எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் : 6 மாதத்தில் 42 கிலோ குறைத்த பெண்!!

96 கிலோ உடல் எடையால் அவதிப்பட்டு வந்த 20 வயதான அர்பிதா அகர்வால் 6 மாதம் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் 42 கிலோ எடை குறைத்துள்ளார்.

எடை அதிகமாக இருப்பதால் என்னால் சரியாக நடந்துசெல்ல முடியாது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, பானி பூரி, ஐஸ்க்ரீமும் எனது டயட் பட்டியலில் இருந்தது.

காலை : ஓட்ஸ், மோர், ரொட்டியுடன் சேர்த்து வேர்க்கடலையால் தயாரிக்கப்பட்ட வெண்ணெய்.
மதியம்: சப்பாத்தி, மோர், பருப்பு மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட். இரவு: காய்கறி சூப், ப்ரவுன் அரிசி மற்றும் சாலட்,

இதில் என்றாவது ஒருநாள் எனக்கு பிடித்த பானிபூரி மற்றும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவேன். 15 நிமிடம் கார்டியோ பயிற்சி, 1 மணிநேரம் எடை பயிற்சி மற்றும் கிராஸ்பிட்(weight training and CrossFit) மேற்கொள்வேன். இடைப்பட்ட நேரத்தில், நடைபயிற்சி, நீச்சல், குதித்தல் ஆகிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன்.

துரித உணவுகளை சுத்தமாக நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக, நெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொண்டேன். குறிப்பாக உடற்பயிற்சிகளை காலையில் செய்வதையே வழக்கமாக கொள்ளுங்கள்.

900 சிறுமிகளை கர்ப்பமாக்கிய நாசிக்கள் : பதறவைக்கும் ஜேர்மானிய வரலாறு!!

1936 ஆம் ஆண்டு, 10 முதல் 18 வயதுள்ள பிள்ளைகள் நல்ல குணங்களையும் பரஸ்பர நம்பிக்கையையும் நட்பையும் கற்றுக்கொள்வதற்காக Hitler Youth மற்றும் League of German Girls என்னும் அமைப்புகளில் சேருவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

என்றாலும் இரு பாலினத்தவரும் இணைந்து பங்குபெற்ற நிகழ்வுகள் ஏராளமான கர்ப்பங்களுக்கும் அதன் விளைவாக மருத்துவர்களால் கட்டாயக் கருச்சிதைவுகளுக்கும் வழி வகுத்தன.

15 முதல் 18 வயது வரையுள்ள சிறுமிகளில் 900 பேர் கர்ப்பமுற்றார்கள், கருச்சிதைவுக்குள்ளாக்கப்பட்டார்கள். போதுமான ஆதாரங்கள் இல்லையென்றாலும் பல பதின்ம வயது சிறுமிகள் பாலியல் வன் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
இதனால் League of German Girls என்னும் அமைப்பு League of German Mattresses என்று கிண்டலாக அழைக்கப்பட்டது.

இந்த அமைப்புகளில் சேருவது கட்டாயம் என்பதால் சேர மறுத்தவர்கள் சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்கள் அல்லது சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டார்கள்.

முதல் உலகப்போரின் விளைவுகளால் பயங்கர வறுமையையும் வேலை வாய்ப்பின்மையையும் சந்தித்த ஜேர்மனிக்கு Hitler Youth மற்றும் League of German Girls என்னும் அமைப்புகளில் சேருவதால் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் இரண்டு அமைப்புகளுமே ஹிட்லரின் போர் வீரர்களாகத்தான் பயன்படுத்தப்பட்டன.

சிறுவர் சிறுமியரும் மற்ற போர் வீரர்களைப் போலவே குருட்டுத்தனமாக யோசிக்காமல் ஹிட்லருக்கு கீழ்ப்படிய பயிற்றுவிக்கப்பட்டனர்.

இவ்வளவு காலமாக வெளியே வராத இந்த உண்மைகள் தற்போது Nazi Documentation Centre என்னும் அமைப்பு நடத்திய ஒரு பொருட்காட்சியின் விளைவாக வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளன. அடுத்த மாதம் ஜேர்மனியின் பல நகரங்களில் இந்த பொருட்காட்சி தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.

துபாயில் ஒரே நாளில் கோடீஸ்வரரான மெக்கானிக் : நடந்தது என்ன?

கேரளாவைச் சேர்ந்த நபர் சார்ஜாவில் மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் நிலையில் லொட்டரி பரிசு மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

பிண்டோ பால் தோமன்னா (36) என்பவர் சார்ஜாவில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் ஓன்லைனில் லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கிய நிலையில் அதற்கு 10 லட்சம் டொலர்கள் ஜக்பாட் பரிசு விழுந்துள்ளது. தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை தனது நண்பர் பிரான்சிஸ் சபாஸ்டினுடன் பகிர்ந்து கொள்வதாக தோமன்னா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், துபாய் டுயிட்டி ஃப்ரீக்கு நன்றி. இந்த பரிசுத்தொகை எங்கள் இருவரின் வாழ்க்கையை மாற்றி விட்டது என கூறியுள்ளார்.

துபாய் டுயிட்டி ஃப்ரீ டிரா நிகழ்ச்சியானது 1999ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை 127 இந்தியர்கள் இதன் மூலம் ஜக்பாட் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவசாய தம்பதிகள் : காரணம் இதுவா?

இந்தியாவில் பணப்பிரச்சனையால் தவித்து வந்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதற்கான சரியான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

குஜராத் மாநிலத்தின் கபாசி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயேஷ் பட்டேல் (40). இவர் மனைவி ரீட்டா (35). நேற்று தனது உறவினருக்கு போன் செய்த ஜெயேஷ் தனது இரண்டு பிள்ளைகளையும் கவனித்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து சந்தேகமடைந்த உறவினர் உடனடியாக ஜெயேஷ் வீட்டுக்கு வந்த நிலையில் அவரும், ரீட்டாவும் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனடியாக, ஆம்புலன்ஸுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் இருவரையும் பரிசோதித்த போது அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தம்பதிகள் பூச்சி மருந்து விஷத்தை குடித்து இறந்துள்ளனர்.

இதனிடையில் ஜெயேஷும், ரீட்டாவும் பணப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களின் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் இல்லாத கவலையும் அவர்களை வாட்டி வந்தது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஜெயேஷ் மற்றும் ரீட்டா இடையே தகராறு இருந்ததாக கிராம மக்கள் கூறியுள்ளார்.

நிலத்துக்கு தண்ணீர் கிடைக்காத விரக்தியில் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஜெயேஷின் தந்தை மணி கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் அதன் முடிவில் தான் தம்பதியின் தற்கொலைக்கான சரியான காரணம் தெரிய வரும்.

ரஜினி ஒரு நாகம் : பாரதிராஜா ஆவேசம்!!

ரஜினிகாந்தை இதுவரை பெட்டிக்குள் பூ என்று தான் நினைத்தோம், ஆனால் இன்று தான் தெரிகிறது பூவுக்குள் பூநாகம் இருப்பது என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, போராட்டக்காரர் ஒருவர் பொலிசாரை தாக்கும் வீடியோவை வெளியிட்ட ரஜினிகாந்த், வன்முறை அதிகரித்துவிட்டது, இதனை அடக்க வேண்டும், இல்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து ஏற்படும் என பதிவிட்டிருந்தார்.

இதனைப்பார்த்த பலரும் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் பொலிசாருக்கு ஆதரவாக பேசுகிறார் என விமர்சனம் செய்தனர்.

இதுகுறித்து பாரதிராஜா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது, இதுவரை பெட்டிக்குள் பூ தான் இருந்தது என்று நினைத்தோம், இப்பத்தான் தெரிகிறது பூவுக்குள் பூநாகம் இருப்பது தெரிகிறது.

ஐபிஎல் மைதானத்திற்குள் கொடியுடன் போராடினார்களே அதை பாராட்டி இருக்க வேண்டாமா? ரஜினி வாய் திறக்கும் போது லிப் மூமெண்ட் மட்டும் தான் உன்னுது, டப்பிங் யாரோ பேசிக்கிட்டு இருக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.

மேலும், நீங்கள் இன்னும் முழு அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளவில்லை. தன்னை அரை அரசியல்வாதியாகத்தான் அவர் சொல்லிக்கொள்கிறார். அவர் முதலில் அரசியலில் இறங்கி நடக்கட்டும். அப்புறம் அவர் ஒழுங்கா நடக்கிறாரா? இல்லையா என்று நாங்கள் சொல்கிறோம் என கூறியுள்ளார்

கூலிப்படையை ஏவி கணவரை கொலைசெய்த மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் இணைந்து கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்தின் சனத் நகர் ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பொலிசார் சம்பவ பகுதிக்கு விரைந்தனர். குறித்த சடலம் ஏற்கெனவே மாயமானதாக புகார் அளிக்கப்பட்டவரின் சடலம் என பொலிசார் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் சடலத்தில் இருந்த காயங்கள் மற்றும் சடலம் கிடந்த பகுதி ஆகியவை பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த நபரை கொலை செய்து ரயில் தண்டவாளம் அருகே வீசியுள்ளதை கண்டுபிடித்தனர்.

குறித்த கொலையை அவரது மனைவியே தமது கள்ளக்காதலனுடன் கூலிப்படையை ஏவி மேற்கொண்டது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கொல்லப்பட்ட காஜாவின் மனைவி சலேஹா என்பவருக்கும் குரேஷி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை பல முறை காஜா கண்டித்தும் வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சலேஹா தமது கள்ளக்காதலர் குரேஷியுடன் இணைந்து கூலிப்படையை ஏவி காஜாவை கொலை செய்துள்ளார்.

இதற்காக கூலிப்படையினருக்கு 2 லட்சம் ரூபாய் பணம் குரேஷியின் நண்பர் வழியாக அளித்துள்ளதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

காஜாவின் சடலம் கிடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை பரிசோதித்த பொலிசார், குரேஷி மற்றும் அவருக்கு உதவிய கூலிப்படையை கைது செய்துள்ளனர்.

எதற்கும் தயாராக இருங்கள் : ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா..!!

சிரியாவில் ரசாயன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ தாக்குதலை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிரியா மீதான ரசாயன தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவும், ரஷ்யாவும் தொடர்ந்து பனிப்போர் நடத்தி வருகின்றனர். சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.

இவர்களை ஒடுக்கும் வகையில் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவும் தனது ஆதரவினை தொடர்ந்து சிரியாவுக்கு அளித்து வருகிறது. இதில் , கொடூரமான விடயம் என்னவென்றால் , டூமாவில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்கள் கொலைசெய்யப்படுவதுதான்.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் டூமா பகுதியில் சந்தேகிக்கும் விதமாக ரசாயன தாக்குதல் நடத்திய சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால், ரஷ்யாவிடமிருந்து ராணுவ ஆதரவை பெறும் சிரியா, ரசாயன தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

சிரிய நகரான டூமாவில் கடந்த சனிக்கிழமை விஷம் வாயு தாக்குதல் நடத்தப்பட்டதில், 500 நபர்கள் நச்சு இரசாயனங்களால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், எதற்கும் தயாராக இருங்கள், ஏவுகணைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிரியா மக்கள் மீது நீங்கள் ரசாயன தாக்குதல் நடத்தவில்லை என்றால், அங்கு மக்களை கொன்றுகுவித்து அதனை பார்த்து சந்தோஷப்படுபவர்கள் யார்?

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு மிக மோசமாக உள்ளது. கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலின் மூலம் அமெரிக்கா விழித்துக்கொண்டது, சிரியா மீது ரஷ்யா மேற்கொண்டுள்ளது கொடூரத்தாக்குதல்.

அமெரிக்காவிடமிருந்து ரஷ்யா பொருளாதார ரீதியான உதவியை எதிர்பார்க்கிறது. ரசாயன தாக்குதலுக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், ரசாயன தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா கூறுவது முற்றிலும் பொய்யானது, தேவையற்ற கட்டுக்கதைகளை அமெரிக்கா பரப்புகிறது என ரஷ்யா தூதுவர் கூறியுள்ளார்.

நடுவானிலிருந்து விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் : 257 பேர் பரிதாபமாக பலி!!

 

அல்ஜீரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற இராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் 257 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அல்ஜீரியாவின் தலைநகர் Algiers-லிருந்து 200-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், போலிசாரியோ முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டோர், விமானப் பணியாளர்கள் 10 பேர் என 250-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

விமானம் போபரிக் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் 30 கி.மீற்றர் தொலைவில் திறந்த வெளிப்பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 257 பேர் இறந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களை மீட்பு பணியினர் மீட்டு வருவதாகவும், காயமடைந்திருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விமானத்தில் மொத்தம் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் தெரிவிக்காத காரணத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் விமான விபத்தில் பொலிசாரியோ அமைப்பைச் சேர்ந்த 26 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மொராக்கோவுக்கு அருகே இருக்கும் மேற்கு சஹாரா பகுதியில் சுதந்திரம் வேண்டிய போராடும் குழுவைச் சேர்ந்தவர்கள் என அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அழகில்லாத குண்டு இளைஞரை மணந்த அழகான இளம் பெண் : அசரவைக்கும் காரணம்!!

தாய்லாந்தில் மிகவும் உடல் பருமனாக உள்ள நபருக்கும், ஒல்லியாகவும் அழகாகவும் இருக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்த நிலையில் கிண்டல்களை பொருட்படுத்தாமல் இந்த ஜோடி வாழ்ந்து வருகிறது.

கூடீ என்ற இளைஞரின் உடல் எடை 120 கிலோ ஆகும். இவரை சுற்றியிருப்பவர்கள் இவரை எப்போதும் கிண்டல் செய்வது வழக்கமாகும். இந்நிலையில் புவாடல் என்ற வெறும் 44 கிலோ எடை கொண்ட அழகான பெண்ணுக்கும், கூடீக்கும் இடையில் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

தம்பதிக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. கணவர் குறித்து புவாடல் கூறுகையில், அவர் அழகாக இல்லை மற்றும் குண்டானவர் என்பது எனக்கு தெரியும், ஆனால் அவர் அன்பான இதயம் கொண்டவராவார், அது தான் எனக்கு முக்கியம்.

என் மீது அவர் மிகுந்த பாசமாக உள்ளார், நாங்கள் எல்லா விடயங்களையும் ஒளிவு மறைவின்றி ஒருவருக்கொருவர் பேசி கொள்வோம். எங்கள் ஜோடியை பலர் கிண்டல் செய்யும் விதத்தில் பேசுகிறார்கள், அது பற்றி எங்களுக்கு கவலையில்லை என கூறியுள்ளார்.

இந்திய தொழிலதிபருக்கு 500 ஆண்டுகள் சிறை : துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

நிதி நிறுவனம் நடத்தி 1300 கோடி வரை மோசடி செய்த இந்திய தொழிலதிபருக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கோவா மாநிலத்தை சேர்ந்த சிட்னி லிமோஸ் மற்றும் ரியான் பெர்ணான்டஸ் ஆகியோர் துபாயில் நிதி நிறுவனம் நடத்தினர். தங்கள் நிறுவனத்தில் 25 ஆயிரம் டொலர்கள் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு பணம் தருவதாக விளம்பரப்படுத்தினார்கள்.

இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் சிட்னி லிமோஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். முதலீட்டாளர்களை ஏமாற்றிய அந்த நிறுவனம் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில் 2016-ம் ஆண்டு துபாய் பொருளாதார துறை அந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து லிமோஸ் மற்றும் ரியான் பெர்ணான்டஸ் கைது செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், லிமோஸுக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் தீப்பளித்துள்ளது.

ஐபிஎல் போராட்டத்தில் பொலிசார் அடித்தனர் : நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது பொலிசார் என்னை கடுமையாக தாக்கினர் என சின்னத்திரை நடிகை நிலானி கூறியுள்ளார்.

நிலானி கூறியதாவது, அண்ணாசாலை காவல் நிலையம் அருகே வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் நாங்கள் நின்று அறவழியில் போராடிக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த பொலிஸ் ஒருவர் எனது தோள்பட்டையில் கைவத்தார். அதை அருகில் இருந்தவர்கள் தட்டிகேட்டபோது, திடீரென பொலிசார் தடியடி நடத்தியதில் எல்லோரும் அங்கும் இங்கும் சிதறி ஒடினர்.

பொலிசார் தாக்கியதில் என் மீது சிலர் விழுந்தனர். இதனால் நானும் கீழே விழுந்தேன். அதில் எனக்கு கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. தமிழன் என்ற உணர்வு அடிப்படையில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன்.

ஆனால், என்னிடம் பொலிசார் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது அது வன்முறை என்றே தெரிகிறது. நான் ஏற்கெனவே, ஐல்லிக்கட்டு, நீட் ஆகிய போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன் என கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் கர்நாடக மக்கள் : நடிகர் சிம்பு சொன்னது நடந்துவிட்டது!!

காவிரி மேலாண்மை அமைக்க போராட்டம் நடத்தும் அனைத்து கட்சிகளும், அரசியல் மட்டும்தான் செய்கிறார்கள், எனவே போராட்டம் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என நடிகர் சிம்பு பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, நாம் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் அந்த பேட்டியின் போது ஏப்ரல் 11ம் திகதி அன்று கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம் என்று கூறினார்.

அதன்படி, #Unitedforhumanity எனும் ஹேஷ்டேக்கில், கர்நாடகத்தினர் தங்கள் மாநித்தில் வசிக்கும் தமிழ் நண்பர்களுக்கு தண்ணீர் கொடுக்கின்றனர். அந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி காணாமல்போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப் தொட்டப்பிள்ளி(வயது 42), இவரது மனைவி சவுமியா(வயது 38), மகன் சித்தாந்த்(வயது 12), மகள் சாச்சி(வயது 9). கலிபோர்னியாவில் உள்ள யூனியன் வங்கியில் பணியாற்றி வரும் சந்தீப், Valencia- வில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை குடும்பத்துடன் காரில் Portland-லிருந்து San Jose-க்கு சென்று கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளனர். உறவினர்களுக்கு சந்தேகம் வர சந்தீப் குறித்து பொலிசிடம் புகார் அளித்தனர்.

கருஞ்சிவப்பு நிறம் கொண்ட ‘Honda Pilot’ காரில் அவர்கள் பயணித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொலிசார் விசாரணை நடத்தியதில், போர்ட்லான்ட் அருகேயுள்ள யுரேகா நகரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேசிய பூங்கா அருகே அவர்களது கார் காணப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்தன.

இந்நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை Eel ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதை அப்பகுதி பொலிசார் உறுதிசெய்தனர்.

மேலும் ஆற்றின் வெள்ளத்தாலும், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினாலும் காரை உடனடியாக மீட்க முடியாமல் போனதாகவும் பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கிடையே சந்தீப் குடும்பம் சென்றதாக கூறப்படும் காரும், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. காரின் தகவல்களும் ஒரே மாதிரி இருப்பதால் அவர்கள் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

நாக்கினால் பற்களை தொடுபவரா நீங்கள் : அப்போ இதை கண்டிப்பா படியுங்கள்!!

அனைவருக்கும் 32 பற்கள் இருந்தாலும், பல் வரிசை ஒரே மாதிரி இருப்பதில்லை. இதற்கு சில உடல்நிலை பிரச்சனைகள் மற்றும் நமது பழக்க வழக்கங்களும் தான் காரணம். முக்கியமாக கை சூப்புவது, நாவினை கொண்டு பற்களை துழாவுவது, தாடை பிரச்சனை என சிலவற்றை கூறலாம். இதில், நமது பழக்க வழக்கத்தில் அடங்கியிருப்பவை கை சூப்புதலும், நாக்கினை கொண்டு பற்களை துழாவுவதும். இதனால், பற்களின் வரிசை எப்படி பாதிக்கப்படுகிறது என இந்த தொகுப்பில் காணலாம்.

நீங்கள் நாக்கினை கொண்டு பற்களை துழாவுவதால், மேல் மற்றும் கீழ் முன் வரிசை பற்களின் அமைப்பு மாறிவிடும். கடவாய் பற்களில் ஏதேனும் சிக்கிக்கொண்டால், நாக்கினை கொண்டு சுழட்டி துழாவுது போல, அடிக்கடி சிலர் முன்வரிசை பற்களையும் நாவினை கொண்டு சுழட்டி துழாவிக் கொண்டே இருப்பார்கள். இது பற்களின் அழகான வரிசையை கெடுக்கும்.

சிலருக்கு சிறு வயதில் பற்களின் வரிசை நன்றாக தான் இருந்திருக்கும். ஆனால், வளர, வளர பற்கள் முன்னும், பின்னுமாக அல்லது முன் வரிசை பற்கள் மட்டும் தூக்கிக் கொண்டு இருக்கும். நாம் மேல கூறியது போல, இதற்க முக்கிய காரணமாக இருப்பது நாவினை கொண்டு பற்களை துழாவுதல் மற்றும் கை சூப்பும் பழக்கம் கொண்டிருப்பது தான்.

பற்களின் வரிசை முன்னும் பின்னுமாக சீரில்லாமல் இருந்தால், பற்கள் தூக்கி கொண்டு இருந்தால் க்ளிப் போடவேண்டும் என பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.க்ளிப் மாட்டிக் கொள்வதை கண்டு நாம் கேலி செய்திருப்போம். ஆனால், அது அவ்வளவு சுலபமானது அல்ல. பணமும் கொஞ்சம் அதிகம். அதே போல, நிறைய அசௌகரியங்களை நீங்கள் எதிர்க் கொள்ள வேண்டி இருக்கும்.க்ளிப் மாட்ட வேண்டிய சூழல் வந்தால், கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

க்ளிப் மாட்டிய பிறகு சாக்லேட், சூயிங்கம், அல்வா போன்ற மிருதுவான உணவுகள் மற்றும் பற்களில் எளிதாக சிக்கிக் கொள்ளும் உணவுகளை சாப்பிட கூடாது. ஏனெனில், இவை எளிதாக க்ளிப்புகளில் சிக்கிக் கொள்ளும். அதே போல, க்ளிப்பின் இறுக்கம் குறையாமல் இருக்க கடினமாக உணவுகள் தவிர்க்க வேண்டும். முறுக்கில் இருந்து சிக்கன் மட்டன் வரை இதில் எல்லா கடின உணவுகளும் அடங்கும்.

உணவுகள் மட்டுமின்றி வேறு விஷயங்களிலும் நாம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பிரஷ். ஆம்! நீங்கள் பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் மென்மையானதாக இறுகக் வேண்டும்.

நீங்கள் உணவருந்திய பிறகு கட்டாயம் வாய் கழுவி, கொப்பளிக்க வேண்டும். வாயை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உணவு அருந்திய பிறகு, சாப்பிட்ட உணவு க்ளிப்பில் சிக்கியுள்ளதா என சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

க்ளிப் மாட்டிய பிறகு சாக்லேட், சூயிங்கம், அல்வா போன்ற மிருதுவான உணவுகள் மற்றும் பற்களில் எளிதாக சிக்கிக் கொள்ளும் உணவுகளை சாப்பிட கூடாது. ஏனெனில், இவை எளிதாக க்ளிப்புகளில் சிக்கிக் கொள்ளும்.

அதே போல, க்ளிப்பின் இறுக்கம் குறையாமல் இருக்க கடினமாக உணவுகள் தவிர்க்க வேண்டும். முறுக்கில் இருந்து சிக்கன் மட்டன் வரை இதில் எல்லா கடின உணவுகளும் அடங்கும்.

உணவுகள் மட்டுமின்றி வேறு விஷயங்களிலும் நாம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பிரஷ். ஆம்! நீங்கள் பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் மென்மையானதாக இறுகக் வேண்டும்.

நீங்கள் உணவருந்திய பிறகு கட்டாயம் வாய் கழுவி, கொப்பளிக்க வேண்டும். வாயை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உணவு அருந்திய பிறகு, சாப்பிட்ட உணவு க்ளிப்பில் சிக்கியுள்ளதா என சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டுக்கே பேராபத்து : எச்சரிக்கை விடுத்த நடிகர் ரஜினிகாந்த்!!

வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும், ஒரு வீடியோ ஒன்றையும் அதில் இணைத்துள்ளார். அதில், சீருடையில் இருக்கும் காவலர், ஒரு நபரால் தாக்கப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது.

மைதானத்தில் செருப்பு வீசியது அவமானம் அல்ல : சீமான் காட்டம்!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசியது அவமானம் அல்ல என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆனால் அதையும் மீறி போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

போட்டி நடைபெற்ற சிதம்பரம் மைதானத்தில் நாம் தமிழர் கட்சியினர் செருப்புகளை வீசியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது சம்மந்தமாக சிலர் கைது செய்யப்பட்டனர். அதே போல சாலையில் போராடிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது மைதானத்தில் செருப்புகளை வீசியது அவமானம் என சிலர் கூறுகிறார்களே என கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், இதில் என்ன அவமானம் இருக்கிறது? நாங்கள் அவ்வளவு கூறியும் அதை மீறி இந்த போட்டியை நடத்தியதை விட இது என்ன அவ்வளவு பெரிய அவமானமா என கூறியுள்ளார்.