2018 ஆம் ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரத்து 532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
உடல், உள, பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் புறக்கணிப்பு முதலான சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கட்டாயக் கல்வி வழங்கப்படாமை தொடர்பில் 241 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கம்பஹா, கொழும்பு, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் பட உலகில் பிசியாக நடித்து வந்த சுகன்யா நடிப்பிற்கு இடைவேளை விட்டது ஏன் என்பதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
நான் சிறந்த நாட்டியக் கலைஞராக வரவே ஆசைப்பட்டேன். ஆனால் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் நடிகை ஆனேன். முதல் படத்தில் நான், நெப்போலியன் உட்பட 8 பேர் புதுமுகங்கள். அறிமுகமான முதல் படத்திலேயே 9 விருதுகள் எனக்கு கிடைத்தது.
பின்னர் நான் நடித்த ‘சின்னக்கவுண்டர்’ உட்பட பல படங்கள் எனக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் ‘பிசி’யாக இருந்தேன். அது எனது சினிமா வாழ்க்கையின் பொற்காலம்.
இப்போது வாரந்தோறும் புதிய தமிழ் படங்கள் வருவதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். சில படங்கள் நல்ல கதை அம்சத்துடன் வருகின்றன. தொழில் நுட்பங்கள் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. கருத்து சுதந்திரம் எங்கும் பரவலாகி இருக்கிறது. நடப்பதை கவனித்து வருகிறேன்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்போது பெரும் பேச்சாக உள்ளது. அதுபற்றி பதில் சொல்ல விரும்பவில்லை. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தெலுங்கில் நான் சமீபத்தில் நடித்த படம் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. விரைவில் சேரன் படத்தில் நடிக்க இருக்கிறேன். நிறைய படங்களில் நடிப்பதைவிட நல்ல படங்களில் அழுத்தமான வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். இதனால் நடிப்பில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. மக்கள் என்னை எளிதில் மறக்கமாட்டார்கள். நானும் மறக்க முடியாது.
என குறிப்பிட்டுள்ளார்.
ஹன்சிகா மீது அவருடைய முகாமையாளர் நடிகர் சங்கத்தில் மறைப்பாடு செய்துள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றிலும் ஹன்சிகா தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரிடம் முகாமையாளராக பணிபுரிந்த முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இதுவரை தான் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதைப் பெற்றுத் தரும்படியும் கூறியுள்ளார்.
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மகாராஷ்டிர விவசாயிகளின் 180 கிலோ மீட்டர்கள் தூர பிரம்மாண்ட நடைபயண பேரணி முடிவுக்கு வந்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை (06) மகாராஷ்டிர மாநிலம் – நாசிக் மாவட்டத்திலிருந்து அம்மாநில சட்டசபையை முற்றுகையிடுவதற்காக மும்பையை நோக்கிப் பயணிக்க தொடங்கிய விவசாயிகள் நேற்று முன்தினம் காலை மும்பையை சென்றடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மாநில அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டுமென்றும், எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி இந்த பேரணியை நடத்தினர்.
குறிப்பாக இந்த பேரணியில் பங்கேற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியின விவசாயிகள் ஆவர். காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் இவர்களின் நிலவுரிமை வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனவே, நிலவுரிமை, கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை வலியுறுத்தி விவசாயிகள் இப்பேரணியில் பங்கேற்றனர்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் செங்கொடி ஏந்திக் கிளம்பிய சுமார் 50,000 பேர் உணவிற்காகவும் தண்ணீருக்காவும் இரவு உறக்கத்திற்காகவும் மட்டுமே தரித்து நின்று விட்டு நடை பயணத்தைத் தொடர்ந்தனர்.
இதனையடுத்து, விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை மகாராஷ்டிர மாநில அரசு ஏற்றுக்கொள்ள முன்வந்தது.
வனப்பகுதி நிலங்களை விவசாயிகளுக்கு மாற்றும் உரிமை தொடர்பான பிரச்சினை 6 மாதத்திற்குள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட கடன்களை இரத்து செய்வது தொடர்பான பிரச்சினை பற்றிய கலந்துரையாட குழுவொன்று அமைக்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாறிவரும் உணவுப் பழக்கங்கள், வாழ்வியல் முறை ஆகிய காரணங்களால் நம்மிடையே பரவலாகக் காணப்படும் நோயாக புற்றுநோய் உருவாகியுள்ளது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றைக் கடைபிடித்து புற்று நோயிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ள வேண்டிய நிலைமையில்தான் மனித சமுதாயம் உள்ளது.
சமீபத்தில் பிரான்ஸில் உள்ள சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில் ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக 5 இலட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர். 6 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் சுமார் 2,391 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டதாக அந்த ஆய்வு கூறுகிறது. அவர்களில் ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி அதிகமாக பார்க்கும் ஆண்களே அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி முன்பு அதிக நேரம் செலவழிக்காத ஆண்களுக்கும் , தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஆண்களுக்கும் குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும்போது ஆண்களிடையே அதிகமாக மது அருந்துதல், புகை பிடித்தல், உள்ளிட்ட பழக்கங்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் திண்பண்டங்களை அதிகமாக உட்கொள்ளும் பழக்கமும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுகிறது” என ஆராய்ச்சியாளர் நீல் முர்ஃபி தெரிவிக்கிறார்.
அமெரிக்கா – தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் கடவுளுக்காக தனது கண்களை குருடாக்கி தியாகம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த 20 வயதான Kaylee Muthart என்ற இளம்பெண் போதை மருந்து பழக்கத்தால் அவஸ்தை அனுபவித்து வந்துள்ளார்.
இந் நிலையில் மத நம்பிக்கை மிகுந்த Muthart கடந்த பெப்ரவரி மாதம் ஒரு தேவாலயத்தின் வெளியே தமது கண்களை சேதப்படுத்துவதை அந்த வழியாக சென்ற பலர் கண்டுள்ளனர்.
அதில் சிலர் இவரது நடவடிக்கையை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனாலும் Muthart தமது கண்களை குருடாக்கியுள்ளார்.
இந் நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பொலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
கல்லறைகளில் கட்டுண்டு கிடக்கும் ஆத்மாக்களுக்காக அவர்களை விடுவிக்க தாம் தனது கண்களை கடவுளுக்கு தியாகம் செய்துள்ளதாகவும், கல்லறைகளில் ஆத்மாக்கள் கட்டுண்டு கிடப்பதால் தான் உலகம் இருண்டு காணப்படுவதாகவும் அதனாலையே அழிவுகள் பெருகியுள்ளதாகவும் Muthart தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையிலிருந்து சிகிச்சைக்கு பின்னர் குடியிருப்பு திரும்பிய Muthart மகிழ்ச்சியாக உணர்வதாகவும், போதை மருந்து பழக்கத்தில் அடிமையாக இருந்த காலத்தில் இருந்ததைவிடவும் வாழ்க்கை தற்போது மிகவும் அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமது மகளுக்கு ஒரு வழிகாட்டும் நாயை வாங்குவதற்காக நிதி திரட்டும் பணியில் Muthartஇன் தாயார் ஈடுபட்டு வருகிறார்.
வடமராட்சி கட்டைக்காட்டில் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போன மீனவர் நேற்று சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.
வடமராட்சி கட்டடைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மீனவரான தேவதாசன் யூட்அலக்சன் (வயது 38) கடந்த 09 ஆம் திகதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தார்.
மறுநாள் 10 ஆம் திகதி அவர் பயணித்த படகு முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கரை ஒதுங்கியிருந்தது.
இந்நிலையில் அவரது சடலம் நேற்று (13.03.2018) காலை வடமராட்சி கட்டடைக்காட்டு கடற்கரையில் கரைஒதுங்கியுள்ளது.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது உடல் கட்டைக்காடு பொது மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் இளம்பெண் ஒருவர் தன் மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணியில் கணபதி -சுமித்ரா என்ற தம்பதியர் வசித்து வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியருக்கு இடையே நாளடைவில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காலை எழுந்தவுடன் வழக்கம்போல் கணபதி பணிக்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த தாய் சுமித்ரா தன் மகனை தூக்கில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதிய உணவிற்க்காக வீடு திரும்பிய கணபதி, இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பிற்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களை கோபப்படுத்தும் தகவல் பரிமாறுதல் மற்றும் பதிவிடலை தடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த விடயங்களை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உதவி அவசியம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் மக்களை கோபப்படுத்தும் தகவல்கள் பரிமாறுபவர்களுக்கு சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையர்களினால் திறக்கப்படும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுகின்ற நிலையில் அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் கண்கானிப்பதாகவும், இலங்கையர்களின் கணக்கு தொடர்பில் கடுமையான கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இனவாதத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அவ்வாறான கணக்குகளை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கும் போது வழங்கும் தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் அந்த கணக்கிற்கான அனைத்து பரிமாற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு நபரின் புகைப்படம் கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்தால் அந்த புகைப்படத்திற்கு உரிமையுடையவர் தவறு செய்திருந்தால், அது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தால் குறித்த கணக்கிற்கு தகவல் ஒன்று அனுப்பப்படும். 3 நாட்களுக்குள் குறித்த கணக்கின் உரிமையாளர் பதிலளிக்கவில்லை என்றால் அந்த கணக்கு பகிரங்கப்படுத்தப்படும்.
அதனை தொடர்ந்து 7 நாட்களுக்குள் கணக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் முதலான சமூக ஊடகங்கள் பாவனை தடை தொடர்கின்ற நிலையில், இன்று நள்ளிரவு முதல் வைபர் மீதான தடை நீக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஊடாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வைபர் மீதான தடை நீக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மீது தடை விதிக்கப்பட்டமையால், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் தமது உறவினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள சிரமங்களை எதிர்நோக்கியமை தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது.
அத்துடன், வர்த்தகர்களுக்கும், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கடந்த தினங்களில் ஏற்பட்ட அசௌகரிய நிலை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயங்களைக் கருத்திற்கொண்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக வைபர் சமூக வலைத்தளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை இன்று நள்ளிரவு முதல் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சுவிஸ்லாந்தின்அழகியாக தெரிவாகியுள்ள இளம்பெண் தன் கனவு நிறைவேறியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் நாட்டின் அழகிகளுக்கான தெரிவு கடந்த சனிக்கிழமை(10.3.2018) அன்று நடைபெற்றுள்ளது.
அதில் நாட்டின் பல பிரபல அழகிகள் பங்கேற்றுள்ள நிலையில், இறுதிச் சுற்றுக்கு 18 முதல் 25 வயது வரையிலான பத்து பெண்கள் தகுதி பெற்றுள்ளனர்.
அந்த இறுதிச் சுற்றில் அனைவரையும் வீழ்த்தி சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த Jastina Doreen Riederer என்ற 19 வயது இளம்பெண் “Miss.Switzerland” பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
வெற்றி பெற்ற அழகி, “என்னை நண்பர்கள் அனைவரும் Rapunzel என்று தான் அழைப்பார்கள். சிறுமியாக இருந்தபோது நீளமான என் முடியால் நிறைய கேலி கிண்டல்களை சந்தித்துள்ளேன். அதையெல்லாம் கடந்து நாட்டின் அழகியாக தெரிவாக வேண்டும் என்பது என் நீண்டகால லட்சியம். அது தற்போது நிறைவேறியுள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் வெள்ளை நிறத்திலும், மற்றொருவர் கருப்பு நிறத்திலும் வலம்வருகின்றனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் மார்சியா மற்றும் மில்லி பிக்ஸ்(11). மார்சியா நீல நிற கண்கள் மற்றும் பொன்னிற முடியை கொண்டவராக வெளிறிய நிறத்தில் உள்ளார், இன்னொருவரான மில்லி பழுப்பு நிற கண்கள் மற்றும் கருப்பு முடி மற்றும் கருப்பு நிற தோற்றத்தில் உள்ளார்.
இவர்களின் தாயார் ஐரோப்பிய வம்சாவளியைச் சார்ந்தவராகவும், தந்தை ஜமைக்கா வம்சாவளியை சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
பிறந்த போது இருவரும் ஒரே மதிரியாகத் தான் இருந்ததாகவும், ஆனால் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் அவர்களின் தோல் மாறுபட்ட நிறங்களில் மாற்றத் தொடங்கியதாகவும் இருவரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மேலும் முதலில் மில்லிக்கு மாற்றம் ஏற்பட்டு, தோல் கருப்பு நிறத்தில் மாறியதாக கூறுகின்றனர்.
இந்த இரட்டையர்களின் மாறுபட்ட தோற்றத்திற்கான காரணம், இவர்கள் இருவரும் வெவ்வேறு விந்துவில் பிறந்தவர்கள் அதாவது ஒரு கரு முட்டையில் இரு விந்துக்களின் மூலம் பிறக்கும் சாதாரண இரட்டையர்களைப் போல் அல்லாமல், இருவேறு கருமுட்டையில் இருவேறு விந்துவின் மூலம் இவர்கள் பிறந்தவர்கள்.
நேபாளின் காத்மண்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 49 பேர்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் உயிர் பிழைத்தவர்கள் தாங்கள் கடந்து வந்த திகிலூட்டும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Basanta Bohora என்பவர் திடீரென்று விமானம் பலமாகக் குலுங்கியதாகவும் விமானம் தரையில் மோதும் சத்தம் பயங்கரமாகக் கேட்டதாகவும் கூறுகிறார். ஜன்னல் பக்கத்தில் அமர்ந்திருந்த அவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.
பங்களாதேஷைச் சேர்ந்த 29 வயது ஆசிரியரான Sharin Ahmed, “விமானத்துக்கு வெளியே பயங்கரமாகத் தீப்பிடித்ததால் நாங்கள் இருந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்தது, ஒரு வெடிச் சத்தமும் கேட்டது. தீ அணைக்கப்பட்டதும் நாங்கள் மீட்கப்பட்டோம்” என்று கூறியுள்ளார்.
விமானம் தீப்பிடித்ததை நினைவு கூறும் பயணி ஒருவர் தான் எவ்வாறு வெளியே வந்தேன் என்பது நினைவில்லை என்று தெரிவித்தார்.
“விமானம் தரையில் மோதியதும் தீப்பிடித்து எரிந்ததால் நான் வெளியேற முயற்சித்தேன், ஆனால் என் கைகளும் கால்களும் சிக்கிக் கொண்டதால் என்னால் அசைய முடியவில்லை. நான் எமர்ஜென்ஸி கதவுக்கு அருகில் இருந்ததால் பாதுகாப்புப்படையினர் வந்து கதவைத் திறந்ததும் வெளியே விழுந்து விட்டேன். நான் சுய நினைவு இழந்து விட்டதால் அதற்குப் பின் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில்லை” என்று கூறினார்.
உயிர் பிழைத்த இன்னொரு பயணியான Sanam Shakya கூறும்போது “விமானம் மேலும் கீழும் அங்கும் இங்குமாக பலமாக அசைந்தது, நான் ஏதோ air trafficதான் என்று எண்ணினேன்” என்றார்.
விமான விபத்து நிகழும்போது அருகிலிருந்த இன்னொரு விமானத்திலிருந்து தன் குழந்தையுடன் நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த Shradha Giri என்னும் பெண் பயணி ”வெளியே ஒரே குழப்பமாகக் காணப்பட்டது, ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும் வந்து கொண்டிருந்தன.
என் குழந்தையுடன் திகிலுடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கண் முன்னே நிகழ்ந்த விபத்தால் நாங்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தோம்” என்கிறார்.
ஓய்வு பெற்ற விமானப்படை கமாண்டரான Iqbal Hossain, காத்மண்டு விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்குவதற்கு விமானிகள் படும்பாட்டை விவரித்தார்.
“விமானத்தின் ஓடு பாதையின் முடிவில் ஒரு மலை உள்ளது. மலையை தாண்டி வந்ததும் விமானத்தை திடீரென்று கீழே இறக்க வேண்டும்.
ஓடு பாதையின் வலது பக்கம் பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. தவறுதலாக வலது பக்கம் திருப்பி விட்டால் அவ்வளவுதான். அகால பாதாளத்தில் விழ வேண்டியதுதான்.
உலகின் பத்து மோசமான விமான நிலையங்களில் காத்மண்டுவும் ஒன்று என்றார்.
இதற்குமுன் Pakistan International Airlines விமானம் ஒன்று 1992 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானதில் 167 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் பெற்ற மகளை கெளரவ கொலை செய்ததாக, கொல்லப்பட்ட மகளின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தனுஷா மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப் குமார் (40), இவர் மனைவி சரிதா தேவி, தம்பதிக்கு ஸ்னேகா குமாரி யாதவ் (19) என்ற மகள் இருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் ஸ்னேகாவுக்கு அவரின் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் ஸ்னேகா வேறு ஒரு இளைஞரை காதலித்து வந்த நிலையில், அந்த நபருடன் அவர் இருப்பதை மாப்பிள்ளை வீட்டார் பார்த்துவிட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து காதல் விவகாரம் குறித்து ஸ்னேகாவுக்கும், அவர் தந்தை திலீப்குமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் திகதி ஸ்னேகா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு உடல்நலக்கோளாறால் ஸ்னேகா உயிரிழந்ததாக அவர் பெற்றோர் கூறியுள்ளனர்.
அடுத்தநாள் ஸ்னேகாவின் சடலத்தை அவர் பெற்றோர் காரில் எடுத்து கொண்டு எங்கேயோ சென்று அதை எரித்துள்ளனர்.
இது அக்கம்பக்கத்தினருக்கு பலத்த சந்தேகத்தை கிளப்பிய நிலையில் பொலிசாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் திலீப்குமாரும், சரிதாவும் வீட்டுக்கு வராத நிலையில் அவர்களிடம் விசாரிக்க பொலிசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் உறவினர் வீட்டில் இருந்த திலீப்பை பொலிசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மகளின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு சென்று அவர் எரித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.
சரிதா இன்னும் கைது செய்யப்படவில்லை. ஸ்னேகா பெற்றோருடன் வசித்த வந்த வீட்டின் சுவர்களில் ரத்த கறைகள் இருப்பதையும் பொலிசார் கண்டுப்பிடித்துள்ளனர்.