அண்ணனை கொலை செய்தது ஏன்? தங்கையின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

நாகர்கோவில் மாவட்டத்தில் தங்கையின் தவறான வாழ்க்கை முறையை கண்டித்த அண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நீலசாமி என்பவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவர் தனது தங்கை அமராவதியுடன் வசித்து வந்துள்ளார். அமராவதி கணவரை இழந்தவர் , இவர் தனியாக வசித்து வந்த காரணத்தால், அவருடன் தங்கையுடன் வசித்து வந்துள்ளார் நீலசாமி,

தனிமையில் இருந்த அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத்தும் அவருடன் உல்லாசமாக இருந்தார்.

பிரசாத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த நெருங்கிய உறவுப்பெண் ஒருவருடன் முறைதவறிய உறவு இருந்துள்ளது. அந்த பெண்ணையும் பிரசாத், அமராவதி வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். இதற்கு அமராவதி துணையாக இருந்துள்ளார்.

இதுதவிர அமராவதிக்கு சென்னையில் பணியாற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயில் வார்டன் ஒருவருடனும் தொடர்பு இருந்துள்ளது. அவர் ஊருக்கு வரும் சமயத்தில் அமராவதி வீட்டுக்கு சென்று அவருடன் இருந்துள்ளார்.

அமராவதியின் நடத்தை சரியில்லாததை அறிந்த நீலசாமி வேதனைப்பட்டார். அமராவதியை அழைத்து பல முறை அவர் கண்டித்தார். பிரசாத்தையும் இனி வீட்டுக்கு வரக்கூடாது என சத்தம் போட்டார்.

நீலசாமியின் கண்டிப்பால் அமராவதியும், பிரசாத்தும் அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் நீலசாமியை கொன்று விட்டால் நிம்மதியாக தங்கள் தொடர்பை தொடரலாம் என அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டனர்.

சம்பவத்தன்று நீலசாமிக்கு மது வாங்கி தருவதாக ஆசைக்காட்டி கோட்டவிளை பகுதிக்கு அவரை பிரசாத் அழைத்துச் சென்றார்.

தன்னை கொல்வதற்காக பிரசாத் மதுவாங்கிக் கொடுப்பதை அறியாத நீலசாமி, அளவுக்கு அதிகமாக மது குடித்து மயக்கநிலைக்குச் சென்றார்.

அப்போது நீலசாமியை பிரசாத் அடித்துக் கொலை செய்தார். பின்னர் நீலசாமி அணிந்திருந்த லுங்கியால் அவரது 2 கைகளையும் பின்புறமாக கட்டி கிணற்றில் வீசி விட்டி தப்பிச் சென்றுள்ளார்.

மேற்கூறிய விவரங்களை அமராவதி பொலிசில் வாக்குமூலமாக அளித்துள்ளார். தற்போது, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

காவல்நிலையத்தில் பொலிசாரை கோடாரியால் கொடூரமாக தாக்கிய நபர் : வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நபர் காவல்நிலையத்தில் இரண்டு பொலிசாரை கோடாரியால் தாக்கிவிட்டு, அதன் பின் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் Umri காவல் நிலையத்திலே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Vishnu Rajawat என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பரை பொலிசார் அத்து மீறி நடந்த குற்றத்திற்காக கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள் லாக் அப்பில் அடைக்கப்படவில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட Vishnu Rajawat என்ற 25 வயது இளைஞன் அங்கிருந்த கோடாரியை எடுத்துக் கொண்டு, காவல்நிலையத்தில் இருந்த கான்ஸ்டெபிள் Umesh Babu மற்றும் Gajraj Singh-ஐ கொடூரமாக கோடாரியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது சிகிச்சை பெற்று வந்த Umesh Babu சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Gajraj Singh-க்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த Umesh Babu குடும்பத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் Shivraj Singh 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் பொலிசாரை தாக்கியது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராவி பதிவாகியதால், தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

பொலிசாரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது குறித்து தகவல்கள் இல்லை.

தாலி கட்டும் நேரத்தில் மணமகள் செய்த துணிச்சல் செயல் : சினிமா பாணியில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்துங்கள் எனவும் அதையும் மீறினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால், அங்கு பரபரப்பு நிலவியது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், மும்பையில் வேலை செய்பவரும் தேவரடியார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவருமான அய்யப்பனுக்கும்(27) மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.

நேற்று முன்தினம் இரவு மணமகன் அழைப்பும், விருந்தும் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை திருமணத்துக்கு ஏற்பாடு நடந்தது.

மணமேடையில் மணமகன் மாங்கல்யத்தை பெற்று, மணமகளின் கழுத்தில் கட்ட முற்பட்டார். அப்போது திடீரென்று மணமேடையை விட்டு எழுந்த மணமகள், நான் மைனர். எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.

என்னை பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யச் சொல்கிறார்கள். உடனே திருமணத்தை நிறுத்துங்கள். மீறி தாலி கட்டினால் தற்கொலை செய்து கொள்வேன் என அங்கு உறவினர்கள் பலர் இருக்கும் போது கூறினார்.

அதுமட்டுமின்றி உடனடியாக தன்னுடைய செல்போனில் 100-க்கு போன் செய்து பொலிசாரிடம் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிசார் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு பில்லி சூனியம் காரணமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்கை அப்பார்ட்மெண்ட் வீட்டில் குணால் திரிவேதி உட்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இதில் குணால் திரிவேதி தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி கவிதா திரிவேதி தரையிலும், மகள் Shrin படிக்கையிலும் இறந்து கிடந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியைடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் குணால் திரிவேதி தன் மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, பின்னர் தூக்கு மாற்றி தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.

இந்த தற்கொலைக்கு பில்லி-சூனியம் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த வீட்டில் சோதனை செய்த போது குணால் திரிவேதி தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே நான் தொடர்ந்து குடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது அவர் எழுதியது தானா என்பதை உறுதி செய்ய பொலிசார் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் குணால் திரிவேதி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இது குறித்து அவர் குடும்பத்தினரிடம் தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டனர், அதன் காரணமாகவே நான் குடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் குடும்பத்தினர் இவர் மது போதையில் பேசுகிறார் என்று அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி இவர்கள் குடும்பத்தினருக்கு பொருளாதார பிரச்சனை கிடையாது, மத்தியப் பிரதேசத்தில் 14 லட்சம் ரூபாய் கடனும் கொடுத்துள்ளனர்.

இதனால் இவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தனர் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

தன்னை விட வயது குறைவான ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ள திருநங்கை : என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவில் திருநங்கை அதிகாரி ஒருவர் தன் ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ளார்.

ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டம், கானபாகிரி கிராமத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா(34). இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரிசா மாநில நிதித்துறையில் ஆண் ஊழியராகப் பணியில் சேர்ந்தார்.

இதையடுத்து 2014- ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவித்ததையடுத்து தன்னை திருநங்கை என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். அடுத்த ஆண்டே உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையும் செய்துகொண்டார்.

இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தில் 377 பிரிவான தன்பாலின உறவை குற்றம் என்பதை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்ததையடுத்து இவர் தன் ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ரதிகந்தா பிரதான் என்னுடைய பெயராக இருந்தது. சிறுவயதில் இருந்தே என்னுடைய சகோதரியின் நகைகள், உடைகள் அணிவது எனக்கு விருப்பமாக இருந்தது.

என்னுடைய அம்மா இல்லாதநேரத்தில் அவரின் நகைகளை எடுத்துப் போட்டு அழகுபார்ப்பேன். ஆனால் நான் ஆணாக நடந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய தந்தை அடிக்கடி கூறி அடித்தார்.

நான் படிக்கும் காலத்தில் என்னை பலர் கிண்டல் செய்தனர். பலர் என்னை அவமானப்படுத்தினார்கள். 2010-ஆம் ஆண்டு நான் ஓடிசா மாநில அரசில் வணிகவரித்துறை பிரிவில் எனக்கு வேலை கிடைத்தது.

வேலை கிடைத்தபின் என்னுடைய அடையாளத்தை நான் யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், நான் ஆண் என்ற அடையாளத்துடன் வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை.

2014-ம் ஆண்டு திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அறிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து நான் 2015-ஆம் ஆண்டு உடல்ரீதியான அறுவைசிகிச்சை செய்து நான் பெண்ணாக மாறினேன். அதன் பின் எனது பெயரை ஐஸ்வர்யா ரிதுபர்னா பிரதான் என்று மாற்றிக்கொண்டேன்.

இதைத் தொடர்ந்து என்னுடைய ஆண் நண்பர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலை தெரிவித்தார். என்னைக் காட்டிலும் வயது குறைவாக இருந்ததால் நான் அவரை ஏற்கவில்லை.

அவர் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. அதன் பின் அவரின் உண்மையான அன்பை புரி்ந்துகொண்டு நானும் விரும்பினேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவரும், நானும் காதலித்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்ய என்னை அணுகினார்.

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக நான் காத்திருந்தேன். இப்போது ஒரேபாலின உறவு தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், என் காதலரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறேன்.

நான் நான் ஒரு திருநங்கை என்று என் காதலரின் குடும்பத்தாருக்கு தெரியாது. நான் அவரிடம் பலமுறை கூறி குடும்பத்தாரிடம் கூறுங்கள் எனத் தெரிவித்தேன். ஆனால், அவர் தெரிவிக்கவில்லை.

மகனின் திருமண விழா மேடையிலேயே உயிரிழந்த தந்தை : சோக சம்பவம்!!

உசிலம்பட்டியில் மகனின் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த மேடையிலேயே தந்தை திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மொண்டிக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கும், வகுரணியைச் சேர்ந்த கமலி என்பவருக்கும் இன்று காலை உதயப்ப நாயக்கனுரில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் ஆந்தகுமாரின் தந்தை தவசியிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.

அப்போது தவசி திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், தவசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மகனின் திருமணம் நடைபெற்ற மேடையிலேயே தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் பரிதாபமாக பலி!!

புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு இலக்காகிய நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு – 4ஆம் வட்டாரம், கோம்பாவிலை சேர்ந்த திருச்செல்வம் கபிலன் என்பவரே அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, அங்கிருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது வாள்வெட்டை நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த நால்வர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலும், ஒருவர் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பல்கலைக்கழக முன்னாள் மாணவனான கபிலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக மக்கள் விடுதலைமுண்ணனி (DPLF) இன் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!!

அமரர் மேரிகிறேஸ் சிங்காரம் அவர்களின் நினைவாக ஜேர்மனியில் வசிக்கும் அவரது மகனின் நிதிப்பங்களிப்பில் நிலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு நேற்று (12.09.2018) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இன் நிகழ்வு வித்தியாலத்தின் அதிபர் திருமதி கணகரட்னம் தலமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட மாகான சபை உறுப்பினர் ஜீ.ரீ.லிங்கநாதன், முன்னாள் உபநகரபிதாவும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் (மோகன்), தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் யோகராஜா, தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான குகதாசன் (குகன்), உத்தரியநாதன், செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன் (சிவம்) , சுஜீவன், பரிகரன் மற்றும் நிஷாந்தன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வகுமார், வித்தியாலய ஆசிரியர்கள்.மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஓர் அவசர எச்சரிக்கை!!

அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் உதவியுடன் நிறுவனமொன்று பாடசாலை பிள்ளைகளை இலக்கு வைத்து இந்த போதை தரும் பானத்தை தயாரித்துள்ளது.

இந்த பானத்தில் 4 வீத அல்கஹோல் செறிவு காணப்படுவதாகவும், பானம் தயாரிப்பதற்கு கடந்த அரசாங்கம் அனுமதி வழங்காத போதிலும் பிரதான அமைச்சர் ஒருவரின் அழுத்தம் காரணமாக இந்த பானத்திற்கு அனுமதி வழங்குவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நீலம், ஆரஞ்சு, மஞ்சள், சிகப்பு ஆகிய நிறங்களில் இந்த பானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொண்டு பானங்களை சந்தையில் விற்பனை செய்வதற்கு குறித்த நிறுவனம் முயற்சித்து வருவதாக மதுவரித் திணைக்கள உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சந்தையில் 4.5 வீத அல்கஹோல் செறிவுடைய பியர் வகைகள் காணப்படுகின்றன.

புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த பான போத்தல்கள் சிலவற்றை குடித்தால் போதை ஏறும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பான உற்பத்திசாலை ஹொரணை மொரகஹாஹேனவில் அமைந்துள்ள உற்பத்திசாலையொன்றில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 100 மில்லி லீற்றர் கொள் அளவுடைய போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பான போத்தல்களுக்கு தரச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பானத்தினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை அறிந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள், பானத்திற்கு அனுமதி வழங்க தயக்கம் காட்டி வருகின்றனர் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே பெற்றோர்களே பாடசாலை மாணவ மாணவிகளே இவ் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

திருமணத்திற்கு முன் கொழும்பு சென்ற மணமகனின் நிலை : மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட சங்கடம்!!

திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர் கொழும்பிற்கு சென்ற இளைஞன் காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மத்துகம ஓவிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த தேனுக ருச்சிரங்க வித்தான என்ற இளைஞனே 9 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்.

அவர் 9 நாட்களின் பின்னர் தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாக மேல் மாகாண புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராக பணியாற்றும் இளைஞன், கடந்த 6ஆம் திகதி திருமணத்திற்கு தேவையான பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக கொள்ளுப்பிட்டிக்கு சென்றுள்ளார்.

அவர் தனது பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் மத்துகம செல்வதற்காக புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்திற்கு இரவு 7 மணியளவில் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணிக்கவிருந்த சொகுசு பேருந்தில் அவர் ஏறியுள்ளார். சற்று நேரத்தில் அவருக்கு கடுமையான தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். இதனையடுத்து அவர் காணாமல் போயுள்ளார்.

கொழும்பு சென்ற மகன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என கூறி தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த இளைஞனுக்கு அலுவலகத்தில் வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசி மத்துகம, கொழும்பு பேருந்து ஆசனத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த இளைஞன் பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் போது அவரது பணப்பை மற்றும் தொலைபேசி காணாமல் போயிருந்த நிலையில் காற்சட்டை ஒன்றையும் அவர் அணிந்திருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தனக்கு ஒன்றும் நினைவில் இல்லை என குறித்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இளைஞனுக்கு யாரோ ஒருவர் உணவு வழங்கியுள்ளனர். அந்த உணவில் ஏதோ ஒருவகை இரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. அதனை உட்கொண்ட பின்னர் அவருக்கு அதிகமான தாகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்தில் இருந்து அவர் இறங்கியுள்ளார். இறங்கிய பின்னர் அவரிடம் இருந்த பணம் உட்பட அனைத்து பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர் ஒரு வைத்தியரை திருமணம் செய்யவிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இது குறித்து பல ஊடகங்களில் பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது.

எனினும் தற்போது குறித்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரு இராணுவ சிப்பாய்களின் மோசமான செயல்? மடக்கி பிடித்த மக்கள்!!

கிளிநொச்சி, பூநகரி – கரியாலைநாகபடுவன், கணேஸ்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தை சேர்ந்த இருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு புரிந்துள்ள நிலையில் குறித்த வீட்டை சேர்ந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர்.

இதன்போது அயல்வீட்டினர் இணைந்து இன்று அதிகாலை குறித்த இரண்டு இராணுவ சிப்பாய்களையும் மடக்கி பிடித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

எனினும் ஆதாரத்துடன் கூறுமாறு அவர்கள் தொடர்ச்சியாக கூறி வந்த நிலையில் இன்றைய தினம் ஆதாரத்துடன் இரு இராணுவ சிப்பாய்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது : தடுத்து வைக்கப்பட்ட அரச பேரூந்து!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று (13.09.2018) அதிகாலை 4.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்தினை வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே மறித்து பொலிஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பயணப்பையில் கேராள கஞ்சாவினை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இரணைமடு சந்தியிலிருந்து பேரூந்தில் பயணித்தாகவும் இவரிடமிருந்து மீட்கப்பட்ட கேராள கஞ்சாவின் நிறை மற்றும் பெறுமதி பின்னரே தெரிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பேரூந்து நொச்சிமோட்டை பாலத்தடியில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளிப்பதக்கத்துடன் தாயகம் திரும்பிய சாதனை தமிழ்ப் பெண்!!

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் வெள்ளி பதக்கத்தை வெற்றி கொண்ட ஜெயபிரகாஷ் கயல்விழி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஜெயபிரகாஷ் கயல்விழி இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த போட்டி கடந்த 10ம் திகதி இடம்பெற்றிருந்ததுடன், அவருக்கான பரிசில்கள் கடந்த 11ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரசித்தி பெற்ற அழகு கலை நிபுணரான ஜெயபிரகாஷ் கயல்விழி, சர்வதேச ரீதியில் பல போட்டிகளிலும் பங்குப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.

சர்வதேச ரீதியில் இடம்பெறும் அழகு கலை போட்டியொன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக ஜெயபிரகாஷ் கயல்விழி பதக்கமொன்றை வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மின்சார கம்பத்துடன் மோதுண்டு கோர விபத்து : ஐவர் காயம்!!

 

வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று (12.09.2018) காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் கனகராயன்குளம் மக்கள் வங்கிக்கு அருகே காணப்படும் வீதி வளைவில் சாரதியில் கட்டுப்பாட்டையிழந்து வீதியிலிருந்து கீழிறங்கி மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் விபத்தின் காரணமாக சுமார் நான்கு மணித்தியாலத்திற்கு மேலதிகமாக கனகராயன்குளம் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

84 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 14 வயது சிறுவன் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அமெரிக்காவில் 83 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் Baltimore நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார் Dorothy Neal என்ற 83 வயது பாட்டி.

இவர், சில நாட்களாக குடியிருப்பை விட்டு வெளியே வராததையடுத்து, அருகில் வசிப்பவர்கள் இவரது வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது இறந்துகிடந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொலிசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதே குடியிருப்பை சேர்ந்த Tyrone Harvin என்ற 14 வயது சிறுவன் இப்பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொலை செய்துள்ளான் என்பது தெரியவந்தது.

சிறுவனின் இந்த வெறிச்செயல் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும் தனது மகன் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவன் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றசாட்டினை முறையாக விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தற்போது, இச்சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் இவனுக்கு ஜாமீன் கோரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, இச்சிறுவன் செய்துள்ளது தீவிர ஆபத்தான குற்றம் ஆகும். இதுபோன்று குற்றங்கள் சிறுவர்களுக்கு தவறான முன்னுதாரணம் எனக்கூறி சிறுவனுக்கு ஜாமீன் வழக்க மறுத்துவிட்டார்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த தந்தை : வைரலாகும் ஆச்சர்ய வீடியோ!!

தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கிறிஸ்டோபர் பிரவுன் என்ற ட்விட்டர் பயனாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 4 மாத மகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை போன்ற வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இது மிகவும் இனிமையான விஷயம். நான் என் மகளுக்கும், என் குடும்பத்திற்கும் இடையில் ஒரு பிணைப்பு தருணத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக இது அமைந்தது என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவானது தற்போது 160,000 பயனாளர்களால் விருப்பம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடியோவினை பலரும் பகிர்ந்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் ஒரு பெண், இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என கோபமாக கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் கொடுத்த கிறிஸ்டோபர், நான் ஒன்றும் வேண்டுமென்று செய்யவில்லை. என் மகளுடன் விளையாடி கொண்டிருக்கும்போது, அவர் திடீரென இப்படி செய்துகொண்டே உறங்கிவிட்டாள் என பதிவிட்டுள்ளார்.

இதை பற்றி மற்றொரு பெண், சில நேரங்களில் குழந்தைகள் பசிக்காக மட்டும் முலைக்காம்புகளைக் தேடுவதில்லை. அவர்களின் ஆறுதலுக்காகவும் தேடுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.