விளையாட்டு என்று நம்பிய சகதோழிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி : பலியான சிறுமி!!

தமிழகத்தில் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமமைச் சேர்ந்த தம்பதி பழனிவேல்-ராணி. இவர்களுக்கு கலையரசி என்ற மகள் உள்ளார்.

7ம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று முன் தினம் பள்ளி விடுமுறை என்பதால் தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஏரியில் ஆழம் அதிகமாக இருந்ததைக் கவனிக்காமல் ஏரியின் உள்பக்கத்துக்குள் செல்லச் செல்ல அவர் ஒரு கட்டத்தில் நீரில் மூழ்கினார்.

ஆனால் அவருடன் குழிக்கச் சென்ற சக தோழிகள், தண்ணீரில் அதிக நேரம் மூழ்கியிருப்பதற்காக இப்படி செய்கிறாள் என்று கவனிக்காமல் இருந்துள்ளனர்.

சுமார் அரைமணி நேரம் ஆகியும் அவர் நீரில் இருந்து வெளியே வராததால், ஏரியில் துணி துவைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.

உடனடியாக அவர் அந்த வழியே நடந்து சென்றவர்களிடம் சத்தம் போட்டதால், அவர்கள் ஏரியில் வந்து தேடியுள்ளனர்.

இரண்டு மணி நேர போராட்டத்துக் பின் அவரை சடலமாக மீட்டுள்ளனர். சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குளத்தில் குளிக்கும்போது யார் அதிக நேரம் தண்ணீரில் மூழ்கியிருக்கிறார்கள் என்று அவர்களுக்குள் அவ்வப்போது போட்டி நடக்குமாம். இதனால், கலையரசி நீரில் முழ்கியது தெரியாமல் சக தோழிகள் நம்பரை எண்ணிக்கொண்டிருந்தாகவும், விளையாட்டு விபரீதமானது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

காதலியை கொலை செய்தது ஏன் : காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!

தமிழ்நாட்டில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண்ணை தீர்த்துகட்டியதாக கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தின் பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் மகள் வைத்தீஸ்வரி (16).

வைத்தீஸ்வரி அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 1-ந் திகதி காலை வேலைக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பரதூர் சாவடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள முட்புதரில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் மணிகண்டன் (26) என்பவரை அவர் காதலித்தது தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டனை பொலிசார் பிடித்து விசாரித்ததில் பாலியல் பலாத்கார முயற்சியில் வைத்தீஸ்வரியை தான் கொன்றதாக தெரிவித்தார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நானும், வைத்தீஸ்வரியும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம்.

சம்பவத்தன்று பரதூர் சாவடியில் அவருடன் நான் பேசி கொண்டிருந்த போது மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது, ஆசைவார்த்தை கூறி வைத்தீஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேன். ஆனால் அதற்கு அவள் மறுப்பு தெரிவித்தார்

தொடர்ந்து நான் அவளை பலாத்காரம் செய்ய முயன்று, அடித்ததில், அவள் மயங்கி விழுந்தாள்.

உடனே நான் அங்கிருந்து சென்று விட்டேன். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வந்து பார்த்த போது அங்கு வைத்தீஸ்வரி பிணமாக கிடந்தாள்.

இதன்பின்னர் அவளது உடலை முட்புதருக்குள் மறைத்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் மணிகண்டனை கைது செய்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் இலவசம் : சென்னையில் இப்படியும் ஒரு கடை!!

சென்னையில் செயல்படும் ஒரு ஜெராக்ஸ் கடையில் கடை உரிமையாளரால் எழுதப்பட்டிருக்கும் வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சேப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது எழிலகம் வளாகம். இங்கு நில நிர்வாகம், மாநில திட்ட ஆணையம், வணிக வரி, பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் உட்பட பல்வேறு முக்கிய அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

எழிலகம் வளாகத்தின் உள்ளே வள்ளிம்மை ஜெராக்ஸ் என்ற பெயரில் கடை அமைந்துள்ளது. இங்கு இலங்கை தமிழர்களுக்கு மட்டும் ஜெராக்ஸ் இலவசமாக எடுத்து தரப்படுகிறது. கடை பெயருக்கு கீழேயே இலங்கை தமிழர்களுக்கு ஜெராக்ஸ் இலவசம் என எழுதப்பட்டுள்ளது.

துருக்கி பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு : 4 பேர் உயிரிழப்பு!!

துருக்கியில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

துருக்கியில் அமைந்துள்ள Osmangazi பல்கலைக்கழகத்தில் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த பல்கலைக்கழக துணைத் தலைவரை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் பல்கலைக்கழக நிர்வாகி ஒருவரையும் சுட்டுக் கொன்றுள்ள அவர் 2 ஆசிரியர்களையும் கொன்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக தொடர்புடைய நபர் கைதாகியுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவரான அந்த நபரிடம் தற்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தின் நோக்கம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், பல்கலைக்கழகம் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மாணவர்களும் பேராசிரியர்களும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பல்கலைக்கழகத்தின் முக்கிய வாசலில் குவிந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை மீட்டு பொலிசார் மருத்துவமனைக்கு சேர்ப்பித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட Eskisehir நகரில் மொத்தம் ஒரு மில்லியன் மக்களே குடியிருந்து வருகின்றனர். இந்த நகரமானது தலைநகர் இஸ்தான்புல்லுக்கும் அங்காரா பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது.
குர்து போராளிகளாலும் ஐ.எஸ் பயங்கரவாதிகளாலும் துருக்கி தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.

ஆனால் இன்று நடந்த பல்கலைக்கழக துப்பாக்கி சூடானது பயங்கரவாத தொடர்பானதா என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தியாகி திலீபனின் நினைவிடத்தில் 7 வயதுச் சிறுவனின் செயல் : மனதை நெகிழவைக்கும் சம்பவம்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் அமைந்துள்ளது. திலீபனின் பிறந்தநாள் அன்றும் இவருடைய நினைவு நாள் அன்றும் தான் அவ்விடத்தை நோக்கி பெரும்பாலும் மக்கள் வருவார்கள்.

ஆனால் அண்மையில் திலீபனின் நினைவிடத்திற்கு வந்த சிறுவன் அனைவர் மனதிலும் இடம்பிடித்ததுடன், ஒரு கணம் சிந்திக்கவும் வைத்து விட்டார்.

ஒரு மனிதன் தன்னுடைய பிறந்த தினத்தில் என்ன செய்வான்? காலை எழுந்து தாய் தந்தையிடம் ஆசி பெற்று, ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.

இதேநேரம் பிறந்த நாளில் ஏழைகளுக்கு உதவுவோரும் உண்டு, நண்பர்களுடன் வெளியில் சென்று மகிழ்வோரும் உண்டு. ஆனால் ஒரு தியாகியை தேடிச் சென்று ஆசி பெறுவது மிகவும் அரிதான செயலாகும்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் தன்னுடைய பிறந்த தினத்தில் தியாகி திலீபனின் நினைவிடத்தை தேடிச் சென்று, ஆசி பெற்றுள்ளமை தற்போது அனைவர் மத்தியிலும் பேசப்படுகின்றது.

திலீபனின் நினைவிடத்தில் பூஜைப் பொருட்களை வைத்து, கடவுளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை திலீபனுக்கு கொடுத்து தனது 7ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார் சாதுரியன்.

சாதுரியன் தன்னுடைய பிறந்த தினத்தில் வேஷ்டி கட்டி திலீபனின் நனைவிடத்திற்கு சென்று தேங்காய், பூ, பழம், பத்தி, பட்டு என்பவற்றை வைத்து கற்பூரம் காட்டி தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதை அப்பகுதியில் இருந்த அனைவரும் ஒருகணம் தம்மை மறந்து பார்த்துக்கொண்டு இருந்ததுடன், மனதளவில் அனைவரும் ஒருவித பூரிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்திச் சென்றவரை வவுனியா பொலிஸார் இன்று (05.04) அதிகாலை 4 மணியளவில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – பொத்துவில் பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில் பயணித்த காத்தான்குடியை சேர்ந்த 51வயதுடைய நபரை 2கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வன்னி மாவட்டத்தில் 14514 பேர் போதைக்கு அடிமையானவர்கள்!!

வன்னி மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 14 ஆயிரத்து 514 பேர் போதைக்கு அடிமையாகியுள்ளதாக வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

‘போதையிலிருந்து விடுபட்ட வன்னி’ எனும் தொனிப்பொருளில் நேற்று (04.04) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர்..

கடந்த 2017 ஆம் ஆண்டு வவுனியாவில் 7355 நபர்களும், மன்னார் மாவட்டத்தில் 7159 நபர்களும் போதைக்கு அடிமையானவர்களாக இனங்காணப்பட்டுள்ளபோதும், வவுனியாவில் 158 பேரும் மன்னாரில் 82 பேர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அதனால் பொலிஸ் அறிக்கையின் பிரகாரம் இனங்காணப்பட்ட போதைக்கு அடிமையான நபர்களுக்கு எதிர்வரும் யூலை மாதத்திலிருந்து புனர்வாழ்வு அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் எதிர்காலத்தில் வன்னி மாவட்டத்தில் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்படுவார்கள்.

ஜனாதிபதியின் செயற்திட்டத்திற்கு அமைவாக வன்னியை மாணவர்களின் உதவியுடன் மது போதையற்ற பிரதேசமாக மாற்றுவோம் என தெரிவித்தார்.

வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 7மணியளவில் வட்டக்காடு, பறயனாலங்குளம், செட்டிகுளம் பகுதியிலுள்ள பெரியசாமி முத்துலிங்கம் என்ற 58 வயது குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டிற்கு பின்பக்கமுள்ள காட்டுப்பகுதிக்கு மின்சாரம் பெற்று அதனை பன்றிக்கு வைப்பதற்கு முயன்றபோதே அதில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அவரது உறவினர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் அவர் வீட்டிற்கு மின்சாரம் பெறுவதற்கு முயன்றபோதே மின்சாரம் தாக்கிய உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு இருபது வருட கடூழிய சிறை!!

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014ம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக தனக்கு அறிமகமான ஆசிரியர் ஒருவரிடம் கணித பாட வினாத்தாள்களை வாங்கித்தர முடியுமா என கேட்டுள்ளார்.

அதற்கு குறித்த ஆசிரியர் வாங்கித் தருவதாக இரண்டு தடவை ஏமாற்றியுள்ளார். மூன்றாவது தடவையும் குறித்த சிறுமி ஆசிரியரின் வீட்டுக்கு சென்று வினாத்தாள்களை கேட்ட போது வாங்கி வரவில்லை என கூறியதோடு தனது காணியில் வேலை செய்பவர்களுக்கு தேனீர் ஊற்றிக் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

சிறுமியும் தேனீர் ஊற்றுவதற்காக வீட்டிற்குள் சென்ற சந்தர்ப்பத்தில் எதிரியாக இனங்காணப்பட்ட ஆசிரியர் குறித்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த எதிரியை கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இதன் பிரகாரம் கடந்த 2017ம் ஆண்டு 07ம் மாதம் 18ம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் விளக்கம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு 04.04.2018 ம் திகதி தீர்ப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தது.

வழக்கினை விளங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி எதிரியை குற்றவாளியாக கண்டதுடன் இருபது வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் அபராதமாக ஒரு இலட்சம் ரூபாவும், அதனை செலுத்த தவறின் ஆறு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஸ்டஈட்டு பணமாக ரூபா ஐந்து இலட்சம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த நஸ்ட ஈட்டு பணத்தை செலுத்த தவறின் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் நீதிபதி தனது தீர்ப்பிலே தொடர்ந்தும் இந் நீதிமன்றம் இவ்வகையான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி தீர்ப்பளிக்கின்ற போதிலும் சமூகத்தில் இவ்வகையான குற்றச்செயல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும் சமூகத்தில் கௌரவமான புனிதமான தொழில்களில் இருந்து கொண்டு இவ்வகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், ஈடுபட நினைப்பவர்களிற்கும் இத்தீர்ப்பின் மூலம் எச்சரிக்கை விடுப்பதாகவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு தொடுனர் தரப்பில் வழக்கை அரச சட்டவாதி ஐ.எம்.எம் பாகிம் நெறிப்படுத்தியிருந்தார்.

வவுனியா திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர் விபரம்!!

கடந்த 29ம் திகதி வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் உதயகுமார் தனுசியன் 8A,B பெறுபேற்றைப்பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

கிரிதரன் கலையமுதன் 8AC, கிருஷ்ணகுமார் கீர்த்திகன் 7A2B, நரேந்திரன் விஷவா 7A,CS, திலகராசா மோனிகா 7A,B,S, சுரேந்திரன் கோபிகா 6A,B,2C, ஜோச்சந்திரன் லக்சிகா 5A,4C மேலும் கணிதம் உட்பட 27 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியாவில் இரவுவேளை UNP அமைப்பாளர் செய்த காரியம்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில்,

வவுனியாவில் தம்பா விடுதியின் உரிமையாளரான பிரேமனந்தராஜா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான கருணாதாச இருவரும் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது

கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றில் தேற்கடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் ரணிலுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக, வவுனியா நகரப்பகுதியில் (பழைய பேருந்து நிலையத்தில்) இரவு 11 மணியளவில் தம்பா விடுதியின் உரிமையாளரான பிரேமனந்தராஜா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான கருணாதாச இருவரும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கௌதம் மேனன் மீது மீண்டும் முறைப்பாடு!!

நரகாசுரன் படம் விவகாரத்தில் கௌதம் மேனன், கார்த்திக் நரேன் மோதலையடுத்து கௌதம் மேனன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், கௌதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

அரவிந்தசாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நரகாசுரன், இந்த படத்தை தயாரித்த கௌதம் மேனன், இயக்குநர் கார்த்திக் நரேன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

படக்குழுவினரை கௌதம் மேனன் குப்பைபோல் நடத்தியதாகவும் நரகாசுரன் படத்துக்கு வாங்கிய தொகையை வேறு படங்களுக்கு செலவிட்டு, பட வேலைகளை முடக்கியதாகவும் கார்த்திக் நரேன் குற்றம் சாட்டினார்.

இதனை கௌதம் மேனன் மறுத்துள்ளார், படத்தில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறேன். சிலர் பேச்சை கேட்டு கார்த்திக் நரேனுக்கு கோபம் வந்துள்ளது என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கௌதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

“கௌதம் மேனன் சினிமா துறையில் மூத்தவர். அவர் தயாரிக்கும் துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களின் பட்ஜெட் நரகாசுரனை விட பல மடங்கு அதிகம் என்பது உண்மைதான்.

நரகாசுரன் படத்திற்கு பணம் வாங்கி அதை துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்கு முதலீடு செய்யவில்லை என்று கௌதம் மேனன் கூறியிருப்பதில் உண்மை இல்லை. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

எனது படத்தை காட்டி அவர் யாரிடம் பணம் வாங்கினார் என்பது எனக்கு தெரியும். கௌதம் மேனனுக்கு பணம் கொடுத்தவர் நீதிமன்றத்தில் நரகாசுரன் படத்துக்கு எதிராக தடை வாங்கி விட்டார். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை அவர் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.

24 வருடங்களுக்கு முன் காணாமல்போன மகளை தேடிக்கண்டுபிடிக்க தந்தை செய்த காரியம்!!

காணாமல்போன மகளை 24 வருடங்களிற்கு பின்னர் தந்தை கண்டுபிடித்த மனதை உருக்கும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

24 வருடங்களிற்கு முன் தனது மகளை தொலைத்த மிங்கிங் தனது மகளை கண்டுபிடிப்பதற்காக டாக்ஸி ஓட்டுநராக தொழில்புரிந்துள்ளார்.

பழங்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மிங்கிங் 24 வருடங்களிற்கு முன்னர் தனது மூன்று வயது மகளை தொலைத்துள்ளார்.

24 வருடங்களிற்கு முன்னர் வீதியோரத்தில் தாங்கள் பழங்களை விற்றுக்கொண்டிருந்த வேளை மகள் தீடிரென காணாமல்போனாள் என அவர் தெரிவிக்கின்றார்.

அதன் பின்னர் அவர் தனது மனைவியுடன் இணைந்து மகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக பல விளம்பரங்களை வெளியிட்டுள்ளார். இணையத்திலும் விளம்பரம் செய்துள்ளார்.

2015 இல் மகளை கண்டுபிடிப்பதற்காக நிறுவனமொன்றில் வாகனச்சாரதியாக சேர்ந்துள்ளார். அவர் தன்னிடமிருந்த மகளின் சிறுவயது புகைப்படத்தை காண்பித்து துண்டுபிரசுரங்களை வெளியிட்டுள்ளார். சீனாவின் பொலிஸாரும் அவரின் முயற்சிக்கு உதவியுள்ளனர்.

கடந்த வருடம் பொலிஸ் துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் மிங்கிங்கின் மகள் தற்போது எப்படியிருப்பார் என்பதை ஓவியமாக வரைந்துள்ளார் . அந்த படத்தை மிங்கிங் இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

மிங்கிங் வாழ்ந்த பகுதியிலிருந்து ஆயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பகுதியில் காங் சிங் என்ற பெண்மணி அந்த படத்தில் இருப்பவர் தன்னை போன்றே காணப்படுவதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் பொலிஸ் துறையைச் சேர்ந்த அந்த ஓவியரை தொடர்புகொண்டுள்ளார். அதன் பின்னர் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக இடம்பெற்றுள்ளன.

இறுதியில் மரபணு பரிசோதனை மூலம் காங் சிங் 24 வருடத்திற்கு முன்னர் காணாமல்போன மகள் என்பது உறுதியாகியுள்ளது.செவ்வாய்கிழமை கண்ணீருடன் தந்தையும் மகளும் 24 வருடங்களின் பின்னர் இணைந்துள்ளனர். மனதை உருக்கும் இந்த சம்பவம் சீனாவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!!

வடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கம்பர்மலையைச் சேர்ந்த 76 வயதுடைய துரைசிங்கம் அருந்தவம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண்ணின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வீட்டில் வசித்துவந்த குறித்த வயோதிபப் பெண், நேற்றுக் காலை மகள் வீட்டை விட்டுவெளியில் சென்றுவிட்டு திரும்பிய போது தாயாரைக் காணவில்லையென தேடியுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த வயோதிபப் பெண் இறந்த நிலையில் கடற்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

100 வயதைத் தாண்டிய வயோதிபர்களுக்கு 5000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு!!

100 வயதைத் தாண்டிய வயோதிபர்களுக்கு 5000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

100 வயதைத் தாண்டிய வயோதிபர்களுக்கு மாதாந்தம் தலா 5000 ரூபாவினை கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போதைக்கு இலங்கையில் 100 வயதைத் தாண்டிய 350 வயோதிபர்கள் இருக்கின்றார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வயோதிபர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும், நலன்புரியை உறுதி செய்வதற்கும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

தமிழில் பதிலளித்து நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய அமைச்சர்!!

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பதிலினால் பலர் குழப்பமடைந்தனர்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது சிங்கள அமைச்சர், உறுப்பினர்கள் தங்கள் தாய் மொழியில் வாக்குகளை வழங்கியிருந்தனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் “ஆம்” “இல்லை” என வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க சிங்கள மொழியை மறந்து விட்டு “இல்லை” என தமிழில் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

இதன்போது அங்கிருந்த அனைவரும் குழப்பத்துடன் அவரை நோக்கி பார்த்துள்ளனர். பின்னர் சிங்களத்தில் தனது வாக்கினை மீண்டும் பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பு தேசிய தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் இலட்சகணக்கான இலங்கை மக்களின் அவதானம் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மீது திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.