அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.
கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற அமெரக்க ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறானதொரு பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் வெற்றிபெறும் பொருட்டு Cambridge Analytica நிறுவனத்தின் உதவியுடன் மக்களின் தகவல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியிருந்தார்.
இதனைக் கண்டறிந்த பேஸ்புக் நிறுவனம் இதற்காக பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் கணக்குகள் அனைத்தையும் இடைநீக்கம் செய்துள்ளது.
இந்நிறுவனம் அனுமதியின்றி பேஸ்புக் கணக்கின் ஊடாக உள்நுழைந்து சுமார் 270,000 நபர்களின் தகவல்களை தரவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா என்ற பெண், கிரிக்கெட் வீரர் ஷமி தனக்கு நண்பர் மட்டுமே என தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், கடந்த 3 ஆண்டுகளாக தனது கணவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
முதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்த ஹசின் ஜகான், பின்னர் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து, ஷமியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், தனது கணவர் பாகிஸ்தானைச் சேர்ந்த அலீஷ்பா என்ற பெண்ணுடன் சேர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜகான் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது இதுகுறித்து அலீஷ்பா கூறுகையில், ‘நானும் ஷமியும் நல்ல நண்பர்கள். ஷமியின் மனைவி கூறுவது போல எங்களுக்குள் எந்த விதமான மோசமான தொடர்பும் இல்லை.
அவர் ஏன் அப்படி குற்றச்சாட்டு வைக்கிறார் என்று தெரியவில்லை. பொலிசார் தான் இதில் விசாரிக்க வேண்டும். நாங்கள் பேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆனோம், அவரை எனக்கு மூன்று ஆண்டுகளாக தெரியும்.
முதலில் ரசிகையாக இருந்தேன், கொஞ்சம் கொஞ்சமாக பேசி தற்போது நண்பர்கள் ஆகியுள்ளோம், எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘நான் துபாய் சென்று இருந்த போது, ஷமியும் அங்கு வந்து இருந்தார். அப்போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம். இது எதிர்பாராமல் நடந்த சந்திப்பு’ என தெரிவித்துள்ளார்.
இடுப்பில் சிலருக்கு சதைபோட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும். அதுதான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தோன்றும் அறிகுறி என்று கூறலாம்.
இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் அது உடலின் எடை மற்றும் தொப்பை அதிகரித்து இதயம் உள்ளிட்ட பல நோய்களை சந்திக்கபோகிறோம் என்பதற்கான ஒரு அறிகுறியே.
இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் “சப்ஜடேனியஸ்’ என்னும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, இக்கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கி விடும்.
அதனால் இடுப்புப் சதைப் பகுதி மட்டும் பெருத்து பெரிய அளவில் காணப்படும். அதிலும் சில பெண்களுக்கு, பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை அதிகரிக்கும்.
அதுவும் உலகின் மொத்த இறப்புகளில் 3-ல் ஒரு பங்கு இடுப்புச் சதை அதிகம் உள்ளவர்களுக்குத் தான் இதயநோய் சம்பந்தமான நோய் ஏற்பட்டு இறக்கின்றனர். இதற்கு முறையற்ற உணவுப் பழக்கமும் ஒரு காரணமே.
இடுப்புச் சதையைக் குறைக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்
எண்ணெயில் தயாரித்த உணவுகளை எதையும் சாப்பிடக் கூடாது.
மட்டன், முட்டை மஞ்சள்கரு, வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகமாக அடிக்கடி சாப்பிடக் கூடாது.
மது மற்றும் புகைபழக்கங்கள் வைத்துக் கொள்ள கூடாது.
குளிர்பானங்களை அடிக்கடி அருந்தக் கூடாது.
நார்ச்சத்துள்ள காய்கறிகள் பழங்களை மட்டும் அதிகமாக சாப்பிடலாம்.
ஓட்ஸை கஞ்சி வைத்து அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
உடல் உழைப்பு இல்லாதவர்கள், 45 நிமிட நடைப்பயிற்சி அவசியம்.
இடுப்புச்சதையை குறைக்க ஏதாவது ஒரு நடனத்தை தொடர்ந்து ஆடலாம்
தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 5 வயது சிறுவனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன், இவரது மனைவி பிரேமா மற்றும் மகன் தருண் மாதவ்(5). தருண், தனது வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் UKG படித்து வந்துள்ளார்.
இசக்கியப்பனின் வீட்டின் அருகில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக, ஆறுமுகத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதற்கு, பிரேமா தான் காரணம் என்று நினைத்த ஆறுமுகம், அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, பிரேமா தனது மகனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த ஆறுமுகம், தகராறில் ஈடுபட்டதோடு தான் வைத்திருந்த அரிவாளால் பிரேமாவின் கண் முன்னாலேயே, அவரது மகன் தருணை கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அதனைத் தடுக்க வந்த பிரேமாவுக்கும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உயிருக்கு போராடிய பிரேமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் நடந்த பின்னர் அங்கிருந்த மக்கள், ஆறுமுகத்தை விரட்டிப் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நிறைவடைந்தது, அதனைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு என்ன தண்டனை என்பதை மறுநாள் அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி, இன்று குற்றவாளி ஆறுமுகத்திற்கு தூக்கு தண்டனை மற்றும் இசக்கியப்பன் குடும்பத்திற்கு ரு.51,00,000யை வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
உலக காலநிலை மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்படும் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அபிவிருத்தி, வளர்ச்சி மற்றும் முன்னணி சந்தையை பிரதிநிதித்துவப்படுத்தும் 67 நாடுகள் தெரிவு செய்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
புவி வெப்பமடைதலினால் மழை குறைவடைதல், காற்று, வெள்ளம் போன்ற காலநிலைகள் இலகுவாக ஏற்பட கூடும் என அந்த அறிக்யைில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் 67 நாடுகள் உலக சனத்தொகையில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியாளர்கள் 94 வீதமானோர் பிரதிநிதித்துப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச வங்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விற்கமைய காலநிலை மாற்றத்தினால் அதிக அழுத்தத்திற்குள்ளாகும் நாடாக இந்தியா முதல் இடம்பிடித்துள்ளது.
பிலிபைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மனைவி, மாமனார் மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் நகரை சேர்ந்தவர் முகமது உஸ்மான், இவரின் மனைவி சல்மா பேகம் (27). பேகமுக்கு முகமது இரண்டாவது கணவராவார், முதல் கணவருடன் அவருக்கு அய்னா மர்சியா (6) என்ற மகள் உள்ளார்.
முகமது உஸ்மான் சல்மாவை மணந்த பின்னரே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார், அதற்கு முன்னர் அவரின் பெயர் சவுரவ் சவ்ரசியா. இந்நிலையில் உஸ்மானின் கடையை விற்று தனது பெயரில் நிலம் வாங்க சல்மா வற்புறுத்தியுள்ளார்.
தொடர்ந்து மனைவியின் விருப்பத்தை உஸ்மான் நிறைவேற்றிய நிலையில், நேற்று இருவருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. கோபத்தில் உஸ்மான் விரலை சல்மா கத்தியால் வெட்ட, ஆத்திரமடைந்த உஸ்மான் மனைவியை குத்திக் கொலை செய்தார்.
இதை தடுக்க வந்த மாமனார் முகமது யூனஸ் (65)-ஐயும் கத்தியால் குத்தியதுடன், சிறுமி அய்னாவையும் கத்தியால் குத்தினார். மூவரின் கழுத்தையும் கத்தியால் அறுத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல வெளியில் சென்றுள்ளார்.
இந்நிலையில் சல்மாவின் சகோதரி அவர் வீட்டுக்கு வந்த பார்த்த போது மூவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட, மூன்று சடலங்களையும் கைப்பற்றிய அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் உஸ்மானை கைது செய்தனர்.
நடந்த அனைத்தையும் பொலிசாரிடம் அவர் வாக்குமூலமாக அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் காரோடு காணாமல் போன சிறுமி அங்குள்ள ஆற்றில் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வேல்ஸின் Carmarthenshire கவுண்டியை சேர்ந்தவர் கிம் ரவ்லண்ட்ஸ். இவரின் கார் நேற்று திருடு போன நிலையில் காரின் உள்ளே அவரின் மகள் கைரா மோரேவும்(3) இருந்துள்ளார்.
இதுகுறித்து கிம் நேற்று பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், தனது கார் காணாமல் போயுள்ளது எனவும் அதன் உள்ளே கைரா இருக்கிறார் எனவும் பதிவிட்டிருந்தார்.
இதோடு கார் குறித்து தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் மற்றும் இந்த பதிவை பகிருங்கள் எனவும் கிம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதே போல கிம்மின் சகோதரியும், பொலிசாரும் இது குறித்து பேஸ்புக்கில் பகிர்ந்தனர்.
இந்நிலையில் திங்கள் மாலை 6 மணிக்கு அங்குள்ள டிபீ ஆற்றில் கார் ஒன்றை பொலிசார் கண்டுப்பிடித்தனர்.
கார் உள்ளே சிறுமி கைராவும் இருந்த நிலையில் உடனடியாக அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கைரா உயிரிழந்தார். இது சம்மந்தமாக பொலிசார் யாரையும் இன்னும் கைது செய்யவில்லை.
அடுத்த வாரம் சிறுமி கைராவுக்கு பிறந்தநாள் வரும் நிலையில் இந்த மரணம் அவள் குடும்பத்தாருக்கு பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொலிசார் விடுத்துள்ள அறிக்கையில், சிறுமி கைரா இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில், சாட்சிகள் யாராவது ஆற்றில் கார் இறங்கியதை பார்த்திருந்தால் எங்களிடம் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய மொடல் ஒருவர் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க ஹொட்டலின் 6-வது மாடியில் இருந்து குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், முதுகெலும்பு உடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த மொடலை கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவின் வளர்ந்துவரும் பிரபல மொடலான Ekaterina Stetsyuk(22) ஒப்பந்த நிகழ்ச்சி தொடர்பாக ஐக்கிய அமீரகத்தின் துபாய்க்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் குறித்த மொடல் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
பின்னர் அந்த மொடலை உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மொடலை அவர் கத்தி காட்டி மிரட்டியுள்ளதுடன், ஆசைக்கு இணங்கும்படி நிர்பந்தித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு மொடல் Stetsyuk, தாம் தங்கியிருந்த ஹொட்டல் அறையில் இருந்து கீழே குதித்துள்ளார்.
ஹொட்டலின் 6வது மாடியில் இருந்து குதித்ததால் அவருக்கு முதுகெலும்பு உடைந்ததுடன் விலா எலும்புகள் சிலவும் உடைந்துள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த அமெரிக்க தொழிலதிபரை அழைத்து விசாரித்துள்ளது.
அதில், குறித்த ரஷ்ய மொடல் பாலியல் தொழிலாளி எனவும், தம்மை தாக்கியதால் தாம் உயிர் காத்துக் கொள்ள கத்தியை காட்டி மிரட்டியதாகவும் அவர் பொலிசில் தெரிவித்துள்ளார்.
பொலிசாரிடம் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மொடலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் இது பொய் குற்றச்சாட்டு எனவும், தமது மகள் ரஷ்யாவில் வளர்ந்து வரும் மொடல் எனவும், பொய் குற்றச்சாட்டால் தமது மகளை சிறையில் தள்ள துபாய் அரசு முயற்சிப்பதாகவும் அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கில் உண்மை நிரூபணமானால் பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்த குற்றத்திற்காகவும் கொலை முயற்சிக்காகவும் அந்த அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்த அயர்லாந்து இளம்பெண் கேரளாவில் மாயமாகியுள்ளார்.
அயர்லாந்தைச் சேர்ந்த இல்சி ஸ்க்ரொமென் என்ற இளம்பெண், தன் சகோதரி லிகா ஸ்க்ரொமென் (33) உடன் கடந்த பிப்ரவரி 2ஆம் திகதியன்று இந்தியா வந்துள்ளனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தர்மா ஆயுர்வேத வைத்தியசாலையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற வந்திருந்த சகோதரிகள், கடந்த 21-ஆம் திகதி முதல் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த புதன்(14-3-2017) அன்று காலை 6 மணியளவில் யோகா பயிற்சிக்காக குறித்த பெண்ணின் சகோதரி அழைத்துள்ளார். ஆனால் தனக்கு தலைவலியாக இருப்பதாக கூறியுள்ள லிகா, தான் வரவில்லை என்றும் கூறியுள்ளார். அதன்பின் 7.30 மணியளவில் அவர் அறைக்கு திரும்பிய போது அங்கிருந்த லிசா மாயமாகியுள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு ஒருநாள் தாமதமாக தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் வழக்கு பதிவு செய்து 4 நாட்களாக தேடி வருகின்றனர்.
விசாரணையின் போது, குறித்த பெண் மாயமான அன்று காலை தானாக ஆட்டோவில் ஏறி சென்றதாக விடுதி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரள அரசின் உதவியை நாடியுள்ள குறித்த பெண்ணின் சகோதரி கூறுகையில், “மன அழுத்தத்தில் இருந்த லிகாவை மீட்க அனைவரும் உதவிட வேண்டும்” என வருத்தத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பொலிசார் விரைந்து செயல்பட கேரள அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொலிசாரும் தாங்கள் முழு வீச்சில் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி திருநங்கையான ஸ்வப்னா மாநில பதிவுத் துறையின் உதவியாளராக பணியில் சேர உள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா என்ற திருநங்கை கடந்த 2013-ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்,சி தேர்வு எழுத முற்பட்டார். ஆனால் திருநங்கை என்ற காரணத்தினால் அவரால் தேர்வு எழுத முடியாமல் போனது.
இதனால் ஸ்வப்னா அன்று திருநங்கைகளுக்காக சட்டப் போராட்டம் நடத்தினார். சென்னையில் போராட்டத்தை துவங்கிய இவர் மதுரை கிளையில் இதற்காக வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை இரண்டு வழக்கறிஞர்கள் கட்டணம் இல்லாமல் வாதாடி உதவி செய்தனர்.
மாநில அரசின் 3 உத்தரவுகளுக்கு எதிராக ஸ்வப்னா மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக திருநங்கைகளுக்கு பல்வேறு பலன்கள் கிடைத்தன.
பெண்கள் என்ற பிரிவின் கீழ் திருநங்கைகளை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் ஸ்வப்னாவின் சட்டப் போராட்டத்துக்கு பலனும் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மற்றும் குரூப் 2ஏ தேர்வை ஸ்வப்னா எழுதியுள்ளார்.அதில் வெற்றியும் பெற்றதால் மாநில பதிவுத் துறையின் உதவியாளராக இம்மாத இறுதியில் சேரவுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தான் ஒரு திருநங்கை என்று கூறுவதை ஏற்க முடியாது எனவும், தான் பெண்ணாக மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் எனது அனைத்துப் போராட்டங்களுக்கும் பெற்றோர்தான் மிகப்பெரிய காரணம். எந்த நிபந்தனையும் இல்லாமல் அன்போடு என்னை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த வெற்றிக்கு எல்லாம் மிகப்பெரிய பலமாக இருந்தது என்னுடைய கல்வி தான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது எனது கனவும் நிச்சயம் ஒருநாள் ஐஏஎஸ் ஆவேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் போன் வெடித்துச் சிதறியதால் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓரிசா மாநிலம் Kheriakani கிராமத்தைச் சேர்ந்தவர் Uma Oram. இவர் சமீபத்தில் தன் உறவினர்களிடம் போனில் பேசியுள்ளார்.
அப்போது போனில் சார்ஜ் குறைந்ததன் காரணமாக, உடனடியாக சார்ஜ் போட்ட நிலையிலேயே போன் பேசியுள்ளார். இதனால் போன் திடீரென்று வெப்பம் அதிகரித்து வெடித்துச் சிதறியுள்ளது.
இதை அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கைகள் மற்றும் உடலின் சில பாகங்களில் காயங்களோடு அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து அந்த பெண்ணின் சகோதரர் கூறுகையில், எங்கள் வீட்டு உறவினர்களிடம் அவள் சார்ஜ் போட்ட நிலையில் பேசிக் கொண்டிருந்துள்ளாள்.
திடீரென்று போன் வெடித்ததால், அவள் சுயநினைவற்று மயங்கினாள். உடனடியாக நாங்கள் மருத்துவமனையில் அனுமதித்த போதும் எந்த பயனும் இல்லை.
அவள் பயன்படுத்திய போன் நோக்கிய நிறுவனத்திற்கு சொந்தமான போன் எனவும் 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Nokia 5233 தான் அது என்று கூறியுள்ளார்.
இது குறித்து நோக்கியாவைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த தகவலை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தின் உண்மை நிலை அறியவும் அதற்கு காரணம் தங்கள் நிறுவனத்தின் போன் தான் என்றால் எதன் காரணமாக இது ஏற்பட்டது என்பது அறியப்படும் என்று கூறியுள்ளார்.
ஈராக்கில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் கூறிய நிலையில், அங்கிருந்து உயிர் தப்பியவர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டு விட்டதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திலையில் ஈராக்கில் இருந்து தப்பி வந்த, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹ்ர்ஜித் மாசிஹ் கூறுகையில், ‘கடந்த 2014ஆம் ஆண்டு, ஈராக்கில் நாங்கள் 40 இந்தியர்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தோம்.
அப்போது, அங்கு துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் எனது கால் மூட்டில் குண்டடி பட்டு நான் கீழே விழுந்தேன். எனது கண் முன்னே அனைவரும் கொல்லப்பட்டனர்.
பின்னர், மயக்க நிலைக்கு சென்ற என்னை யாரோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் வங்கதேச தூதரகம் உதவியுடன் இந்தியா வந்தேன்.
39 பேரும் கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அவர்களின் குடும்பத்தினரிடம் கூறி வந்தது. ஆனால், அவர்கள் கொல்லப்பட்டதாக நான் மூன்றாண்டுகளாக கூறி வருகிறேன்’ என ஹர்ஜித் மாசிஹ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹர்ஜித் மாசிஹ் கூறியுள்ளதை சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார். மேலும், ‘மாசிஹ் எவ்வாறு அங்கிருந்து தப்பி வந்தார் என்பதை கூற மறுக்கிறார்’ எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் அமைச்சர் சசிதரூர் கூறுகையில் ‘39 பேரும் எப்போது கொல்லப்பட்டனர் என்ற தகவலை அரசு வெளிப்படுத்த வேண்டும்’ என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சுஷ்மா சுவராஜ், ‘வெளிநாட்டில் நடந்த சம்பவங்களை பாராளுமன்றத்தில் தெரிவிப்பது தான் முறையான ஒன்று. ஈராக்கில் அவர்கள் உயிருடன் இருந்ததற்கோ, கொல்லப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் 2014 முதல் 2017 வரை கிடைக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறையில் அரசியல் கைதியாக இருந்து நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த ச.தேவகனின்(70 வயது) இறுதிக்கிரியைகள் வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா 3 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நேற்று (19.03) மாலை இடம்பெற்ற இறுதி நிகழ்வுகளை அருட்தந்தை நடாத்தி வைத்திருந்தார்.
இதனையடுத்து ச.தேவகனின் பூதவுடல் வவுனியா தோணிக்கல் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற சந்தேகத்தில் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி 60 வயதில் கைது செய்யப்பட்ட நீர்வேலியை சொந்த இடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தேவகன் 10 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு வழக்குகளுக்கு பிரசன்னமாகியிருந்த நிலையில், 2 வருடங்கள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் தனது தண்டனைக்காலம் முடிவடையவுள்ள நிலையில் சந்தோசமாக காணப்பட்ட ச.தேவகனுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் மீண்டும் புதிய வழக்கொன்று பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட அவர் நோய்வாய்ப்பட்டு வெலிக்கடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார்.
எனினும் நோய் குணமடையாமையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த 15 ஆம் திகதி மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புல்மோட்டை பகுதியில் 15 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த இளைஞரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புல்மோட்டை, கமாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மூன்று வருடங்களாக சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி குச்சவெளி வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.