பந்து வீசியவரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து!!(வீடியோ)

நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வினோதமான ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. போர்ட் கிண்ணத்துக்கான 3வது இறுதி சுற்றில் ஒக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஒக்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

19வது ஓவரில் ஒக்லாந்து இடக்கை ஆட்டக்காரர் ஜீத் ரவல், எதிரணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ எலிஸ் வீசிய பந்தை நேராக தூக்கியடித்தார். எதிர்பாராதவிதமாக அந்த பந்து, பந்து வீசிய எலிசின் தலையில் பட்டு தெறித்து ‘ லோங்-ஓன்’ திசையில் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்து சிக்சராக மாறியது.

பந்து தாக்குதலுக்குள்ளான ஆண்ட்ரூ எலிஸ், தலையை கொஞ்ச நேரம் தேய்த்து கொண்டே இருந்தார். பரிசோதனையில், பயப்படும்படி காயம் எதுவும் அடையவில்லை என்று தெரியவந்தது. இதனால் தொடர்ந்து பந்து வீசினார்.

இந்த ஆட்டத்தில் ஜீத் ரவலின் சதத்தின் (149 ஓட்டங்கள், 10 பவுண்டரி, 4 சிக்சர்) உதவியுடன் ஆக்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் குவித்ததுடன், 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியையும் பறித்தது.

ரோட்டில் அப்பளம் விற்ற ஹிருத்திக் ரோஷன்!!

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படம் கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. ஆனந்த் குமாரின் சூப்பர் 30 புராஜெக்ட்டை மையமாக வைத்துத்தான் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜனவரி மாதம் மும்பையில் தொடங்கியது. இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக ஆசிரியராக நடிக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.

இந்தப் படத்துக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சைக்கிள் ஒன்றில் தெருத்தெருவாக அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார் ஹிருத்திக் ரோஷன்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. ரசிகர்களால் கண்டு பிடிக்க முடியாதபடி பழைய ஆடைகளுடன் அசல் அப்பளம் விற்பவரைப் போலவே இருந்திருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.

வவுனியாவில் ஊருக்குள் படையெடுக்கும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்!!

 
வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றுக்குள் வந்த முதலை ஒன்றை இன்று காலை பிடித்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 அடி நீளமான முதலை தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டத்திற்கு வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் காணப்படும் வறட்சியான காலநிலை காரணமாக உணவு தேடி முதலை கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரதேசவாதிகள் அச்சத்தில முதலையை தாக்கியுள்ளதுடன் முதலைக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட முதலையை தண்ணீருடன் கூடிய காட்டுப்பகுதியில் விடுவிக்க உள்ளதாகவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் நேற்றைய தினமும் முதலையொன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த முதலை 5.5 அடி நீளமானதுடன், குறித்த முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மதுரை விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது!!

இலங்கை மற்றும் மலோசியாவில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் சென்றவர்கள் மதுரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேனியைச் சேர்ந்த இம்ரான்கான் என்பவர் இலங்கையிலிருந்து மைக்ரோவேவ் அவனின் உட்புறமாக தங்கத்தை மறைத்து கடத்திவந்துள்ளார். இவரிடமிருந்து 814 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோன்று மலேசிய விமானத்தில் வந்த திருச்சியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரின் உடமைகளை சோதனை செய்த அதிகாரிகள் 750 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு 50 இலட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது. இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஹவாலா பணம் மூலம் வெளிநாடுகளில் வாங்கப்படும் இதுபோன்ற தங்கக் கட்டிகளை விமானம் வழியாக கொண்டுவந்து உரியவரிடம் ஒப்படைத்தால், 2 இலட்ச ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து இம்ரான்கான், சித்திக் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

யாழில் இருந்து வந்த பேருந்தில் உண்மையாக நடந்தது என்ன?

 
தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்றினுள் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பான காரணம் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு சென்ற வெடி குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இராணுவ வீரர் ஒருவர் தனது காற்சட்டை பையில் மறைத்து வைத்து வைத்திருந்த வெடி குண்டை பையில் இருந்து வெளியே எடுத்து பயணப்பையில் வைப்பதற்கு ஆயத்தமாகியுள்ளார். இதன் போது ஏற்பட்ட சிறிய தவறின் காரணமாக வெடி குண்டு வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பையில் இருந்து வெடி குண்டை வெளியே எடுக்கும் போது, குண்டின் மேற்பரப்பில் இருக்கும் க்ளிப் வெளியேறிய நிலையில் குண்டு கீழே விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பேருந்தில் பயணித்த இராணுவ பொலிஸ் அதிகாரி மற்றும் சிவில் பெண் ஒருவர் சம்பவத்தை நேரில் கண்டுள்ளனர்.

இவ்வாறு வெடி குண்டை மாற்றிய இராணுவ வீரருக்கு பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது கால்கள் இரண்டு வெட்டி நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வெடிகுண்டு யாழ்ப்பாண முகாமில் இராணுவ சிப்பாயினால் திருடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாயிடம் விசாரணைகள் மேற்கொள்ள முயற்சித்த போதிலும் அவர் தீவிர நிலையில் உள்ளமையினால் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குண்டு வெடிக்கும் போது பேருந்திற்குள் 30 பயணிகள் இருந்துள்ளனர். அவர்களில் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

48 வினாடிகளில் இலங்கையரின் அபார திறமை : உலக சாதனையாக பதிவு!!

 
இலங்கையர் ஒருவர் 48 நொடியில் உலக சாதனை படைத்துள்ளார்.

12 மில்லிமீற்றர் அடர்த்தியான 22 சுருள் கம்பிகளை 48 நொடிகளில் தலையில் வைத்து மடக்கியே அவர் இந்த உலக சாதனை படைத்துள்ளார்.

ஜானக காஞ்சன முதுன்னாயக என்பவர் நேற்று மாலை கண்டி பிரதேசத்தில் வைத்து இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட பலர் இணைந்திருந்தனர்.

அமெரிக்க நாட்டவரான ஆனேமியன் எடோல்ப் ஒரு வினாடியில் 18 கம்பிகளை மடக்கிய சாதனையை முறியடிப்பதே ஜானக காஞ்சனவின் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாரிய பீரங்கி குண்டு!!

 
திருகோணமலையில் பழமை வாய்ந்த பீரங்கி வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு நிர்மாணிப்பதற்காக அஸ்திவாரம் வெட்டும் போது இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

விஜித யுகத்திற்கு சொந்தமானதாக கூறப்படுகின்ற பீரங்கியின் பகுதி நேற்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த பீரங்கி ஏனைய பீரங்கிகளை விடவும் முற்றிலும் வித்தியாசமானவை எனவும், அதன் பின் பக்க பகுதி முழுமையான மூடப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் உதவி இயக்குநர் சுமனதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த பீரங்கியின் நிறை 8 டென் எனவும் 11 அடி நீளமான எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி 1700 ஆண்டில் பீரங்கி அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பின்னர் கட்டடங்களில் அந்த பீரங்கி மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள உலோகம் மிகவும் வலுவானதென தெரிவிக்கப்படுகின்றது.

வரலாற்றில் என்றும் இல்லாத அளவு டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபா!!

வரலாற்றில் என்றும் இல்லாத அளவு இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய நேற்றைய தினம் அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை விலை 157.19 ரூபாயாக பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் ரூபாயின் பெறுமதி 157 ரூபாவை கடந்திருந்த நிலையில் நேற்று மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியே இந்நிலைக்கு பிரதான காரணம் என வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களும் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

படைவீரர் கொண்டு வந்த குண்டே வெடித்தது : நேரில் கண்டவர் தகவல்!!

யாழ்ப்பாணத்திலிருந்து படைவீரர் ஒருவர் கொண்டு வந்த குண்டு ஒன்றே தியதலவா கஹாகொல்ல பகுதியில் பயணித்த பஸ்ஸில் வெடித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் காலை 5.45 மணிக்கு கஹகொல்ல என்னும் இடத்தில் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் படைவீரர்கள் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான முதல் கட்ட விசாரணைகளில், இந்த வெடிப்புச் சம்பவம் யாழ்ப்பாண இராணுவ முகாம் ஒன்றிலிருந்து படைவீரர் ஒருவரினால் கொண்டு வரப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடித்த காரணத்தினால் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p>

சம்பவம் இடம்பெற்ற போது பஸ்ஸில் பயணம் செய்த படைவீரர் ஒருவரும் சிவிலியன் பெண் ஒருவரும், இந்த சம்பவம் பற்றி விளக்கியுள்ளனர்.

குறித்த படைவீரர், தனது காற்சட்டை பொக்கட்டில் மறைத்து வைத்து இந்த கைக்குண்டை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வந்துள்ளார்.

தியத்தலாவையில் பஸ்ஸில் பயணித்த போது காற்சட்டை பொக்கட்டில் இருந்த கைக்குண்டை எடுத்து, தனது பயணப் பொதிக்குள் அதனை வைக்க முயற்சித்த போது குண்டின் பாதுகாப்பு பின் கழன்று, குண்டு கீழே வீழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பேர் இது பற்றி சாட்சியமளித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு காரணமாக, கைக் குண்டை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படைவீரரின் பாதமொன்று வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இந்த சம்பவம் பயங்கரவாத செயற்பாடாக கருதப்பட முடியாது என இராணுவத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

மன்னாரில் இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு!!

மன்னார் தோட்டவெளி ஜோசேப்வாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், தேட்டவெளி ஜோசவாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் அருள் ராஜ் வயது (33) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கடந்த திங்கட்கிழமை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமந்தாவின் அடுத்த பயணம்!!

விஷாலுடன் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா என பிசியாக நடித்து வரும் சமந்தா அவரது அடுத்த பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா நடிப்பில் இரும்புத்திரை படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. சமந்தா தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக `சீமராஜா’ படத்திலும், ராம் சரண் ஜோடியாக `ரங்கஸ்தலம்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களுக்கு இடையே சமந்தா அவரது அடுத்த படமான `யு-டர்ன்’ தமிழ் ரீமேக்கிலும் தற்போது நடிக்கத் துவங்கியிருக்கிறார் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகர் ஆதி பொலிஸாக நடிக்கிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்க இருக்கிறார்.

அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

பவன் குமார் இயக்கும் இந்த படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. நிகேத் பூமிரெட்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

ரோபோ பெண்ணின் மனம் கவர்ந்த நாயகன் யார் தெரியுமா?

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் சோஃபியா ரோபோ கலந்து கொண்டது.

உலகின் முதன்முறையாக சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமையைப் பெற்ற இந்த ரோபோ, இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக சென்றுள்ளது.

இந்நிலையில், சோஃபியாவுடனான கலந்துரையாடலின் போது, மனம் கவர்ந்த ஹீரோ யார் என கேள்வி கேட்கப்பட்டது. ”ஷாருக் கான் தான் எனக்குப் பிடித்த ஹீரோ” என சோஃபியா உடனடியாக பதிலளித்துள்ளது.

”உங்களைக் கவலையடையச் செய்வது எது?’’ என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நான் மனிதர்களைப் போல கவலையடைவதில்லை. எதிர்காலத்தில் மனிதர்களைப் போல உணர்வுகள் எங்களுக்கும் ஏற்படுத்தப்படும். அப்பொழுது என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவேன்
என்று தெரிவித்தது.

ஹொங்கொங்கின் ஹான்சன் என்பவரால் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சோஃபியா ரோபோவிற்கு ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஹகொல்லயில் பஸ்ஸில் தீ : விசாரணைகள் தொடர்கின்றது!!

தியதலாவ – கஹகொல்ல பிரதேசத்தில் பஸ்ஸொன்றிற்குள் தீ பரவியமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைக்குண்டொன்று வெடித்தமையே, தியதலாவ – கஹகொல்ல பிரதேசத்தில் பஸ்ஸொன்றிற்குள் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தீ காரணமாக பஸ் முற்றாக எரிந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரச இரசாயனப் பகுப்பாய்வாளரால் பஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த பஸ்ஸில் பயணித்த 19 பேர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் இராணுவத்தினர் 7 பேரும் விமானப்படையினர் 5 பேரும் பொதுமக்கள் 7 பேரும் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இராணுவத்தினரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இராணுவப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வைரவப்புளியங்குளம் குளத்தினுள் வீழ்ந்த முச்சக்கரவண்டி : இருவர் படுகாயம்!!

 
வவுனியா வைரவப்புளியங்குளகட்டுப் பாதையில் பயணித்த முச்சக்கரவண்டி இன்று (22.02.2018) காலை 7.35 மணியளவில் குளத்தினுள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பண்டாரிக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி வைரவப்புளியங்குளக்கட்டு பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் முன்னால் சென்ற வாகனத்தினை முந்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் எதிர் திசையில் முச்சக்கரவண்டி வந்துள்ளது.

முச்சக்கரவண்டியினை அவதானித்த மோட்டார் சைக்கில் கிழே வீழ்ந்துள்ளது. விபத்தினை தவிர்க்க முச்சக்கரவண்டியினை நிறுத்த முற்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டி குளத்தினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக அவ்விடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் 25 வயது மதிக்கத்தக்க மோட்டார் சைக்கிலின் சாரதியும் 40 வயது மதிக்கத்தக்க முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

குளத்திற்குள் வீழ்ந்த முச்சக்கரவண்டியினை வெளியே எடுப்பதற்கான நடவடிக்கையினையும் விபத்து தொடர்பான விசாரணையையும் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!!

பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊழியரான அமரர் தெய்வேந்திரன் பகீசன் அவர்களின் இரண்டாவது வருட நினைவாக பிரதேச அபிவிருத்தி வங்கி வடமாகாண ஊழியர் நலன்புரி சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம் பிரதேச அபிவிருத்தி வங்கியின் வவுனியா, யாழ்ப்பாண கிளைகளில் எதிர்வரும் சனிக்கிழமை 24.02.2018 அன்று காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

உயிர் காக்கும் உன்னத பணியில் இணையுமாறு அனைவரையும் ஏற்பாட்டு குழு அன்புடன் அழைக்கின்றனர்.

இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்

காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.

இரத்ததானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் (Heart attack) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.

இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் (Heamoglobin) சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

48 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட நினைவிடம்!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிட கட்டுமான பணிகளை மேற்கொள்ள 5 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் குறைந்த விலையில் ஒப்பந்தம் கோரியதாக ஆர்.கிருஷ்ணமூர்த்தி & கோ நிறுவனத்துக்கு 48 கோடியில் ஓப்பந்தம் வழங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மெரினாவில் பிரம்மாண்டமாக நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தத்து. பின்னர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.

இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் ஜெயலலிதாவுக்கு 40 கோடி அளவில் பிரம்மாண்டமாக நினைவிடம் அமைக்க திட்டமிட்டு விண்ணப்பம் கோரியுள்ளனர்.

இதுவரை 5 நிறுவனங்கள் கட்டுமான பணிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது. இன்று முதல் விண்ணப்ப படிவங்களை ஆராய்ந்து, வரும் பொதுப்பணி மற்றும் கட்டுமான துறை அதிகாரிகள் இறுதியாக 48 கோடிக்கு ஆர்.கிருஷ்ணமூர்த்தி & கோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளனர்.