வவுனியா நகரசபையின் ஆறாவது சபை அமர்வு : ஒருவருக்கொருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள்!!

வவுனியா நகரசபையின் ஆறாவது சபை அமர்வு இன்று (13) நகரபிதா இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

கட்சி பேதமின்றி மக்கள் சேவையில் பங்காற்ற வேண்டும் என நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் பாரதியார் நினைவு தினத்தில் குருமன்காட்டில் அமைந்துள்ள பாராதியார் சிலையருகில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்ட வேளை நகரசபை தவிசாளர் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து நகரசபையின் உப தவிசாளர் நகரசபை தலைவர் கட்சியின் உறுப்பினர் ஒருவரை பிரத்தியேக செயலாளராக வைத்திருப்பதன் காரணமாக நகரசபை செயற்பாடுகளில் இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் நகரசபையில் செயலாளர் ஒருவர் இருக்கும்போது வெளி ஆட்கள் நகரசபையில் செயலாளராக செயற்பட முடியாது என தெரிவித்தார்.

இலஞ்சம் வாங்குவதாக நகரசபை உறுப்பினர்கள் தன் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்திருந்தார்.

பெண்கள் அரசியலில் சேவையாற்றுவது சவாலான விடயமாக இருக்கிறது என தெரிவித்த நகரசபை உறுப்பினர் எஸ்.செபநேசராணி பாரதியார் சிலைக்கு மாலை போட பெண்கள் தடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அவ்வாறாயின் அவ்வையாரின் சிலைக்கு ஆண்கள் எவ்வாறு மாலை போட முடியும் என கேள்வி எழுப்பியதுடன் பண்டாரவன்னியன் சிலைக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாலை போட்டதையும் சுட்டிக்காட்டினார்.

வவுனியா நகரத்தில் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் அதிகமாக நடப்பதாக நகரசபை உறுப்பினர் பாஸ்கரன் ஜெயவதனி சுட்டிக்காட்டினார். உடனடியாக கட்டாக்காலி மாடுகளை பிடித்து விபத்துக்களை தடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

நகரசபையில் வருமானம் குறைந்துள்ளதாக நகரசபை தலைவர் இ.கௌதமன் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இக்குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நகரசபை செயலாளர் ரீ.தயாபரன் தனது அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் சபை தனது அதிகாரத்தை மீள கையளிக்கும் பட்சத்தில் மூன்று மாதத்தில் நகரசபையின் வருமானத்தை அதிகரித்து காட்ட முடியும் என தெரிவித்ததுடன் நகரசபை தலைவர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.

வவுனியா பேருந்து நிலையத்தில் அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்!!

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பழமை வாய்ந்த கடை தொகுதியின் மேலுள்ள பகுதி ஒன்று சேதமடைந்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பழைய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்கள் அமைந்துள்ள கட்டடத்தில் மேலுள்ள பகுதிகளிலிருந்து சில பகுதிகள் மக்கள் போக்குவரத்துச் செய்யும் பகுதிகளில் உடைந்து விழுந்து வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நபரொருவர் மீது சிறிய பகுதி விழுந்துள்ளது, எனினும் அதனால் அவருக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

இது தொடர்பாக வவுனியா நகரசபையினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் இன்று வரையில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரியவருகிறது.

இதேவேளை, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது இடங்களில் இப்படி ஒரு ஆடை தேவையா? நடிகை ஸ்ரீதேவியின் மகளை கிண்டல் செய்த நெட்டிசன்கள்!!

பாலிவுட் திரையுலகில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பேஷன் சென்ஸ் அனைவராலும் கவரப்பட்டுள்ளது.

ஆடை விடயத்தில் ஸ்ரீதேவி தனது இரு மகள்களான ஜான்வி மற்றும் குஷி ஆகிய இருவருக்கும் விலையுயர்ந்த ஆடையை அணிவித்து அழகு பார்ப்பார். குறிப்பாக பட்டுடன் கற்கள் பொறிக்கப்பட்ட ஆடை தேர்வுகளே அதிகம்.

தற்போது, மகள் ஜான்வியும் இதனையே பின்பற்றி வருகிறார். ஆனால், ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு ஆடைகளை கவர்ச்சியாக அணிந்துவந்து பொது இடத்தில் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகிறார்.

உடற்பயிற்சி மையத்துக்கு செல்வது முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வரை இவரது புகைப்படங்கள் அதிகம் கவனம் பெறுகின்றன. குறிப்பாக இவரது அணியும் ஆடைகள் தனி விமர்சனத்திற்கு ஆளாகின்றன.

நேற்று இவர் கிளினிக் சென்றிருந்தபோது பிங்க் நிற டிஷர்ட் மற்றும் கருப்பு நிறத்திலான ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். ஆனால் இவர் அணிந்திருந்த கருப்ப நிற ஷார்ட் தெரியவில்லை. இதனால் இவர் பேண்ட் அணிய மறந்துவிட்டார் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும், ஜான்வி கபூர் ஒன்றும் சிறுபிள்ளை கிடையாது, இதுபோன்று ஆடைகளை அணிவதற்கு, பொது இடங்களில் மரியாதையான ஆடையை அணிய வேண்டும் எனவும் விமர்சித்துள்ளனர்.

பிரபல நடிகையுடன் சச்சின் டெண்டுல்கர் : ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார்!!

சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

ஏஆர் முருகதாஸ், சுந்தர் சி, ராகாவா லாரான்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் மீது குற்றம்சாட்டி வந்த ஸ்ரீரெட்டி, தற்போது கிரிக்கெட் வீரர் மீது புகார் பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்.

கிரிக்கெட் கடவுள் என அனைவராலும் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் மீது தனது பேஸ்புக் பக்கத்தில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் தனது பேஸ்புக் பதிவில், சச்சின்தெண்டுல்கரன் என்ற ஒரு ரொமாண்டிக்கான ஆள், ஐதராபாத் வந்த போது, “சார்மி’ங்” ஆன பெண்ணை சந்தித்தார். அதற்கு, சாமுண்டேஸ்வர் சாமி என்பவர் உடந்தை” எனத் தெரிவித்துள்ளார். இதில் சார்மிங் பெண் என அவர் குறிப்பிடுவது நடிகை சார்மி எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீரெட்டியின் இந்தப் புகார் தொடர்பாக சச்சின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்போ அல்லது பதிலோ வரவில்லை.

நான் கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கு இது தான் காரணம் : 2 ஆண்டுகளுக்கு பின் உண்மையை உடைத்த டோனி!!

இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று தந்த டோனி, ஏன் கேப்டன் பதவியிலிருந்து திடீரென்று விலகினார் என்பது குறித்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

இந்திய அணிக்கு ஐ.சி.சி.யால் நடத்தப்படும் அனைத்து விதமான தொடர்களிலும் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் டோனி.

இப்படி இந்திய அணியை கம்பீரமாக வழிநடத்தி வந்த டோனி, திடீரென்று கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் திகதி தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

டோனி இதற்காத்தான் ராஜினாமா செய்தார் என்று பல செய்திகள் வந்தாலும், டோனி அது குறித்து இரண்டு ஆண்டுகளாக வாயை திறக்காமல் இருந்தார்.

இப்படி 2 ஆண்டுகளாக மெளனம் காத்து வந்த டோனி, தற்போது அதற்கான காரணம் என்ன என்பது குறித்து கூறியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டோனியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது கேப்டன் பதவியிலிருந்து விலகியது ஏன் என்பது குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு டோனி, 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலிமையான அணியை உருவாக்க முடிவு செய்தோம்.

2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டும், புதிதாக கேப்டன் பொறுப்பேற்பவருக்கு அவகாசம் கொடுப்பதற்காகவும் தான் 2016-ம் ஆண்டிலே எனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தேன், இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.

செய்தியாளர் கேட்ட கேள்வி : கொந்தளித்த விராட் கோஹ்லி!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், விராட் கோஹ்லி செய்தியாளரிடம் கோபப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மேலும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணித்தலைவர் கோஹ்லி ஆகியோரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

முன்னதாக, இந்திய 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தபோது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த 15-20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது உள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதாகவும், தற்போதைய அணியே சிறந்தது எனவும் கூறினார்.

இவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது. இந்நிலையில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கோஹ்லியும், ரவி சாஸ்திரியும் கலந்துகொண்டனர்.

அப்போது ‘நீங்கள் ரவி சாஸ்திரி கூறுவது போல், இப்போது உள்ள இந்திய அணி தான் சிறந்த அணி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?’ என செய்தியாளர் ஒருவர் கோஹ்லிடம் கேட்டார். இதனால் கோஹ்லி மிகுந்த கோபமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து, கோஹ்லி இவ்வாறு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கோபப்பட்டது சரியா என்ற விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் இந்த விடயத்தில் கோஹ்லிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘தோல்வியடைந்த நேரத்தில் எந்த கேப்டனிடம் இப்படி கேட்டாலும் அவர் கோபப்பட தான் செய்வார்’ என தெரிவித்துள்ளார்.

அடைக்கலம் தேடிய காதல் ஜோடி… பொலிஸ் நிலையத்தில் நடந்த கொடூமை : காதலன் எடுத்த விபரீத முடிவு!!

பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் அடைக்கலம் தேடிய காதல் ஜோடியை பிரிக்க கரூர் நகர காவல்துறை முயன்றதால், மனமுடைந்த காதலன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள ராமானுஜர் நகர் தெற்கு பகுதியை சார்ந்த கோபிநாத் (வயது 24) இவரது தகப்பனார் சுப்பிரமணி.

கோபிநாத் சேலத்தில் உள்ள தனியார் பேக்டரியில் பணியாற்றி வரும் நிலையில் கோபிகா (வயது 19) என்ற மாணவியை காதலித்துள்ளார்.

இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த பெண் கரூரை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் ஆகும். எனவே, காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த காதல் ஜோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கோயிலில் திருமண செய்து கொண்டனர். மேலும், பாதுகாப்பு கருதி நேற்று மாலை கரூர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆனால், அப்பெண் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் என்பதால், காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் காதலர்களை மிரட்டியுள்ளார்.

இந்த பெண்ணை விட்டு ஓடி விடு.. இல்லையேல், பொய் வழக்கில் உன்னை சிறைக்கு அனுப்பி விடுவேன் என கோபிநாத்தை மிரட்டியுள்ளார். அதோடு, இருவரையும் பிரித்து அப்பென்ணை அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட கோபிநாத் தனக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி காவல்நிலையத்திலேயே கத்தியை எடுத்து கழுத்தறுத்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார்.

ஆனால் கத்தியானது திருப்பி வைத்து அறுத்ததினால் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் கோபிநாத்தை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன் : விபரீத முடிவெடுத்த இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்!!

மதுரையில் திருமணத்திற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்த சிந்துஜா என்பவர் தனியார் என்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நுழைவுத்தேர்விற்கான பயிற்சிக்கு சென்றபோது, சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் நட்பு காதலாக மாறியிருக்கிறது. இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படித்தாலும், கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு மதுரை முழுவதும் ஊர் சுற்றியுள்ளனர்.

இதற்கிடையில் இவருடைய காதல் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராம்குமார், தாயார் விருப்பப்படி சிந்துஜாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

சிந்துஜா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் ராம்குமாரின் அம்மாவிற்கு பிடித்து போய்விட்டது.

இதனையடுத்து சிந்துஜா வீட்டிற்கு வருவதாக ராம்குமார் வீட்டார் கூறியுள்ளனர். அதன்படி சிந்துஜாவும் தன்னுடைய வீட்டில் எடுத்துக்கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட சிந்துஜா வீட்டார், ராம்குமார் குடும்பத்தினரின் வரவுக்காக காத்திருந்தனர்.

ஆனால் சிந்துஜாவின் வீடு வசதியின்றி இருந்ததால், வந்த சில மணிநேரங்களில் ராம்குமார் வீட்டார் கிளம்பிவிட்டதாக தெரிகிறது.

அன்றிலிருந்து ராம்குமார், சிந்துஜாவிடம் பேசுவதை குறைத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து போன சிந்துஜா, பிளேடால் கையை அறுத்துக்கொண்டு, என்னை திருமணம் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என வீடியோ ஒன்றினை எடுத்து ராம்குமாரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் ராம்குமார் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால் சிந்துஜா கடந்த 31-ம் தேதியன்று எலி மருந்தினை வாங்கி பேரீச்சம்பழத்தில் வைத்து சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களகா சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னதாக மாஜிஸ்திரேட்டிடம், தனது தற்கொலை முடிவுக்கு தனது காதலன் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் என மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

2 குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தது எதற்காக? உருக்கமான கடிதம் சிக்கியது!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகேந்திரனுக்கு ரேவதி என்ற மனைவியும், சிறு வயதில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மகேந்திரன் திருப்பூரில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் அதிகமானதால் மருத்துவ சிகிச்சை எடுபடாமல் போனது.

மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்து விட்டதால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

மகேந்திரன் தான் இறந்துவிட்டால் தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள நாதியில்லாமல் தனியாகி விடுவார்கள் என விரக்தியடைந்துள்ளார்.

இந்நிலையில் தான் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் மகேந்திரன் எழுதிய கடிதம் சிக்கியது,

மகேந்திரன் எழுதிய கடிதத்தில், மஞ்சள் காமாலை நோய் தீவிரமாகி ரத்தத்துடன் சேர்ந்ததால் இனி பிழைக்க மாட்டேன் என தெரிந்தது.

நான் இறந்துவிட்டால் என்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொள்வதற்கு யாருமில்லை என்ற காரணத்தினால் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அதிகளவு தூக்க மாத்திரை கொடுத்தேன்.

அதன்பிறகு நான் தூக்கிட்டு கொள்கிறேன். எங்களது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பல ஆண்களை ஏமாற்றி பெண்ணொருவர் செய்த மோசமான செயல்!!

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, நாரஹென்பிட்டி வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பெண் காண்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் காண்ஸ்டபிளும் அவரது கணவரும் இணைந்து நாட்டின் பல பிரதேசங்களில் உள்ளவர்களிடம் வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்துள்ளனர்.

பண்டாரவளையை சேர்ந்த இருவரிடம் 15 லட்சம் ரூபா பணம் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது!!

ஹோமாகமை – அத்துருகிரிய வீதியின் 3ஆவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனது மனைவியை கொலை செய்து விட்டு, வீட்டுக்கு எதிரில் வீதியிலுள்ள ஈரப்பலா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.

இந்த நபர் நேற்று ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தவறான தொடர்புகள் சம்பந்தமான பிரச்சினையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதன் காரணமாக கணவன், மனைவியின் கழுத்தை வயர் ஒன்றினால் இறுக்கியுள்ளார்.

பின்னர் உலக்கையால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். இதன் பின்னர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கணவன் மற்றும் மனைவி ஆகியோர் தமக்கு இருந்து வந்த தவறான தொடர்புகள் குறித்து மாறி மாறி, ஹோமாகமை பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே சில முறைப்பாடுகளை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

30 வயதான சச்சினி மதுவந்தி ஜயகொடி என்ற பெண்ணே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும், ஹோமாகமை பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எழுதுவிளைஞராக தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மனைவியை கொலை செய்த 32 வயதான நபர் இராணுவத்தில் சிவில் ஊழியராக கடமையாற்றி வருபவர் எனவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது, பிரதேசவாசிகள் கயிற்றை அறுத்து காப்பாற்றியுள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹோமாகமை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதூர் நாகதம்பிரான் ஆலய 108 அடி நவதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டல்! (படங்கள்,வீடியோ)

வரலாற்று சிறப்புமிக்க புதூர்  ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய 108 அடி நவதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் 108 அடி நவதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆலய பிரதம குருவினால் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவனியா மாவட்டத்தில் அதிக உயரமுள்ள இராஜகோபுரமாக அமையவுள்ள இக்கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, மற்றும் ஆலய நிர்வாகிகள், பத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



ஏழரை ஆண்டுகள் மறைந்து வாழ்ந்த கனடியர் : புது முகம் கொடுத்த கனடா மருத்துவர்கள்!!

வேட்டையாடச் சென்ற ஒரு மனிதரின் முகம் விபத்தொன்றில் கோரமாக, ஏழரை ஆண்டுகளாக அவர் தனது அறையில் யார் முகத்திலும் படாமல் மறைந்தே வாழ்ந்த நிலையில், தனது பேத்தியுடன் மீண்டும் வாக்கிங் செல்ல வேண்டும் என்ற அவரது ஆசைக்காக 30 மணிநேரம் போராடி அவருக்கு ஒரு புதிய முகத்தை அளித்திருக்கிறார்கள் கனடா மருத்துவர்கள்.

வேட்டையாடச் சென்ற Maurice Desjardins வீடு திரும்பும் போது அவரது முகத்தில் மூக்கு, உதடுகள், தாடை, பற்கள் எதுவுமே இல்லை.

கோர விபத்தொன்றில் அவர் முகம் அகோரமாகிப்போனது. அன்று முதல் ஏழரை ஆண்டுகளாக யாரையும் சந்திக்காமல் தனது தனியறையிலேயேவலியிலும், அவமானத்திலும் குறுகிப்போய் வாழ்ந்து வந்தார் Maurice Desjardins. ஒரு நாள் Montrealஇல் உள்ள பிளாஸ்டிக் சர்ஜனான Daniel Borsukஐக் காண வந்தார் Maurice.

இரண்டு விடயங்கள் மருத்துவரிடம் கேட்டார் அவர், ஒன்று மூக்கு, உதடுகள், தாடை, பற்கள் ஆகியவை வேண்டும், இரண்டு, தனது பேத்தியுடன் மீண்டும் வாக்கிங் செல்லும்போது தன்னை யாரும் அருவருப்பாகப் பார்க்கக்கூடாது.

தனது நோயாளியை வருடக்கணக்காக ஆராய்ந்தார் Dr. Daniel. அவர் இந்த சிகிச்சையைத் தாங்குமளவிற்கு உடலளவிலும் மன ரீதியாகவும் வலிமையாகஇருக்கிறாரா என நீண்ட காலத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கடைசியாக 9 மருத்துவர்கள், பல வல்லுனர்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், நர்ஸ்களும் இதர மருத்துவப் பணியாளர்களும் என பலர்இணைந்து Mauriceக்கு புதிய முகத்தை கொடுக்கும் 30 மணி நேர அறுவைசிகிச்சையில் இறங்கினார்கள்.

பெரிய மனம் கொண்ட ஒரு குடும்பம், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் முகத்தை தானமாக கொடுக்க முன் வந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிசைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் Maurice. அவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடைசியாக Mauriceஇன் ஆசைகள் நிறைவேறி விட்டன, இனி அவர் விருப்பபடியே தனது பேத்தியுடன் வாக்கிங் செல்லலாம்.

இது கனடாவின் முதல் முக மாற்று அறுவை சிகிச்சை என்பதும், Mauriceதான் அதிக வயதான காலத்தில் இந்த அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சையின்போது Mauriceஇன் வயது 64.

தாலிகட்டும் நேரத்தில் மணமகள் செய்த செயல் : இழப்பீடு கேட்ட மணமகன்!!

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று தஞ்சாவூர் மேலவீதி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் திருமண மண்டபம் களைகட்டியிருந்தது. மணக்கோலத்தில் மணவறையில் மணமகன் தயாராக அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில், தாலி கட்டும் நேரம் நெருங்கிய பிறகும் மணமகள் மணமேடைக்கு வரவில்லை.

மட்டுமின்றி இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் வேறொருவரை தான் காதலிப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.

இதைக் கேட்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மணமகள் குடும்பத்தினர், நீண்டநேரம் பேசிப் பார்த்தும்கூட, இந்தத் திருமணத்துக்கு அந்தப் பெண் சம்மதிக்கவில்லை.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

சமரசத்திற்கு ஒப்புக்கொண்ட மணமகன் வீட்டார் திருமணத்துக்கு தாங்கள் செலவு செய்துள்ள 3 லட்சம் ரூபாயை மணமகள் வீட்டினர் தர வேண்டும் என கோரியுள்ளனர்.

இதனையடுத்து ரூ.2.25 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு, உடனடியாக ஒண்ணேகால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மணமகள் வீட்டினர் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை பின்னர், தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்துடன் தூக்கில் தொங்கிய தொழிலதிபர் : கெட்ட ஆத்மாக்கள் காரணமா?

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் ஆத்மாக்கள் தொல்லை செய்ததாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் நரோடாவை சேர்ந்தவர் குணால் திவிவேதி(வயது 45), இவரது மனைவி கவிதா, மகள் ஷ்ரீன், தொழிலதிபராக இருக்கிறார்.

நேற்று இவரை தொடர்பு கொள்ள உறவினர்கள் முயன்ற போது, போனை யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் போனை எடுக்காத காரணத்தால் சந்தேகமடைந்தவர்கள், வீட்டுக்கு வந்துள்ளனர்.

அங்கே மூவரும் தூக்கில் சடலமாக தொங்க, குணாலின் அம்மா ஜெயஸ்ரீ மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன், பொலிசுக்கும் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மூன்று பக்க கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், எல்லோரும் என்னை குடிகாரன் என்கிறார்கள், நான் விரும்பி அதை செய்யவில்லை, கெட்ட ஆன்மாக்கள் இதை செய்ய வைக்கின்றன.

அம்மா, நீயே என்னை புரிந்துகொள்ளவில்லை, பலமுறை கெட்ட ஆன்மாக்கள் பற்றி கூறியிருக்கிறேன், நீ நம்பவில்லை என எழுதப்பட்டிருந்தது.

எனவே மந்திர சக்தி விடயங்களால் அதிகம் பாதிக்கப்பட்டு குணால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இப்படியும் ஒரு தமிழர் திருமணம்!!

கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழர் திருமணத்தில் எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் சுவையான இயற்கை விருந்து பரிமாறப்பட்டுள்ளது.

திருமணத்தின் முக்கிய அம்சமே விருந்துதான். சுவை என்ற பெயரில் இன்று பரிமாறப்படும் உணவுகள் வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளாகவே இருக்கின்றன.

இதனால், கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழர் திருமணத்தில் சுவை மிகுந்த இயற்கை உணவுகளை பரிமாறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் உணவுகளை சமைக்கும் கலையில் படையல் சிவா என்பவர் அசத்தி வருகிறார்.

அவல் சாதம், வாழைக்காய் என இயற்கை உணவுகளை பரிமாறியுள்ளனர்.