திருமணத்தில் நடனம் ஆடிய மனைவியை கொலை செய்த கணவன்!!

இந்தியாவில் திருமணத்தின் போது மனைவி நடனமாடியதால், அப்பெண்ணின் கணவர் அவரை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி சப்னா-சுபீர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

சுபீர் திருமணத்திற்கு பின் சப்னாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனையே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இருவரும் தங்கள் உறவினரின் திருமணத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற போது சப்னா நடனமாடியுள்ளார். வட இந்திய திருமணங்களில் பெண்கள் நடனம் ஆடுவது மிகவும் இயல்பான ஒன்றாகும்.

ஆனால் சுபீரோ இவரை நடனமாடக் கூடாது என்று கூறியதுமட்டுமின்றி, அவரை தாக்கியுள்ளார். இதன் காரணமாக அவர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.

அதன் பின் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிய பின், இரவோடு இரவாக சப்னாவை, சுபீர் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சுபீரின் தாயாரும் உடந்தை.

சப்னாவை கொலை செய்த பின் இருவரும் தற்கொலை நாடகமாடியுள்ள்னர். ஆனால் பொலிசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலிண்டரை வெடிக்க வைத்து தாய், மகள்கள் தற்கொலை!!

தமிழகத்தில் சிலிண்டரை வெடிக்க வைத்து, தாய் மற்றும் மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தோட்டை அடுத்த தயிர்பாளையம் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் தாய் ஜெயமணி, மகள்கள் தனுஷ்யா, பவித்ரா ஆகியோரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஜெயமணியின் கணவர் ராஜா வயலுக்கு சென்றிருந்த வேளை, மகள்களுடன் தாய் ஜெயமணி சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

சிலிண்டர் வெடித்து மூவரும் பலியாகி இருக்கலாம் என பொலிசார் சந்தேகித்த நிலையில், விசாரணையில் தற்கொலை என தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிறைவேறாத ஆசை : உயிரை மாயத்துக்கொண்ட இளைஞன்!!

வேலூர் மாவட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் சேண்பாக்கம் ரயில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொறியியல் பட்டதாரியான நவீன் குமாருக்கு இராணுவத்தில் இணைய வேண்டும் என்பது ஆசை, இதனால் இராணுவத்தில்
சேருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளார்.

தினமும் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக உணவகம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றவர், சில மாதங்கள் கழித்து அந்த வேலையையும் விட்டுள்ளார்.

இந்த நிலையில் நவீன்குமார் நேற்று காலை வழக்கம்போல் உடற்பயிற்சி செய்ய வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார்.

சிறிதுநேரத்தில் அவர் சேண்பாக்கம் மேம்பாலத்தின் அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.

ஆனால் பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் நவீன்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது, நவீனின் இறப்பு செய்தி குறித்து அறிந்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வேலூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமார் ராணுவத்தில் சேர முடியாததால் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் பெண்ணை தேடி வந்த அதிர்ஷ்டம் : உரிய நேரத்தில் கிடைக்காததால் கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்!!

தமிழகத்தில் அருகே வீடு இருந்தும் கடிதத்தை உரிய நேரத்தில் கொடுக்காத தபால் துறையால், இளம் பெண் அரசு வேலையை இழந்துள்ளார்

கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு வித்யா என்ற மகள் உள்ளார்.

B.Sc முடித்துள்ள இவர் தமிழக நில அளவை பதிவேடுகள் துறையின் பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதனால் நீலகிரி கலெக்டர் அலுவலகத்திலிருந்து வித்யாவிற்கு நேர்முக தேர்விற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதம் கடந்த 12-ஆம் திகதி அனுப்பப்பட்டு, மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்திற்கு கடந்த 14-ஆம் திகதி வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் 16-ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு வித்யாவுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தபால்துறையோ அந்த கடிதத்தை மார்ச் 16-ஆம் திகதி பிற்பகல் 01.40 மணிக்கு தான் வித்யாவிடம் கொடுத்துள்ளது.

கலெக்டர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்துள்ளதால், மிகவும் மகிழ்ச்சியாக கடிதத்தை திறந்து பார்த்த போது அவர் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

காலை 10.30 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். கடிதமோ 1.40 மணிக்கு கிடைத்துள்ளது என்று வருந்தியுள்ளார்.

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அரசு வேலைக்கான வாய்ப்பு இப்படி தபால் துறையினரின் அலட்சியத்தால் தவறிவிட்டதே, அதிர்ஷ்டம் என்னை தேடி வந்தும் இப்படியாகிவிட்டதே என்று கூறி, உரிய நேரத்தில் கடிதம் கிடைக்காததால், தனது அரசுப்பணி வாய்ப்பு பறிக்கப்பட்டதாக மேட்டுப்பாளையம் தலைமை தபால் துறை அதிகாரிகளிடம் வித்யா புகார் அளித்துள்ளார்.

மேலும் வித்யாவின் வீடு தபால் அலுவலகத்தின் அருகிலே தான் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2014ல் மாயமான மலேசிய எம்.எச் 370 விமானம் : அவுஸ்திரேலிய பொறியியலாளர் திடுக்கிடும் தகவல்!!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் தான் 2014ம் ஆண்டு மாயமான மலேசிய
விமானம் எம்எல்370ன் பாகங்களை கூகுள் எர்த் மூலம் கண்டறிந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பீஜிங் நோக்கி 293 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த போது மாயமானது.

1,046 நாட்களுக்கு பின்பு, மலேசியா மற்றும் சீனாவுடன் இணைந்து நடந்த தேடுதல் முயற்சி முற்றிலுமாக கைவிடப்பட்டது.

உலகளவில் நூற்றுக்கணக்கானோர் சிறப்பாக தேடுதல் முயற்சி செய்தும், விமானத்தை கண்டறிய முடியவில்லை.

விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே இந்த தேடுதல் பணிதான் மிகவும் பெரிய பரப்பளவிலும், ஆழ்கடலிலும் நடைபெற்றது.

இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மாயமான விமானம் குறித்து அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் மோகன் என்ற மெகானிக்கல் என்ஜினியர் திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார்.

காணாமல் போன விமானங்களை தேடும் துறையில் ஆர்வமுள்ள பீட்டர், கூகுள் எர்த் மூலம் 2014ம் ஆண்டு மாயமான எம்எச்370ஐ கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

இவரின் ஆய்வு முடிவுகள்படி விமானம் மொரிஷியஷில் இருந்து 22.5 கிமீட்டர் தொலைவில் 16 கி.மீ தெற்கில் உள்ள ரவுண்ட் தீவை காட்டுகிறது. இந்தத் தீவில் இதுவரை விமானம் மாயமானது குறித்து தேடுதல் நடத்தப்பட வில்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் சரியான தேடுதல் வேட்டையை நடத்தாததோடு இந்தப் பகுதியில் தேடுதல் நடத்தவும் மறுத்ததாக பீட்டர் கூறுகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 4 விசாரணை அதிகாரிகள் அவுஸ்திரேலியாவிற்கு எம்எச் 370 விமானத்தை தேடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர், ஆனால் இந்த அதிகாரிகள் பல முக்கிய தகவல்களை கூறாமல் மறைத்து விட்டதாக பீட்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

டெய்லி ஸ்டார் பத்திரிக்கைக்கு பீட்டர் அளித்துள்ள பேட்டியில் “அமெரிக்க அதிகாரிகள் திரட்டிய தகவல்களை அனைத்தையும் மக்கள் மற்றும் எங்களது அரசாங்கத்திடம் இருந்து மறைத்து விட்டனர், அது ஏன் என தெரியவில்லை.

மாயமான விமானம் முற்றிலும் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது, ஒருவேளை இந்த உண்மையைச் சொன்னால் வேறு விசாரணை தொடங்குமோ என்று அவர்கள் கூறாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் சேகரித்த தகவல்களை பீட்டர் அவுஸ்திரேலியாவின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இவரின் கூற்றுப்படி விமானம் புறப்பட்ட 6 மணி நேரத்திற்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

– One India-

வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 24 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த இஸ்ஹாக் அஹமட் வயது 33 என்பவரே காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிப்பொத்தானை பகுதியிலிருந்து கந்தளாயிக்கு சென்ற முச்சக்கர வண்டியும், கந்தளாயிலிருந்து திருகோணமலை பகுதிக்குச் சென்ற முச்சக்கர வண்டியுமே மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு!!

 
மட்டக்களப்பு – வவுணதீவு, குறிஞ்சாமுனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை கணவன் மற்றும் மனைவி இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறிஞ்சாமுனை முதலாம் குறுக்கிலுள்ள வீடொன்றிலிருந்து 40 வயதான க.வேதநாயகமும் அவரது மனைவி 28 வயதான ந.லோகநாயகி ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மனைவி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இறந்த பெண்ணிற்கு மூன்று மாத கைக்குழந்தையொன்று உள்ளதாகவும், ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மாலை இருவருக்கும் இடையில் சண்டை இடம்பெற்றதாகவும் இதன்போது அயலவர்கள் சென்று இருவரையும் சமாதானம் செய்திருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மட்டக்களப்பு குற்ற தடவியில் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் வவுணதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இளைஞன் கழுத்தறுத்து தற்கொலை!!

 

வவுனியாவில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம், மில் வீதி பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர்கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த மூன்றுதினங்களாக குழப்ப நிலையில் இருந்த குறித்த இளைஞர் இன்று தனது கழுத்தினை கத்தியால் அறுத்துள்ளார்.

உடனடியாகவே வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்உயிரிழந்துள்ளார். 36 வயதுடைய சி.தங்கரூபன் என்ற இளைஞரே அவ்வாறுஉயிரிழந்தவராவார்.

இது தொடர்பான விசாரணைகளை பண்டாரிக்குளம் பொலிசார்மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பெண் கரடி தாக்கியத்தில் ஒருவர் படுகாயம்!!

வவுனியா, ஓமந்தை கொம்புவைத்தகுளம் காட்டில் நேற்று மாலை தேன் எடுக்க சென்ற சிலரை கரடி தாக்கியுள்ளது. அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதர்பனிக்கமயிலங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபரே படுகாமடைந்துள்ளார்.

இவர் மேலும் இரண்டு பேருடன் இணைந்து காட்டில் தேன் எடுக்க சென்றுள்ளார். அப்போது 6 குட்டிகளுடன் இருந்த பெண் கரடி 42 வயதான நபரை தாக்கியுள்ளது.

கரடி தாக்கியத்தில் இவரது காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேமதாஸ மைதானத்தில் நடந்த விநோதம் : இலங்கை கொடியுடன்இந்திய அணித் தலைவர்!!

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கையர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர்.

அதற்கமைய இலங்கை ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணியுடன் இலங்கை அணியின் கொடியை தூக்கி கொண்டு மைதானம் முழுவதும் சென்றுள்ளார். இந்த காட்சி அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய அணிக்கு இலங்கையர்கள் முழுமையான ஆதரவை வழங்கினர். இதனால் இலங்கை ரசிகர்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் ரோஹித் ஷர்மா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

கிரிக்கெட் என்பது ஜென்டில்மென் விளையாட்டு என கூறப்படுவதனை இந்திய அணி உறுதி செய்துள்ளதாக பலர் கூறியுள்ளனர்.

அத்துடன் தனது நன்றி உரையிலும் இலங்கை ரசிர்களுக்கு தனது மனம் நிறைந்த நன்றியை ரோஹித் ஷர்மா வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று சம்பியன் ஆனது.

காணொளியைக்காண 

திடீரென வானிலிருந்து வந்த மர்ம ஒளி : மாணவனின் உயிரை பறித்த பரிதாபம்!!

பாடசாலையில் பெற்ற பதக்கத்துடன் வீட்டுக்கு சென்று மாணவன் வழியில் உயிரிழந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவ தலைவர் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு சென்ற மாணவன் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மாணவன் உயிரிழந்ததாக பலங்கொடை வைத்தியசாலையின் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலங்கொடை கைரேனகம பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் தில்ஹார ருவன் குமார என்ற 13 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் இடம்பெற்ற மாணவ தலைவர் பதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பும் போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மழை இல்லாத நேரத்தில் திடீரென வானத்தில் இருந்து வந்த தீ பந்து போன்று ஏதோன்று இந்த மாணவன் உட்பட மூவரை மூடியுள்ளது. இதன்போது குறித்த மாணவன் சுயநினைவற்று காணபட்டுள்ளார். உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் மின்னல் தாக்கியமையினால் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!!

 
சர்வதேச மகளிர் தின நிகழ்வு (2018) வவுனியா நகர மகளிர் சங்கத்தினரால் நேற்று (18) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா சூசைப்பிள்ளையார் குளம், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபத்தில் வவுனியா நகர மகளிர் சங்கத்தின் தலைவி இம்மானுவேல் லூர்த்தம்மா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட சமூர்த்தி முகாமையாளர் திருமதி சர்வலோஜினி சந்திரகுமார் கலந்துகொண்டிருந்தார்.

கணவனை இழந்தபோதும் உழைப்பின் மூலம் சமூகத்தில் சாதித்த சிறந்த பெண்களை மகளிர் தின நிகழ்வில் கௌரவித்து பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் பெண்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.சுபாஜினி, வவுனியா நகர சமூர்த்தி உத்தியோகத்தர் சிறிகுமார் கீதாஞ்சலி, வவுனியா நகரம் அபிவிருத்தி உத்தியோகத்தர் இன்பமதி தயாநிதி, வவுனியா சிறுவர் பெண்கள் பிரிவு உப பொலிஸ் உத்தியோகத்தர் திருமதி சுவர்ண திலகரத்தின, வவுனியா கற்குளி பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையம் சகோதரி திருமணி, வவுனியா வர்த்தகசங்கத் தலைவர் ரி.கே.ராஜலிங்கம், வவுனியா முதியோர் சங்கத்தின் தலைவர் தா.சலசலோசன், கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல்!!

ரஷ்யாவின் தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தளத்திற்கு சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி!!

பளையில் நேற்று (18.03) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி பகுதியில் இராணுவத்தின் கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

ஒரு பிள்ளையின் தந்தையான குணசீலன் ஜெசிந்தன் (29 வயது) என்பரே உயிரிழந்தவர் என்பதுடன் தர்மகுலசிங்கம் தர்மகுமார் (27 வயது) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு அனுமதி அளித்த பிசிசிஐ!!

இந்திய கிரிக்கெட் அணி, பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது.

மும்பையில், இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களை நிர்ணயிக்கும் பி.சி.சி.ஐ அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த தொழில்நுட்ப பிரிவு தலைவர் சவுரவ் கங்குலி, தற்காலிக செயலாளர் அமிதாப் சௌத்ரி, நிர்வாக பொது மேலாளர்கள் சபா கரீம் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, அக்டோபர் மாதம் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்காக ராஜ்கோட் அல்லது ஹைதராபாத்தில் உள்ள மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் நிர்வாகத்தினரின் ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு இந்த போட்டி நடைபெற உள்ளது.

தாயகத்தை சோகத்தில் ஆழ்த்திய துன்பியல் சம்பவம் : கணவனுக்காக காத்திருந்த மனைவி மரணம்!!

தாயகத்தில் பெரும் துன்பியல் சம்பவம் ஒன்று பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசியல் கைதியான தனது கணவனின் விடுதலைக்காக காத்திருந்த மனைவி, சோகம் தாங்க முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஆனந்தசுதாகர் யோகராணி என்ற பெண்மணியே கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆயுள் தண்டனை கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

அவரது மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். இவரின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்பதற்கு ஆனந்தசுதாகர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.

தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்துள்ளனர்.

வீடியோவைக்கான