38 முறை கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட இளம்பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

மத்தியபிரதேச மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை 38 முறை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள மீடியா துறையில் வேலை செய்து வருபவர் சுப்ரியா ஜெயின் (25). இவர் அங்கு விடுதி ஒன்றில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று விடுதியை நோக்கி வந்த கமலேஷ் சாஹு என்ற இளைஞர் திடீரென தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு 38 முறை கொடூரமாக, சுப்ரியாவின் மீது குத்தியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இரண்டு இளைஞர்கள் உடனடியாக அவரச பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சுப்பிரியவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் குற்றவாளி கமலேஷை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சுப்பிரியாவும் கமலேஷும் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளார்.

கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக கமலேஷ், சுப்பிரியவிடம் தன்னுடைய காதலை கூறியுள்ளார். ஆனால் சுப்ரியா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்தூரில் வேலை கிடைத்ததும், சுப்ரியா இங்கே வந்துவிட்டார்.

இதற்கிடையில் சுப்ரியாவின் இருப்பிடம் தெரியாமல் தவித்த கமலேஷ் ஒருவழியாக முகப்புத்தகத்தில் சுப்ரியாவை கண்டுபிடித்தார்.

முகப்புத்தகத்தில் பேச முயற்சித்தபோது கமலேசை சுப்ரியா பிளாக் செய்துள்ளார். மேலும் வேறு சில ஆண்களுடன் சுப்ரியா சுற்றித்திரிவதை பார்த்த கமலேஷிற்கு சகித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் தான் இப்படிப்பட்ட ஒரு செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்ரியா, வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திய தண்டனை சட்ட பிரிவு 302-ன் கீழ் காமேலேஷ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கணவன் மீது சந்தேகம் : பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவேற்றிய மனைவிக்கு நேர்ந்த துயரம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவின் குளத்தூர் பகுதியில் குடியிருந்து வருபவர் 34 வயதான ரஞ்சு, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தமது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த ரஞ்சு, குறித்த பெண்ணின் புகைப்படத்துடன் தமது கணவரின் புகைப்படங்களையும் இணைத்து ஆபாச புகைப்படங்களை உருவாக்கி அதை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் தொடர்புடைய பெண் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு கேரள சைபர் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் சமூக வலைதளத்தில் ஆபாச படங்களை பதிவேற்றிய குற்றத்திற்காக ரஞ்சுவை கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி ஆபாச புகைப்படங்களை உருவாக்க ரஞ்சுவுக்கு உதவிய இளைஞரையும் பொலிசார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

நிறைமாத கர்ப்பிணி பெண்ணை தூக்கிக்கொண்டு ஓடிய பொலிஸார் : குவியும் பாராட்டுக்கள்!!

ஹரியானா மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை, தன்னுடைய கையிலே தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்த பொலிஸாருக்கு பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மகேஷ்- பாவனா தம்பதியினர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாவனாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மதுரா ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், பொலிஸார் மற்றும் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், ஆட்டோவின் மூலம் பாவனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெண்கள் மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் வாகனம் எதுவும் கிடைக்காததால், பொலிஸாரே தன்னுடைய கைகளில் பாவனாவை தூக்கி கொண்டு மருத்துவனையில் சேர்த்துள்ளார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பாவனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

சரியான நேரத்தில் பாவனா அனுமதிக்கப்பட்டதால், யாருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. தாய்- குழந்தை இருவருமே நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாவனாவின் கணவர் கூறுகையில், ரயிலில் இருந்து நங்கள் இறங்கியதும், வழி தெரியாமல் தவித்தோம். இது எங்களுக்கு புதிய இடம் என்பதால் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டோம். ஆனால் யாருமே எங்களுக்கு உதவ முன்வரவில்லை.

என் மனைவியை மருத்துவமனையில் சேர்த்ததும், அந்த பொலிஸார் சென்றுவிட்டார். மகிழ்ச்சியில் இருந்த நான் அவருக்கு ஒரு நன்றி கூட கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை பொலிஸார் Sonu Kumar Rajora கூறுகையில், நான் என்னுடைய கடமையை தான் செய்தேன். அந்த தம்பதியினர் இந்த இடத்திற்கு புதிது என்பதால் வழி தெரியாமல் தவித்தனர் என விளக்கம் கொடுத்துள்ளார்.

சாதி வெறியால் கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே கொல்லப்பட்ட கணவன் : வெளியான அதிர்ச்சி பின்னணி!!

தெலுங்கானா மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆறு மாதங்களுக்கு பின்னர் பெண்ணின் குடும்பத்தாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

24 வயதேயான இளைஞர் பிரனாய் கொல்லப்பட்டது அவரது தந்தையான பாலசுவாமியை பெரிதும் பாதித்துள்ளது.

உங்கள் மகளை அழைத்துச் செல்ல வேண்டியது தானே, ஏன் எனது மகனை கொலை செய்தீர்கள் என கண்ணீருடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரனாய் மற்றும் அம்ருதா காதலுக்கு கடைசி வரை மறுப்பு தெரிவித்து வந்த தாயார் பிரேமலதா, நடந்த சம்பவங்களை வாழ்நாளில் மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.

கண்முன்னே கணவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாமல் நினைவை இழந்த நிலையில் அம்ருதா மருத்துவமனையில் உள்ளார். 21 வயதேயான அம்ருதாவின் தந்தை மாருதி ராவு நகரின் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவர்.

அவரது வெள்ளை நிற Ford Fortuna நகரில் அவரது அடையாளமாகவே உள்ளது. சம்பவம் நடந்த வெள்ளியன்று மாருதி ராவின் வெள்ளை நிற Ford Fortuna ஐதராபாத் நகரம் நோக்கி புறப்பட்டு சென்றதை பலரும் கவனித்துள்ளனர்.

மட்டுமின்றி கார் புறப்பட்டு சென்றதன் ஒருமணி நேரத்திற்கு பின்னர் குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி பிரனாய் மற்றும் அம்ருதாவின் திருமண வீடியோ ஒன்றை சமீபத்தில் பேஸ்புக்கில் அவர்கள் பதிவேற்றியதாகவும், அதுவே இந்த கொலைக்கு மூல காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் பிரனாயின் உறவினர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் குறித்த வீடியோ வெளியானதன் பின்னர் நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, திருமண வீடியோவை விடவும் உனது மரண வீடியோ அதிக வரவேற்பை பெறும் என மிரட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி திருமண நாள் வரவேற்பு நிகழ்ச்சி முடிவடைந்த மூன்றாவது நாள் இந்தி மொழி பேசும் ஒருவர் பிரனாய் வீட்டுக்கு வந்து அவர்களது காரை வாடகைக்கு கிடைக்குமா எனவும் கேட்டுள்ளதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் பிரனாய் குடும்பத்தினர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் கண்காணிப்பு கமெரா காட்சிகளையும் ஆதாரமாக அளித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரண விவகாரம் : தற்கொலை இல்லை என திடுக்கிடும் தகவல்!!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அது தற்கொலை இல்லை எனவும் விபத்து என்றும் சிபிஐ நடத்திய உளவியல் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இறந்து கிடந்தனர். இதில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், வயதான பெண்மணி தரையிலும் சடலமாக கிடந்தனர்.

விசாரணையில் சொர்க்கத்தை அடைய போகிறோம் என்ற மூடநம்பிக்கையில் 11 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான கடிதங்கள் வீட்டில் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் சிபிஐ சார்பில் முதலில் நடத்தப்பட்ட உளவியல் உடற்கூராய்வின் அடிப்படையில் இது தற்கொலை என முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இது தற்கொலை அல்ல விபத்து என்று இப்போது கூறப்பட்டுள்ளது.

அதாவது சொர்கத்தை அடைவதாக மதச்சடங்குகளை செய்யும் போது தவறுதலாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும், அவர்கள் யாருக்கும் தங்கள் உயிரை விட விருப்பமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 தேர்தலில் யாருக்கு வெற்றி : வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் என இக்னோமிஸ்ட் இன்டர்லிஜன்ஸ் யுனிட் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டின் அரசியலுக்குள் ஓரளவுக்கு பலம் இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான சக்தியை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2020ம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்கும். தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து பலவீனமான நிர்வாகம் காரணமாக தேசிய கொள்கைகளை உருவாக்குவதில் தடையேற்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகமான ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெறும்.

கடந்த பெப்ரவரியில் பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியானது, அந்த பெரமுனவின் பிரபலத்தையும் மக்கள் மத்தியில் இருக்கும் கடுமையான அரசாங்கத்திற்கு எதிரான மனநிலையும் பிரதிபலித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி இடையில் இருந்து வரும் மோதல்கள் மற்றும் தேசிய கொள்கைகளை உருவாக்குவதில் காணப்படும் செயற்திறன்யின்மை ஆகியன காரணமாக ஐக்கிய தேசியக்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் மீண்டும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது சிரமமான காரியமாக இருக்கும்.

இலங்கையின் 19வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற போதிலும் பிரதமராக பதவிக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் நெருக்கமான உறவினர் அல்லது அவருக்கு நெருக்கமான ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பு அரசியல் ரீதியாக ஒரு சக்தியாக மாறி வருகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அவர் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே சிறிய வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் ஜனாதிபதியின் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

மூட நம்பிக்கையால் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பாபனி சங்கர் நந்தா எனும் மாற்றுத்திறனாளி இளைஞர் இருக்கிறார். நந்தாவின் உடல் குறைபாட்டை சரிசெய்ய அவரது தாய், கந்தமால் என்ற பகுதியில் உள்ள கோவிலை அணுகியுள்ளார்.

அங்கு, நந்தாவை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டினால் அவரது குறைபாடு குணமடையும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய நந்தாவின் தாய், அவரை அழைத்துக் கொண்டு பலிகுடா எனும் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால், தனக்கு இதில் விருப்பில்லை என நந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், நந்தாவை வலுக்கட்டாயமாக தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, சாமியார் ஒருவர் தீ மூட்டியுள்ளார்.

இதனால் அவர் படுகாயமடைந்தார். அதன் பின்னர், நந்தாவை வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்குமாறு அந்த சாமியார் கூறியுள்ளார். ஆனால் நந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்முன்னால் தோழிக்கு ஏற்பட்ட கொடுமை : ஆண் நண்பர் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண்ணை, அவரின் ஆண் நண்பரின் கண்முன்னே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பால் பகுதியில் கடந்த வாரம் ஸ்வான் மற்றும் அவரின் பெண் தோழி என இருவரும் கடைவீதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது, இரண்டு நபர்கள் வழிமறித்து செல்போன், பணம் போன்றவற்றை வழிப்பறி செய்துள்ளனர். அதன்பின்னர், ஸ்வானை அடித்துக் காயப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி அவர் கண் முன்னே பெண் தோழியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மறுநாள் காலை, மருத்துவமனையிலிருந்தபடி பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில் குறித்த சம்பவத்தால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்வான், தன்னுடைய வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஈஸ்வர் தாஸ், கன்வர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து,போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்வானின் பெற்றோர், என் மகன் மிகவும் சென்சிட்டிவானவன். அவனால் அங்கு நடந்த கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

வீட்டுக்கு வந்தும், ‘என்னால் தோழியைப் பாதுகாக்க முடியவில்லையே’ என அழுதான். ஆனால், இப்படித் தற்கொலை செய்துகொள்வான் என எதிர்பார்க்கவில்லை’ எனக் கதறினர்.

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் வட பிராந்திய இ.போ.ச இணைந்த தொழிற்சங்கம்!!

 

தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கத் தவறினால் 14 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக வட பிராந்திய இ.போ.ச இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், இந்த வருடம் 01.01.2018 தொடக்கம் 05.01.2018 வரையான காலப்பகுதியில் இ.போ.ச வட பிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தால் நடத்தப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பின் முடிவில் எங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஆனால் எங்களுடைய கோரிக்கைகளுக்கு அமைவாக இன்றுவரை புதிய பேருந்து நிலையத்தில் சுதந்திரமாகவும், சுயமாகவும் செயலாற்ற முடியாதவாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா நிர்வாகத்தினர் பல தடைகளை ஏற்படுத்தி தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக எமக்கு எதிராக சில பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் பொய்யான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்கின்றனர்.

இதனால் இ.போ.சவை முடக்க முனைகின்றார்கள். இ.போ.சவிற்குத் தரப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் எமது தலைமைக் காரியாலயத்தின் கீழுள்ள நிர்வாகத்தை நாம் எதிர்பார்க்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துக்குள் இருந்து பெண் ஒருவரின் கருகிய உடல் மீட்பு!!

கம்பஹா – உடுகம்பொல, கெஹெல்பத்தார பகுதியில் பேருந்து ஒன்றில் இருந்து உடல் கருகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலத்தை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சாரதியின் இருக்கைக்கு அருகில் குறித்த பெண்ணின் சடலம் கருகிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய, குறித்த பேருந்தின் உரிமையாளரின் மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆறு வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த முதியவர்!!

6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவரைக் கைது செய்ய தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொட்டதெனியாவையிலிருந்து அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை செல்லும்போது தம்புத்தேகமவில் உள்ள தனது சகோதரனின் மகளின் வீட்டுக்கு குறித்த முதியவர் சென்றுள்ளார்.

அங்கு சகோதரரின் மகளின் 6 வயது சிறுமிக்கு சொக்லேட் வாங்கி கொடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முதியவர் புனித யாத்திரைக்கு சென்ற பின்னர் சிறுமியின் தாய் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அதன் பிறகு முதியவர் செய்த காரியத்தை தாயிடம் தெரிவித்துள்ளார் சிறுமி.

தாய் தனது மகளை தம்புதெகம மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்தநிலையில், வைத்தியசாலை ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நள்ளிரவில் நிலநடுக்கம்!

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு சுமார் 12.35 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மூதூரில் ஆரம்பத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் பின்னர் தோப்பூர், குச்சவௌி, தம்பலகாமம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பிரதேசங்களில் சிறிது நேர இடைவௌியில் உணரப்பட்டுள்ளது.

நிலாவெளி, உவர்மலை, மனையாவெளி, வீரநகர், பிரதான வீதி, தம்பலகாமம், ஈச்சலம்பற்று, மூதூர், கட்டைப்பறிச்சான், திருக்கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் சில இடங்களில் அச்சத்துடன் தங்கள் வீடுகளை விட்டும் வௌியில் ஓடிவந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 2 – 3 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாகவும், சுனாமிக்கான அச்சம் ஏதும் இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்களுக்கோ, சொத்துக்களுக்கோ எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது

சாதிவெறியின் உச்சம் : திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி மனைவியின் கண்ணெதிரிலேயே கொல்லப்பட்ட கணவன்!!

தெலுங்கான மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபர் 6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பினராய்- அம்ருதா தம்பதியினருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு பினராய் சென்றுள்ளார். தம்பதியினர் மருத்துவமனை வாசலில் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், பினராயின் தலையில் தாக்கியுள்ளார்.

தன்னை காத்துக்கொள்ள அந்த நபருடன் பினராயி சண்டையிட்டபோதும், பினராயின் தலையில் இரும்புகம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு அந்நபர் தப்பித்து ஓடியுள்ளார், தனது கண்ணெதிலேயே தனது கணவன் தாக்கப்படுவதை அறிந்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.

ஆனால், மற்றொரு பெண், அம்ருதாவை அடிப்பதற்கு துரத்தியுள்ளார். அப்பெண்ணிடம் இருந்து தப்பிப்பதற்காக அம்ருதா ஓடியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பினராயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர்பான காட்சிகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

பொலிசார் விசாரணையில், அம்ருதா உயர்ந்த சாதியை சேர்ந்தவர் என்றும், தாழ்ந்த சாதியை சேர்ந்த பினராயி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அம்ருதாவின் தந்தை ஆட்களை வைத்து பினராயை கொலை செய்துள்ளார் என பினராயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இளம் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு இளைஞர் செய்த செயல் : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

இந்தியாவில் பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு அவரை அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் போதை மருந்து தடுப்பு பிரிவில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருபவர் அசோக் சிங் தோமர்.

இவரின் மகன் ரோகித் தோமர். இவர் சமீபத்தில் இளம் பெண் ஒருவரை காட்டுமிராண்டித்தனமாக அடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

இந்த வீடியோ காட்சி டெல்லி உத்தம்நகரில் கடந்த 3-ஆம் திகதி எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

உத்தம்நகரில் உள்ள பிபிஓ அலுவலகத்துக்கு அந்த இளம் பெண்ணை வரக்கூறிய அந்த இளைஞர் குறித்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து புகார் கொடுப்பேன் என்று கூறியதால் பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். இருப்பினும் அந்த பெண் துணிச்சலாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், இளம்பெண்ணை தரையில் கிடத்தி தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து அந்த இளைஞர் தாக்குகிறார்.

தன்னுடைய முழங்காலால் அந்த இளம்பெண் முதுகில் உதைத்து அந்த பெண்ணை சித்ரவதை செய்கிறார். வலிதாங்க முடியாமல் அந்த பெண் அலறுகிறார்.

ரோகித் நிறுத்து, நிறுத்து என்று வீடியோவில் யாரே சிலர் சொல்வது கேட்டபோதிலும், யாரும் அந்த சம்பவத்தை தடுக்கவில்லை.

மேலும் இந்த வீடியோ வைரலானதால், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பொலிஸ் ரோஹித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்தநாளில் இப்படியா புகைப்படம் வெளியிடுவது? ரசிகர்களை அதிர வைத்த ஸ்ரேயா!!

நடிகை ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் அறிமுகமாகி தமிழில் விஜய் விக்ரம் ,ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்று கொண்டுள்ளார்.

2011-க்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்தன. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த நரகாசூரன் வெளியாக இருக்கிறது.

நேற்று முன் தினம் ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் நடித்து வரும் வீர போக வசந்த ராயலு என்ற படத்தின் சிறிய காட்சி வெளியாகி உள்ளது.

அதில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இதைப் படித்தால் இனி பழத்தோலை தூக்கி வீச மாட்டீர்கள்!!

பழங்களைப் போல அதன் தோல்கள் எந்த அளவிற்கு நம் உடலுக்கு நன்மைகள் தரும் என்பது குறித்து இங்கு காண்போம்.

பொதுவாக நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற பழங்களை சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பழங்களின் தோல்களை நாம் தேவையில்லை என வீசி விடுகிறோம்.

பழங்களைப் போல் அதன் தோல்களிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சருமத்தையும், முடியையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் இவை உதவும்.

அவ்வாறு குறிப்பிட்ட சில பழங்களின் தோல்களினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

வாழைப்பழத் தோல் : உடலில் இருக்கின்ற சில காயங்களை சரிசெய்ய வாழைப்பழத் தோல் உதவுகிறது. எனவே, காயங்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில், வாழைப்பழத் தோலை வைத்து 5 நிமிடங்கள் வரை தேய்க்க வேண்டும்.

அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து இதனை செய்து வர, காயங்கள் மற்றும் தழும்புகள் விரைவில் குணமடையும்.

எலுமிச்சை தோல் : எலுமிச்சைப் பழத் தோல் என்பது சருமத்தினுடைய மிகச்சிறந்த கிளன்சராகும். எனவே, வெயிலில் எலுமிச்சைத் தோலை நன்கு உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதை குளிக்கும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எலுமிச்சைத் தோலில் உள்ள அதிக அளவிலான அமிலம் சருமத்திற்கு கொஞ்சம் எரிச்சலை தரும்.

எனவே, இதை முகத்தில் தேய்க்கும் முன்பு, முகத்தின் ஏதேனும் ஒரு ஓரத்தில் தடவி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பின்னர் பாலில் கலந்து தேய்த்தால் சருமத்தில் உண்டாகும் எரிச்சல் சரியாகும்.

ஆரஞ்சு பழத் தோல் : ஆரஞ்சு பழத் தோலினை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து அப்படியே சருமத்தில் தேய்த்துக் கொள்ளலாம். இது சருமத்திற்கு நல்ல ஸ்கிரப்பராக அமையும்.

அத்துடன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். மேலும், முகப்பொலிவினை தரும்.

பப்பாளி தோல் : பப்பாளி பழத்தின் தோல் இயற்கையாகவே நிறப்பொலிவினை தரும். எனவே, பப்பாளி தோலின் உள்பக்கத்தை முகத்தில் நேரடியாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட வேண்டும்.

பின்னர் அதனை சுத்தம் செய்தால் சரும வறட்சி நீங்கும். மேலும் முகம் பளபளப்பும், நிறப்பொலிவும் பெறும். அத்துடன் சருமத்தில் உண்டாகும் பருக்கள் மற்றும் கரும் புள்ளிகளையும் நீக்கும்.

தர்பூசணி தோல் : தர்பூசணி பழத்தில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி, சருமத் துளைகளுக்குள் சென்று உள்ளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.

எனவே சருமத்தை சுத்தம் செய்ய தர்பூசணி தோலைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீங்கும். மேல் இந்த தோல் சருமத்தின் உட்புறம் வரை சென்று சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.