ஆதிவாசியை அடித்துக் கொல்லும் முன் செல்பி எடுத்துக்கொண்ட கும்பல்!!

கேரளாவில் அட்டப்பாடி என்னுமிடத்தில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆதிவாசி ஒருவரை அடித்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவரைக் கொல்லும் முன் அந்த கும்பலில் ஒருவர் எடுத்த செல்ஃபி சமூக ஆர்வலர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

30 வயதுடைய மது என்னும் பெயருடைய அந்த ஆதிவாசி காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்து வந்தார். இரவு நேரங்களில் மளிகைக் கடைகளிலிருந்து அரிசி திருடுவது அவர் வழக்கம்.

புதன்கிழமையும் அவர் Kalkkanda என்னுமிடத்திலுள்ள ஒரு கடையிலிருந்து அரிசியைத் திருடியுள்ளார். இதனால் வியாழன் இரவு ஒரு கும்பல் காட்டுக்கு சென்று அவரை அடித்துத் துவைத்துள்ளது.

பின்னர் தாங்கள் ஒரு திருடனைப் பிடித்து வைத்திருப்பதாக பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளது அந்த கும்பல். பொலிசார் வந்து அவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் அவர் வாந்தி எடுத்துள்ளார்.

இதனால் பொலிசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பாரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மது என்னும் அந்த ஆதிவாசி தாக்கப்பட்டதை உறுதி செய்துள்ள பொலிசார், ஆனால் அவர் தாக்கப்பட்டதால் இறந்தாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்தான் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சற்றும் மனிதத் தன்மையற்று கொலை செய்யும் முன் அந்த ஆதிவாசியுடன் அவரது மரணத்திற்குக் காரணமான ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொண்டது மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் பலத்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

18 வயது இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை : பதறவைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் 18 வயதான இளம்பெண் உயிரோடு எரித்து கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் நேற்றிரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

18 வயதுப் பெண்ணொருவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சைக்கிளில் சென்றார். காய்கறிகளை வாங்கிவிட்டு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பரா சக்வார் என்ற இடத்தில் நின்றிருந்த மர்ம நபர்கள் பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

வலியால் துடித்த அப்பெண்ணை மீட்க உடனடியாக யாரும் வராத நிலையில் வேடிக்கை மட்டும் பார்த்துள்ளனர். இதன் காரணமாக அவர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தீவைத்த நபர்களை தேடி வருகிறார்கள்.

தங்கையின் கணவரை குத்திக்கொன்ற அண்ணன் : அதிர்ச்சிக் காரணம்!!

சென்னையில் தங்கையின் கணவரை 15 முறை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடி சேர்ந்தவர் ஜெயகோபால், செல்போன் கடை வைத்திருந்த ஜெயகோபால் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

தகவலறிந்து விரைந்து சென்ற ஆவடி பொலிசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். ஜெயகோபாலின் உடலில் 15க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திய காயங்கள் இருந்ததால் பழிவாங்கும் நோக்கில் கொல்லப்பட்டதாக பொலிசார் சந்தேகித்தனர்.

விசாரணையில் ஜெயகோபால் மனைவியின் அண்ணன் மீது பொலிசுக்கு சந்தேகம் வலுத்தது, ஜெயகோபால் கொல்லப்பட்ட நாளில் இருந்து பவித்ராவின் குடும்பம் தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது.

சம்பவ இடத்திலிருந்து பவித்ரா அண்ணனின் செல்போனும் எடுக்கப்பட்டதால் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பொலிஸ் தரப்பு கூறுகையில், ஜெயகோபாலுக்கும், பவித்ரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் குழந்தையும் உள்ளது. கருத்துவேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழும் நிலையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

ஆனால் கடைசி நேரத்தில் விவாகரத்து கொடுக்க ஜெயகோபால் மறுத்துவிட்டார், இந்நிலையில் ஜெயகோபாலை தனியாக அழைத்து சென்ற பவித்ராவின் அண்ணன் மதுவாங்கி கொடுத்துள்ளார்.

விவாகரத்து பற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், ஆத்திரத்தில் ஜெயகோபாலை கொன்று விட்டதாக கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பவித்ராவின் அண்ணன் மற்றும் அப்பாவை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாரடைப்பால் இறந்த இளைஞர் உயிருடன் எழுந்த அதிசயம்!!

புதுடில்லியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஆசிப் கான் (22) என்னும் இளைஞர், ஒரு மணிநேரம் கழித்து உயிர் பிழைத்துள்ளார்.

ஒரு டீ வியாபாரியின் மகனான ஆசிப் கான் அலிகரைச் சேர்ந்த பொறியியிலாளர். நெஞ்சு வலிப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு வந்த அவரை மருத்துவர்கள் பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.

தொடர்ந்து Cardiopulmonary Resuscitation (CPR) மூலம் அவரது இதயத்திற்கு தொடர்ந்து இரத்தம் பாய்வதை மருத்துவர்கள் உறுதி செய்தும் அவரது உடலில் எந்த அசைவும் இல்லை.

தொடர்ந்து அவருக்கு மருத்துவம் கொடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.

அவரது மாரடைப்புக்கு என்ன காரணம் என்பதை அறிவதற்காக Catheterisation Lab என்னும் ஆய்வகத்திற்கு மருத்துவர்கள் அவரைக் கொண்டு சென்றனர், கொண்டு செல்லும் வழியில் மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது நிலைமை குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைகளுக்காக அவர்களது ஒப்புதல் பெறப்பட்டது.

ஆசிப் கானை எழுந்து நடக்க வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர் மருத்துவர்கள். ஒன்றன் பின் ஒன்றாக பல பிரச்சினைகளுக்குப்பின் அவரது உடலில் சிறிது அசைவு காணப்பட்டது.

ஆனால் அவரது இதயம் இயங்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக அவர் கோமாவுக்கு சென்றார். மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் அவருக்கு செயற்கை சுவாசமும் பல மருத்துவ சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டன. இரண்டு நாட்களுக்கு அவரது உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

பின்னர் திடீரென்று அவர் கண்களைத் திறந்தார், அவரது உடல் இயங்க ஆரம்பித்தது. “அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டது என்று நாங்கள் நினைத்தோம், அதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை செய்ய திட்டமிட்டிருக்கும் நேரத்தில் திடீரென்று அவர் கண்களைத் திறந்தார்” என்று கூறும் மருத்துவர் NN. Khanna, ”மிகவும் குறைந்த வயது அவருக்கு, அவரை எப்பாடு பட்டாகிலும் காப்பாற்ற விரும்பினோம்” என்கிறார்.

மருத்துவனையே மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது. ஒரு மணி நேரம் அவரது இதயம் இயங்காவிட்டாலும் மருத்துவர்களின் விடாமுயற்சியும் அவரது மனோதிடமும் ஆசிப் கானை மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளன.

என் மகனை அடித்துக் கொன்றது ஏன் : கதறும் ஆதிவாசியின் தாய்!!

கேரளாவில் ஆதிவாசி நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் அட்டப்பாடி என்னுமிடத்தில் சுமார் 15 பேர் கொண்ட கும்பலால் மது என்ற ஆதிவாசி நபரை அடித்துத் துன்புறுத்தியது. கடைகளில் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அடித்து கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின, இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், இது குறித்த விசாரணைக்கு DGPயை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆதிவாசியின் தாய் மல்லி, 9 மாதங்களாக எனது மகன் காட்டில் வசித்து வருகிறான், அவன் பாட்டுக்கு வாழ்ந்துவிட்டுப் போகிறான், அவனை ஏன் அடித்துக் கொன்றீர்கள் கேட்டு கதறியுள்ளார்.

அவன் திருட மாட்டான் என கூறும் மல்லி, அவனைக் கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவனைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவனது உறவினர்கள் அவனது உடலை வாங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை Whatsapp குரூப்பில் சிறுவர்கள் தொடர்பான வக்கிரக் காட்சிகள் : நடவடிக்கை எடுக்க சி.பி.ஜ கோரிக்கை!!

வட்சப் குரூப் ஒன்றின் இலங்கை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ) இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியா, இலங்கை, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து செயற்படும் வட்சப் குரூப் ஒன்றில் சிறுவர்கள் தொடர்பான வக்கிரக் காட்சிகள் பரிமாறப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வன்புணர்வுக் காட்சிகள் மற்றும் வக்கிர செயற்பாட்டுக் காட்சிகள் காணொளிகளாக குறித்த வட்சப் குழுமத்தில் தரவேற்றப்பட்டுள்ளன.

119 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் இலங்கையரும் அட்மின்களாக செயற்பட்டுள்ளனர். இந்நிலையில் இக்குழுவின் இந்திய அட்மின் ஒருவரை மத்திய புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து இலங்கையில் இருந்து செயற்படும் குறித்த குழுவின் அட்மினுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய சி.பி.ஐ அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் திணைக்களம் உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வவுனியாவில் பட்டப்பகலில் நகைகள் கொள்ளை : பொலிஸ் விசாரணை தீவிரம்!!

 
வவுனியா பட்டாணிச்சூர் 2ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (23.02.2018) மதியம் 11 மணியளவில் நகைகள் திருடப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பட்டாணிச்சூர் 2ம் ஒழுங்கையில் சிறிதரன் மலர்வதனி என்பவர் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இன்று மதியம் 11 மணியளவில் விட்டினை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்ற சமயத்தில் வீட்டின் கதவினை திறந்து அலுமாரியினையுடைத்து அதனுள் இருந்த சுமார் 9 பவுண் நகைளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

2.15 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கபட்டதை அவதானித்த குறித்த பெண் உடனடியாக அவரச தொலைபேசியிலக்கமான 119க்கு அழைப்பினை ஏற்படுத்தி சம்பவத்தினை தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு தயாரித்தவர் கைது!!

வவுனியாவில் பாடசாலைகளுக்கு போசாக்கு உணவுத் திட்டத்தில் கீழ் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த போசாக்கு சத்துணவுத்திட்டத்தை பாடசாலை அதிபரின் அனுமதியுடன் சிலர் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொண்டு, வேறு இடத்தில் உணவுகளைத் தயாரித்து பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்கின்றார்கள்.

இவ்வாறு ஒருவர் மூன்று பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் உணவுகளை தயாரித்து வழங்கி வந்துள்ளார்.

இன்று காலை அப்பகுதிக்கு திடீரென்று சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் உணவு தயாரிக்கும் இடத்தினை பார்வையிட்ட போது சுகாதாரமற்ற முறைப்படி இருந்துள்ளதுடன் திறந்த வெளியில் உணவுகளை தயாரித்துள்ளதுடன் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நபரை கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது 5000 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக சுகாதாரப் பரிசோதகர் கே.எஸ்.சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இத்தாலி தேர்தலில் போட்டியிடும் இலங்கையர்!!

இத்தாலியில் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் லெம்பார் மாகாணசபைத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த ஒருவர் அந்த நாட்டின் பிரதான கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

நயினாமடு பிரதேசத்தை சேர்ந்த நெரஞ்சன் வாஸ் என்ற இந்த இலங்கையர் இத்தாலியில் குடியுரிமை பெற்று மிலான் நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இத்தாலியின் பிரதான அரசியல் கட்சியான ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

இத்தாலியில் உள்ள இலங்கை தொழிலாளர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சமயம் சார்ந்த பொதுச் சேவையில் ஈடுபட்டு வரும் நெரஞ்சன் வாஸ் கடந்த 35 ஆண்டுகளாக மிலான நகரில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தாயின் பணத்தை திருடிய மகனுக்கு ஏற்பட்ட நிலை!!

யாழ். புத்தூர் கிழக்குப் பகுதியில் தனது தாயின் பணத்தை திருடிய மகனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நபரை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் ஏ. யூட்சன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் தாய் இல்லாத நேரம் வீட்டுக்குள் நுழைந்து அவரின் 90 ஆயிரம் ரூபா பணத்தினை திருடியுள்ளார்.

இது தொடர்பாக குறித்த நபரின் தாயார் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிவனொலிபாதமலைக்கு சென்ற முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!!

 
மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலிருந்து சிவனொலிபாதமலைக்கு வியாபாராம் செய்ய குறித்த நபர் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போதே முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த மாணவி!!

பெற்­றோரின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதினான்கு வயது நிரம்­பிய மாண­வி­யொ­ரு­வரை, சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் பெண் பொலி­ஸாரின் துணை­யுடன் கைது செய்து, பதுளை நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று ஆஜர் செய்­தி­ருந்­தனர்.

நீதி­பதி நயந்த சம­ர­துங்க அம்­மா­ண­வியை, எதிர்­வரும் 14 ஆம் திகதி வரை பண்­டா­ர­வ­ளை­யி­லுள்ள சிறு­மிகள் காப்பகமொன்றில் தடுத்து வைக்­கும்­ப­டியும், அன்­றைய தினம் இம்­மா­ணவி குறித்த பூர்­வாங்க அறிக்­கையை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கும்­ப­டியும் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் மற்றும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

இம்­மா­ணவி பாட­சா­லைக்கு செல்­வ­தாகக் கூறி, கடந்த ஒரு வரு­ட­மாக பாட­சா­லைக்கு செல்­லாமல் ஊர் சுற்றித்திரிந்துள்ளார்.

மாணவி பாட­சா­லைக்கு வராமை குறித்து அதிபர், ஆசி­ரி­யர்கள் மாண­வியின் பெற்­றோ­ரி­டமும் வின­வி­யுள்­ளனர். இதனையடுத்து பெற்றோர் மாண­வியைக் கண்­டித்தும் எச்சரித்தும் எப்­ப­யனும் கிடைக்­க­வில்லை.

இந்­நி­லையில் இது தொடர்பில் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு அறி­விக்­கப்­பட்­டது. இதன்பின்னரே, இம்மாணவி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணைய வேகத்தில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை!!

இலங்கையின் இணைய வேகம் இந்தியாவை விடவும் அதிகமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இந்தியாவின் 4G வேகம் நொடிக்கு 6.07 பைட் வேகமாக பதிவாகியுள்ளது. எனினும் இலங்கையின் அந்த வேகம் நொடிக்கு 13.95 மெகா பைட் வேகமாக பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானில் அந்த வேகம் நொடிக்கு 13.56 மெகா பைட் வேகமாக பதிவாகியுள்ளது.

உலக இணைய வேகம் அதிகமான நாடாக சிங்கப்பூர் காணப்படுகின்றது. அவர்களின் இணைய வேகம் நொடிக்கு 44.31 மெகா பைட் வேகமாகும்.

அமெரிக்காவின் இணைய வேகம் நொடிக்கு 16.31 மெகா பைட் வேகமாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உலகின் அதிக 4G இணைய வசதிகளை உள்ளடக்கும் நாடுகளுக்குள் தென் கொரியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதன் அளவு 97.49% வீதமாகும்.

பெருவில் இரண்டு அடுக்கு பஸ் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 44 பேர் உயிரிழப்பு!!

பெருவில் இரண்டு அடுக்கு பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெருவின் Ocona எனும் பகுதியில் அமைந்துள்ள Panamericana Sur நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாலையின் மலைப்பாங்கான பகுதியில் ஆபத்தான வளைவொன்றில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

அந்தப் பகுதியில் ஆறு ஒன்று ஓடுவதால், உயிரிழந்தவர்களின் உடல்கள் பல ஆற்று நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஜனவரி மாத்தின் முதல் பகுதியில் அங்கு இடம்பெற்ற இதேபோன்றதொரு விபத்தில் 48 பேர் உயிரிழந்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

நான்கு நாட்களுக்கு புகையிரத சேவை இடைநிறுத்தம்!!

மதவாச்சி மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி காலை முதல் மார்ச் மாதம் 02ம் திகதி வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட உள்ளதாக அத தெரணவிடம் அந்த திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

மதவாச்சி மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான பகுதியில் பாலம் ஒன்று அமைக்கப்படுவதெ இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகளுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தடுப்பதற்காக அந்தக் காலப்பகுதியில் மதவாச்சி மற்றும் தலைமன்னாருக்கு இடையில் இணைந்த பஸ் சேவை செயற்படுத்தப்பட உள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு வாக்கு வித்தியாசம் காரணத்தால் மீள் வாக்கெண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

தனது வட்டாரத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியில் தனக்கு முழு திருப்தியில்லாத காரணத்தினை தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன், இதற்கு தேர்தல் ஆணையாளரின் பதிலை எதிர்பார்த்திருப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையில் போட்டியிட்ட வேட்பாளர் குமாரசாமி காந்தராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் போட்டியிட்ட மேற்படி வேட்பாளர் குறித்த வட்டாரத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வட்டாரத்தில் வாக்களிப்பின் பின்னர் நடைபெற்ற வாக்கெண்ணும் பணியின்போது தேர்தல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்ட சில சட்டதிட்டங்களை சரியான முறையில் கடைப்பிடிக்கவில்லை.

அத்துடன், தபால் மூல வாக்கெண்ணும் போது தனது முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தனது கோரிக்கைக்கு அமைவாக இரண்டு வாக்குப் பெட்டிகள் மீள எண்ணப்படவில்லை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும் தனக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.