பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புனேக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகம் வந்த மோடிக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் அரசியல் கட்சியினர் முதல் மாணவர்கள் வரை தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஜேர்மனி, கனடா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் டுவிட் செய்து வருவதால் முதலிடம் பிடித்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்துபோன ராம்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கை தற்போது அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்களின் முன்னிலையில் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவும் எடுக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை ராம்குமாரின் பெற்றோர் மற்றும் அவரது வழக்கறிஞரிடம் கொடுக்கப்படாமல் அதிகாரிகளின் கைவசமே இருந்தது.
ராம்குமார் இறந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், ராம்குமாரின் உடலில் 12 இடங்களில் மின்சாரம் பாய்ந்திருப்பதற்கான காயங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
நாடி, கழுத்து, வாயில் 2 இடங்கள், வலது கன்னத்தில் 2 இடங்கள், இடது மார்பில் 4 இடங்கள், இடது கையில் 2 இடங்களில் என மொத்தம் 12 இடங்களில் மின்சாரம் பாய்ந்துள்ளது’ என தெரியவந்துள்ளது.
என் தந்தையை கொன்றது போல் என் தந்தையின் சகோதரரையும் கொலை செய்வார்கள் என பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், பாலியல் வென்கொடுமை செய்ததாக கடந்தாண்டு பொலிசிடம் புகார் அளித்திருந்தார்.
ஆனால் பொலிஸார் அவரது புகாரை வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர், இதனால் விரக்தியடைந்த அந்த பெண் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனைத்தொடர்ந்து அன்றிரவே விசாரணைக்காக அழைத்து சென்ற இளம்பெண்ணின் தந்தை, இறந்துவிட்டதாக மறுநாள் பொலிசார் கூறினர்.
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட யோகி அரசு, இதில் தொடர்புடையதாக கருதப்படும் 4 பேரை கைது செய்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் இன்று கூறுகையில், என் அப்பாவைக் கொன்று விட்டார்கள், என் அப்பாவின் சகோதரரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கு விசாரணையில் தலையிடுவார், எனவே எனக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் ஐபிஎல் போட்டியை பார்க்கவிடாத தந்தையை மகன் அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த அண்ணாமலை (58) என்பவர் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி தொடர்களை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்த இவரது மகன் நந்தக்குமார், நான் ஐபிஎல் போட்டி பார்க்க வேண்டும் அதனால் சேனலை மாற்றுமாறு கூறியுள்ளார்.
ஆனால், தந்தையோ சேனலை மாற்றாமல் தொலைக்காட்சி தொடர்களை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, வாக்குவாதம் கைகலப்பானதையடுத்து கோபம் கொண்ட நந்தக்குமார் கையில் கிடைத்த கட்டையை எடுத்து தந்தையை தாக்கியுள்ளார்.
இதில், தந்தை அண்ணாமலை ரத்தவெள்ளத்தில் சரிந்துள்ளார், தந்தை மயங்கி விழுந்ததும்,நந்தக்குமார் அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணாமலையை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், தப்பி ஓடிய மகன்நந்தக்குமார் தேடிவருகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்தோர் தங்கள் ஊர்களுக்கு படையெடுத்து வருவதை இன்று அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. பல நாட்கள், மாதங்களுக்கு பிறகும் இன்றையதினம் தங்கள் ஊர்களுக்கு திரும்புவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதன் காரணமாக நேற்றையதினம் கொழும்பு கோட்டை வியாபார பிரதேசமே மக்கள் வெள்ளத்தால் அலைமோதியதை காணக்கிடைத்தது. தூரப் பிரதேசங்களிலிருந்து கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்தோர் பேரூந்து நிலையம் மற்றும் புகையிரத நிலையத்தில் தங்கள் பயணத்தை தொடர்வதற்காக பல மணிநேரம் காத்திருந்தனர்.
அதனைப்போன்று, பண்டிகை காலமாகையால் கோட்டை பிரதேசமெங்கும் வியாபாரம் களைகட்டியிருந்தது. தமிழ் சிங்கள புத்தாண்டாகிலும் முஸ்லிம் மக்களும் மும்முரமாக தங்கள் கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தனர்.
வியாபார நிலையமெங்கும் கழிவுடன் கூடிய மலிவு விற்பனையும் இடம்பெற்றது. ஏனைய நாட்களில் அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய பொருட்கள் பண்டிகை காலங்களில் மலிவுடன் கிடைப்பதனால் உற்சாகமாக மக்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் வீதியெங்கும் சனநெரிசல் ஏற்பட்டதால் வீதி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பகல் 12 மணிக்கு பிறகு கோட்டை புகையிரத நிலையமும் தனியார் மற்றும் அரச பேரூந்து நிலையமும் மக்கள் வெள்ளமாக திரண்டு இருந்தனர்.
எது எவ்வாறாயினும் விடுமுறையை கழிக்கவென பலர் கொழும்பிலிருந்து தூர பிரதேசம் நோக்கி பயணிப்பதால் எதிர்வரும் சில தினங்களுக்கு கொழும்பு மாநகரம் மிகவும் அமைதியாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதாக பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான 31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், என்னைப்போலவே பலரும் தடுப்பில் பல இன்னல்களை சந்தித்து வேதனைகளுடன் இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.
அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பல தாய்மார் தங்கள் பிள்ளைகள் காணாமல் போய்விட்டதாக கூறுகின்றார்கள். ஆனால் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி உள்ளார்கள். இதனால் எனது உயிருக்கு ஆபத்து வந்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் நான் எனது அம்மா அப்பாவை இறுதி யுத்தத்தில் 2009ம் ஆண்டு இழந்தேன். இரண்டு அண்ணாவும் அக்காவும் தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து மாவீரர்களாகிவிட்டனர்.
அதன் பின்னர் என்னையும் 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 26 ஆம் திகதி தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றனர். தடுப்பு முகாம் காவலில் என்னை கடும் சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்.
என்னை சின்னாபின்னமாக்கி வேதனைப்படுத்தினார்கள். எனது கால் பெருவிரல் நகத்தை பிடுங்கினார்கள். பல வேதனைகளையும் இழப்புக்களையும் சந்தித்தேன். பின்னர் 2017.12.26 அன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டேன். தற்போது 85 வயது அம்மம்மாவுடன் வவுனியாவில் வசித்து வருகின்றேன்.
இந்நிலையில் எனக்கு முல்லைத்தீவு வற்றாப்பளையில் 4 ஏக்கர் காணி உள்ளது. அதில் 2 ஏக்கர் தென்னந்தோப்பு. அதனையும் தற்போது இராணுவம் தன்வசப்படுத்தி வைத்து என்னிடம் தர மறுக்கின்றனர்.
உதவி அரசாங்க அதிபர் ஊடாக கடிதங்கள் கொடுத்தும் தற்போது அதனை தரமுடியாது என சொல்கின்றனர். நான் எனது வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். அதற்கு எனது காணியை பெற்றுத்தருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தால் நல்லது.
எனக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாக வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு உதவிகள் கிடைத்தால் எனது வாழ்வை கொண்டு செல்லவும் வசதியாக இருக்கும் எனவும் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தமிழ் பிரதேசங்களில் தென்னிலங்கை மக்களை குடியேற்றம் செய்வது நல்லாட்சி அரசின் இரட்டைவேடமே என வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது மக்கள் சொந்த இடங்களிலே மீள்குடியமர முடியாத நிலை உள்ளபோது பெருங்காடுகள் அழிக்கப்பட்டு அங்கு தென்பகுதி மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா தாயகம் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மகாவலி திட்டம் என்ற போர்வையில் வவுனியா வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றும் வேலைத்திட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இதனால் எமது மக்கள் தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2009இற்குப் பின்னர் பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மக்கள் அங்கு குடியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் பல காடுகள் அழிக்கப்பட்டு அதனைச் சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் ஆயத்தங்கள் நடைபெறுவதாக எம்மால் அறிய முடிகிறது. மகாவலி போன்ற திட்டங்கள் எமக்கு மிகவும் அவசியமானதாகவே உள்ளது.
ஆனால் இவற்றோடு சிங்கள குடியேற்றங்களும் வருவதே பாரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் மகாவலி திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களில் ஒருவர் கூட வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
நாங்கள் வேலி அடைப்பதற்கு ஒரு தடியை கூட வெட்ட முடியாத நிலை இருக்கும் போது மனிதரே செல்ல முடியாத பெரும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அரசாங்கம் அழித்துள்ளது, அத்துடன் அங்கு இருந்த மரங்கள் எல்லாம் மிகவும் விலைமதிப்புடையவை.
கோடிக்கணக்கான பெறுமதியுடைய அந்த மரங்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை யாருக்கும் புரியாமலே உள்ளது, எமது மக்கள் சொந்த இடங்களிலே மீள்குடியமர முடியாத நிலை உள்ள போது பெருங்காடுகளை அழித்து தென்பகுதி மக்களை இங்கு குடியேற்றம் செய்வது நல்லாட்சி அரசின் இரட்டைவேடத்தையே குறித்து நிற்கிறது.
இங்கு காணிகள் இல்லாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த திட்டங்களிலே எமது மக்களை குடியேற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இவ்விடயங்கள் தொடர்பாக எமது மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியில் உள்ள பாதுகாப்பாற்ற கிணற்றிலிருந்து இன்று சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கனிஸ்டன் என்ற 8 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். சிறுவனின் அகால மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 2 எம்.எல்.ஏக்களை பொலிசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் இராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்கும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய வைர விழா கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார்.
சென்னை வரும் மோடிக்கு கறுப்புக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும், விமான நிலையம் முற்றுகையிடப்படும் என பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் தெரிவித்திருந்தனர். இதனால் சென்னை விமான நிலையத்திற்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பையும் மீறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விமான நிலையத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினார்கள்.
விமான நிலையத்தில் விளம்பர பனர் வைக்கும் கம்பத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையம் எதிரே போராட்டம் நடத்திய எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோரை பொலிசார் கைது செய்தனர். அமீர், பாரதிராஜா உள்ளிட்டோர் விமான நிலையத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, பிரதமர் மோடி வருகைக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கறுப்பு பலூன்களையும் பறக்க விட்டும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். டெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 9.36 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை வந்த பிரதமர் மோடி கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராம், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
மோடி வருகையை எதிர்த்து தீக்குளித்த ஈரோடு இளைஞர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்த நிலையில் பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது25). இன்னும் திருமணம் ஆகவில்லை. பொம்மை வியாபாரம் செய்து வந்தார். அம்மா -அப்பா கிடையாது பாட்டி ஆதரவில் வசித்து வருகிறார்.
இவர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் கானுடன் வெளியே வந்தார். தனது வீட்டு சுவரில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா? இல்லையா? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது – பா.தர்மலிங்கம். இவ்வாறு அந்த சுவரில் மஞ்சள் கலர் சாக்பீசால் எழுதி வைத்திருந்தார்.
பிறகு தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடலில் பற்றி எரிந்த தீயால் அவர் அலறினார். அவரது சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் ஓடிவந்தனர். மேலும் அக்கம்பக்கம் உள்ளவர்களும் ஓடிவந்தனர்.
தர்மலிங்கம் உடலில் எரிந்த தீயை அணைத்து உடனடியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண்டியில் தனது இளம் மனைவிக்கு விஷம் கொடுத்ததாக கூறப்படும் கணவர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹன்னஸ்கிரிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் குமார என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலவந்தமாக விஷம் கொடுத்த மனைவி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் மனைவியின் நிலைமை தீவிரமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
உடுதும்பர வைத்தியசாலையில் இதற்கு முன்னர் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற கணவர், மனைவியின் வாயை பலவந்தமாக திறந்து விஷயத்தை ஊற்றியுள்ளார் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விஷம் ஊற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் குறைவருமானம் பெறும், குடிசைகளிலும், தற்காலிக வீடுகளிலும் வாழும் மக்களுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், முதற்கட்டமாக 50 ஆயிரம் வீடுகளை அமைத்து, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை குடியேற்றவுள்ளதோடு, அடுத்த சில வருடங்களில் இந்த செயற்றிட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தத் திட்டத்தின் இரண்டாம், மூன்றாம் கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படும் பட்சத்தில், கொழும்பில் வீடில்லாப் பிரச்சினைக்கு முழுயான தீர்வு காணப்படும்.
குடிசைகளில் வாழும் மக்களை அந்த வீடுகளில் குடியமர்த்திய பின்னர் அந்த இடங்களை வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியும். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மூன்று கட்டங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் 10 வருடங்களில் கொழும்பில் உள்ள அனைத்து குடிசை வீடுகளும் அகற்றப்பட்டு விடும்.
முதற்கட்டமாக 2023ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை அமைத்து குறை வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியமர்த்த எதிர்பார்ப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கிரிக்கெட்டில் சர்வதேச வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும்.
உலகெங்கும் உள்ள தொழில்சார் கிரிக்கெட் வீரர்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து நாடுகளினதும் தேசிய வீரர்கள் சங்கங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து 1998 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.
தேசியம், மதம், அரசியல் அழுத்தம் அல்லது இனம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் உலகக் கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக இது உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு மற்றும் வீரர்களின் பொது நலன்கள் தொடர்பான விடயங்களில் இந்த சர்வதேச அமைப்பு அவதானம் செலுத்துகிறது.
அண்மையில் இடம்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை குழு ஒன்று நிறுவப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியான கென் டி அல்விஸ் குறிப்பிட்டார்.
இதில் உறுப்பு சங்கங்கள் தமது நாடு சார்பில் ஆலோசனை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரரின் பெயரை பரிந்துரை செய்திருப்பதோடு இலங்கையில் இருந்து சங்கக்காரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை வீரர்களின் பிரச்சினைகள் மற்றும் விடங்களை பற்றி மாத்திரம் சங்கக்கார பேசப்போவதில்லை, அவரால் அனைத்து சர்வதேச வீரர்களின் நலனையும் பாதுகாக்க முடியுமாகியுள்ளது என்று கென் டி அல்விஸ் குறிப்பிட்டார்.
விளையாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து வீரர்களின் வலுவான மற்றும் ஒற்றுமையான குரலாக இந்த குழு செயற்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வீரர்கள் ஆலோசனை குழு..
ரொஸ் டெய்லர் (நியூசிலாந்து), ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்), வில்லியம் போர்டபீல்ட் (அயர்லாந்து), சகீப் அல் ஹஸன் (பங்களாதேஷ்), ஆரோன் பின்ச் (அவுஸ்திரேலியா), ஜே.பி. டுமினி (தென்னாபிரிக்கா), கைல் கோட்சயர் (ஸ்கொட்லாந்து), குமார் சங்கக்கார (இலங்கை), விக்ரம் சொலங்கி (தலைவர் – இங்கிலாந்து), கிராம் ஸ்மித் (சுயாதீன குழு உறுப்பினர் – தென்னாபிரிக்கா), டொம் மப்பட் (தலைமை செயற்பாட்டு அதிகாரி
இலங்கையிலுள்ள ஆபத்தான நீர் வீழ்ச்சி தொடர்பில் மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நீரில் மூழ்கி உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சுற்றுலா சென்று 5 இளைஞர், யுவதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழப்பதற்கு பிரதான காரணமாக ஆழம் பற்றி தெரியாமல் குளிக்க செல்வதே என குறிப்பிடப்படுகின்றது. புத்தாண்டு காலங்களில் பல சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். புதிய இடங்களுக்கு சென்று நீர் நிலைகளின் இறங்குகின்றனர்.
இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். நீர்வீழ்ச்சி, ஏரி, குளங்கள் தொடர்பிலும் அதன் ஆபத்துக்கள் தொடர்பிலும் நன்கு அறிந்து கொண்டு செல்லுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பெலிஹுல் என்ற ஆபத்தான நீர்வீழ்ச்சி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அந்த நீர்வீழ்ச்சியை பார்க்கும் போது நீர் மட்டம் மிகவும் குறைவாகவே காட்சியளிக்கும்.
எனினும் நொடி பொழுதுகளில் அதன் நீர் மட்டம் திடீரென அதிகரித்து அங்கிருக்கும் அனைத்தையும் அடித்து செல்லும் என குறிப்பிடப்படுகின்றது.
எனவே இது தொடர்பில் அறிந்த பின்னர் அவ்விடத்திற்கு செல்லுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணிடம் இருந்து பெருந்தொகை கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (11.04.2018) மாலை 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
குறித்த பயணியிடம் இருந்து 1000 ரூபாய் பணத்தாள்கள் 45, மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 35 வயதான அலவ பிரசேத்தை சேர்ந்த பிரியந்த சமரசேகர எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் போலி பணம் அச்சிடும் மோசடியாளர்களிடம் இருந்து இந்த சந்தேகம் நபர் பணம் பெற்று செல்வதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக் விபரங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் திருட முடியும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் கண்டுப்பிடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதில் நாம் எல்லோரும் பார்க்கும்படி பதிவிடும் ஸ்டட்டஸ் மட்டுமின்றி, இன்பாக்சில் அனுப்படும் மெசேஜ்கள், ’ஒன்லி மீ’ ப்ரைவஸியில் வைத்திருக்கும் யாருக்கும் பகிராத புகைப்படங்களையும் 30 நிமிடத்தில் ஒரே க்ளிக்கில் ஒருவர் திருடிவிட முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்! இதில் க்ரேடிட் கார்டு தகவல் துவங்கி ஐபி அட்ரஸ், ஃபேஸ்புக் பேஜ் தகவல் என 70 தகவல்களை ஒற்றை க்ளிக்கில் தந்துவிடுகிறது பேஸ்புக். இந்த டேட்டாக்கள் எப்படி பதிவிறக்கம் செய்யப்படுகிறது?
பேஸ்புக் செட்டிங்கில் Download Facebook Copy என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் நமது டேட்டா மொத்தமும் காப்பி எடுக்க துவங்கிவிடும்.
அதன் பின் ஒரு நோட்டிபிகேஷன் வரும் நிலையில் மொபைலில் வை-பை மூலமாகவோ அல்லது கணினியில் அதிவேக இணைய சேவை மூலமாகவோ பதிவிறக்கம் செய்ய முடியும்.
பேஸ்புக் கணக்கை பாதுகாப்பது எப்படி?
Settings -> Security and Log in -> where you’re logged in பகுதியில் எந்த கணினியில் எல்லாம் நாம் லாக் இன் செய்துள்ளீர்கள் என்ற விடயம் இருக்கும். அதை செக் செய்து, உங்கள் கணினி, மொபைல் தவிர அனைத்தையும் லாக் அவுட் செய்து வையுங்கள்.
wo-factor authentication முறையில் உங்கள் மொபைல் நம்பரை இணைத்து வையுங்கள். அப்படிச் செய்தால் ஒவ்வொருமுறை லாக் இன் செய்யும் போதும் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். அதன்பின் லாக் இன் செய்து பாதுகாப்பாக இருக்கலாம்.
அல்ப்ஸ் மலைகளில் பனி சறுக்கு விளையாடப்போன ஜேர்மனியின் மிகப் பெரிய பணக்காரரில் ஒருவரான Karl-Erivan Haub மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்.
Tengelmann சூப்பர்மார்க்கெட் சங்கிலிக்கு வாரிசான கார்ல்-எரிவன் ஹாப், சனிக்கிழமையன்று மேட்டர்ஹோர்ன் அருகே ஆரம்பித்த தனது பனிச்சரிவு பயணத்தில் இருந்து திரும்பவில்லை. இன்று இதுகுறித்து டெங்கில்மன் செய்திக்குறிப்பாளர் கூறுகையில், இவரைத் தாங்கள் முழு வேகத்துடன் தேடி வருவதாகக் கூறினார்.
58 வயதான பில்லியனர் Karl-Erivan Haub கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நிறுவனப் பொறுப்பேற்றுள்ளார். கார்ல் ஒரு அனுபவமிக்க பனிச்சறுக்கு மற்றும் மலையேறுபவர் என்று கூறும் இவரது சகோதரர் கிறிஸ்டியன் ஹாப் அவர் இன்னமும் உயிரோடிருப்பார் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.
ஹாபைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் வணிகம் சீராக இயங்கத் தொடங்கும் என இவர் கூறியது குறிப்பிடத்தக்கது.