திருமணம் செய்வது போன்று தாத்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம் பேத்தி கூறும் காரணம்!!

சீனாவில் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தா எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதால் அவருடன் திருமண கோலத்தில் பேத்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

25 வயதான Fu Xuewei என்ற இளம் பெண் 87 வயதான தனது தாத்தாவான Fu Qiquanயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் Fu Xuewei தனது தாத்தாவை திருமணம் செய்வது போன்ற புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இது குறித்து Fu Xuewei கூறுகையில்,

“தாத்தாவுக்கு கடந்த இரண்டாண்டுகளில் இரு முறை பக்கவாதம் ஏற்பட்டதோடு, கடுமையான இதய நோயும் உள்ளது. அவர் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எனக்கு வருங்காலத்தில் திருமணமானவுடன் பிறக்கும் பிள்ளைகளுக்கு என் தாத்தாவின் முகம் தெரியவேண்டும்.

இதோடு அவர் என் திருமணத்தை பார்த்த மாதிரியும் இருக்கும் அதற்காக இந்த போட்டோ ஷூட் நடத்தினேன்” என கூறியுள்ளார். இளம் வயதிலேயே தனது பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்ட நிலையில் தாத்தா தான் தன்னை வளர்த்து ஆளாக்கினார் எனவும் Fu Xuewei உருக்கத்தோடு கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சமி மீது மனைவி சூதாட்ட புகார்!!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது சமி. இவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல்வேறு புகார்களை கூறி இருந்தார். கொடுமைப்படுத்தி, கொலை செய்ய முயற்சித்ததாக ​பொலிஸில் புகார் அளித்தார்.

தென் ஆபிரிக்க தொடர் முடிந்த பிறகு முகமது சமி துபாய் சென்று பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை சந்தித்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இதன் அடிப்படையில் கொல்கத்தா பொலிஸார் முகமது ‌சமி மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். அதோடு கிரிக்கெட் வாரியத்துக்கு முகமது‌சமியின் தென் ஆப்பிரிக்க பயண விவரங்களை கேட்டு கடிதம் எழுதி இருந்தனர்.

இந்த நிலையில் முகமது ‌சமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்துமாறு கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் பினோத்ராய் ஊழல் தடுப்பு குழுவை கேட்டு கொண்டுள்ளார். அதன் தலைவர் நீரஜ்குமாருக்கு இமெயிலில் இதை தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யுறுமாறும் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து முகமது‌சமியிடம் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்துகின்றது

கணணி மூலம் இயக்கப்படும் புதிய வகை விமானம் உருவாக்கம்!!

 
கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ் புதிதாக உருவாக்கி இருக்கும் விமானம் சோதனை ஓட்டத்துக்கு நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ். இதுவரை பயன்பாட்டில் இல்லாத புதிய வகை விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவருடைய கிட்டிகாவ்க் நிறுவனமும், மற்றொரு நிறுவனமும் பங்குதாரராக சேர்ந்து சிபீர் என்ற நிறுவனத்தை தொடங்கி இதன் மூலம் இந்த விமானத்தை தயாரித்து வருகிறார்கள்.

2 வகை விமானங்கள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விமானம் தரையில் தனிநபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போல ஆகாயத்தில் ஓட்டிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.

மற்றொரு விமானம் 2 பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் ஏற்கனவே உள்ள விமானத்தின் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 2 பக்கமும் பக்கவாட்டுகளில் 12 சிறிய விசிறி இருக்கும்.வானில் பறந்து படம்பிடிக்கும் கமரா விமானம்போல இந்த விமானமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கோரா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த விமானம் ஏற்கனவே வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டுள்ளது. இதில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். இருக்கும் இடத்தில் இருந்தே ஹெலிகொப்டர் போல மேல்நோக்கி எழுந்து செல்லும்,

அதேபோல செங்குத்தாக கீழே இறங்க முடியும்.இந்த விமானத்தை ஏர்டாக்சியாக பயன்படுத்த அந்த நிறுவனம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முக்கிய நகரங்களில் இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.இதற்காக பல நகரங்களில் இதன் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது நியூசிலாந்தில் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அரசு அனுமதித்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள தெற்கு தீவில் அதன் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

இந்த விமானம் கம்ப்யூட்டர் மூலம் ஆளில்லாமல் இயக்கப்படும். விமானத்தில் கோளாறு ஏற்பட்டாலோ, வேறு ஆபத்து ஏற்பட்டாலோ தானாக விமானத்தில் பாராசூட் விரிந்து பத்திரமாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் பறக்கும். 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 3000 அடி உயரத்தில் பறக்கும். இது முழுக்க முழுக்க பற்றறியில் இயங்கக்கூடியதாகும்.

கதாநாயகியாகும் ஷாருக்கானின் மகள்!!

பொலிவூட்டில் முன்னணி நாயகனாக வலம் வரும் ஷாருக்கானின் மகள் சுகானாவை கதாநாயகியாக நடிக்க வைக்க இயக்குனர்கள் பலர் அணுகுவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி ‘தடக்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். தொடர்ந்து ஷாருக்கான் மகள் சுகானாவும் கதாநாயகியாகிறார்.

17 வயதான சுகானா கல்லூரியில் படிப்பதுடன் மொடலிங்கும் செய்து வருகிறார். நடிப்பு, நடன பயற்சிகளும் பெறுகிறார்.

சுகானாவுக்கு நடிகையாக ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக தந்தை ஷாருக்கான் மூலம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் நிருபர்களிடம் கூறும்போது “சுகானாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது. நடிப்பதற்கான திறமையும் தோற்றமும் அவளுக்கு உள்ளது. முதலில் படிப்பை முடித்து விட்டு அதன்பிறகு மற்ற விடயங்கள் குறித்து யோசிக்கும்படி நான் அறிவுரை கூறியிருக்கிறேன்” என்றார்.

இயக்குனர்கள் பலர் சுகானாவை கதாநாயகியாக நடிக்க வைக்க கதைகளுடன் ஷாருக்கானை அணுகி வருகிறார்கள். அதில் ஒரு படத்தில் சுகானா தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்கு தீவைப்பு!!

 
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்கு அடையாளம் தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள், கந்தளாய் பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளுக்கு கூரைகள், சிவிலிங் வேலைகள் போன்றவற்றினை தங்கி இருந்து செய்துவந்துள்ளனர்.

வாகனத்தினை வழமை போன்று வீதியில் நிறுத்தி வைத்து விட்டு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலே அதிகாலை வேளையில் லொறிக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மாவட்ட செயலக அலுவலர்களுக்கு உடற்பயிற்சி மையம்!!

 
முதல் முறையாக வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (14.03) பொது ஊழியர்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியமான திறமையான சேவையின் உயர் மட்டத்தை உயர்த்த வடமாகாண அரசாங்க அலுவலர்களை இலக்காகக் கொண்டு உடற்பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நோக்கத்திற்காக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதானபத்ரன விளையாட்டுத்துறை அமைச்சிடம் கேட்டதற்கிணங்க 6.5 மில்லியன் நிதி வழங்கப்பட்டு அந்த நிதியில் உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.

ஆரம்ப விழாவில் வவுனியா மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெண்ணொருவருக்கு அதிர்ச்சி கொடுத்த திருடர்கள் : சுவராஸ்ய சம்பவம்!!

புஸ்ஸலாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் வினோத சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார். இந்த பெண், கடையில் இருந்து 6000 ரூபாய்க்கு கொள்வனவு செய்து வந்த பொருட்களை வீடு முழுவதும் திருடர்கள் வீசி சென்றுள்ளதனை அவதானித்துள்ளார்.

கடைக்கு சென்று பொருட்கள் கொள்வனவு செய்த பினனர் அதனை வீட்டினுள் வைத்து விட்டு அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுளளார்.

பின்னர் வீடு திரும்பிய போது வீடு முழுவதும் தான் கொள்வனவு செய்த பொருட்கள் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்த செயலை தனது வீட்டிற்குள் புகுந்த திருடன் செய்துள்ளதாக குறித்த பெண் எண்ணியுள்ளார். பின்னர் கோபத்துடன் திருடனை தேட அவர் ஆரம்பித்துள்ளார்.

கோபமாக இருந்த பெண் திருடர்களை பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்து விட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுக்குள் புகுந்தது திருடர்கள் அல்ல குரங்குகள் என தெரியவந்துள்ளதுடன், அவர் கொள்வனவு செய்த கோதுமைமா முழுவதையும் குரங்குகள் தலையில் கொட்டி கொண்டுள்ளதாக குறித்த பெண் தெரிவி்த்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கைக்கு இவ்வளவு வருமானமா?

சமூக வலைத்தளங்கள் மீதான தடை காரணமாக அரசாங்கத்தின் வருமானம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் உள்ள இலங்கையர்களை சந்தித்து, அவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை காரணமாக அரச நிறுவனங்களின் வருமானம் உயர்வடைந்துள்ளது.

ஸ்ரீ லங்கா டெலிக்கொம் மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு என்பனவற்றுக்கு நாளொன்றுக்கு 200 மில்லியனுக்கு அதிகமான வருமான அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் பெய்த மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில்!!

 
மன்னாரில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக, அங்குள்ள தாழ் நில பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் காணிகள் வழங்கப்பட்டு, குடியமர்த்தப்பட்ட சில கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள வீடுகளும், பாதைகளும் நீரில் மூழ்கி உள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் செயற்பாட்டினால் வருத்தத்தில் பேஸ்புக் நிறுவனம்!!

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலரை, இலங்கை அரசாங்க அதிகாரிகள் சந்தித்ததாக அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திடம் மின்னஞ்சல் வாயிலாக ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளர்,

“பேஸ்புக் பயனர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமான விடயமாகும். கோபம் மற்றும் வன்முறையை ஏற்படுத்தும் விடயங்களுக்கு எதிராக எங்களால் தெளிவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் அவ்வாறான விடயங்களை நீக்குவதற்கு எங்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலைமைக்காக பதிலளிக்கும் நாம், பேஸ்புக்கில் பதிவாகும் அவ்வாறான விடயங்களை அடையாளம் காணுவதற்கும், நீக்குவதற்கும் அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்பட்டுத்தியுள்ளோம்.

முக்கிய தொடர்பு மற்றும் கருத்துக்களை வெளியிடுவதற்கு உள்ள உரிமையை நீக்கி சமூகவலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் நாம் வருத்தமடைகிறோம். விரைவில் பேஸ்புக் வழமைக்கு திரும்பும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இணையவழி வர்த்தகத்திற்கும் வருகிறது புதிய சட்டங்கள்!!

இலங்கையில் இணையவழி வர்த்தக நடவடிக்கைகளிற்கு புதிய சட்டங்களை அமுலாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈகொமர்ஸ் எனப்படும் மின்வர்த்தகம் தொடர்பாக இலங்கையில் உள்ள சட்டத்திட்டங்களும், ஒழுங்குவிதிகளும் போதுமானதாக இல்லை.

இந்தநிலையில் இதற்கான புதிய ஒழுங்குவிதிகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்குவதற்காக, சர்வதேச வர்த்தக மையத்துடன் இணைந்து, இலங்கை நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கைகளை எடுக்கிறது.

இதற்காக கொழும்பில் இன்றும் நாளையும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும், இதில் சர்வதேச வர்த்தக மையத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் குறித்த முக்கிய தீர்மானம் இன்று!!

பேஸ்புக் தடையை நீக்குவது குறித்த முக்கியமான தீர்மானம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக இலங்கை வந்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பிரதமரையும், ஜனாதிபதியின் செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தணிக்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன கருத்துக்களுள் இனவன்முறைகளை தூண்டுவனவற்றை அடையாளம் கண்டு நீக்குவதற்கான முறைமையை அமுலாக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தவிடயங்களில் இன்று இணக்கம் காணப்படும் பட்சத்தில், நாளை முதல் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டில் நாடு கடத்தலுக்காக விமானத்தில் ஏற்றிய தமிழ் குடும்பம்! அதிரடியாக மீண்டும் இறக்கம்!!

 
நாடு கடத்தலுக்காக விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று மீண்டும் இறக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்றே கடைசி நேரத்தில் கீழே இறக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான நிலையில் நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் குழந்தைகளான கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் நாடு கடத்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறித்த நால்வரும் நாடு கடத்தப்படுவதற்காக அவுஸ்ரேலிய அதிகாரிகளால் குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை நாடு கடத்துவதை தடுக்கக் கோரி அவுஸ்ரேலியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்றிரவு இவர்கள் நால்வரும் நாடு கடத்தப்படுவதற்காக பேர்த் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, வேறு பல இலங்கையர்களுடன் சிறப்பு விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் அவர்களை விமானத்தில் இருந்து இறக்கிக் கொண்டு சென்றனர்.

கடைசி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை அடுத்தே அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உயிர் காக்கும் கருவியை அகற்றச் சொன்னேன் : கதறும் திவ்யாவின் தாய்!!

குரங்கணி தீ விபத்தில் பலியான புதுமண தம்பதி திவ்யா- விவேக்கின் மரணத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஒரே பள்ளியில் படித்த திவ்யாவும், விவேக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது, முதலில் எதிர்ப்பு தெரிவித்த இவர்களது குடும்பத்தார் காலப்போக்கில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

விவேக் துபாயில் பணிபுரிய மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரின் திருமணம் கோலாகலமாக நடந்தது.

100வது நாள் கொண்டாட்ட நிகழ்வாக குரங்கணி சென்ற திவ்யா- விவேக் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர்.

முதலில் விவேக் உயிரிழந்துவிட, மதுரை அரசு மருத்துவமனையில் 90 சதவிகித தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார் திவ்யா.

உயிருக்கு போராடும் மகளை பார்க்கமுடியாமல் கதறியுள்ளார் திவ்யாவின் தாய், இப்படி இருப்பதற்கு பதிலாக இறப்பதே மேல் என கருதியவர், உயிர் காக்கும் கருவிகளை அகற்றச் சொன்னாராம்.

நேற்று உயிரிழந்த திவ்யாவின் உடலை கண்ணீர் மல்க மதுரை மயானத்திலேயே அடக்கமும் செய்துள்ளனர்.

துபாய் செல்வதற்காக விசா, விமான டிக்கெட்டுகள் எல்லாம் எடுத்து தயார் நிலையில் இருக்க விதி விளையாடிவிட்டதே என கதறுகின்றனர் உறவினர்கள்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்!!

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது கார் மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சூளைமேடு வன்னியர் 2-வது தெருவை சேர்ந்தவர் துரைவேலன், அவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 7 வயதுள்ள பவித்ரா என்ற மகள் உள்ளார்.

நேற்று இரவு சிறுமி பவித்ரா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த புதிதாக திருமணம் ஆன டேனி என்பவர் அவரது மனைவி ப்ரீத்திக்கு கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்திருக்கிறார்.

காரை ஓட்டி பழகிய ப்ரீத்தி தெரியாமல் இயக்கியதில், கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பவித்ரா மீது மோதியதில் அவரின் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்தார்.

இதை அறிந்து அலறியடித்துக் கொண்டு வந்த சிறுமியின் பெற்றோர்கள், பவித்ராவை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இச்சம்பவம் குறித்து டேனி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தியிடம் பொலிஸார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணப்பெண்ணை உயிரோடு எரித்து கொன்ற கணவரின் குடும்பம்!!

இந்தியாவில் புதுப்பெண்ணை கணவரின் குடும்பத்தினர் சேர்ந்து எரித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் போரால்டா கிராமத்தை சேர்ந்தவர் பிஸ்வாஜித் கிரி. இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கிரியின் மனைவியை அவர் மாமியார் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.

இதை கிரி தட்டி கேட்காத நிலையில், தனது அம்மாவுக்கு ஆதரவாக இருந்துள்ளார். ஆனால் இதற்கு கிரி மனைவி சம்மதிக்காத நிலையில் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று கிரி, அவரின் அம்மா மற்றும் அப்பா சேர்ந்து புதுப்பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளனர்.

வலியால் துடித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள கிரி மற்றும் அவர் பெற்றோரை தேடி வருகிறார்கள்.