இந்தியாவின் தெலுங்கானாவில் கொலை செய்யப்பட்ட ப்ரனாய் என்ற இளைஞரின் மாமனார் தனது மகளிடம் பேசிய விடயம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரனாய் என்ற இளைஞர் தான் காதலித்து வந்த அம்ருதா என்ற உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
கர்ப்பமாக இருந்த அம்ருதா ப்ரானாயுடன் மருத்துவமனைக்கு சென்ற நிலையிலேயே ப்ரானாய் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் மற்றும் அவரின் சகோதரர் ஷரவன் ஆகிய இருவர் தான் கூலிப்படையை வைத்து ப்ரானாயை கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரானாய் – அம்ருதா திருமணம் செய்து கொண்ட வீடியோவை அம்ருதா பேஸ்புக்கில் முன்னர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் திருமணத்துக்கு பின்னர் அம்ருதாவை அவரின் தந்தை மாருதி மிரட்டியுள்ளார்.
அதாவது, உன் கணவரை நீ திருமணம் செய்த வீடியோ பேஸ்புக்கில் வாங்கும் லைக்குகளை விட, அவர் கொலை செய்யப்படும் வீடியோ தான் அதிக லைக்குகள் வாங்கும் என மிரட்டியுள்ளார். இதை அமிர்தாவே தற்போது கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள், கண் பார்வை குறைபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பால்கா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஆசிப் ஷேக், சித்திக் ஷேக். 25 வயதான இரட்டையர்களுக்கு பிறந்தது முதலே பார்வை குறைபாடு இருந்துள்ளது.
நாளடையவில் வயது முதிர்ச்சி அடையும்போது கண்பார்வை மேலும் குறைவடைந்துள்ளது. இதனால் மனதளவில் பாதிப்படைந்த இரட்டையர்கள் நேற்றைய தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் Veraval Bharat Koli கூறுகையில், ஆசிப், சித்திக் இருவரும் வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் தான் உறங்கி வந்துள்ளனர்.
கண் பார்வை குறைபாடு காரணாமாக சித்திக் வீட்டிலிருந்து வெளியில் கூட செல்ல தயக்கம் காட்டி வந்துள்ளார். அதேசமயம் ஆசிப் சமீபத்தில் கிடைத்த வேலையை கூட இந்த காரணத்தால் விட்டு வந்துள்ளார்.
இதனால் இருவரும் அதிக மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
நேற்று காலை அவர்களுடைய மருமகன் நீண்ட நேரமாகியும் மாடியில் சத்தம் கேட்காததால், சந்தேகமடைந்து அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்த்திருக்கிறான். அப்பொழுது சித்திக் தூக்கில் தொங்கியவாறும், ஆசிப் படுக்கையில் சடலமாகவும் கிடப்பதையும் பார்த்து தான் எங்களுக்கு தகவல் கொடுத்தனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் இருவரும் வெவ்வேறு விதமாக இறந்து கிடந்ததால், பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை அதிர வைத்துள்ள அரியாணா பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாணா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று கோச்சிங் வகுப்பு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 இளைஞர்கள் வழி மறித்து கடத்திச் சென்றனர்.
கிராமத்தில் யாரும் இல்லாத வயல்வெளியில் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்
சசுய நினைவு இழக்கும் வரையில் அந்த மாணவியை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் பின்னர் அவரை பேருந்து நிறுத்தம் ஒன்றில் கீழே தள்ளிவிட்டு காரில் தப்பியோடி விட்டது.
தற்போது அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலியல் பலாத்கார சம்வத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மணிஷ், நிஷூ மற்றும் பங்கஞ் மூன்று பேரின் புகைப்படத்தை அம்மாநில காவல்துறையினர் வெளியிட்டனர்.
அதில் பங்கஞ் என்பவர் ராணுவ வீரர். இந்தநிலையில் பாலியல் வன்கொடுமையில் முக்கியக் குற்றவாளிகளில் 3 பேரில் ஒருவரை ஹரியாணா பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்,
அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில் முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய திட்டம் வகுத்துள்ளார் நிஷூ. மேலும் தனக்குத் தெரிந்த மருத்துவர் சஞ்சீவ்க்கு சொந்தமான வயலில் உள்ள அறையின் சாவியைப் பெற்றுள்ளார்.
பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியைக் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதனால் பயந்துபோய் அந்த மாணவியை காரில் கொண்டு போய் கீழே போட்டுவிட்டு தப்பித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் தொடர்பான தகவல் அவருக்குத் தெரிந்திருந்தும் மறைத்த குற்றத்துக்காக அவர் மருத்துவர் சஞ்சீவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தாயாரின் கண்முன்னே மனைவியை வாளால் வெட்டி கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் மனைவியை கொடூரமாக கொலை செய்த சாஜு என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கலூர் பகுதியில் தாயாருடன் வாடகை குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வந்த ஷீபா உடன் கணவர் சாஜு கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக கோபமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து குடியிருப்புக்கு திரும்பிய சாஜு, மீண்டும் மனைவியுடன் வாக்குவாதத்தி ல் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சாஜு வீட்டில் இருந்து வாள் பொன்ற கத்தியால் மனைவி ஷீபாவை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்து நின்ற ஷீபாவின் தாயாரும் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அச்சத்தில் வெளியேறிய சாஜு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற முயன்றுள்ளார்.
இதனிடையே ஷீபாவின் அழுகை குரல் கேட்டு உதவிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷீபாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷீபா மரணமடைந்துள்ளார். இதனிடையே ஷீபாவின் கணவரை மருத்துவமனையில் வைத்தே பொலிசார் கைது செய்துள்ளனர்.
குடும்ப பிரச்னை காரணமாகவே மனைவியை கொலை செய்ததாக சாஜு பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிளிநொச்சி – கரடிபோக்கு சந்திக்கு அண்மையில் உள்ள பண்ணை ஒன்றுக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறிகண்டிப் பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மினி பஸ் ஒன்று பண்ணைப் பகுதியாக செல்லும் போது, திடீரென குறுக்கே வந்த மாடு ஒன்றுடன் மோதி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ஒன்றுடனும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிள் சாரதியின் நிலையே கவலைக்கிடமாக இருப்பதாகவும், மாடு ஒன்று உடல் சிதறி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் மற்றும் நெடுந்தீவு மேற்கை சேர்ந்தவர்கள் யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன் சாட்சியமளித்துள்ளார்.
அந்த சாட்சியத்தில் “புகையிரதம் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை செலுத்தினார்” என்ற அதிர்ச்சி தகவலை சிறுவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த நிலையிலேயே தான் கதவை திறந்து பாய்ந்து தப்பியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று காலை காரொன்று, புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதேவேளை விபத்தில் படுகாயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த சிறுவன் ஆகிய இருவரும் காரிலிருந்து பாய்ந்து எவ்வித காயங்களுமின்றி உயிர்பிழைத்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது.
சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக நிர்வாண விருந்து இடம்பெற்றுள்ளதாக அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“டீப் ஜன்கல் பெஸ்டிவல் – ஸ்ரீலங்கா” என இந்த விருந்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. விருந்தில் பங்கேற்கும் அனுமதி சீட்டு இணையம் ஊடாகவும் விருந்தில் நுழையும் வளாகத்திலும் வழங்கப்பட்டுள்ளது.
பாரிய காடு ஒன்றுக்குள் மிகவும் நுட்பமான வகையில் அனைத்து வசதிகளுடனும் இந்த விருந்து நடத்தப்பட்டுள்ளது.
குறித்த விருந்தில் கலந்து கொள்ளும் நபர் ஒருவருக்கு, நாளைக்கு முப்பதாயிரம் ரூபா என்ற கணக்கில் 3 நாட்களுக்கு 90 ஆயிரம் ரூபா அறிவிடப்பட்டுள்ளது.
விருந்திற்கு போதுமான நீர் வசதி இருக்கவில்லை. குடிநீர் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும், மின் பந்தங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விருந்திற்கு வந்தவர்கள் தங்குவதற்காக சில குடிசைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் கலந்து கொண்ட இந்த விருந்து தொடர்பில் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனங்களை அவதானித்து, அதனை பின் தொடர்ந்த பொலிஸார் சம்பவ இடத்தை நெருங்கியுள்ளனர்.
அதிகாலை 1 மணியளவில் விருந்து நடைபெற்ற பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அங்கு ஆயிரத்திற்கும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு யுவதிகள் மற்றும் இளைஞர்களை நிர்வாணமாக இருந்துள்ளனர்.
அத்துடன் 3000க்கும் அதிகமான மதுபான போத்தல் மற்றும் 1500 பியர் டின்களும் மீட்கப்பட்டுள்ளன. பெருந்தொகை ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளும் அதிகளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற பாரிய ஆபாச களியாட்ட நிகழ்வாக இதனை கருத முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – ஓமந்தையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த 53 வயதான முத்தையரெட்டி கணபதிப்பிள்ளை கைது செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் கோயில் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் கார் ஒன்று மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த காரை செலுத்திய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட மூன்று பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் யோகரத்தினம் இசைஞானவதி (வயது-52), காண்டீபன் ஜமுனாரஞ்சினி (வயது-32), காண்டீபன் டிசாலினி (வயது-12), சுவீடனின் வசிக்கும் கமலநாதன் சிவரஞ்சனி (வயது-30) ஆகியோரே உயிரிழந்தனர்.
சுவீடனைச் சேர்ந்த சிவரஞ்சியின் கணவர் கமலநாதன் (வயது-35), அவரது மகளான க.ஜெசிக்கா (வயது-7) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவை பிறப்பிடமாக கொண்ட இவர்கள் கடந்த ஜூலை மாதம் சுவீடனில் இருந்து தாயகம் வந்துள்ளனர். கிளிநொச்சியிலுள்ள உறவினர்களை பார்க்கச் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவை நிலமட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளது. வேனில் பயணித்தவர்கள் சந்திக்கச் சென்ற உறவுப் பெண், ரயில் கடவையை வேனில் நெருங்கிய சமயத்தில், அதற்கு எதிரே நின்று ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார். எனினும் சாரதி அதனை கவனிக்காமல் வாகனத்தை செலுத்தியுள்ளார்.
எனினும் கணப்பொழுதில் கோர விபத்து ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் அருகில் வருவதை அவதானித்த சாரதி மற்றும் தந்தையும் மகனும் வாகனத்தை விட்டு பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.
இதேவேளை விபத்தின் போது வாகனத்தில் இருந்து பாய்ந்து உயிர் தப்பிய சிறுவன் சாட்சியம் அளித்துள்ளார்.
அதில், ரயில் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை தொடர்ந்தும் செலுத்தியமையினால் விபத்து ஏற்பட்டது. இதன்போது தான் கதவை திறந்து பாய்ந்து தப்பியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ரயில் தண்டவாளத்தில் ரயிலுக்கு அருகில் எந்தவொரு வாகனமும் பயணிக்கும் போது, வாகனத்தின் இயந்திரம் செயலிழக்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ரயிலிலுள்ள காந்தபுலம், வாகனத்தின் மைக்ரோ பவரை செயலிழக்க செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தும் அவ்வாறான முறையிலேயே நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தின் குறுக்காக சென்ற வாகனம் செயலிழந்து அப்படியே நின்றுள்ளது. இதன் காரணமாக கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சாரதியினால் திட்டமிட்ட வகையில் இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கின் புகையிரதத் கடவைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துக்களுக்கு புகையிரதத் திணைக்களத்தின் அசமந்தமே காரணம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியா, ஒமந்தை, பன்றிகெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதத் கடவையை கடந்து சென்ற கார் ஒன்றின் மீது யாழில் இருந்து வந்த புகையிரதம் மோதியதில் நான்கு பெண்கள் மரணமடைந்திருந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர்.
இச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் அண்மைக்காலமாக புகையிரத விபத்துக்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக வவுனியா ஓமந்தைக்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள புகையிரதக் கடவைகளில் பல விபத்துக்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இப் பகுதிகளில் உள்ள பல புகையிரதக் கடவைகள் பாதுகாப்பற்ற கடவைகளாக இருப்பதுடன், புகையிரதக் கடவைகளில் கடவை காப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதன் ஊடாக பயணிப்போர் புகையிரதத்தில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகின்றனர்.
தற்போது வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து கூட பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் பயணித்த காரே விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பகுதி ஊடாக பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் தினமும் பல நூற்றுக்கணக்கில் பயணிக்கும் நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை ஒன்றை அமைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைவிட்டு வந்ததுடன், அதனை நானும் புகையிரதத் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.
மாவட்டத்தில் இடம்பெற்ற பல ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன்.
குறிப்பாக கடந்த 3 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தேன். இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், எந்தவித நடவடிக்கையும் புகையிரதத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படாத நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மரணித்த உறவுகளுக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்து கொள்வதுடன், இவ்வாறான விபத்துக்களை இனிவரும் காலங்களில் தடுக்கும் வகையில் புகையிரதத் திணைக்களம் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைப்பதுடன், புகையிரதக் கடவைகளுக்கு நிரந்தமாக கடவைக் காப்பாளர்களையும் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், ஏ9 வீதியிலும் அண்மைகாலமாக விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸ் திணைக்களம் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் புதிய திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி அநாவசியமான உயிரிழப்புக்களை தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (17.09.2018) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா புதிய பேரூந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் எமக்கு பாதுகாப்பில்லை, தூரசேவை பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி கோரியும் நேற்றைய தினம் தனியார் பேரூந்து சங்க ஊழியர், உரிமையாளரினால் இ.போ.ச நடத்துனர் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச, தனியார் ஊழியர்கள் பருவகால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேரூந்துகள் அதிகளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பன்றிகெய்தகுளத்தில் நேற்று (16.09.2018) காலை புகையிரதத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாகனத்தின் சாரதி மற்றும் வாகனத்தின் பயணித்த சிறுவன் ஒருவர் எவ்வித காயங்களுமின்றி உயிர்பிழைத்துள்ளனர்.
இவ் விபத்தில் சுவீடன் நாட்டின் பிரஜையான கமலநாதன் சிவரஞ்சனி (வயது-30) , நெடுந்தீவு மேற்கை சேர்ந்த காண்டீபன் யமுனா ரஞ்சனி (வயது-32) , இசை ஞானவதி யோகரத்னம் (வயது-56) , காண்டீபன் டிசாலினி (வயது-13) ஆகியோரே உயிரிழந்ததுடன் சுவீடன் நாட்டின் பிரஜையான ஜேம்ஸ் கமலநாதன் ( வயது-34) , கமலநாதன் ஜெசிகா (வயது-6) ஆகிய இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகையிரதம் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை செலுத்தினார். கதவை திறந்து பாய்ந்து தப்பினேன் என விபத்திலிருந்து தப்பிய சிறுவன் சாட்சியம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் விபத்து தொடர்பாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை – இந்திய மகளிர் அணிகளுக்கான இறுதி கிரிக்கெட் போட்டி நேற்று கட்டுநாயக்கவில் நடைபெற்ற போது 5 இந்தியர்களை மைதானப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவர்களின் சந்தேகமான செயற்பாடுகளே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்பின்னர் அவர்கள் 5 பேரும் விசாரணைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்றைய ஆட்டத்தின்போது இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் இந்திய மகளிர் அணியை தோற்கடித்திருந்தது.
இதேவேளை கடந்த மாதம் இந்திய மற்றும் பாகிஸ்தானியர்கள் சிலர் இவ்வாறு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக இ.போ.சபை – தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கரைப்பற்று செல்லும் பயணிகள் நீண்டநேரம் பொலிஸ் நிலையத்தில் காவல் நின்று அவதிக்குள்ளாகினர்.
இன்று மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த இ.போ.சபை பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக தரிந்து நின்று பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டிருந்த போது தனியார் பேரூந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் குறித்த இ.போ.சபை பேரூந்தை நிறுத்தியமை மற்றும் குறித்த நேரத்துக்கு முன்னதாக இ.போ.சபை பேரூந்து வருகை தந்து தரித்து நின்றதாக தெரிவித்து முரண்பட்டனர்.
இதன்போது வவுனியாவில் இருந்து அக்கரைப்பற்று செல்வதற்கு தயாராகவிருந்த குறித்த சாரதியின் தனியார் பேரூந்தை இ.போ.சபை பேரூந்துக்கு முன்னால் சென்று பயணிகளை ஏற்றும் வகையில் நிறுத்தினர். இதன்போது இரு பேரூந்துகளும் முட்டிக் கொண்டதில் தனியார் பேரூந்தின் பக்க கண்ணாடி உடைந்ததுடன், சாரதி நடத்தினர்களுக்கிடையில் கைகலப்பும் ஏற்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு பேரூந்துகளையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்துள்ளனர்.