பயங்கர சத்தத்துடன் குண்டு விழுந்தது : சிரியா தாக்குதலில் தப்பித்த சிறுமி உருக்கம்!!

 

சிரியாவில் நடந்த இரசாய தாக்குதலின் போது பீப்பாய் குண்டுகள் எங்கள் விட்டில் விழுந்ததாக அந்த தாக்குதலில் இருந்த தப்பிய 7 வயது சிறுமி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அங்கிருகும் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதில் கடந்த 7ம் திகதி நடந்த இரசாயன தாக்குதலில் 75-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பின்னால் சிரிய ஜனாதிபதி Bashar al-Assad இருப்பதாக கூறி, அமெரிக்கா கூட்டுப் படையுடன் இணைந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிரியாவில் இருக்கும் கெமிக்கல் குடோன்களில் தாக்குல் நடத்தின.

சிரியாவில் நடந்த இந்த இரசாயன தாக்குதலில் அவர்கள் பெரும்பாலும் குளோரின் மற்றும் சரின் போனற கொடிய நச்சு வாயுவையே பயன்படுத்தியுள்ளதாக பிரான்சைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த இரசாயன தாக்குதலில் Masa என்ற 7 வயது சிறுமி சிக்கினார். அதன் பின் அவர் உடனடியாக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டதால், உயிர்பிழைத்தார்.

இதையடுத்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், எங்கள் வீட்டில் பீப்பாய் குண்டுகள் திடீரென்று வந்து விழுந்தது.

இதனால் பலத்த சத்தம் கேட்டது. அப்போது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடி படுத்துக் கொண்டோம். அந்த பீப்பாய் குண்டுகள் விழுந்தவுடன், உஷ்…. என்ற மெல்லிய சத்ததுடன் ஒரு வாயு வந்தது.

உடனடியாக வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறும் படி எங்கள் உறவினர்களில் ஒருவர் கத்தினார், அதன் பின் அந்த வாயு எங்கள் மீது பட்டது இருப்பினும் உடனடியாக முகத்தில் தண்ணீரை தெளித்து விட்டு நாங்கள் மருத்துவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி ஓடி உயிர் பிழைத்தோம்.

மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பிய போது, நாங்கள் இருந்த இடங்களில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பலர் இறந்து கிடந்தனர். அந்த நேரத்தில் நான் இரத்த வாடையை முகர்ந்தேன், என்னுடைய டீ சர்ட்டில் குளோரின் வாசனை வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் சிறுமியின் அம்மா, அன்றிரவு பயங்கர சத்ததுடன் குண்டு வந்து விழுந்தது. இதனால் பூமியில் இருந்த தூசிகள் பறந்தன. வந்து விழுந்த குண்டுகளில் ஒரு குண்டு வெடிக்காமல் இருந்தது, உடனடியாக நாங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலாடையுடன் மோசமான முறையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பெண்!!

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற பெண்ணொருவர், மேலாடையுடன் மட்டும் இலங்கையை வந்தடைந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகலை சேர்ந்த கண் தெரியாத 58 வயதுடைய பணிப்பெண் ஒருவருக்கு, மேல் ஆடை ஒன்று மாத்திரம் அணிவித்து சவுதியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குருணாகலை, பிலிஸ்ஸ மடுவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே மீண்டும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு சேவை அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 10 வருடங்களாக சவுதியில் பணிப்பெண்ணான சேவை செய்த அந்த பெண்ணின் சம்பளம் அல்லது சொத்துக்கள் இன்றி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை தூதரகத்தினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அபாயா எனப்படும் மேல் ஆடை மாத்திரம் அணிவித்து இலங்கைக்கு அனுப்புவதற்கு சவுதிக்கான இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இதேவேளை, 40 வருடங்கள் குவைத்தில் பணிப்பெண்ணாக சேவை செய்த 72 வயதுடைய வயோதிப பெண்ணை குவைத் அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எந்தவித பணம் அல்லது சொத்துக்கள் இன்றி அனுப்பப்பட்ட அந்த பெண்ணிற்கு பொறுப்பாளர்கள் ஒருவரும் இல்லாமையினால் கட்டுநாயக்கவில் உள்ள தடுப்பு முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களினால் 39 பேர் பலி!!

கடந்த புத்தாண்டு காலப்பகுதியில் வாகன விபத்துக்கள் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், கடந்த 12ம் திகதி தொடக்கம் பொலிசார் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் ஒருகட்டமாக குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய கடந்த 12ம் திகதி தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே ​போன்று புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தைச் செலுத்த முற்பட்டு விபத்துக்குள்ளானவர்களில் 39 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயங்களுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இப்படியொரு உலக சாதனை!!

உலகின் மிக நீளமாக உருளைக்கிழங்கு கேக் நுவரெலியாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ளது. கிழங்கினால் தயாரிக்கப்படும் மிக நீளமான கேக் என்ற உலக சாதனையாக இது பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கேக் 111 மீற்றர் நீளமும் 380 கிலோ கிராம் நிறையையும் கொண்டுள்ளது. 75 கிலோகிராம் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த கேக்கிற்கு பொட்டோ கேக் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பதற்காக பிரபல சமையல் கலைஞர்கள் 50 பேர் பணியாற்றியுள்ளனர்.

நுவரெலியா கிராண்ட் ஹோட்டலின் வெளி அரங்கில் இந்த பாரிய உருளைக்கிழங்கு கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு மூலம் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கேக் தயாரிக்கும் முயற்சியாக இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

40 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!!

சுமார் 40 வருடங்களாக குவைத் நாட்டில் பணியாற்றி வந்த இலங்கைப் பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டால் இவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான இந்த பெண்மணியே 40 வருடங்களுக்குப் பின் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவரை வரவேற்பதற்கும், அழைத்துச் செல்லவும் அவருடைய குடும்பத்தார் யாரும் விமான நிலையத்திற்கு வந்திருக்கவில்லை.

இதனால் சமூக சேவை திணைக்களத்தால் நிர்வகிக்கப்படுகின்ற செத் செவன முதியோர் இல்லத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் இவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பை அண்மித்த பகுதியில் கோரச் சம்பவம் : மனிதாபிமானம் மரணித்துப் போன மக்கள்!!

 

பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கொண்டமையினால் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், ஹம்பாந்தோட்டையில் இருந்த வந்த முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் முச்சக்கர வண்டியில் பயணித்த 4 பேர் எரிகாயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் அம்பலந்தோட்டை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி முழுமையாக தீப் பற்றி அழிந்துள்ளது. இந்த சம்பவத்தினால் பேருந்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும் பேருந்தில் பயணித்தவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளாகும். சம்பவத்தை பார்த்த மக்களில் பலர் விபத்துக்குள்ளானவர்களின் உயிரை காப்பாற்றாமல் தங்கள் கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்துள்ளனர்.

தொலைபேசி மோகத்தில் மனிதாபிமானம் மரணத்துள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

சிரியா மீது தாக்குதல் : பின்விளைவுகளை சந்திக்கும் பிரான்ஸ், பிரித்தானியா!!

ஐரோப்பாவின் இரு பெரும் இராணுவ ஜாம்பவான்களாகிய பிரான்ஸும் பிரித்தானியாவும் அவசரப்பட்டு அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நிகழ்த்தியதற்கான பின் விளைவுகளை தங்கள் நாடுகளுக்குள்ளேயே எதிர்கொண்டு வருகிறார்கள்.

முன்பின் யோசிக்காமல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதியின் உண்மையான உதவியாளர்களைப்போல அவருடன் இணைந்து பிரான்ஸும் பிரித்தானியாவும் சிரியா மீது தாக்குதல் நிகழ்த்தியதற்காக விமர்சகர்கள் அவ்விரு நாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஐரோப்பியர்களில் பலர் இதை ஏளனமாகவும் சிலர் சந்தேகத்துடனும் பார்க்கிறார்கள்.
சிலர் ஏற்கனவே வன்மத்துடன் இருக்கும் ரஷ்யாவின் வெறுப்பை இன்னும் சம்பாதிக்க வேண்டி வருமோ என்று அஞ்சுகிறார்கள்.

முன்பு ஜோர்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது அவர் ஈராக் மீது படையெடுத்தபோது அவருடன் கை கோர்க்காததற்காக பாராட்டுகளைப் பெற்ற பிரான்ஸ் தற்போது தனது தனித்தன்மையை இழந்துவிட்டதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அவச்சொல்லுக்கு உள்ளாகியிருக்கிறார்.

தெரசா மேயோ வான் வெளித்தாக்குதல்களை நிகழ்த்தும் முன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாததற்காக வெளிப்படையாக குற்றம் சாட்டப்படுகிறார்.

திங்களன்று நாடாளுமன்றத்தின் முன் சிரிய தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் பிரான்ஸுடன் கைகோர்த்ததற்காக தெரசா மே விளக்கமளிக்க உள்ள நிலையில் பிரான்ஸ் சட்டசபையில் இதே விடயம் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் சிரிய உள்நாட்டுப் போரில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை.

பிரான்ஸில் ஏற்கனவே வேலை நிறுத்தங்களால் அழுத்தத்திற்குள்ளாகியிருக்கும் மேக்ரான், தற்போது தனித்து நிற்காமல் அமெரிக்காவின் எடுபிடி போல செயல்பட்டதாக தனது நாட்டிலேயே குற்றம் சாட்டப்படுகிறார்.

தெரசா மேயோ விரைந்து செயல் படவேண்டியிருந்ததால், நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் என்றாலும் அவருக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் பலத்து ஒலிக்கின்றன.

பொது மக்களிடையையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ரஷ்யாவுடன் மோதுவது ஆபத்துதான் என்றாலும் தனது மக்களை கொன்று குவிக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று கூறியுள்ள ஒருவர் அதனால்தான் இந்த மூன்று நாடுகளையும் நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் இதுதான் நடக்கும் : புடின் எச்சரிக்கை!!

 

மேற்கத்திய நாடுகள் மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தினால், சர்வதேச உறவுகள் பாதிக்கப்பட்டு, உலகளாவிய குழப்பம் ஏற்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரத்தில் சிரியாவில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய ரசாயனத் தாக்குதலை காரணம் காட்டி, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரியாவின் ராணுவ முகாம்களின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே பேசும் போது சிரியா அதிபர் அசாத் உற்பத்தி செய்யும் ரசாயன ஆயுதங்களுக்கு மூலப் பொருட்கள் வழங்கி வரும் நிறுவங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் மீது “Face the Nation” எனும் திட்டத்தின் கீழ் புதிய பொருளாதார தடை விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள போவதாக அறிவித்திருந்தார்.

அடுத்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிபிடம் எடுத்துகூறி சம்மதிக்க வைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று ரஷ்யாவின் தலைமைப் பீடமான கிரெம்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா தாக்குதல்களை முன்வைத்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்கிறது.

சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக ரஷ்யா கடந்த ஏழு வருடமாக முன்னெடுத்து வந்த அரசியல் ரீதியிலான முயற்சியை மேற்கத்திய நாடுகளின் ஏவுகனை தாக்குதல் பாரிய சேதத்தை ஏற்படுத்தி பாழாக்கிவிட்டது.

மேலும், சிரியா மீது மீண்டும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது உலகளாவிய குழப்பத்தை விளைவித்து உலக நாடுகளுக்கு இடையில் உள்ள ராஜாங்க ரீதியிலான உறவை கடுமையாக பாதிக்கும் என்று விளாடிமிர் புடின் காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியா தாக்குதல் குறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியிடம் புடின் தொலைபேசி வாயிலாக ஆலோசித்த பின்னர் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாகவே மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் எதிரான மோதல் வெளிப்படையாக முற்றிவருவது உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் 14 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!!

 

பிரித்தானியாவின் Wolverhampton பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட 14 வயது சிறுமி Viktorija Sokolova பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

அவரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்ததாக 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

Viktorija கடந்த புதனன்று காணாமல் போனாள், பொலிசார் அவளைத் தேடி வந்த நிலையில் பூங்கா ஒன்றில் அவள் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. தலையில் காயத்தின் காரணமாக அவள் உயிரிழந்திருந்தாள். அவளைக் கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 17 வயது இளைஞன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஜாமீனில் விடப்பட்டுள்ள அவன்மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட உள்ளது, சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதனால் கைது செய்யப்பட்டவர்கள் யார் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை.

Viktorija கண்டெடுக்கப்பட்ட West Parkஇல் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், பூங்கா மூடப்பட்டுள்ளது.

மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் : அச்சத்தில் உலக நாடுகள்!!

சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் போர் காரணமாக மூன்றாம் உலகப் போர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பிலான கருத்துக்கள் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்புக்கள் நிஜமாகவே இருக்குமெனில் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் பேராசிரியர் ராம் மார்க்ஸ் இந்திய ஊடகமொன்றிட்கு கருத்து தெரிவிக்கும் போது,

மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற நாடாக இன்று சிரியா இருக்கிறது. சிரியா விசவாயு பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையாக கூட இருக்கலாம்.

ஆனால் அதற்கு பதிலாக அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதல் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இதை விட மோசமான தடை செய்யப்பட்ட ஆயுதங்களை மக்கள் மீது பயன்படுத்தி கொலை செய்தமை நமக்கு தெரியும்.

இது மாத்திரமல்லாமல் இதே அமெரிக்கா பத்து ஆண்டுகளுக்கு முன் ஈராக் மீது படையெடுத்த நிலையில், அந்த படையெடுப்பின் காரணமாக ஈராக் கடுமையான விச ஆயுதங்களை வைத்திருப்பதாக காரணத்தை கூறி தாக்குதல் மேற்கொண்டிருந்தது.

அதனால் மிகப்பெரிய அழிவுகள் மேற்கொள்ளப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டினுடைய தலைவர் தூக்கிலேற்றி தொங்கவிடப்பட்டு எல்லாம் முடிந்த பின்னர் அமெரிக்கா ஈராக் மீது வைத்த குற்றச்சாட்டுக்கள் பொய் என தெரிந்தது.

அப்போது அமெரிக்கா, இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையென நினைத்து தாக்குதலை தொடர்ந்தோம் என சாதாரணமாக சொல்லி நழுவியதை நாம் பார்த்தோம்.

இப்படியானதொரு சூழலில் இந்த தாக்குதலை மேற்கொண்டு மேலும் மேலும் பெரிய அளவில் பரிதாபத்திற்குரிய சிரிய மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதென்பது உண்மையாகவே கண்டிக்கப்பட வேண்டியதொன்று என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டு போர் உலக ரீதியில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா? குறிப்பாக மூன்றாம் உலகப் போருக்கான ஒரு சமிக்ஞையாக நாம் பார்க்கலாமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பேராசிரியர் பெர்னார்ட் டி.சாமி கருத்து தெரிவிக்கையில்,

இந்த போரை பொருத்தவரையில் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான சூழல் அதிகமாக இருப்பதாக விளாடிமிர் பூட்டின் தெரிவித்துள்ளார்.

இந்த போரை பொருத்தவரையில் ரஸ்யா, ஈரான், சிரியா ஒரு பக்கமாகவும், அமெரிக்கா, அரபு நாடுகள், பிரான்ஸ், ஜேர்மனி எல்லாம் ஒரு புறமாகவும் இருக்கிறார்கள்.

இந்தியாவை பொருத்தவரையில் நடுநிலையைதான் வகித்து கொண்டு வருகிறது. சிரியாவில் நடந்து கொண்டு வரும் தாக்குதல் மிகப்பெரிய கொடூரம் என்று நாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்.

இதேவேளை, குறித்த இரண்டு அணிகளிலுமே எமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இதனால் எந்த அணிக்கு சார்பாக நடந்து கொள்வது என்பது தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

என் வீட்டில் இருந்த தங்ககட்டியை திருடிவிட்டனர் : நடிகர் பார்த்திபன்!!

பிரபல நடிகரான பார்த்திபன் வீட்டில் தங்ககட்டி திருடப்பட்டுவிட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சென்னை திருவான்மையூரில் உள்ள காமராஜர் நகரில் வசித்து வருகிறார். இவரது மகளான கீர்த்தனாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் அவர் வீட்டில் உள்ள பீரோவை வழக்கம் போல் திறந்து பார்த்துள்ளார். அப்போது உள்ளே இருந்த தங்கக்கட்டி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து பார்த்திபன் பொலிசி புகார் அளித்துள்ளதால் அவரது வீட்டில் உள்ள வேலையாட்கள் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெத்த தாய் என்றால் இப்படி செய்வாரா?

 

ஈரோடு கோனவாய்க்கால் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 20 பெண்மணிகள் தங்கியுள்ளனர். அவர்களுக்குக் குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுப்பதுதான் தொழில்.

இந்நிலையில் சம்பம் நடைபெற்ற அன்று, பெண்மணி ஒருவர் தன்னுடைய தோளில் சுமார் ஒரு வயதான பச்சிளங் குழந்தையை வைத்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தையின் உடலில் அம்மை போட்டது போல உடலெல்லாம் கொப்புளமாகக் கிடந்தது. இதனைப் பார்த்துக் கோபமடைந்த பயணிகள், ‘உன் மேல் சந்தேகமாக இருக்கு. இது உன் குழந்தை தானா? குழந்தை உடம்புல இவ்ளோ கொப்புளமாக இருக்கிறது.

பெத்த தாய்ன்னா இப்படிச் செய்வாளா எனகேட்டு அந்தப் பெண்மணியை சத்தம்போட்டு பேருந்து நிலையத்தில் இருந்த பொலிசாரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

என்னை கொன்று விடுவார்கள் : ஆஷிபா தரப்பு வழக்கறிஞரின் அச்சம்!!

தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என தெரிவித்துள்ளார் ஆஷிபா வழக்கில் ஆஜராகும் தீபிகா ராஜாவத்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தரப்பில் தீபிகா ராஜாவத் என்பவர் ஆஜராகியுள்ளார், இந்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நான் எத்தனை நாள் உயிரோடு இருப்பேன் என எனக்கு தெரியாது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம்.

தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன, என்னை இந்து மதத்துக்கு எதிரானவள் என கூறி புறக்கணிக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்றே தெரியாது, எனது பாதுகாப்புக்காக உச்சநீதிமன்றம் செல்வேன், என் நிலையை உங்களால் புரிந்து கொள்ளமுடியும். நீதியின் பக்கமே நிற்பேன், சிறுமி ஆஷிபாவுக்காக போராடுவேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜம்மு காஷ்மீர் பார் அசோசியேஷன் தலைவர் தன்னை மிரட்டியதாகவும், இந்த வழக்கில் இருந்து விலகுமாறு தன்னை எச்சரித்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகள் பெயரால் உலகம் முழுவதும் வசூலிக்கிறார் சீமான் : ஆவேசப்பட்ட வைகோ!!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்னை வைத்து மீம்ஸ் போட்டு குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர் என பகிரங்கமாக சீமான் மீது குற்றம்சாட்டினார் வைகோ. இதுதொடர்பாகவும், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகவும் பிரபல தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் சீமான் பற்றி கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், எட்டு வருடமாக நஞ்சை கக்கிக் கொண்டிருக்கிறார். ஈவேரா பெரியார் மூலமாக நாட்டு கெட்டுப் போய்விட்டது என மேடைக்குமேடை பேசினார், அண்ணாவை தவறாக பேசினார். என்னை கலங்கப்படுத்தும் விதமாக பல மேடைகளில் பேசவைத்துள்ளார், எட்டு வருடமாக பொறுத்துக் கொண்டேன்.

ஆனால் ஸ்டெர்லைட்டை சேர்த்து மீம்ஸ் போட்டு களங்கப்படுத்தியால் அவ்வாறு பேசினேன் என தெரிவித்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் புலிகள் பிரிதிநிதி என கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் வசூல் செய்தும் வருகின்றனர்.

பிரபாகரனுக்கு அடுத்தபடியாக பழ.நெடுமாறன், வைகோவை நினைக்கின்றனர், இதை சொல்லி அரசியல் பண்ணமுடியவில்லையே, தான் பார்த்ததோ 10 நிமிடம். புலிகளின் சீருடையை அணிந்து கொண்டு புகைப்படம் எடுக்க அனுதிக்கவில்லை.

இவர்களே மார்பிங் செய்து போட்டோவை வெளியிட்டனர், புலிகளின் லோகோவில் சிறிய மாற்றம் செய்து நாம் தமிழர் கட்சியின் கொடியாக வெளியிட்டனர். பிரபாகரன் உயிரோடு வெளியே வரமாட்டார் என்ற தைரியத்தில் இவ்வாறு செய்தனர், அவர் வெளிப்படையாக வருவதாக இருந்தால் நொடியில் தூசியாகி இருப்பார்கள்.

உலகம் முழுவதும் உள்ள புலிப்படையின் உண்மையான தளபதிகள் இதை சகித்துக் கொண்டு வாழ்கின்றனர். கேணல் பரிதியை கொன்ற இருவர் சீமானுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர், இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

புலிகள் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தினால் நான் இடம் கொடுக்க மாட்டேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.

நடைப்பயிற்சி சென்ற வியாபாரி ஓட ஓட விரட்டி கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் நடைப்பயிற்சி சென்ற மீனவர், ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன், மீன் வியாபாரம் செய்து வந்த இவர், இன்று அதிகாலை தனது வீட்டின் அருகில் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது மர்ம கும்பல் ஒன்று சீனிவாசனை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதனால் கொலை கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடிய சீனிவாசனை, அந்த கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியதில் கழுத்து, தலை, கை, கால்களில் பல வெட்டு விழுந்தது.

அதன் பின்னர், அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே சீனிவாசன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த மர்ம கும்பல் தப்பியோடியது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சீனிவாசனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீனிவாசனுக்கு மனைவியும், மகனும் உள்ளனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

போராட்டக் களத்தில் புதுமணத் தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடியின் இன்று திருமணமான புதுமண தம்பதியினர், திருமணம் ஆடையுடனே போராட்டத்தில் பங்கேற்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, இரண்டாவது நாளாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது. ஆலய வளாகத்தில் பந்தல் அமைத்து கருப்புக்கொடி கட்டி, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருமணமான ஜோசப்- ஷைனி ஆகிய இருவரும் வீட்டிற்கு கூட செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர். கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.