நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வு : இலங்கையர்களுக்கு காணும் வாய்ப்பு!!

3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வை நாளை 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பூகோள ஆய்வு பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார். வெள்ளி, சனி, மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களே இவ்வாறு தென்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கோள்கள், நாளை வெள்ளிக்கிழமை (25) அதிகாலை முதல் வானில் தெரியும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த அரிய நிகழ்வை இலங்கையர்கள் அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்றும் சுமார் ஒரு மணி நேரம் காணமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய கிரகணங்கள் போன்ற உள்ளூர் வான நிகழ்வுகளைப் போலல்லாமல், இந்த மூன்று இணைப்பு என்பது ஒரு உலகளாவிய நிகழ்வாகும்.

மேலும் இது உலகின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து தெரியும் என்றும் இந்த நிகழ்வை காண்பதற்கு தெளிவான வானம் கொண்ட திறந்த வெளிகளில் நின்று பார்வையிடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (24) சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,008,014 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,560 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 284,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 260,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,120 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 248,950 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 267,000 ஒன்று ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 245,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண் : குற்றவாளிக்கு மரண தண்டனை!!

கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கொழும்பின் செட்டித்தெருவில் உள்ள விடுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவரது உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து, பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வீசிய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி விடுதியில் தர்மராஜா கார்த்திகா என்ற பெண்ணைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பேட்ரிக் கிருஷ்ணராஜா மீது சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

நீண்ட விசாரணைக்கு பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை அறிவித்துள்ளார். தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று கூறினார்.

எனினும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசுத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதால், அதன்படி மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

வட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அறிமுகமானது புதிய வசதி!!

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் (Whatsapp) பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஆங்கிலத்தில் Advanced Chat Privacy எனப்படும் மேம்பட்ட அரட்டை தனியுரிமையை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்களின் ரகசியத் தன்மையைப் பாதுகாக்க இந்த புதிய வசதி உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்!!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவர் உயிரிழந்த நிலையில், தம்பதியினர் எடுத்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவர் உயிரிழந்தார். இவருக்கு 7 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

இவரும், இவரது மனைவியும் தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மனைவி கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த கணவனின் உடலின் முன்னே மனைவி அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு தமபதியினர் இருவரும் ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடுத்த வாரம் திருமணம் : முன்னாள் காதலன் மிரட்டியதால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அசுன்டி கிராமத்தில் வசித்து வருபவர் சாய்ராபானு. இவர், பள்ளிக்கூடம் ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றவர். சாய்ராபானுவுக்கும் ஒரு இளைஞருக்கும் மே 8ம் தேதி திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்திற்கான வேலைகளில் சாய்ராபானுவின் பெற்றோர் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க சாய்ராபானு பெற்றோர் வெளியே சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த சாய்ராபானு திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சாய்ராபானுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. அதில் தனது சாவுக்கு முன்னாள் காதலன் மைலாரி தான் காரணம் எனக் கூறியிருந்தார். நானும், மைலாரியும் காதலித்தோம்.

5 ஆண்டுக்கு முன்பாக எங்களது காதல் முறிந்து விட்டது. எனக்கு திருமணம் முடிவான பின்பு, மைலாரியை காதலிக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படம், வீடியோவை வெளியிட போவதாக மிரட்டல் விடுக்கிறார்.

இதனால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி இருந்தார். அதன்பேரில், மைலாரி மீது கதக் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து வெளியான எச்சரிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளைய தினம் (24) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும், நிழலான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர!!

எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வெற்றி நமதே ஊர் எமதே என்னும் தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தி தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை,

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை என்பவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா நகரசபை மைதானததில் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி வவுனியாவிற்கு வருகை தரவுள்ளார்.

யாழில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் குடவத்தை, துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று பு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பிரதேச பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இனி தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை : பொலிஸாருக்கு பறந்த உத்தரவு!!

தேவையின்றி பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே.

எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைக் காடாக மாறிய கண்டி : நோய்க் கிருமிகள் பரவும் அபாயம்!!

வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரம் தற்போது பெரும் குப்பை கூழங்களா நிறைத்துள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன, பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதி பெட்டிகள் கடுதாசிகள் என குப்பைகளாக உள்ளன.

பொலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்

யாத்திரிகர்கள் பொலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை வீதியில் விட்டுச் செல்வதால், துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதார பிரச்சனையாகி நோய் கிருமிகள் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து குடிமக்களையும் கோரியுள்ளார்.

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கண்டியில் ஏற்கனவே 300,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கூடியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

யாத்ரீகர்கள் தொடர்ந்து கண்டி நகருக்குள் நுழைந்தால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் கண்டி மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

தொலைபேசியை பறித்த ஆசிரியையை செருப்பால் அடித்த மாணவி!!

இந்தியா – ஆந்திராவில், தொலைபேசியை பயன்படுத்திய மாணவியின் தொலைபேசியை பறிமுதல் செய்த ஆசிரியயை, அந்த மாணவி செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் விசாகப்பட்டிணம் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் , தொலைபேசியை பறித்த ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்த மாணவி, தொலைபேசியை திருப்பித் தராவிட்டால் அடிப்பேன் என மிரட்டி, பின்னர் செருப்பால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து சக ஆசிரியர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். இந்த செயலுக்கு கல்லூரி நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்து மாணவி மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் ஆசியையை மாணவி தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!!

எதிர்வரும் மே மாதம் நடைபெற்வுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 24, 25, 28, 29 ஆகிய தினங்களை தேர்தல் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது.

இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் இன்று (24.04.2025) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டசெயலகம் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், ஆசிரியர்கள் இன்றையதினம் தமது தபால்வாக்குகளை அளித்திருந்தனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 5550 பேரும், முல்லைத்தீவில் 3807 பேரும் மன்னாரில் 3792 பேருமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 13149 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணம் நடைபெற இருந்த நிலையில் முன்னாள் காதலனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளம்பெண்ணொருவர் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடகாவின் கதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்ராபானு. இவர் மைலாரி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில், உடற்கல்வி ஆசிரியரான சாய்ராபானுவிற்கு மே 8ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சாய்ராபானுவின் பெற்றோர் மேற்கொண்டு வந்துள்ளனர்.

திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்ற அவர்கள் வீடு திரும்பியபோது, தங்கள் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சாய்ராபானுவின் சடலத்தை மீட்டனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் முன்னாள் காதலர் மைலாரி காதலிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டியதால் இந்த முடிவை எடுத்ததாக எழுதியிருக்கிறார்.

பின்னர் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தலைமறைவாக இருக்கும் முன்னாள் காதலரை கைது செய்ய தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கனடா ஆசை நிராசையானதால் உயிரை மாய்த்த யாழ் இளைஞன்!!

யாழ்ப்பாணத்தில் , கனடாவுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சனை காரணமாக விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். ஆரியக்குளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் நேற்று செவ்வாய்க் கிழமை (22) அவரது சடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டதுடன் சாட்சிகளை யாழ்ப்பாண பொலிசார் நெறிப்படுத்தினர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; துயரத்தில் அம்பாறை பிரதேசம்……!!

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (22.04.2025) மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் மூன்று வயதுடைய ஆண் சிறுவனே நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல்போன குறித்த சிறுவனை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடிய நிலையில் சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதகாப்பற்ற நீர்க்குழிக்குள் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற சிசிரிவி காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளது.

எனினும் சிறுவனை அழைத்து சென்ற நபர் தெளிவாக அடையாளம் காண முடியாதுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுவன் தவறி பாதகாப்பற்ற நீர்க்குழிக்குள் விழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.