இந்தியாவின் குஜராத்தில் ராணுவ அதிகாரி என பொய் கூறி, 50 பெண்களுக்கு திருமண ஆசைகாட்டி லட்ச கணக்கில் பண மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆமதாபாத்தை சேர்ந்தவர் ஜூலியன் சின்ஹா என்ற சித்தார்த் மெஹ்ரா. சித்தார்த் சமீபத்தில் விபத்தில் சிக்கியதில் அவரது கால்கள் சேதமடைந்து, அதில் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டது.
இதையடுத்து உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க திட்டமிட்ட சித்தார்த் இணையத்தில் தன்னை ராணுவ அதிகாரி என பதிவு செய்தார்.
சித்தார்த்தின் ஆங்கிலத்தில் மயங்கி பல பெண்கள் அவரது வலையில் விழுந்தனர்.
அவர்களை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த சித்தார்த் ராணுவ வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கப்போவதாகவும் அதற்கு முன் பணம் கொடுத்து உதவும்படியும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.
பணம் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தொடர்பை துண்டித்து விடுவது இவரது வழக்கம். சமீபத்தில் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் பொலிசில் புகார் அளித்ததை அடுத்து, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து சித்தார்த்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் இதுவரை 50 பெண்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பிரபல சின்னத்திரை நடிகையான நிலானியை திருமணம் செய்யாமல் லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த உதவி இயக்குனர் லலித்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர் சினிமா உதவி இயக்குனர் காந்தி லலித்குமார்.
இவர் உதயநிதிஸ்டாலினின் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும், அவரது படத்தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில் நடிகையான நிலானி சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தொந்தரவு செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனால் விரக்தியடைந்த லலித்குமார் கடந்த ஞாயிற்றுக் கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து பொலிசார் அவரின் போன் மற்றும் ஆண்நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லலித்குமார் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரெட்ஜெயன்ட் அலுவலகத்தில் பணியாற்றிய போது, அங்கு நடிகை நிலானி நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டுச் சென்றுள்ளார்.
அப்போது நிலானிக்கும், லலித்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலானியின் அழகில் மயங்கிய லலித்குமார் அவரை காதலித்துள்ளார்.
அப்போது லலித்குமாரின் கையில் காசு அதிகம் புழங்கியதால், நிலானி அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.
நிலானியின் இரு குழந்தைகளையும் பள்ளியில் கொண்டு விடும் அளவுக்கு குடும்பத்தில் ஒருவரான லலித் இருந்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
அதாவது லிவ் இன் டுகெதர் முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். அதற்கான புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
இப்படி இருவரும் மகிழ்ச்சியாக இருந்த போது, லலித்குமாருக்கு வேலை பறிபோனதால், அவரின் பணவரவு குறைந்துள்ளது. இதனால் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பணம் இல்லாததால், நிலானிக்கும், லலித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நிலானி மதுரவாயில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அப்போது பொலிசார் இருவரை அழைத்து சமரசமாக பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின் பாரதிராஜாவின் அமைப்பில் சேர்ந்த நிலானியின் செயல்பட்டால் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் நிலானிக்கு புதிய ஆண் நண்பரின் பழக்கமும் கிடைத்துள்ளது. இதை அறிந்த லலித், நிலானியிடம் கேட்ட போது மீண்டும் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே நிலானி மயிலாப்பூரில் உள்ள காவல் நிலையத்தில் லலித் தன்னை தொந்தரவு செய்வதாக புகார் அளித்துள்ளார்.
சம்பாதித்த பணத்தை எல்லாம் நிலானியின் அழகில் மயங்கி கொட்டித்தீர்த்த லலித்குமார் தன் மீது அவர் புகார் கொடுத்துவிட்டதால் செய்வதறியாமல் தவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நிலானியை மறக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் பொலிசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.
தெலுங்கானாவில் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரணய் குமார் (23) என்ற இளைஞருக்கும் மாருதி ராவ் என்பவரின் மகள் அம்ருதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
பிரணய் குமார் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதி, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் இதை மீறி பிரணயும், அம்ருதாவும் ரகசிய திருமணம் செய்து தனியாக வாழ்ந்தனர்.
இந்நிலையில் கர்ப்பமான அம்ருதாவை, பிரணய் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர் பிரணயை மருத்துவமனை வாசலில் வெட்டி கொன்றார்.
இந்நிலையில், தனது தந்தை மாருதியும், உறவினர் ஷரவன்குமாரும் இந்த படுகொலைக்கு காரணம் என அம்ருதா பொலிசில் வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே, இந்த கொலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முன்னாள் எம்.எல்.ஏ வெமுலா வீரேஷமுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக, அம்ருதா தற்போது தெரிவித்துள்ளார்.
அம்ருதா கூறுகையில் வெமுலா வீரேஷம் என்னையும், என் கணவரையும் பலமுறை தொலைபேசியில் அழைத்து பிரிந்துவிடும்படி மிரட்டினார்.
அவர் தான் என் தந்தை பேச்சை கேட்டு கூலிப்படையை ஏவி என் கணவரை கொலை செய்துள்ளார் என கூறியுள்ளார்.
வவுனியா வர்த்தக சங்கம், இலங்கை மத்திய வங்கி ஊடாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வவுனியா வர்த்தகர்களின் நன்மை கருதி ”புதிய வரி விதிப்பு முறை தொடர்பான அறிவூட்டல் கருத்தமர்வு” வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (18.09.2018) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தலமையில் இடம்பெற்ற இக் கருத்தமர்வில் வளவாளர்களாக இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் பந்துள, உதவி ஆணையாளர்களான திருமதி தயாகரன், திரு சிவபாலன், இலங்கை மத்திய வங்கி முகாமையாளர் திருமதி ஜெயரூபி, வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், வவுனியா மாவட்ட கணக்காளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முற்றுமுழுதாக தமிழ் மொழியில் இக் கருத்தரமர்வு இடம்பெற்றதுடன் வரி செலுத்துதல் தொடர்பான விளக்கங்கள் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது. வர்த்தர்களும் பல்வேறு வினாக்களை வளவாளர்களிடம் தொடுத்தனர்.
80க்கு மேற்பட்ட வர்த்தகர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவியின் ஆபாச காணொளியை இணையத்தில் வெளியிட்ட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் பிரிவு மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினால் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி பதிவிட்டு அதனை இணையத்தில் வெளியிட்டமை தொடர்பில் 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்ட மாணவன், குறித்த மாணவியை தொடர்ந்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அச்சுறுத்தியுள்ளார்.
குறித்த மாணவனுடன், 16 வயதான மாணவிக்கு காதல் தொடர்பு காணப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலியான மாணவியை மீண்டும் மீண்டும் தனிப்பட்ட அறைக்கு வருமாறு மாணவன் அழைத்துள்ளார். எனினும் அதற்கு மாணவி மறுத்தமையினால் அந்த காணொளியை மாணவன் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 165. 14 ரூபாவாக பதிவாகியுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 161.81 ரூபாவா பதிவாகியிருந்தது.
இதேவேளை, இலங்கை வரலாற்றில் அதிக பட்சமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 165 ரூபாவாக வீழ்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா இலங்கை போக்குவரத்து சபையினரினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (18.09.2018) காலை 5.30 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது.
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று முன் தினம் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்தின் நடத்துனர், சாரதி மற்றும் பேரூந்தின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இவ் தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பேரூந்து நடத்துனர் எஸ்.தயாபரன் (வயது 28) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்தனர்.
எனினும் தனியார் பேரூந்தின் உரிமையாளரினை கைது செய்யுமாறு கோரியும் வவுனியா புதிய பேரூந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் எமக்கு பாதுகாப்பில்லை , தூர சேவை பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பணிப்புறக்கணிப்பினை நேற்றைய தினம் (17.09.2018) இ.போ.சபையின் வவுனியா , முல்லைத்தீவு , களவாஞ்சிக்குடி ஆகிய சாலைகள் ஈடுபட்டிருந்தன.
தனியார் பேரூந்தின் நடத்துனர், சாரதியினை நேற்றையதினம் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 01.10.2018 வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந் நிலையில் நேற்றையதினம் இ.போ.சாலைக்கு வவுனியா , மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரம தலமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டு ஊழியர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.
பணிப்புறக்கணிப்பினை கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் விரைவில் தனியார் பேரூந்தின் உரிமையாளரை கைது செய்வதாக வவுனியா , மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரம தெரிவித்திருந்தார். கைது செய்யும்வரை தாங்கள் பணிப்புறக்கணிப்பினை தொடர்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் குறித்த தனியார் பேரூந்தின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம் சரனடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக நாங்கள் பணிக்கு திரும்புவதாகவும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பணிப்புறக்கணிப்பினை தொடர்வதாகவும் இ.போ.சபையின் இணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று (18.09.2018) காலை 5 மணியளவில் இ.போ.ச சாரதி மீது மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மதீனா நகரிலிருந்து வவுனியா இ.போ.ச சாலைக்கு கடமைக்காக மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் போக்குவரத்து சபையின் தலைவரும் வவுனியா சாலையின் சாரதியுமான ஏ.ஆர் பசிர் (வயது 34) மீது பூந்தோட்டம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் வழிமறித்து தனியார் பேரூந்துக்கு எதிராகவா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றாய் என தெரிவித்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த நிலையில் குறித்த இ.போ.ச ஊழியர் அவர்களிடமிருந்து தப்பித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவ தொடர்பான முறைப்பாடுகளை வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா – ஓமந்தையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த 53 வயதான முத்தையரெட்டி கணபதிப்பிள்ளை கைது செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் கோயில் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் கார் ஒன்று மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த காரை செலுத்திய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட மூன்று பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் யோகரத்தினம் இசைஞானவதி (வயது-52), காண்டீபன் ஜமுனாரஞ்சினி (வயது-32), காண்டீபன் டிசாலினி (வயது-12), சுவீடனின் வசிக்கும் கமலநாதன் சிவரஞ்சனி (வயது-30) ஆகியோரே உயிரிழந்தனர்.
சுவீடனைச் சேர்ந்த சிவரஞ்சியின் கணவர் கமலநாதன் (வயது-35), அவரது மகளான க.ஜெசிக்கா (வயது-7) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவை பிறப்பிடமாக கொண்ட இவர்கள் கடந்த ஜூலை மாதம் சுவீடனில் இருந்து தாயகம் வந்துள்ளனர். கிளிநொச்சியிலுள்ள உறவினர்களை பார்க்கச் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவை நிலமட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளது. வேனில் பயணித்தவர்கள் சந்திக்கச் சென்ற உறவுப் பெண், ரயில் கடவையை வேனில் நெருங்கிய சமயத்தில், அதற்கு எதிரே நின்று ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார். எனினும் சாரதி அதனை கவனிக்காமல் வாகனத்தை செலுத்தியுள்ளார்.
எனினும் கணப்பொழுதில் கோர விபத்து ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் அருகில் வருவதை அவதானித்த சாரதி மற்றும் தந்தையும் மகனும் வாகனத்தை விட்டு பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.
இதேவேளை விபத்தின் போது வாகனத்தில் இருந்து பாய்ந்து உயிர் தப்பிய சிறுவன் சாட்சியம் அளித்துள்ளார்.
அதில், ரயில் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை தொடர்ந்தும் செலுத்தியமையினால் விபத்து ஏற்பட்டது. இதன்போது தான் கதவை திறந்து பாய்ந்து தப்பியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ரயில் தண்டவாளத்தில் ரயிலுக்கு அருகில் எந்தவொரு வாகனமும் பயணிக்கும் போது, வாகனத்தின் இயந்திரம் செயலிழக்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ரயிலிலுள்ள காந்தபுலம், வாகனத்தின் மைக்ரோ பவரை செயலிழக்க செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தும் அவ்வாறான முறையிலேயே நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தின் குறுக்காக சென்ற வாகனம் செயலிழந்து அப்படியே நின்றுள்ளது. இதன் காரணமாக கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சாரதியினால் திட்டமிட்ட வகையில் இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தின் கோவையில் இரண்டாவதும் கருவுற்ற மனைவியை கருவை கலைக்க வலியுறுத்தி துன்புறுத்திய கணவன் மீது பொலிசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருபவர் பூபதி. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சுதா என்பவரை திருமணம் முடித்துள்ளார்.
இவர்களுக்கு பத்து வயதில் ஜாக்லின் ரிஷியா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கணவன் – மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
திருமணம் நடந்ததில் இருந்து பூபதி வரதட்சணை கேட்டு, மனைவியை கொடுமைப்படுத்துவதால் இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாக பூபதியும் அவர் மனைவியும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக மருத்துவரிடம் சென்ற சுதா, அவர் கருவுற்றதை தெரிந்துக்கொண்டார். இதனை தன் கணவர் பூபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் பூபதிக்கு தன் மனைவி இரண்டாவது முறையாக கருவுற்றதில் விருப்பமில்லை. இதனால் தன் மனைவியை கருவை கலைக்குமாறு பூபதி வற்புறுத்தியுள்ளார்.
மேலும் கருவை கலைத்துவிடு அல்லது 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கூறி மனைவி சுதாவை கடுமையாக பூபதி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த சுதாவின் உறவினர்கள் பந்தயசாலை காவல் நிலையத்தில் பூபதி மீது புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக பேசிய சுதாவின் உறவினர்கள், பூபதி தாக்கியதில் அவரது மனைவி சுதா கடுமையாக பாதிக்கப்பட்டு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் வரதட்சணை கேட்டு பூபதியும், அவரது தாயார் குப்பாயியும் கொடுமைபடுத்துவதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரோட்டில் பட்டப்பகலில் நபர் ஒருவர் மிருகம் போன்று சீறிப்பாய்ந்து சிறுவன் மற்றும் இளைஞரை கொடூரமாக கடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதியம் சுமார் 3.30 மணியளவில் தள்ளாடியபடி போதை ஆசாமி ஒருவர் சிறுவனை நோக்கி வந்திருக்கிறார். திடீரென சிறுவன் மீது பாய்ந்த அந்த ஆசாமி, சிறுவனை கீழே தள்ளிவிட்டு கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் கடித்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள், ஓடிவந்து அந்த போதை ஆசாமியை நையப் புடைத்து, அவனிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றியியுள்ளனர். சிறுவனின் உடலில் இருந்து ரத்தம் கொட்டியதைக் கண்டு கோபமடைந்த பொதுமக்கள், ஆத்திரம் தாங்காமல் அந்த ஆசாமியை விரட்டிப் பிடித்து அடித்துள்ளனர்.
இதனால் மயக்கம் அடைந்தது போல நடித்த அந்த நபர், திடீரென எழுந்து, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவரை கீழே தள்ளி கடிக்க ஆரம்பித்தார். இதனைப் பார்த்து சுற்றி நின்றிருந்த கூட்டம் தெரித்து ஓடியது.
ரகளை செய்த அந்த நபர், மதுபானத்தோடு வேறு சில போதை வஸ்துக்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தெலுங்கானாவில் மகள் கலப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கொலை செய்ய கூலிப்படைக்கு கொடுத்த பணத்தொகையின் மதிப்பு வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (22). இவரும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும், பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
பிரனய்குமார் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர் என்பதால், அம்ருதா வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.
தொடர்ந்து அவர்களுக்கு கொலை மிரட்டல் வந்துகொண்டே இருந்ததால், இருவரும் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர்.
இதற்கிடையில் அம்ருதா 5 மாத கர்ப்பிணியாக இருந்ததால், சொந்த ஊரான மரியாளகுடாவிற்கு இருவரும் வருகை தந்துள்ளனர். அங்கு மருத்துவனையில் பரிசோதனை மேற்கொள்ள சென்றுள்ளனர். உடன் பிரனய்குமார் அம்மாவும் சென்றிருக்கிறார்.
பரிசோதனை முடிந்து வெளியில் வந்த பொழுது கூலி படையை சேர்ந்த 2 பேர் பிரனய்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பிரனய்குமார் உயிரிழந்தார்.
இந்தியாவையே அதிரவைத்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொள்ள ஆர்மபித்தனர். அதில் அம்ருதாவின் தந்தை மற்றும் அவருடைய சித்தப்பா ஸ்ராவன் ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், சித்தப்பா ஸ்ராவன் மற்றும் குற்றவாளிகள் அப்துல்பாரி, ஷதி ஆகியோரை கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கர்ப்பிணி மகளின் கணவரை கொலை செய்ய ரூ.1 கோடி வரை பேரம் பேசியிருப்பது தெரியவந்தது.
மேலும், பிரனய்குமார் வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது, 20 நாட்களாக குற்றவாளிகள் நோட்டமிட்டிருப்பது தெரியவந்தது.
இதற்கிடையில் அம்ருதாவிற்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் ஜோதி கூறுகையில், அம்ருதாவின் வயிற்றில் வளரும் குழந்தை பிறக்கக் கூடாது. கருவிலேயே அழித்துவிட வேண்டும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன் என்றார். ஆனால் நான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.
கொலை செய்ததற்கான காரணம் குறித்து அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், என்னுடைய மகள் வேறு ஜாதியை சேர்ந்த பையனை திருமணம் செய்துகொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னால் அதனை ஜீரணிக்கவும் முடியவில்லை. எனக்கு மானம், மரியாதை தான் முக்கியம். அதனால் தான் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.
கணவர் இறந்தது பற்றி கர்ப்பிணி அம்ருதா கூறுகையில், பிரனய் இல்லாமல் என்னால் வாழ முடியாது. ஆனால் என்னுடைய குழந்தைக்காக நான் வாழ விரும்புகிறேன். என் நிலைமையை போல யாருக்கும் இனி ஏற்பட கூடாது. இனிமேல் நான் சாதி அமைப்புகளுக்கு எதிராக போராடுவேன் என தெரிவித்துள்ளார்.