தெலுங்கானாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் மருமகனை மாமனார் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரம்கீடா கிராமத்தை சேர்ந்தவர் புஜய்யா. இவரது மகள் அக்ஷிதாவை வெங்கட் என்பவருக்கு திருமணம் செய்து வந்தார். புஜய்யா சலூன் கடையில் பணிபுரியும் நிலையில் அதே கடையில் வெங்கட்டும் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை மது போதையில் வீட்டுக்கு வந்த வெங்கட் டிவியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க நினைத்துள்ளார். ஆனால் அவரின் மாமனார் புஜய்யா டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்த நிலையில் மருமகனுக்கு டிவி ரிமோட்டை கொடுக்க மறுத்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் கத்திரிக்கோலை எடுத்து வெங்கட்டை புஜய்யா குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த வெங்கட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமாவில் இருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். புஜய்யா, வெங்கட் இடையில் குடும்ப சண்டை ஏற்கனவே இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மருமகனை கொலை செய்த குற்றத்துக்காக புஜய்யாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்திய போர் விமானங்கள், 72 மணிநேரத்தில் 5 ஆயிரம் முறை வானில் பறந்து சாதனை படைத்துள்ளன. கடந்த 10ஆம் திகதி, சீனா மற்றும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள இந்திய எல்லைகளில், இந்திய விமானப்படையும், ரஷ்யப் படையும் இணைந்து ககன்சக்தி என்ற போர் பயிற்சியை தொடங்கின.
இந்தப் பயிற்சியில் முதற்கட்டமாக, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் போர்பயிற்சியில் ஈடுபட்டன. இதில், 72 மணிநேரத்தில் இந்த விமானங்கள் சுமார் 5 ஆயிரம் முறை வானில் பறந்து சாதனை படைத்துள்ளன.
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், இந்த இரண்டு வார காலப் பயிற்சி, இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவு உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பங்கேற்க உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள், ரேடார் மற்றும் கண்காணிப்பு கருவிகளும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த பயிற்சியின் நோக்கம், விமானப் படையின் போர் தொடுக்கும் திறனைச் சோதிப்பதாகும் என தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சியானது வரும் 23ஆம் திகதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த ஒழலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா, இவரது மகள் சங்கீதா(17). இவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தாய் ராதா இறந்து விட்டதால், தனது தந்தை டீக்காராமனுடன் தாழனூரில் வசித்து வந்தார் சங்கீதா. பாடசாலைக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால், சங்கீதா வீட்டில் இருந்தார். இந்நிலையில் தனது வங்கி புத்தக நகலை பள்ளியில் சமர்ப்பிக்க,நேற்று மதியம் ஒழலை சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த சங்கீதாவின் அண்ணன் நவீன், நேற்றிரவு முழுவதும் பல இடங்களில் அவரை தேடியுள்ளார். இந்நிலையில், இன்று காலை ஒழலையில் உள்ள ராதாவின் வீட்டிற்கு நவீன் சென்று பார்த்தபோது, அங்கு சங்கீதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து திமிரி பொலிசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், சங்கீதாவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சங்கீதாவின் கழுத்தை டயர் டியூப்பை கொண்டு இருக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கனடாவில் குடிபுகுந்த இலங்கைப் பெண்ணான செல்வி குமரன் ஒரு மருத்துவராவதற்காக ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்றார். இறுதியாக Residency என்னும் பயிற்சியை முடிப்பதற்காக அவர் அமெரிக்கா செல்ல வேண்டும்.
அவர் அமெரிக்கா சென்று பயிற்சியை முடித்து விட்டு திரும்ப கனடாவிற்கு வரும்போது அவருக்கு வேலை வாய்பு தயாராக இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக கனடா அரசாங்கத்திடம் இருந்து “statements of need” என்னும் தேவைச் சான்றிதழ் ஒன்றைப் பெற வேண்டும்.
செல்வி அமெரிக்காவில் residency பயிற்சியை மேற்கொள்வதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்பலானார். ஒன்றல்ல, இரண்டல்ல, 200 விண்ணப்பங்கள், 20 நேர்முகத்தேர்வுகள். இறுதியாக 20,000 டொலர்கள் செலவளித்தபின் அமெரிக்காவிலுள்ள மிச்சிகனில் அவருக்கு பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இப்போது கனடா அரசாங்கத்திடம் இருந்து “statements of need” என்னும் சான்றிதழ் பெறுவதற்காக கனடா மருத்துவத்துறையிடம் விண்ணப்பித்தார் செல்வி. ஆனால் மருத்துவத்துறையிலிருந்து அவருக்கு வந்த மின்னஞ்சல், ஏற்கனவே 30 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் மீண்டும் அடுத்த ஆண்டு விண்ணப்பிக்குமாறும் தெரிவித்தது.
இவ்வளவு பணம், இவ்வளவு நேரம் செலவிட்டபிறகு இப்படி ஒரு பதில் வந்ததும் அதிர்ந்துபோனார் செல்வி. காலம் வீணாவது மட்டுமல்ல, மீண்டும் அடுத்த முறை விண்ணப்பிக்கும்போது பயிற்சி மேற்கொள்வதற்கான இடம் இருக்குமா என்று சொல்ல முடியாது.
விசாரித்தபோது நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு மாகாணத்திலும் வேலை வாய்ப்புக்கான இடம் இருக்கிறதா என்று ஆய்வு செய்து பின்னர் அதன் அடிப்படையிலேயே “statements of need” சான்றிதழ் வழங்குவதாக கனடா மருத்துவத்துறை கூறியது.
செல்வியின் விண்ணப்பம் மறுக்கப்பட்ட விடயம் வெளியில் வந்ததும் ஏராளமான மருத்துவர்கள் Saskatchewan பகுதியில் குழந்தை மருத்துவர்களுக்கான தேவை இருப்பதாக கனடா மருத்துவத்துறைக்கு கடிதங்கள் அனுப்பினர்.
செல்வி தானும் நேரடியாக இரண்டு MLAக்கள், இரண்டு MPக்கள், மாகாண சுகாதாரத்துறை அமைச்சர், கனடாவின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ஒரு செனேட்டர் ஆகியோரை சந்தித்து நியாயம் கேட்டார்.
இறுதியாக கனடா மருத்துவத்துறை தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவே செல்விக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று ஒரு பெரிய பல்டி அடித்தது. இவ்வளவு அலைக்கழிப்பு, போராட்டத்திற்குப்பின் செல்விக்கு “statements of need” சான்றிதழ் வழங்கப்பட்டது.
சோர்ந்து போகாமல் விடாமுயற்சியுடன் போராடிய செல்வி கடைசியில் ஜெயித்துவிட்டார் என்றாலும் அதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம் என்பதைப் பார்க்கும்போது அயல் நாடுகளிலிருந்து கனடா செல்பவர்கள் ஒரு நல்ல பணியில் அமர்வதற்கு எவ்வளவு பாடு பட வேண்டியுள்ளது என்பதையே செல்வியின் கதை நமக்கு காட்டுகிறது என்றால் மிகையாகாது.
வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவில் த.தே.கூட்டமைப்பு தோல்வியுற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே யாழ் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் த.தே.கூட்டமைப்பு (45) நாற்பது நிமிடங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் வவுனியா நகரசபையில் ஆட்சியமைப்பதில் த.வி.கூட்டமைப்பு நடுநிலை வகிப்பதாக வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டு துரோகமிழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வவுனியா நகரசபைக்கான உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது எட்டு ஆசனங்களை பெற்று அமோக வெற்றிபெற்றிருந்த நிலையில் வவுனியா நகரசபையில் த.தே.கூ ஆட்சி அமைப்பதை பார்வையிடுவதற்காக வந்திருந்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,
செல்வம் அடைக்கலநாதன், எஸ்.சிவமோகன் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் அதிரடியாக எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து ஆட்சியை கைப்பற்றியிருந்த நிலையில் அதிர்ச்சியடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து இருந்த போதிலும், விகிதாசார பட்டியலில் தெரிவானதும், அவரே இப்போது நகரசபை தலைவராக தேசியக் கட்சிகளுடன் கூட்டிணைந்து தறிவாகியுள்ளார்.
இவர் மட்டுமல்ல ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்ததுடன், இவர்களில் மூவரும் விகிதாசார முறை மூலமே தெரிவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவுக்கான நிகழ்வு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு நெல்லுக்குளத்தில் அமைந்துள்ள பிரதேச சபை கட்டிடத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக துரைச்சாமி நடராஜசிங்கம்(ரவி) பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 14 வாக்குகள் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த த.சிவராசா 13 வாக்குகளை பெற்றிருந்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒருவர் நடுநிலை வகித்திருந்த நிலையில் இருவர் வாக்களிக்கவில்லை.
உப தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகேந்திரன் 15 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எஸ்.குகதாசன் 14 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையில் 11 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவரும் சுயேட்சையில் இருவருமாக ஆதரவு வழங்கியிருந்தனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 30 உறுப்பினர்கள் இன்று வாக்கெடுப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் , வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், சிவாஜிலிங்கம், கே.கருணாதாச முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியாவில் நேற்று வவுனியா நகரசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை இரண்டையும் இழந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு இன்று வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் இனிப்பு என எண்ணி பூச்சி முட்டையை எடுத்து சாப்பிட்டதால் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னாரைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது பெற்றோருடன் யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று மன்னார் நோக்கி செல்ல பேருந்தில் ஏறியுள்ளார். இதன்போது சிறுமியின் பொதியில் இனிப்புக்களுடன் பூச்சி முட்டைகளும் இருந்துள்ளன.
சிறுமி இனிப்பு என எண்ணி பூச்சி முட்டைகளையும் சேர்த்து சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் தமது மகளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் 15 வயது சிறுவன், 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தெற்கு Sulawesi-ஐ சேர்ந்த 15 வயது சிறுவனும், 14 வயது சிறுமியும் காதலித்து வந்தார்கள். இந்நிலையில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ள இருவரும் நீதிமன்றத்தை அணுகினார்கள். அந்நாட்டு சட்டப்படி ஆணுக்கு 19 மற்றும் பெண்ணுக்கு 16 என்பதே திருமண வயதாகும்.
ஆனால் இவர்கள் விடயத்தில் நீதிமன்றம் விதிவிலக்கு அளித்து திருமணத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் உள்ள ஒரு அதிகாரி கூறுகையில், குறித்த சிறுவன் மற்றும் சிறுமியை யாரும் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தவில்லை, சிறுமியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார், தந்தையும் அதிகம் அவரோடு இருப்பதில்லை.
இதனால் தனக்கு துணை வேண்டும் என சிறுமி கோரிக்கை வைத்தார். இதோடு சிறுமி கர்ப்பமாக இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது. இதையெல்லாம் வைத்து விலக்கு அளித்து இந்த முடிவை நீதிமன்றம் எடுத்துள்ளது என கூறியுள்ளார்.
இந்நிலையில் திருமணத்துக்கு முன்பான கவுன்சிலிங் வகுப்பில் இருவரும் சேரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் திருடிய பணத்தை நடுரோட்டில் பறக்கவிட்டு திருடன் தவித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு டிராவல் ஏஜன்சி அலுவலகத்துக்குள் இரண்டு கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த பணத்தை திருடியுள்ளனர்.
பின்னர் இருவரும் சாலையில் நடந்து சென்றனர். அப்போது ஒரு கொள்ளையனின் ஜீன்ஸ் பையில் வைத்திருந்த பணம் அங்கு வீசிய பலத்த காற்று காரணமாக சாலையில் பறக்க ஆரம்பித்தது. இதை பார்த்து பதறிய ஒரு கொள்ளையன் பணத்தை பிடிக்க முயல, மற்றொருவரோ செய்வதறியாது திகைத்து நின்றார்.
அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில் இதை அடிப்படையாக வைத்து கொள்ளையர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.
இந்தியாவில் வரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றில் கட்டி துன்புறுத்தும் கணவரின் வீடியோ வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் ஷாகன்பூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர், வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.
50 ஆயிரம் கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது, மனைவி பணம் தர மறுக்கவே பெல்டால் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்து விழவே, துப்பட்டாவால் கைகளை கட்டித் தொங்கவிட்டு அடித்துள்ளார்.
இதை வீடியோவாக பதிவு செய்து மனைவியின் தம்பிக்கு அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அவர்கள் பொலிசில் புகார் அளிக்க, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் பெண்ணை மீட்டதுடன் தலைமறைவான கணவர் மற்றும் குடும்பத்தினரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்த நிலையில், குறித்த நபராலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் யமுனா நகரை சேர்ந்தவர் பிங்கி. இவருக்கு திருமணமான நிலையில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவரை பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிந்து விட்ட பிங்கி தனது மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கமல் கபூர் என்பவருடன் பிங்கிக்கு கடந்த ஆறு மாதங்களாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கமல் பிங்கி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் பிங்கி வீட்டுக்கு வந்த கமல் தனியறையில் அவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த கமல் தன்னிடமிருந்த துப்பாக்கியால் பிங்கியை சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.
பிங்கியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்து அறையில் இருந்த அவரின் மகள்கள், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பிங்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பிங்கியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். பிங்கியை கமல் ஏன் கொலை செய்தார் என்பது இன்னும் தெரியாத நிலையில் தலைமறைவாக உள்ள கமலை பொலிசார் தேடி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். Etah மாநகராட்சியை சேர்ந்த 8 வயது சிறுமி அங்குள்ள ஒரு பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஞாயிற்று கிழமை அன்று கலந்து கொண்டுள்ளார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் சிறுமியை ஏமாற்றி அங்கிருந்து அழைத்து சென்று அவரை பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் சடலத்தை பொலிசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியான சோனுவை கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி அகிலேஷ் குமார் கூறியுள்ளார். ஜம்மு – காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இச்சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுயமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள சோமாலிலாந்து பிராந்தியத்தை மீளவும் சோமாலியாவுடன் இணைப்பதற்கு பரிந்துரை செய்யும் கவிதையொன்றை எழுதியமைக்காக இளம் பெண் கவிஞர் ஒருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து சோமாலிலாந்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
நசிமா குவோரேன் என்ற பெண் கவிஞருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நசிமாவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
சோமாலிலாந்தானது 1991 ஆம் ஆண்டு சோமாலியாவிலிருந்து சுதந்திரத்தை சுயமாக பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள போதும், அந்த சுதந்திரத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தலம், கீரியங்கள்ளி பகுதியில் துவிச்சக்கர வண்டி ஒன்று ஓடையில் விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். கொழும்பு பகுதியை சேர்ந்த மொஹமட் காசிம் நிஸார் எனும் 7 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
தாயின் சகோதரியுடைய திருமண நிகழ்வில் கலந்துகொள்வதகற்காக கீரியங்கள்ளிக்கு வந்த போதே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். கீரியங்கள்ளி – ஆன்டிகம பாதையில் நண்பர்களுடன் வினோதமாக துவிச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டிருந்த போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையில் அருகில் இருந்த ஓடையில் விழுந்துள்ளது.
ஏனைய சிறுவர்கள் உடனடியாக சம்பவம் தொடர்பில் அருகி் உள்ளவர்களிடம் அறிவித்தும் குறித்த சிறுவனை மீட்டு முந்தலம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே சிறுவன் உயிரிழந்திருந்தான்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தோணிக்கல் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சர்வ சித்தி விநாயகப் பெருமானுக்கும் , மகாலட்சுமி, வைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளிற்கும் நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் சித்திரைத்திங்கள் 07ம் நாள் (20.04.2018)
வெள்ளிக்கிழமையும் பஞ்சமி திதியும், மிருகசீரிட நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய 06.03 மணிமுதல் 07.26 மணிக்குள் வரும் மேட லக்கின சுப முகூர்த்த வேளையில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
தொடர்ந்து 11 நாட்கள் மண்டலாபிஷேகமும் 12ம் நாள் சங்காபிஷேகமும் நடைபெற திருவருள் கூடியுள்ளது. கர்மாரம்பம் – 18.04.2018, எண்ணெய்க்காப்பு – 19.04.2018, கும்பாபிஷேகம் – 20.04.2018. பக்த அடியார்கள் அனைவரையும் கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொண்டு சித்திவிநாயகரின் அருளைப்பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக தெலுங்கு நடிகைகள் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகைகள் கூறியதாவது,
தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள், அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள், இரவில் படுக்கை அறை பொம்மையாக்கி விடுகிறார்கள்.
80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது, வயதான பெண்களையும் விடுவது இல்லை. பாலியல் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என கூறியுள்ளனர்.
இயக்குனர் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டு இருக்கிறார்.
திரையுலக பிரபலங்கள் ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளார், இவருக்கு ஆதரவாக மகளிர் அமைப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.