வவுனியா வைரவப்புளியங்குளத்தில் நேற்று (11.09.2018) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றுவளைப்பின் போது 20க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே பாடசாலை இளைஞர்கள் மற்றும் வீதியில் சில இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாமை, ஓர் மோட்டார் சைக்கிலில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது தொடர்பாக பல முறைப்பாடுகள் பொதுமக்களினால் பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டது.
இதனை கருத்தில் கொண்ட வவுனியா மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான 8க்கும் மேற்பட்ட போக்குவரத்து பொலிஸார் வைரவப்புளியங்குளம் வீதியில் நேற்று மதியம் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது 20க்கு மேற்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைக்கு சமூக அமைப்புக்கள், அப் பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்ததுடன் இவ்வாறான நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இன்று (12.09.2018) மின்சாரம் தாக்கியதில் 29 வயதுடைய நிதர்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை அவரது வீட்டு கிணற்றை மின் இயந்திரம் மூலம் துளையிட்டு கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் குறித்த இளைஞன் பாதிப்படைந்த நிலையில் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாக குறித்த இளைஞனின் நண்பர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நகரில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இன்று (12.09.2018) இடம்பெறவிருந்த திருமண நிகழ்வினை வவுனியா இளைஞர்கள் மற்றும் மனைவியின் உறவினர்கள் நேரில் சென்று தடுத்து நிறுத்தியதுடன் பொலிஸ் நிலையத்திற்கு மணமகனை அழைத்துச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் முடித்துவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் மனைவியை கைவிட்டு, கிளிநொச்சியில் வேறு ஒரு திருமணம் முடித்துவிட்டு அப் பெண்னையும் கைவிட்டுவிட்டு இன்று வவுனியாவில் மூன்றாவது திருமணத்தினை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போது திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் குறித்து இரண்டாவது மனைவி தெரிவிக்கும் போது,
கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பகுதியில் திருமணம் முடித்து இரண்டு இளம் பிள்ளைகளுடன் அப் பெண்ணை கைவிட்டுள்ளார். இதனால் அப்பெண் வெளிநாடு சென்று தனது பிள்ளைகளைக் கவனித்து வருகின்றார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் என்னைத் திருமணம் செய்து கொண்டார். இதற்கான ஆதாரங்களையும் புகைப்படங்களையும் காண்பித்துள்ளார். தற்போது என்னையும் கைவிட்டு இன்று வவுனியா கூமாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரைத் திருமணம் முடிக்க முயற்சிப்பது எனக்குத் தெரியவந்தது.
எனவே இதனைத்தடுத்து நிறுத்தி இவ்வாறான கயவர்களின் முகத்திரையைக் கிழிப்பதுடன் சமூகத்திற்கு இவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்றே நான் இவ்வாறு துணிச்சலுடன் நடந்துகொண்டுள்ளேன்.
கடந்த வருடத்திலிருந்து என்னுடன் முரன்பட்டுக்கொண்டிருந்துள்ளதுடன் சீதனம் கேட்டு வற்பறுத்தியும் வந்துள்ளார். இவர் பணத்திற்காகவே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு என்னைக் கைவிட்டுச் சென்ற நிலையிலும் என்னுடன் நேற்று இரவு வரையில் தொலைபேசியில் தொடர்புடன் இருந்துள்ளார்.
இதையடுத்து எனக்குத் தெரிந்தவர்களின் உதவியுடன் இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தை அறிந்துகொண்டேன். அதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 2017.12.22, 2018.02.03 அன்றைய தினங்களில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் குடும்ப வன்முறைகள் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்று (2018.09.11) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றித்திருமணம் முடித்துள்ளதாக முறைப்பாடும் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை வவுனியா நகரில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற இருந்த திருமணமே ஆலய நிர்வாகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆலய வளவிலுள்ள திருமண மண்டபத்தில் இடம்பெற்ற திருமணத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
குறித்த மூன்று திருமணங்கள் முடிக்க முயன்ற புதுமாப்பிளை பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாகவும் இரண்டாவது மனைவி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தினை ஏற்பாடு மேற்கொண்ட உறவினர்கள் புதுமாப்பிளையான ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இலங்கையை பூர்வீமாக கொண்ட தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
35 வயதான சுபா உமாதேவன், மூன்று ஆண்டுகள் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
ஜெனிவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்கள் மற்றும் சர்வதேச சட்டம் தொடர்பான சிறப்பு முதுகலை பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.
கனடாவின் ஒட்டாவாவில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகள் மற்றும் நவீன மொழிகள் தொடர்பான பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பெண் வர்த்தகர்களுக்கான சர்வதேச அமைப்பின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் சுபா உமாதேவன், யுனைஸ்கோ அமைப்பு ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் சர்வதேச திட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறார்.
தனது புதிய பதவி தனது இதயத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் சார்ந்தது என சுபா உமாதேவன் கூறியுள்ளார். நான் ஒரு அகதி சிறுமியாக இருந்துள்ளேன். எனக்கு எதிராக எப்படியான பாகுபாடுகள் இருந்தது என்பதை அறிவேன்.
எனது உரிமைகளுக்காக போராட எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. இளையோர் மற்றும் பெண்கள் ஒதுக்கப்பட்ட குழுவிற்கு உரியவர்கள் என்பதை நான் ஆரம்பத்திலேயே அறிந்திருந்தேன்.
தனது அமைப்பின் பிரதான செயல் அதிகாரி தன் மீது மரியாதை வைத்துள்ளதாகவும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் நிறுவனம் என்ற வகையில் அதனை ஊக்கப்படுத்தவும் விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க போவதாகவும் சுபா கூறியுள்ளார்.
புதிய முகாமைத்துவப் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள சுபாவுக்கு முன்னாள் அந்த பதவியில் இருந்த Jan Schneider தீர்க்கமான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார். சுபா தற்போது புதிய சவாலை எதிர்நோக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட அமைப்பு சர்வதேச ரீதியில் 75 நாடுகள் 1.5 மில்லியன் சிறுவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் வறுமையில் இருந்து மீள உதவிகளை வழங்கி வருகிறது.
இதேவேளை, சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட அமைப்புகடந்த 80 ஆண்டுகளாக பெண் பிள்ளைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த சிலரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
நீர்கொழும்புக்கு மேற்கு திசையில் கடலில் சென்றுக்கொண்டிருந்த படகை கடற்படையினர் இன்று காலை சுற்றிவளைத்துள்ளனர்.
அதில் பயணித்த 88 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் நாட்டின் பால்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஆபிரிக்கா கண்டத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியான ரியூனியன் தீவுக்கு செல்ல முயற்சித்துள்ளனர் என கடற்படையின் பேச்சாளர் கமாண்டார் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு அலம்பில் கடற்கரையில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளி சுறா மீனை காப்பற்றிய கடற்படையினர், அதனை மீண்டும் கடலில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்தின் ஆய்வாளர் மொஹான் குமார, அலம்பில் கடற்படை அதிகாரிகளுக்கு கரையொதுங்கிய சுறா மீன் குறித்து அறிவித்துள்ளார்.
இதனையடுத்து கடற்படையினர் கடும் சிரமப்பட்டு, சுறா மீனை மீட்டு, 3 கடல் மைல் தொலைவிற்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.
சுறா குடும்பத்தை சேர்ந்த மிகப் பெரிய உயிரினமான வெள்ளை புள்ளி சுறா மீன் சுமார் 900 கிலோ கிராம் எடை கொண்டதாகவும் 9 மீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும்.
இந்த வகை சுறா மீன்கள் 70 முதல் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை. மேலும் இந்த மீன் இனம் உலகில் அருகி வரும் மீன் இனம் என அறிவிக்கப்பட்டுள்ளளதுடன்.
இலங்கையில் இந்த மீனை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.முல்லைத்தீவு அலம்பில் கடற்கரையில் ஒதுங்கிய மிகப் பெரிய உயிரினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் பெண் கன்னியாஸ்திரி ஒருவர் பேய் சொன்னதாக கூறி, கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், அதன் அர்த்தம் தற்போது தெரியவந்துள்ளது.
இத்தாலியின் Sicily பகுதியில் இருக்கும் Palma di Montechiaro பகுதியில் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் கன்னியாஸ்திரியான Maria Crocifissa della Concezione பேய் சொன்னதாக கூறி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்த கடிதம் இன்றளவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதில் அப்படி என்ன தான் எழுதியிருக்கிறது என்பதை அறிய தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதன் பயனான இத்தாலியின் Ludum science centre அந்த கடித்தத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளது.
அதாவது Maria Crocifissa della Concezione என்ற பெண் கன்னியாஸ்திரி அங்கிருக்கும் தேவாலயத்தில் 15 வயது முதல் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது ஒரு நாள் காலை எழுந்து பார்க்கையில் தன் உடல் முழுவதும் மைகள் இருந்துள்ளன. இரவு முழுவதும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன் என்பதை உணர்ந்துள்ளார்.
அந்த கடிதத்தை பேய் தான் எழுத வைத்துள்ளது என்று நம்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கடவுள், பரிசுத்தமான ஆவிகள் போன்றவை பற்றி எழுதப்பட்டுள்ளது. கடவுள் என்ற ஒன்று மனிதனால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து டேனியல் என்ற அந்த ஆராய்ச்சி மையத்தின் நபர் கூறுகையில், என்னைப் பொறுத்த வரை இது பேய் எழுத சொன்னது போன்று தெரியவில்லை.
அந்த பெண் கன்னியாஸ்திரிக்கு schizophrenia பிரச்சனை இருந்திருக்கும், அவருக்கு பல மொழிகள் தெரிந்திருக்கும். இதனால் அவர் அனைத்து மொழிகளையும் ஒன்றாக ஏதோ ஒன்றை எழுதி, அது பேய் எழுத வைத்ததாக கற்பனை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் இளம் பெண் மரணமடைந்த நிலையில் அவரின் சடலத்தை மயான ஊழியர்கள் பாதுகாக்க தவறிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட் மான்செஸ்டரை சேர்ந்தவர் சோனியா டோர் (60). இவரின் மகள் கேப்ரி சிறுநீரக செயலிப்பால் சமீபத்தில் மரணமடைந்தார்.
இதையடுத்து அவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கடந்த 31-ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கேன் இறுதிச்சடங்கு நிறுவனம் மூலம் சுடுகாட்டில் கேப்ரியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த சோனியா சடலத்தை அவர்களிடம் கொடுத்தார்.
ஆனால் சடலத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைக்கவும், பதப்படுத்தவும் அந்நிறுவனம் தவறியதால் கேப்ரியின் சடலம் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருந்துள்ளது.
இதையடுத்து சடலத்தை நீங்கள் பார்க்க வேண்டாம் என சோனியாவிடம் அதன் ஊழியர்கள் கூறிய நிலையில் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சோனியா கூறுகையில், என் மகள் சடலத்தை அவர்கள் பாதுகாப்பாகவும், பதப்படுத்துவதாகவும் கூறிய நிலையில் அதை செய்யவில்லை. இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.
இதனிடையில் இச்சசெயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள கேன் இறுதிச்சடங்கு நிறுவனம், இறுதிச்சடங்குக்காக சோனியாவிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிட்டதாவும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சியர்லீடராக இருந்துவரும் மாணவி ஒருவர் மற்றொரு பெண்ணுடன் பயங்கரமாக சண்டை போடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Savannah Sprague என்ற மாணவி சியர்லீடராக பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளி வளாகத்தில் தன்னுடைய சியர்லீடர் உடையில் அமர்ந்திருக்கும்போது அருகில் வந்த பெண் ஒருவர் சண்டைக்கு அழைக்கிறார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து Savannah, நாங்கள் உன்னை பற்றி பேசவில்லை என பதிலளிக்கிறார். தொடர்ந்து வாக்குவாதம் செல்லும்போது, ஒரு கட்டத்தில் அடையாளம் காணமுடியாத அந்த பெண் Savannah-வின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார்.
அடுத்த சில நிமிடத்திலேயே இருவரும் கட்டி புரண்டு சண்டை போடுகின்றனர். அந்த வீடியோ இறுதியில் அடையாளம் தெரியாத பெண்ணை Savannah பயங்கரமாக தாக்குவதை போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோவினை இணையத்தில் வெளியிட்ட Savannah-வின் அக்கா Sierra, தன்னுடைய தங்கையை நினைத்து பெருமை கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில மணி நேரத்திலே 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அதேசமயம் பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் இளைஞர் ஒருவர், Savannah அடையாளம் தெரியாத பெண்ணிடம் அடிவாங்கும் வீடியோவினை வெளியிட்டு, இதை நினைத்து தான் நீங்கள் பெருமைப்படுகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தின் Tarikere தாலுகாவின் Shivani பகுதியைச் சேர்ந்தவர் Satish (35). இவருக்கும் Roopa (28) என்ற பெண்ணிற்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சதீஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூர்மையான ஆயுதம் கொண்டு, மனைவியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார்.
அதன் பின் அதை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்துள்ளார்.
அப்போது அவர் இவள் என்னை ஏமாற்றிவிட்டாள். தோட்டத்தில் ஒரு பையனுடன் இருப்பதைக் கண்டேன். இவளை கொலை செய்துவிட்டேன். அவன் தப்பி ஓடிவிட்டான் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தகாத உறவை கண்டித்த கணவனை வெட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் அருகே உள்ள அன்னஞ்சியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரின் மனைவி லட்சுமி(33). இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமாணது.
லட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்து(26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது.
இதையறிந்த முனியாண்டி இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் கள்ள உறவை முறித்துக்கொள்ள மறுத்த லட்சுமியும், முத்துவும் இவர்களுக்கு தடையாக இருக்கும் முனியாண்டியை கொல்ல திட்டமிட்டனர்.
அதன் படி முனியாண்டி தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டில் புகுந்த இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அல்லிநகரம் போலீஸார் கடந்த 2015ம் ஆண்டு ஜீன் மாதம் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நீதிபதி சீனிவாசன் குற்றவாளிகள் முத்து, லட்சுமி இருவருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் செந்தில்நாதன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பூந்தோட்ட காவல்காரன், பாலைவன ராஜாக்கள், இளவரசன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் செந்தில்நாதன். இவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய பூந்தோட்ட காவல்காரன் வெள்ளிவிழா கொண்டாடியது.
வெற்றிப்படங்கள் காரணமாக கோடிகளை குவித்து தயாரிப்பாளர்களால் கொண்டாடப்பட்டார். இந்நிலையில்தான் இவரது வாழ்வில் விதி விளையாடியது. 2009 ஆம் ஆண்டு உன்னை நான் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். ஆனால் படம் விற்பனையாகவில்லை. கடன் வாங்கிய பணம் வட்டி மேல் வட்டி வந்து அதனை கட்ட முடியாமல் வறுமைக்கு ஆளானார்.
ஒரு கட்டத்தில் பணம் தேவை என்பதற்காக, சின்னத்திரையில் நடிக்க வந்தார். திடீரென அந்த வாய்ப்பும் பறிபோனதால் இடிந்துபோனார்.
உலகமே இருண்டு திக்குதிசையின்றி தவித்த இவர், வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் பிச்சை எடுத்துள்ளார்.
இந்த தகவலை தனது நண்பர் விடியல் ராஜிடம் போனில் தெரிவித்து அழுதுள்ளார், பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேன், நான் சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால், இவரது குடும்பத்தினர் காஞ்சிபுரத்தில் இவரை தேடி வருகின்றனர்
தசாவூர் மாவட்டத்தில் காதலி தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாங்கமுடியாமல் காதலனும் தற்கொலை செய்துகொண்டார்,
எம்காம் படித்து வரும் ஜெயஸ்ரீ, விக்னேஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் என்பதால் வழக்கம்போல இவர்கள் வெளியில் செல்வது வழக்கம்.
இருவரும் செப்டம்பர் 2 ஆம் திகதி தஞ்சை நெய்வாசல் நத்தம்படி பாலம் கல்லணை கால்வாய் பகுதியில் நின்று பேசிகொண்டு இருந்தனர்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. திடீரென விக்னேஷ் கன்னத்தில் அறைந்த ஜெயஸ்ரீ, திடீரென கல்லனை கால்வாயில் குதித்துள்ளார். அதில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவரை இழுத்து சென்றது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஜெயஸ்ரீயை மீட்பதற்காக அவரும் ஆற்றில் குதித்தார். அவரும் தண்ணீரில் நீந்த முடியாமல் தத்தளித்தார். இதனை அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் பார்த்து கால்வாயில் குதித்து விக்னேசை மீட்டனர். ஆனால் ஜெயஸ்ரீயை மீட்க முடியவில்லை.
ஜெயஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்தபோது, அதில் பெயர் குறிப்பிடாமல் இருந்த ஒரு எண் இருந்தது. இந்த எண் யாருடையது என்று கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திடீரென்று தன்னை அறைந்துவிட்டு கால்வாயில் குதித்துவிட்டதாக விக்னேஷ் கூறியுள்ளார்.
இதையடுத்து 2 நாட்கள் கழித்து ஜெயஸ்ரீயின் உடல் தஞ்சை அருகே துறையூர் பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டது.
இது குறித்து தஞ்சை பொலிசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
காதலி தற்கொலை செய்த கொண்ட நாளில் இருந்து விக்னேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று விக்னேஷ், தான் காதலி சென்ற இடத்திற்கே தானும் செல்வது என்று முடிவு செய்து விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்தியாவில் மனைவியின் சித்ரவதை தாங்காமல் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுரேந்தர் குமார் தாஸ் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சுரேந்தர் விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இதனிடையில், சுரேந்தரின் மனைவி ரவீணா தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என சுரேந்தரின் சகோதரர் நரேந்தரா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சுரேந்தர்கும், ரவீணாவுக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் நடந்த மூன்று மாதங்களிலேயே வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனவும் விவாகரத்து பெற விரும்புவதாகவும் சுரேந்தர் என்னிடம் கூறினார்.
சுரேந்தர் எங்கள் குடும்பத்தினருடன் இருப்பதை விரும்பாத ரவீணா அவரை தனியாக பிரித்து சென்று வாழ்ந்தார்.
எங்களிடம் சுரேந்தர் போனில் பேசினால் கூட அதை விரும்பாத ரவீணா அவரிடம் சண்டை போட்டு மனதளவில் சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் தான் சுரேந்தர் தற்கொலை செய்து கொண்டுள்ளார், ரவீணா மீது வழக்கு தொடரவுள்ளேன் என கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் இணைந்து கொண்டு, 4 வயது சிறுமியின் பின் பக்கத்தில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹைதராபாத் மாநிலம் Malakpet பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சரிதா. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாகா தன்னுடைய கணவரை பிரிந்து காதலன் வெங்கட் ரெட்டியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று சரிதா தன்னுடைய கணவருடன் நடந்த சண்டைக்கு பகடைக்காயாக 4 வயது மகளை பயன்படுத்தியுள்ளார்.
இதனை அறிந்த கொண்ட பக்கத்து வீட்டார் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சரிதா மற்றும் அவருடைய காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் உடல்முழுவதும் காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும், சிறுமியிடம் வீடியோ மூலம் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டது. அதில், முதலில் அப்பா தான் என்னை அடித்தார். பின்பு கரண்டியை அம்மா சூடு பண்ணி கொடுத்ததும், அதை வைத்து என்னுடைய பின் பக்கத்தில் சூடு போட்டார் என கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் சிறுமியின் கை, கால்களின் பாதங்கள் மற்றும் உடல் பகுதியில் ஏராளமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.