பளை பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த கனரக வாகனத்தை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த கனரகவாகனம் நேற்று முன்தினம்(24.06) இரவு மீசாலை- புத்தூர் வீதியின் கனகம்புளியடி சந்தியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவுவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் நேற்று(24) இரவு வாகன சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த கனரக வாகனத்தை மறிக்க முற்பட்ட வேளை பொலிஸாரின் சமிக்கையை மீறி அச்சுறுத்தும் வகையில் பயணித்துள்ளது.
இதனையடுத்து, ஆணித்தடையை போட்டு கனரக வாகனத்தை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சாரதியும், உதவியாளர்கள் இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி ஒன்று தடண்புரண்டது.
முத்துராஜவெலவிலிருந்து யாழ்ப்பாண்ம் காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த எரிபொருள் தாங்கி இன்று அதிகாலை 1.00 மணிக்கு தடம்புரண்டது.
பெரல்களில் நிரப்பிய மக்கள்
இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. டீசல் ஏற்றி வந்த எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானதால் பெருமளவான டீசல் வெளியேறியது. அதையடுத்து வீதியால் சென்ற மக்கள் எரிபொருளை கேன்களில் பிடித்துச் சென்றுள்ளனர்.
அதேவேளை ஈரான் – இஸ்ரேல் போரினால் எரிபொருளுக்கு தட்டுபாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை வழக்கத்திற்கு அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் தொழில்நுட்பத் துறையில் 13 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர், பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ல சம்பவம் அதுஇர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன் , நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இன்று (26) அன்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மாணவன் இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாமல் பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை (23) அன்று பாடசாலைக்கு சென்றுள்ளார்.
இதன் போது பாட ஆசிரியர் தன்னிடம் வந்து தனது குறிப்பேடுகளை கேட்டபோது , மாணவன் தான் பிரத்தியேக வகுப்புகளில் இருந்து எடுத்த குறிப்புகளைக் காட்டியுள்ளார்.
இதன் காரணமாக கோபமுற்ற ஆசிரியர் அந்த புத்தகத்தை கிழித்து முகத்தில் பலமுறை தாக்கியதாகவும் மாணவன் கூறியுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது, அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் முச்சக்கர வண்டியில், கினிகத்தேன பொலிஸ் நிலையத்தின் அருகே வந்து,
தன்னை வலுக்கட்டாயமாக பாடசாலைக்கு அழைத்துச் சென்று, சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்ததாகவும் மாணவன் கூறியுள்ளார்.
பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம் என அழுத்தம்
அதேவேளை ஆசிரிய தாக்கியதில் தனக்கு காது கேளாமை இருப்பதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் அதிபர் , பல மாதங்களாக பாடசாலைக்கு செல்லாததால், ஆசிரியர் குறித்த மாணவன் உட்பட சில மாணவர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை கினிகத்ஹேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தான் தாக்கப்பட்டதாகக் கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் தவறான பதிவை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
இந்நிலையில் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் பொலிஸார் , பாதிக்கப்பட்ட மாணவனிடம் வாக்குமூலம் பதிவு செய்து சம்பவம் குறித்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
ஊவாபரணகம, லுனுவத்த, அம்பிட்டிகொடவைச் சேர்ந்த 11 வயது மற்றும் 2 மாதக் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில், தாயும், தாயின் இரண்டாவது கணவரும் கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக ஊவாபரணகம பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் இடது கண்ணுக்குக் கீழே, கன்னம் பகுதியில், ஒரு கையில் மணிக்கட்டு அருகே மற்றும் வலது கையில் மேல் கைக்குக் கீழே தீக்காயங்கள் உள்ளிட்ட காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை தடயவியல் மருத்துவ பரிசோதனைக்காக வெலிமட மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தாயும் இரண்டாவது கணவரும் வெலிமட நீதவான் நீதிமன்றத்தில் இன்று 26 ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பண்டாரவளை மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் வழக்கறிஞர் ரோஷன் அமரசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஊவாபரணகம, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
இளைஞர்கள் இருவரும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் வியாழக்கிழமை (25) அன்று இரவு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையகள் என கூறப்படுகின்றது.
அபுதாபிக்குச் செல்லவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் EY-397 விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போதே அதிகாரிகள் சோதனையில் இருவரும் பிடிபட்டுள்ளனர்.
இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் ஒருகொடவத்தை பகுதியில் ஒரு கொள்கலன் லொறியொன்று முச்சக்கரவண்டி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். விபத்தை அடுத்து , கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திடீர் சுகவீனம் காரணமாக கண்டி – மடுல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
மடுல்கலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 2.30 அளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசமந்த போக்கு
மருத்துவமனை நிர்வாகத்தின் அசமந்த போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்துடன், குறித்த உயிரிழப்பை அடுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மருத்துவமனை வளாகத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மடுல்கலை – கிறீன்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே உயிரிழந்தார். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
குறித்த சடலத்தில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொய்யா பழம், இலை என்பன சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது. இதனை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம், இவை உறுதியான மாற்றங்களை உங்களுக்குக் கொடுக்கும். மேலும் இது பக்கவிளைவுகள் இல்லாமல் உடலை சுத்தம் செய்யும்.
உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் கொய்யா பழ இலை, உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, எடையை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது.
கொய்யா பழம் நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்டது. இது வயிற்றை நிறைக்கும் உணர்வை தருவதால் அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்தும்.
கொய்யா இலை கஷாயம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கிறது.
நார்ச்சத்து அதிகமுள்ள கொய்யா செரிமானத்தை சீராக்கும், உடல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இது பக்கவிளைவில்லா ஒழுங்கான எடைக் குறைப்பு முறையாகும்.
வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த பழம், உடலுக்கு புத்துணர்ச்சி தரும். உடலை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
கொய்யா இலையில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலில் தேங்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
கொய்யாவும் இதன் இலையும் கஷாயம், சாலட், சாறு என எளிதாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையோடு கூடிய ஆரோக்கியம் தரும்.
மோட்டார் சைக்கிள் ஒன்றை இனந்தெரியாத இரண்டு நபர்கள் சூட்சமமான முறையில் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தத் திருட்டுச் சம்பவம் கிரிபத்கொட மஹர சந்திக்கு அருகில் இன்று (25) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி பதிவுகளை வைத்து சந்தேகநபர்களைத் தேடுவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர்
ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான அணி குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை, மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் சென்றுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவான காட்சிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தனது மூன்று பிள்ளைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16 வருட காலமாக அவர்களை தேடி வருவதாக கிளிநொச்சி தாயார் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாயார் ஒருவரே அவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி கண்டாவளை பகுதியை சேர்ந்த வைரமுத்து நிரஞ்சனாதேவி என்பவரின் மகன்களான , வைரமுத்து வைகுந்தன் 2009ஆம் ஆண்டு 02ஆம் மாதம் 11ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மகனான வைரமுத்து லோகிதன் 2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் 22ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரது மகளான வைரமுத்து பிரதாயினி 2009ஆம் ஆண்டு 05ஆம் மாதம் 12ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.
07 பிள்ளைகளில் மூன்று பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் , கணவர் மற்றும் ஏனைய நான்கு பிள்ளைகளுடன் கண்டவளையில் வாழ்த்து வருகின்றார்.
அதில் ஒரு பிள்ளை விசேட தேவைக்குரிய பிள்ளையாக காணப்படுகிறார். காணாமல் ஆக்கப்பட்ட மூன்று பிள்ளைகளையும் தேடி ஆணைக்குழுக்களுக்கு சென்றும் எந்த விதமான தகவல்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (25.06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பதில் ஈடுபடுவதற்கு மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் வீட்டு வேலைகள் உட்பட ஈடுபடுத்தல் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல்
தடை செய்யப்பட்டமைக்கு இணங்க தற்போது காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி இது தொடர்பான சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுதல் தொடர்பாக சரளமாக தெளிவுப்படுத்தும் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மொரட்டுவையில் மனைவி, தாய் மற்றும் மைத்துனியை பெட்ரோல் ஊற்றி எரித்து தலையில் தாக்கியதற்காக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீக்காயமடைந்த மூவரும் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் மனைவியான 28 வயதான இரண்டு பிள்ளை தாய் மற்றும் மனைவியின் தாய் மற்றும் மைத்துனி ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக தெரியவந்துள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மதியம் 12:20 மணியளவில் மொரட்டுவ, பகுதியில் உள்ள வீட்டில் நடந்துள்ளது.
மனைவி சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பி வந்து மீண்டும் வெளிநாடு திரும்ப ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். கணவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
அதற்கமைய, அவர்கள் அனைவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேக நபரின் மனைவி மற்றும் மாமியார் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது மனைவி மீது ஆசிட் தாக்குதல் அல்லது அவர் வெளிநாடு செல்வதைத் தடுப்பேன் என சந்தேக நபர் பலரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் சிவில் பாதுகாப்பு வீரர் எனவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மலையகத்தின் தலவாகலைப் பகுதியைச் சேர்ந்த விக்னராஜ் வக்சான் சர்வதேச ஓட்டப் போட்டியொன்றில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டியில், இலங்கை தடகள வீரர் விக்னராஜ் வாக்சன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அவர் 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று 15 நிமிடங்கள் 56 வினாடிகளில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார். வக்சானுக்கு இப்போட்டித் தொடரில் கிடைத்த இரண்டாவது பதக்கம் ஆகும்.
போட்டி ஆரம்பித்த முதல் நாளில் நடைபெற்ற 1,500 மீட்டர் ஓட்டத்தில், அவர் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.
வக்சான் இதற்கு முன்னர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி ஆசியப் பகுதியைச் சேர்ந்த பல நாடுகள் பங்கேற்கும் வகையில் நடத்தப்படுகிறது. இதுவரை போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என நான்கு பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இதேவளை, ருசிரு சதுரங்க வீரர், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே அவர் 1,500 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணித்தலைவி நிமலி லியனாராச்சி, பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை வென்று பிரகாசித்தார். அவர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் பெற்றிருந்தார்.
மேலும், குறுகிய தூர ஓட்ட வீரர் அயோமல் அகலங்க, 400 மீட்டர் தடைகளை உடைய ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்று இலங்கையின் பதக்க பட்டியலில் தமது பெயரையும் சேர்த்துள்ளார். இலங்கை அணிக்காக 8 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்று வருகின்றனர். போட்டி இன்று முடிவடைகிறது.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்தை மோசடி செய்ததற்காக இந்த சந்தேக நபர் நேற்று மாலை கிருலப்பனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் கொம்பனி தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையை சேர்ந்த 37 வயதுடையவராகும். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.