முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று கோயிலின் பாம்பு பக்தர்களுக்கு காட்சி அளித்த சம்பவம் . அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இன்று பங்குனி திங்களின் மூன்றாம் திங்கள் ஆன இன்று அம்மன் ஆலயத்தில் அதிகளவான பக்தர்கள் வந்திருந்த நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .இந்த காட்சியினை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டமையும் காணமுடிந்தது .
ஒவ்வொரு வருடமும் இவ்வாறான அற்புதங்கள் அம்மன் ஆலயத்தில் நிகழ்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கோவில் குருக்களை கட்டிப் போட்டு அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் குருக்களாக இருப்பவர் பிரபு. இவருக்கு பிரியா(24) என்ற மனைவி உள்ளார்.
இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கழிந்தும் குழந்தைகள் இல்லை. சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர் நேற்று காலை 6.15 மணியளவில் வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறையில் மோசமான காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரின் கட்டை அவிழ்த்துவிட்டுவிட்டு, அவரின் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பிரியா வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது பிரியாவின் கழுத்தில் இருந்த தங்க நகை காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து விசாரித்த போது, பிரியா நகைக்காகவே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளனர். குருக்கள் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பிரியாவை தாக்கி அவரிடமிருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர்.
உடனடியாக குருக்கள் அவர்களை தடுக்க முயற்சித்த போது, கொள்ளையர்கள் அவரை தாக்கி வெளியில் கட்டிப் போட்டுள்ளனர் என்பதை அறிந்துள்ளனர்.
மேற்குவங்கத்தில் உயிரிழந்த தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதை குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்த மகனின் செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் கோபால் சந்திர மஜும்தார்.
இவரது மனைவி பினா மஜும்தார், இருவரும் இந்திய உணவுக் கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள், வயதானதால் நீரிழிவு உட்பட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மருத்துவமனையில் பினா உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் சுபப்பிரதா தாயின் உடலை பாதுக்காக்க திட்டமிட்டுள்ளார்.
அதன் படி, சடலத்தை வீட்டுக்கு கொண்டு வராமல், குளிர்சாதன பெட்டியை மட்டும் எடுத்து வந்துள்ளனர்.
வீட்டின் கீழ்தளம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது, பின்னர் தனது தாயின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்துள்ளார். இவருடன் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நெருக்கம் இல்லாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் உறவினர்களுக்கு சந்தேகம் எழ, பொலிசுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பொலிசார் நடத்திய சோதனையில், பினாவின் உடல் துண்டு துண்டாக்கப்பட்டு குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அவர்களது மகன் சுபப்பிரதாவை கைது செய்து அவரது தந்தையிடமும் விசாரணை நடத்தினர். இது குறித்து அவர் கூறும்போது,
தாய் மீண்டும் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க விழாவில் நடனமாட நடிகை தமன்னாவுக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று மும்பையில் ஆரம்பமாகியுள்ளது .
இந்தாண்டு தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் நடனமாடினார்.
தமன்னா ஐபிஎல் துவக்க விழாவில் 10 நிமிடத்துக்கு நடனமாட சுமார் 50 லட்சம் வரை அவருக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
இரண்டு மாதம் போட்டி தொடரில் விளையாடவுள்ள சில வீரர்களுக்கு கூட குறைந்தபட்ச சம்பளமாக 20 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் வெறும் 10 நிமிடத்தில் 50 லட்சத்தை தமன்னா சம்பாதித்துள்ளார்.
கொமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
கடந்த புதன்கிழமை முதல் அவுஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கொமன்வெல்த் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இதில் வியாழன் அன்று நடைபெற்ற 48 கிலோ மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு இந்தியா சார்பில் முதல் தங்கம் வென்றார்.
போட்டியின் இரண்டாவது நாளான நேற்று 53 கிலோ எடைப் பளுதூக்குதல் போட்டி பிரிவில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதலில் பங்கேற்ற குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று 77 கிலோ ஆண்கள் பளுத்தூக்கும் பிரிவில் 317 கிலோ பளுவை இரண்டு பிரிவுகளாக தூக்கி இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார்.
இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் இரண்டாவது இடத்தையும் அமெரிக்க வீரர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தனது மகன் தங்கப் பதக்கம் வென்றது குறித்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சதீஷ்குமார் ஏற்கெனவே பி.ஏ. படித்து தென்னக ரயில்வேயில் பணியில் சேர்ந்த பின்னர் இவர் 2010, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.
மேலும் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களைத் வசப்படுத்தியுள்ளார்.
கொமன்வெல்த் போட்டிகளில் 2014ம் ஆண்டு பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற பின்னர் கொமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டிகளில் இலங்கை அணிக்காக 2ஆவது பதக்கத்தை தினூஷா கோமஸ் வென்று கொடுத்தார்.
பெண்களுக்கான 48 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட தினூஷா கோமஸ், ஸ்னெச் முறையில் 70 கிலோகிராம் மற்றும் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 85 கிலோகிராம் உள்ளடங்கலாக 155 கிலோகிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அத்துடன், பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான பளுதூக்கலில் இலங்கைக்காக முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்த வீராங்கனையாகவும் இவர் மாறியுள்ளார்.
இந்நிலையில், போட்டியின் பிறகு தினூஷா கோமஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எனது முதலாவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்று நாட்டுக்காக பதக்கமொன்றை பெற்றுக்கொடுக்க முடிந்தமை பெருமையாக உள்ளது.
எனினும், நான் பயிற்சிகளின் போது வெளிப்படுத்திய திறமைகளை இதன்போது பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
அவ்வாறு செய்திருந்தால் வெள்ளிப் பதக்கமொன்றைப் பெற்றிருப்பேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய மற்றும் ஓஷியானா பளுதூக்கல் போட்டித் தொடரில்
பெண்களுக்கான 48 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கேற்ற தினூஷா கோமஸ், ஸ்னெச் முறையில் 63 கிலோகிராம் மற்றும் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 86 கிலோகிராம் உள்ளடங்கலாக 149 கிலோகிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியில் ஹங்சனி புதிய தேசிய சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இன்றைய போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சாய்கோம் மீராபாய் சானு, 196 கிலோகிராம் எடையைத் தூக்கி,
போட்டியில் சாதனையை முறியடித்ததுடன் இந்தியாவுக்காக முதலாவது தங்கப் பதக்கத்தையும் வென்று கொடுத்தார்.
இந்தியாவின் மனிப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயதான சாய்கோம், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற உலக பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனையும் படைத்திருந்தார்.
எனினும், கடந்த 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மொரிஸியஸ் நாட்டின் ரொய்லியா ரனய்வொசோவா, 170 கிலோகிராம் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முன்னதாக, காலை நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர் சதுரங்க லக்மால் ஜயசூரிய வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்திருந்தார்.
இதன்படி, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை அணி,
பளுதூக்கல் போட்டிப் பிரிவில் 3ஆவது இடத்தையும், ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி சைக்கோ சங்கர் தொடர்பில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவையே அதிர வைத்த சைக்கோ சங்கர் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இதனையடுத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின.
குறித்த நபர் இதுவரை 40 சிறுமிகளை ஏமாற்றி கொடூரமாக கொலை செய்துள்ளான். அதில் 32 பேரின் சடலங்களுடன் பாலியல் உறவும் வைத்துக் கொண்டுள்ளான்.
இதில் கொடூரம் என்னவெனில் கொலை செய்யப்பட்ட அனைவரும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சங்கருக்கு 10 வயது இருக்கும்போது இரண்டு இளைஞர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளான். சொக்கலேட் தருவதாக கூறி சங்கரை தனியாக அழைத்து சென்ற இரு இளைஞர்களும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இச்சம்பவத்தால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சங்கர், அதன் பின்னரே சிறுமிகளை திட்டமிட்டு கொலை செய்ய துவங்கியுள்ளான்.
தனியாக சிக்கும் சிறுமிகளை நோட்டமிட்டு அவர்களுக்கு இனிப்பு வகைகளை வாங்கி தந்து தனது நோக்கத்தை நிறைவேற்றி வந்துள்ளான்.
எதற்கும் கட்டுப்படாத சிறுமிகளை இரவோடு இரவாக கடத்திச் சென்றும் கொன்றுள்ளான். சங்கர் தொடர்பான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் ஆயுள் தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி கழுத்து அறுக்கப்பட்டு சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 73 வயதில் முதியவர் ஒருவர் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் மாநிலம், சாம்பாய் மாவட்டத்தில் உள்ள நியூ கிரூயாய்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்ரிங்தாரா. 73 வயதாகும் இவர், கிறிஸ்துவ தேவாலயத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அவரது கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சேர்ந்துள்ளார் அவர். அடுத்த கல்வியண்டு முதல் பள்ளிக்கு சென்று படிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லால்ரிங்தாரா, இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தனது தந்தையை இழந்தார். அதனைத் தொடர்ந்து, அவரது தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், உறவினர் ஒருவரின் வளர்ப்பில் லால்ரிங்தாரா வளர்ந்துள்ளார்.
ஆனால், அவரால் தனது படிப்பைத் தொடர முடியவில்லை. இந்நிலையில், தனக்கு கல்வி மீது இருந்த ஆர்வத்தால் தற்போது பள்ளியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மிசோ மொழியை பேசவும், எழுதவும் செய்யும் லால்ரிங்தாரா, ஆங்கிலம் படிக்க சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக, பள்ளி சென்று ஆங்கிலம் கற்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
60 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கு சென்று படிக்க உள்ள லால்ரிங்தாராவின் கல்வி ஆர்வம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
இந்தியாவில் நபருடன் பெண் தவறான உறவு வைத்திருந்த நிலையில் அந்த நபராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர் அன்னபிபி ஷேக் (27). இளம் பெண்ணான இவருக்கு திருமணமாகி விட்டது.
இந்நிலையில் தான் வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரியும் கிஸ்மட் (20) என்பவருடன் அன்னபிபிக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஆனால் ஒருகட்டத்தில் இந்த உறவை முறித்து கொண்டு திருந்தி வாழ முடிவு செய்த அன்னபிபி, கிஸ்மட்டிடமிருந்து விலகியுள்ளார். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அன்னபிபியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி இரு தினங்களுக்கு முன்னர் இரவு 10.30 மணிக்கு பணி முடிந்து அன்னபிபி சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தனது நண்பருடன் அவரை வழிமறித்த கிஸ்மட், அன்னபிபியை வயிறு, மார்புப் பகுதியில் 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் கிஸ்மட் தனது நண்பருடன் தப்பி ஓட அங்கிருந்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கிஸ்மட்டை கைது செய்தனர்.
அன்னபிபியின் சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கிஸ்மட்டின் நண்பரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
திருமணமான பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துவிட்டு மகன் தப்பியோடிய நிலையில் ஊர் மக்கள் தவறு செய்தவரின் தந்தையை கட்டி வைத்து அடித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் சயிம்பலிம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ ராவ் (65). இவர் மகன் நாகேந்திரா (26).
நாகேந்திரா, கிராமத்தில் உள்ள திருமணமான 21 வயது பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து விட்டு தப்பியோடியுள்ளார்.
இது குறித்து வெளியில் தெரிந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் நாகேந்திராவை தேடியுள்ளார்.
ஆனால் அவர் கிடைக்காமல் போகவே சஞ்சீவ ராவை பிடித்து மகன் குறித்து விசாரித்துள்ளனர். மகன் எங்குள்ளான் என தனக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த பெண்ணின் மாமா ராஜூ (45) ஊர் மக்களுடன் சஞ்சீவ ராவை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். பின்னர் விடுவிக்கப்பட்ட சஞ்சீவ ராவ் அவமானம் தாங்காமல் வீட்டுக்கு சென்று விஷம் குடித்துள்ளார்.
உடனடியாக உறவினர்களால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராஜூ மற்றும் நாகேந்திரா மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் கணவனை கொன்று காட்டுக்குள் வீசிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராஜூ – கவிதா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உணவகம் ஒன்றை நடத்தி வந்த ராஜூ, தனது மனைவி மற்றும் குழந்தைகளை அன்போடு பார்த்துக்கொண்டார்.
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், சுமன் என்ற நபர் குறுக்கிட்டுள்ளார்.
கவிதாவும்-சுமனும் அடிக்கடி பேசிக்கொள்வதை பார்த்து ராஜூ கண்டித்துள்ளார். இருப்பினும் இதனை கண்டுகொள்ளாத கவிதா, சுமனுடன் நெருங்கி பழகியுள்ளார்.
ஆனால், இவர்களின் உறவுக்கு ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முடிவு செய்தார் கவிதா.
கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல குடித்துவிட்டு வந்துள்ளார் ராஜூ. மறைந்திருந்த சுமனும், உறவினரும் வீட்டுக்குள் புகுந்து அவரை வளைத்துப் பிடித்தனர், பின்னர் அவரது கை கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பிறகு சுமனும் அவர் உறவினரும் ராஜூவின் உடலை அவர் பைக்கிலேயே வைத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றனர். குர்ரம்குடா கிராமத்துக்கு அருகே, காட்டுக்குள் பைக்குடன் அவர் உடலை போட்டுவிட்டு திரும்பிவிட்டனர்.
மறுநாள், என் கணவரை காணவில்லை என கண்ணீருடன் கவிதா பொலிசில் புகார் அளித்துள்ளார். பொலிசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், மறுநாள் ராஜூவின் உடல் கைப்பற்றப்பட்டது. கண்ணீர் விட்டு கதறி இறுதி சடங்கு செய்தார்கள் உறவினர்கள்.
பொலிசாருக்கு கவிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், உண்மையை ஒப்புக்கொண்டார் கவிதா. பிறகு அவரது கள்ளக்காதலன் சுமன், உறவினர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை எதிர்க்கும் வகையில் நடிகை ஸ்ரீ ரெட்டி நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டியிருந்தார்.
இதையடுத்து பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு ஸ்ரீலீக்சில் சிக்கி உள்ள நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
இதே போல மேலும் சிலர் மீதும் ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டினார்.
ஸ்ரீ ரெட்டி வேண்டுமென்றே இப்படி செய்வதாக கூறி தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.
இந்நிலையில் தெலுங்கு திரைப்பட துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாயம் வேண்டும் என கோரியும் இன்று ஐதராபாத் நடிகர் சங்க அலுவலகம் எதிரே ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஸ்ரீரெட்டியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள்.
ஆசியாவின் மிக உயரமான கோபுரமாக நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரத்தை திறப்பதற்கு மேலும் நான்கு மாதங்கள் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
கோபுரத்தின் ஆய்வு நடவடிக்கைகள் இதுவரையிலும் நிறைவு செய்யப்படாமையினால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் சமித மானவடு தெரிவித்துள்ளார்.
தாமரை கோபுரத்திற்கு பொருத்த வேண்டிய சில உபகரணங்கள் வழங்குவதற்கு நிறுவனம் தாமதப்படுத்தியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான அனைத்து விடயங்களும் உறுதி செய்யப்பட்ட பின்னர் தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட பின்னர், ஆசியாவின் மிக உயர்ந்த கட்டடத்தை கொண்டமாக நாடாக இலங்கை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் எனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர்.
இது தொடர்பில் கணேஸ் வெங்கட்ராமன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றையும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பு எடுத்த புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
இதேவேளை அவர் தனது பதிவில் நிகழ்ச்சியொன்றிற்காக இலங்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கணேஸ் வெங்கட்ராமன் பல படங்களில் நடித்திருப்பதுடன், அவரது மனைவியான நிஷா தமிழ் சின்னத்திரைகளில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டனில் ஒரே சூலில் பிறந்த 3 குழந்தைகளை வளர்க்க முடியாத நிலையில் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
ஹட்டன் திம்புல பொலிஸ் பிரிவின் கிரிஸ்டஸ்பாம் தோட்டத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.
49 வயதுடைய வீரன் கிருஷ்ணகுமாரன் அவரின் மனைவியான 39 வயதுடைய வேலு சரோஜாதேவி ஆகியோருக்கு, கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி டிக்கோயா பிரதான வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை சத்திரசிகிச்சை மூலம் பிரசவித்துள்ளார்.
எடை குறைவாக பிறந்த இந்த குழந்தைகளை கம்பளை, பேராதெனிய மற்றும் அவிசாவளை பிரதான வைத்தியசாலைகளுக்கு மாற்றி அனுப்ப வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இயந்திரங்களின் உதவியுடன் குறித்த குழந்தைகள் வளர்ந்துள்ளது. பின்னர் வைத்தியர்கள் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த தம்பதியினருக்கு ஏற்கனவே 12 வயது மற்றும் 11 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் ஹட்டன் மற்றும் கொட்டகல பகுதியிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர்.
குழந்தைகளின் தந்தை கிருஷ்ணகுமார் கூலி வேலை செய்து வருகின்ற நிலையில், அவரது மனைவி வேலு சரோஜா தேவி கொழுந்து பறிக்கும் தொழில் செய்து வருகின்றார்.
இந்த மூன்று குழந்தைகளுக்கும் கொடுப்பதற்கு போதுமான அளவு தாய் பால் இல்லாமையினால் வைத்தியர்கள் பால் மா வகைகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனினும் இவர்களுக்கு கொள்வனவு செய்ய தேவையான பணம் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் பாரிய பொருளாதார பிரச்சினைகளுடனும் மிகவும் சிரமத்தோடு தங்கள் குடும்பத்தினர் வாழ்வதாக கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.