தீக்கரையாக்கப்பட்டுள்ள மீனவர்களின் தோணிகள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதி மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதவர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (23) மகிழடித்தீவு ஆற்றுப்பகுதியில் தரித்து நிற்கவைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களின் தோணிகளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முனைக்காடு வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இராமக்குட்டி சிவஞானம், சீனிதம்பி சிவகுமார், சிவலிங்கம் சீனிதம்பி ஆகியோரின் மீன்பிடி தோணிகளே இவ்வாறு தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

தோணிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இது தொடர்பில் தோணி உரிமையாளர்களினால் கொக்கட்டிச் சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கொக்கட்டிச் சோலை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு திடீர் வரி அதிகரிப்பு!!

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு திடீர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு இதுவரை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபா மட்டுமே வரி விதிக்கப்பட்டு வந்தது.

எனினும் இன்று நள்ளிரவு முதல் குறித்த வரியை 29 ரூபாவால் அதிகரித்து கிலோ ஒன்றுக்கு 30 ரூபா வரிவிதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உருளைக்கிழங்கு விளைச்சல் தற்போது சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் அது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும்.

இதனைக் கவனத்திற் கொண்டு உள்நாட்டு விவசாயிகளின் விளைச்சலை சந்தைப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும் நோக்கில் இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிம்பிக் குழுத் தலைவராக சுரேஷ் சுப்பிரமணியம்!!

இலங்கை ஒலிம்பிக் கமிட்டி தலைவராக டென்னிஸ் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கான தேர்தல் ஒன்பது வருடங்களின் பின்னர் நேற்று கொழும்பில் நடைபெற்றது.

கடந்த 2009ல் ஒலிம்பிக் கமிட்டித் தேர்தல் நடைபெற்ற பின்னர் இன்று வரை இடைக்கால சபை நிர்வாகம் நடைபெற்றது தவிர தேர்தல் மூலம் நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்றைய நிர்வாகக்குழு தோ்தலின் போது 31 மொத்த வாக்குகளில் இருந்து 18 வாக்குகளைப் பெற்று சுரேஷ் சுப்பிரமணியம் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரொஹான் பெர்னாண்டோ 12 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக்குழு செயலாளராக மெக்ஸ்வெல் சில்வா தெரிவாகியுள்ளார். இதன்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகி ஒருவர் தேர்தல் கண்காணிப்பாளராகவும் தெரிவத்தாட்சி அலுவலராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி : வெளிநாட்டுக் கடன் தொகை அதிகரிப்பு : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!!

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக வெளிநாட்டு கடன் தொகையை பாரியளவில் அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இதன் காரணமாக வெளிநாட்டுக் கடன் தொகை சில தினங்களில் பாரியளவில் உயர்வை பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 30.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது, அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 155 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இந்தக் கடன் தொகை 4774 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.

எனினும் அண்மையில் அமெரிக்க டொலரின் விலை மேலும் உயர்வடைந்த காரணத்தினால் இந்தக் கடன் தொகை 6160 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு கடன் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுபாடில்லை : மக்கள் ஏமாற வேண்டாம்!!

எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொய்யான தகவல்களை சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

தற்போது நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென்றும், எரிபொருள் விநியோகம் எதுவித பாதுப்பும் இன்று இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை குழப்பி நாட்டில் பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் எடுக்கும் இந்த முயற்சிகளுக்கு எமாற வேண்டாம் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொழும்பில் அதிகளவில் இனம்காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளிகள்!!

இலங்கையில் தற்போது வரையில் 3843 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக பால்வினை நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

எனினும் சுமார் 4000 பேர் வரையில் இலங்கையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகவே பெரும்பாலானவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்தின் பிரதேசங்களிலேயே பெருமளவான எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக 25 – 45 வயதுப்பராயத்தில் உள்ளவர்களையே எயிட்ஸ் நோய் கூடுதலான அளவில் தாக்கியுள்ளது.

இவர்கள் பாதுகாப்பற்ற பாலுறவுகள் மூலம் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அறிமுகமற்றவர்களுடனான பாலுறவு செயற்பாடுகளின் போது பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாளுவதே எயிட்ஸ் நோயிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான வழி என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மீண்டும் போர் பதற்றம் : நவீன ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் சீனப் படைகள்!!

அதி நவீன ஆயுதங்களுடன் இந்திய எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே சீனப் படையினர் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த ஆயுதங்களானது போர்க் காலங்களில் அமெரிக்கா பயன்படுத்தும் வல்லமை மிக்க ஆயுதங்களைப் போன்ற நவீன தொழில்நுட்பத்திலானது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக எல்லையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

டோக்கா லாம் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டில் இந்தியா – சீனா இடையே பதற்றம் நிலவியது. ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதனிடையே, கடந்த டிசம்பர் இறுதியில் அருணசாலப் பிரதேசத்தின் பைசிங் பகுதியில் சாலை செப்பனிடும் வாகனங்களுடன் (புல்டோஸர்கள்) சீனப் படைகள் மக்களோடு, மக்களாக ஊடுருவியதும் இருதரப்புக்கும் இடையேயான உறவில் விரிசலுக்கு வித்திட்டது.

அந்தப் பதற்றங்கள் சற்று தணிந்து நிலைமை தற்போது சுமுகமாகி விட்டதாகக் கருதியிருந்த நிலையில், சீன வீரர்கள் இந்திய எல்லை அருகே அதி நவீன ஆயுதங்களுடன் முகாமிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

க்யூடிஎஸ்-11 எனப்படும் நவீன தொழில்நுட்பத்திலான மின்னணு இயந்திர ஆயுதங்கள் ஒவ்வொரு சீன வீரர்களுக்கும் அளிக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகை ஆயுதங்களானது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும், சிறிய ரக குண்டுகளை வீசித் தாக்குவதற்கு மட்டும் அல்லாமல் எதிரிகளின் மறைவிடத்தைக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது.

க்யூடிஎஸ்-11 ஆயுதங்களைப் போன்ற வல்லமையான போர்த் தளவாடங்கள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து சீனாவும் அதை தனது இராணுவத்தில் இணைத்தது.

இதுவரை அந்த வகை ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்து வந்த சீனா, தற்போது இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கில் அவற்றை எல்லைக்குக் கொண்டு வந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத்திய பகுதியில் சீன இராணுவம் கடந்த சில நாள்களாக பயிற்சி மேற்கொண்டதும், அதேபோன்று இந்தியப் பெருங்கடலின் ஜிபோட்டி பிராந்தியத்தில் அந்நாட்டு கடற்படையினர் பயிற்சி எடுத்ததும் நினைவுகூரத்தக்கது.

சீனாவின் இந்தச் செயல்பாடுகள் எல்லையோரப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றத்தை நிலவச் செய்யும் வகையில் அமைந்துள்ளன.

வவுனியாவை பூர்வாகமாகக்கொண்ட உலக சாதனை வீரன் வவுனியாவை வந்தடைந்தார்!!

 
வவுனியா பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்துவரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரமபித்த மரதன் ஓட்டம் நேற்று (24.02) வவுனியாவை வந்தடைந்தது.

கனடாவில் இருந்து ஆரம்பித்த மரதன் நேற்று வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வந்தடைந்தது.

ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாலையை ஏந்தியவாறாக 72 நாடுகளுக்கு 123 நாட்களில் சுமார் 4000 கிலோமீற்றர் ஓடிச்செல்லவுள்ள இப்பயணமானது நேற்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஆரம்பித்திருந்தது.

பாலஸ்தீனத்தில் இருந்து ஆரம்பித்த இம் மரதன் ஒட்டமானது இலங்கையில் வவுனியா, மாங்குளம், கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணத்தை சென்று முடிவடையவுள்ளது.

மாலை 03.00 மணிக்கு வந்தடைந்த இவ் உலகசாதனை வீரனுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினால் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், வவுனியா இளைஞர்கள் சிலரும் இப்பயணததில் இணைந்திருந்தனர்.

இவர் 69 உலக சாதனைகளை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொத்த பிக் பாஸ் குழுவும் இறங்கியிருக்கின்றது : கமலின் கட்சி குறித்து பிரபல நடிகை கிண்டல்!!

கமல் கட்சி தொடங்கிய நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, மொத்த பிக் பாஸ் டீமும் இறங்கியிருக்கு என்று கிண்டலடித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இரு தினங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். இக் கட்சியில் கமலின் கட்சியில் நடிகை ஸ்ரீபிரியா, பிக்பாஸ் புகழ் சினேகன், வையாபுரி, விஜய் டிவி மகேந்திரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, சினேகன், வையாபுரி, ஸ்ரீபிரியா, மகேந்திரன் என மொத்த பிக் பாஸ் டீமும் இறங்கியிருக்கு, வீவோ தான் பிரதான ஸ்பான்சரா? நீக்குதல் கூட இதில் வரும்ல என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

சிறுமியை கடித்துக் குதறிய காட்டு நாய்கள் : ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல் துண்டுகள்!!

 
உக்ரைனில் 12 வயதுச் சிறுமி ஒருவர் காட்டு நாய்களால் தாக்கப்பட்டு கொடூரமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் Khartsyzsk நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி Liza Kanareikina, சம்பவதினத்தன்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடியுள்ளனர்.

சுமார் 18 மைல்கள் தொலைவில் உள்ள Donetsk வனப்பகுதியில், ரத்த வெள்ளத்தில் Liza-வின் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவர் உடல் கிடந்த இடம் பனியால் சூழப்பட்டு, அவை மீது Liza-வின் ரத்தம் படர்ந்திருந்தது.

இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது, Liza காட்டு நாய்களால் தாக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது.
எனினும், தடயவியல் பகுப்பாய்வு முடிவுகள் வரும் வரை, சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை, உறுதியாகக் கூற முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் போது, உக்ரைனின் கிழக்கு பகுதியில் இந்த நாய்கள் அப்படியே விடப்பட்டதாகவும், அதன் பின்னர் காட்டுமிராண்டித்தனமாக மாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றால் பொதுமக்களுக்கு, அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் குண்டான மனிதர் இவர்தான் : தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?

 
உலகிலேயே குண்டான ஆண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜூயன் பெட்ரோ பிரான்கோ, தற்போது அதிகளவு எடை குறைந்து நடக்கத்தொடங்கியுள்ளார்.

மெக்சிகோவை சேர்ந்தவர் ஜூயன் பெட்ரோ பிரான்கோ (33). இவரின் உடல் எடை கடந்த 2016 அக்டோபரில் 595 கிலோவாக இருந்த நிலையில் உலகின் மிக குண்டான ஆண் என அவரின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த ஜூயன் தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து மருத்துவமனையை நாடினார். இதையடுத்து அவருக்கு இரண்டு முறை இரைப்பை சத்திர சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது 345 கிலோவாக எடை குறைந்துள்ளார்.

அடுத்த ஆண்டில் இன்னும் நூறு கிலோ எடை ஜூயன் குறைவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஜூயன் தற்போது கைத்தடியின் உதவியுடன் நடக்க ஆரம்பித்துள்ளார்.

ஆர்யாவுக்காக இந்தியா சென்ற இலங்கைப் பெண்!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார் கனடா வாழ் இலங்கை பெண் சுசானா.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நடைபெறும் முதல் சுயம்வர நிகழ்ச்சி “எங்க வீட்டு மாப்பிள்ளை”. இதில் நடிகர் ஆர்யா நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார்.

நடிகை சங்கீதா கிரிஷ் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் கனடாவில் வசிக்கும் இலங்கை பெண் சுசானா பங்கேற்றுள்ளார்.

சுவிஸ்லாந்தை பிறப்பிடமாக கொண்ட சுசானா, கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் வசித்து வருகிறார். இவரது பூர்விகம் இலங்கை என்பதும், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்(Radiation Therapist) என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடன் இருக்கவே விரும்புவேன் : கனடா பிரதமரின் அழகான காதல் கதை!!

 
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சோபி க்ரீகொய்ரி என்ற பெண்ணுடன் கடந்த 2005ஆம் ஆண்டு மே 28ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும்.

மிக இளம் வயதில் ட்ரூடோவும், சோபியும் மொன்றியலில் வளர்ந்தார்கள். சோபியா, ஜஸ்டினின் சகோதரர் மைக்கேலின் பள்ளி வகுப்பு தோழியாவார். அப்போது ஜஸ்டினுக்கும், சோபியாவுக்கும் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் வேறு வேறு திசையில் சென்றுவிட்டார்கள்.

பின்னர் 2003ம் ஆண்டு ட்ரூடோவும், சோபியும் மீண்டும் சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்து கொண்டார்கள். சில மாதங்கள் இருவரும் டேட்டிங் சென்ற நிலையில் அது காதலாக மாறியது. இதையடுத்து திருமணம் செய்ய முடிவெடுத்த அவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 18ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையடுத்து மொன்றியலில் உள்ள தேவாலயத்தில் மே 28, 2005-ல் ஜஸ்டின் – சோபி திருமணம் கோலாகலமாக நடந்தது.
தற்போது வரை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் இத்தம்பதிக்கு சேவியர் ஜேம்ஸ், எல்லா கிரேஸ், ஹாட்ரின் கிரிகொயர் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் ஜஸ்டின், என் காதல் சோபி என பதிவிட்ட டுவீட் அவரின் வைரல் டுவீட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தான் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது காதல் மனைவி சோபியுடன் நேரம் செலவிட தவற மாட்டேன் என ஜஸ்டின் கூறியது அவரின் அழகான காதலுக்கு உதாரணமாகும்.

ஒரே டுவிட்டால் 1.3 பில்லியன் டொலர் இழப்பு!!

அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலம், கிம் கர்தஷியனின் தங்கை கெய்லி ஜென்னர் பதிவிட்ட ஒரு ட்விட்டால், ஸ்னாப்சேட் நிறுவனத்திற்கு சுமார் 1.3 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கெய்லி ஜென்னர், அமெரிக்காவின் மொடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர், பிரபல தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தஷியனின் தங்கை, சமூக வலைதளத்தில் இவரை பல கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளம் ஸ்னாப்சேட். இந்த வலைதளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
ஆனால் இதனை பயன்படுத்துபவர்களில் பலர், இந்த மாற்றம் குறித்து அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கெய்லி ஜென்னர், தனது ஸ்னாப்சேட் கணக்கில், இனி தான் ஸ்னாப்சேட் செயலியை பயன்படுத்தப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

இதற்கு காரணம், அவர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதனால் அவரால் ஸ்னாப்சேட்டை பயன்படுத்த நேரம் கிடைக்காது என்றும், ஸ்னாப்சேட்டில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் கெய்லிக்கு பிடிக்காததாலேயே, அவர் அதனை பயன்படுத்த போவதில்லை என தெரிவித்துள்ளார் என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவின.

எனினும், இரண்டாவதாக கூறப்பட்ட காரணமே முதன்மையானதாக இருக்கும் என கருதிய கெய்லியை பின் தொடர்வோர், அதனை உபயோகிப்பதை நிறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, வியாழக்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும், ஸ்னாப்சேட்டின் பங்குமதிப்பு அமெரிக்கப் பங்கு சந்தையில் 6.1 சதவிதம் வரையில் குறைந்தது. இதனால், அந்நிறுவனத்திற்கு சுமார் 1.3 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த குழந்தை மீண்டும் வந்ததால் அதிர்ந்து போன பெற்றோர்!!

ரஷ்யாவில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக மருத்துவமனை அதன் பெற்றோரிடம் கூறிய நிலையில் தற்போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

வோல்கோகிராட் நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2011ல் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த முதலே அதற்கு உடல்நல கோளாறு இருந்த நிலையில் ஒருவாரம் தான் உயிருடன் இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து உயிரிழக்க போகும் குழந்தையை வீட்டுக்கு எடுத்த செல்ல மனமில்லாத பெற்றோர் மருத்துவமனையிலேயே குழந்தை இருக்கட்டும் என எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

ஆனால் வீட்டுக்கு சென்ற சில நாட்கள் கழித்து பெற்றோருக்கு குழந்தை ஞாபகம் வந்ததால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களின் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஆண்டுகள் உருண்டோடின, இந்நிலையில் கடந்தாண்டு நவம்பரில் அனாதை ஆசிரிமத்திலிருந்து £3000 பணம் கட்ட சொல்லி குழந்தையை இழந்த பெற்றோருக்கு ரசீது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதை அவர்கள் கவனிக்காத நிலையில் அவர்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது.

பின்னர் தான் இறந்ததாக நினைத்த தங்கள் குழந்தை அனாதை ஆசிரமத்தில் வளர்வதும், அதற்கான கட்டணம் அந்த பணம் என்பதும் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதை உறுதி செய்த பெற்றோர் ஒரு நிமிடம் நம்பமுடியாமல் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிபதி குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

எனினும் குறித்த மருத்துவமனை ஏதேனும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மனைவி, மகனை கொன்று விட்டு கணவர் தற்கொலை!!

கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் மகனை கொன்று விட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (34), எலக்ட்ரிகல் கடை நடத்தி வந்தார். முத்துப்பாண்டிக்கு பிரியா (26) என்ற மனைவியும், சவுமியநாராயணன் (2) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை முத்துப்பாண்டி தன் பெற்றோரையும், பிரியாவின் பெற்றோரையும் கோயிலுக்கு அனுப்பிவிட்டு கடை திறக்க சென்றுள்ளார். மதியம் 12 மணிக்கு கோவிலுக்கு சென்றவர்கள் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு இருபக்கமும் பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரியாவின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டும், சவுமிய நாராயணன் வாயில் நுரை தள்ளியும் இறந்து கிடந்தனர். அவர்கள் அருகிலேயே முத்துப்பாண்டி தூக்குப்போட்டு சடலமாக தொங்கியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து மூன்று சடலங்களையும் கைப்பற்றினார்கள். பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் முத்துப்பாண்டி இந்த செயலை செய்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.