கடந்த 11ஆம் திகதி குரங்கனிக்கு டிரக்கிங் சென்ற 40 பேர் காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டார்கள், இந்த தீயில் கருகி இதுவரை 16 பேர் இறந்துள்ளார்கள்.
காட்டில் இருந்து பலா், தீயில் சிக்கி, உடல் முழுக்க 80 சதவீதத்திற்கும் மேலான தீக்காயங்களுடன் இருந்தார்கள்.
கோடை காலமாக இருந்ததாலும், சுற்றுப்புறம் அனைத்தும் தீயால் வெந்ததால், அந்த மலையே மிகவும் கனலாக மாறியது.
இந்நிலையில், குரங்கனி தீவிபத்தில் இருந்து தப்பிய சஹானா என்ற மாணவி தீயின் கொடூர நாக்கிலிருந்து தப்பியது எப்படி என்பது குறித்து விவரித்துள்ளார்.
நான் பொருளாதார துறையில் படிக்கிறேன், எனக்கு மலை ஏறுவது என்பது மிகவும் பிடிக்கும். இது எனது இரண்டாவது மலைப்பயிற்சி ஆகும்.
காட்டில் தீ பிடித்து எரியும் போது மணி இரண்டரை இருக்கும், மரத்தின் அடியில் அமர்ந்து நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, காற்று அனலாக அடித்தது.
புகையாக வந்தது, அப்போது திடீர் என்று ஒருங்கிணைப்பாளர், காட்டில் நெருப்புப் பிடித்துவிட்டது . எல்லோரும் ஓடுங்கள் என்று சத்தம் எழுப்பினார். எல்லாரும் பாதி சாப்பாட்டில் எழுந்து ஓட ஆரம்பித்தோம்.
எந்த பாதையில் ஓடுகிறோம் என தெரியாமல், உயிரை காப்பாற்றிக்கொள்ளும் அச்சத்தில் கண்ணுக்கு தெரிந்த பாதையை நோக்கி ஒடினோம், பாதி வழியிலேயே தீயின் தாக்கம் அதிகரித்ததால் என்னோடு வந்தவர்கள் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அப்போது, செங்குத்தான மலையில் எனக்கு முன் சென்றவர்கள் சறுக்கியபடியே சென்றார்கள், அவர்களை பின்தொடர்ந்து நானும் சறுக்கி கொண்டே சென்றேன்.
உயிர் தப்பிக்க நெருப்புக்கு எதிர் திசையில் ஓடிக்கிட்டிருந்தோம். எவ்ளோ நேரம் அப்படி ஓடினோம் என்று தெரியவில்லை. யாரோ எங்களைச் சத்தமாக கூப்பிடும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தால், ஊர் மக்களும், வனத்துறை அதிகாரிகளும் இருந்தார்கள், அவர்களை பார்த்தவுடன் தான் உயிரே வந்தது என கூறியுள்ளார்.
இந்தியாவில் பரிசுப்பொருளில் இருந்த வெடிகுண்டு வெடித்து புதுமாப்பிள்ளை இறந்த நிலையில் 25 நாட்கள் கழித்தே கணவர் இறந்தது புதுப்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சவுமியா சேகர் என்பவருக்கும், ரீனா சாஹா என்பவருக்கும் கடந்த மாதம் 18-ஆம் திகதி திருமணம் நடந்த நிலையில் 21-ஆம் திகதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது தம்பதிக்கு தரப்பட்ட பரிசு பொருள் ஒன்றில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் சேகரும், அவர் பாட்டியும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ரீனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கணவர் இறந்தது குறித்து ரீனாவின் குடும்பத்தார் அவரிடம் கூறவில்லை.
இந்நிலையில் சேகர் இறந்து 25 நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்த பத்திரிக்கை மூலம், அதை ரீனா தற்போது தெரிந்து கொண்டு கதறி அழுதுள்ளார்.
பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை அறையில் ஐந்து மணிநேரம் அழுத நிலையில், அவரது குடும்பத்தார் ரீனாவை தேற்றியுள்ளனர்.
இந்த வழக்கு சம்மந்தமாக பொலிசார் சிலரை கைது செய்திருந்தாலும் முக்கிய குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் திருமணமான 6 நாளில் மனைவியை அவர் காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பின்னர் மணப்பெண்ணின் மூன்று உறவுக்கார இளைஞர்கள் பசுதீப் வீட்டில் வந்து தங்கியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
புதுமண தம்பதிகள் இருக்கும் வீட்டில் அவர் இருப்பதை ஊர் மக்கள் பொறுத்து கொள்ளாமல் இளைஞரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது தான் அவர் திருமணமான புதுப்பெண்ணின் காதலர் என தெரியவந்தது.
இது குறித்து பசுதீப்புக்கு தெரியவந்த நிலையில் அவர் மனதை கல்லாக்கி கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார்.
அதன்படி தனது மனைவியை திருமணமான ஆறே நாளில் அவர் காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த பிரச்சனையை தீர்க்க இதைவிட்டால் வேறு வழியில்லை என பசுதீப் கூறியுள்ளார்.
இந்தியாவில் பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியர்களின் அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்த தம்பதி ராகவ் ஷா- தீபா மாலா. இவர்களுக்கு ஆர்யன் ஷா என்ற மகனும் இகிஷா (16) என்ற மகளும் உள்ளனர். இகிஷா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை இகிஷா மட்டும் வீட்டில் இருந்த நிலையில் குடும்பத்தார் வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து பார்த்த போது இகிஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு குடும்பத்தார் எடுத்து சென்ற நிலையில் இகிஷா ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இறப்பதற்கு முன்னர் இகிஷா கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.
இகிஷா பெற்றோர் கூறுகையில், பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இம்முடிவை அவர் எடுத்துள்ளார் என கூறியுள்ளார்.
இதனிடையில், மார்ச் 16-ஆம் திகதி வந்த பள்ளி தெரிவு முடிவுகளில் இரண்டு பாடங்களில் இகிஷா மிக குறைவான மதிப்பெண்கள் பெற்றதும், அதனால் ஆசிரியர்கள் மூலம் அவர் அழுத்தத்துக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலிருந்தே மன அழுத்தத்துடன் இகிஷா இருந்துள்ளார்.
பொலிசார் கூறுகையில், இகிஷா குடும்பத்தார் எழுத்து பூர்வமான புகார் எதுவும் இன்னும் கொடுக்கவில்லை.
அப்படி கொடுத்தவுடன் இதுகுறித்து விசாரிப்போம், தற்போது இகிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்துள்ளோம் என கூறியுள்ளனர்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்றிணைந்து போராடுவோம் என்ற வாசகத்துடன் வவுனியாவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிங்கள தமிழ் முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களே ஜாதி பேதமின்றி உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து போராடுவோம் என வவுனியாவின் முக்கிய இடங்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சுவரொட்டிகள் இன்று (21.03.2018) ஒட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களே ஜாதி பேதம் என்பது ஒரு சதித்திட்டம் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம் என்ற வாசகம் தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்தேகத்தில் தவறி விழுந்து உயிரிழந்த ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவனின் சடலத்தை கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவன், சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன்(வயது – 14) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹப்புகஸ்தென்ன பகுதியில் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு விறகு தேடுவதற்காக கெனியன் நீர்தேக பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு இன்று மாலை 4 மணியளவில் சென்றுள்ளார்.
தன்னோடு வரவேண்டாம் என கூறியும் அதனை மீறி தற்பொழுது உயிரிழந்த மகனும் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் நீர் அருவி பகுதியில் மகன் கற்பாறை ஒன்றில் ஏறும் பொழுது காழிடறி தவறி நீர்தேகத்தில் வீழ்ந்துவிட்டார்.
இவரை காப்பாற்றுவதற்காக தந்தையும் நீர்தேகத்தில் குதித்துள்ளார். இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் தந்தையின் கூச்சலை கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த மூவர் தந்தையை காப்பாற்றியுள்ளனர்.
இருந்தும் நீர்தேகத்தில் வீழ்ந்த மகனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இன்று காலை கடற்படை சுழியோடிகளினால் மீட்கப்பட்ட மாணவனை ஹட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிண்ணியா மணல் ஆறு பிரதேசத்தில் பொலிஸாரின் சுற்றிவளைப்புக்கு அஞ்சி மஹாவலி ஆற்றில் பாய்ந்த இளைஞன் இன்று (21.03) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய ரனீஸ் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மஹாவலி ஆற்றில் நேற்று (20) சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் பொலிஸார் சுற்றிவளைக்க முற்பட்ட வேளையில் தப்பிச்செல்ல முயன்ற ஐந்து நபர்களில் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல்போன இளைஞனே கடற்படையினரின் உதவியுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏனைய 4 நபர்களிடமிருந்து மணல் அகழ்வு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
3 வருடங்களுக்கு முன் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன என மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 40 இந்தியர்கள் கடந்த 2015ம் ஆண்டு ஜூனில் ஐ.எஸ். அமைப்பினரால் கடத்தப்பட்டனர்.
இதில், 39 பேரும் இறந்துவிட்ட நிலையில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்து உயிர்தப்பிய ஹர்ஜீத் மசீ பஞ்சாபில் தான் எதிர்கொண்ட பரபரப்பான நிமிடங்கள் குறித்து விளக்கியுள்ளார்.
அவர் கூறியதாவது, என்னுடன் இருந்த 39 இந்தியர்களுடம் இறந்துவிட்டனர் என நான் கடந்த 3 வருடங்களாக அரசிடம் தெரிவித்து வந்தேன், ஆனால் அதனை அன்று ஏற்றுக்கொள்ளாத அரசு இன்று அவர்களின் மரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஈராக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த எங்களை கடந்த 2015 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடத்தினர், சில நாட்கள் அவர்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த அவர்கள், ஒரு நாள் எங்களை மண்டியிட வைத்து துப்பாக்கியை எடுத்து சுட்டுத்தள்ளினர், எனது கண் எதிரிலேயே அனைவரும் செத்து மடிந்தனர்.
அவர்கள் சுட்டதில் குண்டு ஒன்று எனது தொண்டையை நோக்கி பாய்ந்தது, இதனால் நான் சுயநினைவற்று கிடந்தேன். அதன்பின்னர் சில நாட்கள் கழித்து நான் ஒரு வங்கதேச இஸ்லாமியர் என அவர்களிடம் பொய் சொல்லி அங்கிருந்து தப்பித்துவிட்டேன் என கூறியுள்ளார்.
கொல்லப்பட்ட இந்தியர்களில் பலர் பஞ்சாபின் அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், ஹோசியார்பூர், கபுர்தலா மற்றும் ஜலந்தர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டு தற்போது நியூசிலாந்தில் வாழும் இளைஞன் ஒருவர் பலரை ஊக்கப்படுத்தும் செயற்பாடு குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த அன்ட்ரூ பாலரஞ்சன் என்ற இளைஞன் தொடர்பான செய்தியே வெளியாகி உள்ளது.
அன்ட்ரூ பாலரஞ்சன் தனது சிறு வயதில் துப்பாக்கிகளுக்கு அஞ்சி, சித்திரவதைகளில் இருந்து தப்புவதற்கு பதுங்கு குழிகளில் மறைத்திருந்த காலங்களை இன்னமும் நினைவில் வைத்துள்ளார்.
33 வயதான பாலரஞ்சன் யாழ்ப்பாணத்தில் பிறந்து, சிவில் யுத்தத்தின் காரணமாக அச்சத்துடனேயே வாழ்ந்த ஒருவராகும்.
ஒரு குழந்தையான நான் வளர்ந்து வருகையில், யுத்தத்தின் உண்மைகளைச் சுற்றி என் தலையை மூடிவிட முடியாது. என்ன நடக்கும் என்று எனக்கு எப்போதும் பயமாக இருந்தது, ஏனெனில் அது என்னை பாதித்தது என பாலரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது தந்தை கொழும்பில் பணி புரிந்து கொண்டிருந்த போது, அவரது தாயார் மற்றும் இரண்டு உடன்பிறப்புகளுடன் பாலரஞ்சன் வாழ்ந்தார்.
தான் வசித்த பகுதியில் உள்ளவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது, தங்கள் வீட்டின் வழியாக படையினர் நடந்து சென்றது மற்றும் வெடிகுண்டுகளின் போது பாதுகாப்புக்கு எதிராக போராட வேண்டியிருந்தது என அனைத்தையும் பாலரஞ்சன் நினைவுபடுத்துகிறார்.
ஒரு பொதுவான சூழ்நிலையில் குண்டு வீசப்படும், எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பதுங்கு குழி அல்லது பாதுகாப்பான அரண் இருந்தது.
நாங்கள் வாழ்வா சாவா விளையாட்டை விளையாடினோம். நான் என் அம்மாவிடம் எந்த நேரத்தில் நாங்கள் கொல்லப்படுகிறோம்? என்ற கேள்வியை கேட்டேன். அது இன்னமும் நினைவில் உள்ளது.
1990ஆம் ஆண்டுகளின் மத்தியில், யாழ்ப்பாணம் குண்டுவீச்சுகளுக்கு இலக்காக மாறியது. கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு வழியில்லாமல் இருந்தோம். பாதுகாப்பிற்காக கையில் கிடைத்ததனை எடுத்து கொண்டு செல்ல வேண்டும்.
யுத்த வலயத்தை விட்டு வெளியேற நாம் எடுக்கும் முயற்சியில், திருமணம், பிறந்தநாள், போன்றவற்றை நினைவுகூறும் புகைப்படங்கள் மற்றும் ஆல்பங்கள் போன்ற முக்கிய குடும்ப நினைவுச் சின்னங்களை நாங்கள் விட்டுவிட்டே சென்றோம். இப்போது அவை எனக்கு தொலைதூர நினைவுகளாக உள்ளது.
பாலரஞ்சனின் குடும்பம் பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்க பல மைல் தூரம் தண்ணீர் இல்லாமல் செல்ல நேரிட்டது. பல மணி நேரங்களைக் கடக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அது மிகவும் கொடூரமான யுத்த பகுதியாக காணப்பட்டது.
ஒருவழியாக குடும்பத்தினர் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். அங்கே குடிசைகளில் தூங்கினர், குறைந்த அளவிலான உணவுகளை பெற வேண்டியிருந்தது.
பாலாரஞ்சனின் தந்தை வடக்கிற்கு பயணித்து, குடும்பத்தை பாதுகாக்கும் வரை, அவர்கள் இந்த நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
“நான் தந்தையை பல ஆண்டுகளாக பார்த்ததில்லை, ஆனால் அவர் பாதுகாப்பாக இருந்தார், உண்மையில் நம்மை அவர் பாதுகாப்பாக வெளியேற்றினார்.” என பாலரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தலைநகரான கொழும்பில் குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளைக் கண்டுபிடித்த போது பாலரஞ்சனின் வயது 11 ஆகும்.
அந்த இடம் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இரவில் நான் தூங்குவதற்கு இன்றும் கடினமாகவே உள்ளது. ஏனெனில் குண்டுவீசி மற்றும் ஹெலிகொப்டர் சத்தங்களுக்கு அஞ்சி பழக்கப்பட்டுவிட்டேன்.
அதனை தொடர்ந்து ஒன்பது மாதங்கள் கழித்து எனது குடும்பம் நியூசிலாந்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியது, ஆக்லாந்து நாட்டில் ஏற்கனவே பாட்டி மற்றும் அத்தை இருந்தனர் அவர்களின் உதவியில் இந்த வாழ்க்கை கிடைத்தது.
“நான் என்ன செய்தேன் அல்லது ஒரு விமானம் எப்படி இருந்தது என்று எனக்கு தெரியாது” என பாலா ரஞ்சன் கூறினார்.
இது எனக்கு வெளிநாடு. எனக்கு ஆங்கிலம் பேசக்கூட முடியவில்லை. வாழ்க்கையை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று தெரியாமல், ஒரு பெட்டியை எடுத்து கொண்டு அகதிகளாக நியூசிலாந்திற்கு வந்தோம்.
ஒரு வெளிநாட்டிற்கு செல்வதென்பது மூளையை புதுப்பிப்பது போல இருந்தது. நான் Selwyn கல்லூரியில் மூன்றாவது வகுப்பு படிப்பைத் தொடங்கினேன், எனக்கு மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது.
என்னால் பேசமுடியவில்லை, நான் உணர்ந்ததையோ அல்லது நான் என்னவெல்லாம் சொல்ல நினைக்கின்றேன் என்பதையோ என்னால் மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை.
நான் மிகவும் பயந்தேன் என மதிய உணவு நேரத்தில் மறைந்திருப்பேன். ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் வகுப்புகளுக்கு சென்றேன். இது ஒரு சோதனை நேரமாக இருந்தது. எடுத்துக் கொள்ளும் அனைத்து சிறிய விடயங்களும் நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
கடினமான காலங்களிலிருந்தும், மத விசுவாசத்திலிருந்தும், மக்களின் உதவியிலும் நான் ஊக்குவிக்கப்பட்டேன்.
இளைஞனாக எனக்கு உதவி கிடைக்க வழி இல்லை, ஏனென்றால் என்னை வெளிப்படுத்த முடியவில்லை, அதனால் நான் பல வருடங்களாக பலவற்றை சமாளிக்க என்னால் முடிந்ததை செய்தேன்.
எங்களுடைய குடும்பத்தினருக்கு, தேவாலயம் மற்றும் நண்பர்கள் தேவையான ஆடை, உணவுகளை நன்கொடை அளித்தார்கள்.
மக்கள் செய்த சிறிய விடயங்கள் எனக்கு பெரிய விடயங்களாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எனக்கு அன்பளிப்பு, கருணை, இரக்கம் கொடுத்தார்கள். அவர்கள் இல்லையென்றால் நான் இன்று இங்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் பாலரஞ்சன் பாடசாலை கல்வியை விட்டுவிட்டு ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் தகவல் முறைமைகளைப் படிக்கத் தொடங்கினார்.
அவர் தற்போரு ஒரு சர்வதேச நிறுவனத்தின் ஒரு மூத்த மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார், மேலும் அவரது கதையையும் அனுபவத்தையும் மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்துகிறார்.
எனது கதை சரியாக குரல் இருக்க வேண்டும் மற்றும் என் கதை பலர் முன்னேற உதவும்.
விசுவாசத்தின் செய்திகளை விநியோகிப்பதில் கவனம் செலுத்துகின்ற ஒரு Instagram பக்கம் அவருக்கு உள்ளது, அதன் மூலம் பலரை அவர் ஊக்கப்படுத்துகின்றார்.
“என் வார்த்தைகளால் மக்களை ஊக்குவிப்பேன், ஏனென்றால் வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறது”.. எப்போதுமே இரண்டாவது வாய்ப்பு உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்களை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (20.03.2018) கைது செய்துள்ளனர்.
வவுனியா நீதிமன்றம், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, மாவட்ட நீதிவான் நீதிமன்றம், பாடசாலைகள் முன்பாக தரித்து நிற்கும் மோட்டார் சைக்கில்களின் பொருட்கள் வைக்கும் பெட்டகத்தை சாவி மூலம் திறந்து தொலைபேசிகள், பணம் என்பவை திருடப்படுவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிந்த சோமஜீத் தலமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் சுபசிங்க வழிகாட்டலில் பொலிஸ் கொஸ்தாபர்களான ஹேரத் (16494) நிசங்க (31222) அசோக (33743) பெமசிரி (55511) , பொலிஸ் கொஸ்தாபல்களான நிஜாம் (54963), சிவராசா (53207), தரங்க (12865), குணசிங்க (49689), இந்திக்க (15628) விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதன் போது நேற்றைய தினம் வவுனியா நகரில் வைத்து சாந்தசோலை, அண்ணாநகர் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இரு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் இவர்களிடமிருந்து 15 கையடக்க தொலைபேசிகளும், 30000 பணமும், தேசிய அடையாள அட்டை, திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிலையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக 8 மோட்டார் சைக்கிலிருந்தும் , மாவட்ட நீதிமன்றம் முன்பாக 6 மோட்டார் சைக்கிலிருந்தும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்திற்கு முன்பாக தரித்து நின்ற 3 மோட்டார் சைக்கிலிருந்தும் வவுனியா சைவப்பிரகாசா பாடசாலைக்கு முன்பாக தரித்து நின்ற ஒரு மோட்டார் சைக்கிலிருந்தும் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும்,
இவர்கள் கட்டாரில் இருந்து சில வாரங்களுக்கு முன்னரே வவுனியாவிற்கு வந்தாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அவதானமாக விருக்குமாறும் இவ்வாறு திருட்டுச் சம்பவம் எதேனும் இடம்பெற்றிருந்தால் உடனடியாக முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஆந்திரா மற்றும் தமிழக மாநிலங்களில் குழந்தை உள்ளிட்ட எட்டுப்பேரை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதி ஒருவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலம், திகவாகொத்தபல்லி கிராமம் அருகே வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோளிங்கர் அருகே மான்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 42 வயதான முனிசாமி என்ற இலங்கை அகதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குழந்தை உள்ளிட்ட எட்டுப்பேரை மிகவும் கொடூரமான முறையில் கல்லால் தாக்கியும், கடித்து குதறியும் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நபர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக தமிழ் நாட்டில் மாத்திரம் 28 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் கென்யாவில் உயிரிழந்துள்ளது. கென்யாவிலுள்ள Ol Pejeta வனவிலங்குகளுக்கான தனியார் அமைப்பு இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
சுடான் எனப்படும் 45 வயதான ஆண் காண்டாமிருகம் கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்தது.
சுடானுக்கு வயது முதிர்வு காரணமான உடல் உபாதைகள் இருந்தன. தசை மற்றும் எலும்புகள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. தோலில் காயம் ஏற்பட்டிருந்தது.
கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதன் நிலைமை மிக மோசமாகியது. அதனால் எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதனை கருணைக் கொலை செய்ய முடிவு செய்திருந்தார்கள்.
சுடான் இரண்டு வெள்ளை பெண் காண்டாமிருகங்களான நஜின், ஃபட்டு ஆகியவற்றுடன் வசிந்து வந்தது. இந்த நிலையிலேயே சுடான் உயிரிழந்துள்ளது.
வௌ்ளை இன காண்டாமிருகங்களில் இரண்டு பெண் காண்டாமிருகங்கள் மட்டுமே தற்போது உலகில் உள்ளன.
சுடானின் இந்த இழப்பு வனவிலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
இவர் வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களில் அதிகம் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த அவருக்கு டிபி நோய் வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள செவ்ரி டிபி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அவரது உடல்நிலை மோசமாக இருப்பதை தெரிந்து கொண்ட பூஜா கணவர் மற்றும் குடும்பத்தினர் நடிகையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதனை எதிர்ப்பார்க்காத பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வருகிறார். மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
நோயில் பரிதவித்து வரும் பூஜா தனக்கு உதவி செய்யுமாறு நடிகர் சல்மான் கானிடம் ஒரு வீடியோ மூலம் உதவி கேட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக கூறிவருகிறா
மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாப சம்பவம் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நடந்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, மருதநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரன் என்பவரது மனைவி, கணவனின் பிரிவுத் துயரங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் 3 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டு, மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த சுதாகரின் 10 வயது பெண் குழந்தை தாயும் அற்ற நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம் நாட்டு மக்களின் மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தாய், தந்தை இருவரையும் இழந்த சுதாகரனின் மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் ஜனாதிபதிக்கு மனுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு இன்று (19) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி பிரதேச சபைகளிற்கு தெரிவான சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த கடிதத்தினை பெற்று அங்கஜன் இராமநாதன் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது தமது தந்தையை விடுதலை செய்து தருமாறு ஜனாதிபதி மாமாவிடம் கோரிக்கையிட்டு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்ட சுதாகரனின் மகன் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஸ்ரீனாத் பெரேராவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இல்லை என்பதனால் சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இராணுவ பணியின் போது, இறந்த கணவனைப் பார்த்து மனைவி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தில் பணியாற்றி வந்த இவருக்கு பொற்செல்வி என்ற மனைவியும், கிருஷ்ணபிரியா, கிருஷ்ணகாந்த் என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 17-ஆம் திகதி இரவு கிருஷ்ண மூர்த்தி மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டம், தேவ்லாலி ரோட்டில் இயங்கிவரும் ராணுவ முகாமில் தனது பட்டாளியன் வீரர்களுடன் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒன்று அவர் மீது விழுந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இங்கு வருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நேற்று விமானம் மூலம் தமிழ் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அதன் பின் பிற்பகல் 2.20 மணிக்கு அவரது சொந்த ஊரான ராங்கியம் கிராமத்துக்குக் அவரது உடல் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன், தேசியக் கொடி போர்த்தப்பட்டு, 7 குண்டுகள் வீதம் 3 சுற்றுகளாக 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த நேரத்தில் அவரின் மனைவி பொற்செல்வி கணவரைக் கண்டு கதறி அழுததுடன், தன் கணவனின் கன்னத்தில் முத்தமிட்டு அமைதியாக உறங்குங்கள் உங்கள் மகனையும் ஒரு ராணுவ வீரனாக ஆக்குவேன்.
உங்களது உடையை மகனுக்குக் கொடுத்து ராணுவத்துக்கு அனுப்புவேன் என கணவரின் உடல்மீது சபதம் எடுத்துக்கொண்ட சம்பவம் ராணுவ அதிகாரிகளை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் மெய்சிலிரிக்க வைத்துள்ளது.
ஒரு இராணுவ வீரரின் இறப்பிற்கு வெளிமாநிலத்திலிருந்து பல அதிகாரிகள் வந்திருந்த நிலையில், உள்ளூரில் இருந்து மாவட்ட ஆட்சியரோ, ஆர்.டி.ஒ, டி.ஆர்.ஒ போன்ற அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாதது மிகுந்த வேதனையளிப்பதாக அக்கிராம மக்கள் கூறியுள்ளனர்.