சென்னை மதுரவாயல் அருகே, வானகரம் மீன் சந்தையில் கொள்ளையன் ஒருவனை ரத்தம் சொட்ட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் அடுத்த வானகரம், மீன் சந்தை அருகே இளைஞர் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து நடந்த விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) புறாமணி(21) என்பதும், இவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவலையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும் நேற்று இரவு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் நண்பர்களுடன் உட்கார்ந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மணியை மர்மநபர்கள் ஓட, ஓட விரட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எந்த திருட்டு வழக்கிலும் ஈடுபடமாட்டேன் என்று கூறி மணி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு வந்துள்ளார்.
அதன் பிறகு கோடம்பாக்கத்தில் நடந்த குற்ற சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க மணி உதவியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, பெண்ணொருவர் தனது கள்ளக்காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று நகை பறித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள மாவேலிக்கரை மற்றும் சுற்றுப்பகுதியில், சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றது.
இது தொடர்பாக பொலிசாருக்கு புகார்கள் குவிந்தன. பாதிக்கப்பட்டவர்களில் 50க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்ததால், பொலிசார் தீவிர வேட்டையில் இறங்கினர்.
இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த ஒரு ஆணும், பெண்ணும் தங்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து, தங்களை ஏமாற்றி நகைகளை பறித்து சென்றதாக புகார் கூறியவர்கள் பொலிசாரிடம் கூறியிருந்தனர்.
அதன் அடிப்படையில் இந்த சம்பவங்களை ஒரே கும்பல் தான் செய்திருக்கக் கூடும் என பொலிசார் முடிவு செய்தினர். அதன் பின்னர், மாவேலிக்கரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவில், நகை திருட்டு காட்சி ஒன்று பதிவாகி இருந்தது.
அதில் தெரிந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பொலிசார் விசாரணை நடத்தியதில், அது போலி பதிவு எண் என்பது தெரிய வந்தது. இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் பொலிசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், மாவேலிக்கரை கல்லூரி சாலையில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர்களை, பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.
பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த விஜூ(33) மற்றும் மாவேலிக்கரையைச் சேர்ந்த சுனிதா(36) என்பதும், அவர்கள் கள்ளக்காதலர்கள் என்பதும் தெரிய வந்தது.
மூன்று குழந்தைகளுக்கு தாயான சுனிதா, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்கு சென்ற இடத்தில் விஜூயுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அடிக்கடி தங்களின் வாகனத்தின் பதிவு எண்களையும், நிறத்தையும் மாற்றிவிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் பொலிசாரிடம் பிடிபடாமல் இருந்துள்ளனர்.
வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் 15 வயதுடைய சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது 15 வயதுடைய மகளுடன் நீண்ட காலமாக நட்பு ரீதியில் பழகி வந்த குறித்த இளைஞன் மகளை பலாத்காரமாக அழைத்துச் சென்று விட்டதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து பொலிஸார் குறித்த சந்தேகநபரை விசாரணைகளுக்காக அழைத்து விசாரணைகளின் பின் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போதே வவுனியா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நேபாளத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா ஊடாக இலங்கை வரும் போது நாய்கள் கூட சாப்பிட முடியாத வகையிலான முந்திரி பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் ஜனாதிபதியின் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் நாமல் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிலிருத்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் வரும் போது, முந்திரி பருப்புக்களை உண்பது போன்ற புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.
அத்துடன், “அப்படி ஒன்றும் இந்த விதைகளில் இல்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேபாளத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா ஊடாக இலங்கை வரும் போது நாய்கள் கூட சாப்பிட முடியாத வகையிலான முந்திரி பருப்புகள் எனக்கு வழங்கப்பட்டது.
மிருகங்கள் கூட சாப்பிட முடியாத முந்திரி பருப்பை இறக்குமதி செய்ய யார் அனுமதி வழங்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதையடுத்து தமது நிறுவனத்திற்கான முந்திரி பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சென்னையில் அமைந்துள்ள புழல் சிறையில் ஆயுள் கைதிகள் தங்கள் அறைகளை உல்லாச விடுதி போன்று மாற்றியுள்ளது புகைப்படமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைகளில் செல்போன், போதை மருந்து புழக்கம் தாராளமாக இருப்பதாக சமீப காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக புழல் சிறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது.
அறைக்குள் கட்டில் போடப்பட்டு அதில் சொகுசு மெத்தையும் போடப்பட்டு இருக்கிறது. விலை உயர்ந்த தலையணைகளும் காணப்படுகின்றன.
இதனால் கைதிகள் உரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி தாங்கள் கேட்டதையெல்லாம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது அம்பலமாகியுள்ளது.
மட்டுமின்றி சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்களது செல்போன்களை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள கடத்தல் கும்பலுடன் பேசியுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறையில் இருக்கும் ரவுடிகள் அங்கிருந்தபடியே கொலைக்கு சதி திட்டம் தீட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வெளிநாடுகளுக்கும் கைதிகள் போன் செய்து பேசி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆதேஷ் காம்ரா, லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் என 33 பேரை நான் தான் கொலை செய்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கொலை வழக்கு மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜாஸ்கரன் என்ற 40 வயது நபர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு ஜாஸ்கரன் மற்றும் மற்ற குற்றவாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜாஸ்கரன் பல்வேறு குழுக்களுடன் இணைந்து 14 கொலை சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், ஜாஸ்கரன் என்பவரின் உண்மையான பெயர் ஆதேஷ் காம்ரா என்பதும், அவர் சொந்தமாக தையல் கடை ஒன்று நடத்தி வருவதும் தெரியவந்தது.
அதன்பேரில் கடந்த 8-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் சிறைக்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றவாளி ஆதேஷ், தான் 33 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தில், என்னுடைய அப்பா ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. சிறுவயதில் இருந்தே அவர் என்னிடம் பாசம் காட்டியதில்லை. வீட்டில் அதிகமான விதிகளை பயன்படுத்துவார்.என்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே என்னை கடுமையாக தாக்கி வளர்த்து வந்தார். எனக்கு இந்த கொலை செய்யும் எண்ணம் எப்பொழுது வந்தது என்றே தெரியவில்லை.
2005 முதல் 2006 வரை லாரிகளை திருடி மட்டுமே விற்று வந்தேன். அதனால் பொலிஸார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் தான் பொலிஸார் அடையாளம் கண்டுபிடிக்கலாம் இருப்பதற்கும் தடையங்களை அழிக்க முயற்சி செய்தேன்.
அதன்படி 2007 முதல் 2018 வரை அதிகமான லாரிகளை திருடி 2 முதல் 3 லட்சம் வரை விற்றேன். இதற்காக சாலைகளில் செல்லும் அதிகமான லாரி ஓட்டுனர்களை நண்பர்களாக பிடித்தேன். அவர்களுடன் சாலை ஓரத்தில் இருக்கும் உணவகங்களில் சாப்பிடுவேன்.
அப்படி சாப்பிடும்போது அவர்களுக்கு தெரியாமல் உணவில் மயக்க மருந்தினை கலந்து விடுவேன். பின்னர் அவர்கள் மயங்கியதும், காரில் அவர்களை ஏற்றிக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு லாரியை ஒட்டி செல்வேன்.
அங்கு அவர்களை கொலை செய்து புதைத்து விடுவேன். இதுபோன்று மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் 33 பேரை கொலை செய்துள்ளேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து செயல்படும் ஒரு விஷயம் தான் இந்த டப்ஸ்மேஷ்.
டப்ஸ்மேஷ் ஆனது இளம் தலைமுறை மட்டும் இல்லாமல் அடுத்த தலைமுறை வரை அடிமையாக்கி வைக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது.
அந்த அளவிற்கு நடிப்பும், காட்சியும் தத்துருவமாக அமைந்திருக்கின்றது. அப்படி பட்ட ஒரு காணெளி தான் இங்கும்.
அக்கா, தங்கை, தம்பி இவர்கள் இணையத்தில் அனைத்து விதபாடல் காட்சிக்கும் அசத்தலாக அசத்தி வருகிறார்கள். பார்ப்பவர்களை ரசிக்கும் படியான காட்சியினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது இவர்கள் நடிப்பு திறமையை.
நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை.
அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் காரணங்களும் சொல்லப்படுகின்றன.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் : இறந்தவர்கள் கனவில் வருவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஏதும் குறைகள் இருந்தால், அவர்களை பற்றி எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் கனவில் வருவது போன்று தோன்றலாம்.
ஒருவரது இறப்பு உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தி இருந்தாலும் கனவு வரும். மேலும் நீங்கள் கனவில் தொடர்ந்து அவர்களது குரலை கேட்டுக் கொண்டே இருப்பது, உங்களுக்கு நற்செய்தி வர போகிறது என்பதை வெளிகாட்டும்
ஆன்மீக ரீதியாக சொல்லப்போனால், இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும், உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம், வஸ்திர தானம் செய்யலாம்.
வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.
கனவில் வரும் இறந்த நபரின் ஆவி எதாவது பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வர போகிறது என்பதை உணர்த்துவதாம்.
சிலர் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அவர்கள் கையில் பணம் நிற்பதே இல்லை. மேலும் இத்தகைய பண பிரச்சனை வராமல் இருக்கவும் மற்றும் பண வரவு அதிகமாகவும் உதவும் சில வழிகள் என்ன என்று பார்ப்போம்.
பணப்பெட்டி : பணப்பெட்டியில் மல்லிகைபூ, ஏலக்காய் ,பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்.
லட்சுமி கடாட்சம் : பால்,தேன், தாமரை, தானியக்கதிர்,நாணயங்கள் இவை லட்சுமியின் அடையாளங்கள். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும்.
ஐந்து முக விளக்கு : வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
வண்ணம் : பணம் கைமாறும் நேரங்களில், அடர் நிறமாக இல்லாமல் லைட் கலர்ஸ் ஆடைகளை அணிந்து செல்லுங்கள் அல்லது அந்த நிறத்தில் ஒரு கைகுட்டையாவது கைகளில் வைத்திருங்கள்.
தூக்கம் : எப்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதையே வழக்கமாக கொண்டிருங்கள். வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பதை தவிர்த்திடுங்கள். இத்திசையில் படுத்தால் அதிக சோம்பல் குடிகொள்ளும்.
பூஜையறை : நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும்.
கடிகாரம் : கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே, வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாட்டக் கூடாது. கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.
குபேரன் : செல்வத்தின் அதிபதியான குபேரன் ஊறுகாய் பிரியர். அதனால் வீட்டில் பல வகையான ஊறுகாய்கள் இருந்தால் அங்கே குபேரன் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை.
குப்பை : மூன்று நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்க கூடாது. ஒரே ஆடையை அடிக்கடி அணிந்தாலும் செல்வ வளம் குறைந்திடும். உடுத்திய துணியை வீட்டின் கதவுகளில் தொங்கவிடக்கூடாது.
கண் திருஷ்டி : வாழை பூவை வீடுகளின் முன்பு, அல்லது வியாபார இடங்களின் முன்பு கட்டி வைத்து வாரம் ஒரு முறை மாற்றி வர கண் திருஷ்டி அகன்று வியாபாரம் விருத்தி அடையும். இது அனைவரின் பார்வை படும்படி இருக்க வேண்டும்.
கண்ணாடி : வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது.
செடிகள் : வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
விளக்கு : வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு கிணற்றிலிருந்து பெற்று வழங்கப்பட்டு வந்த நீருக்கு பதிலாக மாற்றுவழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலை காரணமாக ஆறு, குளம், கிணறு என்பவற்றில் நீர் வற்றிப்போயுள்ளதாகவும், இதையடுத்து மாணவர்கள் தமது தேவைகளுக்காக பயன்படுத்தும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பாடசாலையின் அதிபரிடம் இந்த விடயம் தொடர்பாக வினவிய போது,
தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு தற்போது கிணற்றில் தண்ணீர் வற்றிப்போயுள்ளது.
எனினும் மாற்றுவழிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு தடையின்றி நேற்று முதல் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா – தவசிக்குளம் பகுதியில் மோட்டார்சைக்கிளொன்றுடன், முச்சக்கரவண்டி மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதகுவைத்தகுளத்திலிருந்து வவுனியா நகருக்கு சென்ற முச்சக்கரவண்டியுடன், வவுனியாவிலிருந்து சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது மோட்டார்சைக்கிளில் சென்ற 21, 22 வயதுகளையுடைய மதகுவைத்தகுளம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார்சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் மதுபோதையில் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் நேற்று இடம்பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான எலும்புக்கூடொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும், கால்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று குறுக்காக பிணைக்கப்பட்டவாறும் புதைக்கப்பட்ட நிலையில் இம்மனித எச்சம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கை, கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டதா? அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக எந்த வித ஊகிப்புக்களையும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மூலமாக குறித்த மனித உடல்கள் சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருந்தாலும் இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்படுத்தப்படும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணியானது மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை புளோரன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள 48 மணி நேரத்தில் அதிசக்தி வாய்ந்த புயல் தாக்கும் எனவும் இதன் தாக்குதல் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் வானிலை மையம் கணிப்பு வெளியிட்டுள்ள நிலையில் 17 லட்சம் பேரை அப்பகுதியிவிலுந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
குறித்த புயல் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா வேர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
193 கி.மீ. வேகத்தில் வீசும் இந்தப்புயலின் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வானிலை இலாகா கணித்துள்ளது.
எனவே 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் பேரை வெளியேற உத்தர விடப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் புயலினால் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடையும எனவும் .
கடல் கொந்தளிப்பால் தண்ணீர் ஊருக்குள் புகுந்து வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று; தெற்கு சீன கடல் பகுதியில் ஓம்போங் என்ற புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கும் என்றும். இதில் அங்குள்ள லூசான் தீவு கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக கவர்னர் நேற்று அனுப்பி வைத்தார்.
இதனால் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் விடுதலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.
இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், மத்திய அரசு இவர்களை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டியது. இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி உச்ச நீதிமன்றம், `ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு’ என்று தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து, தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேரை `முன் விடுதலை செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பரிந்துரை கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு கடந்த ஞாயிறு மாலையே அனுப்பி வைத்தது. இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட தமிழக கவர்னர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடுவார் என்று பரவலாக கருத்து நிலவியது. ஆனால் கடந்த 5 நாட்களாக தமிழக கவர்னர் அரசின் தீர்மானத்தின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் உள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை அறிக்கையை நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கவர்னர் மாளிகையை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகஅமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை அளித்துள்ளது. இதுகுறித்து கவர்னர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாட்டின் பிரதமரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்த பிரச்னையை கவர்னர் கவனமாக கையாள்வார்.
தற்போது, தமிழக அரசின் பரிந்துரையை தமிழக கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். காரணம், இந்த 7 பேர் விடுதலையில் தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்தாலும், மத்திய அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது.
அதேபோன்று தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரும் இவர்களது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற பிரச்னைகள் உள்ளதால், அனைவரிடமும் கலந்து ஆலோசித்த பிறகு தமிழக கவர்னர் பன்வாரிலால் ஒரு முடிவை எடுப்பார்.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் என்ன முடிவு எடுக்கிறதோ அந்த முடிவின்படிதான் தமிழக கவர்னரும் செயல்படுவார்” என்றார்.
தமிழக கவர்னரின் இந்த முடிவால், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நேரில் வருகை தந்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் பிரதி விவசாய பணிப்பாளர் இ.விஜயகுமார் தலைமையில் நேற்று(12.09) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், நீர்பாசன குளங்கள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும், விவசாயிகளுக்கான மானியங்களை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இதன்போது விவசாய நிலங்கள் பல வனஇலாகா அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துடன், விதை நெல் மற்றும் மேட்டுநிலப் பயிர்களுக்கான விதைகளை மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன்,
விவசாயிகளின் வாழ்க்கை முறை, பொருளாதார முறை முன்னேற்றமடையவில்லை. வடக்கு, கிழக்கு விவசாய மக்கள் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள். வடக்கு, கிழக்கு விவசாய மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதனை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எனக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் ஏனைய மாகாணங்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட எமது பிரத்தேசத்தை இன்னும் முன்னேற்ற வேண்டி உள்ளது. அதன் அடிப்படையில் வடக்கு கிழக்கு விவசாய மீள் எழுச்சிக்காக 3 மில்லியன் ரூபாய் நிதியை கோரியுள்ளேன்.
வடமாகாணம் விவசாயத்தின் மூலமே முன்னேற்றமடைந்திருந்தது. தற்போது விவசாயம் பின்தங்கிய நிலையில் உள்ளது. விவசாயத்தை எழுச்சிபெற செய்வதன் மூலமே மீண்டும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.
விவசாய அமைப்பு மற்றும் நீர்பாசன திணைக்களங்களில் வெற்றிடங்களும் பல உள்ளன. அதனை நிவர்த்தி செய்வதன் மூலம் விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் அமைச்சரின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
யுத்தத்தால் பாதிப்படைந்தவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
மீள்குடியேற்ற மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் யுத்த இழப்பீட்டுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் பாதிப்படைந்த 2 மதத்தளங்களுக்கான இழப்பீடாக 5 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாயும், மரணம் மற்றும் காயமடைந்தமைக்காக 8 பேருக்கு 2 இலட்சத்து 92 ஆயிரத்து 465 ரூபாயும், மக்களுடைய உடமைகள் மற்றும் சொத்தழிவுகளுக்காக 81 பேருக்கு 25 இலட்சத்து 24 ஆயிரத்து 323 ரூபாயும் ஆக 91 பேருக்கு 33 இலட்சத்து 94 ஆயிரத்து 788 ரூபாய் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.ஐ.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், அவரது செயலாளர், அரச அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.