பரபரப்பான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணி!!

வங்கதேச அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்.

இலங்கையில் நடைபெற்றுவந்த நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களாக தமிம் இக்பால், லித்தோன் தாஸ் களமிறங்கினர்.

லித்தோன் தாஸ் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த சபீர் ரஹ்மான், தமிம் இக்பாலுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தமிம் இக்பால் 15 ஓட்டங்களிலும், அடுத்து வந்த சவுமியா சர்க்கர் 1 ஓட்டத்திலும், முஸ்தபிசுர் ரஹீம் 9 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறி வஙகதேச அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இருந்த போதிலும் தனி ஒரு ஆளாக போராடியா சபீர் ரஹ்மான அரைசதம் அடித்து அசத்தினார். 50 பந்துக்கு 77 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சபீர் உனகட் பந்து வீச்சில் வெளியேற வங்கதேச அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்தது.

வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக சபீர் 77 ஓட்டங்களும், மகமதுல்லா 21 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் சஹால் 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் உடன்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன் பின் 167 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா-ஷிகார் தவான் களமிறங்கினர்.

ரோகித் சர்மா ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2.4 ஓவருக்கு 32 ஓட்டங்கள் எடுத்திருந்த போது தவான் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா டக் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

இதனால் இந்திய அணி 32 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ராகுல், ரோகித் சர்மாவுடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் எண்ணிக்கை சீராக உயர்ந்தது.

ராகுல்(24), மணீஷ் பாண்டே(28) அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்த வெளிப்படுத்திய ரோகித் சர்மா 56 ஓட்டங்களிலும் வெளியேறியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

ஆறாவது வீரராக களமிறங்கிய விஜய் சங்கர் கடைசி கட்டத்தில் சொதப்ப, இந்திய அணியிடம் இருந்த வெற்றி வங்கதேசம் பக்கம் சென்றது.

ஒரு கட்டத்தில் கடைசி இரண்டு ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

வந்த வேகத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர், இரண்டு ஓட்டங்கள் என 22 ஓட்டங்கள் குவிக்க இந்திய அணிக்கு கடைசி ஒவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரில் விஜய் சங்கர் பவுண்டரி அடித்து வெளியேறியதால், கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி பந்தை சந்தித்த தினேஷ் கார்த்திக் சிக்ஸர் பறக்க விட, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தினேஷ் கார்த்திக்கும் தொடரின் சிறப்பாட்டக்காரராக வாஷிங்டன் சுந்தரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மோசமாக நடந்த வங்கதேச வீரர்கள் : வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் சபை!!

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுகொள்ள முடியாது என வங்கதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

சுதந்திர கிண்ண தொடரின் முக்கிய ஆட்டத்தில் இலங்கையும், வங்கதேச அணியும் மோதின. இதில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி நேரத்தில் எழுந்த நோ போல் சர்ச்சை பரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சமயத்தில் வங்கதேச வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாகவும், கோபமாகவும் நடந்து கொண்டார்கள்.

இந்நிலையில் வங்கதேச அணி வீரர்களின் செயலுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை வருத்தம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேச வீரர்கள் நடத்தையை ஏற்று கொள்ள முடியாது.

போட்டியின் போது எழும் அழுத்தம் காரணமாக இது போன்ற நிகழ்வுகள் நேர்ந்து விட்டது என்பதை புரிந்துகொள்கிறோம்.

ஆனால் ஒரு கடினமான சூழ்நிலையை கையாளும் போது தொழில்முறை எதிர்பார்ப்ப்பை பூர்த்தி செய்யவேண்டியது அவசியமாகும். ஆனால் வங்கதேச அணி அதை செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

நாய்க்குட்டி ஒன்றிற்காக பாதி வழியில் விமானத்தை திருப்பிய விமானிகள்!!

அமெரிக்காவில் விமானம் மாறி ஏறிய நாய்க்குட்டியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க, விமானிகள் பாதி வழியில் விமானத்தை திருப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூ ஜெர்சியில் இருந்து ஒஹாயோ செல்ல வேண்டிய விமானத்தில் நாய்க்குட்டி ஒன்று பயணிக்க இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் செயிண்ட் லூயிஸ் செல்லும் விமானத்தில் தவறுதலாக ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விமானம் பாதி தூரம் பயணித்த போது இந்த விடயம் விமான நிறுவனத்திற்கு தெரிய வந்தது. அதன் பின்னர், ஒஹாயோவிற்கு விமானத்தை திருப்புமாறு யுனைடெட் நிறுவனம் ஆணையிட்டது.

அதன்படி விமானிகள், பயணிகளின் எதிர்ப்பையும் மீறி விமானத்தை திருப்பியுள்ளனர். 6 மணி நேரத்திற்கு பின்னர் அந்த நாய்க்குட்டி, அதன் உரிமையாளரிடம் சேர்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் பயணம் செய்த விமானிகள் அனைவரும் வேறு விமானத்தின் மூலம், செயிண்ட் லூயிஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், யுனைடெட் விமானத்தில் நாய் ஒன்று மரணம் அடைந்தது. அதே வாரம், மற்றொரு நாய் வேறு விமானத்தில் தவறுதலாக மாற்றி ஏற்றப்பட்டது.

இந்த இரண்டு பிரச்சனைகளும் பெரிதானதைத் தொடர்ந்தே, தற்போது நாய் ஒன்றிற்காக விமானம் திருப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சவுதியில் திருமணம் செய்து கொள்வதற்கு புதிய நிபந்தனை!!

சவுதி அரேபியாவில் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு புதிய நிபந்தனைகளை அந்த நாட்டு அரசு விதித்துள்ளது.

வெளிநாட்டவர்களை திருமணம் செய்து கொள்ள விரும்பும் சவுதி அரேபிய பெண்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது என அந்த நாட்டு அரசு புது நிபந்தனை விதித்துள்ளது.

மட்டுமின்றி தம்பதிகள் இருவருக்குமான வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிபந்தனைகளை கடைபிடிக்கும் நபர்களுக்கு மட்டுமே திருமண அனுமதி வழங்கப்படும் என சவுதி அரேபிய உள்விவகாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமணம் செய்வதாக கூறி கைவிட்ட காதலன் : அதே நாளில் வேறு நபரை மணந்த காதலி!!

இந்தியாவில் ஏற்கனவே திருமணமான நபர் வேறு பெண்ணை காதலிப்பதாக கூறி அவரை பிரிந்த நிலையில், குறித்த பெண் காவலரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் ரிப்பிள் வனியா (24). தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவருக்கு மகேஷ் ரத்தோட் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் மகேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் இதை அவர் ரிப்பிளிடமிருந்து மறைத்துள்ளார். ஆனால் மனைவியை சில மாதங்களாக பிரிந்து மகேஷ் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீட்டார் எதிர்ப்பை மீறி மகேஷை திருமணம் செய்து கொள்ள ரிப்பிள் அவர் இடத்துக்கு சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் இது குறித்த தகவல் மகேஷின் மனைவிக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசாரிடம் அவர் புகார் கொடுக்க ரிப்பிளையும், மகேஷையும் காவல் நிலையத்துக்கு பொலிசார் அழைத்து சென்றனர்.

அங்கு கொடுக்க்கப்பட்ட கவுன்சிலிங்கை அடுத்து, தனது மனைவியுடன் சென்று வாழ விரும்புவதாக மகேஷ் கூறியுள்ளார்.

ஆனால் இந்த விடயம் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக கூறிய ரிப்பிள் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி பொலிசாரை அதிர வைத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் ஒரு முடிவுக்கு வந்தனர். ஆனால் பொலிசார் அந்த சூழலில் அதிரடி முடிவை எடுத்தனர்.

அதன்படி அங்கு பணிபுரியும் ஜாஸ்மட் சோலாங்கி (28) என்ற காவலரை ரிப்பிளுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தனர்.

ஜாஸ்மட் மிகவும் நேர்மையான காவலர், அவரை திருமணம் செய்தால் உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என ரிப்பிளுக்கு புரிய வைத்தனர்.

இதையடுத்து திருமணத்துக்கு முழு மனதோடு சம்மதித்த ரிப்பிள், ஜாஸ்மட்டை அங்கேயே பொலிசார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். தம்பதியை பொலிசார் உயர் அதிகாரிகள் வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

மருமகளை நடுரோட்டில் வெட்டி கொன்ற மாமனார் : பதறவைக்கும் காரணம்!!

இந்தியாவில் மருமகளை வாளால் வெட்டி கொன்ற மாமனாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் நகரை சேர்ந்தவர் முகேஷ் ராஜ்புட். இவர் மனைவி உஷா தேவி (32) தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் முகேஷ் கடுமையாக உழைத்த நிலையில், உஷாவும் தொழிற்சாலையில் வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனால் மருமகள் வேலைக்கு செல்வதை விரும்பாத அவரின் மாமனார் மம் ராஜ் (62) இது நமது குடும்பத்துக்கு எதிரானது என கூறி எதிர்த்துள்ளார்.

ஆனால் இதை உஷா கேட்கவில்லை, இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்று கொண்டிருந்த உஷாவை வீதியில் வழிமறித்த ராஜ் தான் வைத்திருந்த வாளால் அவர் தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் உஷா சடலத்தை கைப்பற்றிவிட்டு ராஜை கைது செய்துள்ளனர்.

தாயின் கழுத்தை அறுத்து தலையுடன் சரணடைந்த இளைஞர்!!

தமிழகத்தில் சொத்து பிரச்சனை காரணமாக தனது தாயை கொலை செய்து, அவரின் தலையுடன் இளைஞர் ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மறவம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவரின் தந்தை தங்கராசு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.

தங்கராசுவின் கொலையில் அவரின் மனைவி ராணி மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ராணிக்கும் அவரது மூத்த மகன் ஆனந்திற்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த ஆனந்த், அவரது தாய் ராணியை கழுத்தறுத்து படுகொலை செய்தார்.

அதன் பின்னர், அவரின் தலையை வெட்டி எடுத்த ஆனந்த், கறம்பக்குடி காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையர்களை திகைக்க வைத்த பிரித்தானிய பெண்!!

இலங்கையின் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளை கண்ட இளம் பெண் ஒருவர் அதனை பிரித்தானியாவுக்கு கொண்டு செல்ல நிதி திரட்டி வருகின்றார்.

Helena Hanson பிரித்தானிய பெண் தனது கணவருடன் சுற்றுலா வந்த போது 4 நாய் குட்டிகள் பசி மற்றும் குளிரில் நடுங்கிய நிலையில் கண்டுள்ளார்.

அந்த பெண் குறித்த நாய் குட்டிகளை உணவகம் ஒன்றுக்கு கொண்டு சென்று உணவளித்து குளிரை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் அந்த 4 குட்டிகுளுக்கு அவர் பெயர் வைத்துள்ளார். அந்த நாய் குட்டிகள் பிறந்து ஒரு நாள் தான் என தெரியவந்தவுடன் ஆச்சரியமாக இருந்தது என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

4 குட்டிகளில் ஒன்று மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இலங்கை தெருக்களில் நாய் குட்டிகள் இவ்வாறு தனித்து விடப்படுவது பொதுவான ஒரு விடயமாகியுள்ளதாகவும், அதன் தாய் குட்டிகளுக்கு உணவு தேட சென்று விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக பட்டம் பெற்ற Helena இலங்கையில் உள்ள 1200 தெரு நாய்களை காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் மோசமான நிலையை அடைந்த நாய் குட்டி உயிரிந்தமையினால் மீதமுள்ள குட்டிகளை தான் பிரித்தானியாவில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், அங்கு அவை சுற்றி திரிந்து விளையாட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாய் குட்டிகளை கொண்டு செல்வதற்கு கிட்டத்தட்ட 2000 பவுண்டகள் தேவைப்படுவதாகவும், அதற்காக தாம் நிதி உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர்கள் நிதி சேகரிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு 500 பவுண்ட் நிதியை அவர்களால் தேட முடிந்துள்ளதென அவர் மேலும் கூறியுள்ளார்.

வவுனியாவில் சத்தியலிங்கத்தின் தலையீட்டால் விகாரை அமைக்கும் பணி நிறுத்தம்!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை அடிக்கல் நாட்டப்படவிருந்த மத வழிபாட்டுத்தளம் என்ற தோரணையிலான பௌத்த விகாரை அமைக்கும் பணி வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு பின்புறமாகவும் செயலகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாகவும் பௌத்த கட்டடக்கலையை பிரதிபலித்து முப்படையினரின் அனுசரணையில் வழிபாட்டு தலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நாளை திங்கட்கிழமை அதற்கான அடிக்கல் நாட்டும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் ஊடகங்கள் வாயிலாக இவ்விடயம் வெளிக்கொணரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இவ்விடயம் தொடர்பாக ஊடக அறிக்கையொன்றினை முதலில் விடுத்திருந்ததன் அடிப்படையில் இவ்விடயம் தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

மாவட்ட செயலகத்தில் வழிபாட்டு தலம் அமைப்பது தொடர்பாகவும் அது பௌத்த விகாரையெனவும் எனக்கு அறியக்கிடைத்தது.

இதன் அடிப்படையில் இதனை நிறுத்துமாறு ஊடக வாயிலாக அறிக்கையினை விடுத்திருந்தபோதிலும் அதற்கு பின்னரும் இவ் வேலைத்திட்டம் தொடர்வதாக தெரியவந்த நிலையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் தொடர்புகொள்ள முயற்சித்திருந்தேன். அது பயன் அளிக்காமையினால் நேரடியாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன்.

இதன் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் சர்வமதங்களையும் உள்ளடக்கிய வழிபாட்டு தலமே அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

எனினும் தற்போதைய நிலையில் மாவட்ட செயலகத்தில் இவ்வாறான வழிபாட்டு தலத்தின் தேவை குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன்.

உத்தியோகத்தர்களின் விருப்பத்திற்கு அமையவே அதனை தான் அமைக்க முயற்சித்ததாக தெரிவித்ததுடன் அனைத்து மதங்களையும் உள்ளடக்கி அதனை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த நான் தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்தில் சர்ச்சைக்கு மத்தியில் இவ்வாறான வழிபாட்டு தலத்தினை அமைப்பதை உடன் நிறுத்தி பிரதேசத்தின் ஒற்றுமைக்கு வழிசமைக்குமாறு கேட்டிருந்ததுடன் அவ்வாறு அமைக்க வேண்டிய தேவையேற்படின் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடுவோம் எனவும் கூறியிருந்தேன்.

இதன் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தினை நிறுத்துவதாக அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார் என வட மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.

வவுனியா யுவதி மட்டக்களப்பில் சடலமாக மீட்பு!!

 
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேச செயலகத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள புலிபாய்ந்தகல் ஆற்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் காணப்படுவதாக வாழைச்சேனைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலகத்திற்கு மிகவும் அண்மித்த மதகு மற்றும் வாகை மரங்கள் அடர்ந்த புதர் பகுதியில் யுவதியின் சடலம் கிடப்பது பற்றி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பெண் வவுனியா – கணேசபுரத்தை சேர்ந்த 33 வயதான எஸ். சுதர்சினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் பார்த்து விட்டுத் திரும்பியிருக்கலாம் எனவும், சடலத்தின் அருகே வெளிநாட்டில் இருந்துகொண்டு வந்த பொருட்கள் சில காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கவுள்ளதாகவும், மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த ரசிகையின் ஓவியம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அவரது ரசிகை ஒருவரால் கண்கலங்கியிருக்கிறார்.

தந்தை மீது அதிகப் பாசம் கொண்ட சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய வளர்ச்சியைக் காண தனது அப்பா உயிருடன் இல்லையே என்ற வருத்தம் உண்டு. இதை அவரே தெரிவித்தும் இருக்கிறார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனுடன் அவரது தந்தை நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை ரசிகை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் மகனின் சினிமா விருது கேடயத்தை கையில் வைத்துக்கொண்டு தந்தை நிற்கிறார். சிவகார்த்திகேயன் சிரித்த முகத்துடன் மைக்கில் பேசிக்கொண்டிருக்கிறார்.

ரசிகையின் இந்த ஓவியத்தை பார்த்த சிவகார்த்திகேயன், உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், உணர்ச்சிமயமாகவும் இருக்கிறது. அப்பாவுடன் சேர்ந்து ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை. அதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது எனக்கு ஸ்பெ‌ஷலானது. நன்றியம்மா. தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் தந்தை அன்பின் முன்னே…
என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஷ்யக் காதலரை இரகசியமாக மணந்த ஸ்ரேயா!!

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண் அவரது ரஷ்ய காதலரை மும்பையில் இரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் ந. அழகப்பன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, ரவுத்திரம், ராஜபாட்டை, சந்திரா, தோழா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர். டெல்லியில் பட்டப்படிப்பு முடித்து மாடலிங் உலகில் புகுந்தார். மும்பையில் தங்கி இருந்து சினிமா படங்களில் நடித்துக் கொண்டு மாடலிங் செய்து வந்தார்.

ஸ்ரேயா ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரைக் காதலித்து வந்தார். மிகப்பெரும் கோடீசுவரரான இவர் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரரும் ஆவார்.

உதய்ப்பூரில் இருவரும் சந்தித்துக்கொண்ட போது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மார்ச் மாதம் திருமணம் செய்வதாக அறிவித்த ஸ்ரேயா, திருமணத் திகதியை அறிவிக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், ஸ்ரேயா – ஆன்டிரே கோச்சேவ் திருமணம் மும்பையில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் டென்னிஸ் வீரர் மனோஜ் பாஜ்பாய், நடிகை சபனா ஆஸ்மி மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்த திருமணம் பற்றிய தகவல் தற்போது தான் மும்பை சினிமா வட்டாரத்தில் பரவியுள்ளது. திருமணத் தகவலை ஸ்ரேயாவும் உறுதி செய்துள்ளார்.

விமானத்திலிருந்து வீழ்ந்த பணிப்பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

உகாண்டா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் இருந்து அவசர கதவு வழியாக கீழே வீழ்ந்த பணிப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உகாண்டாவில் உள்ள Entebbe விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானம் கடந்த புதன்கிழமை நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படத் தயாரானபோது, விமானத்தில் அவசர வழி கதவை பணிப்பெண் ஒருவர் திறந்து சோதித்துள்ளார்.

இதன்போது, அவர் எதிர்பாராத விதமாக கீழே வீழ்ந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.

அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

உகாண்டா விமான போக்குவரத்து அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

உலகின் மிக முக்கிய நாடுகளில் விற்பனையாகும் குடிநீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது.

போத்தல்களில் குடிநீரை நிரப்பி, அதனை மூடும் பணிகளின் போது பிளாஸ்டிக் துகள்கள் கலப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, கென்யா, லெபனான், மெக்ஸிகோ, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் விற்பனையாகும் குடிநீர் போத்தல்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 93 % குடிநீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நைலான், பொலிதீன், பாலிப்ரோப்லைன் ஆகிய துகள்கள் குடிநீரில் இருந்துள்ளன. இவை குடிநீர் போத்தல்களின் மூடிகளை செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஆகும்.

ஒரு குடிநீர் போத்தலில் அதிகபட்சமாக 10,000 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயிரோடு இருப்பவரை இறந்ததாக அறிவித்த நீதிமன்றம் : அதிரவைக்கும் காரணம்!!

ருமேனியா நாட்டில் உயிருடன் இருப்பவருக்கு வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழை ரத்து செய்ய அந்நாட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பார்லாத் பகுதியைச் சேர்ந்தவர் கான்ஸ்டன்டைன் ரியு (63). இவர் 1990களின் போது வேலை காரணமாக துருக்கிக்கு சென்றிவிட்ட நிலையில், பல ஆண்டுகள் கழித்து, கடந்த ஜனவரி மாதம் தான் ருமேனியா திரும்பினார்.

பல ஆண்டுகளாக ஊர் திரும்பாததாலும், குடும்பத்துடன் தொடர்பு கொள்ளாததாலும், உள்ளூரில் வழங்கப்பட்ட சான்றிதழ்களை புதுப்பிக்காததாலும் ரியு இறந்துவிட்டதாக ருமேனியா அரசு 2016ம் ஆண்டு அறிவித்திருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது இறப்பு சான்றிதழை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரியுவின் இறப்பு அறிவிப்பை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

ரியுவின் குடும்பத்தாரும் தற்போது ருமேனியாவில் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வெளிநாடு சென்று விட்டனர். தற்போது அக்கம் பக்கத்தினர் தான் ரியுவுக்கு உதவி வருகிறார்கள்.

பேஸ்புக் கணக்குகளை முடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை!!

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்களை வெளியிடும் பேஸ்புக் கணக்குகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான கணக்குகளை நிரந்தரமாக நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் அரசாங்கத்திடம் வாக்குறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விடுத்த கோரிக்கைகளுக்கமைய இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திடம், அரசாங்கம் விடுத்த பல கோரிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

எப்படியிருப்பினும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.