தந்தை- மகள் தகாத உறவால் பிறந்த குழந்தை : அனைவரையும் கொன்ற அதிர்ச்சி சம்பவம்!!

 

அமெரிக்காவில் பெற்ற மகளுடன் உறவு வைத்து தந்தை குழந்தை பெற்ற நிலையில் மொத்த குடும்பத்தையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்டீவன் ப்ளாடில் (43) என்பவர் அல்யிசா என்ற தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், அவர்களின் மகள் கேட்டி ப்ளாடில் (20) சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வந்தார். கேட்டிக்கு 18 வயதான போது சமூகவலைதளங்களை பயன்படுத்தி தனது பெற்றோரை கடந்த 2016 கண்டுப்பிடித்துள்ளார்.

அந்த சமயத்தில் ஸ்டீவனுக்கும், அல்யிசாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து தந்தை ஸ்டீவனுடன் கேட்டி ஒரே வீட்டில் வசித்து வந்தார். அப்போது தந்தை மகள் உறவு என்பதையும் மீறி இருவருக்குள்ளும் தகாத உறவு ஏற்பட்டது.

இதன்பின்னர் ஸ்டீவனும், கேட்டியும் கடந்தாண்டு திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இது போன்ற தவறான உறவில் குழந்தை பெற்றெடுத்தது அந்நாட்டு சட்டப்படி தவறு என்பதால் ஸ்டீவன் மற்றும் கேட்டியை பொலிசார் கைது செய்து அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இருவருமே நிபந்தனை பிணையில் வெளியில் வந்தனர்.
தந்தையும் மகளும் இனி ஒருவரையொருவர் பார்த்து கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் ஸ்டீவன் இரு தினங்களுக்கு முன்னர் கேட்டி வீட்டுக்கு சென்று அவரையும், தன் மூலம் அவருக்கு பிறந்த குழந்தையையும் சுட்டுக்கொன்றுள்ளார்.

அங்கிருந்த கேட்டியின் வளர்ப்பு தந்தையையும் கொலை செய்த ஸ்டீவன் பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னை விட்டு கேட்டி பிரிந்து சென்றுவிட்டாரே என்ற கோபத்தில் ஸ்டீவன் இருந்த நிலையிலே இச்செயலை செய்துள்ளார். வீட்டிலிருந்த அனைத்து சடலங்களையும் கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

20 வருடம் பல் துலக்காமல் இருந்த நபர் : இறுதியில் என்ன ஆனார் தெரியுமா?

 

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜே(21) எனும் இளைஞன் தனது குழந்தை பருவம் முதல் சுமார் 20 ஆண்டுகள் வரை பல் துலக்காமல் இருந்துள்ளார். 20 வருடமாக பல் துலக்காததால் ஜே வாயிலிருந்து அதிகளவு துர்நாற்றம் வந்துள்ளது. மேலும் அவரது பல்லை பற்றி கேள்வி கேட்பவர்களிடம் முகம் கொடுத்து பேச முடியாமல் தவித்த ஜே ஒரு வழியாக அவரது பல் பிரட்சனைக்கு தீர்வு காண விரும்பியுள்ளார்.

அதற்காக ஜே பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது, அவருடைய பற்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்தது.

பல் துலக்காமல் இருந்ததால் மட்டுமே அவரது பற்கள் இவ்வளவு மோசமாகவில்லை சிறுவயது முதல் அதிக இனிப்பு பொருட்கள் போன்ற பற்களுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையே அவர் அதிகம் விரும்பி சாப்பிட்ட காரணத்தால் இந்த கோரமன நிலை அவரது பற்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அதிகமாக சோடா பானங்களை உட்கொண்டதாலும், பற்களை இதுவரை சுத்தம் செய்யாமல் இருந்ததாலும் தான் பற்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று ஜே மருத்துவரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஜேவின் வாயை சோதித்த மருத்துவர்கள் அவரின் வாயில் பல பற்கள் சொத்தையாகவும், பல கிருமிகள் அவரது பற்களில் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் மிகவும் மோசமாக இருந்த அவரது 11 பற்கள் பிடுங்கி எறிய முடிவு செய்யப்பட்டது. இதற்காக 18 மில்லிமீட்டர் வரை துளையிடப்பட்டு செயற்க்கை பற்கள் பொருத்தப்பட்டன. மீதம் இருந்த பற்கள் சுத்தம் செய்யப்பட்டன, இதன் பின்னர் 6 மாதம் கழித்து அவர் பற்கள் அனைவரையும் போல சாதாரணமாக மாறியது.

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் காட்டுப் பக்கம் அனுப்பியிருக்க மாட்டேன் : கதறிய ஆஷிபா!!

ஜம்முகாஷ்மீரில் பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்ட ஆஷிபா என்ற சிறுமியின் பள்ளி சீருடைகளை வைத்து அவரின் தாய் கதறும் அழும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பியுள்ளனர்.

இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இதனால் இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில் பெரிய அளவில் நடத்தப்படவில்லை. இப்போதுதான் மக்கள் எதிர்ப்பை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் பள்ளி சீருடைகளை வைத்து, சிறுமியின் தாய் நசீமா பிபி கண்ணீர் விடும் புகைப்படம் வெளியாகி உள்ளது. என்னிடம் அவள் நினைவாக இருப்பது இதுமட்டுதான், இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவளை காட்டு பக்கமே அனுப்பி இருக்க மாட்டேன் என்று பேட்டி அளித்துள்ளார்.

மனைவிக்கு பலவந்தமாக விஷம் கொடுத்த கணவன்!!

மனைவிக்கு பலவந்தமாக விஷம் கொடுத்த ஒரு பிள்ளையின் தந்தையை கண்டி, உடதும்பர பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உடதும்பர உன்னஸ்கிரிய பம்பரபெத்த பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர், தெல்தெனிய பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பீ.ஜீ.அஜித் சமன் குமார என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலவந்தமாக விஷம் கொடுக்கப்பட்டதால், ஆபத்தான நிலையில் இருக்கும்இவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவி தனது நண்பியுடன் உடத்தும்பர வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

மனைவி வைத்தியசாலையில் இருப்பதை அறிந்துக்கொண்ட சந்தேக நபர், வைத்தியசாலைக்கு சென்று மனைவியின் வாயை பலவந்தமாக திறந்து குப்பி ஒன்றில் வைத்திருந்த விஷத்தை வாயில் கொட்டியுள்ளதாக சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பெண்களை திருமணம் செய்து குதூகல வாழ்க்கை நடத்திய நபருக்கு நேர்ந்த கதி!!

இந்தியாவில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர் நான்காவது பெண்ணை திருமணம் செய்ய முயன்ற நிலையில் அவரின் ஏமாற்று வேலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் நிசாமாபாத்தை சேர்ந்தவர் பவன்குமார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு அய்லாபயி என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் 2015-ல் தீபா என்ற பெண்ணை மணந்த பவன் 2017-ல் ராணி என்ற பெண்ணை மூன்றாவது முறையாக மணந்தார்.

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் பவன் வாழ்ந்த நிலையில் கேரளாவை சேர்ந்த பெண்ணை 4-வதாக பவன் மணக்க இருந்தார்.

இந்நிலையில் பவனின் முதல் மனைவி அய்லாபயி தனக்கு பின்னர் கணவர் இரண்டு பேரை மணந்ததையும், அடுத்து ஒரு பெண்ணை மணக்க இருப்பதையும் கண்டுப்பிடித்து மகளிர் அமைப்பிடம் புகார் அளித்தார்.

இது குறித்து தீபா மற்றும் ராணிக்கும் தகவல் தரப்பட்ட நிலையில் பவனின் மூன்று மனைவிகளும் அவர் வீட்டு முன்பு ஆர்பாட்டம் செய்தனர். ஆனால் பவன் தனது தந்தையுடன் தலைமறைவாகியுள்ளார்.

மூன்று பேரிடமும் பவன் 40 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பவனை தேடி வருகிறார்கள்.

மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வீசிய கணவர் : காரணம் என்ன?

இந்தியாவில் மனைவியை கொலை செய்து சடலத்தை துண்டு துண்டாக வீசிய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் ஷஜன். இவர் மனைவி லீனா. ஷஜனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் அதை லீனா கண்டித்துள்ளார். இதையடுத்து லீனாவை கொல்ல முடிவெடுத்த ஷஜன் கடந்த 2007-ஆம் ஆண்டு அவர் முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் லீனாவின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசியுள்ளார். இதையடுத்து பொலிசார் இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு துண்டு துண்டாக இருந்த சடலம் லீனாவுடையது தான் என கண்டுப்பிடித்தனர்.

பின்னர் ஷஜனை கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஷஜனுக்கு ஆயுள் தண்டனையும் 50000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதோடு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அழித்ததாக தனியாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 25000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சை உருக்கும் கொடூரம் : இறக்கும் தருவாயிலும் பலாத்காரம் : திடுக்கிடும் உண்மைகள்!!

 

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களும், பல்வேறு பிரபலங்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், குற்றப்பத்திரிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதில் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம், மற்றும் முதல் குற்றவாளி என்று முன்னாள் அரசு அதிகாரி சாஞ்சி ராம் பெயர் இடம்பெற்றுள்ளது.

கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி ஆஷிபா, காட்டுப்பகுதியில் குதிரை மேய்ப்பதை பலமுறை சாஞ்சி ராமும், அவரது மகன் விஷால், அவரது நண்பர் பர்வேஷ் பார்த்துள்ளனர்.

கடந்த ஜனவரி 10ம் திகதியே சிறுமியை பின்தொடர்ந்து சென்று கடத்தினர், பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.

தற்போது கைதாகி சிறையில் உள்ள தீபக் காஜூரியாவுக்கு ஆஷிபாவை மறைத்து வைத்திருந்த இடம் தெரியும், வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.1.5 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.

ஒவ்வொரு முறையும் மிக கொடூரமான முறையில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடைசியாக ஆஷிபாவை கொலை செய்யும் முன்கூட விஷால் என்ற சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.

தொடர்ந்து தீபக் காஜூரியா, ஆஷிபாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார், இதில் அவளது உயிர் பிரியாத நிலையில், விஷால் கழுத்தை திருப்பியும், கல்லால் அடித்தும் கொலை செய்துள்ளான்.

கர்ப்பிணி மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

வரதட்சணைக் கொடுமையால், கர்ப்பிணி மனைவியை கணவரே கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் சிவம், இவர் மனைவி மாலா (23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு சிவம் குடும்பத்தார் சம்மதிக்காத நிலையில் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், திருமணத்தின் போது மாலாவின் தந்தை ரூ.5 லட்சம் வரதட்சணை தருவதாக சிவனிடம் கூறிய நிலையில் தரவில்லை. இதனால் மாலாவுடன் சிவம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 7ம் திகதி மாலா காணாமல் போய்விட்டதாக சிவம் பொலிசில் புகார் அளித்தார். இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் இந்திராபுரம் பகுதியில் ஒரு பெரிய டிராவல் பேக்கில் இருந்து துர்நாற்றம் வருவதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் பேக்கை திறந்த போது அதில் பெண் சடலம் இருப்பது கண்டு அதிர்ந்தனர்.
இதையடுத்து அது காணாமல் போன மாலாவின் சடலம் என்பதை பொலிசார் கண்டுப்பிடித்தனர்.

இதனிடையில் மாலாவின் தந்தை ராம் அவதார், 5 லட்சம் வரதட்சணை தராத காரணத்தால், 5 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மகளை சிவன் கொலை செய்துவிட்டார் என்று புகாரளித்தார். இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் மனைவியை கொன்றதை சிவம் ஒப்பு கொண்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், வரதட்சனை விடயத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் மாலாவின் கழுத்தை நெரித்து சிவன் கொலை செய்துள்ளார்.

இந்த கொலையை மறைக்க, ஒரு டிராவல் பேக்கிற்குள் மாலாவின் உடலை வைத்து, அவர் மீது 20-க்கும் மேற்பட்ட ஜீன்ஸ் பேண்ட்களை வைத்து அடுக்கி சாலை ஓரத்தில் வீசிவிட்டார். பின்னர் மனைவி காணாமல் போனதாக பொலிசில் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து சிவனை கைது செய்த பொலிசார் அவரின் பெற்றோர், சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வவுனியாவில் நகரில் அமைந்துள்ள விடுதியில் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (13.04.2018) மாலை 3 மணியளவில்
இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய அந்தோனி நிக்சன் என்ற இளைஞனின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இவரின் சடலத்திற்கு அருகே நஞ்சருந்தி தற்கொலை செய்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா தடவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வாழத் தகுதியற்ற பகுதியானது : பகீர் கிளப்பும் இராணுவ மண்டல பின்னணி!!

 

தமிழகத்தில் விளைநிலங்களை அழித்து அந்தப் பகுதியை வாழத் தகுதியற்றதாக மாற்றுவதே ராணுவ மண்டலம் அமைக்கும் திட்டத்தின் நோக்கம் எனவும், அது நிறைவேறிவிட்டதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் கூறியுள்ளார்.

சுந்தர்ராஜன் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் இனி எஞ்சியிருக்கும் விளைநிலங்களையும் விஷ நிலங்களாய் மாற்ற வேண்டியது மட்டும் தான் பாக்கி. காவிரி உரிமைக்காக, தமிழ்நாடே போராடும் நேரத்தில், `டிஃபென்ஸ் எக்ஸ்போ-வை’, இங்கே நடத்த வேண்டிய தேவை என்ன? காவிரியில் தண்ணீர் வராததற்கும் இந்த `டிஃபென்ஸ் எக்ஸ்போ’-க்கும் இடையேயான தொடர்பை நாம் சந்தேகத்துடன் தான் அணுக வேண்டியிருக்கிறது.

தமிழகத்தை ராணுவ மண்டலமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு வேகமாக முன்னேறி வருவதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான வளாகத்தில், மின்உற்பத்தி நிலையம் என்று சொல்லப்பட்ட கல்பாக்கம் ஏன் இணைக்கப்பட்டது என்ற கேள்வியை முன்னரே எழுப்பினோம். இந்தியாவின் அணுகுண்டு தயாரிப்புத் திட்டத்தில் கல்பாக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளை வாழத் தகுதியற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் மத்திய அரசிடம் இருப்பது போல் உள்ளது. அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று பூமிக்குக் கீழ் இருக்கும் வளம்; இரண்டாவது முன்னரே சொன்ன பாதுகாப்பு மண்டலம்.

பாகூர் முதல் ராமநாதபுரம் வரை 135 ஆண்டுகளுக்கு எடுக்கக்கூடிய நிலக்கரி படிமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் தான் தமிழகத்தின் கிட்டத்தட்ட 40% உணவு உற்பத்தி நடைபெறுகிறது.

அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது விவசாயம். விவசாயத்துக்குத் தேவையான நீர் இரண்டு வழிகளில் கிடைக்கும். ஒன்று ஆற்று நீர், மற்றொன்று நிலத்தடி நீர். ஆறு என்பது இங்கே காவிரி தான்.

அந்த நீரைக் கிடைக்காமல் செய்வதன் மூலம் விவசாயம் படிப்படியாகக் குறைந்து, மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுவார்கள். இன்னொருபுறம் நிலத்தடி நீரை மாசுபடுத்தவே ஹைட்ரோ கார்பன் திட்டம் இருக்கிறது.

அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளுக்குள் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மக்கள் படிப்படியாக விவசாயத்தை தவிர்த்துப் பிழைப்பு தேடி பெருநகரங்களை நோக்கி இடம்பெயர்வார்கள். அதன் பிறகு அவர்களின் நிலக்கரி வேட்டையைத் தொடங்கலாம் என்பது மத்திய அரசின் நீண்டகாலத் திட்டம்.

இதை கூறுவதன் மூலம் நாங்கள் பீதியைக் கிளப்புகிறோம் என்று சில விஞ்ஞானிகளும், சமூக ஊடக ஆர்வலர்களும் கூறலாம்.

ஒன்றுக்கு மூன்றுமுறை தெளிவாகச் சொல்கிறோம். இது சந்தேகம்தான். எங்களின் கருத்து இல்லை, இப்போது நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது என கூறியுள்ளார்.

நீண்ட நேரம் கேம் விளையாடிய சிறுவன் பலியான பரிதாபம்!!

இந்தியாவில் செல்போனில் சார்ஜ் போட்டபடியே நீண்ட நேரம் கேம் விளையாடிய சிறுவன், செல்போன் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இன்றைய இளம்தலைமுறையினரிடமும் செல்போன் மீதான மோகம் அதிகளவில் உள்ளது, சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பயன்படுத்துவது ஆபத்து என்று தெரிந்தும் பலர் காதில் வாங்கிக் கொள்வதில்லை.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் குத்ராப்பரா என்ற கிராமத்தில் 12 வயதான சிறுவன் ரவி சோன்வான் வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். செல்போனில் சார்ஜ் தீர்ந்து போனதால், சார்ஜ் போட்டபடியே கேம் விளையாடிக் கொண்டிருந்தான், நீண்ட நேரமாக கேம் விளையாடியதால் ஏற்கனவே சூடாகி இருந்த செல்போன் சார்ஜ் போட்டதால் மேலும் சூடாகி எதிர்பாராத விதமாக திடீரென்று வெடித்துள்ளது.

இதன் காரணமாக சிறுவன் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது, பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவத்தால் சிறுவனின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

8 வயது சிறுமி ஆஷிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் 8 வயது சிறுமியை பொலிஸ் உட்பட எட்டுபேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஆஷிபா கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனாள், அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து சிறுமியின் உடல் வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சிறுமி ஆஷிபாவை, கோவில் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

பல நாட்களாக அந்த சிறுமிக்கு உணவு கூட கொடுக்காமல் மயக்கத்தில் வைத்தே இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர்.

சிறுமி மயக்க நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்திய மருந்தால் சிறுமியின் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது.

முதலில் கடத்திசென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 18 வயதுக்குட்பட்ட சிறுவனுடன் சேர்ந்து மேலும் 6 பேரும், விசாரணை நடத்தச்சென்ற காவல் அதிகாரி ஒருவரும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இதுதொடர்பாக 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர், இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான 9 பேரில் காஷ்மீரில் பாஜ அரசியல் புள்ளி ஒருவரின் மகன், காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் ஒருவன் எனபது தெரியவந்தது. முதல்வர் மெபூபா முப்தி சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்திட உத்தரவிட்டார்.

சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்தும், காஷ்மீரில் வழக்கறிஞர்கள சங்கத்தினர், வர்த்தக அமைப்பினர், மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தை துவக்கினர்.

இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்களும், இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பினர்களும் கத்துவாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் இந்த கொடூர சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

வவுனியாவில் களைகட்டியுள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு!!

 

வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களை கட்டியுள்ளது. இன்று வவுனியாவில் இடைக்கிடை மழை பெய்துவருகின்றபோதும் நகரில் மக்கள் அதிகமாக திரண்டுள்ளனர்.

பிறக்க இருக்கும் தமிழ்,சிங்கள புத்தாண்டி
னை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளிமாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும் வாகன நெரிசல் காரணமாக பாதுகாப்புப் பொலிசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் வவுனியா பழைய பேரூந்து நிலையம் , மணிக்கூட்டு கோபுர சந்தியடி, அங்காடி வியாபாரி நிலையம், புகையிரத வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் வழமை போன்றே காணப்படுகின்றது.

வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு அருகாமையில் இன்றுடன் 414வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது உறவுகளை தேடி சுழற்சி முறையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீதியினை விட்டு விலகி லொறி விபத்து : இருவர் படுகாயம்!!

 

வவுனியா பம்பைமடுவில் இன்று (13.04.2018) மதியம் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பெரியகட்டு பகுதியிலிருந்து பம்பைமடு நோக்கி பயணித்த லொறி பம்பைமடு நரசிங்கர் ஆலயத்திற்கு அருகே வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகே காணப்பட்ட வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் லொறியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொது மக்களின் வசதி கருதி இன்றைய தினமும் விசேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மட்டுமன்றி தனியார் பேருந்து உரிமையாளர்களும் இன்றைய தினத்தில் விசேட போக்குவரத்து சேவைகளை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் கடமைகளுக்கு திரும்பும் பொதுமக்களின் நலன் கருதி தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வரை விசேட போக்குவரத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் எந்தவிதமான அசௌகரியங்களும் இன்றி தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களை நெகிழ வைத்த உயிருக்கு போராடிய சிறுமி : அழகிய சிறுமிக்கு நடந்தது என்ன?

இலங்கையில் பேஸ்புக் நண்பர்களின் உதவியின் மூலம் சிறுமி ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு வயதான டெனாரா மிஹேலி என்ற சிறுமிக்கு சத்திர சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை வழங்கு உதவுமாறு சிறுமியின் தந்தை டயான் பேஸ்புக்கில் பதவி ஒன்றை வெளியிட்டார். இதனை பார்த்தக பேஸ்புக் நண்பர்கள் அவருக்கு தேவையான நிதியனை வழங்கி, சிறுமியின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

கடந்த நாட்களில் பேஸ்புக் பக்கங்களில் அழகிய சிறுமியின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதய நோயினால் பாதிக்கப்பட்ட மிஹேலிக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள எட்டு இலட்சம் ரூபா பணம் தேவை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தொழிற்சாலையில் பணியாற்றும் டயானினால் அந்தத் தொகையை பெற்றுக்கொள்ளவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பேஸ்புக் நண்பர்கள் மூலம் பண உதவியை பெற்று தனது மகளை காப்பாற்றியுள்ளார். உதவி புரிந்த அனைவருக்கும் டயான் நன்றி தெரிவித்துள்ளார்.