ஒன்றாக தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள் : இறப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோ!!

ரஷ்யாவில் குடும்பத்தாருக்கு வீடியோ அனுப்பிய பின்னர் இரண்டு சகோதரிகள் ஒன்றாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Izhevsk நகரத்தில் வசித்து வந்த Maria Vinogradova(12) மற்றும் Anastasia Svetozarova(15) ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகள் தான் இந்த துயரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இருவரில் Maria என்ற சிறுமி அவரை விட வயதில் குறைவான டிமிட்ரி என்பவரை காதலித்து வந்த நிலையில் குறித்த சிறுமியின் தாய், அவளை பெண்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி வந்துள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ள Maria, தன் சகோதரியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில், தன் காதலனின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் “என்னை மன்னித்துவிடு. ஐ லவ் யூ. என்னை விட உனக்கு வேறு நல்ல பெண் கிடைப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன் குடும்பத்தாருக்கு பதிவு செய்திருந்த வீடியோவில், “அனைவருக்கும் குட்பை, உங்கள அனைவரையும் நான் மிகவும் காதலிக்கிறேன், அதுவே உண்மை” என உருக்கமாக கூறியுள்ளார்.

இதன்பின் தற்கொலை செய்து கொண்ட அந்த சகோதரிகள் 10வது மாடியில் இருந்து குதித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், “புளு வேல்” போன்ற கொடிய விளையாட்டு ஏதும் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் சகோதரிகளின் செல்ஃபோன் மற்றும் கணினி உள்ளிட்டவற்றை பொலிசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

முதலில் மனிதநேயம் பின்னர் தான் மதம் : கேரள முஸ்லிம் நபரின் செயல்!!

கேரளாவில் சிவன் கோவிலுக்கு குளம் அமைக்க முஸ்லிம் நபர் ஒருவர் தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் காலிக்கவில் எனும் ஊரில் நூற்றாண்டு பழமையான சிவன் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு அருகே Nambiarthodi Ali என்பவருக்கு சொந்தமாக ரப்பர் தோட்டம் உள்ளது, கோயில் என்றால் பக்தர்களுக்கு உதவும்வகையில் நீராதாரமாக குளம் ஒன்று இருப்பது மரபு ஆகும்.

எனவே இந்த கோயிலுக்கு அருகில் உள்ள நிலத்தில் ஒரு குளம் அமைக்க இடம் வேண்டி Nambiarthodi Ali-யிடம் கோவில் நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர், நிலத்தின் மதிப்புக்கு உரிய பணமும் கோவில் நிர்வாகம் வழங்குவதாக தெரிவித்தனர்.

இருந்தபோதும் பணம் ஏதும் வாங்காமல் தனது நிலத்தில் குளம் அமைக்க தேவையான நிலத்தை சிவன் கோவிலுக்கு தானமாக அளிப்பதாக உறுதியளித்தார்.

இதுகுறித்து பேசிய Nambiarthodi Ali, நான் கோயிலுக்கு நிலம் நன்கொடை அளித்துள்ளேன், என்னால் முடிந்த உதவியை அந்த கோவிலுக்கு செய்து உள்ளேன். இதுபற்றி மசூதியில் உள்ள எங்கள் குருவிடமும் என் குடும்ப உறுப்பினர்களிடம் நான் சொன்னபோது, எனது இந்த முடிவுக்கு அவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர், முதலில் மனிதநேயம் பின்னர் தான் மதம். இது அல்லாஹ்வின் நிலமாக இருந்தாலும் அல்லது கிருஷ்ணரின் நிலமாக இருந்தாலும் எனக்கு இரண்டும் என்று தான் என தெரிவித்துள்ளார்.

45 சென்ட் நிலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது, இதைவிட 4 சென்ட் குறைவான நிலத்தை அதாவது 41 சென்ட் நிலத்தை Nambiarthodi Ali நன்கொடையாக அளித்துள்ளார்.

கோயில் நிர்வாகத்தை சேர்ந்த TNM சிவசங்கரன் பேசும் போது, நாங்கள் இந்த நிலத்துக்கு விலை கொடுக்க முடிவு செய்தோம். அந்த நிலத்தின் மதிப்பீடு அந்த பகுதியில் ஒரு சென்ட் 25,000 ரூபாய் ஆகும், ஆனால் அவர் எங்களிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை. கோவில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக இவை அனைத்தையும் நன்கொடையாக கொடுத்தார் என்று கூறினார்.

குழந்தையை நான் தான் கொலை செய்தேன் : தாய் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

பிரித்தானியாவைச் சேர்ந்த Hannah Turtle (22) என்னும் பெண் தனது ஆறு வாரக் குழந்தையைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுவரை குழந்தையை கொன்றதை ஒப்புக்கொள்ளாத அவர் 2016 ஆம் ஆண்டு மே மாதம் தனது ஆறு வாரக் குழந்தையைக் கொலை செய்ததாக நேற்று ஒப்புக்கொண்டார்.

James Hughes என்னும் அந்தக் குழந்தையை அந்தப் பெண் மூன்று முறை கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்துள்ளது.

மூன்றாவது முறை அவள் குழந்தையின் மூக்கையும் வாயையும் அழுத்தி மூடிப் பிடித்துக் கொண்டதால் குழந்தை இறந்துள்ளது.

Hannah Turtle என்னும் அந்த 22 வயதுப் பெண் தான் சரியான தாய் இல்லை என்றும் Jamesஐ மகனாகப் பெற தனக்கு தகுதி இல்லை என்றும் தனக்குள்ளே ஏதோ ஒரு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் அதனால்தான் அவனை கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தவழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது

முதல் அரசியல் மேடையிலேயே பொய் பேசிய கமல் : ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவதில்லை என நடிகர் கமல்ஹாசன் பேசியிருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் அப்துல் கலாம் இறுதிசடங்கில் பங்கேற்காத நீங்கள் அவர் வீட்டிலிருந்து கட்சியை தொடங்குவது ஏன் என கேள்வியெழுப்பட்டது.

அதற்கு, நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை என பதிலளித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, காரணம் கமலின் குருநாதர் ஆர்.சி சக்தி, நடிகை மனோரமா, நடிகர் நம்பியார், நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோர் இறுதி ஊர்வலங்களில் கமல் கலந்து கொண்டுள்ளார். இதில் சிவாஜி, சக்தி இறுதி ஊர்வலத்தில் கடைசி வரை அவர் இருந்தார்.

இப்படியிருக்கையில் கமல் ஏன் இப்படி பொய் சொன்னார் என சமூகவலைதளத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. கமல் பங்கேற்ற இறுதி ஊர்வலங்களின் புகைப்படங்களும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறன.

கத்தியால் குத்திய காதலன் : காதலியின் கண்ணீர் வாக்குமூலம்!!

அன்பளிப்பு கொடுக்க வருவதாக தான் வந்தார், ஆனால் என்னை அவர் குத்திவிட்டார் என்று விசாரணையில் இளம்பெண் பொலிசாரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சென்னையில் காதலியை பார்க்க வந்த காதலன், திடீரென்று காதலியை குத்திவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் இருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது காதலியான சரிதா கூறுகையில், சென்னை சோழவரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இன்ஜினீயரிங் முடித்துவிட்டு கோயமுத்தூரில் வேலை பார்த்து வரும் அவரும், நானும் பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்தோம்.

வேலைக்கு சென்ற பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் வந்தது, நாட்கள் செல்ல செல்ல காதலில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. பலமுறை போனில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதுமட்டுமன்றி அவரது குடும்பத்திற்கும் என்னுடைய குடும்பத்திற்கும் ஒத்துவரவில்லை. அதை அவரிடம் நான் சொன்னேன், அதற்கு அவர், தன்னுடைய பெற்றோரை அழைத்துக் கொண்டு பெண் கேட்டு வருகிறேன் என்று கூறினார். ஆனால், என் குடும்பத்தில் ராஜேஷை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் பிரிந்துவிட முடிவு செய்ததால், காதலித்த காலங்களில் கொடுத்த பரிசுப் பொருட்களை கொடுக்க ராஜேஷ் சென்னை வந்தார். இருவரும் அண்ணா நகர் டவரில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் உன்னைப்பிரிந்து என்னால் வாழ முடியாது, தயவுசெய்து உன் முடிவை மாற்றிக்கொள் என்று கூறினார், அதற்கு நான் உனக்கும் எனக்கும் ஒத்துவராது, பிரிந்துவிடுவோம் என்று கூறினேன்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திவிட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

காதலன் கண்முன்னால் தற்கொலை செய்து கொண்ட மாணவி!!

இந்தியாவில் காதலனுடன் கைத்தொலைபேசியில் வீடியோ கோல் பேசி கொண்டே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஹனிஷா சவுத்ரி (24). இவர் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாமாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஹனிஷா, தக்‌ஷித் படேல் என்ற இளைஞரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தக்‌ஷிதுக்கு தனது செல்போனிலிருந்து ஹனிஷா வீடியோ கோல் செய்துள்ளார். அப்போது திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோபடைந்த ஹனிஷா தற்கொலை செய்ய போவதாக தக்‌ஷித்திடம் கூறி அதை செய்ய தொடங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தக்‌ஷித், உடனடியாக ஹனிஷா தங்கியுள்ள விடுதிக்கு வந்து அறைக் கதவை உடைத்தார்.

அங்கு மயங்கிய நிலையில் இருந்த ஹனிஷாவை தூக்கி கொண்டு தக்‌ஷித் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் ஹனிஷாவின் செல்போனை கைப்பற்றி விட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

சித்திரவதை செய்த கணவனுக்கு மனைவி கொடுத்த தண்டனை!!

புத்தல பிரதேசத்தில் சித்திரவதை செய்த கணவனை கடுமையாக தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவியின் தாக்குதலுக்குள்ளான கணவர் பொலிஸ் விசாரணையின் போது உண்மை தகவலை மறைத்துள்ளார். சைக்கிளில் இருந்து விழுந்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார். எனினும் இதன் உண்மை தகவலை அறிந்து கொண்ட பொலிஸார் மனைவியை கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான நபர் குடிபோதைக்கு அடிமையாகிய ஒருவராகும். குடிபோதையில் வீட்டிற்கு செல்லும் நபர், மனைவியை கொடுமைப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சித்திரவதைகளை அனுபவித்து வந்த மனைவி, பொறுமையை இழந்த நிலையில் கணவனை கடுமையாக தாக்கியுள்ளார்.

வழக்கம் போன்று குடிபோதையில் வந்த குறித்த நபர் மனைவியை சித்திரவதை செய்துள்ளார். இதன் போது ஆத்திரமடைந்த மனைவி கணவனின் பாதங்களுக்கு கடுமைான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார். காயமடைந்த கணவர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு்ளார்.

பொலிஸ் விசாரணையின் போது சைக்கிளில் இருந்து விழுந்து காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில் முன் பாய்ந்து இளம் பெண் பலி!!

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பாலையூற்று புகையிரத நிலைய விடுதியில் வசித்து வந்த 22 வயதுடைய பாத்திமா நப்ரா எனவும் தெரியவருகிறது.

குடும்பத் தகராறு காரணமாக இவர் திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து உள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவருகிறது.

குறித்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் ஒரேயொரு பதவிக்கு 12 ஆயிரம் விண்ணப்பதாரிகள்!!

 

உச்சநீதிமன்றத்தின் பிரதான அலுவலக உதவியாளர் பதவிக்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் பிரதான அலுவலக உதவியாளராக பதவி வகித்தவர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதால் அப்பதவிக்கு அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

குறித்த பதவிக்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2000 தொடக்கம் 2500 பேர் வரையானோர் நாளாந்தம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்ற வாசலில் நீண்ட வரிசையில் இளைஞர்கள் பட்டாளமொன்று நேர்முகத்தேர்வுக்காக காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவரஸ்ட் சிகரத்தை வட்டமிட்ட பறக்கும் தட்டு : கமராவில் பதிவாகிய காட்சிகள்!!

எவரஸ்ட் சிகரத்தை சுற்றி விட்டமிட்ட பறக்கும் தட்டு ஒன்றை திரைப்படத் தயாரிப்பாளர் டேவிட் பிரேசர்ஸ் என்பவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

எவரஸ்ட் சிகரத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான 477 புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார்.
இவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த போது எவரஸ்ட் சிகரத்தை சுற்றி வட்டமிட்ட பறக்கும் தட்டு ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எவரஸ்ட் சிகரத்தில் “ஏரியா-51” என்ற பகுதியிலேயே இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியை ஆய்வு செய்வதற்காக அடிக்கடி இவ்வாறான மர்மப்பொருட்கள் வந்து செல்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த புகைப்படத்தை எடுத்த டேவிட் பிரேசர்ஸ் “இது உலங்குவானூர்தி அல்ல. இது ஒரு பறக்கும் தட்டு” என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீட்டிற்குள் புகுவதற்கு முற்பட்ட முதலை : மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!!

 
வவுனியா – திருநாவற்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்குள் புகுவதற்கு முற்பட்ட முதலையொன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் முதலையை பிடித்துள்ளனர்.

அந்த முதலையானது 5.5 அடி நீளமானது என தெரிவிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன், அண்மைக்காலமாக வவுனியாவில் நிலவிவரும் வறட்சியால் குளங்களில் உள்ள நீர் வற்றியுள்ள நிலையிலேயே இவ்வாறான சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லண்டனில் அவலட்சணமானோருக்கான போட்டியில் கலந்து கொண்ட இலங்கைப் பெண்!!

லண்டன் மொடலிங் நிறுவனம் ஒன்று வித்தியாசமான மற்றும் அசிங்கமான தோற்றம் கொண்ட மொடலிங் போட்டி ஒன்றை வருடாந்தம் நடத்தி வருகிறது.

நீண்ட கழுத்து, பெரிய கன்னங்கள், மடிந்த காதுகள், வளைந்த மூக்குகள் கொண்ட அசிங்கமான மொடல்களை லண்டன் மொடலிங் நிறுவனம் ஒன்று வரவேற்கிறது. ஒரு வித்தியாசமான வடிவம் மற்றும் குறைபாடுகளை அந்த நிறுவனம் கொண்டாடுகின்றது.

லண்டனில் பேஷன் வாரம் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு அசிங்மாக மொடல்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார்.

22 வயதுடைய இலங்கைப் பெண் கலந்து கொண்டுள்ளார். அவர் 1.61 மீற்றர் உயரத்தை மாத்திரமே கொண்டுள்ளார். இலங்கையில் இருந்து சென்ற அவர் தன்னை ஒரு “போர்க்குணம் கொண்ட புலம்பெயர் மொடலாக பிரகடனம் செய்துள்ளார்.

ஒரு அசிங்கமான தொப்பையை கொண்டவர், ஜீன்ஸ் மற்றும் கறுப்பு மேல் ஆடை ஒன்றை அணிந்து அந்த போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அவரிடம் நேர்மறை அணுகுமுறைகள் நிறைய காணப்பட்டுள்ளன.

“நான் ஒரு பெண்மணியாக இருக்கிறேன், வளர்ச்சியடைந்த, ஊடகத்தில் என்னைப் போல் தோன்றும் மக்களை நான் பார்த்ததில்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் என்ன செய்ய வேண்டும் என்பதனை தனது இயலாமை தடுக்கவில்லை என அவர் பெருமையுடன் வெளிப்படுத்தியுள்ளார் என பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் : ஓவியருக்கு சிறை!!

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, பாஹ்மி ரேசா மீது ஆபாசமான, தவறான, அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற, ஒரு நபரை தொல்லை செய்ய விரும்புகிற ஒன்லைன் உள்ளடக்கத்தை பரப்பியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

விசாரணை முடிந்து உள்ள நிலையில், அவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 7 ஆயிரத்து 700 டொலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இது தொடர்பாக பாஹ்மி ரேசாவின் வழக்கறிஞர் சியாரெத்சான் ஜோஹன் கூறும்போது, “இந்த தண்டனை எதன் அடிப்படையில் விதிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிபதி எதுவும் குறிப்பிடவில்லை. இதை எதிர்த்து முறையீடு செய்வோம்” என குறிப்பிட்டார். இதே போன்று மற்றொரு நீதிமன்றத்திலும் பாஹ்மி ரேசா இன்னொரு வழக்கை சந்தித்து வருகிறார்.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அரசு பணத்தில் பல கோடி ஊழல் செய்ததாக எழுந்து உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசுக்கு எதிராக செயல்படுகிற எதிர்க்கட்சி தலைவர்கள், ஆர்வலர்களுடன் இணைந்து, பாஹ்மி ரேசா செயல்பட்டு வருகிறார். போராட்டங்களிலும் பங்கு எடுத்து வருகிறார்.

இந்த ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுகிற இணைய தளங்களை மலேசிய அரசு முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தீப்பற்றி எரிந்த பஸ், 19 பேர் படுகாயம் : காரணம் குண்டு வெடிப்பு!!

இன்று அதிகாலை பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் குண்டொன்று வெடித்ததே என்று இராணுவத் தளபதி தனக்கு அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தில் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்களும் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களில் இருவருடைய நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக பஸ் முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த வெடிப்பு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பஸ் நேற்று இரவு பண்டாரவளை வரையில் வந்து, பின்னர் அதில் இருந்த பயணிகள் மற்றொரு பஸ்ஸிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பயணிகள் மாற்றப்பட்ட பின்னர் பஸ் கஹகொல்ல நோக்கி புறப்படும் போது இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

-அத தெரண-

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் ஆண்டு  மகோற்சவ பெருவிழா (20.02.2018) செவ்வாய்க்கிழமை   பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது. .மேற்படி மகோற்சவம்  ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில் இடம்பெறுகின்றது.

மேற்படி மகோற்சவத்தில்

23.02.2018    வெள்ளிகிழமையன்று  கற்பூர சட்டி திருவிழா

27.02.2018  செவ்வாய்கிழமையன்று  சப்பர திருவிழா

28.02.2018  புதன்கிழமையன்று  தேர்த்திருவிழா

01.03.2018 வியாழக்கிழமையன்று  தீர்த்த திருவிழா

02.03.2018  வெள்ளிகிழமையன்று பூங்காவன திருவிழாவும்  இடம்பெறுகின்றது .

????
????
????
????
????
????
????
????
????
????
????
????
????
????
????

இன்று சர்வதேச தாய்மொழி தினம் : தமிழெனும் உயிர்க்காற்று!!

இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மொழியியல் பல்வகைமையும் நிலைபேறுடைய வளர்ச்சிக்கான பன்மொழிச் சூழலும் என்பதே இவ்வாண்டிற்கான தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

பின்னணி

வங்கதேச தலைநகர் டாக்காவில் 1952 ஆம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பெப்ரவரி 21 ஆம் திகதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் ஜனவரி 1998 இல் முன்மொழிந்தார்.

அவரது கோரிக்கையை பரிசீலித்த UNESCO அமைப்பு 1999 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. இதையடுத்து, 2000 ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மொழியெனும் அடையாளம்

சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும். மொழியின்றி சிந்தனை கிடையாது. சிந்தனையற்ற மனித குலம் நாகரிகம் கண்டிருக்காது.

ஒருவர் மற்றவருடனான தொடர்பை ஏற்படுத்தவென உருவான மொழிகள் பின்னாளில் இனத்தின் அடையாளமாகின.
உலகில் 6500 மொழிகள் இருப்பதாகப் பலர் நம்பினாலும், உண்மையில் 7106 மொழிகள் புழக்கத்தில் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், மொழிகளின் எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கூறுவது அரிது. ஒரிரு தலைமுறைகளில் அழிவைச் சந்திக்கவுள்ள மொழிகளும் உள்ளன. ஏற்கனவே வழக்கொழிந்த மொழிகளும் உள்ளன. பேச்சு வழக்கில் மாத்திரமுள்ள மொழிகளும் உள்ளன.

தலைமுறை தாண்டி வாழும் மொழிகள்

மக்களின் வாழ்வியலோடு கலந்து, அனுபவங்களினூடே வார்தைகளை உருவாக்கி, இலக்கணங்களால் நேர்த்தி கண்டு, இலக்கியங்களால் செழுமையுற்ற மொழிகள் தலைமுறைகளால் கடத்தப்பட்டு, காலத்தால் நிலைத்து நிற்கின்றன.

இங்கே தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுகளும் இல்லை, புறக்கணித்து வளர்ந்த நாடுகளும் இல்லை.
கண்டுபிடிப்பாளர்கள் பலரும் தமது தாய்மொழியில் கற்றவர்கள் தான். சிந்தனையோட்டம் செழுமையுற தாய்மொழிக் கல்வியே சிறந்ததென ஆய்வுகள் பலவும் எடுத்தியம்புகின்றன.

காலத்தால் மாற்றங்களுக்குள்ளாகி, புதியனவற்றோடு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழியே யுகங்கள் கடந்தும் வாழும்.

தமிழெனும் வளர்மொழி

தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழியென்றான் எம் முப்பாட்டன் பாரதி.
நண்பர்களுக்காவும் புரிதலுக்காகவும் வணிகத்திற்காகவும் நாம் எத்தனை மொழிகளைக் கற்றாலும், நமது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தொலைக்காமல் இருக்க, தமிழில் கற்று, அடுத்த சந்ததிக்கு கடத்தி, அதனைக் காலத்தால் அழியாமல் காப்பது எம் தலையாய கடமையாகும்.

செறிவான கலாசாரக் கூறுகளைக் கொண்ட உலகின் ஆறு மொழிகளில் எம் தாய்மொழி தமிழுக்கும் இடமுண்டு. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி, இன்று காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு இளமையுடன் திகழ்கிறது.

தமிழ் வாழப் பணியாற்று; தமிழல்லவா உனை இயக்கும் உயிர்க்காற்று!