விமானத்தின் கதவை திறந்த போது நேர்ந்த விபரீதம் : பரிதாபமாக பலியான பெண்!!

உகாண்டாவில் விமானத்தின் அவசர கால கதவை பணிப் பெண் திறந்து பார்த்த போது, அவர் பரிதாபமாக கீழே விழுந்து இறந்துள்ளார்.

உகாண்டாவின் Entebbe சர்வதேச விமானநிலையத்திலிருந்து கடந்த புதன் கிழமை பிற்பகல் EK729 என்ற விமானம் துபாய் செல்வதற்கு பயணிகள் ஏறிய பின் புறப்பட தயாராக இருந்துள்ளது.

அப்போது விமானப் பணிப் பெண் ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறந்து பார்த்து சோதித்த போது, எதிர்பாரதவிதமாக கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் தலையில் பலமாக அடிபட்டதால், அவர் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கண்ட பயணி ஒருவர், விமானத்தின் கதவை திறந்து பார்த்த போது கீழே விழுந்தார். சுமார் அது 60 அடி உயரம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

உயிரிழந்த பணிப் பெண்ணின் குடும்பத்திற்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்றும், அதுமட்டுமின்றி இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

குண்டு துளைக்காத எண்ணெய் : கண்டுபிடித்த இலங்கை இளைஞன்!!

இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குண்டு துளைக்காத எண்ணெய் ஒன்றை உருவாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஹொரணை உதுருதுடுவ என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு குண்டு துளைக்காத எண்ணெய்யை உருவாக்கியுள்ளார்.

நீண்ட நாட்களாக மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் இந்த தைலம் அல்லது எண்ணெய் வகையை உருவாக்கியதாகவும், பண்டைய குருக்களின் மந்திர தந்திரங்களைப் பயன்படுத்தி இந்த எண்ணெய் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணெய் போத்தலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அது எண்ணெய் போத்தல் மீது படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விஸ்ணு கிராந்தி தைலம் என இந்த எண்ணெய்க்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் போத்தலுக்கு எவரினாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு லாப நோக்கிலும் இதனை உருவாக்கவில்லை எனவும், சட்ட ரீதியான தேவைகளின் போது இந்த எண்ணெய்யை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த எண்ணெயின் மகிமை தொடர்பில் எவ்வித விஞ்ஞானபூர்வமான நிரூபணங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய திரைப்படம்!!

சினிமாவை பொறுத்தவரை எப்போதும் வசூல் என்றால் முன்னணி நடிகர்களின் படங்களாக தான் இருக்கும். அதை தாண்டி ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படங்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும்.

ஆனால் பொலிவூடில் புதுமுகங்கள் மட்டுமே நடித்து Luv Ranjan என்பவர் இயக்கத்தில் வெளிவந்த Sonu Ke Titu Ki Sweety என்ற படம் உலகம் முழுவதும் 135 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

முன்னணி நடிகர்கள் படங்களே பாக்ஸ் ஆபிஸில் தடுமாற, இப்படி புதுமுகங்கள் நடித்த படம் வசூல் சாதனை படைப்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

மேலும், இதற்கு முன் சிறுபட்ஜெட் படங்களில் சாய்ரட் என்ற படம் 100 கோடிகள் வரை வசூல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதன் மூலம் படத்தின் நாயகர்கள், நாயகிகள் பிரச்சனை இல்லை, நல்ல கதை என்றால் படம் வசூலை வாரிகுவிக்கும் என்ற எண்ணத்தை Sonu Ke Titu Ki Sweety படம் விதைத்துள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் புகைப் பிடிப்பவர்களால் பயணிகள் அசௌகரியம்!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் புகைப்பிடிப்பவர்களால் பயணிகள் பெரிதும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சிகரட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்களை பெற்றுக்கொள்பவர்கள் அதனை அப்பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பொது வெளியில் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பேருந்து நிலையத்திற்குள் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்தார் மகிந்த!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவையில் இருக்கவில்லை.

சில நிமிடங்கள் கழித்து, நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் அதனைப் பார்த்து விட்டு, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவிடம், தவறான ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருக்கும் விடயத்தை அறிவித்துள்ளார்.

சனத் நிசாந்த உடனடியாக மகிந்தவுக்கு அருகே சென்று ஆசனம் மாறி அமர்ந்திருப்பதை தெரிவித்தார். உடனடியாக மகிந்த ராஜபக்ச சம்பந்தனின் ஆசனத்தை விட்டு எழுந்து தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்ட மகிந்தவுக்கு அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை கூட்டு எதிரணி மேற்கொண்டு வரும் நிலையில், சம்பந்தனின் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருந்தது சபையில் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

-தமிழ்வின்-

தமிழ் சினிமாவின் நிலை கவலைக்கிடம்!!

தமிழ் சினிமா தற்போது சோதனை காலத்தை கடந்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக எந்த புதுப்படங்களும் வெளிவரவில்லை, அதுமட்டுமில்லாமல் திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல மூத்த இயக்குனர் எஸ்.பி முத்துராமன் தற்போதைய தமிழ் சினிமாவின் நிலைமையை பற்றி கூறுகையில், தமிழ் திரைப்படத்துறை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.

கிட்டத்தட்ட அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, உயிருக்கு போராடும் நிலையில் தான் உள்ளது. இன்னும் கொஞ்சம் விட்டால் மொத்த உயிரும் போய்விடும் போல.

அதனால் இத்துறையை காப்பாற்ற மத்திய, மாநில அரசுக்கள் கொஞ்சம் கவனித்து கூடுதல் சிரத்தை எடுக்க வேண்டும். இத்துறையில் உள்ள எல்லாரும் ஒற்றுமையாக செயல் படவேண்டும் என்று கூறினார்.

கல்லீரல் நோயால் உயிருக்குப் போராடும் 03 வயதுச் சிறுவன் சிகிச்சைக்காக இந்தியா பயணம்!!

கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சத்திரசிகிச்சை செய்ய வேண்டியிருந்த 03 வயதுடைய சாமிக ஹர்ஷன என்ற சிறுவன் இன்று சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நவகத்தேகம பிரதேசத்தில் கல்லீரல் நோய் பாதிப்பால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் சோக சம்பவம் தொடர்பில் அத தெரண இதற்கு முன்னர் செய்தி வௌியிட்டிருந்தது.

05 வயதுடைய ஜினுலி பிந்தராவிற்கு ஒன்றரை வருடத்திற்குள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், 03 வயதுடைய சாமிக ஹர்ஷனவிற்கு 03 மாதங்களுக்குள் சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் செய்தி வௌியிடப்பட்டது.

சாமிக ஹர்ஷனவின் சத்திர சிகிச்சைக்காக மாத்திரம் 10 மில்லியன் ரூபா நிதி தேவைப்பட்டிருந்த நிலையில், அத தெரண வௌியிட்ட செய்தியின் பின்னர் அந்த நிதியை பெற்றுக் கொள்ள முடிந்ததாக பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் தந்தை கூறியுள்ளார்.

அதன்படி வெறும் கனவாக இருந்த 10 மில்லியன் ரூபா நிதி, தனவந்தர்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டதையடுத்து 03 வயதுடைய சாமிக ஹர்ஷன சத்திரசிகிச்சைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் இன்று காலை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு சிறுவர்களுக்கும் மூன்று மூத்த சகோதர சகோதரிகள் இருந்துள்ளதுடன், அவர்கள் சிறு வயதிலேயே கல்லீரல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகமட்ட முதியோர் சங்கம் அங்குரார்ப்பணம்!!

 
வெண்கலச்செட்டிகுள பிரதேச செயலகத்தில் இன்று (21.03.2018) புதன்கிழமை பிரதேச செயலக மட்ட முதியோர் சங்கம் அங்குரார்ப்பனம் பிரதேச செயலாளர் கை.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பல கிராமங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மூத்தோர்கள் பங்குகொண்டனர்.

தலைவாரக நயுமுதீனும் , செயலாளராக தர்மரட்ணமும் , பொருளாளராக ஞானசிகாமணியும் தெரிவு செய்யப்பட்டனர் . பதினொரு பேர் கொண்ட நிர்வாக்குழு தெரிவு செய்யப்பட்டது.

கடந்த காலங்களில் சிறப்பாக இயங்கி வந்த இச்சங்கத்தின் செயற்பாடுகள் இடையில் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. தற்போது புதிய நிர்வாக சபை பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.

புதுவருடதினத்தை முன்னிட்டு இவர்கள் ஆன்மீக சுற்றுலா ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.சண்முகநாதன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், மற்றும் கிராம சேவை உத்தியொகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு!!

 
சர்வதேச வனாந்தர தினம் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசல் ஸ்தலத்தில் வவுனியா மாவட்ட வன அதிகாரி காரியலாயத்தினால் மாவட்ட வன அதிகாரி கே.கே.நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.

உலக வனாந்தர தினமத்தை முன்னிட்டு இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் சர்வதேச வனாந்தர தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதாரன பத்திரன, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், மேலதிக மாவட்ட செயலாளர் திரு.கமலேஸ்வரன், மாவட்ட கமநல உதவிப்பணிப்பாளர் ஆர்.விஜயகுமார், மாவட்ட பரிபாலகர் ஆர்.ரவிராஜ், உதவி மாவட்ட வன அதிகாரி எம்.ஏ.நபீஸ், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், அசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் மரநடுகையினையும் மேற்கொண்டனர்.

வவுனியாவில் 154வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!!

 
வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் விரச்சாவடைந்தவர்களின் நினைவுத்தூபிக்கு அருகே இன்று (21.03.2018) காலை 8 மணிக்கு உயிர் நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 154வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வன்னி பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.எஸ்.தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிரி பர்னான்டோ, பொலிஸ் ஆட்சேர்ப்பு உதவியாளர் மல்லவகே , பொலிஸ் கண்காணிப்பாளர் வெல்கம,

கணக்காளர் ரவிச்சந்திரன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியாவிலுள்ள ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உயிர்நீத்த பொலிசாரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் , வவுனியா பொலிஸார் , சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும் பொலிஸாரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வவுனியாவில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!!

 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வன்னி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (20.03.2018) மாலை நடைபெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வன்னியின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 92 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இதன் போது சத்தியப்பிரமாணம் செய்தனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்தன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், கமலேஸ்வரன், புவனேஸ்வரன், ரவிகரன் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

வவுனியாவிலும் தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் வெளியீடு!!

 
வவுனியாவிலும் தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வின் போதே வெளியிட்டு வைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வெளியிட்டு வைக்க முதல் பிரதிகளை பங்களாளிக் கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் புதிய சுதந்திரன் பத்திரிகை வழங்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை புதிய சுதந்திரன் பத்திரிகை வெளிப்படுத்தும் என இதன்போது பலரும் தெரிவித்தனர்.

குழந்தைகளை கொன்றுவிட்டேன் : அவசர உதவிக்கு தொலைபேசியில் அழைத்து தெரிவித்த தாய்!!

அமெரிக்காவில் பெற்ற குழந்தைகளை கத்தியால் குத்திக்கொலை செய்த தாய்க்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இண்டியானாவை சேர்ந்தவர் ஜேசன். இவர் மனைவி பிரண்டி (31). தம்பதிக்கு டைலர் (7) என்ற மகனும், சார்லி (3) என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில் பிரண்டியுடன் ஏற்பட்ட மனகசப்பால் அவரிடம் விவாகரத்து கோரி ஜேசன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதோடு தனது குழந்தைகளை தன்னுடனே தனியாக அழைத்து செல்லவும் ஜேசன் முடிவெடுத்துள்ளார்.

ஏற்கனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பிரண்டி எங்கே தனது குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து போய்விடுமோ என அஞ்சியுள்ளார்.

இதையடுத்து ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் இரண்டு குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் தன்னுடைய கழுத்தையும் கத்தியால் குத்தி கொண்டு அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து தனது குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் கத்தியால் குத்தி கொண்டதாக கூறியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த அவசர குழு இரண்டு சடலங்களையும் மீட்டு, பிரண்டியையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் கடந்த 2016-ல் நடந்த நிலையில் பொலிசார் பிரண்டியை கைது செய்து அவர் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் பிரண்டி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

ஜேசனுக்கும், பிரண்டிக்கும் கடந்தாண்டு மார்ச் மாதமே விவாகரத்து வழங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

கௌரவக் கொலை : குற்றவாளியின் குடும்பமே கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றது அம்பலம்!!

கொலைக்குற்றத்திற்காக தண்டனையில் இருக்கும்போதே நபர் ஒருவர் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் குடியிருந்தவர் 25 வயதான ஜஸ்விந்தர் கவுர் சித்து.

கடந்த 2000 ஆம் ஆண்டு யூன் மாதம் இந்தியாவின் பஞாப் மாநிலத்தில் வைத்து மர்ம நபர்களால் ஜஸ்விந்தர் கவுர் சித்து மற்றும் அவரது கணவர் சுக்விந்தர் சிங் சித்து ஆகியோர் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஜஸ்விந்தர் கவுர் சித்து கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பஞ்சாப் பொலிசார் கொலைக்கான காரணத்தை கண்டறிந்தனர்.

பெற்றோருக்கு விருப்பமில்லாத நபருடன் திருமணம் செய்ததாலையே ஜஸ்விந்தர் கவுர் சித்து கெளரவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடியிருக்கும் ஜஸ்விந்தர் கவுர் சித்துவின் தாயார் மல்கித் கவுர் சித்து மற்றும் உறவினர் சுர்ஜித் சிங் படேஷா ஆகியோரே மறைமுகமாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு இந்திய நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த 7 பேரில் தர்ஷன் சிங் சித்து என்பவரும் ஒருவர், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் இவரே தமது மனைவி மற்றும் மகனுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு நிரந்தர குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த சித்து தமது குடும்பத்துடன் கனடாவின் வான்கூவர் நகருக்கு வந்து நிரந்தர குடியுரிமை பெற தேவையான அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளனர்.

இதனிடையே 2014 ஆம் ஆண்டு சித்துவின் மகன் பாரிந்தர் சித்து இந்தியா சென்றுள்ளார். அவர் கனடா திரும்பும் நிலையில் குடியுரிமை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவரது தந்தையின் குற்றவியல் நடவடைக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக கனடா அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கோரியது. அதில், தந்தையின் குற்றவியல் நடவடிக்கைகளை மகன் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அரசு விளக்கமளித்தது.

மேலும் தந்தையின் குற்றப் பின்னணி காரணமாக மகனையும் கனடாவுக்குள் அனுமதிப்பது ஏற்க முடியாதது என கனடா நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

ஆனால் பாரிந்தர் சிங் ஏற்கெனவே கனடாவில் குடியிருப்பவர் ஆகையால், அவருக்கு கனடாவில் குடும்பம் இருப்பதால், பாரிந்தருக்கு ஆதரவாகவே அனைத்து விடயங்களும் அமைந்துள்ளதால் பாரிந்தர் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாரிந்தரின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு வான்கூவர் நகரில் இருந்து இந்தியா திரும்பிய பின்னர் தர்ஷன் சிங் சித்து கனடா திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான வட்ஸ்அப் மெசேஜால் உருவான காதல் : லண்டன் தம்பதியின் அழகான கதை!!

லண்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியின் காதல் தவறான வட்ஸ் அப் மெசேஜ் மூலம் தொடங்கிய நிலையில் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தெற்கு லண்டனை சேர்ந்தவர் மைக்கேல் இவாங்கிலு, இவர் டிசம்பரில் Girls Trip என்ற சினிமா பெயரை தனது வட்ஸ் அப் எண்ணுக்கே அனுப்பியுள்ளார்.

அந்த படத்துக்கு தான், செல்ல வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தும் விதமாகவே இதை மைக்கேல் செய்துள்ளார்.

ஆனால் நம்பரை அவர் தவறுதலாக பதிவு செய்ய குறித்த மெசேஜ் லினா டால்பெக் என்ற பெண்ணின் செல்போனுக்கு சென்றுள்ளது.

இதையடுத்து, ஹாய், யார் இது என லினா, மைக்கேலிடம் கேட்டு திரும்ப மெசேஜ் செய்துள்ளார். இது அப்படியே இருவருக்குளும் நட்பை ஏற்படுத்த நாள் முழுவதும் மெசேஜ் மூலம் பேசியுள்ளனர்.

பின்னர் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவு செய்து இருவரும் பொது இடத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது ஒருவரை ஒருவர் பிடித்துப் போயுள்ளது.

பின்னர் தங்கள் காதலை தனித்தனியே இருவரும் வெளிப்படுத்திய நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 7 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

லினாவுக்கு துபாயில் அழகு கலை பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக உள்ள நிலையில் தம்பதிகள் அதற்காக துபாயில் தற்போது முகாமிட்டுள்ளனர்.

காதல் தம்பதி கூறுகையில், காதலில் ஒரு போதும் முயற்சியை கைவிடக்கூடாது என்பதற்கு எங்கள் காதல் மற்றவர்களுக்கு ஒரு பாடம் என கூறியுள்ளனர்.

காதலியை காப்பாற்ற கொலைகாரனாக மாறிய காதலன் : கல்லூரி மாணவி அதிர்ச்சி வாக்குமூலம்!!

தமிழகத்தில் காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை காதலன் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தர்.

இது தொடர்பாக பொலிசார் விசாரனை மேற்கொண்டு வந்த நிலையில், இதில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நானும் என்னுடைய கல்லூரியில் படித்து வரும் தமிழரசன் என்பவரும் காதலித்து வந்தோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நானும், தமிழரசனும் வடசென்னிமலை கோவிலுக்குச் சென்றிருந்தோம்.

அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து, எங்களை கத்தியை காட்டி மிரட்டியதுடன், என்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்தனர்.

இதனால் கோபப்பட்ட தமிழரசன், கார்த்திகேயனிடமிருருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார்.

அவரது நண்பர் அங்கிருந்து அலறி அடித்து ஓடிவிட்டார் என்று மாணவி பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அதன் பின் கார்த்திகேயனின் கூட்டாளியான மாரிமுத்துவை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, வடசென்னிமலை கோவிலில் பல காதல் ஜோடிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை இவனும், கார்த்திகேயனும் சேர்ந்து செய்திருப்பது தெரியவந்துள்ளது.