சிறிய விடயத்தால் ஏற்பட்ட பிரச்சனை : ஒன்றாக உயிரை விட்ட இளம் தம்பதி!!

திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பொலிசுக்கு பயந்து கணவரும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பழனியை சேர்ந்தவர் நடராஜ் (33). இவருக்கும் கவுதமி (22) என்ற பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தம்பதிக்கு நவனீஸ் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

கவுதமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தபோது அவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் தொடர்ந்து அவருக்கு கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இது குறித்து கணவரிடம் அவர் அனுமதி கேட்க நடராஜ் அனுமதிக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த கவுதமி நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜும் விஷத்தை குடித்து மயங்கினார்.

இதற்கிடையில் அங்கு வந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இருவரும் இறந்தனர்.

சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் கவுதமி விஷம் குடித்ததால் பொலிசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் நடராஜும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற சிறுமி தீவைத்து எரிப்பு : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் பொதுக் குழாயில் தண்ணீர் வழங்க மறுத்த சிலர் சிறுமியை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் அருகில் உள்ள பய்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர் நிதி (16) . இவர் நேற்றிரவு அங்குள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் எங்கள் ஏரியாவில் வந்து தண்ணீர் பிடிக்கக்கூடாது என சிறுமியிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து சிறுமிக்கும் அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எங்களை மீறி தண்ணீர் பிடித்தால் கடும் விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி சிறுமி தண்ணீர் பிடித்த நிலையில், ஆத்திரத்தில் அவரை தாக்கிய கும்பல் பின்னர் தீயிட்டுக் கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை மட்டும் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

சிறுமி ஆஷிபா கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம்!!

சிறுமி ஆஷிபா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதாரங்களாக கருதப்பட்ட அனைத்து புகைபடங்களும் அழிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்து தான் ஆஷிபா வழக்கில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.

கஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஆஷிபா கொலை வழக்கில் காவல் துறையினர் உட்பட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் காவல்துறையினரே குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால் ஆஷிபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கை நேர்மையான முறையில் விசாரிக்க குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் ஜல்லா தலைமையில் குழு ஒன்றை அமைத்தார் கஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி.

பொதுவாகவே சிக்காலான பல வழக்கை சிறப்பாக விசாரணை நடத்தி குற்றத்தை உறுதி செய்வதில் வல்லவர் என பெயர் எடுத்த ரமேஷ் குமார் ஜல்லாவினால் இந்த வழக்கில் அப்படி அதிரடி காட்ட முடியவில்லை.

ஏனெனில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டுவதில் சிக்கல் இருந்தது. அவற்றை எல்லாம் தாண்டி மிகவும் சாதுரிமாக செயல்பட்ட காவல்துறையினர் ஆதாரங்களை சேகரிக்க தொடங்கினர்.

இதற்கு முன்னர் இந்த வழக்கை விசாரித்த பொலிஸாரின் தகவல் படி பர்வேஷ் குமார் எனும் 15 வயது சிறுவன் குற்றம் செய்ததாக கூறப்பட்டது.

இதற்காக சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவனும் இதை ஒப்புக்கொண்டான். இந்நிலையில் தான் ஆஷிபா உடலை மீட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விசாரணைக்குழு பார்த்துள்ளது.

அதில் ஒரே ஒரு புகைப்படத்தில் மட்டும் ஆஷிபா உடலில் சேறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மற்ற புகைப்படங்களை பார்த்த போது அதில் எந்த புகைப்படத்திலும் சேறு இல்லை.

இதை அடிப்படையாக வைத்து விசாரித்த பின்னர் தான் அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தது. சிறுமியை கோவிலில் வைத்து பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்தது.

அந்த புகைப்படம் தான் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்து அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய காரணமாக அமைந்தது என விசாரனை அதிகாரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா பீடத்தில் மனைவியும் மகனையும் அடைத்துவைத்துள்ளனர் : கதறும் கணவன்!!

நித்யானந்தா பீடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தரும்படி தமிழகத்தில் கணவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை அடுத்துள்ள முனியப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவருக்கு அத்தாயி என்ற மனைவியும் பழனிசாமி(24) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் அத்தாயிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நித்யானந்தாவின் பீடத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சையால் அவர் உடல் நலம் தெறியதால், பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பீடத்திற்கு அத்தாயி மற்றும் பழனிச் சாமி சென்றுள்ளனர்.

பெங்களூரு சென்ற அவர்கள் திரும்பி வராத காரணத்தினால் தனது மனைவி மற்றும் மகன் நித்யானந்தா பீடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தரும்படியும் கூறி ராமசாமி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

சிறுமியை 8 நாள் அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொலை!!

கத்துவா சிறுமி ஆஷிபா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த ரணம் ஆறுவதற்குள் சூரத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத சிறுமி 8 நாட்களாக அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சித்திரவதை செய்யப்படது போல் பல்வேறு காயங்கள் சிறுமியின் உடலில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மைதானத்தில் கிடப்பதாக அங்கு நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அமைந்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த சிறுமி 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளமாக 80-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் கண்டடுபிடிக்கப்பட்டது.

அந்த காயங்கள் யாவும் சமீபத்தில் ஏற்பட்ட காயங்கள் அல்ல அவை ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட காயங்கள் என சிறுமியின் உடலை 5 மணி நேரத்திற்கும் மேல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி கே.பி. ஜாலா, காலையில் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் அருகில் உள்ள மைதானம் ஒன்றில் சிறுமி உடல் கிடந்தது குறித்து தகவல் கொடுத்தனர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு உடனடியாக விசாரனையில் இறங்கியுள்ளோம்.

ஆனால் சிறுமியை பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை ஆனால் விரைவில் ஆதாரங்களை திரட்டி குற்றவளிகளை கைது செய்வோம் என அவர் கூறினார்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் சூரத்தில் இப்படி சம்பவம் நிகழந்திருப்பது பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி!!

சிரியா மீது அமெரிக்க கூட்டுபடைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபையில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய இரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10ம் திகதி நடைபெற்றது.

சர்வதேச இரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யா முன்வைத்தது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்னும் நிலையில் ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷ்யா இயற்றிய இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டு கொண்டு இருக்காமல் சிரியா விவகாரத்தில் செய்ய வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுப்பதற்காக பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையே, சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் நேற்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டது.

இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றினார்.

சிரியா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், மேற்கொண்டு சிரியாவில் தாக்குதல் நடத்தக் கூடாது என ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீனா மற்றும் பொலிவியா ஆதரவு தெரிவித்தது.

அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், குவைத், போலாந்து, ஐவரி கோஸ்ட் ஆகிய எட்டு நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

எத்தியோப்பியா, கஜகஸ்தான், எக்குவட்டோரியல் கினியா, பெரு ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. இதனால் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

-மாலைமலர்-

கனடாவில் வாழும் இலங்கை யுவதி : பலரை நெகிழச் செய்யும் செயற்பாடு!!

இலங்கையில் பிறந்து கனடா தம்பதியினால் தத்தெடுக்கப்பட்ட யுவதி, பல வருடங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. Kacee Rhodes என்ற பெண்ணே இவ்வாறு பிறந்த நாடான இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

கனடா Calgary பகுதியில் வாழும் Kacee, இலங்கையில் தான் வாழ்ந்த குழந்தைகள் இல்லத்திற்காக பெரிய தொகை நிதியை சேர்த்து அதனை வழங்கியுள்ளார். தன்னை வாழ வைத்த பீட்டர் வீரசேகர சிறுவர் இல்லத்தின் கணக்கிற்கு பெரும் தொகை பணம் வழங்கியுள்ளார். அந்த பணத்தின் மூலம் இல்லத்தில் வளரும் பிள்ளைகளுக்கு உதவுமாறு சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் அவர் அறிவித்துள்ளார்.

கொழும்பு வரும் கனடா யுவதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இல்ல நிர்வாகத்தினால் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் கொழும்பு வந்தவுடன் அவருக்கு நன்றி செலுத்துவதற்காக இல்ல நிர்வாகி அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளார்.

Gail மற்றும் Mark Rhodes தம்பதியினால் Kacee 8 மாத குழந்தையாக இருக்கும் போது தத்தெடுக்கப்பட்டுள்ளார். Kacee 9 வயதாக இருக்கும் போது துரதிஷ்டவசமாக Gail உயிரிழந்து விட்டார்.

அதன் பின்னர் Mark பொறுப்பில் வளர்ந்த Kacee இன்று வாழ்க்கையில் நல்ல முறையில் உயர்ந்துள்ளார். அத்துடன் Kacee திருமணம் செய்யவுள்ள துணையுடன் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார் என கூறப்படுகின்றது.

கனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் உட்பட 8 பேர் அங்கு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த கொலைகள் இடம்பெற்ற போதும், தற்போது வெளிவந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் கனேடிய பொலிஸார் உறுதி செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கச்சேரியடியை சேர்ந்த 40 வயதான கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்பவரே கொல்லப்பட்டார்.

அவர் தனக்குத் தெரிந்த முகவர் ஊடாக சன்சீ கப்பலில் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். கனடாவில் அவரது உறவினர் ஒருவர் அவரைப் பொறுப்பேற்றிருந்தார்.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரது தொடர்பு அங்குள்ள உறவினருக்கோ யாழ்ப்பாணத்திலுள்ள பெற்றோருக்கோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற ஒரு சம்பவம் ஒன்றில் அதே நாட்டைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையிலேயே திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இலங்கையர்கள் இருவர் உட்பட 8 பேர் அவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டு அங்குள்ள பூந்தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. தற்போது அவர்களது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரது என்பதனை அங்குள்ள உறவினரைக் கொண்டு பொலிஸார் நேற்றுமுன்தினம் விசாரணை செய்து உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பான முழுமையான தகவல்களை விரைவில் அறிவிக்கப்படும் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்!!

 

நம்மில் பலர் இலங்கையில் பிறந்து, கல்வி கற்று பின் வேலைகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதன்பின் நம் தாய் நாட்டை எள்ளளவும் கவனத்தில் கொள்வதில்லை.

இவ்வாறான நிலையில் தாய் நாட்டிற்காக எத்தனை பெரிய வாய்ப்புக்களையும் தாரைவார்த்து விட்டு மக்களுக்காக சேவை செய்கின்ற மனிதர்களும் எம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவ்வாறு தன் தாய் நாட்டு மக்களுக்காக சேவை செய்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் மறைந்து வாழும் உன்னத மனிதர்களுள் ஒருவரே இதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பல உயிர்களை காப்பாற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்போது வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களில் இதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையுள்ள பலர் உள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு வைத்தியர் சிதம்பரநாதன் முகுந்தன் இலவசமாக சத்திர சிகிச்சை செய்து வருகிறார்.

அத்துடன், வசதி படைத்த மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த திறந்த இதய சத்திர சிகிச்சையை யாழ். குடா நாட்டில் வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டிய சாதனையாளராகவும் முகுந்தன் திகழ்கின்றார்.

இலங்கையில் கொழும்பு, காலி, கண்டி போன்ற இடங்களில் மாத்திரமே இதய சத்திர சிகிச்சை செய்வதற்கான வசதி காணப்பட்ட நிலையில், இதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு பொறுப்பேற்று சென்ற பின் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.

இதன் பயனாகவே இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள 18 வயது யுவதி!!

திருகோணமலை, கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கன்னியா, பீலியடி இலக்கம் 10இல் வசித்து வரும் காலிமுத்து தர்சிக்கா (18 வயது) எனும் யுவதியே சடமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி உளநலம் பாதிக்கப்பட்டவரெனவும், கிணற்றில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென தீப்பற்றி கொண்ட மோட்டார்சைக்கிள்!!

 

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதி வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்து மோட்டார்சைக்கிளில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக நேர்ந்துள்ளதாக ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீயினை அயலவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து, ரயில் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!!

தனியார் பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணைக்குழுவும் , இலங்கை மத்திய வங்கியும் Lanka Pay நிறுவனமும் ஒன்றிணைந்து இந்த அட்டையை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினையை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அட்டைகளைப் பயணிகள் கொள்வனவு செய்வதன் மூலம், பேருந்து அல்லது ரயில்களில் பயணிக்கும் பொழுது பயணக்கட்டணம் இந்த அட்டையில் இருந்து குறைத்துக்கொள்ளப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முல்லைத்தீவில் பொலிஸாருக்கு அஞ்சி ஓடியவர் பரிதாபமாக பலி!!

முல்லைத்தீவு – இடைகட்டு ஏரிக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைப்பதற்கு பொலிஸார் முயற்சித்துள்ளனர். இதன் போது அங்கிருந்து தப்பி சென்ற சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சி தப்பிச் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இடைக்கட்டு ஏரி நீரில் விழுந்தமையினால் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். மரணம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெவ்வேறு மோட்டார்சைக்கிள் விபத்துக்களில் ஐவர் பலி!!

நாடு முழுவதிலும் இடம்பெற்ற ஐந்து மோட்டார்சைக்கிள் விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் மோட்டார்சைக்கிள்களில் பயணித்தவர்கள் என்பதுடன், ஒருவர் பாதசாரி.

திருக்கோயில், பிட்டிகல, மொரகொட, மெதிரிகிரிய மற்றும் கிராந்துரு கோட்டே ஆகிய பகுதிகளில் இந்த மோட்டார்சைக்கிள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

உயிரிழந்தவர்களில் 17 வயதான இளைஞர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து பேர் மோட்டார்சைக்கிள்களில் பயணித்தவர்கள் என்பதுடன், ஒருவர் பாதசாரி

பழைய இரும்பு வியாபாரிகள் செய்த அநாகரிகச் செயல் : மக்கள் அச்சம்!!

 

வலி. வடக்கில் நேற்று முன்தினம் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதும் மக்களுக்கு முன் பழைய இரும்பு சேகரிப்பாளர்கள் புகுந்து அங்கு கிடந்தவற்றையெல்லாம் அள்ளிக் கட்டிக்கொண்டு சென்றனர்.

மக்கள் தமது வீடுகளைக் காணிகளைப் பார்க்கச் சென்ற போது அவர்களின் எதிரே பழைய இரும்புகள், பாத்திரங்கள், பித்தளைகளுடன் இவர்கள் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள்கள், லான்ட் மாஸ்டர்கள் என்பவற்றில் வந்து இவர்கள் இரும்புப் பொருள்களைத் திருடிச் செல்வதில் மும்முரமாக இருந்தனர்.

இப்போதே இப்படியென்றால் வரும் நாள்களில் இந்தப் பகுதிகளில் திருட்டு அமோகமாக இருக்கும் என்கிற அச்சத்தில் மக்கள் உறைந்து போயினர். வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் மயிலிட்டி-கட்டுவன் வீதியில் வடக்குப் புறமாக இருந்த 683 ஏக்கா் காணிகள் மக்கள் பாவனைக்காக நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.

இந்த காணி விடுவிப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே வேறு இடங்களை சோ்ந்த பலா் மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் வேகமாக காணிகளில் நுழைந்தனர். அவ்வாறு நுழைந்த வேகத்தில் அக்காணிகளில் கண்ணில் அகப்பட்ட பழைய இரும்பு, பித்தளை மற்றும் பொருள்களை அள்ளிக்கொண்டு புறப்பட்டனர்.

நிகழ்வு முடிந்து தமது காணிகளைப் பார்வையிடுவதற்காக வந்த மக்கள் தமது கண் முன்னால் நடைபெறும் இந்தத் திருட்டைக் கண்டு விக்கித்துப் போயினர்.

இரும்புக் கம்பிகள், பைப்கள், காணி உாிமையாளா்கள் விட்டுச் சென்ற பெறுமதி மிக்க பொருட்கள் என்று எல்லாவற்றையும் அவர்கள் அள்ளிச் செல்ல, எதுவும் செய்ய முடியாதவர்களாகப் பார்த்து நின்றனர். நாங்களே 28 வருடங்களின் பின்னா் எமது காணிகளை காண்பதில் சந்தோசத்தில் வருகின்றோம். அதற்குள் இவா்கள் தமது வேலையைக் காட்டி விட்டனர்.

புத்தாண்டில் கொழும்பில் நடந்த பெரும் சோகம்!!

இலங்கையில் புத்தாண்டினை வரவேற்ற சந்தர்ப்பத்தில் கல்கிஸ்ஸை இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்கிஸ்சை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவு நிறுவனத்தின் மின்சார லிப்ட்டில் சிக்கி விபத்துக்குள்ளான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டபொல – இழுக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு நிறுவனத்தின் மின்சார லிப்ட்டில் சிக்கி விபத்துக்குள்ளான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்