வவுனியா புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை இளைஞன் ஒருவரைக் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (16.09) அதிகாலை 4 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வந்த புகையிரதத்தில் 19 கிலோ 265 கிராம் கேரள கஞ்சாவினை பொதி செய்து எடுத்து வந்த வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் ஒருவரையே கைது செய்துள்ளதாகவும்,
கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு கஞ்சாவினை எடுத்து வந்ததாகவும் பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்தாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கீழே விழுந்த போது அவன் முகத்தில் குத்திய முள்கரண்டி பின் கழுத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தத போதும், அவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளான்.
அமெரிக்காவைச் சேர்ந்த சேவியர் கன்னிங்கம் என்ற 10 வயது சிறுவன் மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக கீழே விழுந்தான்.
அப்படி கீழே விழுந்த போது, கிழே இருந்த இறைச்சிகளைக் குத்தி சாப்பிட பயன்படுத்தப்படும் முள் கரண்டி மூக்குக்கு மேல் குத்தி பின் கழுத்து வழியாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
இதனால் வலியால் துடித்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு சிறுவனுக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடித்தனர்.
அதில், உடலின் ஒரு பக்கத்தில் குத்தி மறுபக்கத்தில் வெளியே வந்த கரண்டி, அவனது மூளையையோ, முதுகுத் தண்டையோ, கண் பகுதியையோ, முக்கிய நரம்புகள் எதையுமோ சீண்டவே இல்லை.
நூலிழையில் எதையும் தொட்டுக் கொள்ளாமல் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர் பிழைத்து, தற்போது குணமடைந்து வருகிறான். இவன் நிச்சயம் கோடியில் ஒருவன் என்று ஆச்சரியத்தோடு கூறியுள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு, தனியாக கேளிக்கை விடுதியில் நடனமாடி மகிழ்ந்த வீடியோவினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த Charlotte Teeling (33) என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு, Kingstanding பகுதியிலுள்ள Richard Bailey என்பவரின் வீட்டில் நிர்வாணமாக இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இரண்டு குழந்தைகளுக்கு தாயான Teeling சம்பவத்தன்று, அறிமுகமில்லாத Richard என்பருடன் உறவு வைத்துக் கொள்ளும்போது தான் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து Richard-ஐ கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிக்கு 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் Teeling தனியாக நடனமாடி கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமணத்தின் போது திடீரென புயல் தாக்கியதால், திருமண அரங்கு முழுவதும் கூடியிருந்த உறவினர்கள் அச்சத்தில் பயந்து ஓடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Randy Manaois (29) மற்றும் அவருடைய தோழி Jennifer (28)-க்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின்னர் பூங்கோத்தை தூக்கி வீசிவிட்டு, நடனமாட புதுமண தம்பதியினர் ஆயத்தமாகினர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும்போது, பலமான ஒரு சத்தம் கேட்டது.
உடனே விளக்குகள் அனைத்தும் அணைந்து, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் அலறும் சத்தம் கேட்டது.
இந்த சம்பவம் குறித்து மணமகன் Randy கூறுகையில், எங்களுடைய திருமண நிகழ்வின் போது, இப்படியொரு புயல் தாக்கம் ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
திடீரென விளக்குகள் அனைத்தும் அணைந்து, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைத்துக்கொண்டு கீழே விழுந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
இந்த அசம்பாவிதத்திற்காக, திருமணத்திற்கு வந்த உறவினர்களிடம் நான் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
அந்த சம்பவத்திலிருந்து என்னுடைய மனைவி இன்னும் மீண்டு வர முடியாமல் பயத்திலே உறைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் குடிப்பதற்கு பணம் தராததால் தந்தையை குத்திக் கொன்றதாக மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த, கல்குறிச்சி தேவேந்தர் காலணியை சேர்ந்தவர் பெரியசாமி. ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
பெரியசாமி குடிபோதையில் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிமேகலை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தந்தை வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றுள்ளார்.
இதன் காரணமாக பெரியசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை பெரியசாமி தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரியசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பெரியசாமியின் மகன் அஜித்திடம் பொலிசார் விசாரணை நடத்தியதில், தனது தந்தை அடிக்கடி குடும்பத்தகறாரில் ஈடுபட்டு வந்ததாலும், முந்தைய தினம் இரவு குடிப்பதற்கு தான் பணம் கேட்டபோது தராததாலும் உண்டான ஆத்திரத்தால் கத்தியால் குத்திக் கொன்றதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அஜித்தை கைது செய்த பொலிசார் இந்த கொலை வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியை சேர்ந்த இளைஞர், தன்னுடைய காதலி ஏமாற்றிவிட்டதால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்சியின் காரைப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த யுவராணி என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், யுவராணியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர், இதனால் சசிகுமார் யுவராணியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக யுவராணி சரியாக பேசாமல் இருந்துள்ளார், அதேவேளை வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் நிச்சயித்துவிட்டனர்.
இதனால் மனமுடைந்து போன சசிகுமார், தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு முன்பாக வாட்ஸ்அப்பில், ஒரு ஆண், ஒரு பெண்ணை மோசம் பண்ணியது தெரிந்தால் அவனுக்கே திருமணம் செய்து வைக்கின்றனர், ஆனால் ஆணை மோசம் செய்துவிட்டால் புகார் கூட எடுக்க மாட்டேங்கிறாங்க, அதனால் நான் சாகப்போகிறேன்.
இது என்னுடைய மரண வாக்குமூலம், இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது, உண்மையாக இருந்தா மட்டும் லவ் பண்ணுங்க, காதலி துரோகம் செய்தால் காதலனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்தில் முடிந்த ப்ரனாய்- அம்ருதா ஜோடியின் காதல் வாழ்க்கை தொடங்கிய 6 மாதத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.
தங்களது 7 ஆண்டுகால காதல் வாழ்க்கையில் இவர்கள் நடத்திய போராட்டம் வீணாகிவிட்டது. தனது கண்ணெதிரிலேயே காதல் கணவரை பறிகொடுத்த கர்ப்பிணியான அம்ருதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
9 ஆம் வகுப்பில் ஆரம்பித்த காதல்
முதன்முதலாக அம்ருதாவை சந்தித்த போது ப்ரனாய் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் படித்த பள்ளியில் அம்ருதா ஜூனியர்.
இருவரது வீடும் இரண்டு தெருக்கள் இடைவெளியில் தான் இருந்தது. இதனால், இருவரும் அடிக்கடி பார்த்துக் கொள்ள முடிந்தது.
இருவரும் மெல்ல, மெல்ல காதல் வயப்பட்டார்கள். பள்ளிப் படிப்பை முடித்த ப்ரனாய் தொழில் நுட்ப அறிவியல் படித்துள்ளார். அம்ருதா ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் இளங்கலை படித்துள்ளார்.
பல வருடங்களாக இருந்த காதல் உறவு 2017ம் ஆண்டு அம்ருதாவின் வீட்டிற்கு தெரிந்திருக்கிறது.
வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் அவரது மாமா, சித்தப்பா என அனைவரும் அம்ருதாவை கடுமையாக அடித்திருக்கிறார்கள். 6 மாதத்திற்கு மேலாக வீட்டுச் சிறையிலே வைத்திருந்திருக்கிறார்கள்.
இறுதியில், வீட்டை விட்டு வெளியேறி அம்ருதா, ப்ரனாய்யை சந்தித்து தனது நிலையை எடுத்து கூறியிருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜியத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருமணம் ஆன கையோடு வெளிநாடு சென்று அங்கேயே செட்டில் ஆக இருவரும் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், அம்ருதா கர்ப்பமானதால் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள்.
கர்ப்பம் தரித்த பிறகு நலகொண்டாவில் உள்ள மருத்துவமனையில்தான் பரிசோதனைக்காக வந்து சென்றிருக்கிறார்கள். அப்படியொரு நாள் பரிசோதனைக்காக வந்த போதுதான் இந்தக் கொடூர கொலை நடந்திருக்கிறது.
ப்ரனாய்யை தனது தந்தைதான் கொலை செய்திருப்பார் என்று அம்ருதா கூறுகிறார். என்னுடைய சொல்படி கேட்கவில்லை என்றால் ப்ரனாய்யை கொன்றுவிடுவேன் என்று எனது தந்தை என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார் என அம்ருதா கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை நிலானி தனது ஆண் நண்பர் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தன்மை திருமணம் செய்து கொள்ளும்படி நண்பர் லலித்குமார் தொந்தரவு தருவதாக நிலானி புகார் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து லலித்குமார் தொந்தரவு தருவதாகவும் நிலானி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இவர் சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சம்பவம் தொடர்பாக படப்பிடிப்பில் பொலிஸ் சீருடையில் இருந்தபடியே, பொலிசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த முதியவரின் தலையை கல்லால் அடித்து சிதைத்து விட்டு, 16 வயது சிறுவன் பணத்தை திருடிக்கொண்டு ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏகாம்பரம் என்ற முதியவர், வேலை செய்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டில் ஏகாம்பரம் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
அப்போது சுவற்றின் மீது ஏறிக்குதித்த 16 வயதுள்ள சிறுவன், கையில் ஒரு பாறாங்கல்லை கொண்டு முதியவரின் தலையில் கொடூரமாக தங்கியுள்ளான்.
இதில் வலி தாங்க முடியாமல் அந்த முதியவர் ‘அம்மா’ என கத்துகிறார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் போதையில் இருந்த அந்த சிறுவன் வேகமாக முதியவரை தாக்கி, அவருடைய சட்டைப்பையில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்கிறான்.
இந்த சம்பவத்தில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பொலிஸார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சமூக வலைதளத்தை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததோடு, குழந்தை, மனைவியை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த கணவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முகமது தாஜூதீன் (29). இவரது மனைவி அன்சுல் பாத்திமா(24). அன்சுல் பாத்திமா முதன்முறையாக கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க கணவர் முடிவு செய்தார்.
இரவு 11.30 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. முகமது தாஜூதீன், யுடியூப்பில் வெளியான ஒரு வீடியோவின் அடிப்படையில் பிரசவம் பார்த்துள்ளார்.
நேற்று அதிகாலை அன்சுல் பாத்திமாவுக்கு 2.8 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காத நிலையில், தாய்க்கு ரத்தப்போக்கு அதிகரித்தது.
தகவலறிந்த ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர் நேற்று காலை வீட்டிற்கு சென்று, தொப்புள் கொடியை பிரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு முகமது தாஜூதீன் சம்மதிக்கவில்லை. 3 நாட்களுக்கு தொப்புள் கொடியை அகற்றக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய, மருத்துவர் இந்திரா ஜெயராமன் சென்று தொப்புள் கொடியை அகற்றக் கோரியுள்ளார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையும், தாயையும் அழைத்து சென்றனர்.
தமிழகத்தில் கண் தெரியாத மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை நரசத்புரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (37). இவருக்கு பத்மா(35) என்ற மனைவியும், பார்வையற்ற பரத்(13) என்ற மகனும் உள்ளனர்.
பரத் அடையாறில் உள்ள பார்வையற்ற பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பரத் அம்மாவுடன் வசித்து வந்துள்ளான்.
இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு படுத்த பரத் அதன் பின் எழுந்திருக்கவில்லை என கூறி அவனை பத்மா அங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, அவர்கள் உடனடியாக உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பரத்தின் சாவில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பத்மாவிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது பத்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகனுடன் தனியாக வசித்து வந்தேன். தனியாக வாழ்ந்து வந்தது மன உளைச்சலாக இருந்தது.
இதனால் மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். இதற்காக பிளாஸ்டிக் கவரை போட்டு பரத்தின் கழுத்தை இறுக்கினேன்.
இதில் அவன் மயங்கினான். பின்னர் நானும் அதை போல் செய்தேன். ஆனால் என்னால் முடியவில்லை.
இதனால் பரத்தை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால் அவன் இறந்துவிட்டான். அங்கு கணவர் மற்றும் குடும்பத்தினர் இருந்ததால் உண்மையை கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தன் கண் முன்னே கணவன் கொடூரமாக வெட்டப்பட்ட காட்சியைக் கண்ட மனைவி, என்னுடைய கருவை நான் கலைக்க விரும்பவில்லை, இது அவர் எனக்க்கு கொடுத்த பரிசு என்று உருக்கமாக கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட ப்ரனாய் என்ற இளைஞர் ஆறு மாதங்களுக்கு பின்னர் பெண்ணின் குடும்பத்தாரால் மனைவி கண்முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காதல் கணவன் ப்ரனய் வெட்டிக் கொல்லப்பட்டதை பார்த்த மனைவி அம்ருதா அதிர்ச்சியில் சுய நினைவை இழந்ததால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ப்ரனாய் இறந்து போனதை முதலில் மருத்துவர்கள் அம்ருதாவிடம் சொல்லவில்லை. தன் கண் முன்னே கணவன் வெட்டப்பட்ட கொடூரக் காட்சியை பார்த்த நேரத்தில் அம்ருதா மயங்கிவிட்டார்.
இதனால் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவரிடம் மருத்துவர்கள் இந்த சம்பவம் குறித்து சொல்லவில்லை. இன்று கணவர் இறந்த விடயத்தை மருத்துவர்கள் அவரிடம் கூறியுள்ளனர்.
அப்போது கணவனை நினைத்து கண்ணீர்விட்ட அம்ருதா, இதை நிச்சயமாக என்னுடைய தந்தை தான் செய்திருப்பார் என்று கூறியுள்ளார். அவர் என்னுடைய சொல்படி நீ கேட்கவில்லை என்றால், நான் ப்ரனாய்யை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வந்தார்.
என்னுடைய அலைபேசி எண்ணை என் தந்தை பிளாக் செய்த பின்னர் நான் அவரிடம் பேசவில்லை. கணவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு தான் என் தந்தை எனக்கு மீண்டும் போன் செய்தார்.
நான் போனை எடுக்கவில்லை. ப்ரனய் தாக்கப்பட்ட பிறகு நான் மீண்டும் அவருக்கு போன் செய்தேன். ஆனால், அவர் அலட்சியமாக பேசினார். மருத்துவமனைக்கு செல்வதற்கு முதல் நாளில்தான் எனது அம்மாவிற்கு போன் செய்து ப்ரனய் வீட்டில் நாங்கள் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ததாக கூறினேன்.
இந்தக் கொலைக்கு பின்னால் எனது தந்தையும், மாமாவும்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய கருவை நான் கலைக்க விரும்பவில்லை. ப்ரனய் எனக்கு அளித்துச் சென்ற பரிசாக நினைத்து அந்தக் குழந்தையை காப்பேன். ஒருபோதும் எனது தாய் தந்தையிடம் மீண்டும் செல்லமாட்டேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
அம்ருதா தற்போது மூன்று மாதக் கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண், கணவர் வீட்டாரின் கொடுமை காரணமாகவே இந்த முடிவை எடுத்திருக்கும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
சேலம் ஜங்ஷனை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் புவனேஸ்வரி (24). இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கவுதமன் என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் கவுதமன் எந்த ஒரு வேலையும் இல்லாமல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டிய புவனேஷ்வரி, அவருடன் 2 மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன் பின் அவரை பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கணவர் கவுதமன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக புவனேஷ்வரிக்கு தகவல் கிடைத்ததால், அவரின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார்.
அப்போது, புவனேஸ்வரியின் மாமியார் அவரைத் திட்டி அனுப்பியதால் மனமுடைந்த புவனேஸ்வரி நான்கு நாட்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். புவனேஸ்வரியின் தற்கொலைக்குக் காரணமான கணவர் கவுதமன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புவனேஸ்வரியின் உறவினர்கள் புகார் அளித்திருந்தனர்.
இதில் தற்போது புதிய திருப்பமாக, புவனேஸ்வரி தான் இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், கவுதமனை கைது செய்த பொலிசார், தலைமறைவாக உள்ள மாமியார், மாமனார், கணவரின் சகோதரிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.
முகம் கழுவுவதற்காக நேற்று அதிகாலை கின் கங்கைக்கு சென்ற பஸ் நடத்துனர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலி – பாத்திவல பிரதேசத்தைச் சேர்ந்த சுபுன் பிரசாத் என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் பிட்டிகல – காலி பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மாப்பலகம பிரதேசத்தில் பேருந்தை நிறுத்தி கழுவியுள்ளார்.
அதன் பின் தனது முகத்தை கழுவ கின் கங்கைக்கு சென்றுள்ளார். அங்கு கால் வழுக்கி நதியில் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மாப்பலகம பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணைகளை நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நாகொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் களப்புகளுக்கு அருகில் உள்ள நன்னீர் நிலைகளில் உயிர் வாழும் இறால் வகையான பெரிய இறல்களின் அறுவடை தற்போது கிடைத்து வருகின்றது.
களப்புகளில் இனப்பெருக்கம் செய்யும் இந்த இறால் இனம் நன்னீர் நிலைகளில் உயிர் வாழும்.
இந்த இராட்சத இறால் வகை சுவை மிக்கதாகவும் போஷாக்கு நிறைந்த உணவு எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரணமாக 250 கிராம் முதல் 750 கிராம் எடை கொண்டதாக இருக்கும் இந்த இறால் வகை ஒரு கிலோ கிராம் 1,200 ரூபாய் முதல் 1,400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சிலாபம் – கொழும்பு வீதியில் மஹவெவ – லுணுஓயா மீனவர்கள் இந்த இறால்களை விற்பனை செய்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.