போலி கடவுச்சீட்டு மூலம் பலமுறை துபாய் சென்ற தமிழ்ப்பட நடிகை : சிக்கியது எப்படி?

போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்ல முயன்ற துணை நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மமதா. இவர் சென்னை சாலிகிராமத்தில் தங்கி தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார்.

இதில் போதிய வருமானம் இல்லாததால் ஏஜெண்டுகள் மூலம் குஷ்பூ என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்ற மமதா ஓராண்டு விசா மூலம் துபாயில் உள்ள ஒரு ஹொட்டலுக்கு நடனமாடுவதாக அவ்வப்போது சென்றுவந்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 20-ஆம் திகதி மம்தா துபாய் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஆதார் கார்டின் அடிப்படையில் சந்தேகப்பட்டு விசாரித்ததையடுத்து மமதா உண்மையை ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு பொலிசார் மமதாவை கைது செய்துள்ளனர்

குழந்தையுடன் தூக்கில் தொங்கிய கணவர் : அதிர்ச்சியில் மனைவி செய்த செயல்!!

தமிழ்நாட்டில் கணவர் ஒருவர் தனது குழந்தையுடன் தூக்கில் தொங்கிய நிலையில், அவர் மனைவியும் தற்கொலைக்கு முயன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருச்சியில் உள்ள சிண்டிகேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த ராமசுப்பிரமணியன் என்பவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் பள்ளியில் யூகேஜி பயிலும் மகள் ஆருத்ராவை ராமசுப்பிரமணியன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது வெளியில் சென்றிருந்த ராமசுப்ரமணியனின் மனைவி ஆவுடையம்மாள் வீட்டுக்குள் நுழைந்த போது கணவரும், குழந்தையும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆவுடையம்மாள் மருத்துவமனை முன்பு வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயல அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் ராமசுப்ரமணியன் சில நிறுவனங்களுக்கு வரம்புமீறி கடன் கொடுத்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு!!

 
அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் இரு பிள்ளைகளும் இன்று அவர்களது உறவினர்கள் சகிதம் வட மாகாண ஆளுநரை சந்தித்து தந்தையின் விடுதலை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளுடன் விசன் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு நிலைமையை கூறியிருந்தனர்.

இதனை செவிமடுத்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்விடயம் தொடர்பாக ஜனாபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

திருமணம் நடக்கவிருந்த கடைசி நேரத்தில் மகளை தந்தை குத்தி கொன்றது எதற்காக?

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஆதிரா(22) என்பவர் டயாலிஸ் மையத்தில் பணியாற்றி வருகிறார்.

ஆதிரா, தாழ்ந்த சாதியை சேர்ந்த இராணுவ வீரரை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆதிராவின் தந்தை ராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், தந்தையின் எதிர்ப்பை மீறி , காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இவர்களுக்கு இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், ஓடிப்போன மகளிடம் சென்று, நானே உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் எனக்கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ராஜன்.

வீட்டுக்கு வந்த அவர், இந்த திருமணத்தை நிறுத்திவிடலாம், அந்த மாப்பிள்ளை வேண்டாம் என சண்டைபோட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் அதிகரிக்கவே, அருகில் இருந்த கத்தியை எடுத்து ஆதிராவை குத்த முயன்றபோது, அவர் தப்பி அருகில் உள்ள வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இருப்பினும் பின்தொடர்ந்து வந்த ராஜன், தனது மகளின் நெஞ்சில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆதிராவை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ராஜனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் அரசியல் கைதியின் விடுதலைக்காக கையெழுத்துப் போராட்டம்!!

 
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக கையெழுத்து போராட்டம் வவுனியா, இலுப்பையடியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்த சுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

இவரின் இறுதிக் கிரியைகள் கிளிநொச்சி, மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றபோது மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மூன்று மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டு மனைவியின் மரண சடங்கில் கலந்து கொண்ட பின் மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறியபோது அவரது மகளும், தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.

நீதிமன்றின் ஊடாக 97 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு மகனும், மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

எனவே இவரை நிபந்தனையற்ற பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுதலை செய்யக்கோரி வவுனியா மாவட்டத்தில் இன்று கையெழுத்து போராட்டம் மாவட்ட சுயாதீன இளைஞர்களின் தமிழ் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நண்பியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்த இளைஞன்!!

ஹுங்கம பிரதேசத்தில் கூர்மையான ஆயுதத்தில் தாக்கி தனது நண்பியை கொலை செய்த இளைஞன் பேருந்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நீண்ட தூரம் சென்றமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதுபெலேன பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்த அவரது நண்பர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் சென்றதன் மாத்தறையில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் தங்காலை, ரத்ன பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவராகும்.

வவுனியாவில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் இலவச செயலமர்வு!!

 
வவுனியாவில் இன்று காலை 9.30 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதியில் இளைஞர், யுவதிகளுக்கான நிமிர்ந்து நில் தொழில் விருத்திக்கான வழிகாட்டல் இலவச செயலமர்வு இடம்பெற்றது.

றின் பிறைற்நைஸ் அக்கடமியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச செயலமர்வின் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்கள், பிரதிநிதிகளுடன் ஆரம்ப நிகழ்வினை வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, அருட்சகோதரி மெற்றில்டா, தலைவர் டொன்போஸ்கோ சிறுவர் காப்பக இல்லம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், நெளுக்குளம் தொழில்நுட்பபயிற்சி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கல்வியற்கல்லூரி அதிகாரி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆரம்பித்து வைத்தனர்.

வேப்பங்குளம் சிறுவர் அன்பகத்தின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்ற நிகழ்வில் பிரபல பேச்சாளர்கள் கலந்துகொண்டு இளைஞர்கள், யுவதிகளுக்கான தொழில்வழிகாட்டல் இலவச செயலமர்வினை மேற்கொண்டனர்.

நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வது தொடர்பாகவும், தொழிலினை எவ்வாறு அமைத்துக்கொள்வது தொடர்பாகவும் எத்தொழிலினை தெரிவு செய்வது போன்ற அறிவுரைகளை செயலமர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வழங்கியிருந்தனர்.

வவுனியா வடக்கு கல்வி பணிப்பாளராக அன்னமலர் நியமனம்!!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நிலவி வந்த கல்வி பணிப்பாளர் வெற்றிடத்திற்கு சுரேந்திரன் அன்னமலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதியில் இருந்து கடமைகளை பெறுப்பேற்கவுள்ள இவர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பிரதி கல்வி பணிப்பாளராக இதுவரை கடமையாற்றி வந்திருந்தார்.

கடந்த டிசம்பர் மாதத்துடன் வலயக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஸ்ரீஸ்கந்தராஜா ஓய்வு பெற்று சென்ற பின்னர் வவுனியா வடக்கு வலயத்திற்கு நிரந்தரமான வலயகல்வி பணிப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.

அத்துடன் வவுனியா தெற்கு வலய கல்வி கல்வி பணிப்பாளர் மு.ராதாகிருண்ணன் வடக்கு வலயத்தினை நிர்வகித்து வந்த நிலையில் சு.அன்னமலர் கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த இவர் கல்வி நிர்வாக சேவையின் ஊடாக வவுனியா மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருந்த நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திலும் சில ஆண்டுகள் பிரதி கல்வி பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பால்மாவின் விலை 80 ரூபாவினால் அதிகரிப்பு!!

குழந்தைகள் பால்மா தவிர்ந்த ஏனைய அனைத்து பால்மாக்களின் விலைகளையும் அதிகரிக்கவாழ்க்கைச் செலவுகள் குழு அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்காலத்தில் வெளியிடஉள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக இலங்கையில் அதன்விலையை அதிகரிக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையிடம் பால்மாஇறக்குமதியாளர்கள் கோரியுள்ளன.

இதையடுத்து, குறித்த கோரிக்கையை வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் நுகர்வோர்அதிகார சபை முன்வைத்துள்ளது.

இதன்போது ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்கவாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கி உள்ளதாக நுகர்வோர் அதிகார சபைதெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ஆர்யா!!

யாழ்ப்பாணத்தில் நடிகர் ஆர்யாவின் செயற்பாடு குறித்து பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆர்யா, யாழ். பொது நூலகத்தில் அத்துமீறிய நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நூலகத்தின் வாசகர்கள் உள்ளிட்ட பலரும் குழப்பம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நூலகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அதன் வெளிப்புறத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதனை அத்துமீறி நூலகக் கட்டடத்தின் உள்ளே படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் க.ஜெயசீலன் தெரிவித்தார்.

படப்பிடிப்புக் குழுவினர் அத்துமீறி நடந்து கொண்டனர் என்று ஆணையாளர் தெரிவித்தபோதும், அங்கு பணியாற்றுவோர் படப்பிடிப்புக் குழுவினருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது வாசகர்கள் உள்ளே நுழைவதையும் சுற்றுலாத்துறையினர் நூலகத்தைப் பார்வையிடுவதையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் அரை மணி நேரம் இந்தக் குழப்பம் நீடித்தது.

இதேவேளை, நடிகர் ஆர்யாவின் படப்பிடிப்பு பொது நூலகத்தில் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் சிலர் நூலகத்திற்கு வந்து அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடும் எங்கவீட்டு மாப்பிள்ளை என்கிற தொலைக்காட்சித் தொடருக்கான படிப்பிடிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியின் அதிரடி நடவடிக்கை : முதல்முறையாக வடக்கு ஆளுநராக தமிழர் நியமனம்!!

மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ள அரசு வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், மேல்மாகாண ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள முன்னர் அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆளுநரொருவரின் சேவைக்காலம் ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளதால் தற்போது சேவையிலுள்ள அனைத்து ஆளுநர்களும் இடமாற்றப்படவுள்ளனர்.

இதன்படி சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தென் மாகாண ஆளுநராகவும், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும்,

தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மேல்மாகாண ஆளுநராகவும், மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வட மாகாண ஆளுநராகவும், வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க வட மத்திய மாகாண ஆளுநராகவும், வட மத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திசாநாயக்க வடமேல் மாகாண ஆளுநராகவும் இடமாற்றப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர்.

அதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள் என்று அறியமுடிந்தது.

-தமிழ்வின்-

வவுனியாவில் பாலியல் இலஞ்சம் கோருவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது குற்றச்சாட்டு!!

 
வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பாலியல் இலஞ்சம் கேட்பதாகவும் அவரை இடமாற்றம் செய்ய கோரி வன்னி பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டை வவுனியா பாவற்குளம் படிவம் ஒன்றைச் சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டனர்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாவற்குளம் படிவும் 1 கிராமத்தை சேர்ந்த மக்கள் அக்கிராமத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக் கோரி இன்று (23.03) மாலை 4 மணிக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் இல்லத்திற்கு சென்று முறையிட்டுள்ளதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாவற்குளம் படிவம் 1 கிராமத்தின் அபிவிருத்தி சங்கத் தலைவர் அச்சுதன் அலெக்ஸ் தலைமையில் சென்ற கிராம மக்கள் கிராமத்தில் திட்டமிட்ட முறையில் அரச கொடுப்பனவுகள் கிராம உத்தியோகத்தரால் மறுக்கப்படுவதாகவும் கிரமத்தில் செய்யப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தரால் உதவித்திட்டங்கள் வழங்கப்பட வேண்டுமானால் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக விளக்கமாக கேட்டறிந்துகொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இப்பிரச்சனை தொடர்பாக செட்டிக்குளம் பிரதேச செயலாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் உடனடியாக பாவற்குளம் படிவம் 1 கிராமத்தை சேர்ந்த மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு பணித்திருந்ததுடன் எதிர்வரும் 26.03-2018 வவுனியாவில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இப்பிரச்சனையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கிரம மக்களிடம் உறுதியளித்திருந்தார்.

பிரதேச சபை உறுப்பினராக தெரிவான பாடசாலை மாணவி!!

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கு அமைய பாடசாலை மாணவி ஒருவர் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாத்தாண்டிய – குடாவெவ பிரதேசத்தை சேர்ந்த சுபா தென்னகோன் என்ற 18 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் விஞ்ஞாப் பிரிவில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையிலும் தோற்றவுள்ளார்.

சுபா தென்னகோன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாத்தாண்டிய பிரதேச சபைக்கு தெரிவாகியுள்ளார்.

இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றிருந்த அவர் தனது வாக்கை தனக்கே அளிக்கும் வாய்ப்பையும் பெற்றிந்தமை விசேட அம்சமாகும்

பிரான்சில் ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலர் சிறைபிடிப்பு!!

தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளாக பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரர்கள் அங்காடியினுள் நுழைவதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும், இதில் ஒவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பணயக்கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் நடவடிக்கையின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாத குழுவினர் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வவுனியாவில் தப்பு செய்பவர்கள் அனைவரும் தப்பை நிறுத்தவும் என பாதாதைகள்!!

 
தப்பு செய்பவர்கள் அணைவரும் தப்பை நிறுத்தவும் எனும் தொனிப்பொருளிலில் வவுனியா கணேசபுரம் பிரதான வீதி சந்தியில் இன்று (23.03.2018) பாதாதை ஒன்று காணப்பட்டது.

தப்பு செய்பவர்கள் அனைவரும் தப்பை நிறுத்தவும் இதை மீறி தப்பு செய்பவர்கள் எம்மிடம் தாங்க இயலாக தணடனையை அனுபவிப்பீர்கள் என எழுதப்பட்டு வீஸ்மர்கள் என பொறுப்புக் கூறப்பட்ட பாதாதையே அவ்விடத்தில் காணப்பட்டது.

இவ்விடயம் கணேசபுரம் மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு காதலனை தேடிய இலங்கை யுவதி பரிதாபமாக பலி : டெல்லியில் நடந்த கோரம்!!

தமிழகத்தில் காணாமல் இலங்கை பெண்ணொருவர் புதுடில்லியில் உயிரிழந்துள்தாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு – பெரம்பலூர் அதிகளில் முகாமில் இருந்து காணாமல் போன இலங்கைப் பெண்ணான 24 வயது ரம்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி முதல் ரம்யா காணாமல் போயிருந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் படியே குறித்தப் பெண் பெரம்பலூர் முகாமைச் சேர்ந்தவர் என்பதும், அவர் காணாமல் போய் இருப்பதாக முறைப்பாடு பதிவாகி இருக்கின்றமையும் டெல்லி பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

தமிழகத்திலிருந்து ரம்யா ஏன் புதுடில்லி சென்றார் என்பது குறித்து டெல்லி பொலிஸாரல் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரம்யாவின் காதலன் இலங்கையில் இருந்து சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

அவரை சந்திக்க ரம்யா முடிவு செய்து இதற்காக அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி சென்னை சென்றுள்ளார்.

அங்கு ஒரு முகவர் மூலம் தனது பெயரை ஸ்ரீமதி ஹமீரா என மாற்றி போலியாக கடவுச்சீட்டு எடுக்க முயற்சித்துள்ளார். பின்னர், டெல்லி சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லவும் தயாராகி இருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்த போதுதான் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.