தும்பர தோட்டப்பகுதியில் கோழி திருடச் சென்றவர் ஆடை இன்றி ஒடிய பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதி வீடொன்றில் வளர்க்கும் கோழி காலையில் வெளியே சென்று மாலையில் கூட்டுக்கும் வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தது.
கடந்த இரண்டு நாட்டுகளுக்கு முன்னர் அந்த கோழி கூட்டுக்கு அருகில் சென்றவர் நன்கு ஆரோக்கியமாக இருந்த 7 – 8 கோழிகளை சாக்குப்பை ஒன்றுக்குள் போட்டு கொண்டுள்ளார்.
அவ்வாறு போட்டு கொண்டவர் எவ்வித தடையுமின்றி அங்கிருந்து தப்பிச் முயன்றுள்ளார். திருடும் போது பெய்த மழையே அவர் தப்பிச் செல்ல உதவியாக இருந்துள்ளது.
மகிழ்ச்சியுடன் கோழிகளை எடுத்த சென்ற திருடன் ஏதோ ஒரு பெட்டியின் மீது மோதுண்டவுடன் அவர் மீது தேனீக்கள் மொய்க்க ஆரம்பித்துள்ளன.
தேனீகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாமல் திருடி வந்த கோழிகளை மாத்திரமன்றி, அணிந்திருந்த ஆடைகளையும் அவ்விடத்திலேயே விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழ்பெண் இம்முறை போட்டியிடுகிறார்.
கிரிஷாந்தி விக்னராஜா என்ற இந்த இலங்கை வம்சாவளி பெண் ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின கொள்கைப்பிரிவு பணிப்பாளராக பணியாற்றினார்
கிரிஷாந்தி விக்னராஜா இலங்கையில் இருந்து 9 மாத குழந்தையாக அமெரிக்காவில் தமது பெற்றோருடன் குடியேறினார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இம்முறை அவர் போட்டியிடுகிறார்.
நான் ஒரு தாய், நான் ஒரு பெண், நான் உங்களின் அடுத்த ஆளுநராக வரவேண்டும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மேரிலேன்ட்டின் வாக்காளர்கள் இம்முறை பெண் ஒருவரை ஆளுநராக தெரிவுசெய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம் காரணமாக வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று காலை 7.05 மணிக்கு 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இலேசான அதிர்வு உணரப்பட்ட போதிலும், இரண்டாவது முறை பாரிய சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடியதாகவும், நில நடுக்கத்தால் பொது மக்கள் அச்சத்துடன் உள்ளனர் எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தைப் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் யாழ் பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஓமந்தை மாதர்பனிக்கர்குளம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளியான இராசையா இராசகுமாரன் 42 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைப்பலனின்றி கடந்த 20ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து நேற்று சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்டு நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஓமந்தை, மாதர்பனிக்கர்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவர் கடந்த சில வருடங்களாக சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னணி இசையமைப்பாளரான அனிருத் பெண்ணாக வேடமிட்டு வௌியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர்கள், நடிகைகள் தங்களது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் போட்டோ ஷூட் செய்து வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தற்போது அனிருத்தும் இணைந்துள்ளார்.
அனிருத் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார். இதன்போது, பெண் வேடம் அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
யார் இந்த பெண் என்று அனைவரும் சிந்திக்கும் நிலையில், அனிருத் தான் என்று ஒரு சிலர் கூறியதால் தான், கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.
கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு இடம்பெற்றுவிட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்விவகாரம் வெளியில் வந்து 4 நாட்களாக அமைதியாக இருந்த மார்க் ஸுக்கர்பேர்க் தற்போது தனது அமைதியை கலைத்து ‘தவறு நடந்துவிட்டது’ என ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மார்க் ஸுக்கர்பேர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் தகவலொன்றை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா விவகாரம் தொடர்பில் நான் உங்களுடன் முக்கிய விடயமொன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது. அதை செய்யமுடியாவிட்டால் நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய முடியாது.
தகவல் திருட்டு எப்படி நடந்தது என்பதை புரிந்துகொள்ள முயற்சித்துவரும் வேளையில் இனிவரும் காலத்தில் இவ்வாறு ஒன்று நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன்.
ஆனால், இது போன்ற தகவல் திருட்டுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துவிட்டோம் என்பது ஒரு நற்செய்தி. அதேவேளையில், நாங்கள் சில தவறுகளையும் செய்துவிட்டோம். அதை திருத்திக்கொள்ள வேண்டும்.
நான் தான் பேஸ்புக்கை ஆரம்பித்தேன். அந்த தளத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு நானே பொறுப்பாவேன். இந்த கசப்பான அனுபவத்தின் மூலம் பாடம் கற்றுக் கொள்வோம்.
இனிவரும் காலங்களில் இது போல தகவல் திருட்டை பேஸ்புக் சகித்துக்கொள்ளாது. கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை பேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்யும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் 5 கோடி பயனாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பத்தன்மை குறைந்து அதன் மதிப்பு வெகுவாககுறைவடைய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், பேஸ்புக் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், வட்ஸ் அப்பின் துணை நிறுவுனரான பிரைன் அக்டன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
பேஸ்புக்கை நீக்க வேண்டிய நேரம் இது எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் தற்போது பூதாகரமாயியுள்ளது.
திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரிக்கு செல்லும் பாதையில் காயங்களுடன் சடலம் ஒன்று பொதுமக்களின் தகவலை அடுத்து புல்மோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
புல்மோட்டை 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய உபைத்துள்ளா சஹீர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தின் அருகே காலியான மதுபோத்தலும் நொருக்குத்தீனியும் காணப்படுவதால் மதுபோதையில் ஏற்பட்ட தகராரில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போன்று, அளவுக்கு மீறிய அன்பும் சில நேரங்களில் ஆபத்தை உண்டாக்கும்.
டெல்லியில் தனது தோழி தன்னை விட்டு பிரிந்துசென்ற காரணத்தால் அவர் மீது அசிட்டை ஊற்றியுள்ளார் சக தோழி. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 24 வயதுடைய இரண்டு தோழிகளும் விடுதியின் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர்.
இதில், வேறு ஒருவருக்கு மாற்று வேலை கிடைத்து காரணத்தால், தங்கியிருந்த இடத்த விட்டு வேறு இடத்திற்கு மாற முடிவு செய்துள்ளார், இதனை தாங்கி கொள்ள முடியாத சக தோழி, அவரை தடுத்து பார்த்துள்ளார்.
இருப்பினும், தோழி மறுப்பு தெரிவிக்கவே, கோபம் கொண்ட சக தோழி அசிட்டை எடுத்து அவர் மீது ஊற்றியுள்ளார். இதில் அவரது கழுத்து மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என அவரது மனைவி ஹசின் ஜஹான் கொல்கத்தா பொலிசில் புகார் அளித்திருந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் வற்புறுத்தலின் பேரில் கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் கிரிக்கெட் முறைகேடுகளிலும் ஈடுபட்டார் என ஷமியின் மனைவி புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரத்தில் பிசிசிஐ அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
முகமது ஷமியின் வீட்டுக்கு சென்று கொல்கத்தா பொலிசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில், தனது கணவர் பேஸ்புக் மற்றும் வட்ஸ் அப் வழியாக வேறு ஒரு பெண்ணுடன் உரையாடியதை
அம்பலப்படுத்தியுள்ளார்.
அந்த உரையாடலில் முகமது ஷமி, தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த உயர்தர மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஹமீத் ஹல் உசைனியா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவனே இவ்வாறு நேற்று பகல் 1 மணியளவில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 42 மாணவர்களும், இரண்டு ஆசிரியர்களும் நுவரெலியா பிரதேசத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
நேற்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்த போதே கொத்தலை ஆற்றில் நீராடுகையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Castaway என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போலவே 29 ஆண்டுகளாக மனிதர்கள் யாருமற்ற தீவில் தனியாக வசித்துவரும் Mauro Morandi (79)விற்கு புதிதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
Corsica மற்றும் Sardinia ஆகிய இரண்டு தீவுகளுக்கிடையில் அமைந்துள்ளது Isle of Budelli என்னும் தீவு.
50 வயதாக இருக்கும்போது தனது படகின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீவுக்கு வந்திறங்கிய Mauro, தீவின் அழகில் தன்னையே பறிகொடுத்துவிட்டார்.
அங்கு தீவைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த மனிதர் ஓய்வு பெறுவதை அறிந்த Mauro, அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.
தினமும் ரோஜா நிறத்தில் விடியும் காலைப்பொழுதுகளை 29 வருடங்களாகத் தான் மட்டும் கண்டு ரசித்துக் கொண்டிருந்த Mauro, சமீபத்தில் தான் கண்ட காட்சிகளை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்று எண்ணி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றத் தொடங்கினார்.
பலர் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். பலர் தீவுக்கு சுற்றுலா வரத் தொடங்கினர். குளிர் காலத்தில் தனியாக இருக்கும் அவரைக் காண வெயில் காலத்தில் 1300 பேர் வரை வந்துள்ளனர்.
அமைதி விரும்பியாக இருந்த Mauro பிரபலமாகத் தொடங்கும் நேரத்தில் புதிதாக ஒரு பிரச்சினை வந்துள்ளது.
அது என்னவென்றால், அரசு இந்த தீவை பொறுப்பெடுத்துக் கொண்டு La Maddalena National Parkஇன் ஒரு பகுதியான சுற்றுலாத்தலமாக மாற்றிவிட்டது.
இதனால் அவர் இனி தொடர்ந்து இங்கே வாழ அனுமதிக்கப்படுவாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
அரசின் முடிவை எதிர்த்து 18000பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
La Maddalena National Parkஇன் புதிய பொறுப்பாளர், தான் தீவில் வசிப்பது குறித்து என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை எதிர்பார்த்து Mauro காத்திருக்கிறார்.
வவுனியாவில் மாதாந்தம் சீராக மின்சாரப் பட்டியல், மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்படாமையினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மின்சாரப் பட்டியல் சீராக மாதாந்தம் பாவணையாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் குறித்த மின்மானி வாசிப்பு தொகையை விட அதிகளவான நிதியை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மாதத்தின் முதலாம் திகதியில் மின்மானி வாசிப்பு எடுக்கப்பட்டு மின்சார பட்டியல் வழங்கப்படும் பட்சத்தில் அடுத்த மாதம் முதலாம் திகதி மானி வாசிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு மின்மானி வாசிப்பு மேற்கொள்ளப்படுமாக இருந்தால், குறித்த பாவணையாளர் ஒரு மாதகாலத்தில், தான் பயன்படுத்திய மின்மானிக்கான பணத்தினை செலுத்த முடியும் என்பதுடன் கட்டணம் குறைவாக காணப்படும் சந்தர்ப்பம் உள்ளது.
எனினும் அவ்வாறு மேற்கொள்ளப்படாது இரு மாதங்கள் கழித்து மானி வாசிப்பு மேற்கொள்ளப்படுமாக இருந்தால் குறைந்த கட்டணத்திற்கான மானி வாசிப்பையும் மீறி அதிகளவான கட்டண எல்லைக்குள் மானி வாசிப்பு சென்றுவிடும்.
எனவே மாதாந்தம் மின்மானி வாசிப்பு பார்க்கப்பட்டு மின்சார பட்டியல் வழங்கப்படுமாயின், மின்பாவணையாளர்கள் தமக்கான மின்பாவனை கட்டணத்தினை குறைந்த கட்டணத்தில் செலுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசியலில் ரஜினிக்கு வெற்றி கிடைக்கும் என்று ஸ்ரீ காளஹஸ்தி குருக்கள் கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடம், தெலுங்கு வருடப் பிறப்பான விளம்பி நாம வருடம் கடந்த 18ஆம் தேதி பிறந்தது. அன்றைய தினம் அனைத்து முக்கிய கோயில்களிலும் புதிய பஞ்சாங்கம் வேத பண்டிதர்களால் படிக்கப்பட்டது.
இதில் வாயுத்தலமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆஸ்தான குருக்கள் விளம்பி பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன் படித்து அதன் பலன்களை கூறினார். அப்போது அவர், 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியே பிரதமர் ஆவார்.
மேலும், தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்துக்கு வெற்றி கிடைக்கும் என்று விளம்பி நாம ஆண்டின் பஞ்சாங்க வாக்கினை ராமலிங்கேஸ்வர குருக்கள் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தமிழக அரசியலில் வெல்லப்போவது கமலா? ரஜினியா என்ற விவாதம் போய்க்கின்றிருக்கிது, அதுமட்டுமின்றி திராவிட கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து தமிழக அரசியல் பரபரப்பில் உள்ள நிலையில், பஞ்சாங்கத்தின் இந்த கணிப்பு சற்று பரபரப்பை அதிகரித்துள்ளது.
வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவில் கும்பாபிஷேக தின நவோத்திர சகஸ்ரசத (1008) சங்காபிஷேக மணவாளக்கோல விழாவும் பால்குட பவனியும் நேற்றுமுன்தினம் (21.03) வெகு விமர்சையாக நடைபெற்றது.
அன்றய தினம் வவுனியாவின் முக்கிய பிரமுகர்களும் ஏராளமான பக்த அடியவர்களும் விழாவை சிறப்பித்தமை சிறப்பம்சமாகும் .
மேலும் கலை நிகழ்வுகள், நாதஸ்வர சங்கமம், சமய சொற்பொழிவுகள், பண்பாட்டினை பிரதிபலிக்கும் கலாசார அம்சங்கள் என்பன விழாவை மேலும் மெருகூட்டியது குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு மிகச் சமீபமாக மகாவலி கிளை ஆற்றில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வவுனியா யுவதி பற்றி விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கணேசபுரம் மரக்காரம் பளை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மருதை சுதர்சினி (வயது 33) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று
இலங்கை திரும்பிய நிலையில் அவரது சடலமும் சில உடமைகளும் கடந்த 18ம் திகதி வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் றிபானின் முன்னிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
இச்சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வந்த வாழைச்சேனைப் பொலிஸார் இதுவரை சுமார் 15 இற்கு மேற்பட்டோரை விசாரணை செய்துள்ளதுடன் ஒரு முச்சக்கரவண்டிச் சாரதி உட்பட சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்து அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் இந்த படுகொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபரும் அவரது குடும்பமும் பற்றிய தகவல்கள் தெரிய வந்திருப்பதாகவும். ஆயினும், குறித்த நபரும் அவரது குடும்பமும் பிரதேசத்திலிருந்து தப்பித் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் சிசிரிவி காணொளிக் கமெராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 18.03.2018 அன்று கிரான் பிரதேச செயலகத்திற்குச் செல்லும் வீதியில் கிரான் பிரதேச செயலகத்திற்குச் சமீபமாக மரங்களடர்ந்த பகுதியில் மகாவலி கிளை ஆற்றின் கரையில் இறந்த இந்த யுவதியின் சடலம் கிடப்பது பற்றி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில் சடலம் காணப்பட்ட மகாவலி கிளை ஆற்றின் சற்றுத் தொலைவின் ஒரு பகுதியில் சுதர்சினி அணிந்திருந்ததாக நம்பப்படும் காலணிகள், காதணி, கொண்டைக் கௌவி, சுதர்சினியைத் தாக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படும் உடைந்த போத்தல் கண்ணாடிகள், இரத்தக் கறை, தலைமுடி என்பனவும், இன்னும் சற்றுத் தொலைவில் சுதர்சினியின் சூட்சேசும் அதற்குள் பெண்கள் அணியும் உள்ளாடைகள், சுகாதாரத் துவாய்கள், வாசனை சோப்கள் உள்ளிட்ட இன்னும் சில பொருட்கள் மீட்கப்பட்டன.
ஆற்றின் வேறொரு இடத்தில் ஆற்று நீரோட்டத்தில் கரையொதுங்கியவாறு இன்னொரு பொதிக்குள்ளிருந்து வெதுப்பி உபகரணமும் மீட்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட சுதர்சினியின் தந்தை கடந்த 10 வருடங்களுக்கு முதல் இந்தியாவுக்குச் சென்ற வேளையில் காணாமல் போய்விட்டார்.
அதன் பின்னர் தனது 3 பெண் மகள்களையும் ஒரு ஆண் மகனையும் வளர்ப்பதற்காக சுதர்சினியின் தாய் வவுனியாவிலுள்ள உணவு விடுதியொன்றில் கூலித் தொழில் செய்து வந்த வேளையில் விபத்தொன்றில் சிக்கி கால் முறிந்தபோது குடும்பக் கஸ்டம் காரணமாக சுதர்சினி வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்று நாடு திரும்பிய வேளையிலேயே மிருகத்தனமாக அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.