இங்கிலாந்தில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் வெள்ளை நிறத்திலும், மற்றொருவர் கருப்பு நிறத்திலும் வலம்வருகின்றனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் மார்சியா மற்றும் மில்லி பிக்ஸ்(11). மார்சியா நீல நிற கண்கள் மற்றும் பொன்னிற முடியை கொண்டவராக வெளிறிய நிறத்தில் உள்ளார், இன்னொருவரான மில்லி பழுப்பு நிற கண்கள் மற்றும் கருப்பு முடி மற்றும் கருப்பு நிற தோற்றத்தில் உள்ளார்.
இவர்களின் தாயார் ஐரோப்பிய வம்சாவளியைச் சார்ந்தவராகவும், தந்தை ஜமைக்கா வம்சாவளியை சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
பிறந்த போது இருவரும் ஒரே மதிரியாகத் தான் இருந்ததாகவும், ஆனால் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் அவர்களின் தோல் மாறுபட்ட நிறங்களில் மாற்றத் தொடங்கியதாகவும் இருவரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மேலும் முதலில் மில்லிக்கு மாற்றம் ஏற்பட்டு, தோல் கருப்பு நிறத்தில் மாறியதாக கூறுகின்றனர்.
இந்த இரட்டையர்களின் மாறுபட்ட தோற்றத்திற்கான காரணம், இவர்கள் இருவரும் வெவ்வேறு விந்துவில் பிறந்தவர்கள் அதாவது ஒரு கரு முட்டையில் இரு விந்துக்களின் மூலம் பிறக்கும் சாதாரண இரட்டையர்களைப் போல் அல்லாமல், இருவேறு கருமுட்டையில் இருவேறு விந்துவின் மூலம் இவர்கள் பிறந்தவர்கள்.
நேபாளின் காத்மண்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 49 பேர்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் உயிர் பிழைத்தவர்கள் தாங்கள் கடந்து வந்த திகிலூட்டும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Basanta Bohora என்பவர் திடீரென்று விமானம் பலமாகக் குலுங்கியதாகவும் விமானம் தரையில் மோதும் சத்தம் பயங்கரமாகக் கேட்டதாகவும் கூறுகிறார். ஜன்னல் பக்கத்தில் அமர்ந்திருந்த அவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.
பங்களாதேஷைச் சேர்ந்த 29 வயது ஆசிரியரான Sharin Ahmed, “விமானத்துக்கு வெளியே பயங்கரமாகத் தீப்பிடித்ததால் நாங்கள் இருந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்தது, ஒரு வெடிச் சத்தமும் கேட்டது. தீ அணைக்கப்பட்டதும் நாங்கள் மீட்கப்பட்டோம்” என்று கூறியுள்ளார்.
விமானம் தீப்பிடித்ததை நினைவு கூறும் பயணி ஒருவர் தான் எவ்வாறு வெளியே வந்தேன் என்பது நினைவில்லை என்று தெரிவித்தார்.
“விமானம் தரையில் மோதியதும் தீப்பிடித்து எரிந்ததால் நான் வெளியேற முயற்சித்தேன், ஆனால் என் கைகளும் கால்களும் சிக்கிக் கொண்டதால் என்னால் அசைய முடியவில்லை. நான் எமர்ஜென்ஸி கதவுக்கு அருகில் இருந்ததால் பாதுகாப்புப்படையினர் வந்து கதவைத் திறந்ததும் வெளியே விழுந்து விட்டேன். நான் சுய நினைவு இழந்து விட்டதால் அதற்குப் பின் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில்லை” என்று கூறினார்.
உயிர் பிழைத்த இன்னொரு பயணியான Sanam Shakya கூறும்போது “விமானம் மேலும் கீழும் அங்கும் இங்குமாக பலமாக அசைந்தது, நான் ஏதோ air trafficதான் என்று எண்ணினேன்” என்றார்.
விமான விபத்து நிகழும்போது அருகிலிருந்த இன்னொரு விமானத்திலிருந்து தன் குழந்தையுடன் நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த Shradha Giri என்னும் பெண் பயணி ”வெளியே ஒரே குழப்பமாகக் காணப்பட்டது, ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும் வந்து கொண்டிருந்தன.
என் குழந்தையுடன் திகிலுடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கண் முன்னே நிகழ்ந்த விபத்தால் நாங்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தோம்” என்கிறார்.
ஓய்வு பெற்ற விமானப்படை கமாண்டரான Iqbal Hossain, காத்மண்டு விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்குவதற்கு விமானிகள் படும்பாட்டை விவரித்தார்.
“விமானத்தின் ஓடு பாதையின் முடிவில் ஒரு மலை உள்ளது. மலையை தாண்டி வந்ததும் விமானத்தை திடீரென்று கீழே இறக்க வேண்டும்.
ஓடு பாதையின் வலது பக்கம் பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. தவறுதலாக வலது பக்கம் திருப்பி விட்டால் அவ்வளவுதான். அகால பாதாளத்தில் விழ வேண்டியதுதான்.
உலகின் பத்து மோசமான விமான நிலையங்களில் காத்மண்டுவும் ஒன்று என்றார்.
இதற்குமுன் Pakistan International Airlines விமானம் ஒன்று 1992 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானதில் 167 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் பெற்ற மகளை கெளரவ கொலை செய்ததாக, கொல்லப்பட்ட மகளின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தனுஷா மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப் குமார் (40), இவர் மனைவி சரிதா தேவி, தம்பதிக்கு ஸ்னேகா குமாரி யாதவ் (19) என்ற மகள் இருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் ஸ்னேகாவுக்கு அவரின் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் ஸ்னேகா வேறு ஒரு இளைஞரை காதலித்து வந்த நிலையில், அந்த நபருடன் அவர் இருப்பதை மாப்பிள்ளை வீட்டார் பார்த்துவிட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து காதல் விவகாரம் குறித்து ஸ்னேகாவுக்கும், அவர் தந்தை திலீப்குமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் திகதி ஸ்னேகா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு உடல்நலக்கோளாறால் ஸ்னேகா உயிரிழந்ததாக அவர் பெற்றோர் கூறியுள்ளனர்.
அடுத்தநாள் ஸ்னேகாவின் சடலத்தை அவர் பெற்றோர் காரில் எடுத்து கொண்டு எங்கேயோ சென்று அதை எரித்துள்ளனர்.
இது அக்கம்பக்கத்தினருக்கு பலத்த சந்தேகத்தை கிளப்பிய நிலையில் பொலிசாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் திலீப்குமாரும், சரிதாவும் வீட்டுக்கு வராத நிலையில் அவர்களிடம் விசாரிக்க பொலிசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் உறவினர் வீட்டில் இருந்த திலீப்பை பொலிசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மகளின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு சென்று அவர் எரித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.
சரிதா இன்னும் கைது செய்யப்படவில்லை. ஸ்னேகா பெற்றோருடன் வசித்த வந்த வீட்டின் சுவர்களில் ரத்த கறைகள் இருப்பதையும் பொலிசார் கண்டுப்பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் திருமணத்தின் போது மணப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் Arizona பகுதியில் உள்ள Marana என்ற இடத்தில் திருமண உடையில் இருந்த இளம் பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
அதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், திருமணத்திற்காக காரில் வந்த போது, மூன்று கார்கள் மீது பயங்கரமாக மோதி விட்டு வந்துவிட்டதாகவுகவும், இதனால் ஒருவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பெண் சிறையில் அடைக்காமல் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்தே பொலிசார் விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது.
விடுவிக்கப்பட்ட அந்த பெண் திருமணம் செய்தாரா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் குரங்கணியில் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க வந்த ஹெலிகொப்டருடன், ஆசிரியர் பயிற்சி மாணவியர் செல்ஃபி எடுத்துக் கொண்டது காண்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில், மலையேற்றம் சென்றவர்கள் 36 பேர் சிக்கினர், இவர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தீயில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டது.
ஹெலிகாப்டரை நிறுத்த வசதி இல்லாததால், தற்காலிகமாக போடி ஸ்பைசஸ் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இதனைக் கண்ட ஆசிரியர் பயிற்சி மாணவியர், ஹெலிகாப்டரை நோக்கி சென்றனர்.
தீக்காயம் அடைந்தவர்களுக்கு உதவுவதற்காக மாணவியர் செல்கிறார்கள் என அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால், மாணவியர் ஒன்றாக இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சில மாணவியர் தனியாக நின்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர், தங்களது ஆசிரியர்களுடன் ஒன்றாக நின்று மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
மாணவியரின் இந்த செயல், பொதுமக்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. மேலும், மக்களிடையே மனிதநேயம் குறைந்து வருவதை இவர்களின் செயல் காட்டுகிறது.
குரங்கணி மலையில் தீ பரவியபோது, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டிவிட்டு உயிரிழந்துள்ளார் நிஷா என்ற இளம்பெண்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் தமிழ்ஒளி. இவரது மகள் நிஷா(30), ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
மரத்தான், மலையேற்றம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வ கொண்டிருந்த நிஷா, சென்னை டிரெக்கிங் கிளப்பில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் மகளிர் தினத்தை முன்னிட்டு, கிளப் சார்பில் டிரெக்கிங் செல்ல இருந்த தகவலை நிஷா அறிந்து கொண்டார். அதன் பின், தனது பெயரையும் அதில் பதிவு செய்தார்.
தொடர்ந்து, மலையேற்றத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், பலர் வழி தெரியாமல் தடுமாறியுள்ளனர். அச்சமயம், நிஷா தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால், அவர் துரதிஷ்டவசமாக தீயில் சிக்கி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, நிஷாவின் உடல், அவரது ஊரான தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் நிஷாவின் உறவினர்கள் கூறுகையில், ‘வனப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான தீயினால் ஒவ்வொருவரும் திசை தெரியாமல் ஓடியுள்ளனர். அப்போது நிஷா நினைத்திருந்தால் தப்பித்திருக்க முடியும்.
ஆனால், நிஷா மற்றவர்களை காப்பாற்ற நினைத்து அவர்களுக்கு உதவியுள்ளார். பின்னர், அவர் தப்பிக்க நினைக்கும் போது நெருப்பு நிஷாவை விட்டுவைக்கவில்லை’ என தெரிவித்துள்ளனர்.
இமயமலைக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், 15 நாள் சுற்றுப் பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார்.
அந்த பயணத்தின் ஊடாக இன்று டெராடூன் வந்துள்ள அவர், அரசியல் பேச வேண்டிய இடம் இதுவல்ல. ஆன்மீக பயணத்தில் அரசியல் வேண்டாம்.
நான் இன்னும் முழு நேர அரசியல்வாதியாக மாறவில்லை. கட்சியின் பெயரையும் அறிவிக்கவில்லை. என் நண்பர் அமிதாப் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.
இமயமலை பயணத்திற்கு பின் தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடுவார் என அவரது ரசிகர்கள் கூறி வரும் நிலையில் ரஜினியின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் முறைதவறிய உறவை கண்டித்த கணவனை மனைவி அடியாட்களை வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயப்பாக்கம் வ.வு.சி.நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மனைவி சந்திரமதி. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
செல்வம் திங்கட்கிழமை காலை அங்குள்ள வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து செல்வத்தின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து பொலிசார் ஆய்வு நடத்தினர்.
இதில் கொலை நிகழ்ந்த இடத்திலிருந்து செல்வத்தின் மனைவியான சந்திரமதியின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சந்திரமதியிடம் பொலிசார் விசாரித்த போது, செல்வத்தை ஆட்களை வைத்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் வீட்டருகில் உள்ள ஒரு இளைஞருக்கும் தொடர்பு இருந்தது. இது செல்வத்துக்கு தெரியவர, எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து அடியாட்களை வைத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து ஸ்ரீதர் என்பவரை நாடினேன்.
ஸ்ரீதர் தலைமையிலான ஆட்கள் இருட்டான வயல்வெளிக்கு செல்வத்தை அழைத்துச் சென்று இரும்புக் கம்பியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர் என கூறியுள்ளனர்.
இது சம்மந்தமாக சந்திரமதி மற்றும் ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீதர் உள்ளிட்ட நால்வரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
மெரினா நீச்சல் குளத்தில் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்த தந்தை மாரடைப்பால் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மண்ணடியை சேர்ந்தவர் சபியுல்லா (38). இவர் தனது குழந்தைகளை இன்று காலை மெரினா நீச்சல் குளத்துக்கு அழைத்து வந்த நிலையில் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக்கொண்டே அவரும் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சபியுல்லாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் நெஞ்சைப்பிடித்துக் கொண்டே தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.
இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி செய்தனர். ஆனால் மாரடைப்பு மற்றும் தண்ணீரில் மூழ்கியதால் அவர் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.
உயிரிழந்த சபியுல்லாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அபிவிருத்திகுழு கூட்டம் நேற்று இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவில் வீடமைப்புக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக 50 மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதேவேளை 40 மாதிரிக்கிராமங்களே அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தாலும் வவுனியாவிற்கு வருகை தந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவருடன் மக்கள் பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மேலும் 10 மாதிரிக்கிராமங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எனவே பிரதேச செயலாளர் காணியை ஒதுக்கீடு செய்து அதற்கான பத்திரங்களுடன் பயனாளிகள் இருப்பார்கள் என்றால் அவர்களுக்கான திட்டத்தினை செயற்படுத்த முடியும்” என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், “பயனாளிகளை அடையாளங்கண்டு காணிகளை வழங்குவதற்கு எமக்கான சுற்றுநிரூபம் தடையாகவுள்ளதால் எம்மால் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு காணியை விடுவிப்பு செய்துகொள்ள முடியும்” என தெரிவித்திருந்தார்.
கூகுள் தேடு பொறியில் கிராமப்புறங்களில் உள்ள முகவரிகளையும் கண்டறிவதற்கான கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
அத்துடன், ப்ளஸ் கோடு என்ற புதிய முறையும் முகவரியைத் தேடிக் கண்டடைவதற்கான தேடு பொறியுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் தேடுபொறியின் ஊடாக பெரும்பாலான புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள முகவரிகளை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில், அதனை சரிசெய்யும் வகையில கிராமப்புறங்களில் பகுதிகளில் உள்ள முகவரிகளை கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் தேடுபொறியில் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், Voice Navigation எனப்படும் குரல் மூலமாக வழிகாட்டும் தொழில்நுட்பத்தில், தமிழ் மொழி உள்ளிட்ட ஆறு பிராந்திய மொழிகள் கூடுதலாக இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை முழுவதும் முகநூல் மீதான தடை நீக்கப்படும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் எதிரொலியாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இலங்கை முழுவதும் அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கோவில்குளம் பகுதியில் கனடிய பிரஜையான ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,
கனடா குடியுரிமை கொண்ட 83 வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழில் உள்ள கோவிலின் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.
இதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த நபரின் மனைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழில் உறவினரது மரணசடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்த வேளையில் தனிமையில் இருந்துள்ளார்.
இன்று காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக அவதானித்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதேவேளை சடலத்தின் அருகில் நஞ்சு மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
மேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இவர்கள் கனடாவிற்கு மீளச்செல்ல இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சவுதியின் புரைடா (Buraidah) பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம்இடம்பெற்றுள்ளது.
சவுதி பிரஜை ஒருவர் குறித்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, பின்னர்தாமும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 42 வயதுடைய பிரியங்கா ஜெயசங்கர் என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
30 வயதுடைய குறித்த சவூதி பிரஜை, தமது இல்லத்தில் வைத்து இந்த துப்பாக்கிச்சூட்டைமேற்கொண்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் அல் ராஸ் (Al-Ras) வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சவுதி பிரஜை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதுஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்வெளியிட்டுள்ளன.