தேனி மாவட்டத்தில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த திட்டக்குடி சுபா தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்றது தற்போது தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின், சுபா ஆகிய 7 பேரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேரும் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீவிபத்தில் பலியானவர்களில் சுபா என்ற இளம்பெண் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் அவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்பதும் தெரியவந்துள்ளது.
சுபா உயிரிழந்தது குறித்த் தகவல் அவரது குடும்பத்தினருக்கு நேற்று காலையில்தான் தெரிய வந்தது.
சுபாவின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் கமல்ராஜ் பேச முடியாமல் தவித்தார். பின்னர் எப்படி யார் மூலமாக எனது சகோதரி சென்றார் என்பதே தெரியவில்லை என்று கதறினார். தொடர்ந்து பேச முடியாமல் அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை துயரத்தில் ஆழ்த்தியது.
மலையேற்ற பயிற்சியில் ஆர்வம் கொண்ட சுபா தனது தோழிகள் சிலருடன் தேனி மலைப் பகுதிக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
ஈரான் மற்றும் காட்மண்டுவில் அடுத்தடுத்து இருவேறு விமான விபத்து நடந்துள்ள நிலையில், உலகின் மிக மோசமான விமான விபத்துக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஈரானில் துருக்கி நாட்டு தனியார் விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த புதுமணப் பெண் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேபோன்று நேபாள தலைநகர் காட்மண்டுவில் விமானம் ஒன்று தரையில் மோதி தீ பிடித்ததால் அதில் பயணம் செய்தவர்களில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி போயிங் 737-300 ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 121 பேர் பலியாகினர்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி வெஸ்ட் கரீபியன் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று மேற்கு வெனிசுவேலாவில் விபத்தில் சிக்கியது. இதில் 160 பேர் பலியாயினர்.
அதே ஆண்டு அக்டோபர் 22 ஆம் திகதி நைஜீரியாவில் விமானம் புறப்படும்போது ஏற்பட்ட விபத்தில் 117 பேர் பலியாகினர்.
டிசம்பர் 10 ஆம் திகதி நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 108 பேர் உயிரிழந்தனர்.
2006 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் உயிரிழந்தனர்.
யூலை 9 ஆம் திகதி ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 128 பேர் உயிரிழந்தனர்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி துபோலெவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் விபத்துக்குள்ளானதில் 170 பேர் பலியாயினர்.
2007 ஆம் ஆண்டு மே 5 ஆம் திகதி கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் உயிரிழந்தனர்.
யூலை 17 ஆம் திகதி பிரேசில் நாட்டில், டி.ஏ.எம். ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் உயிரிழந்தனர்.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாள் ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில், விமானம் புறப்படும்போது ஏற்பட்ட விபத்தில் 154 பேர் உயிரிழந்தனர்.
2009 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் திகதி பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பேர் உயிரிழந்தனர்.
அதே ஆண்டு யூலை மாதம் ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் உயிரிழந்தனர்.
2010 ஆம் ஆண்டு மே மாதம் லிபியா நாட்டு, தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் உயிரிழந்தனர்.
மே 22 ஆம் திகதி ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூர் விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.
2014 ஆம் ஆண்டு ஹாலந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம், ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்திலிருந்த 298 பேர் உயிரிழந்தனர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து ஜேர்மனிக்கு சென்ற பயணிகள் விமானம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.
அதே ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி ரஷ்ய விமானம், எகிப்தில் விபத்துக்குள்ளானதில் 224 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் உலக அளவில் 20க்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய யுகத்தில் கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனை என்பது தவிர்க்கமுடியாத பழக்கவழக்கமாகி விட்டது. ஆனால், அவற்றை அளவுக்கு மீறிப்பாவிப்பதால் கண்ணுக்கு ஆபத்து நேரிடுகிறது என்பதை பலரும் மறந்துவிடுகின்றனர்.
உண்மையில் கணனியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் இருமணிநேரத்துக்கொருதடவை கண்ணுக்கு ஓய்வு வழங்கவேண்டியது அவசியமாகும். மேலும் இவற்றை இருட்டுக்குள் பயன்படுத்தக்கூடாது. எப்போதும் வெளிச்சூழலில் மட்டுமே கணனி, தொலைக்காட்சி, கையடக்கத் தொலைபேசி என்பவற்றைப் பாவிக்கவேண்டும் எனக் கூறுகின்றனர் கண் வைத்திய நிபுணர்கள்.
லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரணையுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இருநாட்களில் (25.26) 70இலட்சரூபா பெறுமதியான 140 ஏழை கண்நோயாளர்களுக்கான கற்றரக்ட் சத்திரசிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்துமுடிக்கப்பட்டன.
லண்டனிலிருந்து வந்த டாக்டர் மகாரத்னம் லோகேந்திரன் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பிரபலமான கண்வைத்திய நிபுணரான இவர் இலங்கை உள்ளிட்ட உலகிலிருந்து கண்வைத்திய நிபுணத்துவ கற்கைக்காக லண்டனுக்கு வரும் வைத்தியர்களுக்கு கற்பித்து வருபவராவார்.
அவர்களின் கருத்துக்கள் வருமாறு டாக்டர் மகாரத்னம் லோகேந்திரன் கூறுகையில்;
கடந்த 30வருட சேவையில் இதுவரை 4000பேருக்கு கற்றக்ட் சத்திரசிகிச்சையை செய்துள்ளோம்.
2002இல் அப்போது சாயி நிலையமும் அரசாங்க அதிபரும் விடுத்தவேண்டுகோளுக்கிணங்க யுத்தநிறுத்த காலத்தில் கண்சிகிச்சை முகாமை பல சிரமங்களுக்குமத்தியில் நடத்தினோம்.
பின்பு முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தொடர் மருத்துவ சேவையை வழங்கி வந்தோம். 2012இல் மீண்டும் மன்னார், முல்லைத்தீவு பகுதிகளில் செய்தோம்.
2013இல் மட்டக்களப்பு, நுவரெலியா, கண்டி போன்ற பிரதேசங்களில் கண் சிகிச்சை முகாம்களை நடத்தினோம் . கல்முனைக்கு வருவது இதுவே முதற்தடவையாகும்.
வைத்தியகலாநிதி டாக்டர் காந்தா நிறஞ்சன் கருத்துரைக்கையில்:
இலங்கையைச் சேர்ந்த 3000 தமிழ் வைத்தியர்கள் ஐக்கிய இராச்சியத்தில் வாழ்கின்றனர். ஆனால் ஆக 400பேர் எமது அமைப்பிலுள்ளனர். அவர்களது பங்களிப்பிலே இந்த மாபெரும் சேவையைச் செய்யமுடிகிறது.
நாம் அரசசார்பற்ற, கட்சிசார்பற்ற அமைப்பு. தேவைகண்டவிடத்து நலிவுற்ற எமது மக்களுக்கு மருத்துவசேவையைச் செய்து வருகின்றோம் என்றார்.
வைத்தியநிபுணர் டாக்டர் ராதா தர்மரெட்ணம் கூறுகையில்;
எமது அமைப்பின் உறுப்பினர்களின் மாதசந்தா சேகரிப்பு பணத்தில் சிகிச்சைக்கான உபகரணங்களை மட்டுமே வாங்குகின்றோம். அதாவது கண்வில்லைகள், அதற்கான சிறு உபகரணங்கள் சிலவற்றை வாங்குகின்றோம்.
மற்றும்படி நாம் இங்கு வந்துபோவது, மற்றைய செலவுகள் எமது சொந்த செலவில்தான்.இதனை சேவையாகச் செய்கின்றோம்.இங்கு பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது.
மட்டு. படுவான்கரை மக்கள் பெருமளவில் இந்த கற்றக்ட் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நான் செய்த சோதனையில் சுமார் 1000பேரளவில் கற்றக்ட்டால் பீடிக்கப்பட்டுள்ளரென்று தெரிந்தது. ஸ்கிரினிங் 800 பேருக்குச் செய்தோம். அவர்கள் அனைவருக்கும் கற்றக்ட் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. எனினும் மோசமாகவுள்ள ஆக 150பேருக்கு இம்முறை செய்கிறோம் என்றார்.
டாக்டர் லோகேந்திரன் கூறுகையில்;
லண்டனில் 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த கற்றக்ட் வருகிறது. ஆனால் இங்கு 40 – 45வயதினிலே வருகிறது. இதற்கு காரணம் இலங்கையில் சூரியன் அண்மையிலிருப்பதும் அதிகநீரிழப்பும்.
அங்கு நீரிழிவு நோய் வந்தால் பிரதி வருடமும் அதற்கு சிகிச்சைபெறும் அதேவேளை, கண் ஸ்கிரினிங் செய்யவும் வேண்டும். ஆனால் இங்கு அந்த நடைமுறை இல்லாமையினால் பலர் எளிதாக இந்தநோய்களை பெற்றுக் கொள்கிறார்கள் என்றார்.
டாக்டர் காந்தாநிறஞ்சன் கூறுகையில்:
சூரியஒளிக் குறைபாடு, போதுமான வெளிச்சமின்மை இவையெல்லாம் மயோபியாவை உருவாக்கக்கூடியவை. ரிவி கணனியில் இருந்து சூடான வளி வருகிறது. இது கண்ணைப் பாதிக்கக்கூடியது.இதனால் உலர்கண் வரலாம். அதாவது கண்ணீரை வற்றவைப்பதால் வரண்ட உலர்கண் உருவாகும்.
இருட்டில் கணனியோ, போனோ பார்க்கக்கூடாது. ஜப்பானில் இதனை றெட்ஜ என்பார்கள். இயற்கை கண்ணீர் வற்றிவிடும். இதனால் செயற்கை துளிகள் இடவேண்டும்.
டாக்டர் ராதா கூறுகையில்;
வாகரையில் நாம் ஒரு பெற்றோரை இழந்த இல்லத்தை நடத்திவருகிறோம்.அது திலகவதியார் இல்லம் அங்கு 50பிள்ளைகளுள்ளனர். 1997இலிருந்து ஆரம்பித்தோம். பூரண நிதிஆதரவு நாமே வழங்குகிறோம்.
கண்ணைப் பாதுகாக்க விழிப்புணர்வு தேவை. ஊதா நிறம் கலந்த கதிர் பாதிக்காத கண்ணாடிகளை தாராளமாக அணியலாம். வெறுமனே கண்ணாடிகளை அணியக்கூடாது.
எந்திரன் படத்தில் டாக்டர் வசீகரன் (ரஜினி) உருவாக்கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்திர மனிதனின் நுண்ணறிவை சோதிப்பதற்கு பல கேள்விகள் கேட்கப்படும். சிட்டியும் சளைக்காமால் பதில் கூறும். ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள் இருக்கின்றாரா என்ற கேள்வி கேட்கப்படும் போது கடவுள் என்றால் யார் என்று பதில் கேள்வி கேட்கும் அந்த ரோபோ. அதற்கு கேள்வி கேட்டவர் எம்மை எல்லாம் படைத்தவர் என்று பதில் கூற ” என்னை படைத்தவர் டாக்டர் வசீகரன், ஆம் கடவுள் இருக்கின்றார் ‘ என பதில் கூறி கைதட்டல் பெறும் அந்த ரோபோ. அது எந்திரன் படத்தோடு நின்று விட்ட கதை. ஆனால், இப்போது அறிவியல் உலகம் முழுக்க பேசப்படும் ஒரு ரோபோவாக சோபியா விளங்குகிறாள் .
ஆம் அவள் ஒரு பெண்ணாக வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ. இன்று உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து வரும் சோபியா எமது அண்டை நாடான இந்தியாவுக்கு இரண்டு தடவைகள் பயணம் மேற்கொண்டிருக்கிறாள். சோபியாவுக்கு உள்ள பெருமை என்னவென்றால், உலகில் குடியுரிமை பெற்ற முதல் இயந்திர மனித தானியங்கி என்ற பெருமை உள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சவூதி அரேபியா சோபியாவுக்கு தனது நாட்டின் குடியுரிமையை வழங்கி கௌரவித்தது.
உருவாக்கம்
ஹொங்கொங்கை தளமாகக்கொண்டு இயங்கும் Hanson Robotics என்ற நிறுவனத்தினால் 2013 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டதே சோபியா என்ற ரோபோ. 2015 ஏப்ரல் 19 ஆம் திகதி பொது மக்கள் முன்னிலையில் உலா வந்தது. மனிதர்களைப் போன்று மிகவும் மேம்படுத்தப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வண்ணம் உருவாக்கப்பட்ட சோபியாவிற்கு சுமார் 62 விதமான முகபாவனைகளை வெளிப்படுத்த இயலும் என்பது முக்கிய விடயம்.
தற்போது உலகெங்கினும் தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிகளை வழங்கும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் சோபியா அங்கு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் கேள்விகளுக்கு மிகவும் நுண்ணறிவுடன் பதில் சொல்லி வருகிறாள். ஆனால், எந்திரன் படத்தில் வரும் ஒரு சம்பவம் போன்று ஒரு தடவை சோபியா வழங்கிய பதில் உலகை மட்டுமன்றி அதை, உருவாக்கியவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
மனிதர்களை அழிக்க வேண்டும்
சோபியாவை உருவாக்கிய ஹான்சன் ரொபோடிக்ஸ் நிறுவனர் கலாநிதி டேவிட் ஹான்சன் சோபியாவின் நுண்ணறிவு மற்றும் பேச்சுத்திறன் பற்றி செயல் விளக்கமொன்றை ஊடகங்களுக்கு காண்பித்தார். பல கேள்விகளுக்கு அற்புதமாக பதில் கூறிய சோபியாவிடம் டேவிட் ஹான்சன் ஒரு கேள்வியை எழுப்பினார்.
“சோபியா மனிதர்களை அழிக்க விரும்புகிறாயா ….தயவு செய்து இல்லை என்று கூறு.. என கேள்வியை முடித்தார். ஆனால் சோபியாவோ உடனடியாக சரி நான் மனிதர்களை அழித்து விடுகிறேன் என பதில் கூறியவுடன் டேவிட் ஹான்சன் சிரித்துக்கொண்டே அவ்விடயத்தை சமாளித்து விடுகிறார். இந்த விடயம் அறிவியல் உலகத்திற்கும் இப்படி ஒரு ரோபோ உருவாக்கத்தில் எரிச்சலடைந்திருந்தவர்களுக்கும் அல்வா கிடைத்தது போன்று ஆனது.
உடனடியாக சிலர் இது தான் ரோபோக்களின் குணம். என்ன தான் செயற்கை நுண்ணறிவு படைத்திருந்தாலும் அவை எப்போதுமே மனிதர்களுக்கு ஆபத்தானவை என எச்சரித்தனர். ஆனால், பின்னர் டேவிட் அவ்விடயம் பற்றி கூறுகையில், நாம் சோபியாவை இப்போது தான் மேம்படுத்தி வருகிறோம். ஆகவே அந்த பதில் குறித்து எவரும் கவலைப்படத்தேவையில்லை என்றார்.
அது ஒரு நகைச்சுவை
ஆனால், நம் மக்கள் சும்மா இருப்பார்களா? பின் ஒரு சந்தர்ப்பத்தில் சோபியாவிடம் கேள்வி எழுப்பிய போது நீங்கள் மனிதர்களை அழிப்பேன் எனக்கூறியது சரியா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சோபியா அப்போது நான் இளமையில் இருந்தேன். நான் கூறியதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை, அது மோசமான நகைச்சுவையாக இருக்கலாம். அனைத்து மனிதர்களுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது. எனவே, இதையும் நகைச்சுவையாக அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இன்னும் கற்க வேண்டியது இருக்கிறது’ என்றது.
இந்தியாவில் சோபியா
ஜனவரி மாதம் சோபியா இந்தியாவின் மும்பையில் இடம்பெற்ற தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.
இதில் என்ன விசேட அம்சம் எனில், சோபியா இந்திய பாரம்பரியப்படி .சேலை அணிந்து மேடையில் தோன்றினாள். இது அங்குள்ளவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு ஹைதராபாத்தில் இடம்பெற்ற நிகழ்விலும் சோபியா பலரது கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தது. அதில் அங்கு நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சோபியா, பார்வையாளர்களின் கேள்விக்கு சுவாரஷ்யமான பதில்களைக் கூறியது.
அப்போது, உனக்குப் பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு ஷாருக்கான் என உடனடியாக பதிலளித்தது. அதே போல், உன்னை எது பாதிக்கும் என்று கேட்டபோது, ‘எனது மனநிலை மனிதர்களைப் போல கிடையாது. என்றாவது நிஜமான உணர்வுகள் எனக்குக் கிடைத்து அதன் மூலம் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்றது.
மனிதர்களைப் போல் ரோபோக்களுக்கும் ஓய்வு தேவையா என்ற கேள்விக்கு, ஆம் அவ்வப்போது ஓய்வு தேவை என சோபியா பதிலளித்தது. மேலும், ரோபோக்களுக்கு விசேஷ சலுகைகள் தேவையா என்ற கேள்விக்கு, எனக்கு வித்தியாசமான விதிமுறைகள் வேண்டாம். விசேட சலுகைகளை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எனது குடியுரிமையை பயன்படுத்தி பெண்களின் உரிமைக்காக பேச விரும்புகிறேன் எனப் பதிலளித்து கைதட்டல்களைப் பெற்றது சோபியா.
எந்திரன் படத்தில் சிட்டி என்ற ரோபோ தீய நோக்கம் கொண்ட விஞ்ஞானியின் கைகளில் கிடைத்து பல அழிவுகளுக்கு காரணமானது. அதே போன்று சோபியாவை நல்ல விடயங்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தினால் விஞ்ஞானம் வளரும். எது எப்படியோ சோபியா கூறிய நான் மனிதர்களை அழித்து விடுகிறேன் என்ற வசனம் மட்டும் இன்னும் பலரது காதுகளில் அச்சத்தை தான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
இவ்வருடத்தின் ஆரம்ப 36 நாட்கள் காலப்பகுதிக்குள் புகையிரத விபத்துக்கள் காரணமாக 35 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான தேசியப் பேரவையின் அறிக்கையில் இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் இடம்பெற்ற விபத்துக்களில் பெரும்பாலான விபத்துக்கள் புகையிரதப் பயணங்களின் போது ஆபத்தான முறையில் செல்பி எடுத்துக் கொள்ள முனைந்த சந்தர்ப்பங்களில் ஏற்பட்டுள்ளன.
அதே போன்று புகையிரதப் பாதைக்குள் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களைச் செலுத்தி புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் 86 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், காவிரி விவகாரம் மட்டுமில்லாமல் பல விடயங்களில் ரஜினிகாந்த் பதிலளிக்காமல் நழுவுகிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தண்ணீர் சேமிப்பில் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாத பிரச்சனையாக மாற்றி இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, பதில் அளிக்க ரஜினி மறுப்பது குறித்து கமலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில், ‘காவிரி விவகாரம் என்றில்லை, பல விடயங்களில் அவர் பதில் சொல்ல மறுக்கிறார். அந்த இடத்திலிருந்து அவர் நழுவுகிறார்’ என தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, காவிரி விவகாரம் தொடர்பாகவும், சென்னை அஸ்வினி கொலை வழக்கு தொடர்பாகவும் ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்காமல் வேகமாக சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
சீகிரிய வரலாறு தொடர்பில் முக்கிய பல தகவல்கள் தொல்பொருள் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீகிரிய கற்களை மையமாக கொண்டு அதனை சுற்றி ஓடும் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்விலேயே இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் வடிவியல் இயல்பினை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அகழ்வு நடவடிக்யைின் போது அங்கு சிங்கத்தின் உருவம் ஒன்று கிடைத்ததாக மத்திய கலாச்சார நிதியத்தின் இயக்குனர் பிரிஷாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த சிங்கத்தின் உருவத்தை அவதானிக்கும் போது, தற்போது சீகிரியாவில் அமைந்துள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, உருவம் எந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும்.
அத்துடன் அதன் கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு கலை தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் உள்ள சிங்கத்தின் உருவத்திற்கு சில மர கலப்புடனான களிமண் கலவை கலந்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள கொம்மாதுறைப் பிரதேசத்தில் அங்குள்ள காளி கோயில் ஒன்றின் உள்புற உண்டியலை மிகவும் சூட்சுமமான முறையில் அகற்றி திருடிச் சென்ற இளைஞனை தாம் துரிதமாக செயற்பட்டு சில மணி நேரங்களுக்குள் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லாவெளியைச் சேர்ந்த 18 வயதான இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொம்மாதுறை கிராமத்தில் உள்ள மேற்படி காளி கோயிலின் உட்புறத்தில் பாதுகாப்பாக பொருத்தி வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஞாயிற்றுக்கிழமை இரவு திருட்டுப் போயிருந்ததாக கோயில் நிருவாகத்தினர் பொலிஸாருக்குத் தகவல் தந்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி முறைப்பாடு அளிக்கப்பட்டவுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி நிரோஷன் பெர்னான்டோவின் வழிகாட்டலில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலான பொலிஸ் அணியினர் விசாரணைகளைத் துரிதப்படுத்தினர்.
அதன்படி கொம்மாதுறை 10ஆம் கட்டை புகையிரதப் பாதையோடு அமைந்த புதருக்குள் மறைந்திருந்து திருடப்பட்ட உண்டியலை உடைத்து அதனுள் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்த இளைஞனை இன்று அதிகாலை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி பொலிஸார் மேலும் குறிப்பிடும்போது,
இந்தக் கிராமத்தில் வெளியார் எவரேனும் வந்து தங்கியிருக்கின்றார்களா என்ற கோணத்தில் தாங்கள் விசாரணைகளைத் துவங்கியபோது மேற்படி இளைஞன் தமது உறவினர் ஒருவரின் வீட்டில் கடந்த சில நாட்களாக வந்து தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி இளைஞனையும், திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் அந்த உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் இடப்பட்டிருந்த 7 ஆயிரத்து 179 ரூபாய் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனையும் பணத்தையும் நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டமைக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
கண்டி வன்முறை சம்பவங்களைக் கருத்திற் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டிருந்தநிலையில், தடை இன்னும் நீக்கப்படவில்லை.
இதன் ஊடாக மக்களின் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பல்வேறு தரப்பினரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து வருகின்றனர்.
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் முதலில் கடந்த வாரம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.
நேற்றையதினம் சட்டத்தரணிகளது ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இதற்கு எதிராக முறைப்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான சுதந்திரக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றது.
பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.
சுதந்திரக்கிண்ணத் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் 4ஆவது முக்கிய போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.
இத்தொடரில் 3 அணிகளுமே 2 போட்டிகளில் விளையாடிய நிலையில் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளைப்பெற்றுள்ளன.
இருப்பினும் புள்ளிப்பட்டியலில் ஓட்டசராசரியில் இலங்கை அணி முதலிடத்திலும் இந்திய அணி 2 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் அணி 3 ஆவது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் நேற்று முக்கிய போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன. போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புக்கள் இருந்ததால் போட்டி தாமதமாகியே ஆரம்பித்தது. இதனால் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் தாகூர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பாண்டியா ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் டினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கனடாவில் இரண்டு பழங்குடி இன பெண்கள், முதல் முறையாக வான் அம்புலன்ஸ் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் மனிரோபா மாகாணத்தின், பெண் விமானிகளாக ரொபின் சிலாசெக்ரா மற்றும் ரவென் பேர்டி ஆகிய பழங்குடியின பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கப்டன்ஆக உள்ள ரொபினும், முதல் நிலை அதிகாரியாக இருக்கும் ரவென் பேர்டி ஆகிய இருவரும் மிசிநிப்பி எயர்வேயில், வான் விமானிகளாக இணைந்துள்ளனர்.
இதன் மூலம், பழங்குடி இனத்தில் இருந்து மனிரோபா மாகாணத்தின் முதலாவது பெண் அணியினராக, விமானி பணியில் சேர்ந்துள்ள பெண்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
இது குறித்து இருவரும் கூறுகையில், ‘எங்களின் சாதனைகளும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என தெரிவித்துள்ளனர்.
கனடா நாட்டில் விமான பணியில், ஒரு டஜனுக்கும் குறைவான பழங்குடி பெண்களே விமான பணிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களில் மிகைப்படுத்திக் கூறப்படும் புகார்களுக்கு பதிலளிக்க தயாராக இல்லை எனக் கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பல்வேறு புகார்கள் கூறும் தனது மனைவியை தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் இதுதொடர்பாக பேசிய ஷமி, தம் மீது கூறப்பட்ட புகார்களில் எந்த உண்மையும் இல்லை என விளக்கினார்.
தமது கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கவே திட்டமிட்டு தம் மீது அடுக்கடுக்காக புகார் கூறப்படுவதாக தெரிவித்த ஷமி, இதுதொடர்பாக தனது மனைவியை தீர விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தம் மீது தினமும் விதவிதமான புகாரை தனது மனைவி ஹசின் ஜஹான் ஊடகங்களில் தெரிவித்து வருவதாகவும், புகார் தெரிவிப்பதற்கு முன்பாக தனது குடும்பத்தினருடன் பேசியிருந்தாலே எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என்றும் ஷமி அப்போது குறிப்பிட்டார்.
விவகாரத்து கேட்டு தனது மனைவியை தாம் மிரட்டியதாக கூறியதில் உண்மையில்லை எனத் தெரிவித்த ஷமி, தனது மகளின் எதிர்கால நலன் கருதி, மனைவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் ஷமி அப்போது தெரிவித்தார்.
இதற்கிடையே, முகமது ஷமியின் புகாருக்கு அவரது மனைவி ஹசின் ஜஹான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீதான குற்றச்சாட்டில் இருந்து தற்காத்து கொள்ளவே இதுபோன்ற புகார்களை முகமது ஷமி தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார்.
தமது தவறை ஒப்புக்கொண்டு தம்மிடம் திரும்பி வந்தால், கணவர் முகமது ஷமியை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்கூவர் நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவிற்கு மாறாக தனது 9 வயது மகனை கடத்தி சென்றுள்ள தாயை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஷவானா சௌத்ரி என்ற இப்பெண் இவரது மகன் எமர்சன் கஸ்வேத் மற்றும் ஆறு வயது மகள் அத்துடன் ஒன்று அல்லது இரண்டு நாய்களுடன் பயணம் செய்யலாம் என கூறப்படுகின்றது.
வீட்டில் இருந்து ஒரு நீடிக்கப்பட்ட காலம் வரை விலகி இருக்க சௌத்ரி திட்டமிட்டிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.
பிள்ளைகளிற்கு தீங்கு விளைவிக்கவோ அல்லது ஆபத்து ஏற்படுவதற்கோ எதுவித அறிகுறிகளும் தெரிவதாக அறியப்படவில்லை.
சௌத்ரி 34வயது, 5.8உயரம், 106 இறாத்தல்கள் எடையுடையவர் எனவும் தெற்காசிய நாட்டவர் நீண்ட கறுப்பு முடி மற்றும் கருமையான கண்கள் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மகன் எமர்சன் 9-வயது, தெற்காசி தோற்றம், கறுப்பு முடி மற்றும் கருமையான கண்கள் கொண்டவர் என விபரிக்கப்பட்டுள்ளது.
சௌத்ரியின் மகள் குறித்த விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை. காரணம் இவள் நீதி மன்ற உத்தரவிற்கு உட்பட்டவள் இல்லை என்பதே.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பிரபல பாடகி சின்மயி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பின்னணி பாடகி சின்மயி நேற்று நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார், அப்போது அவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வெகுகாலத்திற்கு பிறகு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானேன் என்று பதிவிட்டிருந்தேன்.
இதைக் கண்ட ஆண்கள், பெண்கள் என பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை பகிர்ந்த போது, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
ஏனெனில் இது போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள், தாத்தா, பாட்டி, உறவினர்கள், சக பயணிகள் போன்றோர் தான் என குறிப்பிட்டுள்ளார்.
குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் புதுமண தம்பதிகள் சிக்கி உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் போடி அருகே உள்ள குரங்கணி மலைப் பகுதியில் நடந்த பயங்கர காட்டுத் தீ பரவியது.
அதில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் உட்பட, ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி விவேக்- திவ்யா என்பவர்களும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
துபாயில் பணியாற்றி வரும் விவேக், மூன்று மாதங்களுக்கு முன்னர் கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர் கடந்த மார்ச் 3-ம் திகதி அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 100 days marriage celebration with ponsati #temple #DV” என்று பதிவிட்டிருந்தார். அதனுடன் கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
இதேபோல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த நிலையில், கடைசியாக வாரம் விடுமுறை முடிந்து விவேக் செல்லவிருப்பதால் புதுமணத் தம்பதி குரங்கணிக்கு வந்துள்ளனர்.
வந்த இடத்தில் இருவரும் தீயில் கருகி பரிதாபமாக பலியான சம்பவம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பலத்தை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.