உயிரைப் பறித்த தினேஷ் கார்த்திக்கின் சிக்சர்!!

வங்கதேச அணியுடனான இறுதிபோட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றதால் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நிதாஹஸ் டி20 கிண்ண இறுதி போட்டி இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இப்போட்டியில் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு கிண்ணத்தை பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் குஜராத்தின் சூரத்தில் பிரவீன் பட்டேல் (62) என்ற ஆசிரியர், கடைசி பந்தில் இந்திய அணி சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற உற்சாகத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான பட்டேல், தனது குடும்பத்துடன் இறுதிபோட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், பதட்டமான கடைசி பந்தை பார்த்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பட்டேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் மரணம்!!

பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரேம் பாட்யா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது 78. 1960 ஆம் ஆண்டில் 56 first-class போட்டிகளில் விளையாடியுள்ளார். Irani Cup போட்டியில் இவரது பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது.

டெல்லியில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனியில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை : அகதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!!

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதி என பொய்யாக நுழைந்த ஈரான் அகதி பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹூசன் என்ற அகதி கடந்த 2015-ல் ஜேர்மனிக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016 அக்டோபரில் மரியா லெடன்பர்கர் (19) என்ற மருத்துவ மாணவியை பிரிபேர்க் நகரில் வைத்து ஹூசைன் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மரியாவின் கழுத்தை நெரித்து கொன்று அங்குள்ள ஆற்றில் வீசியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் ஹூசனை கைது செய்த நிலையில் அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் ஹூசன் ஆப்கானிஸ்தான் அகதி என பொய்யாக கூறியதும், நிஜத்தில் அவர் பிறந்தது ஈரானில் எனவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஹுசைனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே கிரீஸில் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக கடந்த 2013-ல் ஹுசைனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆனால் ஒரு வருடத்திலேயே சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணைக் கொன்று இதயத்தை சமைத்து சாப்பிட்ட மனித மிருகம்!!

ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவன் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று அவளது இதயம் மற்றும் நுரையீரலை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனைப் பிரிந்த Ekaterina Nikiforova (27) தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். Ekaterinaவின் சகோதரரின் நண்பனான Alexey Yastrebov (35) என்பவன்தான் இந்த கொடூர செயலைச் செய்துள்ளான்.

Ekaterinaவை கொன்றுவிட்டு ஒரு கத்திரியை எடுத்து தன் தொண்டையில் குத்திக்கொண்டிருக்கிறான். பின் அந்த வீட்டின் சொந்தக்காரரான Avdeeva என்னும் பெண்ணை அழைத்து, நான் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறேன், என் பக்கத்தில் ஒரு சவம் கிடக்கிறது என்று கூறியிருக்கிறான்.

Avdeeva உடனடியாக பொலிசுக்கு தகவல் கூற அவர்கள் வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது “அவளது இதயம் அடுப்பில் வெந்து கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறான்.

Ekaterinaவுக்கும் அவனுக்கும் ஏதோ பிரச்சினை இருந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் “ நான் அவளிடம் உன் உன் இதயத்தை சாப்பிடுவேன் என்று கூறியிருந்தேன், அது போலவே செய்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறான்.

6 ஆண்டுகளுக்குப் பின்னர் பெற்றோருடன் இணைந்த இளைஞர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வந்த இளைஞரை அதிகாரிகள் சேர்ந்து மீண்டும் பெற்றோருடன் இணைத்து வைத்தனர்.

பாகிஸ்தான் நாட்டவரான இளைஞர் ஒருவர் பெற்றோரை பிரிந்து கடந்த ஆறு ஆண்டுகளாக துபாயில் சாரதியாக பணிபுரிந்து வந்தார்.

அவரது பெற்றோர்கள் பாகிஸ்தானிலும் குடியிருந்து வந்துள்ளனர். ஏழ்மை நிலையில் இருந்த குடும்பத்தை காப்பாற்றும் பொருட்டு குறித்த இளைஞர் வேலைக்காக துபாய் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது முயற்சிக்கு துபாய் அரசு பணியே கிட்டியுள்ளது. இதனால் நீண்ட பல ஆண்டுகளாக அவர் பாகிஸ்தான் சென்று தமது பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

இந்த விவகாரம் அதிகாரிகள் பலருக்கும் தெரிந்திருந்த நிலையில், குறித்த இளைஞரின் பெற்றோர் சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் உம்ரா முடித்து துபாய் வழியாக பாகிஸ்தான் செல்ல உள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து குறித்த இளைஞரை அவரது பெற்றோரை சந்திக்க வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றது.

துபாய் சர்வதேச முனையத்தில் இந்த நெகிழ்ச்சி சந்திப்பு நடைபெற்றுள்ளது. நீண்ட 6 ஆண்டுகளுக்கு பின்னர் தமது பெற்றோரை சந்தித்த இளைஞர் கண்ணீர் விட்டு அழுதது, பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி : ஆதாரங்களை அழித்து ஏமாற்றியது அம்பலம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெண் ஒருவர் தமது கணவனை கொடூரமாக கொலை செய்துவிட்டு பொலிசாரை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.

பெங்களூருவின் விஜயநகர் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜனவரி 17 ஆம் திகதி உமா என்பவர் தமது கணவரை வாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

பின்னர் ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு அதே மாதம் 21 ஆம் திகதி பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தாம் மகனுடம் உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் தமது கணவரை மர்ம நபர்கள் எவரோ கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஜயநகர பொலிசார் குறித்த கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டதில், கொலை குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதன் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னரே சம்பவம் நடந்திருக்க வேண்டும் என தெரிய வந்தது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் உமாவை அழைத்து விசாரித்த பொலிசாரிடம் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

பெங்களூருவில் ரியல் எஸ்டேட் முகவராக இருக்கும் கணேஷ் என்பவரே உமாவின் கணவர். இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பல நாள் வாக்குவாதத்தில் முடிந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று அதேபோன்று வாக்குவாதத்தில் ஏற்பட்ட உமா ஆத்திரத்தில் வாளால் கணேஷை வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கணேஷ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். அடுத்த நாள் கொலைக்கு பயன்படுத்திய வாள், மற்றும் ரத்தக்கறை படிந்த உடைகளை ஒரு பைக்குள் எடுத்துக் கொண்டு தமது மகனுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு தமது தந்தையிடம் நடந்தவற்றை கூறி, பின்னர் ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துள்ளார்.

அதன் பின்னரே பொலிசாருக்கு உமா கொலை தொடர்பில் புகார் அளித்துள்ளார். தற்போது கொலை தொடர்பில் உமா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகன் அபிஷேக் மற்றும் உமாவின் தந்தை ராஜு ஆகியோரையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொன்றது ஏன் : கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் சிவராம், இவர் மனைவி கவிதா.

கடந்த 1-ஆம் திகதி கவிதா தனது வீட்டில் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அவர் வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

இதை வைத்து நகைக்காக நடந்த கொலை இதுவென உறுதி செய்த பொலிசார் கொலையாளியை தேடி வந்த நிலையில் பலரிடம் விசாரித்தும் வந்தனர்.

அப்படி கிரீஷ் (20) என்ற இளைஞரை பொலிசார் விசாரித்த போது, தனது நண்பர்களான ஆஷிஷ்குமார் (21) மற்றும் அசோக் (24) ஆகியோருடன் சேர்ந்து கவிதாவை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

கிரீஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில், மது, கஞ்சா போன்ற போதை வஸ்துக்களுக்கு நானும் என் நண்பர்களும் அடிமையாகி விட்டோம். இதையெல்லாம் வாங்க எங்களுக்கு அதிக பணம் தேவைப்பட்டது.

நான் முன்னர் சிவராம்- கவிதா வீட்டின் அருகில் குடியிருந்த போது அவர்கள் பணக்காரர்கள் என்பதை அறிந்தேன். இதையடுத்து ஆஷிகுமார் மற்றும் அசோக்குடன் சேர்ந்து அவர் வீட்டில் திருட திட்டமிட்டோம்.

அதன்படி கவிதா மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து மூவரும் வீட்டுக்குள் நுழைந்து அவர் கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகளை திருடிவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டோம் என கூறியுள்ளார். இதையடுத்து மூன்று இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் கடைசி வார்த்தைகள்!!

இந்தியாவில் 9 ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நொய்டாவில் இக்ஷா ராகவ் ஷா என்ற 15 வயது சிறுமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிறுமி பள்ளி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றும், இதனால் அவளது ஆசிரியர்கள் அவளை திட்டியதாக தெரிவித்தனர்.

இதன் காரணமாக சிறுமி மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாக அச்சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமியின் நோட்டி புத்தகத்தில் நான் தோற்றுவிட்டேன், நான் என்னையே வெறுக்கிறேன் என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். மேலும் அந்த பக்கத்தில் தனது கையெழுத்துக்களை ஏராளமாக கிறுக்கியுள்ளார்.

இது சிறுமியின் கையெழுத்துதானா என்பது குறித்து அவரது பெற்றோர்களிடம் காவல்துறையினர் உறுதிசெய்து கொண்டனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம், மாணவி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் சிபிஎஸ்இ வழங்கியுள்ள அறிவுறுத்தலின் படி மறுதேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பார் என தெரிவித்தனர்.

ஏற்கனவே இவ்விவகாரத்தில் சிறுமியின் பள்ளி ஆசிரியைகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெறும் என பள்ளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் அதிரடி நடவடிக்கை!!

 
வவுனியாவின் நகர்ப் பகுதியில் நகரசபையின் அனுதியின்றி கட்டப்பட்ட வியாபார நிலையங்களின் கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன் கட்டட நிர்மாண வேலைக்கான உபகரணங்ளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியில் நகரசபையின் அனுமதி இன்றி கட்டப்பட்டு வரும் இரு கடைகளின் கட்டட வேலைகளை நிறுத்துமாறு கடந்த காலங்களில் பல முறை நகரசபையினால் எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நகரசபையின் இவ்வறிவுறுத்தல்களை ஊதாசீனப்படுத்தி குறித்த இரு வியாபார நிலையங்களிற்கான கட்ட வேலைகள் நடைபெற்று வந்ததை அடுத்து இன்று வவுனியா நகர சபை செயலாளரின் தலைமையில் குறித்த கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன் கட்ட வேலைகளிற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பில் 4 ஏக்கரில் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ள பாரிய ஹோட்டல்!!

இலங்கையில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமான ஹோட்டல் தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The One Sri Lanka என்ற பாரிய ஹோட்டல் தொகுதி மற்றும் The Ritz – Carlton Residences என்ற வீட்டுத் தொகுதி ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான தெளிவூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பை மையமாக வைத்து இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக செலவிடப்படும் தொகை 500 மில்லியன் டொலர்களாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையிலுள்ள 3000 இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கவுள்ளது.

இதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சியை பெற முடியும் என திட்டத்தின் பங்குத்தாரர் எலெக்ஸ் லுவெல் தெரிவித்துள்ளார்.

நவீன ஹோட்டலில் 473 அறைகள் மற்றும் வீட்டுத் தொகுதியில் 638 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

செயற்றிட்டத்தின் முதற்கட்ட பணிகள் கடந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் அனைத்து நிர்மாண பணிகளும் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புனிதத்தலம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் : 32 பேர் பலி!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நவ்ருஸ் எனப்படும் பாரசீக புத்தாண்டு தினம் வசந்தகால தொடக்கவிழாவாக நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், காபுல் நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கர்ட்-இ ஷாகி தர்கா பகுதியில் ஏராளமானவர்கள் வழிபாட்டுக்காக குவிந்தனர். அப்போது, அங்கு வந்த மனிதகுண்டு தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரசீக புத்தாண்டை வசந்தகாலத்தின் தொடக்க விழாவாக கொண்டாடும் ஷியா பிரிவினரின் நம்பிக்கைக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பழைமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். நேற்று நடைபெற்ற தாக்குதலுக்கும் தங்களது இயக்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தலிபான் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இது தங்களது கைவரிசைதான் என உள்ளூரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரை விவகாரம் : 26ம் திகதி இறுதி முடிவு!!

வவுனியா மாவட்டத்திற்கான இவ்வருடத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 26ஆம் திகதி காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளதாக மாவட்ட திட்டப்பணிப்பாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருடத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமாக இது இடம்பெறவுள்ளதுடன், பல தரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக வீதிகள் புனரமைப்பு, வீட்டுத்திட்டம், விவசாயம், தண்ணீர், குப்பை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் மாவட்ட செயலகத்திற்குள் அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரை தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாகவும்,

ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன், வர்த்தக வாணிபத்துறை அமைச்சா ரிஷாட் பதியூதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், திணைக்களப்பணிப்பாளர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட திட்டப்பணிப்பாளரினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளாக மேலும் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!

வாரியபொல – கலுகமுவ வீதியில் ஹேனேகெதர பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொடபத்வெகர, பனாதரகம பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடிதம் எழுதி வைத்துவிட்டு யாழில் யுவதி ஒருவர் தற்கொலை!!

தனது மரணத்திற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ். மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் இவர் நேற்று பிற்பகல் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்னர் யுவதி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ். பிராந்திய பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த யுவதி கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டு சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் யாழ். மாவட்ட விழிப்புலனற்றோர் சங்கத்தில் கடமையாற்றி வந்த இந்த யுவதி எழுதியுள்ள கடிதத்தில் “அந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக செயற்படுபவர் தான் தனது மரணத்திற்கு காரணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போன இளைஞன் திருநங்கையாக மீட்பு : கதறி அழுத தாய்!!

தமிழகத்தில் காணமல் போன இளைஞன் திருநங்கையாக மீட்கப்பட்டதால், அவரைக் கண்டவுடன் தாய் கதறி அழுததைக் கண்டு நீதிபதி அவருக்கு அறிவுரை கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

சென்னை கொரட்டுரைச் சேர்ந்தவர் கலைவாணி. கூலித் தொழிலாளியான இவருக்கு ராகுல் என்ற மூத்த மகன் உள்ளார்.

ராகுல் திடீரென்று காணமல் போனதால், இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் பொலிசார் சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினார்ல் கலைவாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில் தனது மூத்த மகன் கடந்த ஜனவரி மாதம் காணமல் போய்விட்டதாகவும், இத் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் சரிவர நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், காணமல் போன எனது மகனை கண்டு பிடித்து நேரில் ஆஜர் படுத்தும் படி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போன ராகுலைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன் படி பொலிசார் ராகுலை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் விழுப்புரத்தில் தங்கியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அங்கே சென்ற போது ராகுலுக்கு பதிலாக ஒரு திருநங்கை இருந்துள்ளார். இதனால் பொலிசார் அவரிடம் ராகுல் எங்கே என்று கேட்டுள்ளனர். உடனே அந்த திருநங்கை என் பெயர் சுமித்ரா, நான் தான் ராகுல் என்று தெரிவித்துள்ளார்.

பொலிசார் உண்மையை கூறு என்று கேட்ட போது, நான் தான் ராகுல் என் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் குடும்பத்தாருடன் இருக்க வேண்டாம் என்று இங்கு வந்துவிட்டேன், இங்கு திருநங்கையாக வாழ்கிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார்.

பொலிசாரோ நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. உன்னை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி அவரை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மகன் ராகுல் வருவார் என்று காத்திருந்த தாயார் கல்யாணிக்கு, பொலிசார் சேலை கட்டிய ஒருவரை அழைத்து வந்ததைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தார்.

அவர் என்னுடைய மகன் எங்கே என்று கேட்ட போது, இவர் தான் உங்கள் மகன் திருநங்கையாக மாறிவிட்டான் என்று நடந்தவற்றை கூறியுள்ளனர்.
மகன் திருநங்கையாக மாறி வந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் தாயார் கல்யாணி கதறி அழுதார். ஏன்டா இப்படி குடும்பத்துக்கு அவமானத்தை தேடித் தருகிறாய், ராகுலாக வா என்று அழுதார்.

ராகுல் அம்மா அது என்னால் முடியாது, நான் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று அழுதார்.

தாயின் பரிதாப நிலையைப் பார்த்து வருத்தப்பட்ட நீதிபதிகள் திருநங்கை சுமித்ராவின் நிலையை தாயார் கலைவாணிக்கு எடுத்துரைத்தனர்.

அதைத் தொடர்ந்து திருநங்கையாக மாறிய ராகுலிடம் பிச்சை எடுக்ககூடாது, நன்றாக படிக்கவேண்டும் தவறான வழியில் செல்லக்கூடாது, தாய்க்கு உதவவேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

பல பெண்களை சீரழித்து வீடியோ எடுத்தேன் : வசமாக சிக்கிய ஜோதிடர் பரபரப்பு வாக்குமூலம்!!

தமிழ்நாட்டில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் எடுத்த ஜோதிடரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஸ்ரீ அருள் தவசி ஜோதிடாலயா என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வந்தவர் பன்னீர் செல்வம்.

இந்நிலையில் மகளின் திருமணத்திற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி பன்னீரை அணுகியுள்ளனர்.

ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்த பன்னீர், பெண்ணுக்கு தோஷம் இருப்பதாகவும், அவரை நேரில் அழைத்து வந்தால் பரிகாரம் செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.

அதன்படி தங்களது 18 வயது மகளை பெற்றோர் அவரிடம் கூட்டி வந்த நிலையில், அவர்களிடம் இரண்டு மண் விளக்குகளை கொடுத்து பூஜை அறைக்கு வெளியில் காவலுக்கு நிற்க வைத்து விட்டு இளம்பெண்ணை மட்டும் அழைத்து கொண்டு பூஜை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார்.அங்கு வைத்து தோசம் கழிப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை சீண்டியுள்ளார்.

தனது விருப்பத்திற்கு ஒத்துழைக்காவிட்டால், மந்திர சக்தியால் தாய் தந்தையரை முடமாக்கி, அந்த பெண்ணையும் நடக்க முடியாதபடி செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி அந்த இளம் பெண்ணை பன்னீர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அறையில் பொறுத்தப்பட்டிருந்த ரகசிய கமரா மூலம் தான் செய்யும் அத்துமீறல்களை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

பின்னர் நடந்த அனைத்தையும் அந்த பெண் பெற்றோரிடம் கூற, உடனடியாக பன்னீர் செல்வத்தை பிடித்து அவர்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தோசம் கழிப்பதாக கூறி தனது பூஜை அறைக்கு அருகில் இருக்கின்ற ரகசிய அறைக்கு அழைத்துச்சென்று பல பெண்களிடம் இதுபோன்று பாலியல் வன்கொடுமையிலும் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டதையும், 7 பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததையும் அவரே ஒப்புக்கொண்டு பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.