அர்ஜென்டினாவில் காதலியை ஏமாற்றி அவரது மகளை தாயின் காதலனே பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரியவந்துள்ளது.
அர்ஜெண்டினா தலைநகர் Buenos-இல் வசித்து வந்தவர்கள் Celia Beatriz Sosa-Sergio Eduardo Gimenez, இருவரும் காதலர்கள்.Celia-விற்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார், தன் தாய் மீது அச்சிறுமி அதிர்ச்சியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதாவது, தனக்கு 8 வயதாக இருக்கும் போது பேய் பிடித்து விட்டதாக கூறிய தாயின் காதலன், உறவு வைத்துக் கொண்டால் பேயை விரட்டி விடலாம் என கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய அச்சிறுமியின் தாய் சம்மதம் தெரிவித்துள்ளார், கடந்த 9 ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக பலமுறை சித்ரவதை செய்துள்ளதாகவும் ஒரு முறை கருவை கலைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி பாட்டியிடம் தெரிவித்த நிலையில், அவரின் உதவியோடு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் சிறுமியின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை உறுதி செய்த பின்னர் சிறுமியின் தாய்க்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.































