மட்டக்களப்பு – காத்தான்குடி, நாவற்குடாவில் இன்று அதிகாலை மீனவரொருவரின் மீன்பிடி வள்ளம் அடையாளம் தெரியாதவர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிது.
நாவற்குடா கங்காணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு பின்புறமான மட்டக்களப்பு வாவிப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவரின் மீன்பிடி வள்ளமே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வள்ளம் எரிப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் பிரிவினரும் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்னர்.
அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, வருடமொன்றிற்கு 30 ஆயிரம் வரையில் குறைக்க அந்நாட்டு அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான விசா பரிசீலனை நடைமுறைகளால் இது சாத்தியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தற்போது வருடமொன்றிற்கு 190,000 பேர் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் புதிய கடுமையான விசா பரிசீலனை நடைமுறைகளால், வருடத்திற்கு 160,000 – 170,000 பேர் மாத்திரமே குடியேற அனுமதிக்கப்படுவர்.
இது 2010ம் ஆண்டுக்கு முன்னர் வருடமொன்று இங்கு குடியேற அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஒப்பானதாகும்.
இதேவேளை அரசு அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான விசா பரிசீலனை நடைமுறைகளால், இவ்வருடம் இங்கு நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைவடையலாம் என்பதை அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் Peter Dutton உறுதிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெருமளவானோர் குடியேறியுள்ளனர். அதில் பலர் நிரந்தர குடியுரிமைக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பேஸ்புக் பயனாளிகளை கண்காணிப்பதற்கான புதிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இனங்களுக்கிடையிலான பகைமை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான கருத்துக்கள் உள்ளிட்ட தவறான கருத்துக்களை பேஸ்புக் ஊடாக பரப்புவதை தடை செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கென தானியங்கி புலனாய்வுக் கருவிகள் மற்றும் மனிதவளம் என்பன மேம்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் நாட்களில் சிங்கள மொழியில் பாண்டித்தியம் கொண்ட பலர் பேஸ்புக் வலைத்தளத்தில் ஊழியர்களாக இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.
அண்மையில் கண்டியில் நடைபெற்ற இனவன்முறைகள் பேஸ்புக் ஊடாகவே தகவல் பரிமாற்றம் நடைபெற்று பல்வேறு இடங்களுக்கும் பரவியமை காரணமாக இலங்கை அரசாங்கம் சமூக வலைத்தளங்களை தற்காலிகமாக தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
முல்லைத்தீவு – புதுகுடியிருப்பு பகுதியில் நபர் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரத்தில் வசித்துவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான த.தர்மகுலசிங்கம் (49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றை, நபர் ஒருவர் தனக்கு சொந்தமாக்குவதற்காக ஏற்கனவே முயற்சித்துள்ள நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த வர்த்தக நிலையம் உயிரிழந்தவருக்கே சொந்தமாக வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாகவே நேற்று இரவு 11 மணியளவில் தீயில் எரிந்து இவர் உயிரிழந்துள்ளார். இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட படுகொலையா என்னும் சந்தேகம் அப்பகுதியில் நிலவுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் அடை மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை நேரங்களில் மழை பெய்யும் எனவும் ஏனைய பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ, மேல், ஊவா மற்றும் தெற்கு மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும்.
அந்த பிரதேசங்களில் கடும் காற்றும் வீசக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்த்து கொள்ளுமாறு திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருக்கோணமலை வரையிலான கடல் பிரதேசங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் பிரதேசங்களில் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் சந்தர்ப்பங்கள் உள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை நில அளவை திணைக்களத்தினால் புதிதாக வடிவமைத்துள்ள புதிய வரைப்படத்திற்கமைய இலங்கையின் வடிவம் மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வரையப்படத்திற்கமைய தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் சில அதிகரிப்புகளும், சிலாபம் கடற்கரையில் சிறிய குறைவுகளும் காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக கொழும்பு துறைமுக நகரம் காரணமாக இலங்கையின் பூமி அளவில் 2.7 சதுர கிலோ மீற்றர் எனப்படும் 270 ஹெக்டேயார் புதிதாக இணைப்படும் என இலங்கை நில அளவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நில அளவுகளை அதிகரித்து கொள்வதற்காக கடலில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
துறைமுக நகரம் மற்றம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் காரணமாக இலங்கை வரைப்படத்தில் மாற்றம் ஏற்பட்டு புதிய வடிவம் ஒன்றை கொடுக்கும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று (13.04.2018) அதிகாலை 12.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.
தனியார் பேரூந்தின் சாரதி, நடத்துனர் தப்பியோட முற்பட்ட சமயத்தில் நடத்துனர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சம்பவத்தினை நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் பாடசாலையின் சுற்றுமதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மங்களகரமான விளம்பி வருடம் வசந்த ருதுவுடன், உத்தராயணப் புண்ய காலம் நிறைந்த சனிக்கிழமை காலை 06மணி 55 நிமிடத்துக்கு 14.4.2018 கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், மீனம் ராசியில், மேஷம் லக்னத்திலும், நவாம்சத்தில் சிம்மம் லக்னம், சிம்மம் ராசியிலும் மாஹேந்திரம் நாமயோகம், வணிசை நாம கரணத்திலும், சனி பகவான் ஓரையிலும், நேத்திரம் ஜீவன் மறைந்த பஞ்ச பட்சிகளில் மயில் ஊண் செய்யும் காலத்திலும், சனி மகாதசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் வெற்றிகரமாகப் பிறக்கிறது.
இந்த ஆண்டில் ராஜாவாக சூரியன் வருவதால் பணத் தட்டுப்பாடு குறையும். விழுந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் ஓரளவு சூடுபிடிக்கும். மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். காவல் துறை குறைகள் களையப்படும். மந்திரியாகச் சனி பகவான் வருவதால் மலைக் காடுகள் அழியும். வன விலங்குகளின் எண்ணிக்கை குறையும்.
அரிய உயிரினங்கள் அழியும். புதைந்து கிடக்கும் பழைய ஐம்பொன் சிலைகள் வெளிப்படும். அர்க்காதிபதியாகவும், சேனாதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால் கலையுணர்வும் குறுக்குவழியில் சம்பாதிக்கும் குணமும் சுற்றுலா, பொழுதுபோக்கில் ஆர்வமும் அதிகரிக்கும்.
மேகாதிபதியாக சுக்கிரன் வருவதால் புயல் சின்னம் அதிகம் உருவாகும். புயலுடன் அதிக மழை பொழியும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப் பொழிவு அதிகம் இருக்கும். வருடம் பிறக்கும்போது சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து காணப்படுவதால் பருவ மழை சீராக இருக்காது. பருவம் தவறி மழை பொழியும். சேனாதிபதியாக சுக்கிரன் வருவதால் ராணுவத் துறையில் இருப்பவர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்படும்.
சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களைக் கண்டறிய பிரத்யேக நவீன புதிய செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்ணில் ஏவப்படும். இரசாதிபதியாக குரு வருவதாலும் அந்தக் குருவைச் சுக்கிரன் சமசப்தமமாகப் பார்ப்பதாலும் சர்க்கரை, பனங்கற்கண்டு, வெல்லம், கருப்பட்டியின் விலை உயரும்.
விளம்பி வருடப் பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயுடன் பாதகாதிபதி சனி பகவான் சேர்ந்து காணப்படுவதால் மின்கசிவால் தீ விபத்துகளும் அழிவும் ஏற்படும். விளைநிலத்தின் பரப்பளவு புதிய தொழிற்சாலைகளின் வரவால் குறையும்.
தனசப்தமாதிபதியாக சுக்கிரன் வருவதால் மக்களிடையே சேமிக்க முடியாத நிலை ஏற்படும். விவாகரத்துகள் அதிகரிக்கும். பாக்யவிரையாதிபதியாகக் குரு வருவதாலும், குரு வக்ரம் பெற்று நிற்பதாலும் மேலும் சில வங்கி மோசடிகள் கண்டறியப்படும்.
குரு பகவானின் வீடான மீன ராசியிலும், சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும், செவ்வாயின் வீடான மேஷ லக்னத்திலும் இந்த ஆண்டு பிறப்பதால் மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது அனைத்து விதமான யோகங்களையும் தரும்.
உங்கள் ராசிக்குரிய முழுமையான பலனைத் தெரிந்துகொள்ள உங்கள் ராசியின்மீது கிளிக் செய்யுங்கள்..
மீன ராசி வாசகர்களே, மென்மையும் விட்டுக் கொடுக்கும் மனமும் எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்டவர் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும் சமயோஜிதமாகவும் யோசித்து பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள்.
தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். புது வாகனம் அமையும். தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும்.
முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அநாவசியமாக யாரையும் வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்களின் பாக்யஸ்தானமான 9ம் வீட்டில் குரு நுழைவதால் சில இடங்களில், சில நேரத்தில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.
எதிர்பார்த்த நிறுவனத்தில் மகனுக்கு வேலை கிடைக்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை உங்களின் ராசிநாதன் குரு பகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் வந்தமர்வதால் உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும் இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே, அலுவலகத்தில் அதிகப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
05.07.2018 முதல் 01.08.2018 வரை சுக்கிரன் 6-ல் இருப்பதால் வீட்டு உபயோகச் சாதனங்கள் பழுதாகும். பழைய கடனைத் தீர்க்க முயல்வீர்கள்.
30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாயும் கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.
14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது 11-ம் வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். ஆனால், 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை வந்து நீங்கும். 1
3.02.2019 முதல் வருடம் முடியும்வரை 4ல் ராகு நுழைவதால் வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், குடும்பத்தில் அதிருப்தி வந்து நீங்கும்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 10-ம் வீட்டிலேயே அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உங்களைப் புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
வியாபாரத்தில் வைகாசி, ஆனி மாதங்களில் அதிரடி லாபத்தைக் காண்பீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நாசுக்காக வசூலிப்பீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். தை, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.
உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். உங்களின் நெடுநாள் கனவான பதவி உயர்வும் சம்பள உயர்வும் வருடத்தின் மத்தியில் உண்டு. எப்போதும் உங்களைக் குறைசொல்லிக்கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உடல்நலக் குறைவுகளைத் தந்தாலும் பணப் புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் தருவதாக அமையும்.
கும்ப ராசி வாசகர்களே, நியாயமாகத் தனக்குக் கிடைக்க வேண்டியதைக்கூட சில நேரத்தில் விட்டுக் கொடுப்பவர் நீங்கள். உங்களின் சப்தமாதிபதி சூரியன் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் கிடைக்கும்.
வழக்கு சாதகமாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு சந்திரன் 2ல் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இங்கிதமாகப் பேசி முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தேடி வருவார்கள். வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலை, அலுவலகம் என்றிருந்தீர்களே! இனிக் குடும்பத்துக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் இனிக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் புகழும்படி நடந்துகொள்வீர்கள். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.
ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டுக்கு வருவதால் யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுக் காசோலை தரவும். ஆனால், 13.03.2019 முதல் வருடம்முடியும் வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி லாப வீட்டில் வந்தமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்தப் புதுவழிகளில் முயல்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு. நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும்.
14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது பகவான் 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. ஆனால், 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது லாப வீட்டுக்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும்.
திடீர் யோகம் உண்டு. மூத்த சகோதரர்கள் பாசமாக இருப்பார்கள். ஆனால், ராகு 5-ம் வீட்டுக்குள் வருவதால் சொந்தபந்தங்களுடன் மோதல் போக்கு ஏற்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும். சிலர் நகரத்திலிருந்து விலகி சற்றே ஒதுக்குப்புறமான பகுதிகளுக்குக் குடிபெயர்வீர்கள்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் லாப வீட்டில் நிற்பதால் செயலில் வேகம் கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமை கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுய தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.
30.04.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 12-ல் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் சகோதரர்களால் ஆதாயமும் உண்டு.
09.06.2018 முதல் 04.07.2018 வரை சுக்கிரன், உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவிக்குள் சாதாரண விஷயத்துக்கெல்லாம் சண்டை வரும்.
வியாபாரத்தில் போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைக்கும்படி சில அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். விளம்பர உத்தியால் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவார்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி அவ்வப்போது விமர்சனங்களும் குறைகளும் வந்த வண்ணம் இருக்கும்.
ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மார்கழி மாதத்தில் சம்பள உயர்வுடன் சலுகைகளும் உண்டு. கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சின்னச் சின்னத் தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
இந்த விளம்பி ஆண்டு ஒருபக்கம் அனுபவ அறிவையும் செலவையும் தந்தாலும், மற்றொரு பக்கம் திடீர் வருமானத்தையும் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் காமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.
மகர ராசி வாசகர்களே, உலகத்தைவிட உள்மனசு சொல்வதற்கு முக்கியத்துவம் தருபவர்களே! சுக்கிரன் சுகஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வசதி கூடும். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுரியமான பேச்சாலும், சமயோஜிதப் புத்தியாலும் பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்சினையில் ஒரு பகுதி தீரும். வீட்டுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்குப் பணவரவு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனிச் செயல்படத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். அடிக்கடி உங்களிடம் திறமை குறைந்துவிட்டதாக நினைத்துக்கொள்வீர்கள். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.
ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்துச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.
பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 12-ல் மறைவதால் ஆக்கபூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும்.
14.04.2018 முதல் 12.02.2019 வரை ராசிக்குள் கேது நிற்பதால் ரத்த அழுத்தத்தால் மயக்கம், மனோ பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகுவும் 7-ல் நிற்பதால் கணவன் மனைவிக்குள் கசப்புணர்வு ஏற்படும். சிலருக்குத் திருமணம் தள்ளிப்போகும்.
ஆனால், 13.02.2019 முதல் ராகு 6-லும் கேது ராசியை விட்டு விலகி 12-ல் அமர்வதால் மருந்து, மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மகளுக்குத் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும்.
இந்த ஆண்டு முழுவதும் சனி 12-ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதால் தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இளைய சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்ற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.
15.05.2018 முதல் 08.06.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள், பழி வந்து போகும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது குழப்பங்களும் பிரச்சினைகளும் வரும்.
30.04.2018 முதல் 27.10.2018 வரை ராசிக்குள்ளேயே செவ்வாயும் கேதுவும் சேர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். ஆனால் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் நல்ல மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது.
வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை நவீன உத்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருமளவுக்குக் கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள்.
சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களில் புதிய பதவிகள் வரும்.
உயரதிகாரி உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்துவைப்பீர்கள். கணினித் துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
இந்தத் தமிழ்ப் புத்தாண்டு சின்ன சின்ன முடக்கங்களையும் சங்கடங்களைத் தந்தாலும், எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களும் உயர்ந்த அந்தஸ்தும் தேடித்தருவதாக அமையும்.
பரிகாரம்: கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபூவராகரை பரணி நட்சத்திரத்தன்று நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
தனுசு ராசி வாசகர்களே, நல்லதோ அல்லதோ முடிவெடுத்துவிட்டால் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர் நீங்கள். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை உங்களின் ராசிநாதன் குரு பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோவில் கும்பாபிஷேகத்துக்குத் தலைமை தாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.
எங்கே சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் கனவுத் தொல்லை, தூக்கமின்மை நிலவும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக்கொள்வது நல்லது.
13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி ராசிக்குள்ளேயே வந்தமர்வதால் சில நேரத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாகச் செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும்
வருடப் பிறப்பு முதல் 12.02.2019 வரை ராகு 8-ம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். இருவரும் நிதானித்துப் போவது நல்லது. 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது ராசிக்குள் நுழைவதால் முன்கோபம் வந்து நீங்கும்.
உடல் நலம் பாதிக்கும். அதிக அளவில் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ராகு 7-ல் நுழைவதால் குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்துப் போங்கள். சிலர் கணவன் மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் சிலர் புது மனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாகத் தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துகொள்வார்கள்.
30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதரர், சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
21.04.2018 முதல் 14.05.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். கடன் பிரச்சினை தலைதூக்கும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும்.
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சூரியன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். படிப்பின் பொருட்டு அவர்களைக் கசக்கிப் பிழிய வேண்டாம். விட்டுப் பிடிப்பது நல்லது.
பூர்விகச் சொத்துப் பிரச்சினையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும் மனக்கசப்பும் வந்து போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அசல் வந்தால் போதும் என்று நினைத்திருந்த உங்களுக்குக் கணிசமாக ஆதாயம் உண்டாகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்ட வேண்டாம். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு ஆனி, ஆடி மாதங்களில் கிடைக்கும். அவ்வப்போது உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். உடன் பணிபுரிபவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம்.
இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் சின்னச் சின்ன இடர்பாடுகள் தந்தாலும், தைரியமாக எதிர்கொண்டு பிற்பகுதியில் சாதிக்க வைக்கும்.
பரிகாரம்: மதுரை மாவட்டம், திருநகர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவரசித்தி விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
விருச்சிக ராசி வாசகர்களே, தொடங்கிய வேலையை முடிக்கும்வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! சந்திரன் ராசிக்கு 5வது ராசியில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சொத்து வழக்குகள், பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். குழந்தையின்மையால் வருந்திய தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். பிள்ளைகளால் தொல்லைகள் நீங்கி, உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். உயர்கல்வியில் வெற்றிபெற்று உங்களைத் தலைநிமிரச் செய்வார்கள்.
உங்களின் ஜீவனாதிபதி சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் ஆரவாரமில்லாமல் அமைதியாகச் சாதிப்பீர்கள். மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் நீங்கள் முடித்துக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள்.
பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எங்கே சென்றாலும் வரவேற்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் ராசிக்கு 12ல் மறைவதால் திடீர் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள்.
திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகப் போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்தமர்வதால் முன்கோபம் அதிகரிக்கும்.
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 2ம் வீட்டில் அமர்வதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியினருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள்.
வருடம் பிறக்கும் 14.04.2018 முதல் 12.02.2019 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். கேது 3-ல் நிற்பதால் வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை ராகு 8-ல் நுழைவதால் சொந்தபந்தங்களின் பேச்சைக் கேட்டு மனைவியைச் சந்தேகப்பட்டுப் பேசாதீர்கள். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.
இந்த ஆண்டு முழுவதும் சனி 2-ல் அமர்ந்து ஏழரைச்சனியின் ஒருபகுதியான பாதச்சனியாக இருப்பதால் பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென்று தோன்றும். அவர்களின் முரட்டுத்தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுங்கள். கண், காது வலி வந்து செல்லும். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.
வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிதுபுதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து விற்பனை செய்யுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபமுண்டாகும்.
புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களைக் குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். அதையெல்லாம் நீங்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் கடமையைச் செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமில்லாத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள்.
இந்தப் புத்தாண்டு ஒரு பக்கம் அலைச்சலையும் அவமானத்தையும் தந்தாலும் மறுபக்கம் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமையும்.
பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்திலிருந்து பீளமேடு செல்லும் வழியில் அமர்ந்துள்ள அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.
கன்னி ராசி வாசகர்களே, கனவிலும் கற்பனையிலும் மாறிமாறி சஞ்சரிப்பவர் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். 14.04.2018 முதல் 03.10.2018 வரை குரு பகவான் 2வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை 3-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் காரிய தடைகள் வந்து நீங்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார்.
பழைய நண்பர்களில் சிலர் விலகுவார்கள். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாக 4-ல் அமர்வதால் இழுபறியான காரியங்களெல்லாம் முடிவடையும். ராசிநாதன் புதன் ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். எங்கே சென்றாலும் வெற்றி கிடைக்கும். எதிலும் மகிழ்ச்சி உண்டு. இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 4ம் வீட்டில் நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். பழைய வாகனத்தை வாங்க வேண்டாம். மறதியால் பணம், விலை உயர்ந்த ஆபரணத்தை இழக்க நேரிடும்.
30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து உங்கள் ராசிக்கு 5ல் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. சகோதரியின் கல்யாணத்தைப் போராடி முடிப்பீர்கள். சொத்து விற்பது, வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
22.03.2019 முதல் 13.04.2019 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ராகு இருப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
கேது 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்விகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசிக்கு கேது 4ம் வீட்டிலும், ராகு 10-லும் அமர்வதால் வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.
வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கப் புதிய திட்டம் தீட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும். மூத்த அதிகாரிகளின் மனதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. சித்திரை மாதத்தில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சாதித்துக் காட்டுவீர்கள். பழைய சம்பளப் பாக்கியும் கைக்கு வரும்.
இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் ஓரளவு முன்னேற்றத்தையும் மையப்பகுதியில் பண வரவையும் இறுதிப் பகுதியில் அலைச்சலுடன், உடல்நலக் குறைவைத் தந்தாலும் வெற்றிபெற வைக்கும்.
பரிகாரம்: சென்னை மாவட்டம், திருமுல்லைவாயலில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு பச்சையம்மனை செவ்வாய்க்கிழமைகளில் சென்று அர்ச்சனை செய்து வணங்குங்கள்.
துலாம் ராசி வாசகர்களே, பிறர் தன்னைக் குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளர மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் இனம்புரியாத சோகத்தில் மூழ்கியிருந்த உங்கள் மனதில் தன்னம்பிக்கை தந்து தலைநிமிர வைக்கும்.
தொடர் போராட்டமாக இருந்து வந்த குடும்பத்தில் இனி அமைதி தங்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி வஸ்துக்களைத் தவிர்க்க வேண்டும்.
சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பெரிதுபடுத்த வேண்டாம். கவுரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2ம் வீட்டிலேயே அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.
பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 3-ம் வீட்டில் அமர்வதால் செலவுகளும் திடீர்ப் பயணங்களும் அதிகரிக்கும்.
இந்தத் தமிழ் வருடம் பிறக்கும் நேரத்தில் சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிச் சிறப்பாக நடந்தேறும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
14.04.2018 முதல் 12.02.2019 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதாலும் கேது 4-ல் நிற்பதாலும் தாயாரின் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 13.02.2019 முதல் 9-ல் ராகு நுழைவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கேது 3-ம் வீட்டில் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4-ல் நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். ஆனால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.
வியாபாரத்தில் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்திலேயே லாபத்தைப் பெருக்கப் பாருங்கள். வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.
கடையை நவீனமாக்குவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களால் விபரீத லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமானாலும் அதற்குத் தகுந்த சம்பள உயர்வும் உண்டு.
இந்தப் புத்தாண்டு ஒரு பக்கம் கோபப்பட்டுப் பேச வைத்தாலும், மறுபக்கம் பணவரவையும் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமர்ந்திருக்கும் நடராஜரை உத்திரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
சிம்ம ராசி வாசகர்களே, போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் அஞ்சாதவர் நீங்கள். இந்த ஆண்டு பிறக்கும்போது புதன் சாதகமாக இருப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.
சுக்கிரன் 9ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதி உள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.
சில நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு சிலரைக் கடிந்து கொள்வீர்கள். 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழிச் சொத்தைப் போராடிப் பெற வேண்டி வரும்.
ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 5-ல் அமர்வதால் பணப்பற்றாக்குறை தீரும். வாடகை வீட்டில் உள்ள சிலர் சொந்த வீடு கட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 5-ல் நீடிப்பதால் குடும்பச் சூழ்நிலையை அவர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லிப் புரியவையுங்கள். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.
பூர்வீகச் சொத்துக்கான வரியைச் செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். 14.04.2018 முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 12-ல் ராகு தொடர்வதால் நீண்ட நாட்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள்.
கேதுவும் 6-ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை ராகு, லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். ஆனால், கேது 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது.
30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 6-ல் நிற்பதால் வீடு, மனை வாங்குவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் காசு புரட்டி புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
25.02.2019 முதல் 21.03.2019 வரை உள்ள காலகட்டங்களில் சுக்கிரன் 6-ல் மறைவதால் குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில உத்திகளைக் கையாளுவீர்கள். சந்தை நிலவரமறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். சித்திரை, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர உத்திகளைக் கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பங்குதாரர்களுடன் பிரச்சினை நீங்கும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் சித்திரை, ஆனி மாதங்களில் உண்டு. அவ்வப்போது வேலைச்சுமை, டென்ஷன் என வந்தாலும் கலகலப்பான சம்பவங்களும் உண்டு. உயரதிகாரியுடன் நெருக்கமாக இருந்தாலும் சக ஊழியர்களால் தொந்தரவு உண்டு.
இந்த விளம்பி ஆண்டு அடுத்தடுத்து வேலைச்சுமையால் ஆரோக்கியத்தைக் குறைத்தாலும், அவ்வப்போது வெற்றியையும் வளர்ச்சியையும் தரும்.
பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் வழியில் சிங்கபெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீநரசிம்மரை ஏகாதசி திதி நாளில் தீபமேற்றி வணங்குங்கள்.