மூதாட்டி கொண்டு சென்ற பார்சலினால் பதற்றமடைந்த விமான நிலையம்!!

மும்பையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற மூதாட்டி ஒருவர் தன்னுடன் பார்சல் ஒன்றை கொண்டு சென்றுள்ளார். அந்த பார்சலில் BOMB TO BRISBANE என எழுதப்பட்டிருந்தது. இதனால், விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

வெங்கட லட்சுமி என்ற மூதாட்டி ஒருவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகளை அவளது பிறந்தநாளை முன்னிட்டு காணச் சென்றுள்ளார். இவருக்கு ஞாபகமறதி உள்ளதால், தனது மகளுக்காக கொண்டு செல்லப்பட்ட பார்சல் மீது BOMB TO BRISBANE என எழுதி வைத்திருந்தார்.

BOMB TO BRISBANE என்பதற்கு பிரிஸ்பன் நகரத்திற்கு அனுப்பப்படும் பாம் என்று பொருள். மூதாட்டியின் பார்சலை கண்ட சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து புகார் அளித்துள்ளனர்.

இதன் பின்னர் அவுஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், இந்த பார்சல் குறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த பையில் துணிகளை தவிர வேறு எதுவுமே இல்லை என்றதும் மூதாட்டி விடுவிக்கப்பட்டார்.

பையில் ஏன் இப்படி எழுதினீர்கள் என விமான நிலைய அதிகாரிகள் கேட்டதற்கு, நான் பாம்பேயில் இருந்து வருகிறேன். முழுதாக பாம்பே என்று எழுத இடமில்லை. அதனால் பாம் என்று எழுதினேன். கீழே மும்பை என்று சிறியதாக எழுதி இருந்தேன் என பதில் அளித்தாராம் அந்த மூதாட்டி.

-Web Dunia-

இலங்கையில் மழையுடனான காலநிலை தீவிரம் பெறும்!!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை தீவிரம் பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு, ஊவா, கிழக்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தப் பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பாரக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக கிழக்கு, தெற்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசங்களிலும், மட்டக்களப்பில் இருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையிலான கடல் பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்பதனால் கடல் எல்லைகளில் கொந்தளிப்பான நிலை காணப்படும் எனவும் இதன் காரணமாக மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ள இலங்கை ரூபாய்!!

வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாய் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 1.7 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

2018ஆம் ஆண்டில் இருந்து இதுவரையிலான காலப்பதியில் இலங்கை ரூபாய் ஜப்பான் யென்னுக்கு எதிராகவே அதிக வீழ்ச்சியடைந்துள்ளது. அது 7.1 வீதமாகுமாக பதிவாகி உள்ளது.

இதேவேளை, ஸ்ரேலிங் பவுண்டுடன் ஒப்படும் போது 6.2 வீதத்திலும், யூரோவுடன் ஒப்பிடும் போது 4.4 வீதமும் இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் இலங்கை மத்திய வங்கி 403.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.

2017ஆம் ஆண்டு அதன் அளவு 1,665 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

தந்தை இலங்கையில் இருப்பதை கண்டறிந்த சிங்கப்பூர் யுவதி!!

27 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தமது தந்தை இலங்கையில் இருப்பதை கண்டறிந்துள்ளதாக சிங்கப்பூர் யுவதி தெரிவித்துள்ளார்.

துர்கா கேசவ் என்ற இந்த யுவதி, தமது தந்தை தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமது தந்தையான கனகசுந்தரம் சோமசுந்தரம் கடந்த 1991ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தம்மையும் தாயையும் விட்டு இலங்கைக்கு சென்ற பின்னர் சிங்கப்பூருக்கு திரும்பவில்லை என்று துர்கா கேசவ் முன்னதாக தெரிவித்திருந்தார்.

தமது தந்தை யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்தவர் என்றும் அவரின் சகோதரர்கள் மன்னார் மடு – பண்டிவிரிச்சான் பகுதியில் வசித்து வருவதாகவும் துர்கா கேசவ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமது தந்தை இலங்கையில் இருப்பதை தாம் உறுதி செய்துள்ளதாகவும், தமது தந்தையுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமது தந்தை உள்ளிட்ட உறவுகளைக் காண விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் துர்கா கேசவ் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் தமிழர்கள் உட்பட 400 குடும்பங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மகும்பல் : பொலிஸார் அதிரடி!!

கனடாவின் டொரன்டோ பகுதியில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளை கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

சிலி நாட்டை சேர்ந்த 14 பேர் கொண்ட கும்பல் ஒன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பலினால் கிட்டத்தட்ட 2.7 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிலி நாட்டைச் சேர்ந்த 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Halton மாகாண பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 10 பேருக்கு எதிராக 45 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த சிலி நாட்டவர்களின் குடும்பத்தினரோ பிள்ளைகளோ கனடாவில் இல்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

டொரண்டோ பொலிஸ் சேவை, York பிராந்திய பொலிஸ் மற்றும் கனடா எல்லை சேவையினால் கடந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளுக்கமைய இந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை கும்பலில் இருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நாய்களுடன் நடந்து வீடு ஒன்றிற்கு சென்றுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட இந்த நபர்கள் தொடர்பில் பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.

அங்குள்ள சிசிரிவி கமராக்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே முழுமையான கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் டொரொண்டோ பகுதியில் 400க்கும் அதிகமான வீடுகளில் இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அதற்கமைய 5 நாட்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 2.7 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் பழக்கத்துடன் கனடாவுக்குள் நுழைந்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல தமிழ் குடும்பங்களின் வீடுகள் உடைக்கப்பட்டு பெருந்தொகை நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன சாரதிகளுக்கு இனிப்பான செய்தி!!

வரவு – செலவுத்திட்ட யோசனைக்கு அமைய வீதி ஒழுங்கு விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு ஸ்தலத்திலேயே அறவிடுவதற்காக பிரேரிக்கப்பட்ட அதிகூடிய தண்டப்பணமான 25,000 ரூபாவை, 3000 ரூபாவாக அரசாங்கம் குறைத்துள்ளது.

இதற்கு பாராளுமன்றம் நேற்று அங்கீகாரம் வழங்கியது. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளுக்கு பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.

இவ்விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்க, இந்த ஒழுங்கு விதிகளால் வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளிடம் அறவிடப்படக்கூடிய 25,000 ரூபா தண்டப்பணம் 3,000 ரூபாவாக குறைக்கப்படுகிறது என்றார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர்,  அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிகளை மீறும் வாகன சாரதிகளிடம் அதிகூடிய ஸ்தல தண்டப் பணமாக 25,000 ரூபா அறவிடப்படும் என 2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த யோசனைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன.

இந்த நிலையில் குறித்த விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், இது பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதி குழுவொன்றையும் நியமித்தார்.

இந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய ஆகக் கூடிய தண்டப்பணமாக 3,000 ரூபா தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விதிகளை மீறிய சாரதிகளிடம் ஸ்தலத்தில் ஆகக் கூடிய தண்டப் பணமாக 3,000 ரூபாவும், ஆகக் குறைந்த தண்டப் பணமாக 500 ரூபாவும் அறவிடப்படும்.

இன்று முதல் 33 வீதி விதி மீறல்களுக்கு 3,000 ரூபா முதல் 500 ரூபா ஸ்தல தண்டப்பணம் அறவிடப்படும். இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 

மாங்குளம் பகுதியில் பேருந்து விபத்து : பலர் காயம்!!

மாங்குளம் பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (06.04.2018) மாலை வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று மாலை 5.15 மணியளவில் வவுனியா மாங்குளம் பகுதியில் பயணித்த போது வீதியின் குறுக்கே மாடு பாய்ந்ததையடுத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்தது.

இவ் விபத்தில் பேருந்தில் பயணித்த 30 பேர்வரையில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஈழத்தில் : வடக்கு முதல்வருக்கு விடுத்த கோரிக்கை!!

ஈழ தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்காக தென்னிந்திய நடிகர் கருணாஸ் இன்று யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்துள்ளார்.

பல்கலைக்கழத்திற்காக அடிக்கல்லை நாட்ட வருமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கருணாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.வந்த நடிகர் கருணாஸ் காலை 9.30 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் கருணாஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, தமிழகத்தில் முகாம்களில் உள்ள ஈழ தமிழ் மாணவர்கள் மற்றய பல்கலைக்கழகங்களில் கல்விக்காக கையேந்தக் கூடாது என்பதற்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்த பல்கலைக்கழக கட்டடத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர், பொது நலவாதியான ஒருவர், என்ற அடிப்படையில் முதலமைச்சரை அடிக்கல் நாட்டுவதற்கு அழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் தமிழகம் திரும்பிய பின்னர் முதலமைச்சரை தமிழகத்திற்கு அழைப்பதற்கான திகதியை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழக மக்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டபோதும், தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியபோதும் உற்சாகம் ஊட்டும் வகையில் அறிக்கைகளை விடுத்தவர்.

அந்தவகையில் காவிரி நீர் பிரச்சினைக்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இணைந்த பாரிய அறவழி போராட்டத்திற்கான அறைகூவலை முதலமைச்சர் விடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அவர் அதனை ஆழமாக பார்த்து வருகிறார் என்பதை நான் அறிந்து கொண்டேன் என்றும் தென்னிந்திய நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

கொழும்பில் முதன் முதலாக விபத்து எப்போது ஏற்பட்டது தெரியுமா : வைரலாகும் புகைப்படம்!!

இலங்கையில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் மரணங்களில் விபத்தால் ஏற்படும் மரணங்களே அதிகமாக இருக்கின்றன.

விபத்தால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதை நாம் கூறவில்லை. புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் எல்லா இடங்களிலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கிராமமாக இருக்கட்டும் நகரமாக இருக்கட்டும் விபத்துக்கள் ஏற்படத்தான் செய்கின்றன.

எனினும், அப்போதைய காலக்கட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகும். வீதிகளில் வாகனங்களை விரல் விட்டு எண்ணலாம். விபத்துக்களும் குறைவாகவே ஏற்பட்டன. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை.

இன்று இலங்கையின் எல்லா பக்கங்களிலும் விபத்துக்கள் ஏற்பட்டவண்ணமே உள்ளன. மற்ற இடங்களை விட கொழும்பிலேயே அதிக வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அந்த வகையில் கொழும்பில் முதன்முதலாக எப்போது வாகன விபத்து ஏற்பட்டது தெரியுமா?

1910ஆம் ஆண்டு, அதாவது 108 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் முதன்முதலாக வாகன விபத்து ஏற்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

கொழும்பு – கோட்டைக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் வண்டி ஒன்றும், மற்றைய வண்டி பிரிட்டிஷ் அதிகாரியால் பயன்படுத்தப்படும் ஒரு தனியார் வாகனமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை வாகனம்!!

இலங்கையில் முச்சக்கர வண்டிக்கு பதிலாக நான்கு சக்கர வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.

மோட்டார் வாகன சட்டமூலத்திற்கான 3 உத்தரவுகளுக்கு நேற்று நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது.

2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக நான்கு வாகனம் ஒன்றை இலங்கை சட்டத்திற்குள் உள்ளடக்குவது, அந்த வாகனங்களை அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதிக்காமை, மோட்டார் வீடு என்ற பெயரில் புதிய வாகன கட்டமைப்பு அறிமுகப்படுத்தி வைத்தல் ஆகியவை இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்கவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு தங்க சவப்பெட்டியில் வைக்கப்பட்ட உடல்!!

கரீபியன் நாட்டில் இறந்துபோன மில்லியனரின் உடலை இறுதி அஞ்சலியின் போது தங்கத்தால் அலங்கரித்து சவப்பெட்டிக்குள் வைத்துள்ளனர்.

Trinidad தீவில் வசித்து வந்த Sheron Sukhedo (33), கார் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை செய்துவரும் பிரபல மில்லியனாவார்.

தொழில்முறை ரீதியாக இவருக்கு எதிரிகள் இருந்த காரணத்தால், தனி பொலிஸ் பாதுகாப்பு இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்மநபர்களால் ஷெரான் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

மில்லியனராக இருந்த இவருக்கு தங்கத்தின் மீது அதிக ஆர்வம். அதனால் வாழ்ந்தபோது எப்படி இருந்தாரோ, அதே போன்றே இறந்தபின்னரும் இருக்க வேண்டும் என அவரது உடல் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டது.

$50,000 மதிப்பிலான தங்க சவப்பெட்டியில் இவரது உடல் வைக்கப்பட்டிருந்தது, மேலும் $100,000 மதிப்பிலான தங்க நகைகளை உடல் முழுவதும் அணிவித்து, தங்கத்தால் செய்யப்பட்ட ஷீ அணிவித்து, தங்கத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டார்.

இது இறுதி ஊர்வலத்தின் போது மட்டுமே, பின்னர் இவரது உடல் அடக்கம் செய்யப்படும்போது இவை அனைத்தும் கழற்றி எடுக்கப்பட்டுவிட்டன.

இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது மரணம் குறித்த விசாரணையை பொலிசார் நடத்தி வருகின்றனர்.

 

கழிவறையில் இளம்பெண் அடித்துக்கொலை : கொள்ளையர்களின் கொடூர செயல்!!

சென்னை வடபழனியில் பெண்ணை கொலை செய்த‌ கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச்‌ சென்றுள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அர்ச்சகர் பிரபு என்பவர், மனைவியுடன் வசித்து வந்தார்.

இன்று அவரது வீட்டு கழிவறையில் பிரபுவின் மனைவி பிரியா தலையில் படுகாயங்களுடன், கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

மற்றொரு அறையில் பிரபு கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிந்தார்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி கொடுத்த தகவலின்பேரில் வடபழனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில், பிரியா உயிரிழந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து படுகாயத்துடன் இருந்த பிரபுவை காவல்துறையினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் வீட்டிலுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகேயுள்ள கண்காணிப்பு கமெராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரபு தம்பதிக்கு நன்கு அறிமுகமானவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் கடைசி தலை வெட்டி ஆதிவாசிகள் : எங்கு வாழ்கிறார்கள் தெரியுமா?

எதிரியின் தலையை வெட்டியதும் அதற்கு ஆதாரமாக தங்கள் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளும் பழங்குடியினரின் கடைசி சந்ததியினர் இந்தியாவின் நாகலாந்தில் வாழ்கிறார்கள்.

கோன்யாக் என்னும் இந்தப் பழங்குடியினர் தங்கள் எதிரிகளுடன் போரிட்டு வெற்றி பெற்றால், வெற்றி பெற்றதன் அடையாளமாக அவர்களது தலைகளை பரிசுப் பொருள் போல் வைத்துக் கொள்வார்கள்.

1940களில் கிறிஸ்தவ மதம் நாகலாந்திற்கு வந்தபோது இந்தப் பழக்கம் முடிவுக்கு வந்தது. எதிரி வீர்ர்களின் தலைகளைக் கொய்வது எங்கள் கலாச்சாத்தின் ஒரு முக்கிய பகுதி என்கிறார் பழங்குடியினரில் ஒருவர்.

தலைகள், பாதங்கள் மற்றும் கைகளை அவர்கள் பரிசாகக் கொண்டு வந்து கிராமத்திலுள்ள பெரிய மரம் ஒன்றில் கட்டித் தொங்க விடுவது அவர்கள் வழக்கம்.

அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் பல எருமை மாட்டுத் தலைகள் சுவரில் சார்த்தப்பட்டுள்ளன. இது அவர்கள் எத்தனை முறை விருந்து வைத்துள்ளார்கள் என்பதற்கு அடையாளம்.

கிறிஸ்தவம் நாகலாந்தில் பரவத் தொடங்கியதும் அவர்கள் செய்த முதல் வேலை, தலை வெட்டுவதை தடை செய்ததுதான்.

இன்று தலைவெட்டி பழங்குடியினரின் கடைசி தலைமுறையினர் தங்கள் 70 வயதுகளில் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லை, அவர்களை சந்திக்க வருபவர்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறார்கள், கனிவுடன் உபசரிக்கிறார்கள்.

தங்கள் கலாச்சாரம் பெரிய அளவில் மாற்றம் அடைந்த பின்னரும் தங்கள் கலாச்சாரம் குறித்து மிகுந்த பெருமையுடன் வாழ்கிறார்கள், இந்த தலை வெட்டிப் பழங்குடியினர்.

குடிபோதையில் பொலிஸ் செய்த செயல் : பரிதாபமாக இறந்த இளம்பெண்!!

ஆந்திராவில் இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது போதையில் வண்டி ஓட்டி கொண்டு வந்த காவலரின் வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்துள்ளார்.

விஜயவாடாவை சேர்ந்தவர் சின்னபட்னி மைத்ரி தேஜஸ்வனி (27). இவர் கடந்த செவ்வாய் கிழமை இரவு ஷாப்பிங் முடித்து விட்டு தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது ஸ்ரீனிவாஸ் என்ற காவலர் குடிபோதையில் தனது பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளார். மைத்ரியின் வண்டியை ஸ்ரீனிவாஸ் முந்த நினைத்து அதன் மீது வேகமாக மோதியுள்ளார்.

இதையடுத்து மைத்ரியும், அவர் சகோதரரும் சாலையில் கீழே விழுந்ததில் மைத்ரிக்கு தலையில் பலத்த அடிப்பட்டுள்ளது.

இதையடுத்து மைத்ரியை மீட்ட சகோதரர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மைத்ரி கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மைத்ரி மூளை சாவு அடைந்தார். இதை தொடர்ந்து பொலிசார் ஸ்ரீனிவாஸை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர், அவர் தற்காலிக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையில் ஸ்ரீனிவாஸ் தவறான செயலில் ஈடுபட்டு உயர் அதிகாரியிடம் மோதி கடந்த 2015-ல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

குப்பைவண்டியில் கொண்டுசெல்லப்பட்ட லட்சாதிபதி முதியவரின் சடலம் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இறுதிச் சடங்குக்காக குப்பைவண்டியில் முதியவர் ஒருவரின் உடல் எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான ராஜாராம். கூலித் தொழிலாளியான இவர் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டதால் அந்தப் பகுதியிலேயே பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார்.

கடந்த மாதம் இறந்த அவரது உடலைக் கைப்பற்றிய சோளிங்கர் காவல்துறையினர், ராஜாராமின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் இறுதிச் சடங்கு செய்ய தங்களிடம் பணம் இல்லை என்று தெரிவித்ததால், ராஜாராமின் உடலை பேரூராட்சி நிர்வாகத்திடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் பேரூராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் வைத்து ராஜாராமின் உடலை சுடுகாட்டுக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

குறித்த புகைப்படம் வைரலான நிலையில், ராஜாராமின் குடும்ப பின்னணி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ராஜாராமின் தந்தை வைத்தியராக இருந்துள்ளார். பெற்றோர் இறந்த பின்னர் வீட்டை விற்று, பணத்தை வங்கியில் சேமித்துள்ளார்.

அவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
பல லட்சம் பணம் இருந்தும் இறந்த பின்னர் குப்பை வண்டியில் சடலத்தை அனாதை பிணமாக கொண்டு செல்லப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா வேலைநிறுத்தத்தால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிரபல நடிகை!!

பிரபல திரைப்பட நடிகையான பிந்து மாதவி சொந்த ஊரில் ஆடு மேய்ப்பது போன்ற புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாத்துறையில் தற்போது வேலை
நிறுத்தம் நடந்துவருவதால், திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அதில் குறிப்பாக நடிகர் விக்ரம் தனது குடும்பத்துடன் கேரளாவுக்கும், நடிகை நயன்தாரா நீண்ட நாட்களுக்குப் பிறகு, கொச்சினில் உள்ள தனது சொந்த வீட்டிற்கும் சென்றிருந்தார்.

நகைச்சுவை நடிகர் கருணாகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும்போல எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான பிந்து மாதவி ஸ்டிரைக் காரணமாக தனது சொந்த ஊரான ஆந்திரப்பிரதேசத்திலுள்ள தேவரிந்து பள்ளிக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் ஆடு மேய்ப்பது, மண்பானையில் சமைப்பது, கொளுத்தும் வெயில் என்று கூட பார்க்காமல் குல தெய்வ கோவில்களுக்கு நடந்து சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள பிந்து மாதவி, அதில் நகரத்திலிருந்து வந்து கிராமத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.