது
வவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகள் பல்வேறு காரணங்களை முன்வைத்து நேற்று (18.09.2018) மதியம் முதல் காலவறையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளிமாவட்ட பேரூந்துகள் உட்செல்வதினை தடை செய்ய வேண்டும், புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பேரூந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும், இணைந்த நேர அட்டவணையினை உடனே அமுல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து வெளிமாகாணங்களுக்கு செல்லும் தனியார் பேரூந்துகள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் இன்றைய தினம் அனைத்து மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றையதினம் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தலமையிலான குழுவினர் தனியார் பேரூந்து ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதிலும் அது பயனளிக்கவில்லை.
இப் பணிப்புறக்கணிப்பு காரணமாக சுந்தரபுரம், கணேசபுரம், உக்கிளாங்குளம், சமயபுரம் போன்ற பல கிராமங்களிலிருந்து நகரத்திற்கு செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வெளி மாவட்டங்களிலிருந்து இலங்கை போக்குவரத்து சபையினர் பேரூந்துகளை வரவழைத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ள போதிலும் அவ் பேரூந்துகள் வவுனியாவிலிருந்து வெளி மாவட்டங்களுக்கே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பொதுவைத்தியசாலையில் விபத்துப் பிரிவு விடுதியில் நோயாளர்கள் உறங்குவதற்கு கட்டில்கள் மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் பெரும் அவதியுறும் காட்சி புகைப்படங்களை இளைஞன் ஒருவர் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளதுடன் மக்கள் பிரதிநிகளிடமும் சரமாரியான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
இதேவேளை குறித்த விடுதியின் ஆண் பெண் என தனி பிரிவுகள் இருந்தும் இப்புகைப்படங்களை நோக்குகையில் இருபாலாரையும் ஒரே பகுதியில் நிலத்தில் உறங்கும் காட்சிகளும் தென்படுகின்றன
எனவே இதற்கு உரிய அதிகாரிகள், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக விரைந்து செயற்பட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கேட்டுக்கொள்கின்றனர்.
சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் காந்தி என்கிற லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரமானது தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் நடிகை நிலானி தலைமறைவாகிவிட்டார் என கூறப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் விமலாவைச் சந்தித்து புகார் அளித்தார்.
இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ள நிலானி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் எனக்கு லலித்குமார் அறிமுகம் கிடைத்தது. என்னுடைய கணவர் பிரிந்து சென்றதும், கிடைக்கின்ற வருமானத்தை வைத்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன்.
லலித் என்னிடம் அன்பாக பழகக்கூடியவர். எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். ஒருமுறை அவர் என்னிடம் காதலை கூறினார். ஆனால் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
தொடர்ந்து என்னை வற்புறுத்தினார். அதனால் அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என கூறினேன். லலித்குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால் அதன்பிறகு தான் அவரை பற்றிய ரகசியங்கள் எனக்கு தெரியவந்தது. லலித்குமாரிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு அவருடைய சகோதரர், சகோதரியே கூறினார்கள்.
இதனால் நான் அவரிடம் இருந்து விலகி இருக்க ஆரம்பித்தேன். அதன் பின்னர் அவர் என்னை பல வழிகளில் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். ஒருமுறை டிசம்பர் மாதம் அவர் என்னை கடுமையாக தாக்கியதில் மயங்கி விழுந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடுத்துவிட்டு பின்னர், குடும்பத்திற்காக அதனை வாபஸ் பெற்றேன். இதனையடுத்து லலித் என்னை தொந்தரவு செய்யவில்லை. இதனால் நான் நிம்மதியாக இருந்த வேளையில் தான், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்மந்தமாக நான் கைது செய்யப்பட்டேன். என்னை வெளியில் எடுக்க லலித்குமார் உதவி செய்தார்.
அதன்பிறகு அவருடைய ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. அடிக்கடி என்னுடைய வீட்டிற்கு வர ஆரம்பித்தார். என்னுடைய குழந்தைகளை அடிக்க ஆரம்பித்தவர், அவர்களை வைத்தே என்னை மிரட்டவும் ஆர்ம்பித்தார். இந்தச் சமயத்தில் தான் கடந்த 10 நாளுக்கு முன், ஒரு நாள் மட்டும் நீ என் விருப்பப்படி நடந்துக்கொள். நான் செய்யும் எந்தச் செயலுக்கும் நீ மறுப்பு தெரிவிக்கக் கூடாது என லலித்குமார் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
குழந்தைகளுக்காக நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். பேருந்தில் தென் மாவட்டத்திற்கு செல்லும்போது தான் எனக்கு மெட்டி அணிவித்தார். அதனை வீடியோ எடுக்கும்போது கூட நான் மறுப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அந்த வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னுடைய அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்த லலித்குமார், என் பின்பக்கமாக நின்று தாலி கட்டினார். நான் அதனை அறுத்து எறிந்து விட்டேன். கடந்த மூன்று வருடங்களாக எனக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்துள்ளார் என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் விபத்தில் சிக்கி இறந்த மகளுக்கு அஞ்சலி செலுத்திய அடுத்த 1 மணி நேரத்தில், தாய் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த Casey Hood என்ற 18 வயது இளம்பெண், தன்னுடைய தோழி Lucy Leadbeater என்ற 27 வயது பெண்ணுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று காரில் சென்றுள்ளார்.
அப்பொழுது மற்றொரு காரில் வந்த இரண்டு இளைஞர்கள் விபத்து ஏற்படுத்தியதில், Casey சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து விரைந்த வந்த பொலிஸார் கவலைக்கிடமான நிலையில் இருந்த Lucy-ஐ மீட்டு லண்டன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு Lucy-க்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் அன்றைய தினம் இரவே விபத்து ஏற்படுத்திய இரண்டு இளைஞர்களை பொலிஸார் அடையாளம் கண்டனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் மகள் இறந்த துக்கம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த Casey-யின் தாய் Natalie Hood, தன்னுடை முகநூல் புத்தகத்தில், ‘என்னுடைய மகள் எனக்கு திரும்ப வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவு வெளியான அடுத்த ஒரு மணிநேரத்தில் Natalie வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இந்த சோக சம்பவம் குறித்து Natalie-வின் உறவினர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த Lucy-ம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.