பெண் வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் : வைரலாகும் புகைப்படம்!!

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தலையில் துப்பட்டா, நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படம் டெல்லியில் நடந்த ஹிஜ்ரா விழாவில் எடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் விழுப்புரத்தில் ஆண்டுதோறும் திருநங்கைகள் கலந்து கொள்ளும் கூவாகம் திருவிழா நடக்கும்.

அதே போல விழா தான் டெல்லியில் ஹிஜ்ரா என்ற பெயரில் நடந்துள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் கம்பீருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அதை பெருந்தன்மையுடன் ஏற்று அவர் அங்கு சென்றுள்ளார். கம்பீரின் இச்செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக தம்பதி : இதுவா காரணம்?

அமெரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர், கைக் குழந்தையை சரியாக பராமரிக்கவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் சேலம் மாவட்டம் செட்டூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது மனைவி மாலா. இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

பிரகாஷ் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் புளோரிடாவில் மாகாணத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்களது மகள் ஹிமிஷாவின் இடது கையில் வீக்கம் ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், குழந்தையின் உடல்நிலை மற்றும் பொருட் செலவு குறித்து யோசித்து, மற்றொரு மருத்துவமனையில் ஆலோசனை கேட்க பிரகாஷ் மற்றும் மாலா முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மருத்துவரிடம் ஸ்கேன் எடுக்க வேண்டாம் என்றும், குழந்தையை அழைத்து செல்வதாகவும் பிரகாஷ்-மாலா தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு மருத்துவமனை நிர்வாகமோ, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, குழந்தை பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக பிரகாஷ்-மாலாவை பொலிசார் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பானது குறித்த தம்பதியரின் குழந்தையை கொண்டு சென்றுவிட்டது.

பின்னர், ஒருவழியாக பிரகாஷ் தம்பதி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். எனினும், குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் பிரகாஷின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர்.

ஆனால், தனிப்பட்ட வழக்குகளில் தலையிடுவதில்லை என தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேலத்தில் உள்ள பிரகாஷின் பெற்றோர் தமிழக முதல்வரை சந்தித்து இதுதொடர்பாக மனு அளித்துள்ளனர்.

நாட்டில் கடும் உஷ்னமான காலநிலை : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

இன்று மற்றும் நாளை நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

இதேவேளை, இன்று பிற்பகல் ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தேனிலவின் போது மில்லியன் கணக்கான இதயங்களை கவர்ந்த இளம் மனைவி!!

சீனாவில் தேனிலவுக்கு சென்றபோது இளம் மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய 4 உயிர்களை காப்பாற்றி மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளார்.

26 வயதான Zhou Wei – க்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. Shimen County Red Cross மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் இவர் தனது கணவருடன் தேனிலவு செல்வதற்காக Qinghai பகுதியில் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இவரது கண் எதிரிலேயே இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது,

கொளுந்துவிட்டு எரிந்த அந்த காரில் பயணித்த 8 பேரும் உயிருக்கு போராடினர். இதனைப்பார்த்த இந்த செவிலியர், விரைவாக ஓடிச்சென்று ஒரு காரில் இருந்த நான்கு பேரை வெளியில் மீட்டெடுத்து முதலுதவி அளித்துள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, செவிலியரின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

மில்லியன் கணக்கான இதயங்களை செவிலியர் கவர்ந்துள்ளார். இவரது கணவர், எனது மனைவி மிகவும் தைரியமானவர், அழகானவர் என பதிவிட்டுள்ளார்.

மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய மாணவன் செய்த அசிங்கமான காரியம்!!

உயர்தர வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அந்த காட்சிகளை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படும் உயர் தர வகுப்பு மாணவனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான மாணன், மாணவியை காதலித்து வந்ததுடன் அவரை உணவட்டுன ரூமஸ்வல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அந்த காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர் அந்த காட்சிகளை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த காட்சிகளை பார்த்த மாணவியின் உறவினர் ஒருவர், மாணவியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மாணவனை கைது செய்துள்ளனர்.

இதற்கு அடிமையானதால்தான் குழந்தைகளை கொலை செய்தாரா? சிறைக் கைதிகளிடம் திடுக்கிடும் தகவல்களை கூறிய அபிராமி!!

சென்னை குன்றத்தூரில் கள்ள காதலுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமி தற்போது புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் சக கைதிகளுடன் பேசும் போது குழந்தைகளை கொலை செய்ய காரணமாக இருந்த பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

முயூசிகலியால் தான் நானும் சுந்தரமும் பழக்கமானோம் என்று கூறியுள்ளார். அதே போல சுந்தரம் சொல்லித்தான் என் பிள்ளைகளை கொன்றேன் என்றும் அபிராமி கூறியுள்ளார்.

சுந்தரம் மீது இருந்த காதல் என் கண்ணை மறைத்து விட்டது என்று சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருவதாக கூறப்படுகிறது. கள்ள காதலருக்காக பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்போது புலம்பி என்ன பயன்.

இன்று பலரின் வாழ்க்கையை மாற்றுவதில் சமூகவலைத்தளம் காரணமாக உள்ளது. முயூசிகலிக்கு அடிமையானதால்தான் சுந்தரத்துடன் பழக சந்தரப்பம் கிடைத்துள்ளது. முயூசிகலியும் இந்த சம்பவம் நடக்க காரணமாக அமைந்துள்ளது.

ஒரு வாரம் கழித்து வாருங்கள் உண்மையை கூறுகிறேன் என்று அவரை சந்திக்க வந்த வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். இந்த கருத்து அனைவர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரைக்கும் என்ன உண்மையை மறைத்து வைத்திருந்தார் எதை கூற போகின்றார் என்றும் அனைவர் மத்தியிலும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.

அபிராமி என்ற ஒரு பெண் செய்த இந்த செயல் பல பெண்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பல ஆண்கள் மனைவி மீது உள்ள நம்பிக்கையில் குடும்பத்தையும், குழந்தையையும் விட்டு செல்லுகின்றனர். ஆனால் அபிராமி செய்த செயலினால் பல ஆண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தரம் என்ற தனி நபரை பிரியாணி கடையில் சந்தித்ததன் மூலம் நட்பு மலர்ந்து காதலானதாக முதலில் தகவல் வெளியானது. தற்போது, முயூசிகலியால் தான் சுத்தரத்துடன் நட்பு வந்தது என்ற கருத்து வெளியாகியுள்ளது.

இதில் எது உண்மை என்பது ஒரு புறம் இருக்க இனி குடும்ப பெண்கள் எப்படி சுதந்திரமாக இருப்பது என்ற ஒரு கேள்வி எழுந்தது. புதுமை பெண்ணாக மாறுவது தவறு இல்லை, அவரின் புதுமையும் மாறுதலும் நல்ல விதமாக இருக்க வேண்டும்.

இப்படி ஒரு குடும்பத்தை சிதைக்கும் அளவு சுதந்திரத்தை தவராக பயண்படுத்தி இருக்க கூடாது. 17 வருடமாக உண்மையாக காதலித்த அபிராமியின் கணவரின் நிலை என்ன? உண்மைக்கும் நம்பிக்கைக்கும் அபிராமி கொடுத்த பரிசு சரியானதா? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, இவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக அதிகபட்சமாக இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி மரண தண்டனைதான் அபிராமிக்கு விதிக்கப்பட வேண்டும் என்று பெண்களே வழியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில் மரண தண்டனையை நிறைவேற்ற எதிர்ப்புகள் உள்ளன. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் மரண தண்டனை குறைவுதான். எனவே, அபிராமிக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்டவெளியிலிருந்து புவியை நோக்கி வரும் மர்ம ரேடியோ அலைகள்!!

FRB 121102 எனும் ரேடியோ முதலில் இருந்து வெளியேறும் பெரும் எண்ணிக்கையிலான ரேடியோ சமிக்ஞைகள் மு்னனர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது அண்டவெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் 72 புதிய ரேடியோ சமிக்ஞைகள் கண்டறியப்பட்டுள்ளன.

வேகமான ரேடியோ வெடிப்புகள் (FRBs) என்பது பிரபஞ்சத்தில் இடம்பெறும் ஒரு மர்ம நிகழ்வு.

இவை மிக சக்திவாய்ந்தவையாக இருப்பதுடன் பலநூறு மில்லியன் சூரியன்கள் போன்று சக்தியை காலுகின்றன.

ஆனால் இவ் வெடிப்புக்கள் ஒரு குறுகிய கணத்தில் தோன்றி மறைகின்றன. அத்துடன் சில மில்லிசெக்கன் வரையிலேயே நீடிக்கின்றன.

இவற்றில் பெரும்பாலான முதல்கள் ஒரு தடவை மாத்திரமே வெடிப்புக்குள்ளாகின்றன.

இவ் வெடிப்புக்கள் எப்படி நடக்கும், எப்பொழுது நடக்குமென யாராலும் கூறிவிட முடியாது.

இதனால் ஆய்வாளர்களால் அவதானிப்புக்களை திட்டமிட்டு மேற்கொள்ள இயலாது. ஆனால் FRB 121102 எனும் ரேடியோ முதலானது தனித்தன்மை உடையதாக இருக்கின்றது.

இது 2012 இல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அடிக்கடி வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இவ்வாறு செயற்படும் ஒரோயொரு ரேடியோ முதல் இதுதான்.

இதன்காரணமாக இதன் தொழிற்பாடு எளிதாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இதைத்தான் ஆய்வாளர்களும் கடந்த ஓகஸ்டு 26, 2017 ஆம் திகதியன்று நடைமுறைப்படுத்தியிருந்தனர்.

இவர்கள் மேற்கு வேர்ஜினியாவில் சுமார் 5 மணிநேரத்துக்கு தொலைகாட்டியை நிறுத்திவைத்து அவதானித்திருந்தனர்.

இதன்போது 21 வெடிப்புச் சம்பவங்கள் அவதானிக்கப்பட்டிருந்தன. இவையனைத்தும் அதன் முதல் மணித்தியாலத்திலேயே நிகழ்ந்திருந்தன.

இதன்படி இவ் ரேடியோ முதல்கள் முதல் நேர ஆயிடைகளில் வெறித்தனமானச் செயற்பட்டு பின்பு அமைதியாகிவிடுகின்றன.

FRB 121102 இலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை பகுப்பாய்வு செய்தபோது விஞ்ஞானிகளால் 72 புதிய அலைகளை அவதானிக்க முடிந்திருக்கிறது.

இவை உட்பட இதுவரையில் 300 சமிக்ஞைகள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விருப்பத்தை அடைய முடியவில்லை : மனதை உலுக்கும் மாணவியின் தற்கொலை கடிதம்!!

பெற்றோரின் கனவை கலைக்க விரும்பவில்லை என கடிதம் எழுதிவிட்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கவுகாத்தியில் செயல்பட்டுவரும் ஐஐடியில் கர்நாடகாவை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் மெக்கானிகல் என்ஜினியரிங் பயின்று வருகிறார்.

கடந்த புதன்கிழமை அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் வழக்கமாக மாணவிகள் அனைவரும் வகுப்புக்கு சென்ற பின், சோதனை செய்வதற்காக வந்த பாதுகாவலர், ஜன்னல் வழியே பார்த்த போதுதான் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் மாணவியின் அறைகளில் சோதனை நடத்திய பொலிசார், தற்கொலை கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதில், ‘என்னால் எனது பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் நல்ல மதிப்பெண் பெற்றதால் ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனது உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். எனக்கும் அது பெரிய விஷயமாகவே பட்டது. ஆனால் நான் விரும்பியது பொறியியலை அல்ல. இதை யாரிடம் சொல்வது. எனது பெற்றோரின் கனவு கலைந்து விடாதா? நல்ல ஆசிரியராவதே எனது விருப்பம். பொறியியல் எனக்கு விருப்பமல்ல’ என எழுதப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து பேசிய கல்வி நிறுவன செய்தித் தொடர்பாளர் “உயிரிழந்த அன்று காலை மாணவி தனது அறை தோழியிடம் பேசியிருக்கிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை, வகுப்புக்கு வர இயலாது எனவும் கூறியிருக்கிறார். ஆனால் உயிரை மாய்த்துக் கொள்வார் என யாரும் நினைக்கவில்லை” என்றார்.

தனது விருப்பத்தை அடைய முடியவில்லை என்ற ஏக்கத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

பிள்ளைகளை அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என பெற்றோர் கேட்க வேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் முடிந்து விருந்துக்கு வந்த மணப்பெண்ணின் தங்கையை போட்டோ எடுத்த இளைஞர்கள் : நடந்த விபரீத சம்பவம்!!

தமிழகத்தில் மணப்பெண்ணின் தங்கையை படம் எடுத்தவர்களை தாய்மாமன் கண்டித்ததால், அவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே எஸ்.கல்விமடையை சேர்ந்த முருகன் மகன் செந்தில்வேலுக்கும், சென்னையை சேர்ந்த துரை மகள் ஈஸ்வரிக்கும் அங்கிருக்கும் எஸ்.கல்விமடையில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து நரிக்குடி அருகே பிள்ளையார்குளத்தில் உள்ள மணமகளின் தாய்மாமன் முருகவேல்(48), வீட்டிற்கு மணமக்கள் இரவு உணவு விருந்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார்(24), ஆறுமுகம்(24), முத்து (19), கோபி(21) உள்ளிட்ட 7 பேர் மணப்பெண்ணின் தங்கையை செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

இதை, கண்ட முருகவேல் ஆத்திரத்தில் அவர்களை தடுத்து கண்டித்துள்ளார்.இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கும்பல், முருகவேலை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முருகவேல், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரின் உயிர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

மணமகன் தந்தை இறந்ததால் நின்ற திருமணம் : ஏக்கத்தில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

தமிழ்நாட்டின் திருப்பூரில் நிச்சயமான திருமணம் நின்ற நிலையில், திருமணம் மீண்டும் நடக்குமா என்ற பயத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த அருண்பாண்டி (25) என்பவர் திருப்பூரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். அருண்பாண்டியும் அவர் உறவு பெண்ணான திவ்யாவும் காதலித்து வந்தனர்.

இருவரது வீட்டில், காதல் விடயம் தெரிந்த நிலையில் அவர்களின் குடும்பத்தார் திருமணம் தொடர்பாக ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினார்கள்.

இந்த சூழ்நிலையில் எதிர்பாராதவிதமாக அருண்பாண்டியின் தந்தை சேதுபாண்டி திடீரென்று இறந்து விட்டார். இதனால் நேரம் சரியில்லை என்று இவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டு தை மாதம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அருண்பாண்டி திவ்யாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.

அவரும், அருண்பாண்டி வீட்டுக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் திவ்யாவை பெற்றோர் தேடிப்பார்த்தனர்.

பின்னர் அருண்பாண்டியன் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்த போது இருவரும் துாக்கில் சடலமாக தொங்கினார்கள்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தை மாதம் நடக்கும் என கூறப்பட்ட திருமணம் மீண்டும் தள்ளிப்போகுமோ என்ற பயத்தில் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

அம்பானி மட்டுமா இப்படி செய்வார் : பணமாலை அணிந்து வியப்பில் ஆழ்த்திய புதுமணத்தம்பதியினர்!!

விருதுநகர் மாவட்டத்தில் பூக்களால் செய்யப்பட்ட மாலைக்கு பதிலாக பணமாலை அணிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் புதுமணத்தம்பதியினர்.

விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில், நேற்று ரமேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.

இதில், மணமகன், மணமகள் இருவரும் பூ மாலைக்கு பதிலாக, புதிய பத்து ரூபாயில் பின்னப்பட்ட பண மாலை அணிந்திருந்தனர்.

பணமாலையுடன் ஊர்வலமாக வந்த மணமக்களை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் நிச்சயதார்த்த விழாவில், மேடை முதல் மண்டப அறைகள், தூண்களில் புதிய 2 ஆயிரம், 500, 200, 50, 10 ரூபாய் நோட்டுகளில் அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக பரவியது.

தற்போது, நாங்களும் பணமாலையில் திருமணம் நடத்துவோம் என களமிறங்கியுள்ளனர் இந்த தம்பதியினர்.

எங்களுக்கு மாலை மணம் வீசலைன்னாலும் பரவாயில்லை, மணமக்கள் என்றும் வாடாத மாலையணிந்து ‘பண மக்கள்’ போல வரணும், அதனால பண மாலையே போதும், பூவை விட இதுல செலவு குறைவு என கூறியுள்ளனர்.

வெள்ள பாதிப்பின் போது முதுகை படிக்கட்டாக்கிய நபருக்கு குவியும் பரிசுகள்!!

இந்திய மாநிலம் கேரளாவில் கடும் வெள்ள பாதிப்பின் போது தனது முதுகை படிக்கட்டாக்கி பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.

குறித்த நபரின் சேவையை பாராட்டி முன்னர் மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் கார் ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.

கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் 14 மாவட்டங்களும் வெள்ளத்தால் மூழ்கியது.

மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிட மீட்புக்குழுவினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டனர்.

முக்கியமாக மலப்புரம் மாவட்டம், வென்கரா பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தது. வெள்ளத்தால் மூழ்கியதால் மக்கள் வீட்டில் முடங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் கேரள மீனவர்கள் பெரும் உதவியாய் இருந்தனர். குறிப்பாக, வெள்ள பாதிப்பின் போது ஜெய்ஷால் என்ற மீனவர், தனது முதுகை படிக்கட்டாக்கிக் கொள்ள, பெண்கள் அவர் மீது ஏறி படகில் அமர்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

ஜெய்ஷாலின் வீடியோ சமூகவலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் முதுகை படிக்கெட்டாக்கிய மீனவர் ஜெய்ஷாலுக்கு இஸ்லாமிய அமைப்பு புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது. தன்னுடைய வாழ்வில் தனக்கு சொந்த வீடு கிடைக்கும் என தான் ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை என ஜெய்ஷால் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

யூடியூப் வீடியோவை பார்த்து என் குழந்தையை கொலை செய்தேன் : தாயின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

கொலை செய்வது எப்படி என யூடியூப் வீடியோவை பார்த்து என் இரண்டரை வயது மகளை கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதியினரின் இரண்டரை வயது மகள் ஷிவன்யா ஸ்ரீ.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையை சந்தேகம் புரட்டி போட்டது. கணவர் மீதுள்ள சந்தேகத்தால் தன்னுடைய குழந்தையை கொன்றதாக தாய் கைதாகியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இசக்கி அளித்துள்ள வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நாகராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பேசி வந்த நிலையில், இரவில் அதிகமாக வாட்ஸ் – அப்பில் மெசெஜ் செய்து வந்துள்ளார்.

இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் இதுகுறித்து சண்டைபோட்டு வந்தேன்.

மனைவியுடன் பேசுவதை நிறுத்திய நாகராஜ், தொலைபேசி அழைப்புகளை தவிர்த்தார். இதனால் விரக்தியடைந்த நான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்.

நான் உயிரிழந்தால் குழந்தையின் கதி என்னாகும்? எனவே வேறு வழியின்றி, குழந்தையை கொலை செய்வது எப்படி என யூடியூப் மூலம் வீடியோவை பார்த்தேன்.

யூடியூப்பில் பார்த்தபடி குழந்தையை தண்ணீர் டிரமுக்குள் முக்கி, மூச்சடைக்கச் செய்து செய்தேன்.

உயிரிழந்த குழந்தையை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து, கட்டிலில் கிடத்திவிட்டு, நான் தற்கொலை செய்வதற்காக மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொள்ள முயற்சித்தபோத, கணவரின் இருசக்கர வாகன சத்தம் கேட்டதால், மயக்கமடைந்தது போல் கீழே படுத்துக்கொண்டு, அடையாளம் தெரியாத இருவர் தன்னை தாக்கிவிட்டு, குழந்தையை நீரில் மூழ்கி கொன்றதாக நாடகமாடினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தமிழ்இசக்கியை பொலிசார் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இறந்த கணவரின் உயிரணுக்கள் மூலம் கர்ப்பமான பெண் : இரட்டை குழந்தை பெற்றெடுத்த ஆச்சரியம்!!

கேரளாவில் கணவர் இறந்து ஒரு ஆண்டு கழித்து பெண்ணொருவர் அவரது உயிரணு மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்.

கண்ணூரை சேர்ந்தவர் சுதாகரன், இவருக்கு ஷில்னாவுடன் கடந்த 2006-ல் திருமணம் ஆன நிலையில் பல ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை.

இந்நிலையில், 2015 ஆகஸ்ட் 15-ம் திகதி கல்லூரியின் சக பேராசிரியர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார் சுதாகரன், அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சுதாகரன் உயிரிழந்தார்.

சுதாகரன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஷில்னாவும் அவரது உறவினர்களும் விரும்பினர். இதையடுத்து, சுதாகரனின் உயிரணுக்கள் தனியாக எடுத்து பாதுகாக்கப்பட்டது.

பின்னர், அந்த உயிரணுக்கள் மூலம் ஷில்னா கர்ப்பமான நிலையில் மருத்துவமனையில் நேற்று காலை இரட்டைப் பெண் குழந்தைகளை ஷில்னா பெற்றெடுத்துள்ளார்.

என்னை கடுமையாக துன்புறுத்துகின்றார்கள் : தற்கொலை செய்த இளம் மனைவியின் உருக்கமான கடிதம்!!

தமிழகத்தின் சேலத்தில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது கணவரை கைது செய்துள்ள பொலிசார் மேலும் நால்வரை தேடி வருகின்றனர்.

எஸ்பி. அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்த புவனேஸ்வரி கடந்த திங்களன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில், புவனேஸ்வரின் தாய் வீட்டில் புவனேஸ்வரி கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது.

அதில் கணவரும், அவரது குடும்பத்தினரும் அடித்து துன்புறுத்தியதாக புவனேஸ்வரி குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கணவர் கவுதமனை பொலிசார் கைது செய்த நிலையில் தலைமறைவான மாமியார், மாமனார், கணவரின் சகோதரிகள் இருவரை தேடி வருகிறார்கள்.

குழந்தையின் கண்முன்னே வீட்டில் சடலமாக தொங்கிய தாய் : காணாமல் போன கணவன்!!

சென்னையில் வரதட்சணை கொடுமையின் காரணமாக பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை, சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்கவி (எ) ரோகினி என்பவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 3 வருடத்திற்கும் முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ரோகிணி திருமண வரதட்சணையாக 50 பவுன் தங்க நகை, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், இரு சக்கர வாகனம், ஒரு கார், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.

ஆனால் ரோகிணிக்கு பெண் குழந்தை பிறந்ததால், சுரேஷ் தொடர்ந்து கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளார். மேலும், ரோகிணியின் அப்பாவிடம் உடனடியாக 5 லட்சம் பணம், பெரிய கார் மற்றும் சொந்தமாக பிளாட் கேட்டு போனில் மிரட்டி உள்ளார்.

இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த ரோகிணி, நேற்று இரவு பெற்றோர்களிடம் கணவர் அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் பெற்றோர்கள் போன் செய்த போது ரோகிணி போனை எடுக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் அளித்துள்ளனர்.

அவர்கள் உடனே வீட்டிற்கு சென்று பார்க்கும்போது தூக்கிட்ட நிலையில் ரோகிணி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் ரோகிணியின் உடலை பொலிஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். மேலும் அதே அறையில் அழுது கொண்டிருந்த அவரின் 2வயது குழந்தை அஷ்விந்தாவும் மீட்டெடுத்தனர்.

இதற்கிடையில் தப்பியோடிய கணவர் சுரேசை பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையில் மகள் ரோகிணி சாவில் மர்மம் உள்ளதாக தந்தை நாராயணசாமி பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.