படுக்கையிலேயே உயிரிழந்த கர்ப்பிணி பெண் : வயிற்றில் இருந்த குழந்தை குறித்து உருக்கமான தகவல்!!

பிரித்தானியாவில் படுக்கையில் தூங்கி கொண்டிருக்கும் போதே 14 வார கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரொசானா சாண்டர்சன் (22) என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.

சமீபத்தில் கூட வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார், இந்நிலையில் வீட்டின் படுக்கையறையில் சாண்டர்சன் திடீரென இறந்து கிடந்துள்ளார்.

அங்கு வந்த சாண்டர்சனின் தாய் ஜாக்குலின் தனது மகள் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து பேசிய ஜாக்குலின், பிரேத பரிசோதனையில் சாண்டர்சனின் வயிற்றில் இருந்தது ஆணா அல்லது பெண் குழந்தையா என்பது தெரிந்துவிடும்.

அதன்மூலம் அதற்கேற்றார் போல நிறத்திலான பூக்களை இறுதிச்சடங்களில் வைப்பேன் என சோகமாக கூறினார்.

மேலும், சாண்டர்சனுக்கு எந்தவொரு நோயும் கிடையாது என கூறிய ஜாக்குலின் அவரின் திடீர் இறப்பு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

சாண்டர்சன் இறந்த நிமிடம் குறித்து விளக்கிய ஜாக்குலின், சாண்டர்சன் என்னிடம் நன்றாக தான் போனில் பேசினார், அதன்பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவர் வீட்டுக்கு போன போது அவர் படுக்கையில் இருந்தார்.

சாண்டர்சனின் விரல் நீல நிறமாக இருந்தது, அவர் தூங்குவதாக முதலில் நினைத்த நிலையில் பின்னர் தான் இறந்தது தெரிந்தது என கூறியுள்ளார்.

50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து நபர் ஒருவரை காப்பாற்றிய நாய்!!

அமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்த நபர் ஒருவரை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர்(42). இவர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய அவரது வீட்டிற்குள் ஹார்னர் நுழைந்தபோது, வீட்டின் முன்பு இருந்த ‘லூசி’ என்ற நாயை அவர் சுட்டுக் கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை ஹார்னர் மறுத்த நிலையில் அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு ஹார்னருக்கு உதவியது. இந்நிலையில், ஹார்னர் கொன்றதாக கூறப்பட்ட நாய் வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் பின்னர் அந்த நாயும், அதன் புது எஜமானரும் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டதால், ஹார்னர் 50 ஆண்டு கால சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கடைசியாக என் சிரிப்பை பார்த்துக்கொள்ளுங்கள் : தற்கொலைக்கு முன் உருக்கமான வீடியோ வெளியிட்ட பெண்!!

சென்னையில் கணவன், மாமியார் கொடுமைபடுத்துவதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றினை வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத். இவர் கடந்த ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த ஆனந்தி (39) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

அன்றிலிருந்து தேவநாத், அவருடைய பெற்றோர் சம்மந்தம் – சிவகாமி ஆகியோர் ஆனந்தியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ஆனந்தி 8 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு, வாக்குமூலமாக இரண்டு வீடியோக்களை பதிவு செய்து, அதனை வாட்ஸ் ஆப்பில் தன்னுடைய குடும்பத்தாருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆனந்தியின் வீட்டிற்கு விரைந்து சென்ற பொலிஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, ஆதாரங்களையும் திரட்டியுள்ளனர்.

அந்த கடிதத்தில், அக்க, மாமா நீங்க என் அம்மா அப்பாவுக்கு சமமானவர்கள். அக்கா மாமா நான் இந்த தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருந்த என் மாமியார், மாமனார், என் புருஷன் இவங்க மூன்று பேரையும் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி தாங்க.

அப்ப தான் எந்த மருமகளுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காது. அப்புறம் பீரோ லாக்கர்ல ஒரு லெட்டர் இருக்கு அதை சாட்சியா எடுத்துக்கங்க, ரெண்டு வீடியோவும் இருக்கு.

என் மாமியார் கொடூர குணம் கொண்டவங்க, என் மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாகோலி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை. ஏழைக்கு மனைவியா இருக்கலாம், ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்வதை விட சாவதே மேல். டாட்டா பாய் மை சுவிட் ஃபேமலி என அந்த கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சம்பவம் குறித்து ஆனந்தியின் பெற்றோர் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமண நாள் வந்தது. ஆண்டு கோவிலுக்கு அழைத்து செல்லுமாறு என்னுடைய மகள் வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது என கூறியுள்ளனர்.

15 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன சிறுவன் : 7 வருடம் கழித்து பேஸ்புக்கால் நடந்த ஆச்சரியம்!!

இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடி போன சிறுவன் பேஸ்புக் உதவியால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளான்.

ஐதராபாத்தில் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தான் சுஜித். பள்ளியில் படித்து வந்த சுஜித் கடந்த 2011-ஆம் ஆண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இதையடுத்து சுஜித்தை காணவில்லை என அக்கா கணவர் அஜித்குமார் பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் சுஜித்தை தேடிய போதும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு ஓடிய சுஜித் அங்கு கேட்டரிங் காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையில் சுஜித்தை பேஸ்புக் மூலம் தேடி வந்த அஜித்குமார், அவர் செல்ல பெயரில் ஒரு ஐடி இருப்பதை பார்த்து பிரண்ட் அழைப்பு கொடுத்தார்.

ஆனால் அது தனது மாமா என்பதை கண்டுப்பிடித்த சுஜித் அழைப்பை ஏற்கவில்லை. மேலும் தனது பெயரையும் மாற்றியுள்ளார்.

இதையடுத்து அது காணாமல் போன சுஜித் தான் என்பதை அறிந்த அஜித்குமார் இது குறித்து சைபர் கிரைம் பொலிசிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சுஜித் பேஸ்புக்கை ஆய்வு செய்து அவர் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்தனர்.

தற்போது 23 வயதாகும் சுஜித்தை பொலிசார் ஐதராபாத்துக்கு அழைத்து வந்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

3 குழந்தைகளை உயிரோடு எரித்து கொன்ற தாய் : அடுத்து செய்த திடுக்கிடும் செயல்!!

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையால் தனது மூன்று குழந்தைகளையும் எரித்துக்கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கும் மனைவி தனலட்சுமிக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டது.

இளங்கோவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனலட்சுமி தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது மாமனார் வீட்டுக்குச் சொன்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை தனலட்சுமி தனது மூன்று குழந்தைகள் மீதும் மண்ணெண்ணய் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைச் செய்துகொண்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் தலைமறைவான இளங்கோவனை தேடி வருகிறார்கள்.

காதல் ஜோடியை பிரிக்க முயன்ற பொலிஸார் : திடீரென கழுத்தை அறுத்துக்கொண்ட காதலன்!!

கரூரில் உதவி கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடியை பொலிஸார் பிரிக்க முயன்றதால், திடீரென காதலன் காவல்நிலையம் முன்பு கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அண்ணாநகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் கோபிநாத் (24). இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திய கோபிநாத், சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரும் கரூர் பாரதி நகரை சேர்ந்த 19 வயதான கோபிகாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கோபிகா ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கோபிகா வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் இருவரும் கடந்த 9-ம் தேதியன்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் தொடர்ந்து கோபிகா வீட்டில் இருந்து எதிர்ப்பு வந்ததால், பாதுகாப்பு கோரி இருவரும் கடந்த 11-ம் தேதியன்று கரூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

அங்கு காவல்நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜ், அமைச்சரின் உறவு பெண்ணான கோபிகாவை மறந்துவிட்டு ஓடிவிடு. இல்லையென்றால், உன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் என்ன செய்வதென தெரியாமல் திகைத்த கோபிநாத், உடனடியாக தான் சட்டை பையில் வைத்திருந்த பிளேடால், காதலியின் கண்முன்னே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோபிநாத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சம்பவம் அறிந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர், இந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது என கூறியுள்ளனர்.

மது போதையில் விஷ பாம்பினை கடித்து தின்ற நபர் : அடுத்த நடந்த சோகம்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மது போதையில் விஷ பாம்பினை கடித்து தின்ற நபர் அடுத்த சில மணிநேரங்களில் பரிதாபமாக பலியாகியுள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள குட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஹிபால் சிங் (40).

நேற்று அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த மஹிபால், சாலை ஓரத்தில் சென்றுகொண்டிருந்த குட்டி பாம்பு ஒன்றினை பிடித்து சாப்பிட ஆரம்பித்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் தங்களுடைய செல்போனில் வீடியோவாக படமெடுக்க ஆரம்பித்தனர். வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே மஹிபால் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் உட்கொண்ட பாம்பு வெளிவரவில்லை.

இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ளும் போதே சிகிச்சை பலனின்றி மஹிபால் உயிரிழந்தார்.

பின்னர் இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் மஹிபால் குறித்து மேற்கொண்ட விசாரணையில், அவர் தன்னுடைய மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

கணவன் இறந்த சில மணி நேரத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணி பெண்!!

பெங்களூரில் கத்தியால் குத்தப்பட்ட கணவன், இறந்தது தெரியாமலே கர்ப்பிணி பெண் ஒருவர் ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் 31 வயதான குரு சங்கர். இவர் பெல்லந்தரில் உள்ள நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 6-ம் தேதியன்று கம்ப்யூட்டர் மையத்திற்கு பிரிண்ட் அவுட் எடுக்க சென்றுள்ளார். அங்கு கடையின் உரிமையாளர் கார்த்திக் மற்றும் குரு பிரசாத் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர், குரு பிரசாத் தலையில் திருப்புளியல் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த குரு பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த பொலிஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

இதற்கிடையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருடைய மனைவி மமதாவிற்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மமதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மமதா மகிழ்ச்சியாக இருந்தாலும், கணவர் இறந்த செய்தியினை இன்னும் உறவினர்கள் அவருக்கு தெரியப்படுத்தவில்லை.

இந்த சம்பவமானது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் தலையை துண்டாக்கியது ஏன் : கணவனின் வாக்குமூலம்!!

மனைவியின் தலையை துண்டாக வெட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற கணவன் அதற்காக காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் Tarikere தாலுகாவின் Shivani பகுதியைச் சேர்ந்தவர் Satish (35). இவருக்கும் Roopa (28) என்ற பெண்ணிற்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் சதீஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூர்மையான ஆயுதம் கொண்டு, மனைவியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார்.

அதன் பின் அதை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்துள்ளார்.

இந்நிலையில், மனைவியை கொலை செய்தது குறித்து காவல் நிலையத்தில் கணவர் அளித்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு, எங்களது திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. கடந்த இரண்டு வருடமாகத்தான் அவளது போக்கில் சந்தேகம் வந்தது.

நாளடைவில் தான் எனக்கு தெரிந்தது சுனில் என்ற ஒரு இளைஞருடன் அவளுக்கு பழக்கம் இருந்தது. இதனை கேள்விப்பட்ட நான் ரூபாவை கண்டித்ததோடு, அவள் மீது பாசத்தையும் காட்டினேன்.

இருப்பினும் அவர்களுடனான தொடர்பு நீண்டது. நான் கேட்டதாக கூறி சிலரிடம் மூன்று லட்சம் பணம் ஏற்பாடு செய்து, அதனை அந்த இளைஞனுக்கு கொடுக்கக் கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். இதனையும் கேள்விப்பட்ட நான், ரூபாவை கண்டித்தேன்.

இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினேன். அப்போது வீட்டில் மனைவி ரூபா அந்த இளைஞருடன் தனிமையில் இருப்பதை பார்த்தேன். என்னால் ஆத்திரம் தாங்க முடியவில்லை. இருவரையும் தாக்கினேன். இதில் அந்த இளைஞன் தப்பி ஓடிவிட்டான்.

ஆனால், ஆத்திரம் தீராத நான், ரூபாவைக் கொலை செய்து, அவளின் தலையைத் துண்டாக வெட்டி எடுத்து, சாக்கு பையில் போட்டு எடுத்து வந்தேன். இருசக்கர வாகனத்தில் 20 கிலோ மீட்டர் வந்திருக்கிறேன்.

அவர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்தேன் சார். தாங்க முடியாமல் அதுதான் தலையை சீவிட்டேன். எனக்கு என்னென்னா அவன் ஓடிட்டான், அதான் வருத்தமே என வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிக்மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் சதீஸை பொலிசார் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கேரள வெள்ளத்தில் 35 பேர் உயிரை காப்பாற்றிய நபருக்கு கண் பார்வை பறிபோனது : கண்ணீர் பின்னணி!!

கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த 35 பேர் உயிரைக் காப்பாற்றிய சதாசிவன் என்பவருக்குக் கண் பார்வை பறிபோகியுள்ளது.

கேரள வெள்ளத்தின்போது செங்கானுர் பகுதி முற்றிலும் தண்ணீரில் தத்தளித்த போது சதாசிவன் என்பவருக்கு அவரின் நண்பர் சந்தோஷிடமிருந்து போன் வந்தது.

போனில், தன் குடும்பம் உட்பட 35 பேர் வெள்ளத்தில் தவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து பதறியடித்து அங்கு சென்ற சதாசிவன், நண்பர்களுடன் இரவு முழுவதும் போராடி 35 பேரையும் வெள்ளத்திலிருந்து மீட்டார்.

மீட்புப் பணியின்போது கூர்மையான கட்டை ஒன்று சதாசிவனின் வலது கண்ணில் குத்தி ரத்தம் வழிந்தது.

அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது கண் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதற்கு சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இரண்டு கண்களின் பார்வையும் பறிபோகும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.

ஆனால் சாதாரண டீ வியாபாரியான சதாசிவத்தால் சிகிச்சை எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக தனது பார்வையை அவர் முற்றிலுமாக இழந்தார்.

இவரின் மூத்த மகன் படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு மகன் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்குப் பேச்சு வாராது. மூன்றாவதாக ஆர்யா என்ற மகள் உள்ளார்.

சதாசிவன் கண் பார்வை இழந்திருப்பதால் குடும்பம் செய்வதறியாது தவித்து வருகிறது

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவருக்கு உதவ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 வயது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை போல வெளியேறும் ரத்தம் : பரிதாப நிலை!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வயது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை போன்று ரத்தம் வெளியேறியுள்ளதால் அச்சிறுமி அவதிக்குள்ளாகியுள்ளார்.

நாகராஜ் – லட்சுமி தேவி தம்பதியினரின் மூன்றாவது மகள் அர்ச்சான 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியதைடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில், கண்கள், மூக்கு, காது, கைகள் உள்ளிட்ட பல இடங்களில் ரத்தம் வந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பெற்றும் ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை. தொடர்ந்து ரத்தம் வெளியாகிகொண்டே இருக்கிறது.

இதுகுறித்து தந்தை கூறியதாவது, நான் கூலித்தொழிலாளி இதுவரை 1 லட்சத்திற்கு மேல் கடன்வாங்கி எனது மகளுக்கு மருத்துவ செலவு செய்துள்ளேன். மேற்கொண்டு சிகிச்சை தொடர போதிய வசதி இல்லை என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துகூர் அசோக்குமார் கூறியதாவது, இதுவரை சிறுமியின் உடலில் இருந்து 4 முறை ரத்தம் வெளியேறியுள்ளது. பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உடலில் நோய்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இவ்வகை பாதிப்பு த்ரோபாஸ்டினியா எனப்படுத் ரத்த ஒழுங்கின்மை காரணமாக ஏற்படுத் ரத்தப்போக்கு.

இதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள சிறுமியை சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவரது உடலில் ரத்தம் வெளியேறினாலும், அவர் சீரான ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு பேரணி!!

வவுனியா, சின்னச்சிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் விழிப்புணர்வு பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.

புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான குறித்த பேரணி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பேரணியில் கலந்து கொண்டிருந்தோர் போதை, போதை அது சாவின் பாதை, காசைக் கொடுத்து நோயை வாங்காதே, புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும், நீ குடித்த மது உன்னைக்கொல்லும் அது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இந்த பேரணியில் பள்ளிவாசல் தலைவர் ரியல்.எம்.இம்தியாஸ், எஸ்.டி.எஸ் செயலாளர் எம்.ஜமீன், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.பி.நிவாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் சாதித்த தமிழச்சி!!

வெற்றி எனும் இலக்கை அடைய சோதனைகளை கடக்க வேண்டியது அவசியம் என பல சாதனையாளர்கள் சொல்லி கேட்டிருப்போம்.

அந்த வகையில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து தான் எதனால் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிட்டதோ அதை கொண்டே சாதனை படைத்த தமிழ் பெண்மணி தான் தர்சினி சிவலிங்கம்.

ஆறு அடியும் பத்து அங்குலமும் உயரத்தை கொண்ட இவர் சிறுவயதில் ஏளன சிரிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளார்.

எனினும் தற்போது தனது தாய் நாட்டிற்கு அடுத்தடுத்து பெருமைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தர்சினி சிவலிங்கம் உள்ளிட்ட இலங்கை வலைபந்தாட்ட அணி, ஆசிய வலைபந்தாட்ட கிண்ணத்தினை இம்முறையும் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த அணியில் தர்சினியின் பங்களிப்பு ஈடுசெய்ய முடியாதது.

1982ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக தர்சினி பிறந்துள்ளார். இவர்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் உயரமானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் தர்சினி சிவலிங்கம் வெகு விரைவாக அதீத உயரத்தை அடைந்துள்ளார். அதேபோன்று தர்சினி தனது திறமையிலும் உச்சத்தை தொட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் துறையில் விரிவுரையாளராக வர வேண்டும் என்ற இலட்சியத்தை கொண்ட தர்சினி கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்சினி தனது வாழ்க்கையில் சிறுவயதில் மோசமான அனுபவங்களை கண்ட போதும் தற்போது அவர் உலகறிந்த பிரபலமாக மாறியுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றின் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற இலங்கையர்!!

ஐரோப்பிய நாடான சுவீடனில் நடைபெற்ற தேர்தலில், வரலாற்றில் முதல் முறையாக இலங்கையர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

மக்கள் விடுமுதலை முன்னணி கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராக 1986ஆம் ஆண்டு செயற்பட்ட சுனில் ஜயசூரிய என்பவரே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையில் இடதுசாரி இயக்கத்திற்காக பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளார். 1996ஆம் ஆண்டு சுவீடன் இடதுசாரி கட்சியுடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.

சுவீடன் தேர்தலில் பிரதான நிர்வாக பிரிவுகள் மூன்றான நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் நகர சபையை இலக்கு வைத்து 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார்.

இம்முறை அவர் LEFTPARTY கட்சியின் வேட்பாளராக OREBRO சபைக்காக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கொழும்பில் கோபத்துடன் மனைவி : கணவனின் மோசமான முடிவால் மூவர் மரணம்!!

பொலநறுவையில் நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

பொலநறுவை, வெலிகந்த பிரதேசத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் தந்தை தனது 2 பிள்ளைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மூவரும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் தனது பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவி சில மாதங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு சென்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பில் தொழில் செய்யும் தனது மூத்த மகனுடன் மனைவி தங்கியிருப்பதாகவும், அவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய அந்த நபரின் மனைவியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளனர். தான் அடுத்த மாதம் வருவதாக மனைவி கூறியுள்ளார். ஆனாலும் மனைவி வரவில்லை.

இதன் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியினால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் Knowledge Box Media Academy நடாத்தும் ஒருநாள் ஊடக செயலமர்வு!!

வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக Knowledge Box Media Academy நடாத்தும் ஒருநாள் ஊடக செயலமர்வு இம்மாதம் 15ம் திகதி சனிக்கிழமை காலை 09 மணிமுதல் மாலை 04.30 மணிவரை இடம்பெறவுள்ளது.

செய்தி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சித்தயாரிப்பு, செய்தி வாசிப்பு மற்றும் கலையக அனுபவம், நவீன ஊடகங்கள் என்னும் தலைப்புகளில் இலங்கையின் தலைசிறந்த ஊடகவியலாளர்களால் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளன.

அத்துடன் செயலமர்வில் செய்தி வாசிப்பதற்கான சந்தர்ப்பம், நிகழ்ச்சித்தயாரிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு உட்பட மொழிநடை, உச்சரிப்பு, புகைப்படக்கலை நுட்பங்கள், காணொளிகளை பதிவு செய்வதற்கான உத்திகளுடன் வாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளன.

மேலும் ஊடகத்துறை சார் கற்கை நெறிகள் மற்றும் பட்டப்படிப்புக்கான வழிகாட்டல்கள் என்பனவற்றுடன் செயலமர்வில் கலந்துகொள்பவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

மட்டுப்படுப்பத்தப்பட்ட ஆசனங்களே இருப்பதால் பதிவுகளுக்கும் மேலதிக தகவல்களுக்கும் தொடர்புகொள்ளுங்கள். – 0774828281