ஸ்ரீதேவிக்கு தேசிய விருது : வலுக்கும் எதிர்ப்பு!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை ‘மாம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை பழிவாங்கும் தாய் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார். ஸ்ரீதேவிக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

மறைந்த நடிகைக்கு தேசிய விருது வழங்குவது ஏற்புடையது அல்ல. அவரை விட சிறந்த நடிகைகள் இருக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். ஸ்ரீதேவிக்கு விருது வழங்குவதற்கு தேசிய விருதுகள் தேர்வுக் குழுத் தலைவர் சேகர் கபூரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஸ்ரீதேவி சிறந்த நடிகைதான். ஆனால் மாம் படத்துக்காக அவருக்கு விருது வழங்கியதை ஏற்கமுடியாது என்று பேச்சு கிளம்பி இருக்கிறது. ஸ்ரீதேவி இறந்து விட்டதால் இந்த விருதை அவருக்கு வழங்குகிறார்கள் என்றும் விமர்சிக்கின்றனர். எனக்கும் ஸ்ரீதேவிக்கும் நல்ல நட்பு உண்டு. ஆனாலும் ஸ்ரீதேவிக்கு விருது வழங்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தேர்வுக் குழுவினரிடம் சுட்டி காட்டி வந்தேன். ஸ்ரீதேவியை தேர்வு செய்வது மற்ற நடிகைகளுக்கு செய்யும் துரோகம் என்று கூறினேன். ஆனாலும் அவரை தேர்வு செய்து விட்டனர்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சறுக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம்!!

வவு­னியா நகர சபை மற்­றும் வெண்கலச் செட்­டிகு­ளம் பிர­தேச சபை என்­ப­வற்­றில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­ற­போ­தும் அந்­தச் சபை­க­ளில் ஆட்சி அமைக்­கும் வாய்ப்பை இழந்­தது. வவுனியா நகர சபையை, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யும், வெண்க­லச் செட்­டிகு­ளம் பிர­தேச சபையை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் கைப்­பற்­றி­ன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இந்­தச் சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்­காக தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் ஆதர­வைக் கோரி நேற்று முன்தினம் இரவு வரை­யில் பேச்சு நடத்­தி­யது. தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் இந்­தப் பேச்­சுக்­க­ளில் நேர­டி­யா­கப் பங்­கேற்­க­வில்லை. அவர் சார்­பில் மூன்­றாம் தரப்­பி­னரே, கூட்­ட­மைப்­பு­ட­னான பேச்சுக்­க­ளில் பங்­கேற்­றி­ருந்­த­னர்.

வவு­னியா வடக்கு பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் பதவியை­யும், வவு­னியா நகரசபை­யின் உப­த­வி­சா­ளர் பத­வி­யை­யும் அவர்­கள் கோரி­யி­ருந்­த­னர். கூட்­ட­மைப்­பும் அதற்கு இணங்­கி­யி­ருந்­தது. இறுதி நேரத்­தில் அவை எவை­யுமே வேண்­டாம் என்­றும், தாங்­கள் நடு­நி­லமை வகிக்­கப் போகின்­றோம் என்று கூட்­ட­ணி­யி­னர் தெரி­வித்தி­ருந்­த­னர். கூட்­ட­ணி­யி­னரை மசிய வைக்க கூட்டமைப்பு எவ்­வ­ளவோ முயன்­றது.

இந்த நிலை­யில் வவு­னியா நகர சபைத் தவி­சா­ளர் தெரிவுக்­கான அமர்வு நேற்­றுக் காலை ஆரம்­ப­மாகி, தவிசா­ளர் தெரி­வுக்­கான பெயர்­கள் முன்­மொ­ழி­யப்­ப­டும் வரை­யில், கூட்­டணி சார்­பில் ஒரு­வர் போட்­டி­யி­டப் போவது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குத் தெரி­யாது.

கூட்­ட­ணி­யி­னர், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீ­னின் அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், சுதந்­தி­ரக் கட்சி, மகிந்­த­வின் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­ப­வற்­றின் ஆத­ர­வு­டன் தமது தவி­சா­ளரை அறி­வித்­த­னர்.

கூட்­ட­ணி­யின் இந்­தத் திடீர் நட­வ­டிக்­கை­யா­னால் கூட்டமைப்பு திக்­கு­முக்­கா­டிப் போய், இறு­தி­யில் தவிசாளர் பத­வியை இழந்­தது. கூட்­ட­மைப்­பின் இராஜதந்திர நட­வ­டிக்கை சறுக்­கி­யது.

-உதயன்-

வவுனியா நகரசபையை இழந்த கூட்டமைப்பு : சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!!

வவுனியா நகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு புதிய கலப்பு தேர்தல் முறையே காரணம் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுமந்திரன்,

“கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு ஒன்று சேர்ந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வட்டாரங்களிலே தோல்வியைத் தழுவிய தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள், விகிதாசார முறைமையினால் ஆசனங்களைப் பெற்று நகரசபைக்கு தெரிவாகி உள்ளனர்.

ஏனைய கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா நகரசபைக்கான தலைவர் தெரிவில், கூட்டமைப்புக்கு ஆதரவாக 9 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தன.

இதனடிப்படையில், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் வவுனியா நகரசபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியா வடக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது!!

வவுனியா வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ச.தனிகாசலம் தெரிவாகியுள்ளார். இன்று (17.04.2018)காலை 10 மணியளவில் நெடுங்கேணியில் அமைந்துள்ள பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வில்,

வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் பதவிக்கு ச.தணிகாசலம் (தமிழரசுக்கட்சி) ஜெ.ஜெயரூபன் (தமிழர் விடுதலைக் கூட்டணி) போட்டியிட்ட நிலையில் இருவரும் சமமான வாக்குகளை பெற்றமையால் திருவுலச்சீட்டின் மூலம் ச.தணிகாசலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை உபதலைவருக்காக போட்டியிட்ட நா.யோகராசா (தமிழரசுக்கட்சி) காமினி விக்கிரம்பால (பொதுஜன பெரமுன) ஆகியோரில் நா.யோகராசா வெற்றியீட்டியுள்ளார் இதன்மூலம் வவுனியா வடக்கு பிரதேசசபையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முழுமையாக கைப்பற்றியுள்ளது.

கடும் போட்டிக்கு மத்தியில் தவிசாளர் பதவிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் இரு தரப்பினருக்கும் சமமான 11வாக்குகள் வழங்கப்பட்ட நிலையில் திருவுளச்சீட்டின் மூலம் குழுக்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதாசிவம் வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உபதவிசாளர் பதவியிற்கு பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 14 வாக்குகளும் பொதுஜன பெரமுன 6 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது. எனவே உப தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாகலிங்கம் யோகராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடலுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சிலை தொடர்பில் வெளிவந்த புது தகவல்!!

காலி, கோட்டை பிரதேசத்தில் கடலுக்குள் மூழ்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிலை தொடர்பில் புதிய தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன் மீட்கப்பட்ட சிலையின் புகைப்படமும் வெளிவந்துள்ளது. குறித்த சிலை இரண்டரையடி உயரமுடைய மிகவும் பழமையான புத்தர் சிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சிலை காலி பிரதேசத்தில் உள்ள சுதர்மாராம விகாரையில் கையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 கிலோகிராம் நிறையும், இரண்டரையடி உயரமும் கொண்ட இச்சிலை தொடர்பில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டை அருகே உள்ள கடற்கரையில் இருந்து 150 – 200 அடி தொலைவில் கடல் நீரில் 5 – 10 ஆழத்தில் இந்தச் சிலை புதையுண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது

கனடாவில் தொடரும் படுகொலைகள் : மற்றுமொரு யாழ். இளைஞன் கோரமாக கொலை!!

கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் ஸ்கந்தராஜா நவரட்ணம் என்ற இலங்கையர் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்தமைக்காக கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் டொரொன்டோவைச் சேர்ந்த மெக்ஆர்த்தர், தாம் கொலை செய்கின்றவர்களை விவசாய காணிகளில் புதைத்து வந்தமையும் தெரியவந்துள்ளது. அவரால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் என்ற 37 வயதான நபர் என்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

உருகுலைந்திருந்த அவரது சடலம், சர்வதேச முகவர் அமைப்பு ஒன்றின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் 2010ம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவிற்கு இடம்பெயர்ந்துள்ளார். 2015ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கிருஷ்ணகுமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கனடாவின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

37 வயதான கிருஷ்ண குமார் கனகரத்தினம் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தார். இவர் சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்றுள்ளார். அங்கு Scarboroughவில் வாழ்ந்து வந்துள்ளார்.

தொடர் கொலையாளி மெக் ஆர்தரினால் முன்னர் கொலை செய்யப்பட்டவர்களுக்கும், டொரென்டோ ஓரினச் சேர்க்கை கிராமத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று அடையாளம் காணப்பட்ட கிருஷ்ணகுமார் கனகரட்ணத்துக்கும், இந்த கிராமத்துக்கும் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு செல்லும் அதி சொகுசு பஸ் தீக்கிரை : விசமிகள் அட்டகாசம்!!

 

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் புணாணை 118ஆவது மைல் கல்லுக்கு அருகாமையில் சொகுசு பஸ் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலனறுவை – மன்னம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சாமர மதுசங்க புஸ்பகுமார என்பவருக்கு சொந்தமான சொகுசு பஸ்ஸூக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் கல்முனைக்கு சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்புக்கு செல்வதற்காக கல்முனை நோக்கி பயணித்த போதே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் நடத்துனர் எம்.றபீக் என்பவர் கருத்து தெரிவிக்கையில், “நானும், பஸ் உரிமையாளரும், சாரதியுமான சாமர மதுசங்க புஸ்பகுமார என்பவரும் கல்முனைக்கு சென்று கொண்டிருந்த போது புணாணை பிரதேசத்தில் வைத்து பஸ்ஸூக்கு ஒருவர் கல்லால் எறிந்தார்.

இதனை அவதானித்த சாரதி பஸ்ஸை வீதியோரமாக நிறுத்திய போது பஸ்ஸூக்கு அருகில் வந்த நால்வர் என்னை தாக்கி விட்டு பஸ்ஸூக்கு பெற்றோல் ஊற்றி தீயிட்டு விட்டு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்று விட்டனர்” என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பஸ் உரிமையாளரும் சாரதியுமான சாமர மதுசங்க புஸ்பகுமார மற்றும் பஸ் நடத்துனரான எம்.றபீக் ஆகியோரை வாழைச்சேனை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

காணாமல் போன இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!!

 

மட்டக்களப்பில், காணாமல் போனதாக செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவரே நேற்றுமுன்தினம் இரவு முதல் காணாமல் போனதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது தங்கவேல் ஜெயராஜ் எனும் 49 வயது குடும்பஸ்தரின் சடலமே, மட்டக்களப்பு சின்ன உப்போடை வாவிக்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பயங்கர சத்தத்துடன் குண்டு விழுந்தது : சிரியா தாக்குதலில் தப்பித்த சிறுமி உருக்கம்!!

 

சிரியாவில் நடந்த இரசாய தாக்குதலின் போது பீப்பாய் குண்டுகள் எங்கள் விட்டில் விழுந்ததாக அந்த தாக்குதலில் இருந்த தப்பிய 7 வயது சிறுமி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அங்கிருகும் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதில் கடந்த 7ம் திகதி நடந்த இரசாயன தாக்குதலில் 75-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பின்னால் சிரிய ஜனாதிபதி Bashar al-Assad இருப்பதாக கூறி, அமெரிக்கா கூட்டுப் படையுடன் இணைந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிரியாவில் இருக்கும் கெமிக்கல் குடோன்களில் தாக்குல் நடத்தின.

சிரியாவில் நடந்த இந்த இரசாயன தாக்குதலில் அவர்கள் பெரும்பாலும் குளோரின் மற்றும் சரின் போனற கொடிய நச்சு வாயுவையே பயன்படுத்தியுள்ளதாக பிரான்சைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த இரசாயன தாக்குதலில் Masa என்ற 7 வயது சிறுமி சிக்கினார். அதன் பின் அவர் உடனடியாக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டதால், உயிர்பிழைத்தார்.

இதையடுத்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், எங்கள் வீட்டில் பீப்பாய் குண்டுகள் திடீரென்று வந்து விழுந்தது.

இதனால் பலத்த சத்தம் கேட்டது. அப்போது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடி படுத்துக் கொண்டோம். அந்த பீப்பாய் குண்டுகள் விழுந்தவுடன், உஷ்…. என்ற மெல்லிய சத்ததுடன் ஒரு வாயு வந்தது.

உடனடியாக வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறும் படி எங்கள் உறவினர்களில் ஒருவர் கத்தினார், அதன் பின் அந்த வாயு எங்கள் மீது பட்டது இருப்பினும் உடனடியாக முகத்தில் தண்ணீரை தெளித்து விட்டு நாங்கள் மருத்துவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி ஓடி உயிர் பிழைத்தோம்.

மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பிய போது, நாங்கள் இருந்த இடங்களில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பலர் இறந்து கிடந்தனர். அந்த நேரத்தில் நான் இரத்த வாடையை முகர்ந்தேன், என்னுடைய டீ சர்ட்டில் குளோரின் வாசனை வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் சிறுமியின் அம்மா, அன்றிரவு பயங்கர சத்ததுடன் குண்டு வந்து விழுந்தது. இதனால் பூமியில் இருந்த தூசிகள் பறந்தன. வந்து விழுந்த குண்டுகளில் ஒரு குண்டு வெடிக்காமல் இருந்தது, உடனடியாக நாங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலாடையுடன் மோசமான முறையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பெண்!!

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற பெண்ணொருவர், மேலாடையுடன் மட்டும் இலங்கையை வந்தடைந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகலை சேர்ந்த கண் தெரியாத 58 வயதுடைய பணிப்பெண் ஒருவருக்கு, மேல் ஆடை ஒன்று மாத்திரம் அணிவித்து சவுதியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குருணாகலை, பிலிஸ்ஸ மடுவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே மீண்டும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு சேவை அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 10 வருடங்களாக சவுதியில் பணிப்பெண்ணான சேவை செய்த அந்த பெண்ணின் சம்பளம் அல்லது சொத்துக்கள் இன்றி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை தூதரகத்தினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அபாயா எனப்படும் மேல் ஆடை மாத்திரம் அணிவித்து இலங்கைக்கு அனுப்புவதற்கு சவுதிக்கான இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இதேவேளை, 40 வருடங்கள் குவைத்தில் பணிப்பெண்ணாக சேவை செய்த 72 வயதுடைய வயோதிப பெண்ணை குவைத் அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எந்தவித பணம் அல்லது சொத்துக்கள் இன்றி அனுப்பப்பட்ட அந்த பெண்ணிற்கு பொறுப்பாளர்கள் ஒருவரும் இல்லாமையினால் கட்டுநாயக்கவில் உள்ள தடுப்பு முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களினால் 39 பேர் பலி!!

கடந்த புத்தாண்டு காலப்பகுதியில் வாகன விபத்துக்கள் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், கடந்த 12ம் திகதி தொடக்கம் பொலிசார் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் ஒருகட்டமாக குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய கடந்த 12ம் திகதி தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே ​போன்று புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தைச் செலுத்த முற்பட்டு விபத்துக்குள்ளானவர்களில் 39 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயங்களுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இப்படியொரு உலக சாதனை!!

உலகின் மிக நீளமாக உருளைக்கிழங்கு கேக் நுவரெலியாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ளது. கிழங்கினால் தயாரிக்கப்படும் மிக நீளமான கேக் என்ற உலக சாதனையாக இது பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கேக் 111 மீற்றர் நீளமும் 380 கிலோ கிராம் நிறையையும் கொண்டுள்ளது. 75 கிலோகிராம் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த கேக்கிற்கு பொட்டோ கேக் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பதற்காக பிரபல சமையல் கலைஞர்கள் 50 பேர் பணியாற்றியுள்ளனர்.

நுவரெலியா கிராண்ட் ஹோட்டலின் வெளி அரங்கில் இந்த பாரிய உருளைக்கிழங்கு கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு மூலம் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கேக் தயாரிக்கும் முயற்சியாக இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

40 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!!

சுமார் 40 வருடங்களாக குவைத் நாட்டில் பணியாற்றி வந்த இலங்கைப் பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டால் இவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான இந்த பெண்மணியே 40 வருடங்களுக்குப் பின் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவரை வரவேற்பதற்கும், அழைத்துச் செல்லவும் அவருடைய குடும்பத்தார் யாரும் விமான நிலையத்திற்கு வந்திருக்கவில்லை.

இதனால் சமூக சேவை திணைக்களத்தால் நிர்வகிக்கப்படுகின்ற செத் செவன முதியோர் இல்லத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் இவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பை அண்மித்த பகுதியில் கோரச் சம்பவம் : மனிதாபிமானம் மரணித்துப் போன மக்கள்!!

 

பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கொண்டமையினால் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், ஹம்பாந்தோட்டையில் இருந்த வந்த முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் முச்சக்கர வண்டியில் பயணித்த 4 பேர் எரிகாயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் அம்பலந்தோட்டை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி முழுமையாக தீப் பற்றி அழிந்துள்ளது. இந்த சம்பவத்தினால் பேருந்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும் பேருந்தில் பயணித்தவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளாகும். சம்பவத்தை பார்த்த மக்களில் பலர் விபத்துக்குள்ளானவர்களின் உயிரை காப்பாற்றாமல் தங்கள் கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்துள்ளனர்.

தொலைபேசி மோகத்தில் மனிதாபிமானம் மரணத்துள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

சிரியா மீது தாக்குதல் : பின்விளைவுகளை சந்திக்கும் பிரான்ஸ், பிரித்தானியா!!

ஐரோப்பாவின் இரு பெரும் இராணுவ ஜாம்பவான்களாகிய பிரான்ஸும் பிரித்தானியாவும் அவசரப்பட்டு அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நிகழ்த்தியதற்கான பின் விளைவுகளை தங்கள் நாடுகளுக்குள்ளேயே எதிர்கொண்டு வருகிறார்கள்.

முன்பின் யோசிக்காமல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதியின் உண்மையான உதவியாளர்களைப்போல அவருடன் இணைந்து பிரான்ஸும் பிரித்தானியாவும் சிரியா மீது தாக்குதல் நிகழ்த்தியதற்காக விமர்சகர்கள் அவ்விரு நாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஐரோப்பியர்களில் பலர் இதை ஏளனமாகவும் சிலர் சந்தேகத்துடனும் பார்க்கிறார்கள்.
சிலர் ஏற்கனவே வன்மத்துடன் இருக்கும் ரஷ்யாவின் வெறுப்பை இன்னும் சம்பாதிக்க வேண்டி வருமோ என்று அஞ்சுகிறார்கள்.

முன்பு ஜோர்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது அவர் ஈராக் மீது படையெடுத்தபோது அவருடன் கை கோர்க்காததற்காக பாராட்டுகளைப் பெற்ற பிரான்ஸ் தற்போது தனது தனித்தன்மையை இழந்துவிட்டதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அவச்சொல்லுக்கு உள்ளாகியிருக்கிறார்.

தெரசா மேயோ வான் வெளித்தாக்குதல்களை நிகழ்த்தும் முன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாததற்காக வெளிப்படையாக குற்றம் சாட்டப்படுகிறார்.

திங்களன்று நாடாளுமன்றத்தின் முன் சிரிய தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் பிரான்ஸுடன் கைகோர்த்ததற்காக தெரசா மே விளக்கமளிக்க உள்ள நிலையில் பிரான்ஸ் சட்டசபையில் இதே விடயம் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் சிரிய உள்நாட்டுப் போரில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை.

பிரான்ஸில் ஏற்கனவே வேலை நிறுத்தங்களால் அழுத்தத்திற்குள்ளாகியிருக்கும் மேக்ரான், தற்போது தனித்து நிற்காமல் அமெரிக்காவின் எடுபிடி போல செயல்பட்டதாக தனது நாட்டிலேயே குற்றம் சாட்டப்படுகிறார்.

தெரசா மேயோ விரைந்து செயல் படவேண்டியிருந்ததால், நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் என்றாலும் அவருக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் பலத்து ஒலிக்கின்றன.

பொது மக்களிடையையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ரஷ்யாவுடன் மோதுவது ஆபத்துதான் என்றாலும் தனது மக்களை கொன்று குவிக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று கூறியுள்ள ஒருவர் அதனால்தான் இந்த மூன்று நாடுகளையும் நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் இதுதான் நடக்கும் : புடின் எச்சரிக்கை!!

 

மேற்கத்திய நாடுகள் மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தினால், சர்வதேச உறவுகள் பாதிக்கப்பட்டு, உலகளாவிய குழப்பம் ஏற்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரத்தில் சிரியாவில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய ரசாயனத் தாக்குதலை காரணம் காட்டி, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரியாவின் ராணுவ முகாம்களின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே பேசும் போது சிரியா அதிபர் அசாத் உற்பத்தி செய்யும் ரசாயன ஆயுதங்களுக்கு மூலப் பொருட்கள் வழங்கி வரும் நிறுவங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் மீது “Face the Nation” எனும் திட்டத்தின் கீழ் புதிய பொருளாதார தடை விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள போவதாக அறிவித்திருந்தார்.

அடுத்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிபிடம் எடுத்துகூறி சம்மதிக்க வைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று ரஷ்யாவின் தலைமைப் பீடமான கிரெம்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா தாக்குதல்களை முன்வைத்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்கிறது.

சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக ரஷ்யா கடந்த ஏழு வருடமாக முன்னெடுத்து வந்த அரசியல் ரீதியிலான முயற்சியை மேற்கத்திய நாடுகளின் ஏவுகனை தாக்குதல் பாரிய சேதத்தை ஏற்படுத்தி பாழாக்கிவிட்டது.

மேலும், சிரியா மீது மீண்டும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது உலகளாவிய குழப்பத்தை விளைவித்து உலக நாடுகளுக்கு இடையில் உள்ள ராஜாங்க ரீதியிலான உறவை கடுமையாக பாதிக்கும் என்று விளாடிமிர் புடின் காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியா தாக்குதல் குறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியிடம் புடின் தொலைபேசி வாயிலாக ஆலோசித்த பின்னர் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாகவே மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் எதிரான மோதல் வெளிப்படையாக முற்றிவருவது உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.