விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : கடகம்!!

கடக ராசி வாசகர்களே, தொலைநோக்குச் சிந்தனையுடையவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால் மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். சொத்துப் பிரச்சினையில் வழக்கு, நீதிமன்றம் என்று போகாமல் சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள்.

ஆனால், 4.10.2018 முதல் 12.03.2019 வரை 5-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மகளுக்குத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 6-ல் சென்று மறைவதால் சொத்துப் பிரச்சினைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது வரும்.

இந்த வருடம் முழுவதும் சனி பகவான் 6-ல் நீடிப்பதால் உங்கள் கை ஓங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த போராட்டம் விலகும்.

14.04.2018 முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகு பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் கேது பகவானும் நிற்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு பிரச்சினைகள் வந்து செல்லும்.

ஆனால், 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும் கேது 6-ம் வீட்டிலும் அமர்வதால் உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகையெல்லாம் கைக்கு வரும். ஷேர் மூலம் பணம் வரும்.

நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். 30.04.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 7-ல் அமர்வதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். உணவில் கட்டுப்பாடு அவசியம்.

30.01.2019 முதல் 24.02.2019 வரை உங்கள் ராசிக்கு சுக்கிரன் 6-ல் சென்று மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு, கருத்து மோதல்கள் வந்து நீங்கும். சொந்த வாகனத்தில் அதிகாலைப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்யுங்கள். வைகாசி, புரட்டாசி மாதங்களில் சொந்த இடத்தில் கடையை மாற்ற முயல்வீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். உங்களின் நெடுநாள் கனவான சம்பள உயர்வு, பதவியுயர்வு வைகாசி, ஆவணி மாதங்களில் உண்டு. ஐப்பசி, மாசி மாதங்களில் வேறு நல்ல வாய்ப்புகள் வரும்.

இந்தப் புத்தாண்டு விரக்தியாக இருந்த உங்களை வெற்றிக் கனியைச் சுவைக்க வைப்பதுடன் அடுத்தடுத்து அதிரடி வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருமெய்ச்சூர் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீலலிதாம்பிகையை குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள்.

விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : மிதுனம்!!

மிதுன ராசி வாசகர்களே, எதிலும் புதுமையைப் புகுத்துபவர்களில் வல்லவர்கள் நீங்கள். உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய காலியிடத்தை விற்றுப் புது வீடு, மனை வாங்கத் திட்டமிடுவீர்கள்.

வி.ஐ.பி.க்களுடன் நெருக்கமாவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. சபையில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்விகச் சொத்தைச் சீர்படுத்துவீர்கள். வாகன வசதி பெருகும்.

ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் குடும்பத்திலும் வீண் குழப்பங்கள் வரும். கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களைத் தவறான பாதைக்குத் தூண்டுவார்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

உங்களின் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வீர்கள். குழந்தைகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன், வேலை அமையும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். வெளி நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொத்து வாங்கும் போது தாய்ப்பத்திரத்தைச் சரிபார்ப்பது நல்லது.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை ராகு உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதாலும், 8-ல் கேது நீடிப்பதாலும் அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். யதார்த்தமாகப் பேசுவதைக்கூடச் சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். 13.2.2019 முதல் வருடம் முடியும்வரை ராசிக்குள்ளேயே ராகுவும் ராசிக்கு 7-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மின்சாரம், நெருப்பு இவற்றைக் கவனமாகக் கையாளுங்கள். அடிக்கடி தலைசுற்றல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் ஈகோ பிரச்சினையைத் தவிர்ப்பது நல்லது. 02.01.2019 முதல் 29.01.2019 வரை உங்கள் ராசிக்கு சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீட்டிலும் கழிவு நீர்க் குழாய் அடைப்பு, குடிநீர்க் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சாதனப் பழுது வந்து நீங்கும்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் 8-ம் வீட்டிலேயே கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் இக்காலகட்டத்தில் நெருப்பு, மின்சாரச் சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர உத்திகளைக் கையாள்வீர்கள். கடையை விரிவுபடுத்துங்கள். சித்திரை, ஆவணி மாதங்களில் லாபம் கணிசமாக உயரும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிட்டும். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவீர்கள். வேலையைத் தேக்கி வைக்காமல் அவ்வப்போது முடிக்கப் பாருங்கள்.

இந்தப் புத்தாண்டு தன் கையே தனக்குதவி என்பதை உணர வைப்பதாக அமையும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், இடிகரை எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ரங்கநாயகி அம்மையாரையும் ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாதரையும் சனிக்கிழமைகளில் துளசி மாலை சாற்றி வணங்குங்கள்.

விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : ரிஷபம்!!

ரிஷப ராசி வாசகர்களே, பெருந்தன்மையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு சந்திரன் லாப வீட்டில் நிற்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டும். வெளியூருக்குச் செல்லும்போது வீட்டைப் பத்திரமாகப் பூட்டிச் செல்லுங்கள். உங்கள் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் நன்கு நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

பிரிந்திருந்தவர்கள் சேர்வார்கள். கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் களைகட்டும். மனைவிவழி உறவினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 8-ல் அமர்வதால் சொந்த ஊரில் இருக்கும் பூர்விகச் சொத்தை அவ்வப்போது சென்று கவனித்து வருவது நல்லது.

31.08.2018 முதல் 01.01.2019 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன், ராசிக்கு 6-ல் மறைவதால் குடும்பத்தில் சின்ன சின்னப் பிரச்சினைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி பழுதாகும். விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது பகவான் 9-ல் நிற்பதால் அநாவசியச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து வருந்துவீர்கள்.

தந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். ஆனால், ராகு பகவான் 3-ல் நிற்பதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள்.

தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது 8-லும், ராகு 2-லும் வந்தமர்வதால் சாதாரணமாகப் பேசினால் கூடச் சண்டையில் போய் முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அவ்வப்போது கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 9-ல் அமர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதரர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தந்தையாரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதுச்சொத்து வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவானும் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கிவைப்பது நல்லது. வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். சொத்து வாங்கும்போது அவசரம் வேண்டாம்.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் ஆடி, ஆவணி மாதங்களில் மீண்டும் வரும். திடீர் லாபம் அதிகரிக்கும். வர வேண்டிய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலியுங்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.

உத்தியோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி விரும்பிப் பணிபுரிவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் வரும். மேலதிகாரி தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.

நாலாவிதத்திலும் நிம்மதியில்லாமல் அலைக்கழித்த உங்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளையும் மன அமைதியையும் அள்ளித்தரும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ சரபேஸ்வரரை வெள்ளிக்கிழமையில் சென்று வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள்.

விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : மேஷம்!!

மேஷ ராசி வாசகர்களே, பிரச்சினைகளைச் சமாளிக்கும் தைரியம் கொண்டவர் நீங்கள்தான். உங்கள் ராசிக்குள்ளேயே சுக்கிரன் நிற்கும்போது, இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் அழகு, இளமை கூடும். சவால்களில் வெற்றிபெறுவீர்கள். திருமணம் கூடி வரும்.

புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது நன்கு முடியும். இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 7-வது வீட்டிலேயே தொடர்வதால் வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்கள், உறவினர்களின் வருகை அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்; வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் பெருமைகளைச் சொல்லி சொந்தபந்தங்கள் மத்தியில் திருப்தியடைவீர்கள்.

ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். இந்தக் காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பரிவாக நடந்து கொள்ளுங்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், 13.03.2019 முதல் இந்த வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 9-ம் வீட்டில் அமர்வதால் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள்.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் நீண்ட நாளாகச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்குக் குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் உங்கள் குடும்பத்தினரைப் பற்றிக் குறைத்துப் பேச வேண்டாம். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப் பாருங்கள்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 10-ம் வீட்டில் அமர்வதால் சொத்து விஷயங்களில் சுமுகத் தீர்வு காண வேண்டும். உறக்கம் குறையும். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 12.02.2019 வரை கேது 10-ம் வீட்டிலும் ராகு 4-ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் அரசு காரியங்களில் சற்று நிதானம் தேவை. ஆனால், வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

என்றாலும், தாயாரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், 13.02.2019 முதல் 9-ம் வீட்டில் கேது அமர்வதால் பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் தாமதம் வரும். ராகு பகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் வந்தமர்வதால் புது வீடு மாறுவீர்கள். பழைய வண்டியை மாற்றி விட்டுப் புது வண்டி வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் அதிக வட்டிக் கடனைக் குறைந்த வட்டியில் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் சில உதவிகள் கிடைக்கும். கடந்த கால இழப்புகளை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள்.

02.08.2018 முதல் 30.08.2018 வரை உங்கள் ராசிக்கு சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தங்க நகைகள் தொலைந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர உத்திகளைக் கையாளுவீர்கள். தொழில் தொடர்பாக அயல்நாடு சென்று வருவீர்கள். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகள் விற்று தீரும். கூட்டுத் தொழிலில் நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.

வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு ஆனி, மாசி மாதங்களில் கிடைக்கும். பொய் வழக்கு தள்ளுபடியாகும். கணினித் துறையினர்களுக்கு அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு செலவுகளாலும், பயணங்களாலும் உங்களை அலைகழித்தாலும், பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூட்சுமத்தைக் கற்றுக்கொடுக்கும்.

பரிகாரம்: வேலூர் மாவட்டம், வள்ளிமலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்ரமணியரையும், ஸ்ரீவள்ளியையும் பூசம் நட்சத்திரத்தில் சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள்.

ஆற்றில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு!!

 

வாகரைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி ஆற்றில் வயோதிப மீனவர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரைப்பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பனிச்சங்கேணி சல்லித்தீவில் வசித்து வந்த 64 வயதுடைய தங்கராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மீனவரின் சடலம் வாகரை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை வரும் வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்து : பிரித்தானிய ஊடகம் எச்சரிக்கை!!

இலங்கை வரும் வெளிநாட்டு பெண் மீது பாலியல் வன்கொடுமைகள் தீவிரமாக அரங்கேற்றப்படுவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் மிரிஸ்ஸ பகுதியில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட இரு வெளிநாட்டு பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த முயற்சித்த நெதர்லாந்து நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இரண்டு பிரித்தானிய பெண்களும் மிரிஸ்ஸ பகுதியில் உள்ள விடுதியில் இரவு உணவு பெற்றுக் கொண்டுள்ளனர்.

அந்த விடுதியில் பணியாற்றியவர், இரண்டு பிரித்தானிய பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடுதியில் வேலை செய்தவர்கள் எங்கள் அருகில் ஆட முயற்சித்ததுடன், எங்கள் தூக்க முயற்சித்தனர் என பிரித்தானிய பெண் ஒருவர் ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளின் போது மேலும் பல இலங்கை இளைஞர்கள் இணைந்து பிரித்தானிய பெண்களிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக 19 வயதான டச்சு நாட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இது தொடர்பில் விடுதியில் பணியாற்றுபவர்களிடம் முறைப்பாடு செய்தோம். அவர்கள் எங்களை பார்த்து சிரித்து மேலும் தவறாக நடந்து கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அங்கிருந்து செல்ல முயற்சித்த போது இலங்கை இளைஞன் ஒருவன் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

கோபமடைந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து செல்ல தீர்மானித்த போதிலும், இலங்கை இளைஞர்கள் அவர்களை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் நெதர்லாந்து இளைஞனை 10 நிமிடங்களாக இலங்கை இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அந்த இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கையின் சுற்றுலா தளங்களில், வெளிநாட்டு பெண்கள் கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளதாகுவதாகவும், இந்த நிலைமை தொடர்வதாகவும், நெதர்லாந்து சுற்றுலா அமைச்சு எச்சரித்துள்ளது.

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், கடல் அருகில் உள்ள விடுதிகளில் தங்குவதில் கவனம் தேவை எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செல்லும் வெளிநாட்டு பெண்கள் தனியாக செல்வதனை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நான்கு ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் அதிசய மனிதன்!!

உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் ஒன்றாக வசிக்க முடியாத நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ஒருவர் மயானத்தில் வசித்து வருகிறார். கலேவல புவக்பிட்டிய பொது மயானத்தில் இந்த நபர் வசித்து வருகிறார். 43 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்த பிரியந்த லால் ஜயவர்தன என்ற நபரே இவ்வாறு வசித்து வருகின்றார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் தனது சகோதர, சகோதரிகளுடன் இருந்து பிரிந்து சென்ற இவர், தனது தந்தை அடக்கம் செய்யப்பட்ட பொது மயானத்தில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 1983 ஆம் ஆண்டு தந்தை உயிரிழந்த பின்னர், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் தந்தைக்கு சொந்தமான வீடு, காணிகள் என அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டு தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றியதாக பிரியந்த லால் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சகோதரர்கள் கவனிக்காது கைவிட்டால், தனது புதைக்குழிக்கு அருகில் வந்து இருக்குமாறு உயிருடன் இருக்கும் போது தந்தை வழங்கிய ஆலோசனைக்கு அமைய தான் மயானத்திற்குள் வந்து வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர் தனது தந்தை அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள மரத்தடியில் தங்கியிருப்பதுடன் மழை பெய்யும் காலங்களில் மயானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சடலங்களை வைத்து ஈமகிரியைகள் செய்யும் கட்டடத்தில் உறங்குவதாகவும் கூறியுள்ளார்.

நான்கு ஆண்டுகளாக மயானத்தில் வசித்து வரும் பிரியந்த லால் ஜயவர்தன, மயானத்தில் தனக்காகவும் குழி ஒன்றை வெட்டியுள்ளார். தான் இறந்த பின்னர் அதில் தன்னை அடக்கம் செய்யுமாறு கிராம மக்களிடம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்துள்ள இவர் தனது மனைவியை அழைத்து வந்த வாழ வைக்க இடம் இல்லாத காரணத்தினால், மனைவி அவரது வலது குறைந்த சகோதரரை பராமரித்துக்கொண்டு தெய்யத்தகண்டிய பிரதேசத்தில் வசித்து வருகிறார்.

தனக்கு வாழ்க்கை குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என தெரிவிக்கும் ஜயவர்தன, உயிருடன் இருக்கும் மனிதர்களை விட இறந்தவர்கள் நல்லவர்கள் எனவும் அவர்களால் தனக்கு எந்த தொல்லையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நகருக்கு சென்று ஏதாவது வேலை செய்து அன்றைய தினம் உணவுக்காக மாத்திரம் பணத்தை சம்பாதிக்கும் அவர், சுகவீனம் ஒன்றுக்காக சிகிச்சையும் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மே மாதம் தொடக்கம் முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் கட்டாயம்!!

மே மாதம் தொடக்கம் முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்மாதம் 30ம் திகதிக்குள் வாடகை முச்சக்கர வண்டிகள் அனைத்தும் அதற்கான மீட்டர்களை பொருத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாடகை வண்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்களின் பயண தூரம், அதற்கான கட்டணம், முச்சக்கர வண்டியின் விபரம் போன்றவை உள்ளடங்கிய பற்றுச்சீட்டு மே மாதம் தொடக்கம் வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான மீட்டரைப் பொருத்திக் கொள்வதற்காக ஆறுமாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 01ம் திகதியுடன் குறித்த சலுகைக் காலம் நிறைவுற்ற நிலையில் இம்மாதம் 30ம் திகதி வரை அச்சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் மே மாதம் தொடக்கம் மீட்டர் மற்றும் கட்டண பற்றுச் சீட்டு வழங்கும் நடைமுறை கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என்றும் அதனை கடைப்பிடிக்காத முச்சக்கர வண்டிகள் பயணிகளுக்கான வாடகை சேவையில் ஈடுபட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைக்கு 11 லட்சத்தி ஐம்பதினாயிரம் முச்சக்கர வண்டிகள் காணப்படும் அதே வேளை அவற்றில் 7 லட்சத்தி ஐம்பதினாயிரம் முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பயணிகளுக்கான வாடகைப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

துப்பாக்கி சூட்டிலிருந்து மாணவர்களை காப்பாற்றிய தமிழ் பெண் : பதற வைக்கும் நிமிடங்கள்!!

 

பிப்ரவரி 14, 2018, உலகமே காதலையும் அன்பையும் கொண்டாடிக்கொண்டிருந்த நாள். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், ஃபோர்ட் லாடர்டேள் (Fort Lauderdale) நகரத்தில் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியான பார்க்லாண்டில் இருக்கும் Marjory Stoneman Douglas மேல் நிலைப்பள்ளி வழக்கம் போல் அமைதியாக நடந்து கொண்டிருந்தது.

மதியம் 2.30 மணி. பள்ளி முடிய அரை மணி நேரமே இருக்கும் சமயத்தில் இரண்டாம் தளத்தில் ஆசிரியை சாந்தி விஸ்வநாதன் அல்ஜீப்ரா பாடத்தை முடித்துக்கொண்டிருந்த வேளையில் படபடபட-வென கீழ்தளத்திலிருந்து சரமாரியமாக சத்தம் வருவதை கேட்டார்.

அது என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்கு முன்னரே அந்த கட்டிடத்தின் தீ எச்சரிக்கை மணி (Fire alarm) ஒலிக்கத் தொடங்கியது.

அவசரகால வெளியேற்றப் பயிற்சியின்படி மற்ற பள்ளி அறைகளிலிருந்து மாணவர்கள் வரிசையாக வெளியேறத் தொடங்கினார்கள்.

ஆனால், சாந்தியின் உள்ளுணர்வு அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது. அவர் கேட்ட அந்தப் படபட சத்தங்களுக்கு அர்த்தம் தெரியாமல் தனது அரவணைப்பில் இருக்கும் மாணவர்களை வெளியே அனுப்ப மனம் இடம் கொடுக்கவில்லை.

அவர் உடனடியாக தனது வகுப்பறையின் கதவை உள்பக்கமாகத் தாளிட்டார். பின்னர் விளக்குகளை அணைத்துவிட்டு மாணவர்களை சத்தம் செய்யாமல் அவர்களது மேசைகளுக்கு கீழ் ஒளிந்துக்கொள்ளுமாறு அன்பாக உத்தரவிட்டார்.

மனதுக்குள் பயம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும், உடனடியாக தனது அறையின் ஜன்னல்களின் மேல் காகிதங்களை வைத்து மறைத்தார்.

இதைக் கண்டு பயந்துபோனார்கள் 13 , 14 வயதுள்ள சிறுவர்கள். ஆனால் சாந்தியோ “இது சும்மா ஒரு பயிற்சிக்காக நடத்தப்படும் சம்பவமாக இருக்கும். நீங்க பயப்படாதீங்க” என்று அவர்களை சமாதானப்படுத்தினார்.

ஒரு சில நிமிடங்களில் அவர்களுக்கு பக்கத்து அறையில் துப்பாக்கி சுடும் சத்தம் தெளிவாக கேட்கத் தொடங்கியவுடன், எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்துவிட்டது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று. மூச்சு கூட விடாமல் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தார்கள் அனைவரும்.

அடுத்த சில நொடிகளில் இவர்களது அறைக்கதவின் கைப்பிடி வேகமாக ஆடியது. யாரோ உள்ளே நுழைய முயற்சிப்பது தெரிந்து பீதியில் ஆழ்ந்தனர். பூட்டிய கதவை திறக்க இயலாமலும் உள்ளே இருட்டாய் இருந்ததாலும் இந்த அறை காலியாக இருப்பதாக நம்பி வெளியில் இருந்தவன் கடந்து சென்றான்.

அடுத்த பத்து நிமிடங்கள் தொடர் துப்பாக்கி சுடும் ஒலிகள் ஓயவில்லை. பின்னர் ஒரு மயான அமைதி நிலவிய நேரம் மறுபடியும் அறைக்கதவை திறக்க யாரோ முயன்றனர். ஸ்வாட் பிரிவு சிறப்பு காவலர்கள் என்று உறுமியவாறு கதவை திறக்க ஆணையிட்டனர்.

ஆனால் அந்த ஆசிரையையோ மாணவர்களை கை அசைவால், பதில் சொல்ல வேண்டாமென அறிவுறுத்தினார். சில நொடிகளில் ஜன்னலை உடைத்துக் கதவை திறந்து புயல் போல் உள்ளே நுழைந்தனர் காவலர்கள் – அந்த அறையில் இருந்து பாதுகாப்பாக அனைவரையும் ஒரே வரிசையில் வெளியேற்றினர்.

வழி எங்கும் ரத்தமும் சதையுமாய் தங்களது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் சடலங்களைத் தாண்டி நடந்து வந்த அந்த நாளைப் பற்றி விவரிக்கும் போதே குரலில் தடுமாற்றமும் கண்களில் ஒரு தாங்க முடியாத சோகமும் படர்ந்தது சாந்திக்கு. ஒரு மாதம் ஆகியும் இதைப் பற்றி யாரிடமும் பேச முன்வராத சாந்தி விஸ்வநாதன், முதல் முறையாராக பிபிசி தமிழுக்காக பேசினார்.

இந்த உரையாடலுக்கு அவர் சம்மதித்ததற்கு முக்கிய காரணம் இனிமேல் இதுபோல பள்ளிக்கூட “மாஸ் ஷூட்டிங்ஸ்” எங்குமே நடக்கவே கூடாது, அதற்கான சட்டங்கள் மாற வேண்டும் என்று அவரது பள்ளி மாணவர்கள் தொடங்கியுள்ள இயக்கம் வெற்றியடைய அவரால் முடிந்த பங்களிப்பாக இது இருக்க வேண்டுமென்றார்.

அன்று பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து சுட்டவர் 19 வயது நிகோலஸ் கிருஸ். அதே பள்ளியில் இருந்து கடந்த வருடம் தவறான நடத்தைக்காக வெளியேற்றப்பட்ட அவர், பழிவாங்கும் விதமாகத்தான் இந்த கொடூர செயலை செய்திருப்பதாக கூறிக்கொள்கிறார்கள். அவர் பயன்படுத்தியது ஒரு AR 15 அசால்ட் ரைபிள். இது சட்டப்பூர்வகமாகத்தான் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

AR-15 ரக Assault Rifleகளை தடைச்செய்ய வேண்டும் என்பதுதான் பெரும்பாலான அமெரிக்கப்பள்ளி மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதை வலியுறுத்தி மார்ச் 24 ஆம் தேதி அமெரிக்காவில் பல ஊர்களில் இருந்தும் மாணவர்கள் ஒன்று கூடி “மார்ச் ஃபார் அவர் லைஃப்ஸ் (March for our lifes)” என்று வாஷிங்டனில் ஒரு பெரிய அணிவகுப்பு நடத்தினார்கள்.

பல தரப்புகளிலிருந்தும் மாணவர்களுக்கு ஆதரவு வந்த வண்ணம் இருந்தாலும் இன்னும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது பெரும் குழப்பமாகவே இருக்கிறது. இந்த கோரிக்கை இரண்டாவது சட்டத் திருத்தத்துக்கு எதிராக உள்ளதாக ஆளும் கட்சியான குடியரசுக் கட்சியினர் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஆனால் மாணவர்களோ அப்படிச்சொல்லும் அனைத்து அரசியல்வாதிகளும் NRA (National Rifle Association) – வின் கைக்கூலிகளாக இருப்பதாலேயே இப்படி பேசுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். 350 மில்லியன் மக்கள் வாழும் அமெரிக்காவை வெறும் 5 மில்லியன் மக்களைக் கொண்ட NRA அமைப்பு இப்படி ஆட்டி வைப்பது மறுபடியும் காசுள்ளவன் கையில்தான் அதிகாரம் என்பது போல் உள்ளதாக கருத்து தெரிவித்தார் சாந்தி விஸ்வநாதன்.

“பாதுகாப்புக்காக தேவை என்றால் கைத் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம். பல ரவுண்டுகள் சுடக்கூடிய அசால்ட் ரைஃபிள் எதற்கு? அந்தப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், போலீசார் வந்து எதிர்தாக்குதல் நடத்திய பிறகு கீழே போட்டுவிட்டுச் சென்ற அசால்ட் ஃரைபிளில் 180 ரவுண்டு துப்பாக்கி குண்டுகள் மீதமிருந்து என்றால் அது எந்த அளவுக்கு சக்தி வாய்ந்த துப்பாக்கியாக இருந்திருக்கும் என்று பாருங்கள்” என சுட்டிக்காட்டுகிறார் சாந்தி.

தீப்பிடித்து எரிந்த விமானம் : பயணிகளின் கடைசி நிமிடங்கள்!!

 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

TPC Scottsdale Champions Golf Course – இல் ஈடுபட்டிருந்த மாணவர்கள், Scottsdale விமான நிலையத்தில் இருந்து Piper PA-24 Comanche என்ற சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளனர். Golf Course-இல் படித்துக்கொண்டிக்கையில், இவர்கள் இதுபோன்று சிறிய ரக விமானத்தின் மூலம் ஒரு ட்ரிப் போவது வழக்கம்.

அதே போன்று, Mariah Sunshine Coogan(23), Erik Valente(26), James Louis Pedroza(28), Anand Anil Patel(28), Helena Lagos(22) மற்றும் Iris Carolina Rodriguez Garcia(23) ஆகிய 6 பேர் பயணம் செய்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில மணிநேரத்தில் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

விமானம் விபத்துக்கு ஆளாவதற்கு முன்னர், இவர்கள் அனைவரும் விமானத்தில் சந்தோஷமாக எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

விமானப்பயணத்தின்போது, அதில் பயணித்தவர்களில் ஒருவரான Mariah அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த விமான ஓட்டுநரின் சகோதரன், எனது அண்ணனின் மரணத்தை பெற்றோரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அவரின் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள எனது பெற்றோர், அவர் மீண்டும் வரமாட்டானா என நடக்காத ஒன்றை எதிர்பாக்கிறார்கள் என உருக்கத்துடன் பேசியுள்ளார்.

பிரான்சில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொலை வழக்கு : 6 பேர் கைது!!

பிரான்சில் பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 6 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், பாரிசுக்கு மேற்கில் அமைந்திருக்கும் Magnanville பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவியை கொலை செய்தார்.

அதோடு இல்லாமல் அந்த கொடூர சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து, IS தீவிரவாதக் குழுவுக்கு ஆதரவான கருத்துக்ளை கூறியபடியே, கொலை செய்த வீடியோ காட்சிகளை ஒன்லைனில் பதிவிட்டார்.

அப்போது குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார், குற்றவாளியை சுட்டுக் கொன்றனர், அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தின் போது பலியான தம்பதியினரின் மூன்று வயது மகன் மட்டும் உயிர் தப்பினார்.

கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வந்த பொலிசார், தற்போது 6 நபர்களை கைது செய்துள்ளனர்.

இவர்களில் யார் கொலை செய்ய உதவியது? திட்டமிட்டது எப்படி? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரில் 3 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் ஆவர்

பிறக்கும் முன்பே குழந்தையை தத்துக்கொடுத்த பெண் : மனதை நெகிழ வைக்கும் சம்பவம்!!

 

தான் கர்ப்பிணியாக இருக்கும் போதே தனது குழந்தையை தத்துக் கொடுத்துவிட்டு குழந்தை பிறந்தபின் அதைப் பிரிய மனமில்லாத தாய் தத்தெடுத்த தாயுடனேயே சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் Atlantaவிலிருந்து Raleigh செல்லும் அந்த விமானத்தில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் வந்து அமர்ந்தார், அவர் பெயர் Samantha Snipes. அவர் மிகவும் குழப்பத்துடனும் படபடப்புடனும் காணப்பட்டதைக் கண்ட அவருக்கு அருகில் அமர்ந்திருந்த Temple Phipps என்னும் பெண் அவரிடம் பேச்சுக் கொடுக்க தான் தனது கணவரிடமிருந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகி தனியே வருவதாகவும், தனக்கு குழந்தை பிறந்தபின் அந்தக் குழந்தையைத் தத்துக்கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார் Samantha. அதைக் கேட்டதும் Temple Phippsஇன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.

42 வயதாகும் அவர் முன்பு திருமணம் செய்திருந்தாலும் திருமண வாழ்வு இனிக்கவில்லை, குழந்தைகள் என்றால் அலாதிபிரியம் உடைய அவருக்கு குழந்தையும் பிறக்கவில்லை.

Samantha தனது குழந்தையை தத்துக் கொடுக்க இருப்பதாக கூறியதும் தான் அந்த குழந்தையை கேட்கலாமா என்று எண்ணியவர் தயக்கத்துடன், தனது போன் நம்பரை அவரிடம் கொடுத்துவிட்டு ஏதாவது உதவி வேண்டுமென்றால் தன்னை அழைக்குமாறு கூற, பயண முடிவில் இருவரும் பிரிந்தனர்.

மூன்று நாட்களுக்குப்பின் Phippsக்கு ஒரு போன் கால் வந்தது. பிளேனில் சந்தித்தோமே அந்த சமந்தா பேசுகிறேன் என்று அந்தக் குரல் கூறியதும் ஏதாவது பிரச்சினையா என்று Phipps கேட்க எனக்கு குழந்தை பிறந்து விட்டது, எங்களை வந்து பார்க்க முடியுமா என்று கேட்டதும் Phippsக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. உடனே Samantha இருந்த மருத்துவமனைக்கு புறப்பட்டு விட்டார் அவர். குழந்தையைப் பார்த்தார் Phipps. மனமெல்லாம் ஒரே படபடப்பு.

சரியாக அந்த நேரம் பார்த்து என் குழந்தையை தத்தெடுத்துக் கொள்கிறீர்களா என்று Samantha கேட்கவும் உடனே தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்த Phippsக்கு உதடுகள் நடுங்கின. வார்த்தை வரவில்லை.

குழந்தை கையில் எடுத்தார் Phipps, குழந்தை அவருடன் ஒட்டிக்கொண்டான், அவருக்கு ஒரே சந்தோஷம். குழந்தையை கொடுக்க சம்மதித்து விட்டலும் இப்போது Samanthaவுக்கு லேசாக பயம் வந்தது.

முறைப்படி குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார் Phipps, அவனது தாயையும் அவர் விட்டு விடவில்லை, வட கரோலினாவுக்கே வந்து விட்டார் Samantha. இப்போது மூன்றுபேரும் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்கிறார்கள்.

தங்கள் சந்திப்பைக் குறித்து இருவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுத இருக்கிறார்கள். நாங்கள் குடும்பமாக வாழ வேண்டும் என்பது ஆண்டவன் எடுத்த முடிவு என்கிறார்கள் இருவரும்.

உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் கிம் ஜாங் உன் எவ்வாறு சந்திப்பு நடக்கும் பகுதிக்கு பயணம் மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனத்து ஜனாதிபதியை திடீரென்று நேரடியாக சென்று சந்தித்து உலகையே தம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன். வடகொரியாவின் தலைவர் பொறுப்புக்கு வந்த பின்னர் சர்வதேச தலைவர் ஒருவருடன் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதல் அரசு முறை சந்திப்பு இது.

இதனையடுத்து தற்போது தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் உடன் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்திப்புக்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் தான்,

அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு கிம் ஜாங் உன் எவ்வாறு பயணம் மேற்கொள்வார் என்ற கேள்வி நிபுணர்களிடையே எழுந்துள்ளது.

சீனாவுக்கு சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன், அதேபோன்று தென் கொரிய ஜனாதிபதியுடனான சந்திப்புக்கும் ரயிலையே பயன்படுத்தலாம்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பானது பொதுவான ஒரு பெருநகரத்தில் வைத்து நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதுவரை சந்திப்புக்கான இடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பெரும்பாலும் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து அல்லது ஸ்வீடன் என குறிப்பிட்ட சில நாடுகளில் நடத்தவே வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த நாடுகளுக்கு செல்லும் அளவுக்கு வடகொரியாவிடம் விமான வசதி இல்லை என்பதே தற்போதைய நிலையில் வடகொரியாவை சங்கடத்தில் ஆழ்த்தும் தகவல்.

வடகொரியாவிடம் இருக்கும் விமானங்கள் அனைத்தும் சோவித் ரஷ்யா காலத்தில் வாங்கப்பட்ட விமானங்கள்.

அவைகள் நெடுந்தூரம் இடைநிறுத்தமின்றி பயணத்திற்கு பயன்படுத்த முடியாதவை.

தங்களது விமானத்திலேயே கிம் ஜாங் உன் பயணப்படுவார் என்றால் கண்டிப்பாக பல முறை எரிபொருள் நிரப்ப இடை இடையே சில நாடுகளில் நிறுத்தும் நிலை ஏற்படும்.

மட்டுமின்றி வடகொரிய விமானங்கள் சர்வதேச நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளதா என்பதும் சந்தேகமே எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கிம் ஜாங் உன் அரசு கோரிக்கை விடுத்தால் தென் கொரியா அல்லது ஸ்வீடன் நாட்டு சிறப்பு விமானம் ஒன்றை தமது பயணத்திற்காக வரவழைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிழைப்பிற்காக டீ ஆற்றும் மரத்தான் வீராங்கனை : சாதனைக்குப் பின்னும் சோதனை!!

மரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோயம்புத்தூரை சேர்ந்த கலியமணி இப்போது குடும்பத்தைக் காப்பாற்ற டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

41 கிமீ மராத்தன்களில் பங்குபெற்ற தமிழ்நாட்டின் மாநில அளவிலான ஓட்டப்பந்தய வீரர், நான்கு தங்க பதக்கங்களுக்குசொந்தக்காரர், 45 வயது மிக்க கலியமணி இப்போது கோயம்புத்தூரில் உள்ள தனது டீக்கடையில் மிக அதிக நேரம் செலவழிக்கிறார்.

10வது வரை படித்த கலியமணி , கபடி மற்றும் தடகள நிகழ்ச்சிகளில் தனது பள்ளி நாட்களில் பங்கேற்றவர். அவரின் கடமைகள் அவரது பயிற்சிகளில் முழுமையாக ஈடுபட அனுமதிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு நாளும் 21கிமீ தூரம் ஓடுவதை தனது நடைமுறையாக வைத்திருக்கிறார் இந்த சாதனைப் பெண்.

விளையாட்டு வீரர்களுக்காக அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை எனும் இவர் தனது மூன்று குழந்தைகளைக் காப்பற்றுவதற்காக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

வங்கிக் கடன்கள் மறுக்கப்பட்ட நிலையில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி இந்த விளையாட்டுகளில் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கோடிக்கணக்கில் வங்கிக் கொள்ளை புரிந்தவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்த வங்கிகள் இவர் போன்ற தங்க மங்கைகளை மதிப்பதே இல்லை என்பதுதான் தமிழ்நாட்டின் விதியா?

நீங்கள் காணும் கனவுகளும் அவற்றுக்கான பலன்களும் : கண்டிப்பாக படியுங்கள்!!

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.

இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறது. பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு. வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.

திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும். ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும். இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும். இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும். திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.

தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும். உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும். கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும். மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.

மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும். வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும். மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும். குழந்தையைக் கனவில் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும். சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும். கோயிலைக் கண்டால் நூதனமான தொழில் விருத்தியாகும். செல்வம் குவியப்போவதைக் குறிக்கும்.

வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவு கண்டால் வறுமை நீங்கும்.பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும். பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும்.

குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது. கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருப்பின் வெற்றி கிட்டும்; நோயுற்றிருப்பின் நோய் அகலும். குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.

குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். ஒரு நூதமான இயந்திரத்தைக் கண்டால், தான் மேற்கொள்ளப் போகும் செயலால் வெற்றியும் இலாபமும் ஏற்படும்.

அந்த இயந்திரத்தைத் தானே இயக்குவதாய்க் காண நேரின், செய்யப்போகும் தொழிலில் நிச்சயம் அபிவிருத்தியும் இலாபமும் மிகும். அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டால் தான் நினைக்கும் காரியத்தைச் செய்வதால் நன்மை பெறலாம். ஆனால் இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்து நின்று போவதாகக் கண்டால், செய்யும் தொழில்கூட பாழ்படப் போகிறது என்பதை அறியலாம்.

ஆண் பெண் கலந்த கூட்டத்தைக் கண்டால் செய்தொழிலில் விருத்தி உண்டாகும். தெளிந்த நீரைக்காணின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப் போவதையும், நல்ல காலம் தொடங்குகிறது என்பதையும் அறியலாம். பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.

அரண்மனையைக் கண்டால் பொருள் விருத்தியாகும். அரண்மனைக்குள் தாமே செவதாய்க் கான நேரின், உற்றார் உறவினர்களால் சந்தோஷம் மிகுதியாகும். செல்வ நிலையும் உயரும். வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும். சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கைமிகும்.
சுப சொப்பனங்கள்.

பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல், ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும்.

வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு. தீ புகைந்தும், நெருப்புப் பொறிகள் பறந்தும் அந்த வஸ்திரம் எரிந்து போவதாகக் கனவு கண்டால் தொழில், விவசாயம் இவற்றில் நஷ்டம் ஏற்படலாம். தீப்பிடித்து எரிந்து சாம்பலாவதுபோலக் கனவு கண்டால் கஷ்டம், நோய்கள் ஏற்படக் கூடும்.

புகையும், நெருப்புப் பொறிகளும் இல்லாமல் நன்றாக எரிவது போலக் கனவு கண்டிருந்தால் சொத்து சேரும், அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும். இருக்கும் பிணிகள் மருத்துவம் செய்யாமலேயே பறந்துவிடும்.

நீர் நிலை கனவுகள்

நீர் நிலைகளை கனவில் பார்த்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடல் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப்போகிறார் என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது. வெள்ளை நாகம் கனவில் வந்தால்,இந்தக் கனவு ஒரு ஆபத்தை முன் கூட்டியே அறிவிக்கும் ஒரு முன்னோடியாகவே தோன்றுகிறது.

வெள்ளை நாகம் என்பது பொதுவாகவே எதிர்காலத்தை குறிக்கும். ஆகவே எந்த வித புது முயற்சிகளையும் மேற்கொள்ளும்போது ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுங்கள்.

இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம்,பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

தீய பலன் தரும் கனவுகள்.

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும். தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும். எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும். எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.

இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள். பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும். புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.

குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும். நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார். ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும். முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும். முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும். சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும். பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.

காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.

குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும். குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும்.

அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும். அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்டமும் உண்டாகும்.

எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும்.

அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம். வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும் தன்னை யாரோ

ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம். நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர். எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது.

அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும். அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.

எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.

காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும். தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார். ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர் உண்மை.

நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன. இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போலத்தான்.

கனவுகள் தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!

பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம்.

கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்:

பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன.ஏன்
தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது.

மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன அடைய நினைக்கும் உயர்நிலையை நம் எண்ணங்களை வாக்கியங்களாய் அமைத்து நம் பார்வையில் படும்படி வைப்பது நல்ல பலனைத் தரும்.

ஏனெனில் எது கண்களில் படுகின்றதோ அது மனதில் ஆழமாகப் பதிகின்றது. மனம், தொடர்ந்து எதை நினைக்கின்றதோ அதுவாகவே நாம் ஆகிறோம்.

வெற்றியின் முதல் கட்டம் நம்மை நாமே வெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கான காரணி ஆகிவிடாது. கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும் கண்முன்னே தெரியும் வாசகங்களும் நிஜம் பெற சரியான திட்டம் தேவை.

தமிழர்கள் ஆட்டு மந்தைகள் : காயத்ரி ரகுராம்!!

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததுடன் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் முதலிடம் பிடித்தது. இதுகுறித்து நடன இயக்குனரும், பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் கடும் கோபத்துடன் டுவிட் செய்துள்ளார்.

அவர் கூறுகையில், மோடி நமக்கு உதவி செய்யவில்லை என்றால் வேறு யார் உதவுவார்கள். #GoBackModi என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்ததற்கு காங்கிரஸ் தான் காரணம். ராகுலின் சிறந்த நண்பரும், காங்கிரஸ் கட்சியின் சமூகவலைத்தளங்களை நிர்வகித்து வரும் ரம்யாவுக்கு நிச்சயம் பங்கு உண்டு.

சமூகவலைத்தளங்களின் போலியான முகவரி மற்றும் கட்சிகளுக்கு காங்கிரஸ் பணம் செலவழித்து வருகிறது. முதலில் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகளுக்காக போராடட்டும்.

அரசியலை பொறுத்தவரை சமூகவலைத்தள விமர்சனங்களை எடுத்துக்கொள்ள மாட்டேன், ஏனெனில் பணம் செலவழித்து யாரோ செய்யும் சதிவேலை இது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரச்சனைகளுக்கு காரணமாக திராவிட கட்சிகளுக்கு எதிராக போராட உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? அவர்களும் தமிழர்கள் தானே, ஏன் நமக்கு நல்லவர்களாக இருக்கவில்லை? நமக்கு ஆதரவாக அவர்கள் நிற்காதது ஏன்?

இன்னும் மக்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்? ஒவ்வொரு விடயத்துக்காகவும் சாலையில் இறங்கி போராடும் நிலையில், ஏன் அவர்களை தேர்ந்தெடுத்தோம்?

உண்மையான தமிழன் மனம் மற்றும் மூளையிலிருந்து சிந்தித்து செயல்பட வேண்டும், ஆட்டு மந்தைகளை போன்று செயல்படாதீர்கள், நீங்கள் குழப்பவாதிகள், எளிதாக உங்களை பணத்தின் மூலம் வாங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிக்பாஸில் கலந்து கொண்ட போது, உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாலேயே என்னை ஒதுக்கினீர்கள், தமிழ் பெண்ணான என்னை ஆதரியுங்கள் என கெஞ்சியும் கூட, தவறானவள் என கூறி என்னை நிராகரித்து, கேரளாவை சேர்ந்தவரை தேர்வு செய்தீர்கள், அதேபோல இப்போதும் ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?

தமிழ் திரையுலகம் என்னை ஆதரிக்காத போது, கேரள திரையுலம் என்னை ஆதரித்தது, எப்போதும் எனக்கு மரியாதை, மதிப்பு உண்டு, ஆனால் பிக்பாஸ்க்கு அடுத்து அனைத்து மாநிலங்களும் முக்கியம், இதுதான் இந்தியனின் சக்தி என தெரிவித்துள்ளார்.